Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 26
26. கஜேந்திர மோக்ஷம்.

இந்த தசகத்தில் கஜேந்திர மோக்ஷம் பற்றி சொல்கிறார்.

ஒரு ராஜா சாபம் பெற்று யானையாகிறான். அவனை இன்னொரு சாபம் பெற்றவன் முதலையாகி குளத்தில் இருக்கும்போது முதலை யானையின் காலைப் பிடித்து நீரில் இழுக்கிறது. யானை தப்பிக்க முயல்கிறது. சக்தி இழந்து ஆதி மூலமே என்று ஸ்ரீமன் நாராயணனை வேண்டுகிறது. சுதர்சன சக்கரம் அனுப்பப்பட்டு ஸ்ரீமன் நாராயணன் அருளால் முதலை கொல்லப்பட்டு கஜேந்திரன் உயிர் தப்புகிறது. மோக்ஷம் அடைகிறது.

इन्द्रद्युम्न: पाण्ड्यखण्डाधिराज-
स्त्वद्भक्तात्मा चन्दनाद्रौ कदाचित् ।
त्वत् सेवायां मग्नधीरालुलोके
नैवागस्त्यं प्राप्तमातिथ्यकामम् ॥१॥

ivadbhaktaatmaa chandanaadraukadaachit |
tvatsevaayaaM magnadhiiraalul
Oke naivaagastyaM praaptamaatithyakaamam || 1

இந்த்³ரத்³யும்ன꞉ பாண்ட்³யக²ண்டா³தி⁴ராஜ-
ஸ்த்வத்³ப⁴க்தாத்மா சந்த³னாத்³ரௌ கதா³சித் |
த்வத்ஸேவாயாம் மக்³னதீ⁴ராலுலோகே
நைவாக³ஸ்த்யம் ப்ராப்தமாதித்²யகாமம் || 26-1 ||

பாண்டிய தேசத்து ராஜா இந்த்ரத்யும்னன் கிருஷ்ணா, உன் தீவிர பக்தன். மலையத்வஜ சிகரத்தில் தவம் செய்து கொண்டிருந்தவன் எதிரே வந்து நின்ற ரிஷி அகஸ்தியரை அவன் கவனிக்கவில்லை. அங்கு அழைப்பை ஏற்று வந்த தன்னை தக்க மரியாதைகளோடு வரவேற்க வில்லை உதாசீனப் படுத்துகிறான் என்ற வருத்தம் அகஸ்திய ரிஷிக்கு வந்தது.

कुम्भोद्भूति: संभृतक्रोधभार:
स्तब्धात्मा त्वं हस्तिभूयं भजेति ।
शप्त्वाऽथैनं प्रत्यगात् सोऽपि लेभे
हस्तीन्द्रत्वं त्वत्स्मृतिव्यक्तिधन्यम् ॥२॥

kumbhOdbhuutiH sambhR^itakrOdhabhaaraH
stabdhaatmaa tvaM hasti bhuuyaM bhajeti |
shaptvaa(a)thainaM pratyagaatsO(a)pi lebhe
hastiindratvaM tvatsmR^iti vyakti dhanyam || 2

கும்போ⁴த்³பூ⁴தி꞉ ஸம்ப்⁴ருதக்ரோத⁴பா⁴ர꞉
ஸ்தப்³தா⁴த்மா த்வம் ஹஸ்திபூ⁴யம் ப⁴ஜேதி |
ஶப்த்வாதை²னம் ப்ரத்யகா³த்ஸோ(அ)பி லேபே⁴
ஹஸ்தீந்த்³ரத்வம் த்வத்ஸ்ம்ருதிவ்யக்தித⁴ன்யம் || 26-2 ||

அகஸ்தியருக்கு ஒரு பெயர் கும்பமுனி. ஒரு குடத்தில் அவதரித்தவர். குடமுனி என்று தமிழில் சொல்வதும் உண்டு. அவருக்கு இந்த்ரத்யும்னன் மேல் அசாத்திய கோபம் வந்துவிட்டது. தன்னை அழைத்து அவமானப் படுத்தினான் என்ற எண்ணம் அவர் கோபத்தை அதிகரிக்க வைத்தது. யானை மாதிரி வளர்ந்திருக்கிறாய் கொஞ்சம் கூட உனக்கு இங்கிதம் தெரியவில்லை,மரியாதை தெரியவில்லை, ''நீ யானையாகப் போகக் கடவது'' என்று சபித்து விட்டார். இந்த்ரத்யும்னன் உன் பக்தன் என்று சொன்னேனே. அதனால் அவன் யானையானாலும் அவன் மனதில் நீ குடி கொண்டிருந்தாய்.


दग्धाम्भोधेर्मध्यभाजि त्रिकूटे
क्रीडञ्छैले यूथपोऽयं वशाभि: ।
सर्वान् जन्तूनत्यवर्तिष्ट शक्त्या
त्वद्भक्तानां कुत्र नोत्कर्षलाभ: ॥३॥


dugdhaambhOdheH madhyabhaaji trikuuTe
kriiDan shaile yuuthapO(a)yaMvashaabhiH |
sarvaan jantuunatyavartiShTa shaktyaa
tvadbhaktaanaaM kutranOtkarShalaabhaH || 3

து³க்³தா⁴ம்போ⁴தே⁴ர்மத்⁴யபா⁴ஜி த்ரிகூடே
க்ரீட³ன் ஶைலே யூத²போ(அ)யம் வஶாபி⁴꞉ |
ஸர்வான்ஜந்தூனத்யவர்திஷ்ட ஶக்த்யா
த்வத்³ப⁴க்தானாம் குத்ர நோத்கர்ஷலாப⁴꞉ || 26-3 ||

திரிகூட பர்வதத்தில் இந்த்ரத்யும்ன யானை மற்ற யானைகளோடும் , பெண் யானைகளோடும் உலவிக் கொண்டிருந்தான். இந்த திரிகூட பர்வதம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது அல்ல. பாற்கடலில் நடுவில் தோன்றிய ஒரு தீவு. இந்திரத்யும்னன் மற்ற யானைகளை விட பலசாலி. கிருஷ்ணா, உன் பக்தர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தனிச் சிறப்பும் புகழும் உடையவர்கள் அல்லவா?

स्वेन स्थेम्ना दिव्यदेशत्वशक्त्या
सोऽयं खेदानप्रजानन् कदाचित् ।
शैलप्रान्ते घर्मतान्त: सरस्यां
यूथैस्सार्धं त्वत्प्रणुन्नोऽभिरेमे ॥४॥

svena sthemnaa divyadeshatva shaktyaa sO(a)yaM
khedaanaprajaanan kadaachit |
shailapraante gharmataantaH sarasyaaM
yuuthaissaardhaMtvatpraNunnO(a)bhireme || 4

ஸ்வேன ஸ்தே²ம்னா தி³வ்யதே³ஹத்வஶக்த்யா
ஸோ(அ)யம் கே²தா³னப்ரஜானந் கதா³சித் |
ஶைலப்ராந்தே க⁴ர்மதாந்த꞉ ஸரஸ்யாம்
யூதை²ஸ்ஸார்த⁴ம் த்வத்ப்ரணுன்னோ(அ)பி⁴ரேமே || 26-4 ||

இந்த்ரத்யும்னன் பலத்தாலும், அந்த அற்புதமான தெய்வீக சூழலிலும் சுகமாக வாழ்ந்தான். ஒரு தரம் வெயில் கொளுத்தியது. உடல் சூட்டை குறைக்க இந்திரத்யும்னன் மற்ற யானைகளோடு சேர்ந்து மலைச்சாரலில் உள்ள ஒரு குளிர்ந்த தாமரைக்குளத்திற்கு நீராட சென்றது. எல்லா எண்ணங்களும் எதை எப்படி செய்யவேண்டும் என்று முடிவு பெற நீ தானே ஆட்டிவைக்கிறாய். மற்ற யானைகளோடு இந்த்ரத்யும்னன் அதில் இறங்கி குளிர்ந்த நீரில் விளையாடினான்.

हूस्तावद्देवलस्यापि शापात्
ग्राहीभूतस्तज्जले बर्तमान: ।
जग्राहैनं हस्तिनं पाददेशे
शान्त्यर्थं हि श्रान्तिदोऽसि स्वकानाम् ॥५॥

huuhuustaavaddevalasyaapi shaapaat
graahiibhuutastajjale vartamaanaH |
jagraahainaM hastinaM paadadeshe
shaantyarthaM hi shraantidO(a)sisvakaanaam

ஹூஹூஸ்தாவத்³தே³வலஸ்யாபி ஶாபத்-
க்³ராஹீபூ⁴தஸ்தஜ்ஜலே வர்தமான꞉ |
ஜக்³ராஹைனம் ஹஸ்தினம் பாத³தே³ஶே
ஶாந்த்யர்த²ம் ஹி ஶ்ராந்திதோ³(அ)ஸி ஸ்வகானாம் || 26-5 ||

குருவாயூரப்பா, இனி தான் சங்கடங்கள் தொடர்கிறது. அந்த தாமரைக் குளத்தில் தேவல மகரிஷியால் சாபமடைந்த ஹுஹு என்ற கந்தர்வன் முதலையாக பிறந்து வசித்து வந்தான். இந்த்ரத்யும்னன் தண்ணீரில் நின்று விளையாடின இடத்தில் இருந்த அந்த முதலை யானையின் கால்களை பிடித்துக் கொண்டு விட்டது.

எல்லாமே உன் செயல் தான் கிருஷ்ணா . நீ யாருக்காவது பக்தனுக்கு சோதனையாக நிறைய துயரங்களை, துன்பங்களை, கஷ்டங்களைக் கொடுத்தால் பின்னால் அவனைக் காப்பாற்றி மேலும் ஆனந்தமாக இருக்க செய்வதற்கு தான்.


त्वत्सेवाया वैभवात् दुर्निरोधं
युध्यन्तं तं वत्सराणां सहस्रम् ।
प्राप्ते काले त्वत्पदैकाग्र्यसिध्यै
नक्राक्रान्तं हस्तिवर्यं व्यधास्त्वम् ॥६॥

tvatsevaayaa vaibhavaaddurnirOdhaM
yuddhyantaM taM vatsaraaNaaM sahasram |
praapte kaale tvatpadaikaagryasiddhyai
nakraakraantaM hasti varyaMvyadhaastvam || 6

த்வத்ஸேவாயா வைப⁴வாத்³து³ர்னிரோத⁴ம்
யுத்³த்⁴யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம் |
ப்ராப்தே காலே த்வத்பதை³காக்³ர்யஸித்³த்⁴யை
நக்ராக்ராந்தம் ஹஸ்திவர்யம் வ்யதா⁴ஸ்த்வம் || 26-6 ||

ஆகவே, உன் சங்கல்பத்தால் இந்த்ரத்யும்னன் யானை முதலையிடமிருந்து காலை மீட்க அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது. வலியை தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருந்தது. முதலை யானையை நீருக்குள் இழுக்க, யானை முதலையை கரைக்கு இழுக்க இப்படியே ஆயிரம் வருஷங்கள் இந்த யுத்தம் தொடர்ந்தது.
அவனுக்கிருந்த பலத்தாலும் உன் மேல் இருந்த பக்தியாலும் இப்படி நேரம் கடந்து கொண்டே இருந்தது. தக்க நேரம் வந்துவிட்டது முதலை காலை பிடித்ததால் இந்த்ரத்யும்னன் உன் திருவடிகளை பிடிக்கும் நேரம் வந்துவிட்டது.

आर्तिव्यक्तप्राक्तनज्ञानभक्ति:
शुण्डोत्क्षिप्तै: पुण्डरीकै: समर्चन् ।
पूर्वाभ्यस्तं निर्विशेषात्मनिष्ठं
स्तोत्रं श्रेष्ठं सोऽन्वगादीत् परात्मन् ॥७॥

aartivyakta praaktana j~naanabhaktiH shuN
DOtkshiptaiHpuNDariikaissamarchan |
puurvaabhyastannirvisheShaatmaniShThaM
stOtra shreShThaMsO(a)nvagaadiitparaatman || 7

ஆர்திவ்யக்தப்ராக்தனஜ்ஞானப⁴க்தி꞉
ஶுண்டோ³த்க்ஷிப்தை꞉ புண்ட³ரீகை꞉ ஸமர்சன் |
பூர்வாப்⁴யஸ்தம் நிர்விஶேஷாத்மனிஷ்ட²ம்
ஸ்தோத்ரம் ஶ்ரேஷ்ட²ம் ஸோ(அ)ன்வகா³தீ³த்பராத்மன் || 26-7 ||

இத்தனை வருஷங்களாக தொடர்ந்த அந்த துன்பம் மேலும் தொடரத் தொடர அவதிப்பட்டாலும் உன் பக்தனான இந்த்ரத்யும்னன் தனது வழக்கமான உன் பூஜையை மறக்கவில்லை. முடிந்தவரை தும்பிக்கையால் தாமரைப் புஷ்பங்களை பறித்து ஆத்மார்த்தமாக உனக்கு அர்ச்சித்துக் கொண்டிருந்தது.
அவனது பூர்வ ஜென்மத்தில் உன்னை வழிபட்ட ஸ்தோத்திரங்கள் அவனுக்கு மறக்கவில்லை. அதை விடாமல் சொல்லிக்கொண்டே உன்னை வேண்டிக்கொண்டு இருந்தான்.

श्रुत्वा स्तोत्रं निर्गुणस्थं समस्तं
ब्रह्मेशाद्यैर्नाहमित्यप्रयाते ।
सर्वात्मा त्वं भूरिकारुण्यवेगात्
तार्क्ष्यारूढ: प्रेक्षितोऽभू: पुरस्तात् ॥८॥

shrR^itvaa stOtraM nirguNasthaM samastaM
brahmeshaadyairnaahamityaprayaate |
sarvaatmaa tvaM bhuuri kaaruNya vegaat
taarkshyaaruuDhaH prekshitObhuuHpurastaat || 8

ஶ்ருத்வா ஸ்தோத்ரம் நிர்கு³ணஸ்த²ம் ஸமஸ்தம்
ப்³ரஹ்மேஶாத்³யைர்னாஹமித்யப்ரயாதே |
ஸர்வாத்மா த்வம் பூ⁴ரிகாருண்யவேகா³த்
தார்க்ஷ்யாரூட⁴꞉ ப்ரேக்ஷிதோ(அ)பூ⁴꞉ புரஸ்தாத் || 26-8 ||

குருவாயூரப்பா, இதைக் கேள். இந்த்ரத்யும்னன் உச்சரித்த ஸ்தோத்திரங்கள் பிரம்மாதி தேவர்கள் காதுகளில் விழுந்த போதிலும் அவர்கள் யாரும் இந்த்ரத்யும்னனுக்கு உதவ வரவில்லை.

நாராயணா,உன்னைக் குறித்து இந்த்ரத்யும்னன் வேண்டியதால் தங்களை இந்த்ரத்யும்னன் நாடவில்லை, வேண்டவில்லை என்று பேசாமல் இருந்துவிட்டார்கள். ஆகவே கிருஷ்ணா, நீ உடனே கருட வாஹனானாக அந்த தாமரைக்குளத்துக்கு வந்துவிட்டாய்.

हस्तीन्द्रं तं हस्तपद्मेन धृत्वा
चक्रेण त्वं नक्रवर्यं व्यदारी: ।
गन्धर्वेऽस्मिन् मुक्तशापे स हस्ती
त्वत्सारूप्यं प्राप्य देदीप्यते स्म ॥९॥

hastiindraM taM hastapadmena dhR^itvaa
chakreNa tvaM nakravaryaMvyadaariiH |
gandharve(a)smin muktashaape sa hastii
tvatsaaruupyaM praapya dediipyatesma || 9

ஹஸ்தீந்த்³ரம் தம் ஹஸ்தபத்³மேன த்⁴ருத்வா
சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதா³ரீ꞉ |
க³ந்த⁴ர்வே(அ)ஸ்மின்முக்தஶாபே ஸ ஹஸ்தீ
த்வத்ஸாரூப்யம் ப்ராப்ய தே³தீ³ப்யதே ஸ்ம || 26-9 ||

இந்த்ரத்யும்னனை உன் கைகளால் அணைத்தவாறு, உன் சுதர்சன சக்ரத்தால் அந்த முதலையின் வாயைப் பிளந்துவிட்டாய். தேவல ரிஷி சாபத்தால் முதலையாக பிறந்த ஹுஹு எனும் கந்தர்வன் சாபம் நீங்கி எழுந்தான் அதே சமயம். யானையும் தனது கால் விடுபட்டு, அகஸ்தியர் சாபம் நீங்கி, இந்த்ரத்யும்னனாக பழையபடி உன் முன் நின்றான்.

एतद्वृत्तं त्वां च मां च प्रगे यो
गायेत्सोऽयं भूयसे श्रेयसे स्यात् ।
इत्युक्त्वैनं तेन सार्धं गतस्त्वं
धिष्ण्यं विष्णो पाहि वातालयेश ॥१०॥

etad vR^ittaM tvaaM cha maaM cha prageyO gaayets
O(a)yaM bhuuyase shreyasesyaat |
ityuktvainaM tena saardhaM gatastva
M dhiShNyaM viShNO paahivaataalayesha ||

ஏதத்³வ்ருத்தம் த்வாம் ச மாம் ச ப்ரகே³ யோ
கா³யேத்ஸோ(அ)யம் பூ⁴யஸே ஶ்ரேயஸே ஸ்யாத் |
இத்யுக்த்வைனம் தேன ஸார்த⁴ம் க³தஸ்த்வம்
தி⁴ஷ்ண்யம் விஷ்ணோ பாஹி வாதாலயேஶ || 26-10 ||

குருவாயூரப்பா நீ அப்போது என்ன சொன்னாய் ஞாபகம் இருக்கிறதா? என்ன சிரிக்கிறாய், எனக்கு எப்படி தெரியும் என்றா? நீ கொடுத்த ஞாபக சக்தியால் தான், யுகங்கள் கடந்த விஷயங்கள் கூட எனக்கு இப்போது நடந்தது போல் தெரிகிறது.

''யார் இந்த கஜேந்திர மோக்ஷ ஸ்துதியையோ, என்னையோ தினமும் விடியற்காலம் ஸ்தோத்ரம் செய்கிறார்களோ, அவர்கள் சிறந்த ஸ்ரேயஸ் அடைவார்கள். புகழ் பெறுவார்கள்'' என்று ஆசிர்வதித்தாய். . அப்புறம் நீ இந்த்ரத்யும்ன னோடு வைகுண்டம் திரும்பி விட்டாய். எண்டே குருவாயூரப்பா, நீ என்னையும் அந்த கஜேந்திரன் போல் நோய் நீக்கி ரக்ஷிப்பாயாக.