80 ஸ்யாமந்தக மணியின் பிரயாணம்
பண்டம் ஒரு இடம். பழி மற்றொரு இடம் என்பது மானிட வாழ்க்கையில் நாம் அறிந்த ஒரு விஷயம். இதனால் மனம் உடைந்து வாடியவர்கள் பல கோடி. இந்த துயரம் பகவானுக்கும் அவன் மனிதனாக பிறந்து இந்த பூமியில் வாழ்ந்தபோது வந்தது தான் ஆச்சர்யம். ஆம், கிருஷ்ணன் ஸ்யாமந்தக மணியால் பட்ட அனுபவம், அதை தொடர்ந்து அவனது ரெண்டு கல்யாணங்கள், ஆகியவற்றை இந்த தசகம் சொல்கிறது.
सत्राजितस्त्वमथ लुब्धवदर्कलब्धं
दिव्यं स्यमन्तकमणिं भगवन्नयाची: ।
तत्कारणं बहुविधं मम भाति नूनं
तस्यात्मजां त्वयि रतां छलतो विवोढुम् ॥१॥
satraajitastvamatha lubdhavadarkalabdhaM
divyaM syamantakamaNiM bhagavannayaachiiH |
tatkaaraNaM bahuvidhaM mama bhaati nuunaM
tasyaatmajaaM tvayi rataaM ChalatO vivODhum || 1
ஸத்ராஜிதஸ்த்வமத² லுப்³த⁴வத³ர்கலப்³த⁴ம்
தி³வ்யம் ஸ்யமந்தகமணிம் ப⁴க³வன்னயாசீ꞉ |
தத்காரணம் ப³ஹுவித⁴ம் மம பா⁴தி நூனம்
தஸ்யாத்மஜாம் த்வயி ரதாம் ச²லதோ விவோடு⁴ம் || 80-1 ||
என் தெய்வமே, கிருஷ்ணா உனக்கு மறந்து போயிருந்தால் ஞாபகப் படுத்துகிறேன் அப்பா. சூரியனிடமிருந்து சத்ரஜித் ஸ்யாமந்தகம் என்ற ஒளிவீசும் மணியைப் பெற்றிருந்தான். அதால் அவனுக்கு ஆபத்து வரும் என்ற நல்லெண்ணத்தில், ''அதை என்னிடம் கொடுத்து வை. வேண்டும்போது வாங்கிக் கொள் '' என்றாய் . சத்ராஜித் என்ன நினைத்தான்? ஓஹோ இது பெருமைகளை, செல்வங்களை தரும் விசேஷ சக்தி வாய்ந்த அழகிய மணி. இதை கிருஷ்ணன் என்னிடமிருந்து அபகரிக்க, கவர்ந்து கொள்ள, இந்த திட்டம் போடுகிறான் என்று நினைத்து, ''நன்றி, இதை நானே வைத்துக் கொள்கிறேன். வேறு யாரிடமும் தர உத்தேசமில்லை'' என்று சொல்லிவிட்டான். நீயும் மேற்கொண்டு அவனை வற்புறுத்தவில்லை.
நான் என்ன நினைக்கிறேன்? நீ அழகான அவன் பெண் சத்யபாமாவை கல்யாணம் பண்ணிக் கொள்ள திட்டம் போட்டு தான் சத்ரஜித்தை அணுகினாய் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த பெண் சத்யபாமாவும் உன் மேல் அளவிலாக் காதல் கொண்டவள் அல்லவா?
अदत्तं तं तुभ्यं मणिवरमनेनाल्पमनसा
प्रसेनस्तद्भ्राता गलभुवि वहन् प्राप मृगयाम् ।
अहन्नेनं सिंहो मणिमहसि मांसभ्रमवशात्
कपीन्द्रस्तं हत्वा मणिमपि च बालाय ददिवान् ॥२॥
adattaM taM tubhyaM maNivaraM anenaalpamanasaa
prasenastad bhraataa galabhuvi vahan praapamR^igayaam |
ahannenaM sinhO maNimahasi maamsabhramavashaat
kapiindrastaM hatvaa maNimapi cha baalaaya dadivaan || 2
அத³த்தம் தம் துப்⁴யம் மணிவரமனேனால்பமனஸா
ப்ரஸேனஸ்தத்³ப்⁴ராதா க³லபு⁴வி வஹன்ப்ராப ம்ருக³யாம் |
அஹன்னேனம் ஸிம்ஹோ மணிமஹஸி மாம்ஸப்⁴ரமவஶாத்
கபீந்த்³ரஸ்தம் ஹத்வா மணிமபி ச பா³லாய த³தி³வான் || 80-2 ||
இதற்கிடையில் சில நாட்களுக்கு பிறகு ஒரு சம்பவம் நடந்தது. சத்ரஜித்தின் சகோதரன் ப்ரஸேனன் ஒருநாள் காட்டுக்கு வேட்டையாட போனவன் சத்ரஜித்தின் ஸ்யாமந்தக மணியை தலையில் அணிந்து சென்றான். அவன் திரும்பிவரவில்லை. காட்டில் ஒரு சிங்கம் பசியாக இருந்தபோது ப்ரஸேனன் கண்ணில் போட்டுவிட்டான். ஆஹா இதென்ன பளபளவென்று அவன் தலையில் அதை உண்ணலாமே என்று ஸ்யாமந்தக மணியை ஒரு இறைச்சி துண்டாக சிங்கம் நினைத்தது. இப்படி ஒரு காலை உணவை யாராவது கோட்டை விடுவார்களா என்று சந்தோஷமாக ப்ரஸேனனை அடித்து கொன்று தின்று விட்டது. அதன் குகையில் ஸ்யாமந்தகமணி ஒளிவீசியவாறு கிடந்தது. ஒருநாள் அந்த காட்டரசன் ஜாம்பவான் அந்த சிங்கக்குகையில் ஒளிவீசும் ஸ்யாமந்தக மணியை பார்த்து விட்டான். ஜாம்பவான் மிகச்சிறந்த வீரன். பலவான். ராமர் காலத்தவன். அவனை சிங்கத்தால் எதிர்த்து கொல்ல முடியாமல் அவன் கையால் மரணமடைந்தது. அந்த குகையில் ஜாம்பவான் தனது குடும்பத்தோடு வசித்தான். அதை அவன் பிள்ளைக்கு விளையாட கொடுத்துவிட்டான்.
शशंसु: सत्राजिद्गिरमनु जनास्त्वां मणिहरं
जनानां पीयूषं भवति गुणिनां दोषकणिका ।
तत: सर्वज्ञोऽपि स्वजनसहितो मार्गणपर:
प्रसेनं तं दृष्ट्वा हरिमपि गतोऽभू: कपिगुहाम् ॥३॥
shashamsuH satraajidgiramanu janaastvaaM maNiharaM
janaanaaM piiyuuShaM bhavati guNinaaM dOShakaNikaa |
tataH sarvaj~nO(a)pi svajanasahitO maargaNaparaH
prasenaM taM dR^iShTvaa harimapi gatO(a)bhuuH kapiguhaam || 3
ஶஶம்ஸு꞉ ஸத்ராஜித்³கி³ரமனு ஜனாஸ்த்வாம் மணிஹரம்
ஜனானாம் பீயூஷம் ப⁴வதி கு³ணினாம் தோ³ஷகணிகா |
தத꞉ ஸர்வஜ்ஞோ(அ)பி ஸ்வஜனஸஹிதோ மார்க³ணபர꞉
ப்ரஸேனம் தம் த்³ருஷ்ட்வா ஹரிமபி க³தோ(அ)பூ⁴꞉ கபிகு³ஹாம் || 80-3 ||
சத்ராஜித்துக்கு அதிர்ச்சி. ப்ரஸேனன் வேட்டையாட சென்றவன் எங்கே மறைந்தான்? யாராவது கொன்றுவிட்டார்களா? உடலையே கூட காணோமே. பல பல சந்தேகங்கள் மனதில் தோன்றியது. ஊரில் வம்பு பேசினார்கள், சிலர் ஒன்றும் ஒன்றும் மூன்று என கணக்குபோட்டார்கள். ''ஓஹோ இது கிருஷ்ணனின் சூழ்ச்சி. அவன் தான் என் சகோதரன் ப்ரஸேனனைக் கொன்றிருக்கவேண்டும். அதற்கு காரணம் அந்த ஸ்யாமந்தக மணி தான். என்னிடம் நைசாக கேட்டான். நான் கொடுக்க வில்லை. ப்ரஸேனன் அதை அணிந்து காட்டுக்கு சென்றபோது நல்ல சந்தர்ப்பமாக அதை பயன் படுத்திக் கொண்டு ப்ரஸேனனைக் கொன்று, ஸ்யாமந்தகத்தை திருடி வைத்துக் கொண்டான் என்று நம்பினான்.
சிலருக்கு பிறர் மேல் அபாண்டமாக பழி சுமத்துவது பிடிக்கும், அப்படிப்பட்டவர்களின் ஒருவன் சத்ரஜித். சத்யபாமா, தன்னை நம்பவேண்டுமென்றால் முதலில் ஸ்யாமந்தகமணியைத் தேடிக் கண்டு பிடிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம், கிருஷ்ணா, உனக்கு ஏற்பட்டது.
எல்லாமே அறிந்த நீ சாதாரண பாமரனாக உன்னைக் காட்டிக்கொண்டாய். ப்ரஸேனன் சென்ற காட்டுக்குள் நுழைந்தாய். அங்கே அவனைத் தேடினாய். எங்கும் அவன் கிடைக்கவில்லை, அவனைப் பற்றி ஒரு தடயமும் இல்லை. ஜாம்பவான் குகை கண்ணில் பட்டது. அதற்குள் யார் இருக்கிறார்கள் என்று சென்று பார்ப்போம் என நெருங்கும்போது தான் அந்த குகை வாயில் அருகே ஒரு சிங்கத்தின் உடலும், ப்ரஸேனன் ஆடையில் ஒரு பகுதியும் கிடைத்ததால் உள்ளே சென்ற உன் கண்ணில் குகையில் ஒளி வீசி ஒரு மூலையில் கிடக்கும் ஸ்யாமந்தக மணி தென்பட்டது. அதை எடுக்க நீ நெருங்கியபோது காத்திருந்த ஜாம்பவான் உன்னைத் தாக்கினான். சிறந்த ராம பக்தன் அவன். ஸ்ரீ ராம ராமா என்று உன் முந்தைய அவதாரத்தை ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டே உன்னோடு பல நாட்கள் இரவும் பகலுமாக யுத்தம் புரிந்தான். ஜாம்பவான் கடைசியில் நீ யார் என அறிந்து மகிழ்கிறான். உன்னைச் சரணடைகிறான் .
भवन्तमवितर्कयन्नतिवया: स्वयं जाम्बवान्
मुकुन्दशरणं हि मां क इह रोद्धुमित्यालपन् ।
विभो रघुपते हरे जय जयेत्यलं मुष्टिभि-
श्चिरं तव समर्चनं व्यधित भक्तचूडामणि: ॥४॥
bhavantaM avitarkayan ativayaaH svayaM jaambavaan
mukunda sharaNaM hi maaM ka iha rOddhumityaalapan |
vibhO raghupate hare jaya jayetyalaM muShTibhiH
chiramstava samarchanaM vyadhita bhakta chuuDaamaNiH ||4
ப⁴வந்தமவிதர்கயன்னதிவயா꞉ ஸ்வயம் ஜாம்ப³வான்
முகுந்த³ஶரணம் ஹி மாம் க இஹ ரோத்³து⁴மித்யாலபன் |
விபோ⁴ ரகு⁴பதே ஹரே ஜய ஜயேத்யலம் முஷ்டிபி⁴-
ஶ்சிரம் தவ ஸமர்சனம் வ்யதி⁴த ப⁴க்தசூடா³மணி꞉ || 80-4 ||
உனக்கு மட்டற்ற மகிழ்ச்சி, இன்னும் ஜாம்பவான் பழைய பலத்தோடும் பக்தியோடும் தான் இருக்கிறான் என்று. ஜாம்பவான் அளவற்ற பக்தியோடு உன்னை வணங்கி உனக்கு தன்னிடமிருந்த ஸ்யாமந்தக மணியையும் தனது மகள் ஜாம்பவதியையும் பரிசாக கொடுக்கிறான். ஜாம்பவதி கிருஷ்ணன் மனைவியான சரித்திரம் இது.
(இங்கு ஒரு சின்ன சொந்த சமாச்சாரம் சொல்ல ஆசைப்படுகிறேன். ராமன் சம்பந்தப்பட்டது. என் தாய்வழி முன்னோர் பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக ராமன் பேர் கொண்டவர்களாக, ராமனைச் சரணடைந்து அவன் புகழ் பாடி, உபன்யாசங்கள் செய்து ஜீவிதம் செய்தவர்கள், என் தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள், மஹா பெரியவா முன்னிலையில் பலமுறை ''கம்ப ராமாயணம் புராண உபன்யாசங்கள் செய்து ''புராணசாகரம்'' என்ற விருது பெற்றவர், தனது ரெண்டாவது மகளான என் தாய்க்கு வைத்த பெயர் ஜம்பாவதி. ராமாயணத்தில் ராமர் பக்தன் ஜாம்பவானை மறக்காமல் இந்த பெயரிட்டிருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. என் தாய் ஜம்பாவதிக்கும் ஒரு கிருஷ்ணன் கணவனானது தான் ஆச்சர்யம் . என் தந்தையார் பெயர் கிருஷ்ணய்யர். பள்ளிக்கு செல்லாமலேயே பல ராமாயண பாடல்களை, அருணாசல கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளைப் படுவாள், கவிராயரின் கீர்த்தனைகளை போலவே அவள் குரலும் 90களில் கூட இனிமையாக இருந்தது )
बुध्वाऽथ तेन दत्तां नवरमणीं वरमणिं च परिगृह्णन् ।
अनुगृह्णन्नमुमागा: सपदि च सत्राजिते मणिं प्रादा: ॥५॥
buddhavaa(a)tha tena dattaaM navaramaNiiM varamaNiM cha parigR^ihNan |
anugR^ihNannamumaagaaH sapadi cha satraajite maNiM praadaaH || 5
பு³த்³த்⁴வாத² தேன த³த்தாம் நவரமணீம் வரமணிம் ச பரிக்³ருஹ்ணன் |
அனுக்³ருஹ்ணன்னமுமாகா³꞉ ஸபதி³ ச ஸத்ராஜிதே மணிம் ப்ராதா³꞉ || 80-5 ||
ஜாம்பவதியுடனும் ஸ்யாமந்தகமணியோடும் கிருஷ்ணா, நீ துவாரகை திரும்பியதும் செய்த முதல் வேலை ஸ்யமந்தகமணியை சத்ராஜித்திடம் ஜாக்கிரதையாக கொண்டு சேர்த்தது தான். விஷயங்கள் அறிந்த சத்ரஜித் தனது அவசர புத்திக்காக, அபாண்டமான பழிக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். அவனது பெண் சத்யபாமாவை உனக்கு திருமணம் செய்துவைத்தான். ஸ்யாமந்தக மணியை அவனிடமே விட்டு வைத்தாய்.
तदनु स खलु ब्रीलालोलो विलोलविलोचनां
दुहितरमहो धीमान् भामां गिरैव परार्पिताम् ।
अदित मणिना तुभ्यं लभ्यं समेत्य भवानपि
प्रमुदितमनास्तस्यैवादान्मणिं गहनाशय: ॥६॥
tadanu sa khalu vriilaalOlO vilOla vilOchanaaM
duhitaramahO dhiimaan bhaamaaM giraivaparaarpitaam |
adita maNinaa tubhyaM labhyaM sametya bhavaanapi
pramudita manaastasyaivaadaanmaNiM gahanaashayaH || 6
தத³னு ஸ க²லு வ்ரீடா³லோலோ விலோலவிலோசனாம்
து³ஹிதரமஹோ தீ⁴மான்பா⁴மாம் கி³ரைவ பரார்பிதாம் |
அதி³தமணினா துப்⁴யம் லப்⁴யம் ஸமேத்ய ப⁴வானபி
ப்ரமுதி³தமனாஸ்தஸ்யைவாதா³ன்மணிம் க³ஹனாஶய꞉ || 80-6 ||
கிருஷ்ணா, சத்யபாமா உன் வீரத்தை மெச்சினாள் . தந்தை செய்த தவறு அவளை மேலும் உன் மேல் அதிக அன்பை செலுத்த உதவியது. சத்ரஜித் உன்னிடம் ஸ்யாமந்தக மணியைப் பரிசாக அளித்தும் அதை நீ அவனிடமே விட்டுவைத்தது உன் சுயநலமற்ற தன்மையை பெரிதாக்கி வெளிப்படுத்தியது.
व्रीलाकुलां रमयति त्वयि सत्यभामां
कौन्तेयदाहकथयाथ कुरून् प्रयाते ।
ही गान्दिनेयकृतवर्मगिरा निपात्य
सत्राजितं शतधनुर्मणिमाजहार ॥७॥
vriilaakulaam ramayati tvayi satyabhaamaaM
kaunteya daaha kathayaa(a)thakuruun prayaate |
hii gaandineya kR^itavarma giraanipaatya
satraajitaM shatadhanuH maNimaajahaara || 7
வ்ரீலாகுலாம் ரமயதி த்வயி ஸத்யபா⁴மாம்
கௌந்தேயதா³ஹகத²யாத² குரூன்ப்ரயாதே |
ஹீ கா³ந்தி³னேயக்ருதவர்மகி³ரா நிபாத்ய
ஸத்ராஜிதம் ஶதத⁴னுர்மணிமாஜஹார || 80-7 ||
வாழ்க்கை இவ்வாறு சந்தோஷமாக உனக்கு சத்யபாமாவோடு கழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் உன் நண்பர்கள் பாண்டவர்கள் பற்றிய சேதி உன் காதுகளுக்கு எட்டியது. எங்கோ ஒரு உல்லாச வனத்துக்கு அவர்கள் தாய் குந்தியோடு சென்றபோது அவர்கள் தங்கிய மாளிகை அரக்கினால் தயாராகி ஒரு இரவு தீக்கிரையாகி அனைவரும் முடிந்ததாக அந்த சேதி சொல்லியது. அவர்கள் இருந்த ஹஸ்தினாபுரத்திற்கு நீ நேரில் சென்றாய். மற்றொரு துயர செயதியும் அதோடு கூடவே உன் செவிகளை எட்டியது. அக்ரூரர் க்ரிதவர்மா ஆகியோர் சதி செய்து அதனால் சததன்வா என்பவன் ஸ்யாமந்தக மணியைக் கவர்வதற்கு சத்ரஜித்தை கொன்றுவிட்டான் என்பது தான் அந்த அதிர்ச்சி தந்த செய்தி.
शोकात् कुरूनुपगतामवलोक्य कान्तां
हत्वा द्रुतं शतधनुं समहर्षयस्ताम् ।
रत्ने सशङ्क इव मैथिलगेहमेत्य
रामो गदां समशिशिक्षत धार्तराष्ट्रम् ॥८॥
shOkaat kuruunupagataaM avalOkya kaantaaM
hatvaa drutaM shatadhanuM samaharShayastaam |
ratne shashanka iva maithila gehametya
raamO gadaaM samashishikshata dhaartaraaShTram || 8
ஶோகாத்குரூனுபக³தாமவலோக்ய காந்தாம்
ஹத்வா த்³ருதம் ஶதத⁴னும் ஸமஹர்ஷயஸ்தாம் |
ரத்னே ஸஶங்க இவ மைதி²லகே³ஹமேத்ய
ராமோ க³தா³ம் ஸமஶிஶிக்ஷத தா⁴ர்தராஷ்ட்ரம் || 80-8 ||
தந்தை கொல்லப்பட்ட கொடூரசெய்தியைத் தாங்கியவாறு சத்யபாமா ஹஸ்தினாபுரத்துக்கு உன்னைத் தேடி ஓடி வந்தாள். நீ உடனே சததன்வாவைத் தேடி சென்று அவனை கொன்று பழி தீர்த்தாய். தந்தையைக் கொன்றவனை பழிதீர்த்ததில் சத்யபாமா ஒருவாறு மனச் சமாதானம் அடைந்தாள். ஸ்யாமந்தமணி என்னவாயிற்று? என்று பலராமனும் கவலை கொண்டவனாக மிதிலை ராஜ்யத்தின் தலைநகருக்குச் சென்றான். துரியோதனனுக்கு இந்த கால கட்டத்தில் தான் பலராமன் கதாயுத பயிற்சி தந்தான்.
अक्रूर एष भगवन् भवदिच्छयैव
सत्राजित: कुचरितस्य युयोज हिंसाम् ।
अक्रूरतो मणिमनाहृतवान् पुनस्त्वं
तस्यैव भूतिमुपधातुमिति ब्रुवन्ति ॥९॥
akruura eSha bhagavan bhavadichChayaiva
satraajitaH kucharitasya yuyOja himsaam |
akruuratO maNimanaahR^itavaan punastvaM
tasyaiva bhuutimupadhaatumiti bruvanti || 9
அக்ரூர ஏஷ ப⁴க³வன் ப⁴வதி³ச்ச²யைவ
ஸத்ராஜித꞉ குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம் |
அக்ரூரதோ மணிமனாஹ்ருதவான்புனஸ்த்வம்
தஸ்யைவ பூ⁴திமுபதா⁴துமிதி ப்³ருவந்தி || 80-9 ||
கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணா உன் மேல் இருந்த சந்தேகம் வேறு ரூபத்தில் வெளி வந்தது. நீதான் அக்ரூரரோடு திட்டம் தீட்டி அவர் சததன்வாவை அனுப்பி சத்ரஜித் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி. அக்ரூரர் உனது பக்தர். ஆகவே தான் ஸ்யாமந்தகமணி சத தன்வா மூலம் அவரை அடைந்தது என்று கேள்விப்பட்டு அதை நீ அக்ரூரரிடமிருந்து கைப்பற்றவில்லை. அக்ரூரரின் செல்வம் மேலும் பெருகட்டும் என்பதற்காக அந்த விசேஷ சக்தி கொண்ட மணியை நீ திரும்ப பெறாமல் அவரிடமே விட்டிருந்ததாக ஒரு எண்ணம் பரவியது.
भक्तस्त्वयि स्थिरतर: स हि गान्दिनेय-
स्तस्यैव कापथमति: कथमीश जाता ।
विज्ञानवान् प्रशमवानहमित्युदीर्णं
गर्वं ध्रुवं शमयितुं भवता कृतैव ॥१०॥
bhaktastvayi sthirataraH sa hi gaandineyaH
tasyaiva kaapathamatiH kathamiisha jaataa |
vij~naanavaan prashamavaanahamityudiirNaM
garvaM dhruvaM shamayituM bhavataa kR^itaiva || 10
ப⁴க்தஸ்த்வயி ஸ்தி²ரதர꞉ ஸ ஹி கா³ந்தி³னேய-
ஸ்தஸ்யைவ காபத²மதி꞉ கத²மீஶ ஜாதா |
விஜ்ஞானவான்ப்ரஶமவானஹமித்யுதீ³ர்ணம்
க³ர்வம் த்⁴ருவம் ஶமயிதும் ப⁴வதா க்ருதைவ || 80-10 ||
தெய்வமே, அக்ரூரர் உன்னுடைய சிறந்த பக்தர். அன்பானவர். அவர் மனதில் இப்படி ஒரு தீய எண்ணமா? அக்ரூரருக்கு எப்போதுமே தனது ஆன்ம சக்தியில் மனோ திடத்தில், தவ வலிமையில் ஞானத்தில் பெருமையும் கர்வமும் உண்டு என்பதால் அதை சிதைக்க இப்படி ஒரு நாடகமா? அதை அரங்கேற்றியவன் நீயா?
यातं भयेन कृतवर्मयुतं पुनस्त-
माहूय तद्विनिहितं च मणिं प्रकाश्य ।
तत्रैव सुव्रतधरे विनिधाय तुष्यन्
भामाकुचान्तशयन: पवनेश पाया: ॥११॥
yaataM bhayena kR^itavarmayutaM punastaM
aahuuya tadvinihitaM cha maNiM prakaashya |
tatraiva suvratadhare vinidhaaya tuShyan
bhaamaakuchaantashayanaH pavanesha paayaaH ||11
யாதம் ப⁴யேன க்ருதவர்மயுதம் புனஸ்த-
மாஹூய தத்³வினிஹிதம் ச மணிம் ப்ரகாஶ்ய |
தத்ரைவ ஸுவ்ரதத⁴ரே வினிதா⁴ய துஷ்யன்
பா⁴மாகுசாந்தரஶய꞉ பவனேஶ பாயா꞉ || 80-11 ||
உன்னை நெருங்கவே தயங்கி மறைந்து ஒளிந்தாரோ அக்ரூரர்? ஏன் நீ அழைத்தும் உன்னை காண தயக்கம்? க்ருதவர்மாவை அழைத்து விசாரித்தாய், ஸ்யாமந்தக மணி அக்ரூரரிடம் இருப்பதை ஊர்ஜிதப்படுத்தினாய். சததன்வா அதை அவரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரிந்தது.
அக்ரூரர் நேர்மையானவர், உலக இயலில் நாட்டமற்றவர் என்பதால் அவரிடம் அதை சததன்வா கொடுத்து வைத்தானோ? எண்டே குருவாயூராப்பா, நீ விருப்பப்பட்டிருந்தால் ஸ்யாமந்தக மணி உன்னிடம் சேராமல் இருக்குமா? உனக்கு அதனால் பெறவேண்டியது எதுவுமில்லையே, குருவாயூரா, எனக்கு தான் உன் கருணை வேண்டும், என் நோய் தீர்த்து என்னையும் அமைதியாக வாழ நீ அருள் புரியவேண்டும்.