60. கண் அவன் கணவன்
கோபிகளின் மனதில் கிருஷ்ணன் ஆழ்ந்து பதிந்து விட்டான். ஆயர்பாடிச் சிறுமிகள் கண்ணனே என் கணவன் என ஆகவேண்டும் என்று காத்யாயனி விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை என்பது பல காட்சிகளில் விளக்கப்படுகிறது. அதில் ஒன்று இந்த தசகம் சொல்வது.
मदनातुरचेतसोऽन्वहं भवदङ्घ्रिद्वयदास्यकाम्यया ।
यमुनातटसीम्नि सैकतीं तरलाक्ष्यो गिरिजां समार्चिचन् ॥१॥
madanaatura chetasO(a)nvahaM bhavadanghridvayadaasya kaamyayaa |
yamunaataTasiimni saikatiiM taralaakshyO girijaaM samaarchichan || 1
மத³னாதுரசேதஸோ(அ)ன்வஹம்
ப⁴வத³ங்க்⁴ரித்³வயதா³ஸ்யகாம்யயா |
யமுனாதடஸீம்னி ஸைகதீம்
தரலாக்ஷ்யோ கி³ரிஜாம் ஸமார்சிசன் || 60-1 ||
மனமெல்லாம் மாதவனிடமே என்ற நிலை பிருந்தாவன கோபிகளிடையே தோன்ற ஆரம்பித்து விட்டது. அவனது அழகு, சாதுர்யம், அன்பு, நட்பு, வீரம், தயை, காருண்யம், எவரிடமும் காணமுடியாததாக விளங்கியது. அவன் கண் சிமிட்டுவதே நக்ஷத்திரங்கள் வானில் பளிச்சென்று விட்டு விட்டு ஒளிர்வது போல் காந்த சக்தி கொண்டதாக இருந்த்தது. அவன் தாமரைத் திருவடிகள் வணங்க வென்றே கிடைத்த வரப்பிரசாதம். யமுனை நதிக்கரையில் ஈர மண்ணில் காத்யாயனி பொம்மை செய்து பூஜித்து விரதமிருந்தார்கள் கோபியர்கள்.
तव नामकथारता: समं सुदृश: प्रातरुपागता नदीम् ।
उपहारशतैरपूजयन् दयितो नन्दसुतो भवेदिति ॥२॥
tava naama kathaarataaH samaM sudR^ishaH praatarupaagataa nadiim |
upahaara shatairapuujayan dayitO nandasutO bhavediti || 2
தவ நாமகதா²ரதா꞉ ஸமம்
ஸுத்³ருஶ꞉ ப்ராதருபாக³தா நதீ³ம் |
உபஹாரஶதைரபூஜயன்
த³யிதோ நந்த³ஸுதோ ப⁴வேதி³தி || 60-2 ||
கிருஷ்ணா, அந்த அழகுப் புதுமைகள் விடிகாலையில் கூட்டமாக சேர்ந்து உன்னைப் பற்றிய பெருமைகளை, உன் வீர பிரதாபங்களை, உன் சக்தியை, உன் அழகைப் புகழ்ந்து பாடிக்கொண்டே யமுனை நதிக்கு ஸ்னானம் செய்யச் செல்வது கண்ணுக்கு விருந்தன ஒரு காட்சி. ஆண்டாள் திருப்பாவையில் எல்லோரையும் எழுப்பிச் செல்வது இந்த காட்சியைத் தான். யமுனையில் நீராடி பக்தியோடு பூக்களை பறித்து, வாசனாதி திரவியங்களை அர்ச்சித்து காத்யாயனி பூஜை செய்வார்கள். நந்தகோபன் குமரன் கணவனாக வேண்டுமென பிரார்த்தித்தார்கள்.
इति मासमुपाहितव्रतास्तरलाक्षीरभिवीक्ष्य ता भवान् ।
करुणामृदुलो नदीतटं समयासीत्तदनुग्रहेच्छया ॥३॥
iti maasamupaahita vrataaH taralaakshii rabhiviikshya taa bhavaan |
karuNaa mR^idulO nadiitaTaM samayaasiittadanugrahechChayaa || 3
இதி மாஸமுபாஹிதவ்ரதா-
ஸ்தரலாக்ஷீரபி⁴வீக்ஷ்ய தா ப⁴வான் |
கருணாம்ருது³லோ நதீ³தடம்
ஸமயாஸீத்தத³னுக்³ரஹேச்ச²யா || 60-3 ||
மார்கழி மாதம் காத்யாயனி விரத மிருப்பதை, பாவை நோன்பு நோற்பதை, திருப்பாவை அற்புதமாக சித்திரிக்கிறது. (என்னுடைய ''பாவையும் பரமனும்'' இந்த அற்புதத்தை விளக்கும் ஒரு சிறு நூலாக எழுத எனக்கு கண்ணனே உதவினான். ஒரு சில பிரதிகள் மட்டுமே உள்ளன வேண்டுமென்பவர்கள் என்னை வாட்ஸாப்பில் 9840279080ல் விலாசத்தோடு அணுகலாம்.)
கண்ணா நீ சகலமும் அறிந்தவன் அந்த கோபியர் மனத்தை அறியாமலா இருப்பாய். அந்த ஆயர்பாடி சிறுமிகளின் மனதை கொள்ளை கொண்டவனே, அவர்களை வாழ்த்த புறப்பட்டாய். சூரியன் உதிக்கும் முன்பு அவர்களோடு காளிந்தி நதிக்கரையை நீயும் அடைந்தாய்.
नियमावसितौ निजाम्बरं तटसीमन्यवमुच्य तास्तदा ।
यमुनाजलखेलनाकुला: पुरतस्त्वामवलोक्य लज्जिता: ॥४॥
niyamaavasitau nijaambaraM taTasiimanyavamuchya taastadaa |
yamunaajala khelanaakulaaH puratastvaamavalOkya lajjitaaH || 4
நியமாவஸிதௌ நிஜாம்ப³ரம்
தடஸீமன்யவமுச்ய தாஸ்ததா³ |
யமுனாஜலகே²லனாகுலா꞉
புரதஸ்த்வாமவலோக்ய லஜ்ஜிதா꞉ || 60-4 ||
அந்த பெண்கள் ஸ்னானம் செய்து காத்யாயனி விரதம் துவங்குமுன் ஆடைகளை கழற்றி காளிந்தி நதிக் கரையோரமாக ஈரம்படாமல் வைத்தார்கள். ஆண்கள் வராத ஒதுக்குப்புறமாக மரங்கள் அடர்ந்த கரையோரம் ஒரு இடத்தை இதற்கென கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். சிறுமிகள் அல்லவா? நீரில் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது தான் அவர்களில் யாரோ ஒருவள் நீயும் அங்கே இருப்பதைப் பார்த்துவிட்டாள். எல்லோருக்கும் அதிர்ச்சி. வெட்கம்.
त्रपया नमिताननास्वथो वनितास्वम्बरजालमन्तिके ।
निहितं परिगृह्य भूरुहो विटपं त्वं तरसाऽधिरूढवान् ॥५॥
trapayaa namitaananaasvathO vanitaasvambara jaalamantike |
nihitaM parigR^ihya bhuuruhO viTapaM tvaM tarasaa(a)dhiruuDhavaan || 5
த்ரபயா நமிதானநாஸ்வதோ²
வனிதாஸ்வம்ப³ரஜாலமந்திகே |
நிஹிதம் பரிக்³ருஹ்ய பூ⁴ருஹோ
விடபம் த்வம் தரஸாதி⁴ரூட⁴வான் || 60-5 ||
தலை குனிந்து, நீரில் அமிழ்ந்து தம்மை மறைத்துக்கொண்டார்கள். அவர்களது வஸ்திரங்களை நீ ஒன்று விடாமல் சேகரித்து எடுத்து மரத்தின் மேலேறி ஒரு கிளையில் வைத்துவிட்டாய். நீயும் கிளையில் அமர்ந்து கொண்டாய்.
इह तावदुपेत्य नीयतां वसनं व: सुदृशो यथायथम् ।
इति नर्ममृदुस्मिते त्वयि ब्रुवति व्यामुमुहे वधूजनै: ॥६॥
iha taavadupetya niiyataaM vasanaM vaH sudR^ishO yathaayatham |
iti narma mR^idusmite tvayi bruvati vyaamumuhe vadhuujanaiH || 6
இஹ தாவது³பேத்ய நீயதாம்
வஸனம் வ꞉ ஸுத்³ருஶோ யதா²யத²ம் |
இதி நர்மம்ருது³ஸ்மிதே த்வயி
ப்³ருவதி வ்யாமுமுஹே வதூ⁴ஜனை꞉ || 60-6 ||
''பெண்களே, அழகிய கண்களைக் கொண்டவர்களே, உங்கள் வஸ்திரங்கள் எது என்று இங்கே வந்து தேடி எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று நீ சொன்னதும், '' அடாடா என்ன இக்கட்டான நிலைமை இது, இவனிடம் இப்படி மாட்டிக்கொண்டோமே ''என்று அந்த சிறுமிகள் மிகவும் தயக்கத்தோடும் கலக்கத்தோடும் செய்வதறியாமல் திகைத்தார்கள்.
अयि जीव चिरं किशोर नस्तव दासीरवशीकरोषि किम् ।
प्रदिशाम्बरमम्बुजेक्षणेत्युदितस्त्वं स्मितमेव दत्तवान् ॥७॥
ayi jiiva chiraM kishOra nastava daasii ravashiikarOShi kim |
pradishaambara-mambujekshaNetyuditastvaM smitameva dattavaan || 7
அயி ஜீவ சிரம் கிஶோர ந-
ஸ்தவ தா³ஸீரவஶீகரோஷி கிம் |
ப்ரதி³ஶாம்ப³ரமம்பு³ஜேக்ஷணே-
த்யுதி³தஸ்த்வம் ஸ்மிதமேவ த³த்தவான் || 60-7 ||
குருவாயூரா, அப்போது அவர்கள் உன்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா உனக்கு?
''ஐயா வீராதி வீரரே, தீர்க்காயுசாக இரும். உமக்கு புண்ணியமாகப் போகட்டும். எங்களை அடிமையாக்கிய எஜமானனே , எங்களை ஏன் இப்படி துன்புறுத்துகிறாய். அப்பா தாமரைக் கண்ணா, தயவு செய்து எங்கள் ஆடைகளை திருப்பிக் கொடுத்துவிடு'
அவர்கள் கெஞ்சியபோது நீ ஆடையைக் கொடுக்கவில்லை, அழகிய புன் சிரிப்பைத் தான் கொடுத்தாய்.
अधिरुह्य तटं कृताञ्जली: परिशुद्धा: स्वगतीर्निरीक्ष्य ता: ।
वसनान्यखिलान्यनुग्रहं पुनरेवं गिरमप्यदा मुदा ॥८॥
adhiruhya taTaM kR^itaa~njaliiH parishuddhaaH svagatiiH niriikshya taaH |
vasanaanyakhilaanyanugrahaM punarevaM giramapyadaa mudaa || 8
அதி⁴ருஹ்ய தடம் க்ருதாஞ்ஜலீ꞉
பரிஶுத்³தா⁴꞉ ஸ்வக³தீர்னிரீக்ஷ்ய தா꞉ |
வஸனான்யகி²லான்யனுக்³ரஹம்
புனரேவம் கி³ரமப்யதா³ முதா³ || 60-8 ||
மெதுவாக கூனிக் குறுக்கிக் கொண்டு கூப்பிய கரங்களோடு அந்த சிறுமிகள், உடல் உள்ளம் இரண்டிலும் வேறெதுவும் இன்றி உன் மேல் பக்தி மட்டும் கொண்டவர்களாக கரையேறினார்கள். நீராடிவிட்டு உடல் உள்ளம் இரண்டுமே பரிசுத்தமாக உன்னைத் சரணடைந்தார்கள். அவர்களை வாழ்த்தி வஸ்திரங்களை உன் கையால் தொட்டு அவர்களுக்கு அளித்தாய். இங்கு விகல்பமான எண்ணம் எதுவுமே எவர் மனத்திலும் தோன்றவில்லை, வாசகர்களும் நிர்விகல்பமான மனத்தோடு அவ்வாறே குருவாயூரில் ஒரு குழந்தை சிரிப்பதை ஏற்றுக் கொள்ளட்டும்.
विदितं ननु वो मनीषितं वदितारस्त्विह योग्यमुत्तरम् ।
यमुनापुलिने सचन्द्रिका: क्षणदा इत्यबलास्त्वमूचिवान् ॥९॥
viditaM nanu vO maniiShitaM vaditaarasitvaha yOgyamuttaram |
yamunaa puline sachandrikaaH kshaNadaa ityabalaastvamuuchivaan || 9
விதி³தம் நனு வோ மனீஷிதம்
வதி³தாரஸ்த்விஹ யோக்³யமுத்தரம் |
யமுனாபுலினே ஸசந்த்³ரிகா꞉
க்ஷணதா³ இத்யப³லாஸ்த்வமூசிவான் || 60-9 ||
'கிருஷ்ணா, நீ அவர்களிடம் சொன்னதை நான் திருப்பி சொல்கிறேன் கேள் . ''உங்கள் மனம் நான் அறிவேன். உங்கள் மனோபீஷ்டம் பூர்த்தியாகும். இரவின் இருளை பூரண சந்திரன் தனது ஒளியால் வெள்ளி மயமாக்கி இருள் போக்கி அருள் தருவான்.''
उपकर्ण्य भवन्मुखच्युतं मधुनिष्यन्दि वचो मृगीदृश: ।
प्रणयादयि वीक्ष्य वीक्ष्य ते वदनाब्जं शनकैर्गृहं गता: ॥१०॥
upakarNya bhavanmukhachyutaM madhuniShyandi vachO mR^igiidR^ishaH |
praNayaadayi viikshya viikshya te vadanaabjaM shanakaigR^ihaM gataaH || 10
உபகர்ண்ய ப⁴வன்முக²ச்யுதம்
மது⁴னிஷ்யந்தி³ வசோ ம்ருகீ³த்³ருஶ꞉ |
ப்ரணயாத³யி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே
வத³னாப்³ஜம் ஶனகைர்க்³ருஹம் க³தா꞉ || 60-10 ||
எண்டே குருவாயூரப்பா, அந்த ஒன்றுமறியா மான் விழிச் சிறுமிகள், உன் ஆசியை நேரடியாகப் பெற்ற புண்யவதிகள். உன் தேனினுமினிய குரலை செவி குளிரக் கேட்டவர்கள். கண்ணா, கண் நிறைந்த கணவன் நீயாக வேண்டுமென உன்னை கண்ணாரக் கண்டவர்கள். கண் அவன் கண்ணன் கணவன் ஆகவேண்டும் என்று வேண்டியவர்கள். மனதில் நிறைந்தவனாக உன்னைக் கொண்ட சந்தோஷத்தில் வீடு திரும்பினார்கள்.
इति नन्वनुगृह्य वल्लवीर्विपिनान्तेषु पुरेव सञ्चरन् ।
करुणाशिशिरो हरे हर त्वरया मे सकलामयावलिम् ॥११॥
iti nanvanugR^ihya vallaviiH vipinaanteShu pureva sancharan |
karuNaashishirO hare hara tvarayaa me sakalaamayaavalim ||11
இதி நன்வனுக்³ருஹ்ய வல்லவீ-
ர்விபினாந்தேஷு புரேவ ஸஞ்சரன் |
கருணாஶிஶிரோ ஹரே ஹர
த்வரயா மே ஸகலாமயாவலிம் || 60-11 |
கருணாசாகரா, கோபியர் கொஞ்சும் ரமணா, கோபால கிருஷ்ணா, பிறகு நீ மீண்டும் வழக்கம் போலவே, பிருந்தாவன காட்டுக்குள் சுற்றச் சென்றுவிட்டாய். அப்படியே என் நோயையும் விரைவில் நீக்கிவிட்டு என்னையும் ரக்ஷிப்பாய்.