Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 66
66. எல்லாம் இன்பமயம்

நாராயணீயத்தில் ராஸலீலை தெரிவிப்பது ஏதோ பொழுது போக்கு, பெண்களோடு உல்லாச கேளிக்கை எனும் விஷயம் அல்ல. பக்தன் பரமனிடம் கொள்ளும் தூய அன்பு என்றால் என்ன, அதனால் எப்படி வாழ்வு ஆனந்தமயமாகும் என்று உணர்த்த. எல்லோரும் நம்மவரே என்ற சம பாவத்தோடு அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் வயதுக்கு பங்கு இல்லை. பெற்றோர்களை விட குழந்தைகளோடு தாத்தாக்கள் பாட்டிகள் தான் அதிகம் நேரம் செலுத்துகிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். நானே அதை அனுபவித்து மகிழ்பவன். அதில் அடையும் இன்பமே தனி.
கண்ணன் பகவான். எல்லாமுணர்ந்த சர்வஞன். வேதஸ்வரூபன். அவனோடு சரிசமமாக பழகி விளையாடி, மகிழ்ந்தது அறிவற்ற, ஞானமில்லாத யாதவ, இடைக்குல பெண்கள். ரெண்டுக்கும் எப்படி பொருந்தும் என்று யோசித்தால், பக்தி ஒன்று தான் இணைக்கும் பாலம் என்று நன்றாக புரியும். கண்ணனுக்காக உயிரையும் விட துணிந்தவர்கள் கோபியர்கள்.பகவானுக்கும் பக்தனுக்கும் இடையே பால், (ஆண்பால்/பெண்பால்), படிப்பு, வயது, குலம், சமூக அந்தஸ்து,ஏழை பணக்கார பேதம் எதுவும் இல்லை.

उपयातानां सुदृशां कुसुमायुधबाणपातविवशानाम् ।
अभिवाञ्छितं विधातुं कृतमतिरपि ता जगाथ वाममिव ॥१॥

upayaataanaaM sudR^ishaaM kusumaayudha baaNapaata vivashaanaam |
abhivaanichChataM vidhaatuM kR^itamatirapitaa jagaatha vaamamiva || 1

உபயாதானாம் ஸுத்³ருஶாம் குஸுமாயுத⁴பா³ணபாதவிவஶானாம் |
அபி⁴வாஞ்சி²தம் விதா⁴தும் க்ருதமதிரபி தா ஜகா³த² வாமமிவ || 66-1 ||

கிருஷ்ணா, உன்மேல் அளவற்ற அன்புடன் ஓடிவந்து பழகிய பெண்களுக்கு நீங்கள் உங்கள் குடும்ப பொறுப்பு, கடமைகளை முதலில் கவனியுங்கள் என்று உணர்த்தியவன் நீ. உனக்கு கன்றுக்குட்டியும் ஒன்று, கோபியர்களும் ஒன்று தானே.

गगनगतं मुनिनिवहं श्रावयितुं जगिथ कुलवधूधर्मम् ।
धर्म्यं खलु ते वचनं कर्म तु नो निर्मलस्य विश्वास्यम् ॥२॥

gaganagataM muninivahaM shraavayituM jagitha kulavadhuu dharmam |
dharmyaM khalu te vachanaM karmatu nO nirmalasya vishvaasyam || 2

க³க³னக³தம் முனினிவஹம் ஶ்ராவயிதும் ஜகி³த² குலவதூ⁴த⁴ர்மம் |
த⁴ர்ம்யம் க²லு தே வசனம் கர்ம து நோ நிர்மலஸ்ய விஶ்வாஸ்யம் || 66-2 ||

ஒரு பொறுப்புள்ள மனைவியின் கடமை, ஸ்வதந்த்ரம், குல தர்மம், தாய் சேய் உறவு, அன்பு, பாசம் எல்லாம் அவர்களுக்கு உன் விளையாட்டோடு உணர்த்தினாய். ரிஷிகளுக்கும் ஞானம் போதித்தாய். உன் உருவம் உன் வயது உன் ஞானத்தை பெரிதாக்கி காட்டவில்லை. ஒன்றுமறியாத கோப சிறுவனாகவே உயர்ந்த ஞானங்களை வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதுபோல் உணர்த்தினாய்.

आकर्ण्य ते प्रतीपां वाणीमेणीदृश: परं दीना: ।
मा मा करुणासिन्धो परित्यजेत्यतिचिरं विलेपुस्ता: ॥३॥

aakarNya te pratiipaaM vaaNiimeNiidR^ishaH parandiinaaH |
maa maa karuNaasindhO parityajetyatichiraM vilepustaaH || 3

ஆகர்ண்ய தே ப்ரதீபாம் வாணீமேணீத்³ருஶ꞉ பரம் தீ³னா꞉ |
மா மா கருணாஸிந்தோ⁴ பரித்யஜேத்யதிசிரம் விலேபுஸ்தா꞉ || 66-3 ||

உன் உயர்ந்த தத்துவங்களை அவ்வளவு சீக்கிரம் அந்த கோபியர்களால் புரிந்துகொள்ளமுடியுமா?. ஏதோ நீ அவர்களை விட்டு பிரியப்போகிறவன் போல் பேசுகிறாய் என்று எண்ணினார்கள். கண்களில் நீர் வடிய உன் பிரிவை அவர்களால் தாங்கமுடியாது, எங்களை நீ கைவிடாதே கண்ணா என்று கெஞ்சி, அழுதார்கள்.

तासां रुदितैर्लपितै: करुणाकुलमानसो मुरारे त्वम् ।
ताभिस्समं प्रवृत्तो यमुनापुलिनेषु काममभिरन्तुम् ॥४॥

taasaaM ruditairlapitaiH karuNaakulamaanasO muraare tvam |
taabhiH samaM pravR^ittO yamunaapulineShu kaamamabhirantum || 4

தாஸாம் ருதி³தைர்லபிதை꞉ கருணாகுலமானஸோ முராரே த்வம் |
தாபி⁴꞉ ஸமம் ப்ரவ்ருத்தோ யமுனாபுலினேஷு காமமபி⁴ரந்தும் || 66-4 ||

முராரி, உன்னால் எல்லோர் மனதையும் புரிந்துகொள்ளமுடியாதா? அவர்களோடு கை கோர்த்து ஓடிப் பிடித்து நீ விளையாடினாய். அவர்களுக்கு அது தான் தெரியும். பிடிக்கும், துக்கம் மறைந்தது. ஆனந்தம் மேலிட்டது. யமுனை நதிக்கரை மணல் உங்கள் விளையாட்டு ஸ்தலமாக ஆனந்தத்தை அளித்தது.

चन्द्रकरस्यन्दलसत्सुन्दरयमुनातटान्तवीथीषु ।
गोपीजनोत्तरीयैरापादितसंस्तरो न्यषीदस्त्वम् ॥५॥

chandrakarasyanda lasatsundara yamunaa taTaanta viithiiShu |
gOpii janOttariiyairaapaadita samstarO nyaShiidastvam || 5

சந்த்³ரகரஸ்யந்த³லஸ-த்ஸுந்த³ரயமுனாதடாந்தவீதீ²ஷு |
கோ³பீஜனோத்தரீயைராபாதி³தஸம்ஸ்தரோ ந்யஷீத³ஸ்த்வம் || 66-5 ||

வெண்ணிற யமுனா நதி மணல் பரப்பு பால் நிலவின் ஒளியில் எங்கும் குளிர்ந்த காற்றை தெளித்து சுகமான ஒரு சூழ்நிலையை பரிசளித்தது. பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டே உங்கள் எல்லோருக்கும் நேரம் ஓடியது.

सुमधुरनर्मालपनै: करसंग्रहणैश्च चुम्बनोल्लासै: ।
गाढालिङ्गनसङ्गैस्त्वमङ्गनालोकमाकुलीचकृषे ॥६॥

sumadhura narmaalapanaiH karasangrahaNaishcha chumbanOllaasaiH |
gaaDhaalingana sangaistvamanganaalOka maakulii chakR^iShe || 6

ஸுமது⁴ரனர்மாலபனை꞉ கரஸங்க்³ரஹணைஶ்ச சும்ப³னோல்லாஸை꞉ |
கா³டா⁴லிங்க³னஸங்கை³-ஸ்த்வமங்க³னாலோகமாகுலீசக்ருஷே || 66-6 ||

குழந்தை மனத்தோடு குதூகலமாக முன்னிரவு பூரா ஆட்டம் பாட்டம், ஓட்டமாக நீ விளையாடிய அழகை ஜெயதேவர் மனக் கண்ணால் நேரில் பார்த்து ரசித்தவராக எழுதியதெல்லாம் கீத கோவிந்தத்தில் பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். இதோ மேப்பத்தூர் நாராயண பட்டத்ரியும் அதை அற்புதமாக நினைவு கூறுகிறார். நீ அந்த கோபியரின் சிறு உலகத்தில் சந்தோஷமாக விளையாடி எல்லோரையும் மகிழ்விப்பவன். உன் இசையால், அழகால் அவர்கள் மனதில் இன்பமூட்டியவன்.

वासोहरणदिने यद्वासोहरणं प्रतिश्रुतं तासाम् ।
तदपि विभो रसविवशस्वान्तानां कान्त सुभ्रुवामदधा: ॥७॥

vaasOharaNadine yadvaasO haraNaM pratishrutaM taasaam |
vibhO rasavivashasvaantaanaaM kaantasubhruvaamadadaaH || 7

வாஸோஹரணதி³னே யத்³வாஸோஹரணம் ப்ரதிஶ்ருதம் தாஸாம் |
தத³பி விபோ⁴ ரஸவிவஶஸ்வாந்தானாம் காந்தஸுப்⁴ருவாமத³தா⁴꞉ || 66-7 ||

ப்ரபோ, நீ உன்மீது தூய அன்பு செலுத்திய அந்த எளிய பக்தர்களுக்கு அன்பும் ஆதரவும் தந்து ஆனந்தத்தை அளித்த பரமாத்மா. அவர்களில் ஒருவராகவே உன்னைக் காட்டிக்கொண்டு சரிசமமாக அவர்களோடு பழகி வ்ரஜபூமியை ரக்ஷித்தவன். நான் நீ என்ற பேதமின்றி எல்லாமே நீயாக அவர்களை உணரச் செய்தவன்.

कन्दलितघर्मलेशं कुन्दमृदुस्मेरवक्त्रपाथोजम् ।
नन्दसुत त्वां त्रिजगत्सुन्दरमुपगूह्य नन्दिता बाला: ॥८॥

kandalita gharmaleshaM kunda mR^idusmera vaktrapaathOjam |
nandasuta tvaaM trijagat sundaramupaguuhya nanditaa baalaaH || 8

கந்த³லிதக⁴ர்மலேஶம் குந்த³ம்ருது³ஸ்மேரவக்த்ரபாதோ²ஜம் |
நந்த³ஸுத த்வாம் த்ரிஜக³த்ஸுந்த³ரமுபகூ³ஹ்ய நந்தி³தா பா³லா꞉ || 66-8 ||

தெய்வமே, நந்தகுமாரா, ஆனந்தகுமாரா, பரிபூர்ண மன அமைதி, ஆனந்தம் எல்லோருக்கும் அளித்தவனே. உலகையே மறந்து உன்னுடன் களித்து இன்புற அவர்கள் எவ்வளவு பாக்யம் செய்தவர்கள்.

विरहेष्वङ्गारमय: शृङ्गारमयश्च सङ्गमे हि त्वम्
नितरामङ्गारमयस्तत्र पुनस्सङ्गमेऽपि चित्रमिदम् ॥९॥

viraheShvangaaramayaH shR^ingaaramayashcha sangame hi tvam |
nitaraamangaaramayastatra punaH sangame(a)pi chitramidam || 9

விரஹேஷ்வங்கா³ரமய꞉ ஶ்ருங்கா³ரமயஶ்ச ஸங்க³மே(அ)பி த்வம்
நிதராமங்கா³ரமயஸ்தத்ர புன꞉ ஸங்க³மே(அ)பி சித்ரமித³ம் || 66-9 ||

ஒரு க்ஷணம் நீ அவர்களை விட்டு அகன்றாலும் தாபத்தில் தீயில் வெந்து தவித்தார்கள். என்னருகே நீ இருந்தால் உலகமெல்லாம் இனிக்குதடா என்று அவர்கள் அகமகிழ்ந்து திருப்தியோடு பாடி இன்புறச் செய்தவனே. நீ மாயாஜாலன் .

राधातुङ्गपयोधरसाधुपरीरम्भलोलुपात्मानम् ।
आराधये भवन्तं पवनपुराधीश शमय सकलगदान् ॥१०॥

raadhaa tunga payOdhara saadhu pariirambha lOlupaatmaanam |
aaraadhaye bhavantaM pavana puraadhiisha shamaya sakalagadaan ||10

ராதா⁴துங்க³பயோத⁴ர-ஸாது⁴பரீரம்ப⁴லோலுபாத்மானம் |
ஆராத⁴யே ப⁴வந்தம் பவனபுராதீ⁴ஶ ஶமய ஸகலக³தா³ன் || 66-10 ||

எண்டே குருவாயூரப்பா காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவனே, கவர்பவனே, உன்னைச் சரணடைகிறேன். ராதாகிருஷ்ணா, என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷிப்பாயா?