Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 10
10. மனிதன் தோன்றினான்.

वैकुण्ठ वर्धितबलोऽथ भवत्प्रसादा-
दम्भोजयोनिरसृजत् किल जीवदेहान् ।
स्थास्नूनि भूरुहमयानि तथा तिरश्चां
जातिं मनुष्यनिवहानपि देवभेदान् ॥१॥

vaikuṇṭha vardhitabalō:’tha bhavatprasādā-
daṁbhōjayōnirasr̥jatkila jīvadēhān |
sthāsnūni bhūruhamayāni tathā tiraścāṁ
jātīrmanuṣyanivahānapi dēvabhēdān || 10-1 ||

வைகுண்ட² வர்தி⁴தப³லோ(அ)த² ப⁴வத்ப்ரஸாதா³-
த³ம்போ⁴ஜயோனிரஸ்ருஜத்கில ஜீவதே³ஹான் |
ஸ்தா²ஸ்னூனி பூ⁴ருஹமயானி ததா² திரஶ்சாம்
ஜாதீர்மனுஷ்யனிவஹானபி தே³வபே⁴தா³ன் || 10-1 ||

''வைகுண்ட நாதா, நீ அளித்த அதீத சக்தியால் ப்ரம்மா ஸ்ரிஷ்டியை வேகமாக துவங்கிவிட்டான். ஸ்தாவர ஜங்கம உயிர்கள் தோன்றின. அசைவது, அசையாதது, பேசுவது பேசாதது, பரப்பன, நடப்பன, ஊர்வன, மிதப்பன எல்லாமே பிறந்தது. இந்த உயிரினங்களில் ஜீவன்தகுந்த உடலில் அடைக்கப்பட்டது.

मिथ्याग्रहास्मिमतिरागविकोपभीति-
रज्ञानवृत्तिमिति पञ्चविधां स सृष्ट्वा ।
उद्दामतामसपदार्थविधानदून -
स्तेने त्वदीयचरणस्मरणं विशुद्ध्यै ॥२॥

mithyāgrahāsmimatirāgavikōpabhīti-
rajñānavr̥ttimiti pañcavidhāṁ sa sr̥ṣṭvā |
uddāmatāmasapadārthavidhānadūna-
stēnē tvadīyacaraṇasmaraṇaṁ viśuddhyai || 10-2 ||

மித்²யாக்³ரஹாஸ்மிமதிராக³விகோபபீ⁴தி-
ரஜ்ஞானவ்ருத்திமிதி பஞ்சவிதா⁴ம் ஸ ஸ்ருஷ்ட்வா |
உத்³தா³மதாமஸபதா³ர்த²விதா⁴னதூ³ன-
ஸ்தேனே த்வதீ³யசரணஸ்மரணம் விஶுத்³த்⁴யை || 10-2 ||

அஹங்காரம் தோன்றிவிட்டது. ஐம்புலன்கள் தெரிந்துவிட்டது. மாயை உருவெடுத்தது. கோபம் தாபம் சண்டாளம் எல்லாம் புரிந்துவிட்டது. பயம் வந்துவிட்டது. தீயவைகளும் நல்லவற்றோடு உருவானது. பயிர் இருந்தால் களையும் தோன்றவில்லையா?. நெல்லொடு புல் . அப்போது தானே நல்லவற்றின் தன்மை மேன்மை புரியும். பிரமன் தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்ள நாராயணா உன் தாமரைத் திருவடிகளை விடாமல் தியானித்தான்.

तावत् ससर्ज मनसा सनकं सनन्दं
भूय: सनातनमुनिं च सनत्कुमारम् ।
ते सृष्टिकर्मणि तु तेन नियुज्यमाना-
स्त्वत्पादभक्तिरसिका जगृहुर्न वाणीम् ॥३॥

tāvatsasarja manasā sanakaṁ sanandaṁ
bhūyassanātanamuniṁ ca sanatkumāram |
tē sr̥ṣṭikarmaṇi tu tēna niyujyamānā-
stvatpādabhaktirasikā jagr̥hurna vāṇīm || 10-3 ||

தாவத்ஸஸர்ஜ மனஸா ஸனகம் ஸனந்த³ம்
பூ⁴யஸ்ஸனாதனமுனிம் ச ஸனத்குமாரம் |
தே ஸ்ருஷ்டிகர்மணி து தேன நியுஜ்யமானா-
ஸ்த்வத்பாத³ப⁴க்திரஸிகா ஜக்³ருஹுர்ன வாணீம் || 10-3 ||

பிரமன் சிருஷ்டியை தனது கையினால் நாம் பொம்மை செய்வது போல் படைக்கவில்லை. மனதில் சங்கல்பத்தால் எண்ணற்ற பிறவிகளை தோற்றுவித்தவன் . சனகர், ஸநந்தனர் ,சனாதனர் சனத் குமாரர் என்று ரிஷிகள் தோன்றினார்கள். ''நீங்களும் சிருஷ்டி யில் என்னோடு பங்கேற்க வாருங்கள்'' என அழைத்தும் அவர்கள் அதில் ஈடுபடவில்லை. அவர்கள் நாராயணா உனது திருவடிகளை வணங்குவதிலேயே காலம் கழித்தவர்கள்.

तावत् प्रकोपमुदितं प्रतिरुन्धतोऽस्य
भ्रूमध्यतोऽजनि मृडो भवदेकदेश: ।
नामानि मे कुरु पदानि च हा विरिञ्चे-
त्यादौ रुरोद किल तेन स रुद्रनामा ॥४॥

tāvatprakōpamuditaṁ pratirundhatō:’sya
bhrūmadhyatō:’jani mr̥ḍō bhavadēkadēśaḥ |
nāmāni mē kuru padāni ca hā viriñcē-
tyādau rurōda kila tēna sa rudranāmā || 10-4 ||

தாவத்ப்ரகோபமுதி³தம் ப்ரதிருந்த⁴தோ(அ)ஸ்ய
ப்⁴ரூமத்⁴யதோ(அ)ஜனி ம்ருடோ³ ப⁴வதே³கதே³ஶ꞉ |
நாமானி மே குரு பதா³னி ச ஹா விரிஞ்சே-
த்யாதௌ³ ருரோத³ கில தேன ஸ ருத்³ரனாமா || 10-4 ||

ப்ரம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது. அவரது மானசீக புத்திரர்களே இப்படி அவர் வாக்கை நிராகரித்து விட்டார்களே என்று கோபத்தோடு வருத்தமும் உண்டு. அந்த உணர்ச்சியை அவர் மறக்கமுடியவில்லை. அப்போது அவன் ஸ்ரிஷ்டியில் தோன்றியவர் ம்ரிதா. ப்ரம்மாவின் நெற்றிப்புருவங்கள் இடையே தோன்றியவர். இந்த ம்ருதா தான் கோபத்தில் பிறந்த ருத்ரன்.

एकादशाह्वयतया च विभिन्नरूपं
रुद्रं विधाय दयिता वनिताश्च दत्वा ।
तावन्त्यदत्त च पदानि भवत्प्रणुन्न:
प्राह प्रजाविरचनाय च सादरं तम् ॥५॥

ēkādaśāhvayatayā ca vibhinnarūpaṁ
rudraṁ vidhāya dayitā vanitāśca dattvā |
tāvantyadatta ca padāni bhavatpraṇunnaḥ
prāha prajāviracanāya ca sādaraṁ tam || 10-5 ||

ஏகாத³ஶாஹ்வயதயா ச விபி⁴ன்னரூபம்
ருத்³ரம் விதா⁴ய த³யிதா வனிதாஶ்ச த³த்த்வா |
தாவந்த்யத³த்த ச பதா³னி ப⁴வத்ப்ரணுன்ன꞉
ப்ராஹ ப்ரஜாவிரசனாய ச ஸாத³ரம் தம் || 10-5 ||

நாராயணா நீ உணர்த்தியபடியே ப்ரம்மா ருத்ரனுக்கு பதினோரு அம்சங்களை உண்டாக்கி பெயர்களை சூட்டினான். அவர்கள் இருப்பிடங்களை அமைத்தான். ''எனக்கு படைக்கும் தொழிலில் நீங்கள் உதவுங்கள்'' என கேட்டுக்கொண்டான்.
रुद्राभिसृष्टभयदाकृतिरुद्रसंघ-
सम्पूर्यमाणभुवनत्रयभीतचेता: ।
मा मा प्रजा: सृज तपश्चर मङ्गलाये-
त्याचष्ट तं कमलभूर्भवदीरितात्मा ॥६॥

rudrābhisr̥ṣṭabhayadākr̥tirudrasaṅgha-
saṁpūryamāṇābhuvanatrayabhītacētāḥ |
mā mā prajāḥ sr̥ja tapaścara maṅgalāyē-
tyācaṣṭa taṁ kamalabhūrbhavadīritātmā || 10-6 ||

ருத்³ராபி⁴ஸ்ருஷ்டப⁴யதா³க்ருதிருத்³ரஸங்க⁴-
ஸம்பூர்யமாணாபு⁴வனத்ரயபீ⁴தசேதா꞉ |
மா மா ப்ரஜா꞉ ஸ்ருஜ தபஶ்சர மங்க³லாயே-
த்யாசஷ்ட தம் கமலபூ⁴ர்ப⁴வதீ³ரிதாத்மா || 10-6 ||

ருத்ரனின் அம்சங்கள் கோபத்தோடு கூடியவை. மூவுலகிலும் நிறைந்தவர்கள். அவர்களுடைய கோபாவேசம் ப்ரம்மாவையே திகைக்கவைத்தது. உன் உந்துதலால் ப்ரம்மா ருத்ரனின் படைப்புகளை நிறுத்தினான். ''சிருஷ்டியை நிறுத்தி விட்டு நீங்கள் லோக க்ஷேமத்துக்காக தவம் இருங்கள்'' என்று ப்ரம்மா ருத்ரர்களை கேட்டுக்கொண்டார்.
तस्याथ सर्गरसिकस्य मरीचिरत्रि-
स्तत्राङिगरा: क्रतुमुनि: पुलह: पुलस्त्य: ।
अङ्गादजायत भृगुश्च वसिष्ठदक्षौ
श्रीनारदश्च भगवन् भवदंघ्रिदास: ॥७॥

tasyātha sargarasikasya marīciratri-
statrāṅgirāḥ kratumuniḥ pulahaḥ pulastyaḥ |
aṅgādajāyata bhr̥guśca vasiṣṭhadakṣau
śrīnāradaśca bhagavan bhavadaṅghridāsaḥ || 10-7 ||

தஸ்யாத² ஸர்க³ரஸிகஸ்ய மரீசிரத்ரி-
ஸ்தத்ராங்கி³ரா꞉ க்ரதுமுனி꞉ புலஹ꞉ புலஸ்த்ய꞉ |
அங்கா³த³ஜாயத ப்⁴ருகு³ஶ்ச வஸிஷ்ட²த³க்ஷௌ
ஶ்ரீனாரத³ஶ்ச ப⁴க³வன் ப⁴வத³ங்க்⁴ரிதா³ஸ꞉ || 10-7 ||

பிரம்மனின் சிருஷ்டி இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று வரையில், நான் இதை எழுதும் வரையிலும் கூட. நமது தேசத்திலேயே பல கோடி மனிதர்கள், இதைத் தவிர கணக்கிலடங்கா உயிர்கள். தாவரங்கள் அசையும் அசையா வஸ்துக்கள். பிரம்மனின் தேகத்திலிருந்து உதித்தவர்கள் தான் மரீசி, அத்ரி, ஆங்கிரஸ் , க்ரது முனி, புலஹர், புலஸ்தியர், ப்ருகு, வசிஷ்டர், தக்ஷர்கள், நாரதர் முதலிய ரிஷிகள், ஏனையோர்.

धर्मादिकानभिसृजन्नथ कर्दमं च
वाणीं विधाय विधिरङ्गजसंकुलोऽभूत् ।
त्वद्बोधितैस्सनकदक्षमुखैस्तनूजै-
रुद्बोधितश्च विरराम तमो विमुञ्चन् ॥८॥

dharmādikānabhisr̥jannatha kardamaṁ ca
vāṇīṁ vidhāya vidhiraṅgajasaṅkulō:’bhūt |
tvadbōdhitaiḥ sanakadakṣamukhaistanūjai-
rudbōdhitaśca virarāma tamō vimuñcan || 10-8 ||

த⁴ர்மாதி³கானபி⁴ஸ்ருஜன்னத² கர்த³மம் ச
வாணீம் விதா⁴ய விதி⁴ரங்க³ஜஸங்குலோ(அ)பூ⁴த் |
த்வத்³போ³தி⁴தை꞉ ஸனகத³க்ஷமுகை²ஸ்தனூஜை-
ருத்³போ³தி⁴தஶ்ச விரராம தமோ விமுஞ்சன் || 10-8 ||

பிரம்மாவால் பிறந்தவர்கள் தான் தர்ம தேவன், கர்தம ரிஷி, சரஸ்வதிதேவி. சரஸ்வதி ப்ரம்மனோடு தங்கி அவன் நாவில் குடியேறினாள்
वेदान् पुराणनिवहानपि सर्वविद्या:
कुर्वन् निजाननगणाच्चतुराननोऽसौ ।
पुत्रेषु तेषु विनिधाय स सर्गवृद्धि-
मप्राप्नुवंस्तव पदाम्बुजमाश्रितोभूत् ॥९॥

vēdānpurāṇanivahānapi sarvavidyāḥ
kurvannijānanagaṇāccaturānanō:’sau |
putrēṣu tēṣu vinidhāya sa sargavr̥ddhi-
maprāpnuvaṁstava padāṁbujamāśritō:’bhūt || 10-9 ||

வேதா³ன்புராணனிவஹானபி ஸர்வவித்³யா꞉
குர்வன்னிஜானநக³ணாச்சதுரானநோ(அ)ஸௌ |
புத்ரேஷு தேஷு வினிதா⁴ய ஸ ஸர்க³வ்ருத்³தி⁴-
மப்ராப்னுவம்ஸ்தவ பதா³ம்பு³ஜமாஶ்ரிதோ(அ)பூ⁴த் || 10-9 ||
குருவாயூரப்பா, நான்முகன் பிரம்மன் அப்புறம் வேதங்களை ஸ்ருஷ்டித்தான். புராணங்கள் உருவானது. சாஸ்திரங்கள் தோன்றியது. அவற்றையெல்லாம் புத்ரர்களுக்கு கற்பித்தான். ஸ்ரிஷ்டியோடு த்யானத்தில் உன்னை ஸ்மரித்தான் , உன் திருவடிகளை சரணடைந்து தொழுதான்.
जानन्नुपायमथ देहमजो विभज्य स्रीपुंसभावमभजन्मनुतद्वधूभ्याम् ।
ताभ्यां च मानुषकुलानि विवर्धयंस्त्वं
गोविन्द मारुतपुरेश निरुन्धि रोगान् ॥१०॥

jānannupāyamatha dēhamajō vibhajya
strīpuṁsabhāvamabhajanmanutadvadhūbhyām |
tābhyāṁ ca mānuṣakulāni vivardhayaṁstvaṁ
gōvinda mārutapurēśa nirundhi rōgān || 10-10 ||

ஜானந்னுபாயமத² தே³ஹமஜோ விப⁴ஜ்யஸ்த்ரீபும்ஸபா⁴வமப⁴ஜன்மனுதத்³வதூ⁴ப்⁴யாம் |தாப்⁴யாம் ச மானுஷகுலானி விவர்த⁴யம்ஸ்த்வம்
கோ³விந்த³ மாருதபுரேஶ நிருந்தி⁴ ரோகா³ன் || 10-10

''கிருஷ்ணா, நாராயணனே , உன்னுடைய அறிவுரையால், ப்ரம்மா தனது உடலின் இரு பக்கங்களிலிருந்தும் ஆண் பெண் என்று இருவகையாரை பிறப்பித்தான். அவர்கள் தான் மனுவும் அவன் மனைவி ஸதரூபாவும் . அவர்கள் மூலமே மனிதகுலம் உருவானது. ஓஹோ இப்போது தான் புரிகிறது, மனுவிலிருந்து வந்தவன் தான் மனுஷன்!
என்னப்பா குருவாயூரப்பா, இவ்வளவெல்லாம் பண்ணிய நீ என் ரோகத்தை நீக்கு உடனே என்று வேண்டிக்கொள்கிறார் நம்பூதிரி.