Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 97
97. வட பத்ர ஸாயீ ....

இயற்கையில் எல்லோரும் ஒருநாள் மரணம் எய்தவேண்டும் என்பது நியதி. தோன்றியதெல்லாம் மறையத்தானே வேண்டும். எப்போது என்பது தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். அதற்கு காரணம் காரியம் தேடாமல் இது தான் ப்ராப்தம், விதி, என்று ஏற்றுக் கொள்ளவேண்டியது தான் நேர்மை. மார்கண்டேயன், பாவம் சிறு வயதில் மரணம் எய்த வேண்டியவன் என்பது அவன் பிறக்கும் முன்பே தெரிந்திருந்தாலும் அந்த நேரம் வந்தபோது ஏற்றுக்கொள்ள மனம் ஒப்புக் கொள்ளாதே. மார்க்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றின் பிடியிலிருந்து தப்ப ஓடோடி வந்து சிவனைச் சரணடைந்து சிவலிங்கத்தைக் கட்டிக்கொள்கிறான். வேகமாக எமன் வீசிய பாசக் கயிறு வழக்கமாக குறி தப்பாது என்பதால் மார்கண்டேயனையும் அவன் இருக்கக் கட்டிக் கொண்டிருந்த சிவலிங்கத்தையும் சேர்த்து பிடித்துக் கொண்டது. அப்புறம் என்ன, சிவனின் கோபத்துக்கு ஆளான காலன் மரணமடைந்து சிவன் ''காலனுக்கு காலன்'' என்று பெயரோடு திருக்கடையூரில் கால சம்ஹார மூர்த்தியாக நிற்பதை சென்று தரிசித்திருக்கிறேன்.

இந்த தசகத்தில் நாராயண பட்டத்ரி மார்க்கண்டேயன் கிருஷ்ணனை, விஷ்ணுவை, நாராயணனை தியானித்ததால் விஷ்ணு தூதர்கள் எமதூதர்களை விரட்டி அடித்தார்கள் என்று 4வது ஸ்லோகத்தில் சொல்கிறார். எனக்கு எல்லாமே ஒன்று தான். ஹரி ஹரன் இருவரும் ஒருவரே. என் பெயர் கிருஷ்ண சிவன்.

त्रैगुण्याद्भिन्नरूपं भवति हि भुवने हीनमध्योत्तमं यत्
ज्ञानं श्रद्धा च कर्ता वसतिरपि सुखं कर्म चाहारभेदा: ।
त्वत्क्षेत्रत्वन्निषेवादि तु यदिह पुनस्त्वत्परं तत्तु सर्वं
प्राहुर्नैगुण्यनिष्ठं तदनुभजनतो मङ्क्षु सिद्धो भवेयम् ॥१॥

traiguNyaadbhinnaruupaM bhavati hi bhuvane hiina madhyOttamaM yad
j~naanaM shraddhaa cha kartaa vasatirapi cha sukhaM karma chaahaarabhedaaH |
tvatkshetra tvanniShevaadi tu yadiha punastvatparaM tattusarvaM
praahurnairguNyaniShThaM tadanubhajanatO mankshusiddhO bhaveyam || 1

த்ரைகு³ண்யாத்³பி⁴ன்னரூபம் ப⁴வதி ஹி பு⁴வனே ஹீனமத்⁴யோத்தமம் யத்-
ஜ்ஞானம் ஶ்ரத்³தா⁴ ச கர்தா வஸதிரபி ஸுக²ம் கர்ம சாஹாரபே⁴தா³꞉ |
த்வத்க்ஷேத்ரத்வன்னிஷேவாதி³ து யதி³ஹ புனஸ்த்வத்பரம் தத்து ஸர்வம்
ப்ராஹுர்னைர்கு³ண்யனிஷ்ட²ம் தத³னுப⁴ஜனதோ மங்க்ஷு ஸித்³தோ⁴ ப⁴வேயம் || 97-1 ||

கிருஷ்ணா, இந்த உலகில் ஞானம் , நம்பிக்கை, கர்மம், ஸ்தலம், சந்தோஷம், ஆஹாரம் , எல்லாமே மூன்று குணங்களோடு இழைந்து பிரிக்கமுடியாததாக உள்ளது. ஆகவே, எல்லோரும்,வெவ்வேறு குணங்களை கொண்டவர்களாக, பல தரப்பட்டவர்களாக, உத்தம, ஆத்ம, நடுத்தரமானவர்களாக உள்ளார்கள். ஆனால் உன்னை சரணடைந்து வழிபட்டால், இந்த குணங்கள் அணுகாது.நான் உன்னருளால் அவற்றிலிருந்து தப்பி சுத்தமானவன் ஆவேன். ஆன்மாவில் உன்னை அறிவேன்.

त्वय्येव न्यस्तचित्त: सुखमयि विचरन् सर्वचेष्टास्त्वदर्थं
त्वद्भक्तै: सेव्यमानानपि चरितचरानाश्रयन् पुण्यदेशान् ।
दस्यौ विप्रे मृगादिष्वपि च सममतिर्मुच्यमानावमान-
स्पर्धासूयादिदोष: सततमखिलभूतेषु संपूजये त्वाम् ॥२॥

tvayyevanyastachittaH sukhamayi vicharan sarvacheShTaastvadarthaM
ttadbhaktaiH sevyamaanaanapi charitacharaanaashrayan puNyadeshaan |
dasyau vipre mR^igaadiShvapi cha samamatirmuchyamaanaavamaana
spardhaasuuyaadi dOShaH satatamakhilabhuuteShu sampuujaye tvaam || 2

த்வய்யேவ ந்யஸ்தசித்த꞉ ஸுக²மயி விசரன்ஸர்வசேஷ்டாஸ்த்வத³ர்த²ம்
த்வத்³ப⁴க்தை꞉ ஸேவ்யமானானபி சரிதசரானாஶ்ரயன் புண்யதே³ஶான் |
த³ஸ்யௌ விப்ரே ம்ருகா³தி³ஷ்வபி ச ஸமமதிர்முச்யமானாவமான-
ஸ்பர்தா⁴ஸூயாதி³தோ³ஷ꞉ ஸததமகி²லபூ⁴தேஷு ஸம்பூஜயே த்வாம் || 97-2 ||

கிருஷ்ணா, உன்னை நினைத்து பாடுவதில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். என்னையே உனக்கு அர்ப்பணித்துவிட்டேனடா. என் மனம் பூரா நீ நிறைந்திருப்பதால் அது என் மனம் இல்லை, உன்னுடையது. நீ. எங்கும் ஆனந்தமாக க்ஷேத்ரங்களுக்கு எல்லாம் செல்வேன். உன் பக்தர்களை பின் தொடர்ந்து பேசாமல் செல்வேன். என் கண்ணுக்கு, மனதுக்கு எல்லாம் ஒன்றே, நீ மட்டுமே.

त्वद्भावो यावदेषु स्फुरति न विशदं तावदेवं ह्युपास्तिं
कुर्वन्नैकात्म्यबोधे झटिति विकसति त्वन्मयोऽहं चरेयम् ।
त्वद्धर्मस्यास्य तावत् किमपि न भगवन् प्रस्तुतस्य प्रणाश-
स्तस्मात्सर्वात्मनैव प्रदिश मम विभो भक्तिमार्गं मनोज्ञम् ॥३॥

tvadbhaavO yaavadeShu sphurati na vishadaM taavadevaM hyupaastiM
kurvannaikaatmyabOdhe jhaTiti vikasati tvanmayO(a)haM chareyam |
tvaddharmasyaasya taavat kimapi na bhagavan prastutasya praNaashaH
tasmaatsarvaatmanaiva pradisha mama vibhO bhaktimaargaM manOj~nam || 3

த்வத்³பா⁴வோ யாவதே³ஷு ஸ்பு²ரதி ந விஶத³ம் தாவதே³வம் ஹ்யுபாஸ்திம்
குர்வன்னைகாத்ம்யபோ³தே⁴ ஜ²டிதி விகஸதி த்வன்மயோ(அ)ஹம் சரேயம் |
த்வத்³த⁴ர்மஸ்யாஸ்ய தாவத்கிமபி ந ப⁴க³வன் ப்ரஸ்துதஸ்ய ப்ரணாஶ-
ஸ்தஸ்மாத்ஸர்வாத்மனைவ ப்ரதி³ஶ மம விபோ⁴ ப⁴க்திமார்க³ம் மனோஜ்ஞம் || 97-3 ||

கிருஷ்ணா, நான் உன்னை இப்படித் தான் விடாமல் தொழுது கொண்டே இருப்பேன். எது வரை தெரியுமா? எப்போது எல்லாரும், எல்லாமே நீ தான் என்று மனதுக்கு ஸ்திரமாக பிடிபடும் வரை. எல்லாமே நீ எனும்போது நானும் நீ தானே. அப்புறம் எதற்கு நீ உன்னையே தொழவேண்டும்? ஆகவே எல்லா க்ஷேத்ரங்களுக்கும் உன் பக்தர்கள் பின்னாலேயே செல்வேன், இல்லை நீ செல்வாய். பாகவத தர்மம் பழக்கத்துக்கு வந்துவிட்டால் அதிலிருந்து விடுபடுவது ஏது? பகவானே, நாராயணா, என்னை அற்புதமான அந்த பக்திப்பாதையில் செலுத்து.

तं चैनं भक्तियोगं द्रढयितुमयि मे साध्यमारोग्यमायु-
र्दिष्ट्या तत्रापि सेव्यं तव चरणमहो भेषजायेव दुग्धम् ।
मार्कण्डेयो हि पूर्वं गणकनिगदितद्वादशाब्दायुरुच्चै:
सेवित्वा वत्सरं त्वां तव भटनिवहैर्द्रावयामास मृत्युम् ॥४॥

taM chainaM bhaktiyOgaM draDhayitumayi me saadhyamaarOgyamaayuH
diShTyaa tatraapi sevyaM tava charaNamahO bheShajaayeva dugdham |
maarkaNDeyO hi puurvaM gaNakanigadita dvaadashaabdaayuruchchaiH
sevitvaa vatsaraM tvaaM tava bhaTanivahairdraavayaamaasa mR^ityum ||4

தம் சைனம் ப⁴க்தியோக³ம் த்³ருட⁴யிதுமயி மே ஸாத்⁴யமாரோக்³யமாயு-
ர்தி³ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ பே⁴ஷஜாயேவ து³க்³த⁴ம் |
மார்கண்டே³யோ ஹி பூர்வம் க³ணகனிக³தி³தத்³வாத³ஶாப்³தா³யுருச்சை꞉
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப⁴டனிவஹைர்த்³ராவயாமாஸ ம்ருத்யும் || 97-4 ||

ஆமாம், கண்ணா, பக்தியோகத்தில் ஸ்திரமாக நான் காலூன்றி அலைய எனக்கு நல்ல நோயற்ற நீண்ட ஆயுள் வேண்டுமே. நல்லவேளை, இதற்கும் நான் உன் திருவடியைத் தான் கெட்டியாக பிடித்துக் கொள்வேன். இது வியாதிக்கு கசப்பான மருந்து என்பதே இனிப்பான அருஞ்சுவைப் பால் மாதிரி அமைந்து விட்டது.

மார்கண்டேயனுக்கு ஆயுசு பன்னிரண்டு வருஷம் தான், (பதினாறு என்று பல இடங்களில் படித்திருக்கிறேன். பட்டத்ரி 12 என்கிறாரே. எதுவானால் என்ன, ரெண்டுமே சாகும் வயதல்ல)
என்று ஜோசியன் சொல்லிவிட்டான். விடாமல் உன்னை ஒருவருஷம் தியானித்து வந்தான். குறிப்பிட்ட நேரம் வந்த போது எம தூதர்களை உன் தூதர்கள் விரட்டி அடித்து விட்டார்களே. ,

मार्कण्डेयश्चिरायु: स खलु पुनरपि त्वत्पर: पुष्पभद्रा-
तीरे निन्ये तपस्यन्नतुलसुखरति: षट् तु मन्वन्तराणि ।
देवेन्द्र: सप्तमस्तं सुरयुवतिमरुन्मन्मथैर्मोहयिष्यन्
योगोष्मप्लुष्यमाणैर्न तु पुनरशकत्त्वज्जनं निर्जयेत् क: ॥५॥

maarkaNDeyashchiraayuH sa khalu punarapi tvatparaH puShpabhadraa
tiire ninye tapasyannatula sukharatiH ShaT tu manvantaraaNi |
devendraH saptamastaM surayuvati marunmanmathaiH mOhayiShyan
yOgOShmapluShyamaaNairna tu punarashakattvajjanaM nirjayet kaH || 5

மார்கண்டே³யஶ்சிராயுஸ்ஸ க²லு புனரபி த்வத்பர꞉ புஷ்பப⁴த்³ரா-
தீரே நின்யே தபஸ்யன்னதுலஸுக²ரதி꞉ ஷட் து மன்வந்தராணி |
தே³வேந்த்³ர꞉ ஸப்தமஸ்தம் ஸுரயுவதிமருன்மன்மதை²ர்மோஹயிஷ்யன்
யோகோ³ஷ்மப்லுஷ்யமாணைர்ன து புனரஶகத்த்வஜ்ஜனம் நிர்ஜயேத்க꞉ || 97-5 ||

மார்கண்டேயனுக்கு உன்னை எப்போதும் வழிபட்டு தொழுதுகொண்டே இருப்பது பிடிக்கும். வழக்கம். ஆகவே அவன் என்றும் மரணமற்ற சிரஞ்சீவியானான். புஷ்ப பத்ரா நதிக்கரையில் தவமிருந்து, ஆறு மன்வந்த்ரங்கள் (எத்தனையோ சைபர்கள் கொண்ட, எனக்கு சொல்லத் தெரியாத வருஷங்கள்) உன் பக்தனாக உன் திருவடிகள் அளித்த சதானந்தத்தில் திளைத்தான். ஏழாவது மன்வந்த்ரம் நெருங்கியபோது இந்திரன் கவலைப்பட்டான். அடாடா இனி மார்க்கண் டேயன் இந்த்ரனாகி விடுவானோ? தனது இந்த்ரபதவிக்கு ஆபத்தோ என்று பயத்தில் மார்க்கண்டேயன் தவத்தை கலைக்க தேவலோக அரம்பையர்களையும் மன்மதனையும் ஏவினான். அவர்களது முயற்சிகள், சாமர்த்தியம், மலரம்புகள் எதுவும் பலன் அளிக்காமல் , மார்கண்டே யனின் தவ யோக சக்தி, நெருப்பாய் அவர்களை தஹித்தது .

प्रीत्या नारायणाख्यस्त्वमथ नरसख: प्राप्तवानस्य पार्श्वं
तुष्ट्या तोष्टूयमान: स तु विविधवरैर्लोभितो नानुमेने ।
द्रष्टुं माय़ां त्वदीयां किल पुनरवृणोद्भक्तितृप्तान्तरात्मा
मायादु:खानभिज्ञस्तदपि मृगयते नूनमाश्चर्यहेतो: ॥६॥

priityaa naaraayaNaakhya stvamatha narasakhaH praaptavaanasya paarshvaM
tuShTyaa tOShTuuyamaanaH sa tu vividhavarairlObhitO naanumene |
draShTuM maayaaM tvadiiyaaM kila punaravR^iNOd bhaktitR^iptaantaraatmaa
maayaa duHkhaanabhij~nastadapimR^igayate nuunamaashcharyahetOH || 6

ப்ரீத்யா நாராயணாக்²யஸ்த்வமத² நரஸக²꞉ ப்ராப்தவானஸ்ய பார்ஶ்வம்
துஷ்ட்யா தோஷ்டூயமான꞉ ஸ து விவித⁴வரைர்லோபி⁴தோ நானுமேனே |
த்³ரஷ்டும் மாயாம் த்வதீ³யாம் கில புனரவ்ருணோத்³ப⁴க்தித்ருப்தாந்தராத்மா
மாயாது³꞉கா²னபி⁴ஜ்ஞஸ்தத³பி ம்ருக³யதே நூனமாஶ்சர்யஹேதோ꞉ || 97-6 ||

குருவாயூரப்பா, அப்புறம் நீ என்ன பண்ணினாய் தெரியுமா? நாராயண ரிஷியாக, உன் நண்பன் நரனுடன் மார்க்கண்டேயன் அருகில் சென்றீர்கள். உங்கள் தரிசனம் கிடைத்த பரம சந்தோஷத் தோடு மார்க்கண்டேயன் உங்களை போற்றி வணங்கினான்.
''மார்க்கண்டேயா, உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்'' என்கிறாய்.
''நாராயணா எனக்கு ஒருவரமும் வேண்டாம் உன்மேல் விடாத பக்தி கொண்டிருந்தால் அது ஒன்றே போதும்,
''இல்லை நீயும் ஏதாவது ஒன்றைக் கேட்கவேண்டும் .கேள், மார்கண்டேயா'' - நீ திரும்ப திரும்ப கேட்டாய்.
'' நாராயணா, உன் மாயை என்ன என்று மட்டும் எனக்கு காண்பி''- என்றான் மார்க்கண்டேயன்.

அவன் பிறந்தது முதல் ஒரு யோகியாகவே வாழ்ந்தவன், ஆசை பாசங்கள் இல்லாதவன் அல்லவா?.
உன்மேல் பக்தியை தவிர வேறொன்றும் தெரியாதவன். மாயை என்பது பற்றி, அதனால் விளையும் துன்பங்கள், துக்கங்கள் தெரியாதவன். ஆகவே தான் ஆச்சர்யப்பட்டு அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவலோடு அப்படி கேட்டுவிட்டான். நீயும் புன்சிரிப்போடு, அங்கிருந்து சென்றுவிட்டாய்.

याते त्वय्याशु वाताकुलजलदगलत्तोयपूर्णातिघूर्णत्-
सप्तार्णोराशिमग्ने जगति स तु जले सम्भ्रमन् वर्षकोटी: ।
दीन: प्रैक्षिष्ट दूरे वटदलशयनं कञ्चिदाश्चर्यबालं
त्वामेव श्यामलाङ्गं वदनसरसिजन्यस्तपादाङ्गुलीकम् ॥७॥

yaate tvayyaashu vaataakula jaladagalat tOyapuurNaatighuurNat
saptaarNOraashimagne jagati sa tu jale sambhraman varShakOTiiH |
diinaH praikshiShTa duure vaTadalashayanaM ka~nchidaashcharya baalaM
tvaameva shyaamalaangaM vadanasarasijanyasta paadaanguliikam || 7

யாதே த்வய்யாஶு வாதாகுலஜலத³க³லத்தோயபூர்ணாதிகூ⁴ர்ணத்-
ஸப்தார்ணோராஶிமக்³னே ஜக³தி ஸ து ஜலே ஸம்ப்⁴ரமன்வர்ஷகோடீ꞉ |
தீ³ன꞉ ப்ரைக்ஷிஷ்ட தூ³ரே வடத³லஶயனம் கஞ்சிதா³ஶ்சர்யபா³லம்
த்வாமேவ ஶ்யாமலாங்க³ம் வத³னஸரஸிஜன்யஸ்தபாதா³ங்கு³லீகம் || 97-7 ||

கிருஷ்ணா, நீ மார்கண்டேயனிடமிருந்து சென்றபின் என்ன நடந்தது ஞாபகம் இருக்கிறதா?
வானில் எங்கும் கருமேகங்கள் இடி இடித்தன. ஹோ என்ற பேரிரைச்சலுடன் காற்று கடுமையாக பலமாக எல்லாவற்றையும் புரட்டித் தள்ளி ஆட்டி, அசைத்து வேகமாக வீசியது. ஜோ வென்ற இடைவெளியில்லாத மழை. சப்த சமுத்ரங்களிலும் பிரவாஹம் பொங்கி வழிந்தது. ப்ரளயமோ? உலகம் நீரில் அமிழ்ந்தது. பல கோடி வருஷங்கள் மார்க்கண்டேயன் ஜலத்தில் நீந்தினான். நடந்தான், அலைந்தான். ரொம்ப களைத்தவன் கண்களில் தூரத்தில் ஒரு காட்சி தென்பட்டது. அட இது என்ன ஆச்சர்யம், ஒரு ஆலிலை மேல் பச்சிளம் குழந்தை ஒன்று நீல நிறத்தில் கால் விரலை சூப்பிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறதே! குழந்தையோடு ஆலிலை நீரில் மிதந்து அசைகிறதே.

दृष्ट्वा त्वां हृष्टरोमा त्वरितमुपगत: स्प्रष्टुकामो मुनीन्द्र:
श्वासेनान्तर्निविष्ट: पुनरिह सकलं दृष्टवान् विष्टपौघम् ।
भूयोऽपि श्वासवातैर्बहिरनुपतितो वीक्षितस्त्वत्कटाक्षै-
र्मोदादाश्लेष्टुकामस्त्वयि पिहिततनौ स्वाश्रमे प्राग्वदासीत् ॥८॥

dR^iShTvaa tvaaM hR^iShTarOmaa tvaritamabhigataH spraShTukaamO muniindraH
shvaasenaantarniviShTaH punariha sakalaM dR^iShTavaan viShTapaugham |
bhuuyO(a)pi shvaasavaatairbahiranupatitO viikshitastvatkaTaakshaiH
mOdaadaashleShTukaamastvayi pihitatanau svaashrame praagvadaasiit || 8

த்³ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்டரோமா த்வரிதமபி⁴க³த꞉ ஸ்ப்ரஷ்டுகாமோ முனீந்த்³ர꞉
ஶ்வாஸேனாந்தர்னிவிஷ்ட꞉ புனரிஹ ஸகலம் த்³ருஷ்டவான் விஷ்டபௌக⁴ம் |
பூ⁴யோ(அ)பி ஶ்வாஸவாதைர்ப³ஹிரனுபதிதோ வீக்ஷிதஸ்த்வத்கடாக்ஷை-
ர்மோதா³தா³ஶ்லேஷ்டுகாமஸ்த்வயி பிஹிததனௌ ஸ்வாஶ்ரமே ப்ராக்³வதா³ஸீத் || 97-8 ||

மார்கண்டேயனுக்கு மேனி சிலிர்த்தது, மயிர்க்கூச்செறிந்தது. ஓடினான். ஆலிலையை நெருங்கி னான், உன்னைத் தொட விரும்பினான். உன் ஸ்வாஸம் அவனை உனக்குள் இழுத்தது. உன்னில் கலந்தான் . உன்னுள் பிரபஞ்சத்தையே தரிசித்தான். உன் வெளி மூச்சு , ரேசகம், அவனை வெளியே தள்ளியது. நீரில் வந்து விழுந்தான். உன் கடைக்கண் பார்வை அவன் மேல் விழுந்தது. பரமானந்தத்தோடு மார்க்கண்டேயன் உன்னைத் தழுவ உன்னிடம் ஓடிவந்தான். ஒரு க்ஷண நேரத்தில் நீ மறைந்தாய், மார்க்கண்டேயன் தனது ஆஸ்ரமத்தில் பழையபடி தவம் செயது கொண்டிருப்பதை உணர்ந்தான்.

गौर्या सार्धं तदग्रे पुरभिदथ गतस्त्वत्प्रियप्रेक्षणार्थी
सिद्धानेवास्य दत्वा स्वयमयमजरामृत्युतादीन् गतोऽभूत् ।
एवं त्वत्सेवयैव स्मररिपुरपि स प्रीयते येन तस्मा-
न्मूर्तित्रय्यात्मकस्त्वं ननु सकलनियन्तेति सुव्यक्तमासीत् ॥९॥

gauryaa saardhaM tadagre purabhidatha gatastvatpriya prekshaNaarthii
siddhaanevaasya dattvaa svayamayamajaraamR^ityutaadiin gatO(a)bhuut |
evaM tvatsevayaiva smararipurapi sa priiyate yena tasmaat
muurti trayyaatmakastvaM nanu sakala niyanteti suvyaktamaasiit || 9

கௌ³ர்யா ஸார்த⁴ம் தத³க்³ரே புரபி⁴த³த² க³தஸ்த்வத்ப்ரியப்ரேக்ஷணார்தீ²
ஸித்³தா⁴னேவாஸ்ய த³த்த்வா ஸ்வயமயமஜராம்ருத்யுதாதீ³ன் க³தோ(அ)பூ⁴த் |
ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி ஸ ப்ரீயதே யேன தஸ்மா-
ந்மூர்தித்ரய்யாத்மகஸ்த்வம் நனு ஸகலனியந்தேதி ஸுவ்யக்தமாஸீத் || 97-9 ||

பரமேஸ்வரன் உமாதேவியோடு மார்க்கண்டேயனை அணுகினார். உன் பக்தனைக் காண அவ்வளவு ஆர்வம். மார்க்கண்டேயன் கேட்காமலேயே அவனுக்கு முதுமை மரணம் இரண்டிலிருந்தும் விடுதலை அளித்தார். நாராயணா, உன்னை பக்தன் ஒருவன் தவமிருந்து சரணடைவது பரமேஸ்வரனும் மகிழும் விஷயம் அல்லவா? இது த்ரிமூர்த்திகள் ப்ரம்மா விஷ்ணு சிவன் எல்லாம் நீயே. ஸர்வமும் ரக்ஷிப்பவன் என உணர்த்துகிறதே.

त्र्यंशेस्मिन् सत्यलोके विधिहरिपुरभिन्मन्दिराण्यूर्ध्वमूर्ध्वं
तेभोऽप्यूर्ध्वं तु मायाविकृतिविरहितो भाति वैकुण्ठलोक: ।
तत्र त्वं कारणाम्भस्यपि पशुपकुले शुद्धसत्त्वैकरूपी
सच्चित्ब्रह्माद्वयात्मा पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥१०॥

tryamshe(a)smin satyalOke vidhihari purabhinmandiraaNyuurdhva muurdhvaM
tebhyO(a)pyuurdhvaM tu maayaa vikR^iti virahitO bhaati vaikuNThalOkaH |
tatra tvaM kaaraNaambhasyapi pashupakule shuddha sattvaikaruupii
sachchidbrahmaadvayaatmaa pavanapurapate paahi maaM sarvarOgaat ||10

த்ர்யம்ஶே(அ)ஸ்மின்ஸத்யலோகே விதி⁴ஹரிபுரபி⁴ன்மந்தி³ராண்யூர்த்⁴வமூர்த்⁴வம்
தேப்⁴யோ(அ)ப்யூர்த்⁴வம் து மாயாவிக்ருதிவிரஹிதோ பா⁴தி வைகுண்ட²லோக꞉ |
தத்ர த்வம் காரணாம்ப⁴ஸ்யபி பஶுபகுலே ஶுத்³த⁴ஸத்த்வைகரூபீ
ஸச்சித்³ப்³ரஹ்மாத்³வயாத்மா பவனபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா³த் || 97-10

நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை நாராயண பட்டத்ரி இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.

சத்யலோகத்தில் மூன்று அடுக்குகள், ஒன்றன் மேல் ஒன்றாக, மூன்று மாடிகளில் நாம் வாழ்கிறோமே அது போல. ப்ரம்மா விஷ்ணு சிவன் வாச ஸ்தலங்கள்.

அதற்கும் மேலே வைகுண்ட மோக்ஷ சாம்ராஜ்ய லோகம். அங்கே மாயையோ, ப்ரக்ருதியோ கிடையாது. நெருங்காது. சுற்றிலும் காரண ஜலம் , எல்லாவற்றிற்கும் காரணமான க்ஷீர சாகரமோ? கோ லோகம் வேறு அங்கே காண்கிறது.
எண்டே குருவாயூரப்பா, நீ இருக்கும் இடம் என்றால் பசுக்களும் உண்டே. அங்கே தான் நீ சத்வகுண போதனாக, ஸத் சித் பிரம்மமாக எல்லாம் ஒன்றேயான ஸ்வரூபியாக இருக்கிறாய். என்னை நோய் தீர்த்து அருள்வாய்.