Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 89
89, வரத்தால் எரிந்தவன்

வருகாசுரன் பெற்ற வரத்தால் எல்லோரும் பஸ்மமாக வேண்டியதோடு அவனே அவன் வரத்தால் பஸ்மமாகி அவன் ''ஆகு''பெயர் பஸ்மாசுரன் ஆகிவிட்டது.. வரம் வேண்டுவோர்கள் எல்லோரும் எப்போதும் ப்ரம்மாவையோ சிவனிடமோ தான் செல்வார்கள். விஷ்ணு அவ்வளவு எளிதில் வரம் கொடுக்கமாட்டார்.. அவருக்கு மற்றவர்கள் கொடுத்த வரத்தால் விளைந்தவற்றை சரி செய்வதற்கே நேரம் சரியாக இருந்ததால் வரம் கொடுக்கும் வழக்கமோ அதற்கு நேரமோ ரொம்ப கிடையாது.

யார் தலையிலாவது கைவைத்தால் அவர்கள் அடுத்தகணம் பஸ்மம் ஆகிவிடுவார்கள் என்ற வரத்தை வ்ருகாசுரன் பெற்று, வரம் கொடுத்த சிவன் தலையில் கை வைக்க துரத்தினவன் பஸ்மாசுரன். அவனை ஏமாற்றி அவன் தலையில் அவனே கைவைத்துக்கொண்டு எரிந்து போக செய்தவர் விஷ்ணு. இது தவிர இன்னும் சில சங்கதிகளை கூறுகிறது இந்த தசகம்.

रमाजाने जाने यदिह तव भक्तेषु विभवो
न सद्यस्सम्पद्यस्तदिह मदकृत्त्वादशमिनाम् ।
प्रशान्तिं कृत्वैव प्रदिशसि तत: काममखिलंप्र
शान्तेषु क्षिप्रं न खलु भवदीये च्युतिकथा ॥१॥

ramaajaane jaane yadiha tava bhakteShu vibhavO
na sadyaH sampadyastadiha madakR^ittvaadashaminaam |
prashaantiM kR^itvaiva pradishasi tataH kaamamakhilaM
prashaanteShu kshipraM na khalu bhavadiiyechyuti kathaa || 1

ரமாஜானே ஜானே யதி³ஹ தவ ப⁴க்தேஷு விப⁴வோ
ந ஸத்³யஸ்ஸம்பத்³யஸ்ததி³ஹ மத³க்ருத்த்வாத³ஶமினாம் |
ப்ரஶாந்திம் க்ருத்வைவ ப்ரதி³ஶஸி தத꞉ காமமகி²லம்
ப்ரஶாந்தேஷு க்ஷிப்ரம் ந க²லு ப⁴வதீ³யே ச்யுதிகதா² || 89-1 ||

திடீரென்று ஒருவனை செலவந்தனாக ஆக்கி விட்டால் தலை கால் புரியாது. ஆகவே செல்வம் என்பது படிப்படியாக வளர்வது. கிருஷ்ணா, நீ எவனுக்கு மனதில் அமைதி, தயை உள்ளதோ அவனுக்கு செல்வத்தை வழங்குபவன். ஏற்கனவே தயாள மனது கொண்டவன், கருணை உள்ளம் கொண்டவனுக்கு நீ மென்மேலும் உடனே செல்வத்தை அருள்பவன்.

सद्य: प्रसादरुषितान् विधिशङ्करादीन्
केचिद्विभो निजगुणानुगुणं भजन्त: ।
भ्रष्टा भवन्ति बत कष्टमदीर्घदृष्ट्या
स्पष्टं वृकासुर उदाहरणं किलास्मिन् ॥२॥

sadyaH prasaadaruShitaan vidhishankaraadiin
kechidvibhO nijaguNaanuguNaM bhajantaH |
bhraShTaa bhavanti bata kaShTamadiirghadR^iShTyaa
spaShTaM vR^ikaasura udaaharaNaM kilaasmin || 2

ஸத்³ய꞉ ப்ரஸாத³ருஷிதான்விதி⁴ஶங்கராதீ³ன்
கேசித்³விபோ⁴ நிஜகு³ணானுகு³ணம் ப⁴ஜந்த꞉ |
ப்⁴ரஷ்டா ப⁴வந்தி ப³த கஷ்டமதீ³ர்க⁴த்³ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதா³ஹரணம் கிலாஸ்மின் || 89-2 ||

பக்தர்களுக்கு நன்றாக தெரியும், சிவனோ, ப்ரம்மாவோ எளிதில் திருப்தி அடைந்து கேட்கும் வரம் அருள்பவர்கள் என்று. கொடுக்கும் அவர்களிடம் கோபமும் உடனே உண்டு. அதனால் துன்பம் விளைவதும் உண்டு, இதற்கு உதாரணம் தான் வ்ருகாசுரன் சரித்திரம்.

शकुनिज: स तु नारदमेकदा
त्वरिततोषमपृच्छदधीश्वरम् ।
स च दिदेश गिरीशमुपासितुं
न तु भवन्तमबन्धुमसाधुषु ॥३॥

shakunijaH sa tu naaradamekadaa
tvarita tOShamapR^ichChadadhiishvaram |
sa cha didesha giriishamupaasituM
na tu bhavantamabandhumasaadhuShu || 3

ஶகுனிஜ꞉ ஸ து நாரத³மேகதா³
த்வரிததோஷமப்ருச்ச²த³தீ⁴ஶ்வரம் |
ஸ ச தி³தே³ஶ கி³ரீஶமுபாஸிதும்
ந து ப⁴வந்தமப³ந்து⁴மஸாது⁴ஷு || 89-3 ||

சகுனி என்பவனின் (மஹாபாரத சொக்கட்டான் சகுனி அல்ல) மகன் வ்ருகாசுரன். ஒருநாள் நாரதரை அணுகி, ''சுவாமி, எந்த தெய்வத்தை நான் நாடினால் சுலபமாக, சீக்ரமாக என் தவத்தால் மகிழ்ந்து வரமளிப்பவர்?'' என்று கேட்டான். நாரதர் உன் பேரைச் சொல்லவில்லை. அவருக்கு தெரியும், தவம் செய்வதால் மகிழ்ந்து நீ கொடியவர்கள், தீயவருக்கு நீ அருள்புரியமாட்டாய் என்று. ஆகவே ''நீ பரமேஸ்வரனை தியானித்து தவம் செய்'' என்றார் .

तपस्तप्त्वा घोरं स खलु कुपित: सप्तमदिने
शिर: छित्वा सद्य: पुरहरमुपस्थाप्य पुरत: ।
अतिक्षुद्रं रौद्रं शिरसि करदानेन निधनं
जगन्नाथाद्वव्रे भवति विमुखानां क्व शुभधी: ॥४॥

tapastaptvaa ghOraM sa khalu kupitaH saptamadine
shirashChitvaa sadyaH puraharamupasthaapya purataH |
atikshudraM raudraM shirasi karadaanena nidhanaM
jagannaathaadvavre bhavati vimukhaanaaM kva shubhadhiiH ||4

தபஸ்தப்த்வா கோ⁴ரம் ஸ க²லு குபித꞉ ஸப்தமதி³னே
ஶிர꞉ சி²த்த்வா ஸத்³ய꞉ புரஹரமுபஸ்தா²ப்ய புரத꞉ |
அதிக்ஷுத்³ரம் ரௌத்³ரம் ஶிரஸி கரதா³னேன நித⁴னம்
ஜக³ன்னாதா²த்³வவ்ரே ப⁴வதி விமுகா²னாம் க்வ ஶுப⁴தீ⁴꞉ || 89-4 ||

வ்ருகன் கடும் தவமிருந்தான். ஏழுநாள் தவமிருந்தவன் தனது தலையை வெட்டி யாகத்தீயில் அர்ப்பணிக்க முனைந்தான். அவனது தீவிர தவத்தை மெச்சி பரமேஸ்வரன் ப்ரசன்னமானார். ஒரு விசித்ர, குறுகிய நோக்கத்தோடு மனதில் உதித்த ஒரு வரத்தைக் கேட்டான் வ்ருகன்.

''எதற்காக தவமிருக்கிறாய். என்ன வேண்டும் உனக்கு கேள் தருகிறேன்.'' என்ற சிவனிடம்
''எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம் சுவாமி, நான் யார் தலையில் என் கையை வைக்கிறேனோ அவர்கள் பஸ்மமாக எரிந்து மரணமடையவேண்டும்'' என்றான்.
''இதென்ன விபரீத வரம். சரி , நீ கேட்டு விட்டாய். பெற்றுக்கொள்'' என்றார் சிவன்.

ஜகன்னாதா, உன் பக்தர்கள் இப்படி வரம் கேட்கவே மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்'' என்கிறார் நாரயண பட்டத்ரி இந்த ஸ்லோகத்தில்.

मोक्तारं बन्धमुक्तो हरिणपतिरिव प्राद्रवत्सोऽथ रुद्रं
दैत्यात् भीत्या स्म देवो दिशि दिशि वलते पृष्ठतो दत्तदृष्टि: ।
तूष्णीके सर्वलोके तव पदमधिरोक्ष्यन्तमुद्वीक्ष्य शर्वं
दूरादेवाग्रतस्त्वं पटुवटुवपुषा तस्थिषे दानवाय ॥५॥

mOktaaraM bandhamuktO hariNapatiriva praadravat sO(a)tharudraM
daityaadbhiityaa smadevO dishi dishi valate pR^iShThatO dattadR^iShTiH |
tuuShNiike sarvalOke tava padamadhirOkshyantamudviikshya sharvaM
duuraadevaagratastvaM paTuvaTu vapuShaa tasthiShe daanavaaya || 5

மோக்தாரம் ப³ந்த⁴முக்தோ ஹரிணபதிரிவ ப்ராத்³ரவத்ஸோ(அ)த² ருத்³ரம்
தை³த்யாத்³பீ⁴த்யா ஸ்ம தே³வோ தி³ஶி தி³ஶி வலதே ப்ருஷ்ட²தோ த³த்தத்³ருஷ்டி꞉ |
தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பத³மதி⁴ரோக்ஷ்யந்தமுத்³வீக்ஷ்ய ஶர்வம்
தூ³ராதே³வாக்³ரதஸ்த்வம் படுவடுவபுஷா தஸ்தி²ஷே தா³னவாய || 89-5 ||

வரம் பெற்ற வ்ருகன் சந்தோஷத்தில் குதித்தான். சிவனிடமே ஓடினான். கூண்டிலிருந்து விடுவித்தவன் மேலேயே பாயும் சிங்கத்தை போல செயல்பட்டான் வ்ருகன் . அவனது இச்செயல் சிவனுக்கே அதிர்ச்சி தந்தது. அவன் கையில் சிக்காமல் சென்ற பரமேஸ்வரனை வ்ருகன் துரத்தி பின் சென்றான். சிவன் வைகுண்டத்துக்கு வந்துகொண்டிருப்பதை கண்ட கிருஷ்ணா, நீ ஒரு பிரம்மச்சாரி உருவம் கொண்டு அசுரனை நெருங்கினாய்.

भद्रं ते शाकुनेय भ्रमसि किमधुना त्वं पिशाचस्य वाचा
सन्देहश्चेन्मदुक्तौ तव किमु न करोष्यङ्गुलीमङ्गमौलौ ।
इत्थं त्वद्वाक्यमूढ: शिरसि कृतकर: सोऽपतच्छिन्नपातं
भ्रंशो ह्येवं परोपासितुरपि च गति: शूलिनोऽपि त्वमेव ॥६

bhadraM te shaakuneya bhramasi kimadhunaa tvaM pishaachasya vaachaa
sandehashchenmaduktau tava kimu na karOShyanguliimangamaulau |
itthaM tvadvaakya muuDhaH shirasi kR^itakaraH sO(a)patachChinna paataM
bhramshO hyevaM parOpaasiturapi cha gatiH shuulinO(a)pi tvameva || 6

ப⁴த்³ரம் தே ஶாகுனேய ப்⁴ரமஸி கிமது⁴னா த்வம் பிஶாசஸ்ய வாசா
ஸந்தே³ஹஶ்சேன்மது³க்தௌ தவ கிமு ந கரோஷ்யங்கு³லீமங்க³ மௌலௌ |
இத்த²ம் த்வத்³வாக்யமூட⁴꞉ ஶிரஸி க்ருதகர꞉ ஸோ(அ)பதச்சி²ன்னபாதம்
ப்⁴ரம்ஶோ ஹ்யேவம் பரோபாஸிதுரபி ச க³தி꞉ ஶூலினோ(அ)பி த்வமேவ || 89-6 ||

''வ்ருகா, சகுனி புத்ரா, எதற்கப்பா இப்படி வியர்க்க விறுவிறுக்க ஓடுகிறாய். யாரோ ஒரு பைசாச தேவதை அருள் செய்தது என்று நம்பி பாவம் ஏனப்பா இப்படி அலைகிறாய். அது பலிக்கப் போவதில்லை. வீண் சக்தி தான் விரயம் உனக்கு. நான் சொல்வதில் நம்பிக்கையில்லையென்றால் உன் தலையில் அடித்து சொல் உண்மையா இல்லையா என்று ?

அந்த நேரத்தில் வ்ருகனின் புத்தியும், அறிவும் வேலைசெய்யவில்லை. நீ சொன்னபடி நான் சிவனை வேண்டி கேட்டது எனக்கு நிச்சயம் பலிக்குமா பலிக்காதா என்று தெரியவில்லை, இதுவரை நான் பரிக்ஷித்துப் பார்க்கவில்லை என்பது உண்மை என்று தனது தலையில் தனது கையால் அடித்து சொன்னான். அடுத்த கணமே அவன் சாம்பலானான். ஹரனுக்கு ஹரி நீ என்றும் துணை என்பதை அநேகர் அறியமாட்டார்கள்.

भृगुं किल सरस्वतीनिकटवासिनस्तापसा-
स्त्रिमूर्तिषु समादिशन्नधिकसत्त्वतां वेदितुम् ।
अयं पुनरनादरादुदितरुद्धरोषे विधौ
हरेऽपि च जिहिंसिषौ गिरिजया धृते त्वामगात् ॥७॥

bhR^iguM kila sarasvatiinikaTa vaasinastaapasaaH
trimuurtiShu samaadishannadhikasattvataaM veditum |
ayaM punaranaadaraaduditaruddharOShe vidhau
hare(a)pi cha jihimsiShau girijayaa dhR^ite tvaamagaat || 7

ப்⁴ருகு³ம் கில ஸரஸ்வதீனிகடவாஸினஸ்தாபஸா-
ஸ்த்ரிமூர்திஷு ஸமாதி³ஶன்னதி⁴கஸத்த்வதாம் வேதி³தும் |
அயம் புனரனாத³ராது³தி³தருத்³த⁴ரோஷே விதௌ⁴
ஹரே(அ)பி ச ஜிஹிம்ஸிஷௌ கி³ரிஜயா த்⁴ருதே த்வாமகா³த் || 89-7 ||

இன்னொரு சம்பவம் சொல்கிறேன். சரஸ்வதி நதி பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த காலம் அது. அதன் கரையில் சில ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு சந்தேகம். ப்ரம்மா விஷ்ணு சிவன் எனும் இந்த த்ரிமூர்த்திகளில் ஸத்வ குணம் நிறைந்தவர் யார் ? என்று ஒரு சர்ச்சை.
அவர்களில் ஒருவரான ப்ருகு முனிவரை அனுப்பி ''நீங்கள் தெரிந்து கொண்டு வாருங்கள்'' என்று அனுப்பினார்கள்.
ப்ருகு பிரம்மலோகம் சென்றபோது அவரை ப்ரம்மா உபசரித்து வரவேற்கவில்லை, அவமதிக்கப் பட்டார் என்று முனிவருக்கு கோபம். பொறுமை இழக்காமல் கைலாசம் சென்றபோது சிவனை சீண்டியதில் கோபமுற்ற சிவன் ப்ருகுவை கொல்லத் துணிந்தார். பார்வதி தடுத்ததால் ப்ருகு பிழைத்தார். அடுத்து முனிவர் உன்னைத்தேடி வைகுண்டம் வந்து சேர்ந்தார்.

सुप्तं रमाङ्कभुवि पङ्कजलोचनं त्वां
विप्रे विनिघ्नति पदेन मुदोत्थितस्त्वम् ।
सर्वं क्षमस्व मुनिवर्य भवेत् सदा मे
त्वत्पादचिन्हमिह भूषणमित्यवादी: ॥८॥

suptaM ramaankabhuvi pankajalOchanaM tvaaM
vipre vinighnati padena mudOtthitastvam |
sarvaM kshamasva munivarya bhavetsadaa me
tvatpaadachihnamiha bhuuShaNamityavaadiiH || 8

ஸுப்தம் ரமாங்கபு⁴வி பங்கஜலோசனம் த்வாம்
விப்ரே வினிக்⁴னதி பதே³ன முதோ³த்தி²தஸ்த்வம் |
ஸர்வம் க்ஷமஸ்வ முனிவர்ய ப⁴வேத்ஸதா³ மே
த்வத்பாத³சிஹ்னமிஹ பூ⁴ஷணமித்யவாதீ³꞉ || 89-8 ||

அவர் வந்ததை நீ அறியவில்லை, வேறெங்கோ கவனமாக இருப்பதாக உணர்ந்த ப்ருகு உன்னை மார்பில் உதைத்தார். மஹாலக்ஷ்மியின் மடிமேல் சிரம் வைத்து யோக நித்திரையில் இருந்த தாமரைக்கண்ணா, நீ மஹாலக்ஷ்மியின் வெறுப்பைக் கண்டு கொள்ளவில்லை. விருட்டென்று எழுந்தாய். ''அடடா ப்ருகு முனிவரா, வாருங்கள், வாருங்கள், க்ஷமிக்கவேண்டும். உங்கள் காலடி பதிவு, என் மேனியில் எனக்கு என்றும் ஒரு ஆபரணமாக, அலங்காரமாக இருக்க பிரார்த்திக் கிறேன்'' என்றாய்

निश्चित्य ते च सुदृढं त्वयि बद्धभावा: सारस्वता मुनिवरा दधिरे विमोक्षम् ।
त्वामेवमच्युत पुनश्च्युतिदोषहीनं सत्त्वोच्चयैकतनुमेव वयं भजाम: ॥९॥

nishchitya te cha sudR^iDhaM tvayi baddhabhaavaaH
saarasvataa munivaraa dadhire vimOksham |
tvaamevamachyuta punashchyuti dOShahiinaM
satvOchchayaika tanumeva vayaM bhajaamaH || 9

நிஶ்சித்ய தே ச ஸுத்³ருட⁴ம் த்வயி ப³த்³த⁴பா⁴வா꞉
ஸாரஸ்வதா முனிவரா த³தி⁴ரே விமோக்ஷம் |
த்வாமேவமச்யுத புனஶ்ச்யுதிதோ³ஷஹீனம்
ஸத்த்வோச்சயைகதனுமேவ வயம் ப⁴ஜாம꞉ || 89-9 ||

இந்த சம்பவமே சரஸ்வதி நதிக்கரையில் காத்திருந்த ரிஷிகளுக்கு அவர்கள் கொண்டிருந்த சந்தேகத்திற்கு சர்ச்சைக்கு ஒரு விடையாக, முறுப்புள்ளியாக அமைந்துவிட்டது. மஹாவிஷ்ணு ஒருவரே மிக உயர்ந்த சாத்விக குணம் நிறைந்த தெய்வம் என்று புலனாகி விட்டது.

जगत्सृष्ट्यादौ त्वां निगमनिवहैर्वन्दिभिरिव
स्तुतं विष्णो सच्चित्परमरसनिर्द्वैतवपुषम् ।
परात्मानं भूमन् पशुपवनिताभाग्यनिवहं
परितापश्रान्त्यै पवनपुरवासिन् परिभजे ॥१०॥

jagatsR^iShTyaadau tvaaM nigamanivahairvandibhiriva
stutaM viShNO sachchitparamarasa nirdvaitavapuSham |
paraatmaanaM bhuuman pashupa vanitaa bhaagya nivahaM
pariitaapashraantyai pavanapuravaasin paribhaje ||10

ஜக³த்ஸ்ருஷ்ட்யாதௌ³ த்வாம் நிக³மனிவஹைர்வந்தி³பி⁴ரிவ
ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித்பரமரஸனிர்த்³வைதவபுஷம் |
பராத்மானம் பூ⁴மன் பஶுபவனிதாபா⁴க்³யனிவஹம்
பரீதபஶ்ராந்த்யை பவனபுரவாஸின் பரிப⁴ஜே || 89-10 ||

வாதபுரீசா, உன்னை வேதங்கள் எப்படியெல்லாம் பாடுகின்றன. பிரபஞ்சத்தை நீ துவக்கிய காலத்திலிருந்து இந்த தெய்வீக கானம் தொடர்கிறது. அதன் ஆனந்தம் எங்கும் பரவியுள்ளது. ப்ரம்ம ஸ்வரூபமான உன்னை சர்வ வியாபியாக இந்த போற்றுதல் தொடர்கிறது. கோபிகள் ஏகபோகமாக அனுபவித்து மகிழ உன் கருணையை வாரித்தந்த வள்ளலே, பரப்ரம்மமே, எல்லாம் வல்ல எல்லாமுமாகிய சர்வ சக்தியே, என் துயரத்தையும் நீக்கி எனக்கருளவேண்டும் .