Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 34
34. அற்புத ராமாயணம்

गीर्वाणैरर्थ्यमानो दशमुखनिधनं कोसलेष्वृश्यशृङ्गे
पुत्रीयामिष्टिमिष्ट्वा ददुषि दशरथक्ष्माभृते पायसाग्र्यम् ।
तद्भुक्त्या तत्पुरन्ध्रीष्वपि तिसृषु समं जातगर्भासु जातो
रामस्त्वं लक्ष्मणेन स्वयमथ भरतेनापि शत्रुघ्ननाम्ना ॥१॥

giirvaaNairarthyamaanO dashamukhanidhanaM kOsaleShvR^ishyashR^inge
putriiyaamiShTimiShTvaa daduShi dasharathakshmaabhR^ite paayasaagryam |
tadbhuktyaa tatpurandhriiShvapi tisR^iShu samaM jaatagarbhaasu jaatO
raamastvaM lakshmaNena svayamatha bharatenaapi shatrughna naamnaa || 1

கீ³ர்வாணைரர்த்²யமானோ த³ஶமுக²னித⁴னம் கோஸலே(அ)ஷ்வ்ருஷ்யஶ்ருங்கே³
புத்ரீயாமிஷ்டிமிஷ்ட்வா த³து³ஷி த³ஶரத²க்ஷ்மாப்⁴ருதே பாயஸாக்³ர்யம் |
தத்³பு⁴க்த்யா தத்புரந்த்⁴ரீஷ்வபி திஸ்ருஷு ஸமம் ஜாதக³ர்பா⁴ஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயமத² ப⁴ரதேனாபி ஶத்ருக்⁴னனாம்னா || 34-1 ||

குருவாயூரப்பா, உன்னைப் பார்த்துக்கொண்டே பாடும்போது ஏன் மேப்பத்தூர் நாராயண நம்பூத்ரிக்கு தங்கு தடை இல்லாமல் வார்த்தைகள் ஸ்லோகங்களாக கொட்டுகிறது தெரியுமா?, காரணம் வேறொன்று மில்லை. உன் பிரதாபம், எண்ணற்ற கருணா லீலைகள். பக்தவத்சல மகிமைகள். நினைக்க நினைக்க சுனை நீரூற்று போல் பெருகும் எத்தனையோ அவதார மகிமைகள் மனக்கண் முன் தோன்றுவதால் தான்.

அறுபதினாயிரம் வருஷங்கள் ஆண்ட தசரத மகாராஜாவுக்கு புத்ர பாக்யம் இல்லையே என்ற ஒரே ஒரு குறை தான். ரிஷிகள் அறிவுரைப்படி ரிஷ்யஸ்ரிங்க மகரிஷியை அழைத்து வரச்செய்து ஒரு புத்திரகாமேஷ்டி யாகம் செய்வித்தான். அற்புதமாக யாகம் நிறைவேறியது. தேவர்கள் தேவதைகள் சந்தோஷத்தோடு வேண்டுகோளை ஏற்று ஒரு பொற்கிண்ணத்தில் பாயசம் யாக குண்டத்திலிருந்து அக்னி கையால் தரப்பட்டது. அந்த பாயசத்தை தனது மூன்று ராணிகளுக்கும் அளித்து பருகச் செய்தான் தசரதன். நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். குருவாயூரப்பா, நீ தானே முதல் புத்ரன், ஸ்ரீ ராமன். கோசலைக்கு பிறந்தவன். உன்னைப் பின் தொடர்ந்து பிறந்தவர்கள் பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன். உன் மானுட ஜென்ம அவதார நோக்கம் ராவணாதி ராக்ஷஸர்களை அழிக்க..

कोदण्डी कौशिकस्य क्रतुवरमवितुं लक्ष्मणेनानुयातो
यातोऽभूस्तातवाचा मुनिकथितमनुद्वन्द्वशान्ताध्वखेद: ।
नृणां त्राणाय बाणैर्मुनिवचनबलात्ताटकां पाटयित्वा
लब्ध्वास्मादस्त्रजालं मुनिवनमगमो देव सिद्धाश्रमाख्यम् ॥२॥

kOdaNDii kaushikasya kratuvaramavituM lakshmaNenaanuyaatO
yaatO(a)bhuustaatavaachaa munikathita manudvandvashaantaadhva khedaH |
nR^INaaM traaNaaya baaNairmuni vachanabalaat taaTakaaM paaTayitvaa
labdhvaa(a)smaadastra jaalaM munivanamagamO deva siddhaashramaakhyam || 2

கோத³ண்டீ³ கௌஶிகஸ்ய க்ரதுவரமவிதும் லக்ஷ்மணேனானுயாதோ
யாதோ(அ)பூ⁴ஸ்தாதவாசா முனிகதி²தமனுத்³வந்த்³வஶாந்தாத்⁴வகே²த³꞉ |
ந்ருணாம் த்ராணாய பா³ணைர்முனிவசனப³லாத்தாடகாம் பாடயித்வா
லப்³த்⁴வாஸ்மாத³ஸ்த்ரஜாலம் முனிவனமக³மோ தே³வ ஸித்³தா⁴ஶ்ரமாக்²யம் || 34-2 ||

ஆச்சு, 16 வயதிலேயே ராக்ஷஸர்களைகே கொல்லும் வேலை தேடி வந்தது. மனமில்லாமல் பயந்து கொண்டே தசரதன் கோபக்கார முனிவர் விஸ்வாமித்ரரோடு உன்னையும் லக்ஷ்மணனையும் அவரது யாகத்தை ராக்ஷஸர்களிடமிருந்து காப்பாற்ற அனுப்பினான். உன் கோதண்டத்தின் பெருமை அது குடித்த ராக்ஷஸர்களைக் கேட்டால் தான் புரியும். விஸ்வாமித்ரர் உபதேசித்த ''பலா, அதிபலா'' மந்திரத்தால் உனக்கு பசி தாகம், களைப்பு எதுவுமே இல்லையே . முதல் பலி தாடகை. உனக்கு விஸ்வாமித்ரர் மந்திரித்து அளித்த அஸ்திரங்கள் எத்தனையோ.

मारीचं द्रावयित्वा मखशिरसि शरैरन्यरक्षांसि निघ्नन्
कल्यां कुर्वन्नहल्यां पथि पदरजसा प्राप्य वैदेहगेहम् ।
भिन्दानश्चान्द्रचूडं धनुरवनिसुतामिन्दिरामेव लब्ध्वा
राज्यं प्रातिष्ठथास्त्वं त्रिभिरपि च समं भ्रातृवीरैस्सदारै: ॥३॥

maariichaM draavayitvaa makhashirasi sharairanyarakshaamsi nighnan
kalyaaM kurvannahalyaaM pathi padarajasaa praapya vaidehageham |
bhindaanashchaandrachuuDaM dhanuravanisutaamindiraameva labdhvaa
raajyaM praatiShThathaastvaM tribhirapi cha samaMbhraatR^iviiraissadaaraiH || 3

மாரீசம் த்³ராவயித்வா மக²ஶிரஸி ஶரைரன்யரக்ஷாம்ஸி நிக்⁴னன்
கல்யாம் குர்வன்னஹல்யாம் பதி² பத³ரஜஸா ப்ராப்ய வைதே³ஹகே³ஹம் |
பி⁴ந்தா³னஶ்சாந்த்³ரசூட³ம் த⁴னுரவனிஸுதாமிந்தி³ராமேவ லப்³த்⁴வா
ராஜ்யம் ப்ராதிஷ்ட²தா²ஸ்த்வம் த்ரிபி⁴ரபி ச ஸமம் ப்⁴ராத்ருவீரை꞉ ஸதா³ரை꞉ || 34-3 ||

ராவணனின் மாமன் மாரீசனை உயிரோடு தப்ப விட்டாய். அதுவும் காரணத்தோடு தான். அப்போது தானே உன் ராம அவதாரம் பூர்த்தியாகும். அவன் உயிர் சிலநாள் அவனிடம் இருக்கட்டுமே. சுபாஹு வையும் மற்ற அசுரர்களையும் நொடியில் எமலோகம் அனுப்பினாய். அகலிகை உன் காலடி மண் பட்டு கல்லிலிருந்து காரிகையானாள் . வாழ்த்தினாள். மிதிலை சென்றாய் வில்லை வளைத்து ஒடித்தாய், மைதிலியை மனைவியாக்கிக் கொண்டாய். லட்சுமி தேவி மஹா விஷ்ணு வாகிய உன்னிடமல்லோ இருக்கவேண்டும்?. பூமியில் கண்டெடுக்கப்பட்ட பூமாதேவியாக சீதை ஜனகனால் வளர்க்கப்பட்டாள். ராமாயணத்தில் உன் சகோதரர்களின் மனைவிகள் பற்றிய விஷயம் அவர்கள் மணமானதிலிருந்தே கொஞ்சூண்டு தான். எத்தனையோ ஆயிரம் ஸ்லோகங்களில் அவர்களுக்கு இடம் அதிகம் ஏன் வால்மீகி தரவில்லை? எல்லோரும் மனைவிகளோடு அயோத்யா திரும்பினீர்கள். என்ன குருவாயூரப்பா ,நான் சொல்வது சரியாக இருக்கிறதா?

आरुन्धाने रुषान्धे भृगुकुल तिलके संक्रमय्य स्वतेजो
याते यातोऽस्ययोध्यां सुखमिह निवसन् कान्तया कान्तमूर्ते ।
शत्रुघ्नेनैकदाथो गतवति भरते मातुलस्याधिवासं
तातारब्धोऽभिषेकस्तव किल विहत: केकयाधीशपुत्र्या ॥४॥

aarundhaane ruShaandhe bhR^igukulatilake sankramayya svatejO
yaate yaatO(a)syayOdhyaaM sukhamiha nivasan kaantayaa kaantamuurte |
shatrughnenaikadaa(a)thO gatavati bharate maatulasyaadhi vaasaM
taataarabdhO(a)bhiShekastava kila vihataH kekayaadhiisha putryaa ||4

ஆருந்தா⁴னே ருஷாந்தே⁴ ப்⁴ருகு³குலதிலகே ஸங்க்ரமய்ய ஸ்வதேஜோ
யாதே யாதோ(அ)ஸ்யயோத்⁴யாம் ஸுக²மிஹ நிவஸன்காந்தயா காந்தமூர்தே |
ஶத்ருக்⁴னேனைகதா³தோ² க³தவதி ப⁴ரதே மாதுலஸ்யாதி⁴வாஸம்
தாதாரப்³தோ⁴(அ)பி⁴ஷேகஸ்தவ கில விஹத꞉ கேகயாதீ⁴ஶபுத்ர்யா || 34-4 ||

பரசுராமனின் அவதாரம் ஒரு முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது போல் இருக்கிறது. இல்லை யென்றால் உன்னோடு மோதுவானா?. நீ தானே அவனும். ஒருவன் இருக்கும்போது இன்னொருவனுக்கு ஏது வேலை? அவரவர் வேலைகள் முடிந்து மற்றவருக்கு வழி விடும் முறையோ? கோபக்கார பரசுராமன் ஆணவம் அகன்றது. பரத சத்ருக்னர்கள் கேகய நாடு சென்ற போது தான் தசரதனுக்கு திடீரென்று உனக்கு யுவராஜா பட்டாபிஷேகம் கட்ட எண்ணம் எழுந்தது. கைகேயி மனம் மாற மந்தரை தூபம் போட்டாள். உன் ராம பட்டாபிஷேகம் நின்றது. நீ அப்போது ராஜாவாகி பேசாமல் நாட்டை ஆள நேர்ந்தால் ராமாயணம் ஏது ? உனக்கு முன்னே, உனக்கு அப்புறம் இருந்த நீளமான ராஜாக்கள் பெயர்கள் லிஸ்டில் உன் பெயரும் எங்கோ சின்னதாக இருந்துவிட்டிருக்கும்.

तातोक्त्या यातुकामो वनमनुजवधूसंयुतश्चापधार:
पौरानारुध्य मार्गे गुहनिलयगतस्त्वं जटाचीरधारी।
नावा सन्तीर्य गङ्गामधिपदवि पुनस्तं भरद्वाजमारा-
न्नत्वा तद्वाक्यहेतोरतिसुखमवसश्चित्रकूटे गिरीन्द्रे ॥५॥

taatOktyaa yaatukaamO vanamanuja vadhuusanyutashchaapadhaaraH
pauraanaarudhya maarge guhanilayagatastvaM jaTaachiiradhaarii |
naavaa santiirya gangaamadhi padavi punastam bharadvaajamaaraannatvaa
tadvaakyahetOratisukhamavasashchitrakuuTe giriindre || 5

தாதோக்த்யா யாதுகாமோ வனமனுஜவதூ⁴ஸம்யுதஶ்சாபதா⁴ர꞉
பௌரானாருத்⁴ய மார்கே³ கு³ஹனிலயக³தஸ்த்வம் ஜடாசீரதா⁴ரீ |
நாவா ஸந்தீர்ய க³ங்கா³மதி⁴பத³வி புனஸ்தம் ப⁴ரத்³வாஜமாரா-
ந்னத்வா தத்³வாக்யஹேதோரதிஸுக²மவஸஶ்சித்ரகூடே கி³ரீந்த்³ரே || 34-5 ||

கைகேயி தசரதரே இப்போது வரம் கொடுங்கள் என கேட்டாள் . எப்போதோ தான் கொடுத்து அவள் கேட்காத இரு வரங்கள் இப்போது அவள் கேட்டபோது தசரதனுக்கு அது பேரிடி. அவன் அளித்த வரத்தின் படி நீ சீதையோடும் லக்ஷ்மணனோடும் 14 வருஷம் வனவாசம் சென்றாய். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. தந்தை சொல் கேட்காமலிருந்தால் ராமாயண ஸ்லோகங்கள் இருக்காதே. கூடவே வந்த அயோத்தி மக்களை திருப்பி அனுப்பினாய். கங்கைக்கரையில் குகனை சந்தித்தாய். நால்வர் ஐவரானீர்கள். நீ இப்போது மணி மகுட பீதாம்பர வஸ்திர ஆபரணதாரி இல்லை. மரவுரி ஜடாதாரி. கங்கையின் கரை கடந்தாய். பாரத்வாஜ முனிவர் ஆஸ்ரமம் சென்று வணங்கினாய். எல்லோருடைய ஆசியும் உன் அவதார காரியத்துக்கு அவசியமாயிற்றே. அவர் அறிவுரைப்படி சித்ரகூட மலைக்கு சென்றாய்.

श्रुत्वा पुत्रार्तिखिन्नं खलु भरतमुखात् स्वर्गयातं स्वतातं
तप्तो दत्वाऽम्बु तस्मै निदधिथ भरते पादुकां मेदिनीं च
अत्रिं नत्वाऽथ गत्वा वनमतिविपुलं दण्डकं चण्डकायं
हत्वा दैत्यं विराधं सुगतिमकलयश्चारु भो: शारभङ्गीम् ॥६॥

shrutvaaputraartikhinnaM khalu bharatamukhaat svarga yaataM svataataM
taptO datvaa(a)mbu tasmai nidadhitha bharate paadukaaM mediniiM cha |
atriM natvaa(a)tha gatvaa vanamati vipulaM daNDakaM chaNDakaayaM
hatvaa daityaM viraadhaM sugatimakalayashchaaru bhOH shaarabhangiim || 6

ஶ்ருத்வா புத்ரார்திகி²ன்னம் க²லு ப⁴ரதமுகா²த்ஸ்வர்க³யாதம் ஸ்வதாதம்
தப்தோ த³த்த்வாம்பு³ தஸ்மை நித³தி⁴த² ப⁴ரதே பாது³காம் மேதி³னீம் ச |
அத்ரிம் நத்வாத² க³த்வா வனமதிவிபுலம் த³ண்ட³கம் சண்ட³காயம்
ஹத்வா தை³த்யம் விராத⁴ம் ஸுக³திமகலயஶ்சாரு போ⁴꞉ ஶாரப⁴ங்கீ³ம் || 34-6 ||

அயோத்திக்கு திரும்பிய பரத சத்ருக்னர்கள் அயோத்தியில் நடந்த அதிர்ச்சிகளை அறிந்தார்கள். இறந்த தந்தையின் உடலைப் பார்த்து ஈமக்கடன்கள் முடித்த பரதன் உன்னைத்தேடி வந்து எப்படியாவது நீ அயோத்தி திரும்பவேண்டும் என்று கெஞ்சினான். அவன் மூலம் தந்தை இறந்த சேதி கேட்டு அவருக்கு உன் கையால் எள்ளும் நீரும் இறைத்து உன் கடமையைச் செய்தாய். உன் பாதுகையை அளித்து பரதனை திரும்பச் செய்தாய். பாதுகையின் மஹிமை உன் ராமாயணத்தால் தான் உலகில் அறியப்பட்டு புனிதமாக வழிபடப்பட்டது. அத்ரி மகரிஷியை தரிசித்தாய், பிறகு தண்டகாரண்ய அகண்ட இருண்ட காட்டுப்பகுதிக்கு சென்றாய். ராக்ஷஸர்கள் அழைக்கிறார்களே ''வா எங்கள் உயிரைப் போக்கு'' என்று . விராதன் பலியானான். சரபங்க ரிஷி உனக்காக காத்திருந்தவருக்கு தரிசனமும் மோக்ஷமும் அளித்தாய்.

नत्वाऽगस्त्यं समस्ताशरनिकरसपत्राकृतिं तापसेभ्य:
प्रत्यश्रौषी: प्रियैषी तदनु च मुनिना वैष्णवे दिव्यचापे ।
ब्रह्मास्त्रे चापि दत्ते पथि पितृसुहृदं वीक्ष्य भूयो जटायुं
मोदात् गोदातटान्ते परिरमसि पुरा पञ्चवट्यां वधूट्या ॥७॥

natvaa(a)gastyaM samastaasharanikara sapatraakR^itiM taapasebhyaH
pratyashrauShiiH priyaiShii tadanu cha muninaa vaiShNave divyachaape |
brahmaastre chaapi datte pathi pitR^isuhR^idaM viikshya bhuuyO jaTaayuM
mOdaad gOdaataTaante pariramasi puraa pa~nchavaTyaaM vadhuuTyaa || 7

நத்வா(அ)க³ஸ்த்யம் ஸமஸ்தாஶரனிகரஸபத்ராக்ருதிம் தாபஸேப்⁴ய꞉
ப்ரத்யஶ்ரௌஷீ꞉ ப்ரியைஷீ தத³னு ச முனினா வைஷ்ணவே தி³வ்யசாபே |
ப்³ரஹ்மாஸ்த்ரே சாபி த³த்தே பதி² பித்ருஸுஹ்ருத³ம் வீக்ஷ்ய பூ⁴யோ ஜடாயும்
மோதா³த்³கோ³தா³தடாந்தே பரிரமஸி புரா பஞ்சவட்யாம் வதூ⁴ட்யா || 34-7 ||

அகஸ்தியரை வணங்கி அருளாசி பெற்றாய். அவரால் தான் நீ ஜபித்த ஆதித்ய ஹ்ருதயம் எங்களுக்கு கிட்டியது. நன்றி உனக்கு ராமா. ரிஷிகள் முனிவர்கள் தடங்கலின்றி வாழ்ந்து த்யானம் யாகங்கள் புரிய ''ராக்ஷஸர்களை ஒழித்துக் கட்டுவேன்'' என்று ஆறுதல் அளித்தாய். உனைக்கண்டு மகிழ்ந்த அகஸ்தியரிடமிருந்து பிரம்மாஸ்திரம் பெற்றாய். வழியில் ஜடாயு, உன் தந்தையின் நண்பன், கழுகரசனைச் சந்தித்தாய். கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடியில் கொஞ்சநாள் சந்தோஷ வாழ்க்கை சீதையோடு வாழ்ந்தாய். நீ என்ன சந்தோஷமாக வாழவா பூமிக்கு வந்தவன்?

प्राप्ताया: शूर्पणख्या मदनचलधृतेरर्थनैर्निस्सहात्मा
तां सौमित्रौ विसृज्य प्रबलतमरुषा तेन निर्लूननासाम् ।
दृष्ट्वैनां रुष्टचित्तं खरमभिपतितं दूषणं च त्रिमूर्धं
व्याहिंसीराशरानप्ययुतसमधिकांस्तत्क्षणादक्षतोष्मा ॥८॥

praaptaayaaH shuurpaNakhyaa madanachaladhR^iterarthanairnissahaatmaa
taaM saumitrau visR^ijya prabalatamaruShaa tena nirluuna naasaam |
dR^iShTvainaaM ruShTachittaM kharamabhipatitaM duuShaNaM cha trimuurdhaM
vyaahimsiiraasharaanapyayuta samadhikaaM statkshaNaadakshatOShmaa ||8

ப்ராப்தாயா꞉ ஶூர்பணக்²யா மத³னசலத்⁴ருதேரர்த²னைர்னிஸ்ஸஹாத்மா
தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய ப்ரப³லதமருஷா தேன நிர்லூனநாஸாம் |
த்³ருஷ்ட்வைனாம் ருஷ்டசித்தம் க²ரமபி⁴பதிதம் து³ஷணம் ச த்ரிமூர்த⁴ம்
வ்யாஹிம்ஸீராஶரானப்யயுதஸமதி⁴காம்ஸ்தத்க்ஷணாத³க்ஷதோஷ்மா || 34-8 ||

என் குருவாயூரப்பா, நீ ராமனாக, களைப்பறியாத, அதிக சக்தி, பலம் கொண்ட மஹாவீரன் அல்லவா? ராவணாதிகளை அழிக்க இதோ காரணமாக வந்து விட்டாளே சூர்ப்பனகை, ராவணன் தங்கை. உன்னிடம் காதல் மொழிகள் பேசிய அவளை லக்ஷ்மணனிடம் அனுப்பிய போது , ஆதிசேஷன் இதெல்லாம் கேட்டுக்கொண்டா இருப்பான். மூக்கறுத்துவிட்டான். ரத்தம் சொட்ட ஓடிய சூர்ப்பனகை கர, தூஷண, த்ரிசிரஸ் சகோதரர்களை ஏவினாள். பல்லாயிரக் கணக்கான அந்த ராக்ஷர்களுக்கு நீ ''கொரோனா மரணப்பரிசு'' தந்தாய். சூர்ப்பனகையை நீ விட்டு வைத்த நோக்கம் அவள் ராவணனிடம் பறந்து போய் உன்னைப் பற்றி சொல்ல...

सोदर्याप्रोक्तवार्ताविवशदशमुखादिष्टमारीचमाया-
सारङ्ग सारसाक्ष्या स्पृहितमनुगत: प्रावधीर्बाणघातम् ।
तन्मायाक्रन्दनिर्यापितभवदनुजां रावणस्तामहार्षी-
त्तेनार्तोऽपि त्वमन्त: किमपि मुदमधास्तद्वधोपायलाभात् ॥९॥

sOdaryaa prOktavaartaavivasha dashamukhaadiShTa maariichamaayaa
saarangaM saarasaakshyaa spR^ihitamanugataH praavadhiirbaaNaghaatam |
tanmaayaakranda niryaapita bhavadanujaaM raavaNastaamahaarShiittenaarttO(
a)pi tvamantaH kimapi mudamadhaastadvadhOpaaya laabhaat || 9

ஸோத³ர்யாப்ரோக்தவார்தாவிவஶத³ஶமுகா²தி³ஷ்டமாரீசமாயா-
ஸாரங்க³ம் ஸாரஸாக்ஷ்யா ஸ்ப்ருஹிதமனுக³த꞉ ப்ராவதீ⁴ர்பா³ணகா⁴தம் |
தன்மாயாக்ரந்த³னிர்யாபிதப⁴வத³னுஜாம் ராவணஸ்தாமஹார்ஷீ-
த்தேனார்தோ(அ)பி த்வமந்த꞉ கிமபி முத³மதா⁴ஸ்தத்³வதோ⁴பாயலாபா⁴த் || 34-9 ||

இலங்கையில் மூக்கறுபட்ட தங்கையைக் கண்டு பத்து முகங்களிலும் கோபாக்னி பொங்க ராவணன் கொதித்தான். அவனைக் குளிர வைக்க சீதையின் அழகை வர்ணித்தாள் . ராவணன் எதிரியின் பலம் தெரிந்து கொண்டு மாமன் மாரீசன், ஏற்கனவே உன்னிடம் அடி பட்டு உன்னால் உயிர் பிழைத்தவனை , அணுகினான். திட்டம் தீட்டியபடியே மாரீசன் பொன் மானானான், பெண்மான் சீதை மதி மயங்கி அவனைப் பிடித்து தர உன்னை அனுப்பினாள் . நீயும் வேண்டுமென்றே அவன் பின் நடுக்காட்டுக்கு ஓடினாய். அவன் தான் முதல் மிமிக்ரி கலைஞன். உன் குரலில் ''ஹா லக்ஷ்மணா, ஹா சீதா'' என்று குரல் கொடுத்தான். சீதை உனக்கு ஆபத்து, அது உன் குரல் என நம்பி காவலுக்கு நீ வைத்த லக்ஷமணனை, அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல் உன்னைத் தேட விரட்டினாள் . தனித்திருந்த அவளை, காத்திருந்த ராவண சந்நியாசி கடத்திச் சென்றான். ''ஏன் சீதையை விட்டு இங்கே வந்தாய்?'' என்று கேட்டு லக்ஷ்மணன் சொல்ல, நீ நடந்ததை அறிந்தாய். சீதையைத் தேடுவது ஆரம்பித்தது. ''கிருஷ்ணா, நீ எல்லாம் கன கச்சிதமாக திட்டம் போட்டு நடத்திக் காட்டுபவன்'' என்று உனது முந்தைய ராமாவதாரத்திலேயே காட்டிவிட்டாயே. இனி ராவணனை தேடிச் சென்று கொல்ல வழி வகுத்தாய்.

भूयस्तन्वीं विचिन्वन्नहृत दशमुखस्त्वद्वधूं मद्वधेने-
त्युक्त्वा याते जटायौ दिवमथ सुहृद: प्रातनो: प्रेतकार्यम् ।
गृह्णानं तं कबन्धं जघनिथ शबरीं प्रेक्ष्य पम्पातटे त्वं
सम्प्राप्तो वातसूनुं भृशमुदितमना: पाहि वातालयेश ॥१०॥

bhuuyastanviiM vichinvannahR^ita dashamukhastvadvadhuuM madvadhenetyuktvaa
yaate jaTaayau divamatha suhR^idaH praatanOH pretakaaryam |
gR^ihNaanaM taM kabandhaM jaghanitha shabariiM prekshya pampaataTe tvaM
sampraaptO vaatasuunuM bhR^ishamuditamanaaH paahi vaataalayesha ||10

பூ⁴யஸ்தன்வீம் விசின்வன்னஹ்ருத த³ஶமுக²ஸ்த்வத்³வதூ⁴ம் மத்³வதே⁴னே-
த்யுக்த்வா யாதே ஜடாயௌ தி³வமத² ஸுஹ்ருத³꞉ ப்ராதனோ꞉ ப்ரேதகார்யம் |
க்³ருஹ்ணானம் தம் கப³ந்த⁴ம் ஜக⁴னித² ஶப³ரீம் ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம்
ஸம்ப்ராப்தோ வாதஸூனும் ப்⁴ருஶமுதி³தமனா꞉ பாஹி வாதாலயேஶ || 34-10 |

சீதையைத் தேடிச் சென்ற நீயும் லக்ஷ்மணனும் வழியில் குற்றுயிரோடு கிடந்த ஜடாயுவை கண்டு, அவன் மூலம் ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிந்தீர்கள். சேதி சொன்னதோடு ஜடாயு வேலை முடிந்து அவன் மாண்டான். சீதைக்காக ராவணனிடம் போரிட்டு மடிந்த ஜடாயுவிற்கு ஈமக்கிரியை புரிந்தாய். உன் தந்தை தசரதனுக்குக் கூட உன் கரங்களால் ஈமக்கிரியை செய்யும் பாக்யம் கிடைக்கவில்லை. அவன் நண்பன் ஜடாயுவிற்கு கிடைத்தது பார்! வழியில் கபந்தன் குறுக்கிட்டான். சபரிக்கு வழிகாட்டி விட்டு மாண்டான். சபரி மூலம் சுக்ரீவன் ஹனுமான் சந்திப்பு ஏற்பட்டது. பலத்தோடு பலம் சேர்ந்தது. வாயு புத்ரன் ஹனுமான் உன் பக்தனானான். பம்பா நதி க்ஷேத்ர ரிஷ்யமுக பர்வம் அடைந்தாய். எண்டே குருவாயூரப்பா இதெல்லாம் செய்த நீ என் நோயைத் தீர்த்து என்னையும் ரக்ஷிக்கவேண்டுமப்பா.