Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 99
99. அணோரணீயான் மஹதோ மஹீயான்

विष्णोर्वीर्याणि को वा कथयतु धरणे: कश्च रेणून्मिमीते
यस्यैवाङ्घ्रित्रयेण त्रिजगदभिमितं मोदते पूर्णसम्पत्
योसौ विश्वानि धत्ते प्रियमिह परमं धाम तस्याभियायां
त्वद्भक्ता यत्र माद्यन्त्यमृतरसमरन्दस्य यत्र प्रवाह: ॥१॥

viShNOrviiryaaNi kO vaa kathayatu dharaNeH kashcha reNuunmimiite
yasyaivaanghritrayeNa trijagadabhimitaM mOdate puurNasampat |
yO(a)sau vishvaani dhatte priya miha paramaM dhaama tasyaabhiyaayaaM
tadbhaktaa yatra maadyantyamR^itarasamarandasya yatra pravaahaH || 1

விஷ்ணோர்வீர்யாணி கோ வா கத²யது த⁴ரணே꞉ கஶ்ச ரேணூன்மிமீதே
யஸ்யைவாங்க்⁴ரித்ரயேண த்ரிஜக³த³பி⁴மிதம் மோத³தே பூர்ணஸம்பத் |
யோ(அ)ஸௌ விஶ்வானி த⁴த்தே ப்ரியமிஹ பரமம் தா⁴ம தஸ்யாபி⁴யாயாம்
தத்³ப⁴க்தா யத்ர மாத்³யந்த்யம்ருதரஸமரந்த³ஸ்ய யத்ர ப்ரவாஹ꞉ || 99-1 ||

கிருஷ்ணா, ஒரு போட்டி. ஒன்று இதோ எதிரே கடல் தெரிகிறதல்லவா, அதன் கரையில் உள்ள மண்ணை ஒன்றுவிடாமல் சரியாக எண்ணவேண்டும்? இன்னொன்று இதோ தெரிகிறான் பார் என் எதிரே சந்நிதியில் குருவாயூரப்பன், அவன் தானே நாராயணன், மஹா விஷ்ணு, அவன் பெருமையை, மஹிமையை ஒன்று விடாமல் சொல்ல வேண்டும்? எது உன்னால் முடியும்? என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் தெரியுமா? கடல் மண்ணை எண்ணுவது ரொம்ப எளிது என்பேன். இந்த பரநத பூமியை தான் மூன்றடிகளில் ஒன்றாக அளந்தவன். அவன் திருவடி பட்டதால் தானே, இந்த பூமி என்றும் செழிப்பாக, பல கோடி உயிர்கள் வாழ தகுதியாக இருக்கிறது. வளம் கொழிக்கிறது. அவனிருக்கும் இடம் நான் தேடுகிறேன். கிருஷ்ணா அது நான் மட்டும் அல்ல, உன் அனைத்து பக்தர்களும் நாடும், அம்ருதம் பருகும் இடமல்லவா?

आद्यायाशेषकर्त्रे प्रतिनिमिषनवीनाय भर्त्रे विभूते-
र्भक्तात्मा विष्णवे य: प्रदिशति हविरादीनि यज्ञार्चनादौ ।
कृष्णाद्यं जन्म यो वा महदिह महतो वर्णयेत्सोऽयमेव
प्रीत: पूर्णो यशोभिस्त्वरितमभिसरेत् प्राप्यमन्ते पदं ते ॥२॥

aadyaayaasheShakartre pratinimiSha naviinaaya bhartre vibhuuteH
bhaktaatmaa viShNave yaH pradishati haviraadiini yaj~naarchanaadau |
kR^iShNaadyaM janma yO vaa mahadiha mahatO varNayetsO(a)yameva
priitaH puurNOyashObhistvaritam- abhisaret praapyamante padaM te || 2

ஆத்³யாயாஶேஷகர்த்ரே ப்ரதினிமிஷனவீனாய ப⁴ர்த்ரே விபூ⁴தே-
ர்ப⁴க்தாத்மா விஷ்ணவே ய꞉ ப்ரதி³ஶதி ஹவிராதீ³னி யஜ்ஞார்சனாதௌ³ |
க்ருஷ்ணாத்³யம் ஜன்ம யோ வா மஹதி³ஹ மஹதோ வர்ணயேத்ஸோ(அ)யமேவ
ப்ரீத꞉ பூர்ணோ யஶோபி⁴ஸ்த்வரிதமபி⁴ஸரேத்ப்ராப்யமந்தே பத³ம் தே || 99-2 ||

கிருஷ்ணா, நீ வாசம் செய்யும் ஸ்ரீ வைகுண்டத்தை எவர் அடைய முடியும் ? யஞங்கள் யாகங்கள் ஹோமங்கள் பல செய்து, மந்திரங்கள் உச்சரித்து, பக்தி ஸ்ரத்தையோடு மஹா விஷ்ணுவாகிய உன்னை வழிபாடுபவனால் முடியுமா? நீ என்ன சாதாரணமானவனா? பிரபஞ்ச காரணன், அது தோன்றுமுன்னே நீ தோன்றியவன். ஒவ்வொரு நொடியும் புதியவன், கம்பீரன், அழகன், உன்னை, உன் அவதாரங்களை மஹிமையை, அதுவும் எல்லாவற்றிலும் சிறந்த அவதாரமான உன் இந்த கிருஷ்ணாவதாரத்தில் ஒரு விஷயம் கூட விடாமல் விவரிக்கிறவனால் உனது வைகுண்டம் அடையமுடியுமா? ஆமாம், இப்படிப்பட்டவர்களால் தான் பூவுலக வாழ்க்கை முடிந்ததும் உன்னோடு வைகுண்டத்தில் வாழமுடியும்.

हे स्तोतार: कवीन्द्रास्तमिह खलु यथा चेतयध्वे तथैव
व्यक्तं वेदस्य सारं प्रणुवत जननोपात्तलीलाकथाभि: ।
जानन्तश्चास्य नामान्यखिलसुखकराणीति सङ्कीर्तयध्वं
हे विष्णो कीर्तनाद्यैस्तव खलु महतस्तत्त्वबोधं भजेयम् ॥३॥

he stOtaaraH kaviindraastamiha khalu yathaa chetayadhve tathaiva
vyaktaM vedasya saaraM praNuvata jananOpaatta liilaakathaabhiH |
jaanantashchaasya naamaanyakhilasukhakaraaNiiti sankiirtayadhvaM
he viShNO kiirtanaadyaistava khalu mahatastattvabOdhaM bhajeyam || 3

ஹே ஸ்தோதார꞉ கவீந்த்³ராஸ்தமிஹ க²லு யதா² சேதயத்³த்⁴வே ததை²வ
வ்யக்தம் வேத³ஸ்ய ஸாரம் ப்ரணுவத ஜனநோபாத்தலீலாகதா²பி⁴꞉ |
ஜானந்தஶ்சாஸ்ய நாமான்யகி²லஸுக²கராணீதி ஸங்கீர்தயத்⁴வம்
ஹே விஷ்ணோ கீர்தனாத்³யைஸ்தவ க²லு மஹதஸ்தத்த்வபோ³த⁴ம் ப⁴ஜேயம் || 99-3 ||

கிருஷ்ணா, ஒன்று சொல்வேன் நீயும் கேள். ஹே கவிஞர்களே, புலவர்களே, மஹா கவிகளே, நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை, அருமையான சக்தியை வீணடிக்காதீர்கள். காசுக்காக ராஜாக்களை, பிரபுக்களை, அழகிய பெண்களை வர்ணிக்கிறீர்களே, புகழ்கிறீர்களே , அதை நிறுத்துங்கள் முதலில். வேதங்களின் சாரமாக விளங்குகிறானே கிருஷ்ணன், அவனை பாடுங்கள், அவன் அவதாரங்களை ஒன்றுவிடாமல் சொல்லுங்கள், பாடுங்கள், அவன் நாமங்களை ருசித்து சொல்லுங்கள். அதால் கிட்டும் ஆனந்தத்துக்கு எது ஈடு? மனம் மகிழ்ந்து, மனம் பூரா நிரம்பிய அவன் நாமங்களை உச்சரியுங்கள். அதல்லவோ மேன்மை. பகவானே, நானும் அவர்களில் ஒருவனாக சேர்ந்து உன்னைப் பாடவேண்டும். அதற்கான ஞானம் உன்னிடமிருந்து பெறவேண்டும்.

विष्णो: कर्माणि सम्पश्यत मनसि सदा यै: स धर्मानबध्नाद्
यानीन्द्रस्यैष भृत्य: प्रियसख इव च व्यातनोत् क्षेमकारी ।
वीक्षन्ते योगसिद्धा: परपदमनिशं यस्य सम्यक्प्रकाशं
विप्रेन्द्रा जागरूका: कृतबहुनुतयो यच्च निर्भासयन्ते ॥४॥

viShNOH karmaaNi sampashyata manasi sadaa yaiH saH dharmaanabadhnaad
yaaniindrasyaiSha bhR^ityaH priyasakha iva cha vyaatanOt kshemakaarii |
iikshante yOgasiddhaaH parapadamanishaM yasya sanyak prakaashaM
viprendraa jaagaruukaaH kR^itabahunutayO yachcha nirbhaasayante ||4

விஷ்ணோ꞉ கர்மாணி ஸம்பஶ்யத மனஸி ஸதா³ யை꞉ ஸ த⁴ர்மானப³த்⁴னாத்³-
யானீந்த்³ரஸ்யைஷ ப்⁴ருத்ய꞉ ப்ரியஸக² இவ ச வ்யாதனோத்க்ஷேமகாரீ |
வீக்ஷந்தே யோக³ஸித்³தா⁴꞉ பரபத³மனிஶம் யஸ்ய ஸம்யக்ப்ரகாஶம்
விப்ரேந்த்³ரா ஜாக³ரூகா꞉ க்ருதப³ஹுனுதயோ யச்ச நிர்பா⁴ஸயந்தே || 99-4 ||

நாராயணா, மஹா விஷ்ணு, உன்னைப் பாட எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது! அதர்மத்தை விளக்கி தர்மத்தை நிலைநாட்டிய சம்பவங்கள். இதற்காக இந்திரனின் சேவகனாக, நண்பனாக கூட நீ உதவிய நாடகங்கள் இருக்கவே இருக்கிறது. யோகிகளே இன்னும் உன்னை அறிய முடியவில்லையே.

नो जातो जायमानोऽपि च समधिगतस्त्वन्महिम्नोऽवसानं
देव श्रेयांसि विद्वान् प्रतिमुहुरपि ते नाम शंसामि विष्णो ।
तं त्वां संस्तौमि नानाविधनुतिवचनैरस्य लोकत्रयस्या-
प्यूर्ध्वं विभ्राजमाने विरचितवसतिं तत्र वैकुण्ठलोके ॥५॥

nO jaatOjaayamaanO(a)pi cha samadhigatastvanmahimnO(a)vasaanaM
deva shreyaamsi vidvaan pratimuhurapi te naama shamsaami viShNO |
taM tvaaM samstaumi naanaavidhanuti vachanairasya lOkatrayasyaapyuurdhvaM
vibhraajamaane virachitavasatiM tatra vaikuNThalOke || 5

நோ ஜாதோ ஜாயமானோ(அ)பி ச ஸமதி⁴க³தஸ்த்வன்மஹிம்னோ(அ)வஸானம்
தே³வ ஶ்ரேயாம்ஸி வித்³வான்ப்ரதிமுஹுரபி தே நாம ஶம்ஸாமி விஷ்ணோ |
தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நானாவித⁴னுதிவசனைரஸ்ய லோகத்ரயஸ்யா-
ப்யூர்த்⁴வம் விப்⁴ராஜமானே விரசிதவஸதிம் தத்ர வைகுண்ட²லோகே || 99-5 ||

கிருஷ்ணா, அப்பப்பா, உன் எல்லையில்லாத மஹிமையை இதுவரை பிறந்தவர்களா, இப்போது இருப்பவர்களோ, இனி வரப்போகிறவர்களோ புரிந்து கொள்ள முடியாது. உன் நாமம் ஒன்று தானே இந்த வையகம் வாழ வழி வகுக்கிறது என அறிந்தவன் நான். உன்னை விடாமல் ஜபம்
செய்வேன். வைகுண்டவாஸா , திரிலோக நாதா.

நோ ஜாதோ ஜாயமானோ(அ)பி ச ஸமதி⁴க³தஸ்த்வன்மஹிம்னோ(அ)வஸானம்
தே³வ ஶ்ரேயாம்ஸி வித்³வான்ப்ரதிமுஹுரபி தே நாம ஶம்ஸாமி விஷ்ணோ |
தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நானாவித⁴னுதிவசனைரஸ்ய லோகத்ரயஸ்யா-
ப்யூர்த்⁴வம் விப்⁴ராஜமானே விரசிதவஸதிம் தத்ர வைகுண்ட²லோகே || 99-5 ||

आप: सृष्ट्यादिजन्या: प्रथममयि विभो गर्भदेशे दधुस्त्वां
यत्र त्वय्येव जीवा जलशयन हरे सङ्गता ऐक्यमापन् ।
तस्याजस्य प्रभो ते विनिहितमभवत् पद्ममेकं हि नाभौ
दिक्पत्रं यत् किलाहु: कनकधरणिभृत् कर्णिकं लोकरूपम् ॥६॥

aapaH sR^iShTyaadi janyaaH prathamamayi vibhO garbhadeshe dadhustvaaM
yatra tvayyeva jiivaa jalashayana hare sangataa aikyamaapan |
tasyaajasya prabhO te vinihitamabhavat padmamekaM hi naabhau
dik patraM yatkilaahuH kanakadharaNibhR^itkarNikaM lOkaruupam || 6

ஆப꞉ ஸ்ருஷ்ட்யாதி³ஜன்யா꞉ ப்ரத²மமயி விபோ⁴ க³ர்ப⁴தே³ஶே த³து⁴ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலஶயன ஹரே ஸங்க³தா ஐக்யமாபன் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ⁴ தே வினிஹிதமப⁴வத்பத்³மமேகம் ஹி நாபௌ⁴
தி³க்பத்ரம் யத்கிலாஹு꞉ கனகத⁴ரணிப்⁴ருத் கர்ணிகம் லோகரூபம் || 99-6 ||

பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமா, திரும்பிப் பார்க்கிறேன். ஆஹா இந்த பிரபஞ்சம் உருவாகும் முன் நீ மட்டுமே ஜல சயனனாக இருந்தாய். உன்னில் உதித்தவன் ஹிரண்யகர்பன்.ஒன்றன் பின் ஒன்றாக உயிர்கள் தோன்றின. கடைசியில் தோன்றிய இடத்தில் உன்னிடமே அடைக்கலம் புகுகின்றன. உனக்கே பத்மநாபன் என்று தானே பெயர், உன்னில் பிறந்தது உலகம், மஹாமேரு, எல்லாமே.

हे लोका विष्णुरेतद्भुवनमजनयत्तन्न जानीथ यूयं
युष्माकं ह्यन्तरस्थं किमपि तदपरं विद्यते विष्णुरूपम् ।
नीहारप्रख्यमायापरिवृतमनसो मोहिता नामरूपै:
प्राणप्रीत्येकतृप्ताश्चरथ मखपरा हन्त नेच्छा मुकुन्दे ॥७॥

he lOkaa viShNuretad bhuvanamajanayattanna jaaniitha yuuyaM
yuShmaakaM hyantarasthaM kimapi tadaparaM vidyate viShNuruupam |
niihaara prakhya maayaa parivR^ita manasO mOhitaa naamaruupaiH
praaNapriityaikatR^iptaashcharatha makhaparaa hanta nechChaa mukunde || 7

ஹே லோகா விஷ்ணுரேதத்³பு⁴வனமஜனயத்தன்ன ஜானீத² யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்த²ம் கிமபி தத³பரம் வித்³யதே விஷ்ணுரூபம் |
நீஹாரப்ரக்²யமாயாபரிவ்ருதமனஸோ மோஹிதா நாமரூபை꞉
ப்ராணப்ரீத்யைகத்ருப்தாஶ்சரத² மக²பரா ஹந்த நேச்சா² முகுந்தே³ || 99-7 ||

ஹே, உலகத்தோரே , ஒரு நிமிஷம் நில்லுங்கள். கேளுங்கள். புரிந்து கொள்ளுங்கள். உங்களையும் நீங்கள் வாழும் உலகத்தையே படைத்தவன் அந்த மஹா விஷ்ணு. உங்கள் ஹ்ருதயத்தில் ஒரு துளியாக வாஸம் செயகிறான். நீங்கள் அதை எப்போதும் என்றும் உணரவில்லையே. மூடுபனி போல் உங்கள் மனத்தை மாயை மறைத்து விடுவதால், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நிழலைப் பிடிக்கும் விளையாட்டில் ஈடுபடுகிறீர்களே. எல்லாவற்றையும் தப்பாகவே செய்கிறீர்கள், சொல்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள். புலன்கள் வழிநடத்தும் பாதையில் செல்வதால் பரமன் மேல் பற்று இல்லையே.

मूर्ध्नामक्ष्णां पदानां वहसि खलु सहस्राणि सम्पूर्य विश्वं
तत्प्रोत्क्रम्यापि तिष्ठन् परिमितविवरे भासि चित्तान्तरेऽपि ।
भूतं भव्यं च सर्वं परपुरुष भवान् किञ्च देहेन्द्रियादि-
ष्वाविष्टोऽप्युद्गतत्वादमृतसुखरसं चानुभुङ्क्षे त्वमेव ॥८॥

muurdhnaamakshNaaM padaanaaM vahasi khalu sahasraaNi sampuurya vishvaM
tat prOtkramyaapi tiShThan parimitavivare bhaasi chittaantare(a)pi|
bhuutaM bhavyaM cha sarvaM parapuruSha bhavaan ki~ncha dehendriyaadiShu
aaviShTO hyudgatatvaadamR^itamukharasaM chaanubhunkshe tvameva || 8

மூர்த்⁴னாமக்ஷ்ணாம் பதா³னாம் வஹஸி க²லு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஶ்வம்
தத்ப்ரோத்க்ரம்யாபி திஷ்ட²ன்பரிமிதவிவரே பா⁴ஸி சித்தாந்தரே(அ)பி |
பூ⁴தம் ப⁴வ்யம் ச ஸர்வம் பரபுருஷ ப⁴வான் கிஞ்ச தே³ஹேந்த்³ரியாதி³-
ஷ்வாவிஷ்டோ(அ)ப்யுத்³க³தத்வாத³ம்ருதஸுக²ரஸம் சானுபு⁴ங்க்ஷே த்வமேவ || 99-8 ||

வாதபுரீசா, புருஷ சூக்தம் உன்னை அற்புதமாக வர்ணிக்கிறது. ஆயிரம் சிரங்களை உடையவன் என்றால் வெறும் எண்ணிக்கை இல்லை. நிறைய, எண்ணிக்கையில்லாத என்று சொல்லும்போது நாம் ''எனக்கு ஆயிரம் வேலை இருக்கு'' என்கிறோம். எண்ணி ஆயிரம் வேலைகளையா சொல்கிறோம்? அதுபோல் எங்கு பார்த்தாலும் சிரங்கள் , கண்கள், கரங்கள், உன் திருவடி எங்கும் படர்ந்திருக்கிறது. ஸர்வ வியாபியான நீ ஒரு சிறு குகையில் ஹ்ருதயத்திலும் இருக்கிறாயே அது எப்படி. பெரிதில்ல பெரிது, சிறிதில் சிறிது இது தானா?

यत्तु त्रैलोक्यरूपं दधदपि च ततो निर्गतोऽनन्तशुद्ध-
ज्ञानात्मा वर्तसे त्वं तव खलु महिमा सोऽपि तावान् किमन्यत् ।
स्तोकस्ते भाग एवाखिलभुवनतया दृश्यते त्र्यंशकल्पं
भूयिष्ठं सान्द्रमोदात्मकमुपरि ततो भाति तस्मै नमस्ते ॥९॥

yattu trailOkyaruupaM dadhadapi cha tatO nirgataH anantashuddha
j~naanaatmaa vartase tvaM tava khalu mahimaa sO(a)pi taavaan kimanyat |
stOkaste bhaaga evaakhila bhuvanatayaa dR^ishyate tryamshakalpaM
bhuuyiShThaM saandramOdaatmakamupari tatO bhaati tasmai namaste || 9

யத்து த்ரைலோக்யரூபம் த³த⁴த³பி ச ததோ நிர்க³தோ(அ)னந்தஶுத்³த⁴-
ஜ்ஞானாத்மா வர்தஸே த்வம் தவ க²லு மஹிமா ஸோ(அ)பி தாவான்கிமன்யத் |
ஸ்தோகஸ்தே பா⁴க³ ஏவாகி²லபு⁴வனதயா த்³ருஶ்யதே த்ர்யம்ஶகல்பம்
பூ⁴யிஷ்ட²ம் ஸாந்த்³ரமோதா³த்மகமுபரி ததோ பா⁴தி தஸ்மை நமஸ்தே || 99-9 ||

எங்கும் நிறைந்த வாதபுரீஸா, ஸர்வ வியாபி, எங்கும் நிறைந்தவனே, உன்னை உலகோரில் உன் பக்தர்கள் ரிஷிகள் மஹான்கள், ஞானிகள் காண்பது உன் சக்தியில் எங்கோ ஒரு துளி மட்டுமே. மற்றதெல்லாம் விவரிக்கமுடியா ஆனந்தமயமான உள்ளதே. உனக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

अव्यक्तं ते स्वरूपं दुरधिगमतमं तत्तु शुद्धैकसत्त्वं
व्यक्तं चाप्येतदेव स्फुटममृतरसाम्भोधिकल्लोलतुल्यम् ।
सर्वोत्कृष्टामभीष्टां तदिह गुणरसेनैव चित्तं हरन्तीं
मूर्तिं ते संश्रयेऽहं पवनपुरपते पाहि मां कृष्ण रोगात् ॥१०॥

avyaktaM te svaruupaM duradhigamatamaM tattu shuddhaikasattvaM
vyaktaM chaapyetadeva sphuTamamR^itarasaambhOdhi kallOlatulyam |
sarvOtkR^iShTaamabhiiShTaaM tadiha guNarasenaiva chittaM harantiiM
muurtiM te samshraye(a)haM pavanapurapate paahimaaM kR^iShNa rOgaat10

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து³ரதி⁴க³மதமம் தத்து ஶுத்³தை⁴கஸத்த்வம்
வ்யக்தஞ்சாப்யேததே³வ ஸ்பு²டமம்ருதரஸாம்போ⁴தி⁴கல்லோலதுல்யம் |
ஸர்வோத்க்ருஷ்டாமபீ⁴ஷ்டாம் ததி³ஹ கு³ணரஸேனைவ சித்தம் ஹரந்தீம்
மூர்திம் தே ஸம்ஶ்ரயே(அ)ஹம் பவனபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா³த் || 99-10 ||

வாதபுரீஸா , எண்டே குருவாயூரப்பா, நீ மூவுலகும் கடந்தவன். உருவற்ற நிர்குணன். புரிபடாதவன். உனது சத்வகுண ஸ்வரூபம் எளிதில் அறியமுடிவது. உனது பாற்கடலின் தேனலைகள் போல அது மனதை கொள்ளைகொள்கிறது. உன் திருப்பாதம் பணிந்து என்னை அர்ப்பணித்து, உன்னை சரணடைந்து மனதில் உன் உருவம் பதித்துக் கொள்வேன். என்னை வியாதியிலிருந்து குணப்படுத்தப்பா.