Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 86
86. கிருஷ்ணனின் மஹோன்னதம்.

சால்வன் என்று ஒரு அசுரராஜா. தவம் செய்து அபூர்வ சக்திகள் கொண்டவனாக இருந்தான். சொல்லவே வேண்டாம் அவன் கிருஷ்ணனின் எதிரி. மகா பாரத யுத்தத்தில் முழு சேனையோடு கௌரவர்கள் பக்கம் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்தவன். பாரத யுத்தத்தின் சில ருசிகர சம்பவங்களை இந்த தசகம் நினைவு கூர்கிறது.

साल्वो भैष्मीविवाहे यदुबलविजितश्चन्द्रचूडाद्विमानं
विन्दन् सौभं स मायी त्वयि वसति कुरुंस्त्वत्पुरीमभ्यभाङ्क्षीत् ।
प्रद्युम्नस्तं निरुन्धन्निखिलयदुभटैर्न्यग्रहीदुग्रवीर्यं
तस्यामात्यं द्युमन्तं व्यजनि च समर: सप्तविंशत्यहान ॥१॥

saalvO bhaiShmii vivaahe yadubalavijitaH chandrachuuDaadvimaanaM
vindan saubhaM samaayii tvayi vasati kuruumstvatpuriimabhyabhaankshiit |
pradyumnastaM nirundhannikhilayadubhaTairnyagrahiidugra viiryaM
tasyaamaatyaM dyumantaM vyajani cha samaraH saptavimshatyahaantam ||1

ஸால்வோ பை⁴ஷ்மீவிவாஹே யது³ப³லவிஜிதஶ்சந்த்³ரசூடா³த்³விமானம்
விந்த³ன்ஸௌப⁴ம் ஸ மாயீ த்வயி வஸதி குரும்ஸ்த்வத்புரீமப்⁴யபா⁴ங்க்ஷீத் |
ப்ரத்³யும்னஸ்தம் நிருந்த⁴ன்னிகி²லயது³ப⁴டைர்ன்யக்³ரஹீது³க்³ரவீர்யம்
தஸ்யாமாத்யம் த்³யுமந்தம் வ்யஜனி ச ஸமர꞉ ஸப்தவிம்ஶத்யஹாந்தம் || 86-1 ||

சால்வன் ஏன் கிருஷ்ணனின் எதிரி என்பதற்கு ஒரு முக்கிய காரணம் அவன் ருக்மிணியை கிருஷ்ணன் கடத்தியபோது ருக்மியோடு சேர்ந்து எதிர்த்தபோது, யாதவர்களால் தோற்கடிக்கப்பட்டவன். சிசுபாலன் நண்பன். சிவனை நோக்கி தவம் இருந்து அபூர்வ சக்திகள் பெற்றவன். அவனிடம் நினைத்த இடத்திற்கு பறக்கும் விமானம் ஒன்று இருந்தது. அதன் பெயர் சௌபா. 5000 வருஷங்களுக்கு முன்பே ஆகாய விமானம் என்ற சாதனம் பற்றி நம் முன்னோர்கள், வேத வியாசர் போன்றவர்கள் அறிந்திருந்ததால் தான் சௌபாவை மஹா பாரதம் வர்ணிக்கிறது.

சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்த சால்வன், கிருஷ்ணர் ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள இந்திரப்பிரஸ்தம் சென்ற நேரத்தில் தனது விசித்திர விமானத்தில் ஆயுதங்களோடு வந்து எதிர்பாராதவிதமாக துவாரகையைத் தாக்கினான், உனது மகன் ப்ரத்யும்னனால் இந்த திடீர் தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியாமல் காயமுற்றான். அதற்கு முன் சாகசமாக சால்வனை எதிர்த்தான். அவன் மந்திரி த்யூமனைக் கொன்றான். எண்ணற்ற யாதவ வீரர்கள் அழிந்தார்கள். 27 நாட்கள் போர் நடந்தது.

तावत्त्वं रामशाली त्वरितमुपगत: खण्डितप्रायसैन्यं
सौभेशं तं न्यरुन्धा: स च किल गदया शार्ङ्गमभ्रंशयत्ते ।
मायातातं व्यहिंसीदपि तव पुरतस्तत्त्वयापि क्षणार्धं
नाज्ञायीत्याहुरेके तदिदमवमतं व्यास एव न्यषेधीत् ॥२॥

taavattvaM raamashaalii tvaritamupagataH khaNDita praayasainyaM
saubheshaM taM nyarundhaaH sa cha kila gadayaashaarngamabhramshayatte |
maayaataataM vyahimsiidapi tava puratastattvayaapi kshaNaardhaM
naaj~naayiityaahureke tadidamavamataM vyaasa eva nyaShedhiit || 2

தாவத்த்வம் ராமஶாலீ த்வரிதமுபக³த꞉ க²ண்டி³தப்ராயஸைன்யம்
ஸௌபே⁴ஶம் தம் ந்யருந்தா⁴꞉ ஸ ச கில க³த³யா ஶார்ங்க³மப்⁴ரம்ஶயத்தே |
மாயாதாதம் வ்யஹிம்ஸீத³பி தவ புரதஸ்தத்த்வயாபி க்ஷணார்த⁴ம்
நாஜ்ஞாயீத்யாஹுரேகே ததி³த³மவமதம் வ்யாஸ ஏவ ந்யஷேதீ⁴த் || 86-2 ||

கிருஷ்ணா, விஷயம் சற்று தாமதமாக கிடைத்தாலும் உடனே நீ பலராமனோடு துவாரகைக்கு திரும்பினாய். சால்வனோடு யுத்தம் புரிந்து அவன் சேனையை அழித்தாய். உனது சாரங்கத்தை சால்வன் உடைத்தான். அவனுடைய மந்திர தந்திர சக்தியால் சால்வன் உன்னுடைய தந்தை வஸுதேவரை அவன் பிடித்து கொல்வது போல் ஒரு காட்சி நிகழ்த்தினான். உன்னையே ஒரு கணம் திகைக்க வைத்தான். மற்றவர்கள் அப்படி நினைக்கும்படியாக இருந்தாலும், உண்மையில் நீ அப்படி திகைத்து மலைத்துப் போய்விடவில்லை என்று வேதவியாஸர் சொல்கிறார்.

क्षिप्त्वा सौभं गदाचूर्णितमुदकनिधौ मङ्क्षु साल्वेऽपि चक्रे-
णोत्कृत्ते दन्तवक्त्र: प्रसभमभिपतन्नभ्यमुञ्चद्गदां ते ।
कौमोदक्या हतोऽसावपि सुकृतनिधिश्चैद्यवत्प्रापदैक्यं
सर्वेषामेष पूर्वं त्वयि धृतमनसां मोक्षणार्थोऽवतार: ॥३॥

kshiptvaa saubhaM gadaa chuurNitamudakanidhau mankshu saalve(a)pi chakreNOtkR^
itte dantavaktraH prasabhamabhipatannabhyamunchadgadaaM te |
kaumOdakyaa hatO(a)saavapi sukR^itanidhishchaidyavat praapadaikyaM
sarveShaameSha puurvaM tvayi dhR^ita manasaaM mOkshaNaarthO(a)vataaraH || 3

க்ஷிப்த்வா ஸௌப⁴ம் க³தா³சூர்ணிதமுத³கனிதௌ⁴ மங்க்ஷு ஸால்வே(அ)பி சக்ரே-
ணோத்க்ருத்தே த³ந்தவக்த்ர꞉ ப்ரஸப⁴மபி⁴பதன்னப்⁴யமுஞ்சத்³க³தா³ம் தே |
கௌமோத³க்யா ஹதோ(அ)ஸாவபி ஸுக்ருதனிதி⁴ஶ்சைத்³யவத்ப்ராபதை³க்யம்
ஸர்வேஷாமேஷ பூர்வம் த்வயி த்⁴ருதமனஸாம் மோக்ஷணார்தோ²(அ)வதார꞉ || 86-3 ||

உன்னுடைய கௌமோதகி எனும் கதாயுதம் சால்வனின் சௌபா விமானத்தைப் பொடிப் பொடியாக்கி கடலில் எறிந்தது . சுதர்சனம் புறப்பட்டு சால்வனின் சிரத்தைக் கொய்தது. மறைந்திருந்த தந்தவக்ரன் எனும் அரக்கன் திடீரென்று உன்னை தனது கதாயுதத்தால் தாக்கினான். கௌமோதகி அதற்கு தக்க பதிலளித்து தந்த வக்ரனை அடித்து கூழாக்கியது. தந்தவக்ரன் தான் பெற்ற வரத்தால் உன் எதிரியாக பிறந்து உன்னால் மரணமடைந்து மீண்டும் உன்னை வணங்கி வைகுண்டம் சென்றான்.அவன் இன்னொரு சிசுபாலன் அல்லவா? புண்யவான். ஜெய விஜயர்களின் மூன்று அவதாரங்கள் முடிந்தன, ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், ராவணன் கும்பகர்ணன், சிசுபாலன் தந்தவக்ரன். இனி அவர்கள் வைகுண்டத்தில் முன்பு போல் உனது துவாரபாலர்கள்.

त्वय्यायातेऽथ जाते किल कुरुसदसि द्यूतके संयताया:
क्रन्दन्त्या याज्ञसेन्या: सकरुणमकृथाश्चेलमालामनन्ताम् ।
अन्नान्तप्राप्तशर्वांशजमुनिचकितद्रौपदीचिन्तितोऽथ
प्राप्त: शाकान्नमश्नन् मुनिगणमकृथास्तृप्तिमन्तं वनान्ते ॥४॥

tvayyaayaate(a)tha jaate kila kurusadasi dyuutake sanyataayaaH
krandantyaa yaaj~nasenyaaH sakaruNamakR^ithaashchelamaalaamanantaam |
annaanta praapta sharvaamshaja muni chakita draupadii chintitO(a)tha
praaptaH shaakaannamashnan munigaNamakR^ithaastR^iptimantaM vanaante || 4

த்வய்யாயாதே(அ)த² ஜாதே கில குருஸத³ஸி த்³யூதகே ஸம்யதாயா꞉
க்ரந்த³ந்த்யா யாஜ்ஞஸேன்யா꞉ ஸகருணமக்ருதா²ஶ்சேலமாலாமனந்தாம் |
அன்னாந்தப்ராப்தஶர்வாம்ஶஜமுனிசகிதத்³ரௌபதீ³சிந்திதோ(அ)த²
ப்ராப்த꞉ ஶாகான்னமஶ்னந் முனிக³ணமக்ருதா²ஸ்த்ருப்திமந்தம் வனாந்தே || 86-4 ||

கிருஷ்ணா, நீ இந்த்ரப்ரஸ்தத்திலிருந்து கிளம்பியதும் தான் சகுனி துரியோதனர்கள் திட்டம் போட்டு பாண்டவர்களை மாய சூதாட்டத்துக்கு இழுத்து அவர்கள் சகலமும் இழந்தார்கள், பாஞ்சாலி துரியோதனன் சபையில் மானபங்கப் படுத்தப்பட்டாள். அவள் நிர்க்கதியாக உன்னை சரணடைந்து உன் நாமத்தை உச்சரித்ததும் மேலும் புத்தாடைகள் அதிகரித்து அவமானப்படாமல் காப்பாற்றப்பட்டாள், பன்னிரண்டு வருஷம் வனவாசம், ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் என்று கட்டளையிடப்பட்டு வனவாசத்தில் இருந்தபோதும் அன்னதானம் செய்தார்கள். சூரியன் அளித்த அக்ஷயபாத்ரம் துர்வாசர் தனது ஆயிரமாயிரம் சீடர்களுடன் வந்த சமயம் கவிழ்த்து மூடப்பட்டிருந்ததால் உன்னை வேண்டிய பாஞ்சாலிக்கு அருள் புரிய, அந்த பாத்திரத்தில் விளிம்பு மடிப்பில் எங்கோ ஒட்டிக் கொண்டிருந்த ந்த ஒரு கீரைத் துண்டை நீ உண்டதும் அனைவருமே வயிறு நிரம்ப பசியாறியது போல் திருப்தியாக திரும்பிச் சென்றார்கள்.

युद्धोद्योगेऽथ मन्त्रे मिलति सति वृत: फल्गुनेन त्वमेक:
कौरव्ये दत्तसैन्य: करिपुरमगमो दूत्यकृत् पाण्डवार्थम् ।
भीष्मद्रोणादिमान्ये तव खलु वचने धिक्कृते कौरवेण
व्यावृण्वन् विश्वरूपं मुनिसदसि पुरीं क्षोभयित्वागतोऽभू: ॥५॥

yuddhOdyOge(a)tha mantre milati sati vR^itaH phalgunena tvamekaH
kauravye dattasainyaH karipuramagamO dautyakR^it paaNDavaartham |
bhiiShmadrONaadi maanye tava khalu vachane dhikkR^ite kauraveNa
vyaavR^iNvan vishvaruupaM muni sadasi puriiM kshObhayitvaagatO(a)bhuuH || 5

யுத்³தோ⁴த்³யோகே³(அ)த² மந்த்ரே மிலதி ஸதி வ்ருத꞉ ப²ல்கு³னேன த்வமேக꞉
கௌரவ்யே த³த்தஸைன்ய꞉ கரிபுரமக³மோ தூ³த்யக்ருத்பாண்ட³வார்த²ம் |
பீ⁴ஷ்மத்³ரோணாதி³மான்யே தவ க²லு வசனே தி⁴க்க்ருதே கௌரவேண
வ்யாவ்ருண்வன்விஶ்வரூபம் முனிஸத³ஸி புரீம் க்ஷோப⁴யித்வா(ஆ)க³தோ(அ)பூ⁴꞉ || 86-5 ||

கிருஷ்ணா, நீ பிறந்தது முதல் ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒரு அற்புதத்தை விடாமல் புதிது புதிதாக நிகழ்த்தியது தான் ஆச்சர்யம். ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள்.

மஹாபாரத யுத்தம் நாள் குறித்தாகி விட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் தங்களுக்கு யாரெல்லாம் துணையோ அவர்களோடு கூட்டு சேர்ந்து முடிவு செய்யும் போது துவாரகை ராஜ்ய படை யார் பக்கம் பங்கேற்கும் என்றும் உன் உதவியை நாடி வந்தார்கள் . ஒரே நாளில் ஒரே நேரத்தில் அர்ஜுனனும் துரியோதனனும் உன்னை நாடி வந்தபோது நீ யாருக்கு என்று உதவுவது? இருவரும் நண்பர்கள் உறவினர்கள். சமயோசிதமாக நீ உன் படை ஒருபக்கம், ஆயுதம் ஏந்தாத நீ மட்டும் மறு பக்கம் என்று பிரித்து நான் வேண்டுமா சேனை வேண்டுமா? என்று கேட்டாய். முதலில் அர்ஜுனனைக் கேட்டது தான் விசேஷம். அவன் தயங்காமல் நீ மட்டும் போதும் உன் படை வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அப்போதே பாண்டவர்கள் வெற்றி உறுதியாகிவிட்டதே.

அதேபோல் கிருஷ்ணா, உன் சமாதான தூது ஹஸ்தினாபுரத்தில் நடந்தது. உன்னை அவமதித்த,, கொல்ல நினைத்த கௌரவர்களுக்கு, துரியோதனனுக்கு உன் பராக்கிரம ரூபத்தை காட்டினாய். நகரமே கிடுகிடுத்து சுழன்றது. நீ உன் சமாதான முயற்சியில் தோல்வியுற்றவனாக துவாரகை திரும்பினாய். உன் எண்ணமே போர் நடந்து அநேக கொடிய க்ஷத்ரியர்கள் மறையவேண்டும் என்பது தானே. க்ரிஷ்ணாவதாரம் அதற்கு தானே எடுத்தவன் நீ ?

जिष्णोस्त्वं कृष्ण सूत: खलु समरमुखे बन्धुघाते दयालुं
खिन्नं तं वीक्ष्य वीरं किमिदमयि सखे नित्य एकोऽयमात्मा ।
को वध्य: कोऽत्र हन्ता तदिह वधभियं प्रोज्झ्य मय्यर्पितात्मा
धर्म्यं युद्धं चरेति प्रकृतिमनयथा दर्शयन् विश्वरूपम् ॥६॥

jiShNOstvaM kR^iShNa suutaH khalu samaramukhe bandhughaate dayaaluM
khinnaM taM viikshya viiraM kimidamayi sakhe nitya ekOyamaatmaa |
kO vadhyaH kO(a)tra hantaa tadiha vadhabhiyaM prOjjhya mayyarpitaatmaa
dharmyaM yuddhaM chareti prakR^itimanayathaa darshayan vishvaruupam || 6

ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத꞉ க²லு ஸமரமுகே² ப³ந்து⁴கா⁴தே த³யாலும்
கி²ன்னம் தம் வீக்ஷ்ய வீரம் கிமித³மயி ஸகே² நித்ய ஏகோ(அ)யமாத்மா |
கோ வத்⁴ய꞉ கோ(அ)த்ர ஹந்தா ததி³ஹ வத⁴பி⁴யம் ப்ரோஜ்ஜ்²ய மய்யர்பிதாத்மா
த⁴ர்ம்யம் யுத்³த⁴ம் சரேதி ப்ரக்ருதிமனயதா² த³ர்ஶயன்விஶ்வரூபம் || 86-6 ||

கிருஷ்ணா, நீ பாரில் பார்த்தனுக்கு ரதத்தை மட்டுமா ஒட்டினாய். பா ரதத்தையே நீ தானே நடத்தினாய். நீ சொல்லியபடி செய்யும் கருவி தானே அர்ஜுனன். நீ எண்ணியதை நிறைவேற்ற தானே அவன் கையில் வில்லும் அம்பும். அவனுக்கு கீதோபதேசம் செய்து நெஞ்சில் உரம் ஊட்டியதே அவனைச் சாக்கிட்டு எங்களுக்காக தானே.கர்மம், தர்மம், ஞானம், பக்தி எல்லாம் புகட்டியது அவனுக்கா, நிச்சயம் அவன் மூலம் எங்களுக்காகவே,

भक्तोत्तंसेऽथ भीष्मे तव धरणिभरक्षेपकृत्यैकसक्ते
नित्यं नित्यं विभिन्दत्ययुतसमधिकं प्राप्तसादे च पार्थे ।
निश्शस्त्रत्वप्रतिज्ञां विजहदरिवरं धारयन् क्रोधशाली-
वाधावन् प्राञ्जलिं तं नतशिरसमथो वीक्ष्य मोदादपागा: ॥७॥

bhaktOttamsetha bhiiShme tava dharaNi bharakshepa kR^ityaikasakte
nityaM nityaM vibhindatyayutasamadhikaM praaptasaade cha paarthe |
nishshastratvapratij~naaM vijahadarivaraM dhaarayan krOdhashaaliivaadhaavan
praa~njaliM taM natashirasamathO viikshya mOdaadapaagaaH || 7

ப⁴க்தோத்தம்ஸே(அ)த² பீ⁴ஷ்மே தவ த⁴ரணிப⁴ரக்ஷேபக்ருத்யைகஸக்தே
நித்யம் நித்யம் விபி⁴ந்த³த்யயுதஸமதி⁴கம் ப்ராப்தஸாதே³ ச பார்தே² |
நிஶ்ஶஸ்த்ரத்வப்ரதிஜ்ஞாம் விஜஹத³ரிவரம் தா⁴ரயன்க்ரோத⁴ஶாலீ-
வாதா⁴வன்ப்ராஞ்ஜலிம் தம் நதஶிரஸமதோ² வீக்ஷ்ய மோதா³த³பாகா³꞉ || 86-7 ||

கிருஷ்ணா, போரில் உன் பக்தன் பீஷ்மன், உனது அவதார காரியத்தை சுலபமாக்கினான். பூமியின் பாரத்தை குறைப்பதற்கு எண்ணற்ற உயிர்களைக் கொன்றான். ஒருசமயம் அவனை நீ முடிப்பதற்காக சக்கரத்துடன் நீ யுத்த களத்தில் பீஷ்மனை நெருங்கியபோது உன்னை சிரமேற் கரத்தோடு வணங்கி வரவேற்றான். எப்படியாவது உன்னை போரில் ஆயுதம் தாங்கி பங்கேற்க செய்கிறேன் என்ற அவன் சபதம் நிறைவேறும் தருணம் அது. நீ பொறுமை காத்து அது நேராமல், அவனை வாழ்த்தினாய். பார்த்தனின் தேருக்கு திரும்பினாய். சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மனை வீழ்த்தினாய்.

द्धे द्रोणस्य हस्तिस्थिररणभगदत्तेरितं वैष्णवास्त्रं
वक्षस्याधत्त चक्रस्थगितरविमहा: प्रार्दयत्सिन्धुराजम् ।
नागास्त्रे कर्णमुक्ते क्षितिमवनमयन् केवलं कृत्तमौलिं
तत्रे त्रापि पार्थं किमिव नहि भवान् पाण्डवानामकार्षीत् ॥८॥

yuddhe drONasya hasti sthiraraNa bhagadatteritaM vaiShNavaastraM
vakshasyaadhatta chakrasthagita ravi mahaaH praardayat sindhuraajam |
naagaastre karNamukte kshitimavanamayan kevalaM kR^ittamauliM
tatre tatraapi paarthaM kimiva nahi bhavaan paaNDavaanaamakaarShiit || 8

யுத்³தே⁴ த்³ரோணஸ்ய ஹஸ்திஸ்தி²ரரணப⁴க³த³த்தேரிதம் வைஷ்ணவாஸ்த்ரம்
வக்ஷஸ்யாத⁴த்த சக்ரஸ்த²கி³தரவிமஹா꞉ ப்ரார்த³யத்ஸிந்து⁴ராஜம் |
நாகா³ஸ்த்ரே கர்ணமுக்தே க்ஷிதிமவனமயன்கேவலம் க்ருத்தமௌலிம்
தத்ரே தத்ராபி பார்த²ம் கிமிவ ந ஹி ப⁴வான் பாண்ட³வானாமகார்ஷீத் || 86-8

அர்ஜுனனுக்கு போரில் நேர்ந்த ஆபத்துகள் கொஞ்சமா நஞ்சமா? துரோணர் அஸ்திரங்களை நீ ஏற்று அர்ஜுனனை காப்பாற்றினாய், த்ரோணனின் புத்ர பாசத்தை காரணமாக வைத்து அஸ்வத்தாமன் எனும் யானையைக் கொன்று அவன் மகன் இறந்ததாக நம்பவைத்து அர்ஜுனனால் அவன் மரணமடைய வைத்தாய். உன் நாராயண அஸ்திரத்தை உன்னையன்றி எவரும் தடுக்கமுடியாது என்பதால் நீயே அதை ஏற்றாய். அர்ஜுனனை காத்தாய். பகதத்தனை ஜெயிக்க வைத்தாய். அர்ஜுனன் செய்த சபதத்தை நிறைவேற்ற, சூரியனை மறைத்து, சுதர்சன சக்ரத்தை சூரியஒளியாக்கி, ஜயத்ரதனை அர்ஜூனன் சபதமிட்டபடியே அஸ்தமனத்துக்குள் கொல்ல உதவினாய் . கர்ணன் ஏவிய நாகாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனைகாப்பாற்றினாய். இதெல்லாம் ஒரு சாதாரண தேரோட்டியோ ஒரு படையோ, மஹா வீரனோ, செய்ய முடியும் காரியமா? நீ ஒருவன் போதும் என்று அர்ஜுனன் உன்னைத் தேர்வு செய்தது எவ்வளவு சரியான முடிவு?

युद्धादौ तीर्थगामी स खलु हलधरो नैमिशक्षेत्रमृच्छ-
न्नप्रत्युत्थायिसूतक्षयकृदथ सुतं तत्पदे कल्पयित्वा ।
यज्ञघ्नं वल्कलं पर्वणि परिदलयन् स्नाततीर्थो रणान्ते
सम्प्राप्तो भीमदुर्योधनरणमशमं वीक्ष्य यात: पुरीं ते ॥९॥

yuddhaadau tiirthagaamii sa khalu haladharO naimisha kshetramR^ichChan
apratyutthaayi suutakshaya kR^idatha sutaM tatpade kalpayitvaa |
yaj~naghnaM valkalaM parvaNi paridalayan snaatatiirthO raNaante
sampraaptO bhiimaduryOdhana raNamashamaM viikshya yaataH puriiM te || 9

யுத்³தா⁴தௌ³ தீர்த²கா³மீ ஸ க²லு ஹலத⁴ரோ நைமிஶக்ஷேத்ரம்ருச்ச²-
ந்னப்ரத்யுத்தா²யிஸூதக்ஷயக்ருத³த² ஸுதம் தத்பதே³ கல்பயித்வா |
யஜ்ஞக்⁴னம் ப³ல்வலம் பர்வணி பரித³லயன் ஸ்னாததீர்தோ² ரணாந்தே
ஸம்ப்ராப்தோ பீ⁴மது³ர்யோத⁴னரணமஶமம் வீக்ஷ்ய யாத꞉ புரீம் தே || 86-9 ||

போரில் பங்கேற்காமல் பலராமன் தீர்த்த யாத்திரை சென்றுவிட்டான். நைமிசாரண்யத்தில் சுதர் தக்க மரியாதையோடு வரவேற்காததால் அவரைக் கொன்றான். சுதருக்கு பதிலாக அவர் புத்ரன் பெள ராணிகராக மஹாபாரதம், பாகவதம் உபதேசிக்க வைத்தான். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் யாகங்களை தடை செய்த வல்கலன் என்பவனை வதம் செய்தான். பல க்ஷேத்திரங்கள் சென்றபின் மஹாபாரத போர் முடிந்ததும் குருக்ஷேத்ரம் திரும்பினான். அவனது சீடன் துரியோதனன் பீமனோடு புரிந்துகொண்டிருந்த மல்யுத்ததை தடுக்க இயலாது என்று அறிந்து துவாரகை திரும்பினான்.

संसुप्तद्रौपदेयक्षपणहतधियं द्रौणिमेत्य त्वदुक्त्या
तन्मुक्तं ब्राह्ममस्त्रं समहृत विजयो मौलिरत्नं च जह्रे ।
उच्छित्यै पाण्डवानां पुनरपि च विशत्युत्तरागर्भमस्त्रे
रक्षन्नङ्गुष्ठमात्र: किल जठरमगाश्चक्रपाणिर्विभो त्वम् ॥१०॥

samsupta draupadeya kshapaNa hata dhiyaM drauNimetya tvaduktyaa
tanmuktaM braahmamastraM samahR^ita vijayO mauliratnaM cha jahre |
uchChityai paaNDavaanaaM punarapi cha vishatyuttaraa garbhamastre
rakshannanguShThamaatraH kila jaThara magaashchakrapaaNirvibhO tvam || 10

ஸம்ஸுப்தத்³ரௌபதே³யக்ஷபணஹததி⁴யம் த்³ரௌணிமேத்ய த்வது³க்த்யா
தன்முக்தம் ப்³ராஹ்மமஸ்த்ரம் ஸமஹ்ருத விஜயோ மௌலிரத்னம் ச ஜஹ்ரே |
உச்சி²த்த்யை பாண்ட³வானாம் புனரபி ச விஶத்யுத்தராக³ர்ப⁴மஸ்த்ரே
ரக்ஷன்னங்கு³ஷ்ட²மாத்ர꞉ கில ஜட²ரமகா³ஶ்சக்ரபாணிர்விபோ⁴ த்வம் || 86-10 ||

அடேயப்பா, கிருஷ்ணா நீ என்னவெல்லாம் செய்திருக்கிறாய் உன் பக்தர்கள் தோழர்களுக்கு.
போரில் தோற்ற கௌரவர்கள் பாண்டவர்களுக்கு சேதம் விளைவிக்க கெடுமதியோடு ஈடுபட்டனர். அஸ்வத்தாமா இரவில் தூங்கும் பாண்டவ குமாரர்களை கொன்றான். அடுத்து அஸ்வத்தாமன் விடுத்த பிரம்மாஸ்திரத்தை நீ தக்க நேரத்தில் தடுத்து உத்தரை வயிற்றில் சிசுவாக வளரும் பரீக்ஷித்தை காப்பாற்றினாய். அர்ஜுனன் மூலம் அவனது சிரோமணியை பறித்து அவனை அவமானத்துக் குள்ளாக்கி தவம் செய்ய அனுப்பினாய்.

धर्मौघं धर्मसूनोरभिदधदखिलं छन्दमृत्युस्स भीष्म-
स्त्वां पश्यन् भक्तिभूम्नैव हि सपदि ययौ निष्कलब्रह्मभूयम् ।
संयाज्याथाश्वमेधैस्त्रिभिरतिमहितैर्धर्मजं पूर्णकामं
स्म्प्राप्तो द्वरकां त्वं पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥११॥

dharmaughaM dharmasuunOrabhidadha dakhilaM ChandamR^ityuH sa bhiiShmaH
tvaaM pashyan bhaktibhuumnaiva hi sapadi yayau niShkala brahmabhuuyam |
sanyaajyaathaashvamedhaisitrabhiratimahitair- dharmajaM puurNakaamaM
sampraaptO dvaarakaaM tvaM pavanapurapate paahi maaM sarva rOgaat ||11

த⁴ர்மௌக⁴ம் த⁴ர்மஸூனோரபி⁴த³த⁴த³கி²லம் ச²ந்த³ம்ருத்யுஸ்ஸ பீ⁴ஷ்ம-
ஸ்த்வாம் பஶ்யன்ப⁴க்திபூ⁴ம்னைவ ஹி ஸபதி³ யயௌ நிஷ்கலப்³ரஹ்மபூ⁴யம் |
ஸம்யாஜ்யாதா²ஶ்வமேதை⁴ஸ்த்ரிபி⁴ரதிமஹிதைர்த⁴ர்மஜம் பூர்ணகாமம்
ஸம்ப்ராப்தோ த்³வாரகாம் த்வம் பவனபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா³த் || 86-11 ||

பீஷ்மன் தனது மரணத்தைத் தானே தேவையான நேரத்தில் பெறும் சக்தி உடையவன் என்பதால் உத்தராயணத்துக்கு காத்திருந்தான். அந்த நேரத்தில் அவன் யுதிஷ்டிரனுக்கு சகல தர்மங்களையும் போதித்தான். உனது சிறந்த பக்தன் என்பதால் விஷ்ணுவின் ஆயிர நாமங்கள் அருமை பெருமை மகிமையையும் பீஷ்மன் யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்க வைத்தாய். பின்னர் யுதிஷ்டிரன் அஸ்வமேதயாகம் செயது சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ள வைத்தாய். உனது அவதார நோக்கம் பெரிதும் முடிந்து நீ துவாரகை திரும்பினாய். அங்கே சில வேலைகள் மட்டுமே பாக்கி இருத்தது. இவ்வளவு செய்த எண்டே குருவாயூரப்பா என் வாத நோய் தீர்த்து என்னையும் வாழவிடப்பா.