Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 45
45. கண்ணனும் வெண்ணையும்

நாட்கள் தான் உலகிலேயே அதி வேகமாக ஓடுபவை. நாள் ஓடும்போது மாற்றங்களும் கூடவே மாறி மாறி நிகழ்வதால் உலகம் ரொம்ப சுவாரஸ்யமான அனுபவமாகி விடுகிறது. குழந்தையாக இருந்த கண்ணன் இப்போது ஒரு பையன். அது தான் இந்த தசகத்தின் பொருள்.

अयि सबल मुरारे पाणिजानुप्रचारै:
किमपि भवनभागान् भूषयन्तौ भवन्तौ ।
चलितचरणकञ्जौ मञ्जुमञ्जीरशिञ्जा-
श्रवणकुतुकभाजौ चेरतुश्चारुवेगात् ॥१॥

ayi sabala muraare paaNijaanu prachaaraiH
kimapi bhavanabhaagaan bhuuShayantau bhavantau |
chalita charaNaka~njau ma~njuma~njiira shi~njaa
shravaNa kutuka bhaajau cheratushchaaru vegaat || 1

அயி ஸப³ல முராரே பாணிஜானுப்ரசாரை꞉
கிமபி ப⁴வனபா⁴கா³ன் பூ⁴ஷயந்தௌ ப⁴வந்தௌ |
சலிதசரணகஞ்ஜௌ மஞ்ஜுமஞ்ஜீரஶிஞ்ஜா-
ஶ்ரவணகுதுகபா⁴ஜௌ சேரதுஶ்சாரு வேகா³த் || 45-1 ||

அதோ அந்த பெரிய அரண்மனை தெரிகிறதே கோகுலத்தில், அது தான் நந்தகோபன் இல்லம் . அதில் தவழ்கிறவர்கள் தான் பலராமனும் கிருஷ்ணனும். கையில் வளையல்கள், காப்புகள், காலில் தண்டை கொலுசுகள் ஒலிக்க எவ்வளவு ஆனந்தமாக தாங்கள் எழுப்பும் சப்தத்தை தாங்களே ரசித்து கேட்டு மகிழ்கிறார்கள். வேக வேகமாக கால்களை மாற்றி மாற்றி வைத்து தவழ்கிறார்கள்.

मृदु मृदु विहसन्तावुन्मिषद्दन्तवन्तौ
वदनपतितकेशौ दृश्यपादाब्जदेशौ ।
भुजगलितकरान्तव्यालगत्कङ्कणाङ्कौ
मतिमहरतमुच्चै: पश्यतां विश्वनृणाम् ॥२॥

mR^idu mR^idu vihasantau unmiShaddantavantau
vadana patita keshau dR^ishya paadaabja deshau |
bhuja galita karaanta vyaalagat kankaNaankau
matimaharatamuchchaiH pashyataaM vishvanR^INaam ||2

ம்ருது³ ம்ருது³ விஹஸந்தாவுன்மிஷத்³த³ந்தவந்தௌ
வத³னபதிதகேஶௌ த்³ருஶ்யபாதா³ப்³ஜதே³ஶௌ |
பு⁴ஜக³லிதகராந்தவ்யாலக³த்கங்கணாங்கௌ
மதிமஹரதமுச்சை꞉ பஶ்யதாம் விஶ்வன்ரூணாம் || 45-2 ||

கண்ணப்பா, நீ எவ்வளவு அழகுடா! உன் முகத்தில் காந்த புன்னகை. அரிசி அரிசியாக வெண்ணிற பற்கள், கருத்த, சுருண்ட குழல்கள் போன்ற சிகை, முகத்தில் வந்து விழ, அதன் கருமையில் உன் கருத்த முகம் மறைந்து போகிறது. உன் உள்ளங்கால்கள் செந்தாமரை இதழ்கள் போல் நீ தவழும்போது செக்கச் சிவந்து தெரிகிறதே. ஆஹா இந்த திருவடிகளை தரிசிக்க எத்தனை யுகங்களாக பல ரிஷிகள்,முனிவர்கள் தவம் கிடந்தவர்கள். உன் கையில் தான் எத்தனை வளையல்கள், காப்புகள் , நீ கையை ஊன்றி தவழும்போது எல்லா வளையல்களும் உன் உள்ளங்கை வரை இறங்கி ஆடி அசைந்து வித வித சப்தம் எழுப்புகிறது. சூல்கொண்ட பெண்கள் கையில் கூட இத்தனை வளையல்கள் வளைகாப்பு அன்று அணிந்திருக்க மாட்டார்கள். கிருஷ்ணா, பலராமா , நீங்கள் இருவருமே காண்போர் மனதை கொள்ளை கொள்கிறீர்கள்''.

अनुसरति जनौघे कौतुकव्याकुलाक्षे
किमपि कृतनिनादं व्याहसन्तौ द्रवन्तौ ।
वलितवदनपद्मं पृष्ठतो दत्तदृष्टी
किमिव न विदधाथे कौतुकं वासुदेव ॥३॥

anusarati janaughe kautuka vyaakulaakshe
kimapi kR^ita ninaadaM vyaahasantau dravantau |
valita vadanapadmaM pR^iShThatO dattadR^iShTii
kimiva na vidadhaathe kautukaM vaasudeva ||3

அனுஸரதி ஜனௌகே⁴ கௌதுகவ்யாகுலாக்ஷே
கிமபி க்ருதனினாத³ம் வ்யாஹஸந்தௌ த்³ரவந்தௌ |
வலிதவத³னபத்³மம் ப்ருஷ்ட²தோ த³த்தத்³ருஷ்டீ
கிமிவ ந வித³தா⁴தே² கௌதுகம் வாஸுதே³வ || 45-3 ||

குருவாயூரப்பா, நீ கிருஷ்ணனாக தவழும்போது, உன்னை ஆசையோடு பிடித்து, வாரி தூக்கி அணைத்துக் கொள்ள வரும் கோபியர்களிடமிருந்து நீங்கள் இருவரும் கலகலவென்று என்னென்னவோ சப்தம் செய்து கொண்டு அவர்கள் கைகளில் அகப்படாமல் ஓடி தப்பி நகர்ந்து அங்கிருந்து தலையைத் திருப்பி அவர்கள் முகத்தை பார்க்கிறீர்கள். இந்த அழகை எப்படி வர்ணிப்பது? வசுதேவன் மகன் வாசுதேவா, எவ்வளவு சந்தோஷம் தருகிறாயடா நீ அனைவருக் கும்!

द्रुतगतिषु पतन्तावुत्थितौ लिप्तपङ्कौ
दिवि मुनिभिरपङ्कै: सस्मितं वन्द्यमानौ ।
द्रुतमथ जननीभ्यां सानुकम्पं गृहीतौ
मुहुरपि परिरब्धौ द्राग्युवां चुम्बितौ च ॥४॥

drutagatiShu patantau utthitau liptapankau
divi munibhirapankaiH sasmitaM vandyamaanau |
drutamatha jananiibhyaaM saanukampaM gR^ihiitau
muhurapi parirabdhau draagyuvaaM chumbitau cha || 4

த்³ருதக³திஷு பதந்தாவுத்தி²தௌ லிப்தபங்கௌ
தி³வி முனிபி⁴ரபங்கை꞉ ஸஸ்மிதம் வந்த்³யமானௌ |
த்³ருதமத² ஜனநீப்⁴யாம் ஸானுகம்பம் க்³ருஹீதௌ
முஹுரபி பரிரப்³தௌ⁴ த்³ராக்³யுவாம் சும்பி³தௌ ச || 45-4 ||

அடாடா, நீ வேக வேகமாக நாலு கால் பாய்ச்சலில் ஓடும்போது சில சமயம் நிலை தவறி தடுமாறி தொப்பென்று ஒரு பக்கம் சாய்ந்து விழுகிறாயே , எப்படி உடனே உன்னை சமாளித்துக்கொண்டு எழுந்து உடலில் புழுதியோடு மீண்டும் மண்ணில் தவழ்ந்து ஓடுகிறாய் . யோகிகள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், எல்லோரும் உன்னை வணங்குகிறார்கள், உடலில் புழுதி இல்லாவிட்டாலும் உள்ளத்தில் புழுதி இல்லாதிருக்க உன்னை வேண்டுகிறார்களே . நீ சிரிக்கிறாய் கண்ணா! அடிக்கொருதடவை, நொடிக்கொரு தடவை உங்கள் தாய்கள் ரோஹிணி , யசோதை இருவரும் ஓடி வந்து விடுகிறார்களே உங்களைத் தூக்கி இடுப்பில் வைத்து கொஞ்சி முத்தமிட.

स्नुतकुचभरमङ्के धारयन्ती भवन्तं
तरलमति यशोदा स्तन्यदा धन्यधन्या ।
कपटपशुप मध्ये मुग्धहासाङ्कुरं ते
दशनमुकुलहृद्यं वीक्ष्य वक्त्रं जहर्ष ॥५॥

snuta kuchabharamanke dhaarayantii bhavantaM
taralamati yashOdaa stanyadaa dhanyadhanyaa |
kapaTapashupa madhye mugdhahaasaankuraM te
dashanamukula hR^idyaM viikshya vaktraM jaharSha ||5

ஸ்னுதகுசப⁴ரமங்கே தா⁴ரயந்தீ ப⁴வந்தம்
தரலமதி யஶோதா³ ஸ்தன்யதா³ த⁴ன்யத⁴ன்யா |
கபடபஶுப மத்⁴யே முக்³த⁴ஹாஸாங்குரம் தே
த³ஶனமுகுலஹ்ருத்³யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ || 45-5 ||

மார்பில் பால் சேர்ந்து கனக்க , உன் அன்னை யசோதை உன்னை நாடி ஓடி வருகிறாள் உனக்கு பாலூட்ட. ஆசையோடு உன்னை மடியில் இட்டுக்கொண்டு அந்த பாக்கியசாலி யசோதை சந்தோஷத்தோடு எல்லையற்ற மகிழ்ச்சியோடு உன்னை அணைத்துக் கொள்கிறாள். நீயும் பொல்லாதவன் வெடுக் வெடுக் என்று பால் குடிக்கும்போதே அவளை சுகமாக கடிப்பவன். யாதவ குல திலகா. உன் அரிசிப்பல்லைக் காண்பதில் தான் அவளுக்கு எவ்வளவு ஆனந்தம்.

तदनुचरणचारी दारकैस्साकमारा-
न्निलयततिषु खेलन् बालचापल्यशाली ।
भवनशुकविडालान् वत्सकांश्चानुधावन्
कथमपि कृतहासैर्गोपकैर्वारितोऽभू: ॥६॥

tadanu charaNachaarii daarakaiH saakamaaraat
nilayatatiShu khelan baalachaapalyashaalii |
bhavana shuka biDaalaan vatsakaamshchaanudhaavan
kathamapi kR^itahaasaiH gOpakaiH vaaritO(a)bhuuH ||6

தத³னு சரணசாரீ தா³ரகை꞉ ஸாகமாரா-
ந்னிலயததிஷு கே²லன் பா³லசாபல்யஶாலீ |
ப⁴வனஶுகபி³டா³லான் வத்ஸகாம்ஶ்சானுதா⁴வன்
கத²மபி க்ருதஹாஸைர்கோ³பகைர்வாரிதோ(அ)பூ⁴꞉ || 45-6 ||

மூன்றடி மண் கேட்டு நடந்த நீ முதன் முதலாக நடக்க ஆரம்பித்து விட்டாய் கிருஷ்ணா. அசுரர்களை ஓட ஓட விரட்டிக் கொன்ற நீ முதல் முதலாக ஓடவும் ஆரம்பித்துவிட்டாய். அண்டை அசல் பையன் களோடு கால் முளைத்து விளையாட ஆரம்பித்துவிட்டாய். ஆஹா இனி கோகுலத்தையே உங்கள் ஆட்டம் பாட்டத்தில் புரட்டிப்போடப் போகிறீர்கள். எண்ணற்ற குறும்புகள் இனி மலரப்போகிறது. கிளிகளை துரத்தப்போகிறீர்கள். பூனைகள் கன்றுக்குட்டிகள் இனி உங்கள் வசம் தான். கோபர்கள் சிரித்துக்கொண்டே உங்களை தடுத்து நிறுத்த முயற்சித்து தோல்வியைச் சந்திக்கிறார்கள்.

हलधरसहितस्त्वं यत्र यत्रोपयातो
विवशपतितनेत्रास्तत्र तत्रैव गोप्य: ।
विगलितगृहकृत्या विस्मृतापत्यभृत्या
मुरहर मुहुरत्यन्ताकुला नित्यमासन् ॥७॥

haladhara sahitastvaM yatra yatrOpayaatO
vivasha patita netraaH tatra tatraiva gOpyaH |
vigalita gR^ihakR^ityaa vismR^itaapatya bhR^ityaaH
murahara muhuratyantaakulaa nityamaasan || 7

ஹலத⁴ரஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ
விவஶபதிதனேத்ராஸ்தத்ர தத்ரைவ கோ³ப்ய꞉ |
விக³லிதக்³ருஹக்ருத்யா விஸ்ம்ருதாபத்யப்⁴ருத்யா
முரஹர முஹுரத்யந்தாகுலா நித்யமாஸன் || 45-7 ||

முரனைக் கொன்ற முராரி, என்ன மாயமடா செய்துவிட்டாய் நீ. நீயும் பலராமனும் எங்கு சென்றாலும் ஆயிரமாயிரம் கோபியரின் கண்கள் உங்களையே விடாமல் தொடர்கிறதே. அவர்கள் கவனம் பூரா உங்கள் மேலேயே இருக்கிறதே! அது எப்படி? வீடு, கணவமார்கள், வீட்டு வேலைகள், குழந்தைகள், வீட்டில் மற்றவர்கள், பெற்றவர்கள் எல்லோரையும் , எல்லாவற்றையும் எப்படி மறக்க முடிகிறது? வேறு வேலை எதுவும் இல்லாதது போல் உங்களையே நிழல் போல் பின் தொடர்கிறார் களே !

प्रतिनवनवनीतं गोपिकादत्तमिच्छन्
कलपदमुपगायन् कोमलं क्वापि नृत्यन् ।
सदययुवतिलोकैरर्पितं सर्पिरश्नन्
क्वचन नवविपक्वं दुग्धमप्यापिबस्त्वम् ॥८॥

pratinava navaniitaM gOpikaadattamichChan
kalapadamupagaayan kOmalaM kvaapi nR^ityan |
sadayayuvati lOkairarpitaM sarpirashnan
kvachana navavipakvaM dugdhamapyaapibastvam || 8

ப்ரதினவனவனீதம் கோ³பிகாத³த்தமிச்ச²ன்
கலபத³முபகா³யன் கோமலம் க்வாபி ந்ருத்யன் |
ஸத³யயுவதிலோகைரர்பிதம் ஸர்பிரஶ்னந்
க்வசன நவவிபக்வம் து³க்³த⁴மப்யாபிப³ஸ்த்வம் || 45-8 ||

குருவாயூரப்பா, கிருஷ்ணனாக வந்த நீ ஜாலக்காரன். உனக்கு வெண்ணெய் பிடித்துவிட்டது. எவ்வளவு கொடுத்தாலும் போதவில்லை. அவர்களிடமிருந்து பெறுவதற்கு நீ எவ்வளவு வேஷம் ஆட்டம் போடுகிறாய். பாடுகிறாய், ஆடுகிறாய். உள்ளம் கொள்ளை போகுதே. பாலைக் காய்ச்சி கொண்டுவந்து தருகிறார்கள், ஆனந்தமாக குடிக்கிறாய்.

मम खलु बलिगेहे याचनं जातमास्ता-
मिह पुनरबलानामग्रतो नैव कुर्वे ।
इति विहितमति: किं देव सन्त्यज्य याच्ञां
दधिघृतमहरस्त्वं चारुणा चोरणेन ॥९॥

mama khalu baligehe yaachanaM jaatamaastaam
iha punarabalaanaamagratO naiva kurve |
iti vihitamatiH kiM deva santyajya yaach~naaM
dadhighR^itamaharastvaM chaaruNaa chOraNena ||9

மம க²லு ப³லிகே³ஹே யாசனம் ஜாதமாஸ்தா-
மிஹ புனரப³லானாமக்³ரதோ நைவ குர்வே |
இதி விஹிதமதி꞉ கிம் தே³வ ஸந்த்யஜ்ய யாச்ஞாம்
த³தி⁴க்⁴ருதமஹரஸ்த்வம் சாருணா சோரணேன || 45-9 ||

என்னப்பா, ஒருவேளை நீ இப்படி சிந்தித்தாயோ? ''நான் மஹாபலியிடம் யாசகம் கேட்கவேண்டிய சூழ்நிலை, நிர்பந்தமாகிவிட்டது. ஆனால் இந்த கோபியரிடம் போய் கை நீட்டி நான் யாசிக்க போவதில்லை. அவர்களாக தரட்டும், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது வேறு வழி, எனக்கு வேண்டியதை அடைய , உன் வெண்ணெயதிருடும் வித்தைகள் மனதில் உருவாகி விட்டதா?

तव दधिघृतमोषे घोषयोषाजनाना-
मभजत हृदि रोषो नावकाशं न शोक: ।
हृदयमपि मुषित्वा हर्षसिन्धौ न्यधास्त्वं
स मम शमय रोगान् वातगेहाधिनाथ ॥१०॥

tava dadhighR^itamOShe ghOShayOShaajanaanaam
abhajata hR^idi rOShO naavakaashaM na shOkaH |
hR^idayamapi muShitvaa harShasindhau nyadhaastvaM
sa mama shamaya rOgaan vaatagehaadhinaatha || 10

தவ த³தி⁴க்⁴ருதமோஷே கோ⁴ஷயோஷாஜனானா-
மப⁴ஜத ஹ்ருதி³ ரோஷோ நாவகாஶம் ந ஶோக꞉ |
ஹ்ருத³யமபி முஷித்வா ஹர்ஷஸிந்தௌ⁴ ந்யதா⁴ஸ்த்வம்
ஸ மம ஶமய ரோகா³ன்வாதகே³ஹாதி⁴னாத² || 45-10 ||

எண்டே குருவாயூரப்பா, உண்மையில் வ்ரஜ பூமி மக்கள் உன் வெண்ணை திருட்டை பெரிதாக லக்ஷியம் செய்யவில்லை.அமோகமாக இருக்கிறது பாலும் வெண்ணையும். அதனால் எவரும் சோகமோ துக்கமோ அடையவில்லை. நீ அவர்கள் மனதையே, எண்ணத்தையே திருடிவிட்டாயே ஆனந்தக் கடலில் மூழ்க வைத்தாயே , என்னையும் நோய் நீங்கி மகிழ வைக்க உன்னால் முடியுமே.