Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 11
11 மூன்று அசுர பிறவிகள்

क्रमेण सर्गे परिवर्धमाने
कदापि दिव्या: सनकादयस्ते ।
भवद्विलोकाय विकुण्ठलोकं
प्रपेदिरे मारुतमन्दिरेश ॥१॥

krameNa sarge parivardhamaane
kadaapi divyaaH sanakaadayaste |
bhavadvilOkaaya vikuNThalOkaM
prapedire maarutamandiresha ||

க்ரமேண ஸர்கே₃ பரிவர்த₄மாநே
கதா₃பி தி₃வ்யா: ஸநகாத₃யஸ்தே |
ப₄வத்₃விலோகாய விகுண்ட₂லோகம்
ப்ரபேதி₃ரே மாருதமந்தி₃ரேஶ || 1||

நாராயண நம்பூதிரி குருவாயூரப்பன் சந்நிதியில் அவன் எதிரில் அமர்ந்திருந்தாலும் எண்ணத்தில் அவர் பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கும் காலத்துக்கு போய் விட்டார். ''ஹே குருவாயூரப்பா! சிருஷ்டி கார்யம் படு வேகமாக பெருகிக் கொண்டு வரும்போது ப்ரம்மாவின் புத்ரர்கள் உன்னை தரிசிக்க வைகுண்டத்துக்கு வந்தார்களாமே அப்படியா?''''ஆமாம் என்று தலையாட்டினான் உண்ணிகிருஷ்ணன் .

मनोज्ञनैश्रेयसकाननाद्यै-
रनेकवापीमणिमन्दिरैश्च ।
अनोपमं तं भवतो निकेतं
मुनीश्वरा: प्रापुरतीतकक्ष्या: ॥२॥

manOj~nanaishreyasakaananaadyai
ranekavaapiimaNimandiraishcha
anOpamaM taM bhavatO niketa
muniishvaraaH praapuratiitakakshyaaH ||

மநோஜ்ஞநைஶ்ரேயஸகாநநாத்₃யை-
ரநேகவாபீமணிமந்தி₃ரைஶ்ச |
அநோபமம் தம் ப₄வதோ நிகேதம்
முநீஶ்வரா: ப்ராபுரதீதகக்ஷ்யா: || 2||

வைகுண்டம் அற்புதமாக இருக்குமாமே . எங்கும் கொட்டைகள், ஆறு வாசல்கள். உள்ளே அழகிய நந்தவனங்கள். நைஸ்ரேயஸ் என்று அதற்கு பெயராமே ? பூத்துக் குலுங்கும் புஷ்பங்கள்,கனிவர்க்கங்கள். தடாகங்கள், ஜிலுஜிலு என தென்றல் காற்று.புத்தம் புதிய நவரத்னமயமாக இழைத்துக் கட்டிய கட்டிடங்கள். கேட்டாலேயே மதியை மயக்குகிறதே. இதெல்லாம் பார்த்த்து ரசித்துக்கொண்டே அந்தமுனிவர்கள் உன்னை அடைந்தார்களா?
''ஆமாம்'' என்று புன்னகைத்தான் குருவாயூரப்பன்

भवद्दिद्दृक्षून्भवनं विविक्षून्
द्वा:स्थौ जयस्तान् विजयोऽप्यरुन्धाम् ।
तेषां च चित्ते पदमाप कोप:
सर्वं भवत्प्रेरणयैव भूमन् ॥३॥

bhavaddidR^ikshuunbhavanaM vivikshuun
dvaaHsthau jayastaan vijayO(a)pyarundhaam |
teShaaM cha chitte padamaapa kOpaH
sarvaM bhavatpreraNayaiva bhuuman ||

ப₄வத்₃தி₃த்₃த்₃ருக்ஷூந்ப₄வநம் விவிக்ஷூந்
த்₃வா:ஸ்தௌ₂ ஜயஸ்தாந் விஜயோ(அ)ப்யருந்தா₄ம் |
தேஷாம் ச சித்தே பத₃மாப கோப:
ஸர்வம் ப₄வத்ப்ரேரணயைவ பூ₄மந் || 3||

வைகுண்டத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்தாலும் உன்னை அங்கே காண்பது எளிதில் முடியாதே? உன் வாசல் காப்போர்கள் இருக்கவே இருக்கிறார்களே. ஜெய விஜயர்கள். எவர் வந்தாலும் உன் அனுமதி இன்றி உள்ளே உன்னை தரிசிக்க விடுவார்களா?. ஸனகாதி முனிவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் . என்ன எங்களையா தடுத்து நிறுத்துகிறீர்கள்? என்று கோபம் கொண்டார்கள் ரிஷிகள். கிருஷ்ணா, என்ன அப்படிப் பார்க்கி றாய்? உனக்கு தெரியாமலா இது நடக்கும்? இதுவும் உன் கபடநாடகமா?

वैकुण्ठलोकानुचितप्रचेष्टौ
कष्टौ युवां दैत्यगतिं भजेतम् ।
इति प्रशप्तौ भवदाश्रयौ तौ
हरिस्मृतिर्नोऽस्त्विति नेमतुस्तान् ॥४॥

vaikuNThalOkaanuchitapracheShTau
kaShTau yuvaaM daityagatiM bhajetam |
iti prashaptau bhavadaashritau tau
harismR^itirnO(a)sitvati nematustaan ||

வைகுண்ட₂லோகாநுசிதப்ரசேஷ்டௌ
கஷ்டௌ யுவாம் தை₃த்யக₃திம் ப₄ஜேதம் |
இதி ப்ரஶப்தௌ ப₄வதா₃ஶ்ரயௌ தௌ
ஹரிஸ்ம்ருதிர்நோ(அ)ஸ்த்விதி நேமதுஸ்தாந் || 4||

வைகுண்டத்தில் விஷ்ணுவான நாராயணனைத் தரிசிக்க தடையா.?.. அக்கிரமம். இது. த்வாரபாலகர்களே , தகாத காரியம் செய்த உங்களைச் சபிக்கிறோம். நீங்கள் அசுரப்பிறவி எடுக்கக் கடவது. ஜெயவிஜயர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கடமையைச் செய்வது தப்பா? விதியின் கொடுமை. என்ன செய்யமுடியும்? முனிவர்களை வணங்கினார்கள். உங்கள் சாபம் பலித்தால் அப்போதும் எங்களுக்கு ஸ்ரீமன் நாராயண னனின் நினைவு மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அனுக்ரஹம் புரியுங்கள்'' என்று வேண்டினார்கள்.
तदेतदाज्ञाय भवानवाप्त:
सहैव लक्ष्म्या बहिरम्बुजाक्ष ।
खगेश्वरांसार्पितचारुबाहु-
रानन्दयंस्तानभिराममूर्त्या ॥५॥

tadetadaaj~naaya bhavaanavaaptaH
sahaiva lakshmyaa bahirambujaaksha |
khageshvaraamsaarpitachaarubaahu
raanandayamstaanabhiraamamuurtyaa||

நம்பூதிரி மேலும் அங்கே நடந்ததை வர்ணிக்கிறார். ''நாராயணா, ஜெயவிஜயர்களை நோக்கி ரிஷிகள் குரலை உயர்த்தி பேசுவது உனக்கு கேட்டுவிட்டது . தாமரைக்கண்ணா , லக்ஷ்மி தேவி சமேதனாக ஒரு கையால் கருடனின் தோளை அணைத்தவாறு வாசலுக்கு வந்துவிட்டாய் . சனகாதி முனிவர்களை பார்த்து வணங்கினாய். போதுமே வேறு என்ன வேண்டும். முனிவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். இல்லையா?ஆமாம் என்று தலைசாய்த்தான் உண்ணி கிருஷ்ணன்.

ததே₃ததா₃ஜ்ஞாய ப₄வாநவாப்த:
ஸஹைவ லக்ஷ்ம்யா ப₃ஹிரம்பு₃ஜாக்ஷ |
க₂கே₃ஶ்வராம்ஸார்பிதசாருபா₃ஹு-
ராநந்த₃யம்ஸ்தாநபி₄ராமமூர்த்யா || 5||

प्रसाद्य गीर्भि: स्तुवतो मुनीन्द्रा-
ननन्यनाथावथ पार्षदौ तौ ।
संरम्भयोगेन भवैस्त्रिभिर्मा-
मुपेतमित्यात्तकृपं न्यगादी: ॥६॥

prasaadya giirbhiH stuvatO muniindraanananyanaathaavatha
paarShadau tau |
sanrambhayOgena bhavaisitrabhirmaamupetamityaattakR^
ipaM nyagaadiiH ||

ப்ரஸாத்₃ய கீ₃ர்பி₄: ஸ்துவதோ முநீந்த்₃ரா-
நநந்யநாதா₂வத₂ பார்ஷதௌ₃ தௌ |
ஸம்ரம்ப₄யோகே₃ந ப₄வைஸ்த்ரிபி₄ர்மா-
முபேதமித்யாத்தக்ருபம் ந்யகா₃தீ₃: || 6||

அவ்வளவு தான், ரிஷிகள் தங்களை மறந்தார்கள்,உலகமே அவர்களுக்கு மறந்தது, எங்கும் நீயே தெரிந்தாய். உள்ளும் புறமும் உன்னையே தரிசித்து, சனகாதி முனிவர்கள் ஆற்று வெள்ளம்போல் உன் மேல் ஸ்தோத்திரங்கள் பாட ஆரம்பித்து விட்டா ர்கள். பகவானே, நீ அவர்களை ஆசிர்வதித்து தரிசனம் தந்து அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தாய். முகம் வாடி நின்ற ஜய விஜயர்களைப் பார்த்து, “என்னைத் தவிர வேறு கதியற்ற நீங்கள் மூன்று ராக்ஷஸ பிறவி எடுத்து எதிரிகளாக கோபத்தோடு என்னை எதிர்த்து முடிவில் என்னை வந்து அடையுங்கள்” என்று சொன்னாயாமே. ''குருவாயூ ரப்பன் ஆம் என்று தலையசைத்தான்.

त्वदीयभृत्यावथ काश्यपात्तौ
सुरारिवीरावुदितौ दितौ द्वौ ।
सन्ध्यासमुत्पादनकष्टचेष्टौ
यमौ च लोकस्य यमाविवान्यौ ॥७॥

tvadiiyabhR^ityaavatha kashyapaattau
suraariviiraavuditau ditau dvau |
sandhyaasamutpaadanakaShTacheShTau
yamau cha lOkasya yamaavivaanyau ||

த்வதீ₃யப்₄ருத்யாவத₂ காஶ்யபாத்தௌ
ஸுராரிவீராவுதி₃தௌ தி₃தௌ த்₃வௌ |
ஸந்த்₄யாஸமுத்பாத₃நகஷ்டசேஷ்டௌ
யமௌ ச லோகஸ்ய யமாவிவாந்யௌ || 7||

அப்புறம் நடந்ததை புராணங்கள் நிறைய சொல்கிறதே. ஜெய விஜயர்கள் பூமியில் அவதரித்தார்கள். கச்யபருக்கும், திதிக்கும் பிள்ளைகளாக, பிறந்ததால் தாய் வழியாக அடையாளம் காணப்படுவது அப்போது வழக்கம். திதியின் புத்திரர்கள் தைத்ரியர்கள் எனப்பட்டனர். ராதையின் பிள்ளை ராதேயன், குந்தியின் பிள்ளை கௌந்தேயன் மாதிரி. மிகவும் கொடிய குணங்கள் கொண்டவர்க ளாக இருந்தார்கள். பலசாலிகள் தவம் பெற்றவர்கள் என்பதால் மூவுலகும் நடுங்கும் வகையில் தேவர்களைத் துன்புறுத்தினார்கள்.

हिरण्यपूर्व: कशिपु: किलैक:
परो हिरण्याक्ष इति प्रतीत: ।
उभौ भवन्नाथमशेषलोकं
रुषा न्यरुन्धां निजवासनान्धौ ॥८॥

hiraNyapuurvaH kashipuH kilaikaH
parO hiraNyaaksha iti pratiitaH |
ubhau bhavannaathamasheShalOkaM
ruShaa nyarundhaaM nijavaasanaandhau ||

ஒரு பிறவியில் ஜெய விஜயர்கள் ஹிரண்ய கசிபு , ஹிரண்யாக்ஷன் என பெயர்கள் கொண்டவர்கள். எவ்வளவு துன்பங்கள் கொடுக்க முடியுமோ அவ்வளவு தேவர்களுக்கு தந்தவர்கள். மூவுலகங்களும் நடுங்கின.

ஹிரண்யபூர்வ: கஶிபு: கிலைக:
பரோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரதீத: |
உபௌ₄ ப₄வந்நாத₂மஶேஷலோகம்
ருஷா ந்யருந்தா₄ம் நிஜவாஸநாந்தௌ₄ || 8||

ஹிரண்யனுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை நாராயணன். மூவுலகிலும் உன் பெயரே இருக்க கூடாது என்று எண்ணியவன். தன்னைவிட உயர்ந்தவன் எவனுமில்லை என்ற அகந்தை கொண்டவன். உன்னை அடியோடு வெறுத்தவன்.

तयोर्हिरण्याक्षमहासुरेन्द्रो
रणाय धावन्ननवाप्तवैरी ।
भवत्प्रियां क्ष्मां सलिले निमज्य
चचार गर्वाद्विनदन् गदावान् ॥९॥

tayOrhiraNyaakshamahaasurendrO
raNaaya dhaavannanavaaptavairii |
bhavatpriyaaM kshmaaM salile nimajya
chachaara garvaadvinadan gadaavaan ||

ஹிரண்யாக்ஷன் ஒரு படி மேலே போய் அவனது கையில் சக்தி வாய்ந் கதாயுதம் ஏந்தி , எல்லா லோகங்களிலும் சென்று அனைவரையும் வாட்டி வதைத்தான். அவனை எதிர்க்க எவருமில்லை. நாராயணா உனக்கு மகிழ்ச்சியைத் தரும் உன் பூமாதேவியை சுருட்டிக் கொண்டுபோய் கடல்களுக்கு அடியிலே மறைத்து வைத்து விட்டானே . உனக்கு எப்படி இருந்திருக்கும்? எல்லாம் நீ எதிர்பார்த்ததுதானே.?

தயோர்ஹிரண்யாக்ஷமஹாஸுரேந்த்₃ரோ
ரணாய தா₄வந்நநவாப்தவைரீ |
ப₄வத்ப்ரியாம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ய
சசார க₃ர்வாத்₃விநத₃ந் க₃தா₃வாந் || 9||

ततो जलेशात् सदृशं भवन्तं
निशम्य बभ्राम गवेषयंस्त्वाम् ।
भक्तैकदृश्य: स कृपानिधे त्वं
निरुन्धि रोगान् मरुदालयेश ॥१०।

tatO jaleshaat sadR^ishaM bhavantaM
nishamya babhraama gaveShayamstvaam |
bhaktaikadR^ishyaH sa kR^ipaanidhe tvaM
nirundhi rOgaan marudaalayesha ||

ததோ ஜலேஶாத் ஸத்₃ருஶம் ப₄வந்தம்
நிஶம்ய ப₃ப்₄ராம க₃வேஷயம்ஸ்த்வாம் |
ப₄க்தைகத்₃ருஶ்ய: ஸ க்ருபாநிதே₄ த்வம்
நிருந்தி₄ ரோகா₃ந் மருதா₃லயேஶ || 10 ||

வருணன் ஓடிவந்தான். அவனை நிறுத்தி ஹிரண்யாக்ஷன் எனக்கு சமம் யாரடா சொல்? என்றான். அந்த நாராயணன் ஒருவனே என்றான் வருணன். எங்கே அந்த நாராய ணன் என கேட்டு உன்னை தேடினான் ஹிரண்யாக்ஷன். கருணா மூர்த்தி குருவாயூரப்பா, நான் சொல்வதெல்லாம் நினைவுக்கு வருகிறதா? நேரம் வந்து விட்டது ஹிரண்யாக்ஷனுக்கு. உன் பக்தர்களுக்கு நீ அரியவன், அரி. என் குறைகளையும் அறிவாய். தீர்ப்பாய் தெய்வமே .