Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 39
39. கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான்.

வசுதேவர் கிருஷ்ணனுடன் நுழைந்தவுடன் கோகுல கிராமத்திலிருந்த நந்தகோபன் வீட்டின் கதவுகள் தானாகவே திறந்து வழிவிட்டன. ஆதிசேஷன் தான் வழி நடத்துகிறானே ! ரொம்ப வருஷமாக பழக்கப்பட்டவர் போல நந்தகோபன் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தது மாதிரி கண்ணை மூடிக்கொண்டிருந்த யசோதையின் அருகே கிருஷ்ணனை விட்டு, அங்கே படுத்திருந்த யோகமாயாவைத் தூக்கிக்கொண்டு வந்தவழியே திரும்பினார்.

மறுநாள் காலை சூர்ய உதயம் ஆகியபின் செய்தி அவசர அவசரமாக கம்ஸனுக்கு போய்விட்டது. தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்துவிட்டது. அதால் தான் தனக்கு மரணம் என்பதால் இந்தக் குழந்தைக்காகத்தான் கம்ஸன் காத்திருந்தான். வாளோடு வந்தான். சிரித்தான். அட, இது ஒரு பெண் குழந்தை, பிள்ளை என்று அல்லவா அசரீரி சொல்லியது. எல்லாம் பொய் என்று சிரித்தான். இருந்தாலும் இதை உயிரோடு விடக்கூடாது என்று துணி தோய்ப்பது போல் அதை கல்லின் மேல் வீசி கொல்ல தூக்கி எறிந்தான். அவன் கையிலிருந்து நழுவி அந்த பெண் குழந்தை மேலே சென்றது. சிரித்துக்கொண்டே, ''முட்டாள் கம்ஸா , உன்னுடைய யமன் இங்கில்லை, வேறெங்கோ இருக்கிறான்'' என்று சொல்லி மறைந்தது. கம்சன் உறைந்து போகிறான். கோகுலத்தில் யாதவர்கள் கோலாகலமாக அடுத்த யாதவ குல ராஜா பிறந்து விட்டதை கொண்டாடுகிறார்கள்.

भवन्तमयमुद्वहन् यदुकुलोद्वहो निस्सरन्
ददर्श गगनोच्चलज्जलभरां कलिन्दात्मजाम् ।
अहो सलिलसञ्चय: स पुनरैन्द्रजालोदितो
जलौघ इव तत्क्षणात् प्रपदमेयतामाययौ ॥१॥

bhavantamayamudvahan yadukulOdvahO nissaran
dadarsha gaganOchchalajjalabharaaM kalindaatmajaam |
ahO salilasa~nchayassa punaraindrajaalOditO
jalaugha iva tatkshaNaat prapadameyataamaayayau || 1

ப⁴வந்தமயமுத்³வஹன் யது³குலோத்³வஹோ நிஸ்ஸரன்
த³த³ர்ஶ க³க³னோச்சலஜ்ஜலப⁴ராம் கலிந்தா³த்மஜாம் |
அஹோ ஸலிலஸஞ்சய꞉ ஸ புனரைந்த்³ரஜாலோதி³தோ
ஜலௌக⁴ இவ தத்க்ஷணாத்ப்ரபத³மேயதாமாயயௌ || 39-1 ||

குருவாயூரப்பா, சொல்லிக்கொண்டே வரும்போது சில விஷயங்கள் முன்னுக்கு பின்னாக வரும். பழைய விஷயங்கள் நினைத்துப்பார்க்கும்போது இப்படி தான் தொடர்ச்சியாக வராமல் விட்டு விட்டு வரும் . உன் அப்பா, வசுதேவர் உன்னைத் தூக்கிக்கொண்டு சிறைச்சாலையிலிருந்து வெளியே நடந்தார் அல்லவா. வேகமாக நடந்தவர் யமுனைக்கரை அடைந்ததும் தான் கொட்டும் மழையில் யமுனை வெள்ளமாக கரை புரண்டு ஓடுவதைப் பார்த்தார். எப்படி இந்த பிரவாகத்தை கடப்பது, அதுவும் நள்ளிரவில், இருட்டில், அதுவும் நீந்தமுடியாத நிலையில், உன்னை வேறு தூக்கிக்கொண்டு?
நீ யார் என்பதை பாவம் அவர் மறந்து விட்டார்! நீ சிரித்தாய், ஒரு கணத்தில் உன்னைக் கண்டதும் யமுனை தலை வணங்கினாள் . வெள்ளம் குறைந்து, கரைந்து, வடிந்து, காணாமல் போய்விட்டது. முழங்கால் அளவு ஜலம் தான் ஆற்றில். ஆற்றில் இறங்கியதும் அது கணுக்கால் அளவு ஜலமாக குறைந்தது. ஆகவே வசுதேவர் நீரில் இறங்கி நடந்து அக்கரைக்கு சென்றார், உன்னைத் தூக்கிக் கொண்டு.

प्रसुप्तपशुपालिकां निभृतमारुदद्बालिका-
मपावृतकवाटिकां पशुपवाटिकामाविशन् ।
भवन्तमयमर्पयन् प्रसवतल्पके तत्पदा-
द्वहन् कपटकन्यकां स्वपुरमागतो वेगत: ॥२॥

prasuptapashupaalikaaM nibhR^itamaarudadbaalikaamapaavR^
itakavaaTikaaM pashupavaaTikaamaavishan |
bhavantamayamarpayan prasavatalpake tatpadaa
dvahan kapaTakanyakaaM svapuramaagatO vegataH || 2

ப்ரஸுப்தபஶுபாலிகாம் நிப்⁴ருதமாருத³த்³பா³லிகா-
மபாவ்ருதகவாடிகாம் பஶுபவாடிகாமாவிஶன் |
ப⁴வந்தமயமர்பயன் ப்ரஸவதல்பகே தத்பதா³-
த்³வஹன் கபடகன்யகாம் ஸ்வபுரமாக³தோ வேக³த꞉ || 39-2 ||

வேக வேகமாக நடந்த வசுதேவர் நந்தகோபன் வீட்டுக்கு சென்றார். பசுக்களை பராமரிக்கும் யாதவ குல ராஜா. பெண்கள் எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். எல்லா கதவுகளும் திறந்து இருந்தது. உள்ளே ஒரு குட்டிப் பெண் மெல்லிதாக வசுதேவர் காதில் மட்டும் விழும்படியாக அழுது கொண்டு தான் இருக்கும் இடத்தை தெரிவித்துக் கொண்டாள். நீ இட்ட கட்டளை வசுதேவரும் நன்றாக வார்த்தைக்கு வார்த்தை நினைவில் இருந்தது. நீ சொல்லியபடியே உன்னை நந்தகோபன் மனைவி யசோதையின் அருகே விட்டுவிட்டு அவள் பக்கத்திலிருந்த பெண் குழந்தை யோக மாயா வை கையில் ஏந்திக்கொண்டு திரும்பி நடந்தார். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வசுதேவர் செயல்பட்டு சீக்கிரமே வந்த வழியே திரும்பி மதுரா வந்து, அரண்மனை சிறைச்சாலைக்குள் நுழைந்து விட்டார்.

ततस्त्वदनुजारवक्षपितनिद्रवेगद्रवद्-
भटोत्करनिवेदितप्रसववार्तयैवार्तिमान् ।
विमुक्तचिकुरोत्करस्त्वरितमापतन् भोजरा-
डतुष्ट इव दृष्टवान् भगिनिकाकरे कन्यकाम् ॥३॥

tatastvadanujaaravakshapitanidravegadravadbhaT
Otkaraniveditaprasavavaartayaivaartimaan|
vimuktachikurOtkarastvaritamaapatan bhOjaraa-
DatuShTa iva dR^iShTavaan bhaginikaakare kanyakaam || 3

ததஸ்த்வத³னுஜாரவக்ஷபிதனித்³ரவேக³த்³ரவ-
த்³ப⁴டோத்கரனிவேதி³தப்ரஸவவார்தயைவார்திமான் |
விமுக்தசிகுரோத்கரஸ்த்வரிதமாபதன் போ⁴ஜரா-
ட³துஷ்ட இவ த்³ருஷ்டவான் ப⁴கி³னிகாகரே கன்யகாம் || 39-3 ||

கதவுகள் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் தானாகவே மூடிக்கொண்டு தாள் போட்டுக் கொண்டன. பூட்டுகள் தொங்கின. வசுதேவர் தேவகி உடம்பில் பழையபடி சங்கிலி. பெண்குழந்தை யோக மாயாவின் அழு குரல் கேட்டது. காவலாளிகளை எழுப்பியது. ஓஹோ தேவகிக்கு குழந்தை பிறந்து அழுகிறதே, உடனே ராஜா கம்ஸனிடம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தலை தப்பாது. காவலாளிகள் கம்ஸனைத் தேடி ஓடினார்கள். கம்ஸன் அவசரமாக ஓடிவந்தான் சிறைச் சாலைக்கு. ஆஹா, என்னைக் கொல்லப் பிறந்தவன் ரெடி. நம் கையால் கொல்லப் படப்போகிறான் என்று வாளோடு வந்தவன் தன் சகோதரி தேவகியின் கையில் பெண்குழந்தையைப் பார்த்தான். ,

ध्रुवं कपटशालिनो मधुहरस्य माया भवे-
दसाविति किशोरिकां भगिनिकाकरालिङ्गिताम् ।
द्विपो नलिनिकान्तरादिव मृणालिकामाक्षिप-
न्नयं त्वदनुजामजामुपलपट्टके पिष्टवान् ॥४॥

dhruvaM kapaTa shaalinO madhuharasya maayaa bhavedasaaviti
kishOrikaaM bhaginikaakaraalingitaam |
dvipO nalinikaantaraadiva mR^iNaalikaamaakshipa
nnayaM tvadanujaamajaamupalapaTTake piShTavaan ||4

த்⁴ருவம் கபடஶாலினோ மது⁴ஹரஸ்ய மாயா ப⁴வே-
த³ஸாவிதி கிஶோரிகாம் ப⁴கி³னிகாகராலிங்கி³தாம் |
த்³விபோ நலினிகாந்தராதி³வ ம்ருணாலிகாமாக்ஷிப-
ந்னயம் த்வத³னுஜாமஜாமுபலபட்டகே பிஷ்டவான் || 39-4 ||

மஹா விஷ்ணுவை நம்பக்கூடாது. கபட நாடகன் அவன். ஏதோ தந்திரம் நடந்திருக்கிறது. விடக் கூடாது இந்த குழந்தையை. வெடுக்கென்று தேவகியின் கையில் இருந்த பெண் குழந்தையைப் பிடுங்கினான் கம்ஸன். குளத்தில் கண்ணில் பட்ட தாமரைப் பூவை பெரிய யானை தனது தும்பிக்கையால் சுற்றி பறிப்பதைப் போல் இருந்தது அவன் செய்கை. அதே வேகத்தில் அந்த பெண் குழந்தையை அருகே இருந்த கல்லின் மேல் பலத்தோடு தூக்கி வீசினான். யோக மாயா பிறப்பு இறப்பு இல்லாதவள் என்று அவன் எப்படி அறிவான்?

तत: भवदुपासको झटिति मृत्युपाशादिव
प्रमुच्य तरसैव सा समधिरूढरूपान्तरा ।
अधस्तलमजग्मुषी विकसदष्टबाहुस्फुर-
न्महायुधमहो गता किल विहायसा दिद्युते ॥५॥

tatO bhavadupaasakO jhaTiti mR^ityupaashaadiva
pramuchya tarasaiva saa samadhiruuDharuupaantaraa |
adhastalamajagmuShii vikasadaShTabaahusphura
nmahaayudhamahO gataa kila vihaayasaa didyute || 5

ததோ ப⁴வது³பாஸகோ ஜ²டிதி ம்ருத்யுபாஶாதி³வ
ப்ரமுச்ய தரஸைவ ஸா ஸமதி⁴ரூட⁴ரூபாந்தரா |
அத⁴ஸ்தலமஜக்³முஷீ விகஸத³ஷ்டபா³ஹுஸ்பு²ர-
ந்மஹாயுத⁴மஹோ க³தா கில விஹாயஸா தி³த்³யுதே || 39-5 ||

அவளை மேலே தூக்கி வீசும்போதே கம்ஸனின் கைகளிலிருந்து நைஸாக வழுக்கி வெளியேறி னால் யோகமாயா. குருவாயூரப்பா, உன் பக்தன் எப்படி யமனின் பாசக் கயிற்றிலிருந்து தப்பிப் பானோ அப்படி இருந்தது அவள் செயல். யோகமாயா கம்ஸனின் கரங்களிலிருந்து விலகியதும் வேறு உருவம் கொண்டாள் . ஆகாயத்தில் தெரிந்தாள் . அவளது அஷ்ட புஜங்களிலும் விதவிதமான ஆயுதங்கள் பளபளவென்று மின்னின.

नृशंसतर कंस ते किमु मया विनिष्पिष्टया
बभूव भवदन्तक: क्वचन चिन्त्यतां ते हितम् ।
इति त्वदनुजा विभो खलमुदीर्य तं जग्मुषी
मरुद्गणपणायिता भुवि च मन्दिराण्येयुषी ॥६॥

nR^ishamsatara kamsa te kimu mayaa viniShpiShTayaa
babhuuva bhavadantakaH kvachana chintyataaM te hitam |
iti tvadanujaa vibhO khalamudiirya taM jagmuShii
marudgaNapaNaayitaa bhuvi cha mandiraaNyeyuShii || 6

ந்ருஶம்ஸதர கம்ஸ தே கிமு மயா வினிஷ்பிஷ்டயா
ப³பூ⁴வ ப⁴வத³ந்தக꞉ க்வசன சிந்த்யதாம் தே ஹிதம் |
இதி த்வத³னுஜா விபோ⁴ க²லமுதீ³ர்ய தம் ஜக்³முஷீ
மருத்³க³ணபணாயிதா பு⁴வி ச மந்தி³ராண்யேயுஷீ || 39-6 ||

கிருஷ்ணா, உன் அருமைச் சகோதரி யோக மாயா அப்போது கம்ஸனிடம் என்ன சொன்னாள் நினைவிருக்கிறதா உனக்கு? சொல்கிறேன் கேள். ''அடே, கொடியவனே , கம்ஸா, என்னைக் கொல்வதால் உனக்கு என்னடா பிரயோஜனம்? உன்னுடைய எமன் ஏற்கனவே எங்கோ பிறந்தாயிற்று. உன் ஆயுசை, நாட்களை, இனி எண்ணிக்கொள். கவலைப்படு ''. யோகமாயா மறைந்தாள். விண்ணில் தேவர்கள் மகிழ்ந்தார்கள். உன்னையும் அவளையும் போற்றினார்கள். பல கோவில்களில் அவள் தெய்வமாக குடிகொண்டு வணங்கப்படுகிறாள்.

प्रगे पुनरगात्मजावचनमीरिता भूभुजा
प्रलम्बबकपूतनाप्रमुखदानवा मानिन: ।
भवन्निधनकाम्यया जगति बभ्रमुर्निर्भया:
कुमारकविमारका: किमिव दुष्करं निष्कृपै: ॥७॥

pragepunaragaatmajaavachanamiiritaa bhuubhujaa
pralamba baka puutanaa pramukha daanavaa maaninaH |
bhavannidhanakaamyayaa jagati babhramurnirbhayaaH
kumaaraka vimaarakaaH kimiva duShkaraM niShkR^ipaiH || 7

ப்ரகே³ புனரகா³த்மஜாவசனமீரிதா பூ⁴பு⁴ஜா
ப்ரலம்ப³ப³கபூதனாப்ரமுக²தா³னவா மானின꞉ |
ப⁴வன்னித⁴னகாம்யயா ஜக³தி ப³ப்⁴ரமுர்னிர்ப⁴யா꞉
குமாரகவிமாரகா꞉ கிமிவ து³ஷ்கரம் நிஷ்க்ருபை꞉ || 39-7 ||

கம்ஸனுக்கு நடந்த அனுபவம் மறுநாள் காலை அவனது அரண்மனையில் அவனோடு கூடி இருக்கும் ராக்ஷஸர்களுக்கு தெரிந்தது. மமதையும் கர்வமும் ஆணவமும் கொண்ட ப்ரலம்ப, பகன் , பூதனா , கம்ஸனுக்கு யோகமாயா எச்சரிக்கை விடுத்ததை பற்றி விவாதித்தார்கள். கிருஷ்ணா, கம்ஸனுக்கு இனி அடுத்த வேலை, உன்னைத் தேடி கண்டுபிடித்து கொல்வது ஒன்று தான். எல்லா இடங்களுக்கும் ஆட்கள் தேட புறப்பட்டார்கள். எதற்கு வம்பு, எல்லா குழந்தைகளையும் கொன்றுவிட்டால் எதனால் தனக்கு தீங்கு விளையும்? அராஜகமும் அக்ரமமும், அதிகார பலமும் கொண்ட அரக்கர்கள் என்ன வேண்டுமானாலும் இரக்கமின்றி செய்வார்கள் அல்லவா?

तत: पशुपमन्दिरे त्वयि मुकुन्द नन्दप्रिया-
प्रसूतिशयनेशये रुदति किञ्चिदञ्चत्पदे ।
विबुध्य वनिताजनैस्तनयसम्भवे घोषिते
मुदा किमु वदाम्यहो सकलमाकुलं गोकुलम् ॥८॥

tataH pashupamandire tvayi mukunda nandapriyaaprasuuti
shayane shaye rudati ki~nchida~nchatpade |
vibudhya vanitaajanai stanayasambhave ghOShite
mudaa kimu vadaamyahO sakalamaakulaM gOkulam || 8

தத꞉ பஶுபமந்தி³ரே த்வயி முகுந்த³ நந்த³ப்ரியா-
ப்ரஸூதிஶயனேஶயே ருத³தி கிஞ்சித³ஞ்சத்பதே³ |
விபு³த்⁴ய வனிதாஜனைஸ்தனயஸம்ப⁴வே கோ⁴ஷிதே
முதா³ கிமு வதா³ம்யஹோ ஸகலமாகுலம் கோ³குலம் || 39-8 ||

என்னப்பனே , பிரபு , முகுந்தா, யசோதையின் அருகே படுத்திருந்த நீ , கை கால்களை உதைத்துக் கொண்டு விசும்பினாய். இதனால் அருகில் உறங்கிக்கொண்டிருந்த யசோதை விழித்துக் கொண்டால், மற்ற சேடியர்கள், தோழிகள் யாவரும் விழித்துக்கொண்டார்கள், நந்தகோப மகாராஜா வுக்கு பிள்ளைக் குழந்தை பிறந்ததாக எல்லோருக்கும் செய்தி போய்விட்டது. கோகுலம் முழுதுமே சில வினாடிகளில் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தது. எங்குமே ஆனந்தம்.

अहो खलु यशोदया नवकलायचेतोहरं
भवन्तमलमन्तिके प्रथममापिबन्त्या दृशा ।
पुन: स्तनभरं निजं सपदि पाययन्त्या मुदा
मनोहरतनुस्पृशा जगति पुण्यवन्तो जिता: ॥९॥

ahO khalu yashOdayaa navakalaaya chetOharaM
bhavantamalamantike prathamamaapibantyaa dR^ishaa |
punaH stanabharaM nijaM sapadi paayayantyaa mudaa
manOharatanuspR^ishaa jagati puNyavantO jitaaH || 9

அஹோ க²லு யஶோத³யா நவகலாயசேதோஹரம்
ப⁴வந்தமலமந்திகே ப்ரத²மமாபிப³ந்த்யா த்³ருஶா |
புன꞉ ஸ்தனப⁴ரம் நிஜம் ஸபதி³ பாயயந்த்யா முதா³
மனோஹரதனுஸ்ப்ருஶா ஜக³தி புண்யவந்தோ ஜிதா꞉ || 39-9 ||

குருவயூரப்பா, இந்த யசோதை என்ன தவம் செய்தனள்? மூவுலகிலும் யாருக்கும் கிட்டாத பாக்ய சாலி. உன்னை ஆசையோடு விழிகள் விரிந்து பார்க்கிறாள். ஆஹா எத்தனை அழகு இந்த சிங்கக்குட்டி. நீலத்தாமரை. அவள் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாக ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தாள் . உன் கண்கள் சொல்லும் காவியத்தை பருகினாள். உனக்கு பாலூட்டிக்கொண்டே உன் உடம்பெல்லாம் மலரை தொடுவதுபோல் மெதுவாக தடவினாள். அந்த ம்ருதுவில் உள்ளம் கொள்ளைபோயிற்று.

भवत्कुशलकाम्यया स खलु नन्दगोपस्तदा
प्रमोदभरसङ्कुलो द्विजकुलाय किन्नाददात् ।
तथैव पशुपालका: किमु न मङ्गलं तेनिरे
जगत्त्रितयमङ्गल त्वमिह पाहि मामामयात् ॥१०॥

bhavatkushala kaamyayaa sa khalu nandagOpastadaa
pramOdabharasankulO dvijakulaaya kinnaadadaat |
tathaiva pashupaalakaaH kimu na mangalaM tenire
jagat tritayamangala tvamiha paahi maamaamayaat ||10

ப⁴வத்குஶலகாம்யயா ஸ க²லு நந்த³கோ³பஸ்ததா³
ப்ரமோத³ப⁴ரஸங்குலோ த்³விஜகுலாய கிம் நாத³தா³த் |
ததை²வ பஶுபாலகா꞉ கிமு ந மங்க³லம் தேனிரே
ஜக³த்ரிதயமங்க³ல த்வமிஹ பாஹி மாமாமயாத் || 39-10 ||

அப்பாவாகிவிட்ட நந்தகோபன் ஓடிவந்தான். கால்கள் தரையில் பாவவில்லை. ஆனந்தக்கடலில் நீந்தினான். வாரி வாரி தனம் , தானியங்கள், வஸ்திரங்கள் எல்லாம் அனைவருக்கும் வழங்கி னான். போதும் போதும் என்று கதறும் வரை அனைவர் கைகளிலும் திணித்தான். பிராமணர்கள் திருப்தியாக மந்திரங்கள் ஓதி வாழ்த்தினார்கள். யாதவர்கள் கோலாகலமாக கோகுலம் எங்கும் மட்டற்ற மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். எண்டே குருவாயூரப்பா, மூவுலகையும் ரக்ஷித்து, நன்மை புரிபவனே , என் வியாதியை குணப்படுத்தி என்னையும் காக்கவேண்டுமப்பா.