Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 90
90. மஹா விஷ்ணு மஹிமை.

वृकभृगुमुनिमोहिन्यम्बरीषादिवृत्ते-
ष्वयि तव हि महत्त्वं सर्वशर्वादिजैत्रम् ।
स्थितमिह परमात्मन् निष्कलार्वागभिन्नं
किमपि यदवभातं तद्धि रूपं तवैव ॥१॥

vR^ika bhR^igu muni mOhinyambariiShaadi vR^itteShu
ayi tava hi mahattvaM sarvasharvaadi jaitram |
sthitamiha paramaatman niShkalaarvaagabhinnaM
kimapi tadavabhaataM taddhi ruupaM tavaiva || 1

வ்ருகப்⁴ருகு³முனிமோஹின்யம்ப³ரீஷாதி³வ்ருத்தே-
ஷ்வயி தவ ஹி மஹத்த்வம் ஸர்வஶர்வாதி³ஜைத்ரம் |
ஸ்தி²தமிஹ பரமாத்மன் நிஷ்கலார்வாக³பி⁴ன்னம்
கிமபி தத³வபா⁴தம் தத்³தி⁴ ரூபம் தவைவ || 90-1 ||

பரமாத்மா, உன்னைப்பற்றி கூறும் ஸ்ரீமத் பாகவதத்தைப் புரட்டினால், அதில் வரும் வ்ருகாசுரன் , ப்ருகு முனிவர், அம்பரீஷன் சரித்திரங்கள் மற்ற தெய்வங்கள், தேவதைகள் சக்தியை விட உனது பராக்ரமம், அதி உன்னதமானது என்று அடித்து சொல்கிறதே.த்ரிமூர்த்திகளில் அயன் அரன் ஆகியோர் மஹத்வத்தை விட உன் மஹிமை உயர்ந்ததாக காண்கிறதே. நீயே மற்றவரை விட ஒளிவீசும் சக்தி ஸ்வரூபமாக காண்கிறாய். விவரித்துச் சொல்ல சக்தி இல்லை. பரமாத்மா பரப்பிரம்மம் என்று மட்டும் புரிகிறது.

मूर्तित्रयेश्वरसदाशिवपञ्चकं यत्
प्राहु: परात्मवपुरेव सदाशिवोऽस्मिन् ।
तत्रेश्वरस्तु स विकुण्ठपदस्त्वमेव
त्रित्वं पुनर्भजसि सत्यपदे त्रिभागे ॥२॥

muurtitrayeshvara sadaashiva pa~nchakaM yat
praahuH paraatmavapureva sadaashivO(a)smin |
tatreshvarastu sa vikuNThapadastvameva
tritvaM punarbhajasi satyapade tribhaage || 2

மூர்தித்ரயேஶ்வரஸதா³ஶிவபஞ்சகம் யத்
ப்ராஹு꞉ பராத்மவபுரேவ ஸதா³ஶிவோ(அ)ஸ்மின் |
தத்ரேஶ்வரஸ்து ஸ விகுண்ட²பத³ஸ்த்வமேவ
த்ரித்வம் புனர்ப⁴ஜஸி ஸத்யபதே³ த்ரிபா⁴கே³ || 90-2 ||

ஐந்து வித பரம சக்திகளில், அதாவது, ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன், ஈஸ்வரன், சதாசிவன் என்ற பஞ்சக தத்துவத்தில் நாராயணா, நீ தான் ஐந்தாவது சக்தி, சதாசிவனோ? திவ்ய தெய்வீக ஆத்ம ஸ்வரூபனோ? ஈஸ்வரன் என்பதும் உன்னைத்தானோ? வைகுண்டவாசியோ? சத்யலோகத்தில் த்ரிமூர்த்தியாக காண்பதும் உன்னைத்தானோ?

तत्रापि सात्त्विकतनुं तव विष्णुमाहु-
र्धाता तु सत्त्वविरलो रजसैव पूर्ण: ।
सत्त्वोत्कटत्वमपि चास्ति तमोविकार-
चेष्टादिकञ्च तव शङ्करनाम्नि मूर्तौ ॥३॥

tatraapi saattvikatanuM tava viShNumaahuH
dhaataa tu sattva viralO rajasaiva puurNaH |
sattvOtkaTatvamapi chaasti tamO vikaara
cheShTaadikaMcha thava sankara naamni moorthaa

தத்ராபி ஸாத்த்விகதனும் தவ விஷ்ணுமாஹு-
ர்தா⁴தா து ஸத்த்வவிரலோ ரஜஸைவ பூர்ண꞉ |
ஸத்வோத்கடத்வமபி சாஸ்தி தமோவிகார-
சேஷ்டாதி³கம் ச தவ ஶங்கரனாம்னி மூர்தௌ || 90-3 ||

குருவாயூரப்பா, மும்மூர்த்திகளில் ஒருவனாக காணும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய நீ தான் சாத்விக ஸ்வரூபனோ ? நாம் அறிவதில் பிரம்மாவிடம் சாத்வீக குணம் கொஞ்சம் குறைவாகவும் ரஜோகுணம் சற்று தூக்கலாகவும் உள்ளதே. பரமேஸ்வரனாக நீ காணும்போது, உருவில் சத்வகுணம் நிறைந்திருந்தாலும் செயலில் நிறைய தமோகுணம் தென்படுகிறதே .

तं च त्रिमूर्त्यतिगतं परपूरुषं त्वां
शर्वात्मनापि खलु सर्वमयत्वहेतो: ।
शंसन्त्युपासनविधौ तदपि स्वतस्तु
त्वद्रूपमित्यतिदृढं बहु न: प्रमाणम् ॥४॥

taM cha trimuurtyatigataM parapuuruShaM tvaaM
sharvaatmanaa(a)pi khalu sarva mayatva hetOH |
shamsantyupaasana vidhau tadapi svatastu
tvadruupamityati dR^iDhaM bahu naH pramaaNam ||4

தம் ச த்ரிமூர்த்யதிக³தம் புரபூருஷம் த்வாம்
ஶர்வாத்மனாபி க²லு ஸர்வமயத்வஹேதோ꞉ |
ஶம்ஸந்த்யுபாஸனவிதௌ⁴ தத³பி ஸ்வதஸ்து
த்வத்³ரூபமித்யதித்³ருட⁴ம் ப³ஹு ந꞉ ப்ரமாணம் || 90-4 ||

பரிசுத்தமான தூய இறையுணர்வு தான் ஈஸ்வரன். மும்மூர்த்திகளுக்கும் மேலான ஒரு நிலையில் உள்ளவர். சர்வ காரணனானவர். ஸ்ரீமந் நாராயணா, அது நீயே. அரியும் அரனும் ஒன்றே என்று அறிவோர் யாவரும். சிவனாக தேடுவோருக்கு நீ சிவன். ஹரியாக உன்னை நாடுவோர்க்கு நீ கிருஷ்ணன். ஒரே இனிப்புக்கு இரு உருவங்கள், இரு பெயர்கள்.

श्रीशङ्करोऽपि भगवान् सकलेषु ताव-
त्त्वामेव मानयति यो न हि पक्षपाती ।
त्वन्निष्ठमेव स हि नामसहस्रकादि
व्याख्यात् भवत्स्तुतिपरश्च गतिं गतोऽन्ते ॥५॥

shriishankarO(a)pi bhagavaan sakaleShu taavat
tvaameva maanayati yO na hi pakshapaatii |
tvanniShThameva sa hi naamasahasrakaadi
vyaakhyadbhavatstuti parashcha gatiM gatOnte || 5

ஶ்ரீஶங்கரோ(அ)பி ப⁴க³வான்ஸகலேஷு தாவ-
த்த்வாமேவ மானயதி யோ ந ஹி பக்ஷபாதீ |
த்வன்னிஷ்ட²மேவ ஸ ஹி நாமஸஹஸ்ரகாதி³
வ்யாக்²யத்³ப⁴வத்ஸ்துதிபரஶ்ச க³திம் க³தோ(அ)ந்தே || 90-5 ||

கிருஷ்ணா, காலடியில் உதித்த சங்கரரின் குடும்ப தெய்வம் கிருஷ்ணா நீ. பரமேஸ்வரனான அவர் பரமாத்மாவான உன்னை போற்றி பாடியது தானே கோவிந்தா, பஜகோவிந்தம். கோவிந்தனை பஜிப்போம் வாருங்கள் என்ற அற்புத காவியம். விஷ்ணுவே, உன் ஆயிர நாமங்களுக்கு வியாக்கியானம் எழுதியவர் சங்கரர் தானே.

मूर्तित्रयातिगमुवाच च मन्त्रशास्त्र-
स्यादौ कलायसुषमं सकलेश्वरं त्वाम् ।
ध्यानं च निष्कलमसौ प्रणवे खलूक्त्वा
त्वामेव तत्र सकलं निजगाद नान्यम् ॥६॥

muurti trayaatigamuvaacha cha mantrashaastrasyaadau
kalaayasuShumaM sakaleshvarantvaam |
dhyaanaM cha niShkalamasau praNave khaluuktvaa
tvaameva tatra sakalaM nijagaada naanyam || 6

மூர்தித்ரயாதிக³முவாச ச மந்த்ரஶாஸ்த்ர-
ஸ்யாதௌ³ கலாயஸுஷமம் ஸகலேஶ்வரம் த்வாம் |
த்⁴யானம் ச நிஷ்கலமஸௌ ப்ரணவே க²லூக்த்வா
த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகா³த³ நான்யம் || 90-6 ||

அத்வைத சாஸ்த்ர ப்ரம்ம ஞானி ஆதி சங்கரர், நீலத்தாமரை போன்று காட்சியளிக்கும் கிருஷ்ணா, மும்மூர்த்திகளுக்கும் மேலாக உன்னை புகழ்ந்து போற்றியுள்ளார். பிரணவ மந்த்ர ஸ்வரூபம் நீ. உன்னைவிட வழிபாட்டுக்குரியவர் யாவர் உளர்? அவரவர் விருப்பத்திற்கேற்ப அந்தந்த உருவில் தோன்றுபவனும் நீ தானே.

समस्तसारे च पुराणसङ्ग्रहे
विसंशयं त्वन्महिमैव वर्ण्यते ।
त्रिमूर्तियुक्सत्यपदत्रिभागत:
परं पदं ते कथितं न शूलिन: ॥७॥

samastasaare cha puraaNasangrahe
visamshayaM tvanmahimaiva varNyate |
trimuurtiyuk satyapadatribhaagataH
paraM padaM te kathitaM na shuulinaH || 7

ஸமஸ்தஸாரே ச புராணஸங்க்³ரஹே
விஸம்ஶயம் த்வன்மஹிமைவ வர்ண்யதே |
த்ரிமூர்தியுக்ஸத்யபத³த்ரிபா⁴க³த꞉
பரம் பத³ம் தே கதி²தம் ந ஶூலின꞉ || 90-7 ||

புராண சங்கிரஹம் என்பது சகல புராணங்களின் சாரம். அது உன்னை மட்டுமே உயர்த்தி பாடுகிறது. உனது வைகுந்தம் ஒன்றே எல்லோருடைய லக்ஷ்யம் என காட்டுகிறது..

Dasakam: 090 -- Slokam: 08
यत् ब्राह्मकल्प इह भागवतद्वितीय-
स्कन्धोदितं वपुरनावृतमीश धात्रे ।
तस्यैव नाम हरिशर्वमुखं जगाद
श्रीमाधव: शिवपरोऽपि पुराणसारे ॥८॥

yad braahmakalpa iha bhaagavata dvitiiya
skandhOditaM vapuranaavR^itamiisha dhaatre |
tasyaiva naama harisharva mukhaM jagaada
shriimaadhavaH shivaparO(a)pi puraaNasaare || 8

யத்³ப்³ராஹ்மகல்பமிஹ பா⁴க³வதத்³விதீய-
ஸ்கந்தோ⁴தி³தம் வபுரனாவ்ருதமீஶ தா⁴த்ரே |
தஸ்யைவ நாம ஹரிஶர்வமுக²ம் ஜகா³த³
ஶ்ரீமாத⁴வ꞉ ஶிவபரோ(அ)பி புராணஸாரே || 90-8 ||

கிருஷ்ணா, ஸ்ரீமத் பாகவதத்தில் ரெண்டாம் ஸ்காந்தத்த்தில் என்ன சொல்லப்படுகிறது.? ப்ரம்ம கல்பத்தில் பிரம்மாவிற்கு முன் தோன்றிய ஹரி ஹர ஸ்வரூபத்தை பற்றி பின்னர் புராண ஸாரம் எனும் நூலில் அதை இயற்றிய சிவ பக்தர் ஸ்ரீ வித்யாரண்யர் குறிப்பிடுகிறார்.

ये स्वप्रकृत्यनुगुणा गिरिशं भजन्ते
तेषां फलं हि दृढयैव तदीयभक्त्या।
व्यासो हि तेन कृतवानधिकारिहेतो:
स्कन्दादिकेषु तव हानिवचोऽर्थवादै: ॥९॥

ye svaprakR^ityanuguNaa girishaM bhajante
teShaaM phalaM hi dR^iDhayaiva tadiiya bhaktyaa |
vyaasO hi tena kR^itavaanadhikaarihetOH
skaandaadikeShu tava haanivachO(a)rthavaadaiH || 9

யே ஸ்வப்ரக்ருத்யனுகு³ணா கி³ரிஶம் ப⁴ஜந்தே
தேஷாம் ப²லம் ஹி த்³ருட⁴யைவ ததீ³யப⁴க்த்யா |
வ்யாஸோ ஹி தேன க்ருதவானதி⁴காரிஹேதோ꞉
ஸ்காந்தா³தி³கேஷு தவ ஹானிவசோ(அ)ர்த²வாதை³꞉ || 90-9 ||

சிவனின் பக்தர்கள் ஈஸ்வரன் மேல் உண்டான அபரிமித பக்தியால் அவனை வழிபட்டு அதன் ருசியைத் துய்க்கிறார்கள். ஒரு தெய்வத்தை உயர்த்தி மற்றதை தாழ்த்தி சொல்லும் உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். வேத வியாசரும் அவ்வாறே ஸ்காந்தம் போன்ற புராணங்களில் சில இடங்களில் பரமேஸ்வரனை உயர்ச்சியாக சொல்லும்போது பரமாத்மா உன்னைப்பற்றி அவ்வாறு சொல்லவில்லையோ என்று தான் எனக்கு தோன்றுகிறது, என்கிறார் மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி.

भूतार्थकीर्तिरनुवादविरुद्धवादौ
त्रेधार्थवादगतय: खलु रोचनार्था: ।
स्कान्दादिकेषु बहवोऽत्र विरुद्धवादा-
स्त्वत्तामसत्वपरिभूत्युपशिक्षणाद्या: ॥१०॥

bhuutaartha kiirti ranuvaada viruddha vaadau
tredhaa(a)rthavaada gatayaH khalu rOchanaarthaaH |
skaandaadikeShu bahavO(a)tra viruddhavaadaaH
tvattaamasatva paribhuutyupashikshaNaadyaaH || 10

பூ⁴தார்த²கீர்திரனுவாத³விருத்³த⁴வாதௌ³
த்ரேதா⁴ர்த²வாத³க³தய꞉ க²லு ரோசனார்தா²꞉ |
ஸ்காந்தா³தி³கேஷு ப³ஹவோ(அ)த்ர விருத்³த⁴வாதா³-
ஸ்த்வத்தாமஸத்வபரிபூ⁴த்யுபஶிக்ஷணாத்³யா꞉ || 90-10 ||

நாம் அதிகபக்ஷமாக வேதாந்தத்தை அறிந்தவர்கள் இல்லாவிட்டாலும் ஒரு சிறிது கேள்விப் பட்டிருக்கிறோம். அர்த்தவாதம் என்பது மூவகைப்படும். இருக்கும் உண்மையை பெருமையாக புகழ்வது. எது இல்லை என்று தோன்றுகிறதோ அது உண்மையில் இருக்கிறது என உணர்வது, எது இருப்பது போல் காட்சி அளித்து நம்மை ஏமாற்றுகிறதோ, அது உண்மையில் இல்லாதது.

ஒருவர் எதையாவது வர்ணித்து கூறும்போது அதன் மேல் விருப்பம் மேலிடுகிறது. அப்படித்தான் ஸ்காந்தத்திலும் மற்ற புராணங்களிலும் கிருஷ்ணா, மஹா விஷ்ணுவாகிய உனக்கு தமோ குணம் அதிகம் என்பதால் நீ தோல்வியடைவதாக சில சந்தர்ப்பங்களை சொல்கிறது இது அர்த்தவாதிகளின் எண்ண பிரதிபலிப்பு. உன்னை தாழ்த்தி சொல்வதன் மூலம், மற்ற தெய்வங்களை மிகைப்படுத்திக் காட்டிட முயற்சியே தவிர உன்னைக் குறை கூறுவதாகாது.

यत् किञ्चिदप्यविदुषाऽपि विभो मयोक्तं
तन्मन्त्रशास्त्रवचनाद्यभिदृष्टमेव ।
व्यासोक्तिसारमयभागवतोपगीत
क्लेशान् विधूय कुरु भक्तिभरं परात्मन् ॥११॥

yatki~nchidapyaviduShaa(a)pi vibhO mayOktaM
tanmantra shaastra vachanaadyabhidR^iShTameva |
vyaasOktisaaramaya bhaagavatOpagiita
kleshaan vidhuuya kuru bhaktibharaM paraatman ||11

யத்கிஞ்சித³ப்யவிது³ஷாபி விபோ⁴ மயோக்தம்
தன்மந்த்ரஶாஸ்த்ரவசனாத்³யபி⁴த்³ருஷ்டமேவ |
வ்யாஸோக்திஸாரமயபா⁴க³வதோபகீ³த
க்லேஶான்விதூ⁴ய குரு ப⁴க்திப⁴ரம் பராத்மன் || 90-11 ||

கிருஷ்ணா, உனக்கு தான் நன்றாக தெரியுமே, நான் ஒரு அஞ்ஞானி. ஏதோ எனக்கு தோன்றிய சில விஷயங்களை மந்த்ர சாஸ்திரங்களில் அறிந்ததை, கண்டதை சொல்கிறேன். எண்டே குருவாயூரப்பா, ஸ்ரீமத் பாகவதம் உன் பெருமையை, மஹிமையை, பூர்ணமாக விவரிக்கிறது. படிக்க படிக்க ஆனந்தம் ஊற்றாக பெருகுகிறது. அது ஸ்ரீ வேதவியாசர் வடித்த திவ்ய வேத ஸாரம் அல்லவா? என் வேதனையையும் போக்கி என் பக்தியை பெருக்கி எனக்கருள்வாய் அப்பனே.