Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 92
92. கலியுகத்தில் கை மேல் பலன்.

மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி குருவாயூரப்பன் எதிரில் அமர்ந்து இந்த 100 தசகங்களை, ஆயிரத்துக்கு மேல் ஸ்லோகங்களைப் பாடியவர். இந்த தசகம் பக்தி, சடங்குகள் இரண்டிற்கும் ள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு பக்தி ஒன்றே இந்த கலியுகத்தில் இறைவனை துதிக்க சிறந்த வழி என்கிறது..

वेदैस्सर्वाणि कर्माण्यफलपरतया वर्णितानीति बुध्वा
तानि त्वय्यर्पितान्येव हि समनुचरन् यानि नैष्कर्म्यमीश ।
मा भूद्वेदैर्निषिद्धे कुहचिदपि मन:कर्मवाचां प्रवृत्ति-
र्दुर्वर्जं चेदवाप्तं तदपि खलु भवत्यर्पये चित्प्रकाशे ॥१॥

vedaiH sarvaaNi karmaaNyaphala para tayaa varNitaaniiti buddhvaa
taani tvayyarpitaanyeva hi samanucharanyaani naiShkarmyamiisha |
maa bhuudvedairniShiddhe kuhachidapi manaHkarmavaachaaM pravR^ittiH
durvarjaM chedavaaptaM tadapi khalu bhavatyarpaye chitprakaashe || 1

வேதை³ஸ்ஸர்வாணி கர்மாண்யப²லபரதயா வர்ணிதானீதி பு³த்³த்⁴வா
தானி த்வய்யர்பிதான்யேவ ஹி ஸமனுசரன் யானி நைஷ்கர்ம்யமீஶ |
மா பூ⁴த்³வேதை³ர்னிஷித்³தே⁴ குஹசித³பி மன꞉கர்மவாசாம் ப்ரவ்ருத்தி-
ர்து³ர்வர்ஜம் சேத³வாப்தம் தத³பி க²லு ப⁴வத்யர்பயே சித்ப்ரகாஶே || 92-1 ||

கிருஷ்ணா, நீ உபதேசித்த கீதை, மற்றும் வேத சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது? எந்த காரியம் செய்தாலும் அதில் பலனை எதிர்பாராமல் செய். அது தான் கர்மம் என்கிறது. என் காரியங்கள் அனைத்தையும், உனக்கு அர்ப்பணித்துவிட்டேன் அப்பா. அவற்றிற்கும் எனக்கும் எந்த சம்பந்த முமில்லை என்று விலகிக் கொண்டேன். வேதங்கள் சொல்வதைத் தப்பாமல், பிறழாமல், அது செய்யாதே என்று அறிவுறுத்திய எதையும் செய்யாமல் ஜாக்கிரதையாக என் கர்மாவை செய்து கொண்டு வருகிறேன். வேதங்கள் சொல்வதற்கு மாறாக ஏதேனும் நான் காரியம் செய்ய நேர்ந்தாலும் அதையும் உனக்கு அர்ப்பணித்துவிட்டேன். நீ எல்லாம் அறிந்த கெட்டிக்காரன் . எதை எப்படி செய்யவேண்டுமோ அப்படி செய்ய எனக்கு வழிகாட்டு.

यस्त्वन्य: कर्मयोगस्तव भजनमयस्तत्र चाभीष्टमूर्तिं
हृद्यां सत्त्वैकरूपां दृषदि हृदि मृदि क्वापि वा भावयित्वा ।
पुष्पैर्गन्धैर्निवेद्यैरपि च विरचितै: शक्तितो भक्तिपूतै-
र्नित्यं वर्यां सपर्यां विदधदयि विभो त्वत्प्रसादं भजेयम् ॥२॥

yastvanyaH karmayOgastava bhajanamayastatra chaabhiiShTamuurtim
hR^idyaaM satvaikaruupaaM dR^iShadi hR^idi mR^idi kvaapi vaa bhaavayitvaa |
puShpairgandhairnivedyairapi cha virachitaiH shaktitO bhaktipuutaiH
nityam varyaam saparyaam vidadhadayi vibhO tvatprasaadam bhajeyam || 2

யஸ்த்வன்ய꞉ கர்மயோக³ஸ்தவ ப⁴ஜனமயஸ்தத்ர சாபீ⁴ஷ்டமூர்திம்
ஹ்ருத்³யாம் ஸத்த்வைகரூபாம் த்³ருஷதி³ ஹ்ருதி³ ம்ருதி³ க்வாபி வா பா⁴வயித்வா |
புஷ்பைர்க³ந்தை⁴ர்னிவேத்³யைரபி ச விரசிதை꞉ ஶக்திதோ ப⁴க்திபூதை-
ர்னித்யம் வர்யாம் ஸபர்யாம் வித³த⁴த³யி விபோ⁴ த்வத்ப்ரஸாத³ம் ப⁴ஜேயம் || 92-2 ||

குருவாயூரப்பா, வேதங்கள் சொல்வதிலிருந்து உன்னை வழிபடும் முறைகள் வேறுபடுவதை நான் அறிவேன். சத்வ குணம் நிறைந்த பரிசுத்த சாத்வீகனான உன்னை என் மனத்தில் உதித்த முறையில் கல்லாலோ, களிமண்ணாலோ ஆன உருவமாக உருவகப்படுத்தி, என் சிற்றறிவுக்கு எட்டிய பக்தியோடு உன்னை பூஜிப்பேன். சுத்தமான மலர்களை, துளசி தளங்களை பறித்துக் கொண்டு வந்து அர்ச்சிப்பேன் . வாசனாதி த்ரவியங்களை, சந்தனம் போன்றவைகளை உனக் களிப்பேன், மஹா நைவேத்தியம் விடாமல் நாள் தோறும் உனக்கு அர்ப்பணிப்பேன். மனதில் உன்னை நிறுத்தி பூஜித்து வணங்குவேன். உன் அருளை வேண்டுவேன்.

स्त्रीशूद्रास्त्वत्कथादिश्रवणविरहिता आसतां ते दयार्हा-
स्त्वत्पादासन्नयातान् द्विजकुलजनुषो हन्त शोचाम्यशान्तान् ।
वृत्त्यर्थं ते यजन्तो बहुकथितमपि त्वामनाकर्णयन्तो
दृप्ता विद्याभिजात्यै: किमु न विदधते तादृशं मा कृथा माम् ॥३॥

striishuudraastvatkathaadi shravaNavirahitaa aasataaM te dayaarhaaH
tvatpaadaasannayaataan dvijakulajanuShOhanta shOchaamyashaantaan |
vR^ittyartham te yajantO bahukathitamapi tvaamanaakarNayantO
dR^iptaa vidyaabhijaatyaiH kimu na vidadhate taadR^isham maa kR^ithaamaam || 3

ஸ்த்ரீஶூத்³ராஸ்த்வத்கதா²தி³ஶ்ரவணவிரஹிதா ஆஸதாம் தே த³யார்ஹா-
ஸ்த்வத்பாதா³ஸன்னயாதாந்த்³விஜகுலஜனுஷோ ஹந்த ஶோசாம்யஶாந்தான் |
வ்ருத்த்யர்த²ம் தே யஜந்தோ ப³ஹுகதி²தமபி த்வாமனாகர்ணயந்தோ
த்³ருப்தா வித்³யாபி⁴ஜாத்யை꞉ கிமு ந வித³த⁴தே தாத்³ருஶம் மா க்ருதா² மாம் || 92-3 ||

கிருஷ்ணா, என் மனதில் உறுத்தும் ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். பாவம், எத்தனையோ பேர் பிறப்பினால் தாழ்த்தப்பட்டு உன்னை அணுகி, உன்னைப் பாடி, உன் பெருமைகளை காதார கேட்க வழி இல்லாமல், சந்தர்ப்பத்துக்கு ஏங்குகிறார்கள். அப்படி இருந்தும் பிறப்பால் உயர்ந்தவன் என்று மார் தட்டிக்கொண்டு சுற்றும் சிலர், இல்லை,பலர், உன் திருவடிகளை தரிசிக்க நெருங்க முடிந்தும் கூட, புத்தியை மனத்தை உலக இன்பங்களில் செலுத்துகிறார்களே, எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள்?, கோட்டை விடுகிறார்களே ? மனம் வருந்துகிறது அவர்களை எண்ணி.
''வேண்டாமடா இது, அநித்தியம், மாயை இந்த உலக வாழ்க்கை, இதை சுகம் என்று எண்ணி மயங்காதே'' என்று நீ திருப்பி திருப்பி கீதையில் சொல்வதை கேட்டும், அலக்ஷியம் செய்கி றார்களே, உன்னை நினைக்காத, அவர்களது எட்டுச் சுரைக்காய் படிப்பு, அறிவு, உயர் வகுப்பு பிறவி என்பதால் எல்லாம், என்ன பயன்?, என்ன அனுபவம் கிட்டும் அவர்களுக்கு? என்று ஆச்சர்யப் படுகிறேன். ஐயோ, அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிவிடாதே கிருஷ்ணா.

पापोऽयं कृष्णरामेत्यभिलपति निजं गूहितुं दुश्चरित्रं
निर्लज्जस्यास्य वाचा बहुतरकथनीयानि मे विघ्नितानि ।
भ्राता मे वन्ध्यशीलो भजति किल सदा विष्णुमित्थं बुधांस्ते
निन्दन्त्युच्चैर्हसन्ति त्वयि निहितमतींस्तादृशं मा कृथा माम् ॥४॥

paapO(a)yaM kR^iShNa raametyabhilapati nijaM guuhituM dushcharitraM
nirlajjasyaasya vaachaa bahutara kathaniiyaani me vighnitaani |
bhraataa me vandhyashiilO bhajati kila sadaa viShNumitthaM budhaamste
nindantyuchchairhasanti tvayinihitamatiimstaadR^ishaM maakR^ithaa maam || 4

பாபோ(அ)யம் க்ருஷ்ணராமேத்யபி⁴லபதி நிஜம் கூ³ஹிதும் து³ஶ்சாரித்ரம்
நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப³ஹுதரகத²னீயானி மே விக்⁴னிதானி |
ப்⁴ராதா மே வந்த்⁴யஶீலோ ப⁴ஜதி கில ஸதா³ விஷ்ணுமித்த²ம் பு³தா⁴ம்ஸ்தே
நிந்த³ந்த்யுச்சைர்ஹஸந்தி த்வயி நிஹிதமதீம்ஸ்தாத்³ருஶம் மா க்ருதா² மாம் || 92-4 ||

வாதபுரீசா, உனக்கு என்னைப் பற்றி தெரியும். உண்மையான பக்தர்களை பார்த்து சில பக்தியற்ற மூடர்கள், கேலி செய்கிறார்கள், ஏசுகிறார்கள். ' 'இதைப்பார், இவர்கள் எப்படி நடிக்கிறார்கள், செய்த தவறுகள், தீய எண்ணங்கள், செயல்களை மறைத்து வெறுமே மேலுக்கு வாய் மட்டும் ''ராமா, கிருஷ்ணா'' என்று உரத்தக்குரலில், எங்கும் எதிரொலிக்க வெட்கமில்லாமல் கத்துபவர்கள் '' என்கிறார்களே. என்னால் சொல்ல விரும்புவதை சொல்ல முடியவில்லையே கிருஷ்ணா.என்ன செய்வது, ஹும், என் சகோதரன் ஒரு பச்சோந்தி, ஒளிவு மறைவு உள்ளவன், ''எப்போதும் நான் விஷ்ணுவை நினைப்பவன் வழிபடுவன்'' என்று உண்மைக்கு மாறாக சொல்பவன்.
கிருஷ்ணா, என்னை அம்மாதிரி மனிதனாக ஆக்கிவிடாதே.''

श्वेतच्छायं कृते त्वां मुनिवरवपुषं प्रीणयन्ते तपोभि-
स्त्रेतायां स्रुक्स्रुवाद्यङ्कितमरुणतनुं यज्ञरूपं यजन्ते ।
सेवन्ते तन्त्रमार्गैर्विलसदरिगदं द्वापरे श्यामलाङ्गं
नीलं सङ्कीर्तनाद्यैरिह कलिसमये मानुषास्त्वां भजन्ते ॥५॥

shvetachChaayaM kR^ite tvaaM munivaravapuShaM priiNayante tapObhiH
tretaayaaM sruksruvaadyankita maruNatanuM yaj~naruupaM yajante |
sevante tantramaargairvilasadarigadaM dvaapare shyaamalaangam
niilaM sankiirtanaadyairiha kalisamaye maanuShaastvaam bhajante || 5

ஶ்வேதச்சா²யம் க்ருதே த்வாம் முனிவரவபுஷம் ப்ரீணயந்தே தபோபி⁴-
ஸ்த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்³யங்கிதமருணதனும் யஜ்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ரமார்கை³ர்விலஸத³ரிக³த³ம் த்³வாபரே ஶ்யாமலாங்க³ம்
நீலம் ஸங்கீர்தனாத்³யைரிஹ கலிஸமயே மானுஷாஸ்த்வாம் ப⁴ஜந்தே || 92-5 ||

க்ரித யுகத்தில், உன்னை பரிசுத்த வெண்மையான ஒளியாக உருவகித்து எண்ணற்ற ரிஷிகள் வழிபட்டார்கள். த்ரேதா யுகத்தில் யாக யஞங்கள் மூலம் ஸ்ருகா, ஸ்ருவா போன்ற உபகரணங்களோடு சிவந்த அக்னி ஸ்வரூபமாக வழிபட்டு உன்னை த்ருப்திப் படுத்த முயன்றார்கள். துவாபர யுகத்தில், தாந்த்ரீக, மாந்த்ரீக, சடங்குகள் மூலம் உன்னை கருநீல சியாமள வர்ண மேனியனாக சங்கு சக்ர கதா பாணியாக வழிபட்டார்கள்.

கிருஷ்ணா, இந்த கலியுகத்தில் உன்னை நீலவண்ணனாக, உன் நாமங்களை சொல்லி உச்சரித்து பாடி, உன் மகிமைகளை எல்லாம் நிறைய பேசி வழிபடுகிறோம்.

सोऽयं कालेयकालो जयति मुररिपो यत्र सङ्कीर्तनाद्यै-
र्निर्यत्नैरेव मार्गैरखिलद न चिरात्त्वत्प्रसादं भजन्ते ।
जातास्त्रेताकृतादावपि हि किल कलौ सम्भवं कामयन्ते
वात्तत्रैव जातान् विषयविषरसैर्मा विभो वञ्चयास्मान् ॥६॥

sO(a)yaM kaaleya kaalO jayati muraripO yatra sankiirtanaadyaiH
niryatnaireva maargairakhilada na chiraat tvatprasaadaM bhajante |
jaataastretaa kR^itaadau api hi kila kalau sambhavaM kaamayante
daivaattatraiva jaataan viShaya viSharasairmaa vibhO va~nchayaasmaan || 6

ஸோ(அ)யம் காலேயகாலோ ஜயதி முரரிபோ யத்ர ஸங்கீர்தனாத்³யை-
ர்னிர்யத்னைரேவ மார்கை³ரகி²லத³ நசிராத்த்வத்ப்ரஸாத³ம் ப⁴ஜந்தே |
ஜாதாஸ்த்ரேதாக்ருதாதா³வபி ஹி கில கலௌ ஸம்ப⁴வம் காமயந்தே
தை³வாத்தத்ரைவ ஜாதான்விஷயவிஷரஸைர்மா விபோ⁴ வஞ்சயாஸ்மான் || 92-6 ||

கிருஷ்ணா, முரனை வதம் செய்த முராரி, என்னே உன் கருணை. உன்னை நினைத்துப் பாடி, பேசி உன் நாமங்களை உச்சரித்தாலே நீ அருள் புரிகிறாயே. இந்த வித வழிபாட்டில் எந்த ஒரு சிரமமும் ஆயாசமும் கஷ்டமும் செலவும் இல்லையே. விருப்பங்களை நிறைவேற்றுபவனே, வேதஸ்வரூபா, இப்படி அற்புதமான ஒரு வழிபாட்டுமுறை இருப்பதாலேயே, க்ரித , த்ரேதாயுக, துவாபர யுகத்தில் வாழ்ந்தவர்கள் உன்னை வழிபட்டவர்கள், மீண்டும் கலியுகத்திலும் பிறக்க வேண்டுகிறார்களோ? .
கிருஷ்ணா, ஏதோ பாக்யம் செய்து இந்த கலியுகத்தில் பிறந்தும் உலக வாதனைகளில் சிக்கி, கொடிய விஷம் போன்ற உலக இன்பங்களை துய்ப்பதில் ஈடுபடும் என் போன்றோருக்கு உன் அருள் கிட்டாமல் போய்விடுமோ? அதிலிருந்து மீட்டு உன்மேல் எண்ணம், செயல், வாக்கு அனைத் தும் ஈடுபட அருள் புரிவாய்.

भक्तास्तावत्कलौ स्युर्द्रमिलभुवि ततो भूरिशस्तत्र चोच्चै:
कावेरीं ताम्रपर्णीमनु किल कृतमालां च पुण्यां प्रतीचीम् ।
हा मामप्येतदन्तर्भवमपि च विभो किञ्चिदञ्चद्रसं त्व-
य्याशापाशैर्निबध्य भ्रमय न भगवन् पूरय त्वन्निषेवाम् ॥७॥

bhaktaastaavatkalau syurdramila bhuvi tatO bhuurishastatrachOchchaiH
kaaveriim taamraparNiimanu kila kR^itamaalaaM cha puNyaam pratiichiim |
haa maamapyetadantarbhavamapi cha vibhO ki~nchida~nchadrasaM tvayi
aashaapaashairnibadhya bhramaya na bhagavan puuraya tvanniShevaam || 7

ப⁴க்தாஸ்தாவத்கலௌ ஸ்யுர்த்³ரமிலபு⁴வி ததோ பூ⁴ரிஶஸ்தத்ர சோச்சை꞉
காவேரீம் தாம்ரபர்ணீமனு கில க்ருதமாலாஞ்ச புண்யாம் ப்ரதீசீம் |
ஹா மாமப்யேதத³ந்தர்ப⁴வமபி ச விபோ⁴ கிஞ்சித³ஞ்சத்³ரஸம் த்வ-
ய்யாஶாபாஶைர்னிப³த்⁴ய ப்⁴ரமய ந ப⁴க³வன் பூரய த்வன்னிஷேவாம் || 92-7 ||

மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி சொல்வது ரொம்ப சரி..
குருவாயூரா , இந்த கலியுகத்தில், திராவிட தேசத்தில், அதாவது தென்னிந்தியாவில் , காவேரி, தாமிரபரணி, மேற்கே, க்ருத மாலா, நீல நதி (பாரத புழா) கரைகளில் வாழும் எண்ணற்றோர் பக்தியில் சிறந்து விளங்குகிறார்கள் . நானும் இப்படி கேரளத்தில் பிறந்தவன் தான். உன் மீது அளவற்ற பக்தி கொண்டவன். என்னை பந்தம், பாசம், உறவு, ஈர்ப்பு என்று உலகியல் பற்றுகள். ஆசைகள், என்ற கயிறுகள் பிணைத்து துன்புறாமல், நான் உன்மேல் மட்டுமே பற்றுக்கொண்டு பக்தியோடு இருக்க அருள்புரி வாய்.

दृष्ट्वा धर्मद्रुहं तं कलिमपकरुणं प्राङ्महीक्षित् परीक्षित्
हन्तुं व्याकृष्टखड्गोऽपि न विनिहतवान् सारवेदी गुणांशात् ।
त्वत्सेवाद्याशु सिद्ध्येदसदिह न तथा त्वत्परे चैष भीरु-
र्यत्तु प्रागेव रोगादिभिरपहरते तत्र हा शिक्षयैनम् ॥८॥

dR^iShTvaa dharmadruhaM taM kalimapakaruNaM praa~Nmahiikshit pariikshit
hantuM vyaakR^iShTa khaDgO(a)pi na vinihatavaan saaravedii guNaamshaat |
tvatsevaadyaashu siddhyedasadiha na tathaa tvatpare chaiSha bhiiruH
yattupraageva rOgaadibhirapaharate tatra haa shikshayainam ||8

த்³ருஷ்ட்வா த⁴ர்மத்³ருஹம் தம் கலிமபகருணம் ப்ராங்மஹீக்ஷித் பரீக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருஷ்டக²ட்³கோ³(அ)பி ந வினிஹிதவான் ஸாரவேதீ³ கு³ணாம்ஶாத் |
த்வத்ஸேவாத்³யாஶு ஸித்³த்⁴யேத³ஸதி³ஹ ந ததா² த்வத்பரே சைஷ பீ⁴ரு-
ர்யத்து ப்ராகே³வ ரோகா³தி³பி⁴ரபஹரதே தத்ர ஹா ஶிக்ஷயைனம் || 92-8 ||

கிருஷ்ணா, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு தடவை இந்த பரீக்ஷித் ராஜா உடைவாளை உருவிக்கொண்டு ஓடி, தர்மத்தின் எதிரியாக தோன்றிய கலி புருஷனைக் கொல்ல கிளம்பினவனுக்கு நல்லவேளை புத்தி மாறிவிட்டது.
''அடடே, இந்த கலியிடம் சில நல்ல விஷயங்களும் இருக்கிறதே. ஸத்யம் அறிந்தவன், புரிந்தவன், சில நல்ல வழிமுறைகளும் கலியுகத்தில் இருக்கிறதே. இந்த கலியுகத்தில் தான் உன் மேல் பக்தி கொண்டவர்களுக்கு கை மேல் பலன். தீய வழிகளில் செல்வோர், அனுபவித்து பின்னர் காலம் கடந்து உன் அருள் பெறுகிறார்கள் . இந்த கலியுகத்தில் உன் பக்தர்களை நெருங்க கலிபுருஷன் தயங்குகிறான், அஞ்சுகிறான். அதனால் தான் நோய்கள், கிருமிகள், என்று பலவற்றை அனுப்பி அவர்களை வாட்டுகிறான். கொடியவன் அவனை தக்கபடி நீ தண்டிக்கவேண்டும்.

गङ्गा गीता च गायत्र्यपि च तुलसिका गोपिकाचन्दनं तत्
सालग्रामाभिपूजा परपुरुष तथैकादशी नामवर्णा: ।
एतान्यष्टाप्ययत्नान्यपि कलिसमये त्वत्प्रसादप्रवृद्ध्या
क्षिप्रं मुक्तिप्रदानीत्यभिदधु: ऋषयस्तेषु मां सज्जयेथा: ॥९॥

gangaa giitaa cha gaayatryapi cha tulasikaa gOpikaa chandanaM tat
saalagraamaabhi puujaa parapuruSha tathaikaadashii naamavarNaaH |
etaanyaShTaapyayatnaanyayi kalisamaye tvatprasaada pravR^iddhyaa
kshipraM mukti pradaaniityabhidadhuH R^iShayasteShu maam sajjayethaaH || 9

க³ங்கா³ கீ³தா ச கா³யத்ர்யபி ச துலஸிகா கோ³பிகாசந்த³னம் தத்
ஸாலக்³ராமாபி⁴பூஜா பரபுருஷ ததை²காத³ஶீ நாமவர்ணா꞉ |
ஏதான்யஷ்டாப்யயத்னான்யயி கலிஸமயே த்வத்ப்ரஸாத³ப்ரவ்ருத்³த்⁴யா
க்ஷிப்ரம் முக்திப்ரதா³னீத்யபி⁴த³து⁴ர்ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா²꞉ || 92-9 ||

குருவாயூரப்பா, நாராயணா, மஹான்கள், ரிஷிகள், என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? எட்டு விதங்களில் உன்னை வழிபட்டு உன்னை அடையலாமாம்.
கங்கையில் ஸ்னானம், பகவத் கீதை பாராயணம், காயத்ரி மந்த்ர உச்சாடனம், துளசி தள அர்ச்சனை, கோபி சந்தனம் தரித்துக் கொள்வது, சாளக்ராமமாக பூஜிப்பது, ஏகாதசி உபவாசம்.. கலியுகத்தில், இந்த எட்டும் தான், கிட்டா, உன் அருளைப் பெற, முக்தி அடையச் செய்வன. ''பகவானே, எனக்கு இந்த வழி பாட்டில் ஆர்வம் வரச்செய்து நானும் பக்தியோடு உன்னை வணங்க அருள்புரியவேண்டும்.

देवर्षीणां पितृणामपि न पुन: ऋणी किङ्करो वा स भूमन् ।
योऽसौ सर्वात्मना त्वां शरणमुपगतस्सर्वकृत्यानि हित्वा ।
तस्योत्पन्नं विकर्माप्यखिलमपनुदस्येव चित्तस्थितस्त्वं
तन्मे पापोत्थतापान् पवनपुरपते रुन्धि भक्तिं प्रणीया: ॥१०॥

devarShiiNaaM pitR^INaamapi cha punarR^iNii kinkarO vaa sa bhuuman
yO(a)sau sarvaatmanaa tvaaM sharaNamupagataH sarvakR^ityaani hitvaa |
tasyOtpannaM vikarmaapyakhilamapanudasyeva chittasthitastvam
tanme paapOtthataapaan pavanapurapate rundhi bhaktiM praNiiyaaH ||10

தே³வர்ஷீணாம் பித்ருணாமபி ந புனர்ருணீ கிங்கரோ வா ஸ பூ⁴மன்
யோ(அ)ஸௌ ஸர்வாத்மனா த்வாம் ஶரணமுபக³தஸ்ஸர்வக்ருத்யானி ஹித்வா |
தஸ்யோத்பன்னம் விகர்மாப்யகி²லமபனுத³ஸ்யேவ சித்தஸ்தி²தஸ்த்வம்
தன்மே பாபோத்த²தாபான்பவனபுரபதே ருந்தி⁴ ப⁴க்திம் ப்ரணீயா꞉ || 92-10 ||

எண்டே குருவாயூரப்பா, பிரபஞ்ச நாயகா, யார் யாரெல்லாம் முழுமனதோடு, எல்லா கர்மங்களையும் செய்து பலனைப் பற்றி எண்ணாமல் உன்னை சரணடைகிறார்களோ, அவர்களுக்கு எந்த வித பித்ருக்கடன்,தேவக்கடன், எதுவும் கிடையாது, ஏதேனும் தவறான காரியங்கள் செய்திருந்தாலும் அவற்றை அழிப்பவனல்லா நீ? என் தவறுகளையும் மன்னித்து, நோய் தீர்த்து, என்னையும் உன் பக்தனாக வழிபட அருள்வாயப்பா.