Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 67
67. கண்ணனைக் காண்பதெப்போ?

கிருஷ்ணன் கோபியரோடு விளையாடி மகிழ்ந்தான் என்று சொல்லும்போது கிருஷ்ணன் ஒருவன் கோபியர்கள் பலர். அவர்கள் அவன் ஒருவனோடு விளையாடினார்கள் என்று தான் நாம் எண்ணு வோம். ஆனால் நடந்தது வேறு. ஒவ்வொரு கோபிக்கும் ஒரு கிருஷ்ணன் அவளுக்கே பிரத்யேகமாக விளையாட கிடைத்தான். ஆம், எல்லா கோபியர்களுக்கும் தனித்தனியாக தனக்கு மட்டும் கிருஷ்ணன் தன்னோடு மட்டும் தான் விளையாடுகிறான் என்ற எண்ணத்தை மனதில் கொடுத்தான். பல மாய கிருஷ்ணன்களாக தன்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டான் கிருஷ்ணன்.இது தான் ராஸலீலையின் முக்கிய கட்டம்.

சில சமயம் ராதையுடன் மட்டுமே காட்சி தந்தான். அவள் கிருஷ்ணன் எனக்கே என்று பெருமைப் படும்போது அவளிடமிருந்தும் காணாமல் போனான். கிருஷ்ணன் பொது. எல்லோரின் சொத்து என்று எண்ண வைத்து மீண்டும் அவர்கள் முன் தோன்றினான். இப்படி பல மாயாஜால சித்து விளையாட்டுகள் அங்கே பண்டீரவனத்தில் நடந்தது.

स्फुरत्परानन्दरसात्मकेन त्वया समासादितभोगलीला: ।
असीममानन्दभरं प्रपन्ना महान्तमापुर्मदमम्बुजाक्ष्य: ॥१॥

sphuratparaananda rasaatmakena tvayaa samaasaadita bhOgaliilaaH |
asiimamaanandabharaM prapannaa mahaanta maapurmadamambujaakshyaH || 1

ஸ்பு²ரத்பரானந்த³ரஸாத்மகேன
த்வயா ஸமாஸாதி³தபோ⁴க³லீலா꞉ |
அஸீமமானந்த³ப⁴ரம் ப்ரபன்னா
மஹாந்தமாபுர்மத³மம்பு³ஜாக்ஷ்ய꞉ || 67-1 ||

கிருஷ்ணா, நீ ஆனந்த ஸ்வரூபன். அன்பெனும் பிடியில் அகப்படும் மலை. எல்லோரும் நீ அவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தை மனதில் நிரப்பி மகிழவைத்தவன். அதனால் அவர்களுக்கு கர்வம் ஏற்பட்ட போது அதை விலக்க, மறைந்தவன்.

निलीयतेऽसौ मयि मय्यमायं रमापतिर्विश्वमनोभिराम: ।
इति स्म सर्वा: कलिताभिमाना निरीक्ष्य गोविन्द् तिरोहितोऽभू: ॥२॥

நிலீயதே(அ)ஸௌ மயி மய்யமாயம்
ரமாபதிர்விஶ்வமனோபி⁴ராம꞉ |
இதிஸ்ம ஸர்வா꞉ கலிதாபி⁴மானா
நிரீக்ஷ்ய கோ³விந்த³ திரோஹிதோ(அ)பூ⁴꞉ || 67-2 ||

niliiyate(a)sau mayi mayyamaayaM ramaapatirvishva manO(a)bhiraamaH |
itisma sarvaaH kalitaabhimaanaaH niriikshya gOvinda tirOhitO(a)bhuuH || 2

மஹாலக்ஷ்மி தேவியையே மார்பில் கொண்ட அந்த மாதவன் என் மீது மட்டும் தனியாக அன்பு கொண்டவன், அவன் எனக்கு மட்டுமே, என்று அவர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும்போது அவர்களுக்கு நீ தென்படவே இல்லை.

राधाभिधां तावदजातगर्वामतिप्रियां गोपवधूं मुरारे ।
भवानुपादाय गतो विदूरं तया सह स्वैरविहारकारी ॥३॥

raadhaabhidhaaM taavadajaatagarvaam atipriyaaM gOpavadhuuM muraare |
bhavaanupaadaaya gatO viduuraM tayaa saha svairavihaara kaarii || 3

ராதா⁴பி⁴தா⁴ம் தாவத³ஜாதக³ர்வா-
மதிப்ரியாம் கோ³பவதூ⁴ம் முராரே |
ப⁴வானுபாதா³ய க³தோ விதூ³ரம்
தயா ஸஹ ஸ்வைரவிஹாரகாரீ || 67-3 ||

''முராரி, நீ ராதையுடன் மட்டும் நெருங்கி விளையாடுவதை, பழகுவதைக் கண்ட மற்ற கோபியர்கள் அதன் காரணத்தை புரிந்து கொள்ளவில்லை. ராதா தன்னையே பரிபூர்ணமாக பக்தியோடு உன்னோடு இணைத்துக் கொண்டவள். சரணாகதியின் உச்ச நிலை அவள். ஆவலுடன் உன்னை எதிர்பார்த்து காத்திருந்த அவளோடு அதிக நேரம் செலவழித்து அவளோடு எங்கோ தூரமாக காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டாய்.

तिरोहितेऽथ त्वयि जाततापा: समं समेता: कमलायताक्ष्य: ।
वने वने त्वां परिमार्गयन्त्यो विषादमापुर्भगवन्नपारम् ॥४॥

tirOhite(a)thatvayi jaatataapaaH samamsametaaH kamalaayataakshyaH |
vane vane tvaaM parimaargayantyO viShaadamaapuH bhagavannapaaram || 4

திரோஹிதே(அ)த² த்வயி ஜாததாபா꞉
ஸமம் ஸமேதா꞉ கமலாயதாக்ஷ்ய꞉ |
வனே வனே த்வாம் பரிமார்க³யந்த்யோ
விஷாத³மாபுர்ப⁴க³வன்னபாரம் || 67-4 ||

ஏமாற்றத்தோடு உன்னைத்தேடி எல்லா கோபியர்களும் காடு முழுக்க அலைந்து திரிந்தார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து பல இடங்களில் தேடினார்கள். உன்னைக் காணாமல் மனம் வாடி ஏங்கினார்கள். துயரக்கண்ணீர் வடித்தார்கள்.

हा चूत हा चम्पक कर्णिकार हा मल्लिके मालति बालवल्य: ।
किं वीक्षितो नो हृदयैकचोर: इत्यादि तास्त्वत्प्रवणा विलेपु: ॥५॥

haachuuta haa champaka karNikaara haa mallike maalati baalavallyaH |
kiM viikshitO nO hR^idayaikachOra ityaadi taastvatpravaNaa vilepuH || 5

ஹா சூத ஹா சம்பக கர்ணிகார
ஹா மல்லிகே மாலதி பா³லவல்ல்ய꞉ |
கிம் வீக்ஷிதோ நோ ஹ்ருத³யைகசோர
இத்யாதி³ தாஸ்த்வத்ப்ரவணா விலேபு꞉ || 67-5 ||

எங்கும் எதிலும் உள்ள உன்னை எங்குமே காணாமல் போய்விட்டாயே என்று அந்த கோபியர்கள் அழுது புலம்பியது பார்க்கவே பரிதாபமான காட்சி. பித்துப் பிடித்தவர்களாகி அடக்கமுடியாத சோகத்தோடு அந்த கோபியர்கள் ''ஏ மாமரமே , எங்களை இப்படி துயரத்தில் வாட விட்டு விட்டானே அந்த கிருஷ்ணன், அவன் எங்கே,?'' ஏ, சம்பக மரமே, நீயும் கவனித்தாயா இந்த கொடுமையை? வெகுநாளாக இங்கு உயர்ந்து வளர்ந்து நிற்கும் கொன்றை மரமே, நீயாவது அந்த கண்ணனைப் பார்த்தாயா, அவன் எங்கு சென்றான்? மல்லிக்கொடிகளே, வாடா மல்லியே , வாடும் எங்கள் கதி உனக்கு புரிகிறதா? எங்கள் இதயத்தைத் திருடிய கள்வனை, கண்ணனை எங்காவது கண்டீர்களா? எங்களை இப்படி பைத்தியமாக்கிவிட்டானே.

''கண்ணனைக் கண்டாயோ மல்லிக்கொடியே'' என்ற ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாவ பூர்வ(BHAVA ) சிந்து பைரவி பாடலைக் கேட்டவர்களுக்கு இந்த காட்சி கண்முன் தெரியும். கேட்காதவர்கள் இன்றே யூ ட்யூபில் கேளுங்கள்.

निरीक्षितोऽयं सखि पङ्कजाक्ष: पुरो ममेत्याकुलमालपन्ती ।
त्वां भावनाचक्षुषि वीक्ष्य काचित्तापं सखीनां द्विगुणीचकार ॥६॥

niriikshitO(a)yaM sakhi pankajaakshaH purO mametyaakula maalapantii |
tvaaM bhaavanaa chakshuShi viikshya kaachittaapaM sakhiinaaMdviguNiichakaara || 6

நிரீக்ஷிதோ(அ)யம் ஸகி² பங்கஜாக்ஷ꞉
புரோ மமேத்யாகுலமாலபந்தீ |
த்வாம் பா⁴வனாசக்ஷுஷி வீக்ஷ்ய காசி-
த்தாபம் ஸகீ²னாம் த்³விகு³ணீசகார || 67-6 ||

ஒரு கோபிக்கு சித்த பிரமை வந்துவிட்டது. ஆஹா, என்று கலகலவென்று சிரித்தாள். முட்டாள்களே, எங்கே கிருஷ்ணனை காணோம் என்று தேடுகிறீர்கள், இங்கே பாருங்கள், இதோ என் எதிரே அல்லவா நிற்கிறான் அந்த கிருஷ்ணன். என் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்குகிறானே கண்ணுக்கு தெரியவில்லையா? என்று எதிரே கிருஷ்ணன் உள்ளது போல் மனம் பேதலித்து கத்தினதைக் கேட்டு மற்ற அனைவரும் எங்கே, எங்கே, அந்த கிருஷ்ணன் என்று அங்குமிங்கும் உன்னைத் தேடினார்கள். அவர்கள் துயரம்,சோகம், துன்பம், ஏக்கம், இதனால் இரட்டிப்பாகிவிட்டது.

त्वदात्मिकास्ता यमुनातटान्ते तवानुचक्रु: किल चेष्टितानि ।
विचित्य भूयोऽपि तथैव मानात्त्वया विमुक्तां ददृशुश्च राधाम् ॥७॥

tvadaatmikaastaa yamunaataTaante tavaanuchakruH kila cheShTitaani |
vichitya bhuuyO(a)pi tathaivamaanaattvayaa vimuktaaM dadR^ishushcharaadhaam || 7

த்வதா³த்மிகாஸ்தா யமுனாதடாந்தே
தவானுசக்ரு꞉ கில சேஷ்டிதானி |
விசித்ய பூ⁴யோ(அ)பி ததை²வ மானா-
த்வயா விமுக்தாம் த³த்³ருஶுஶ்ச ராதா⁴ம் || 67-7 ||

''கிருஷ்ணா, என்னடா இது மாயம். சில கோபியர்கள் நீயே அவர்களாகிவிட்டதாக பாவித்து நீ செய்யும் லீலைகளை எல்லாம் நடித்துக் காட்டுகிறார்களே. உன் சேஷ்டிதங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவர்களே செய்து காட்டுகிறார்களே. அடேயப்பா உன்னை மரத்திலும், யமுனை நீரிலும் விளையாடுபவனாக வெளிப்படுத்துகிறார்களே . இது என்னப்பா புதுமாயம்?
அதே நேரம் நடு நடுவே உன்னைக் காணாமல் தேடியும் வேறு அலைகிறார்கள். ராதைக்கு கண்ணன் எனக்கு மட்டும் தான் என்ற தற்பெருமை வந்த நேரம் நீ அவளையும் விட்டு பிரிந்து விட்டாயே.

तत: समं ता विपिने समन्तात्तमोवतारावधि मार्गयन्त्य: ।
पुनर्विमिश्रा यमुनातटान्ते भृशं विलेपुश्च जगुर्गुणांस्ते ॥८॥

tataH samaM taa vipine samantaattamOvataaraavadhi maargayantyaH |
punarvimishraa yamunaa taTaante bhR^ishaM vilepushcha jagurguNaamste || 8

தத꞉ ஸமம் தா விபினே ஸமந்தா-
த்தமோவதாராவதி⁴ மார்க³யந்த்ய꞉ |
புனர்விமிஶ்ரா யமுனாதடாந்தே
ப்⁴ருஶம் விலேபுஶ்ச ஜகு³ர்கு³ணாம்ஸ்தே || 67-8 ||

அன்று கண்ணனைத் தேடும் படலம் மட்டுமே ராச லீலையாக அமைந்துவிட்டது. இதோ இரவும் நெருங்கியது. எல்லோரும் ஒன்றாக கூடி மீண்டும் கருமையாக நீண்டு பரந்து ஓடும் யமுனை நதி அருகே செல்கிறார்கள். உன்னைத் தேடுகிறார்கள். கண்ணா கண்ணா என்று உரக்க கூவுகிறார் கள். ஆஹா எவ்வளவு அற்புதமானவன் அந்த கிருஷ்ணன், இப்படி காணாமல் போய்விட்டானே , என்று அழுது என்று உன் பெருமை மஹிமைகளை நினைவு கூர்ந்து ஒவ்வொருவரும் தனித்தனியே அவரவர்கள் அனுபவத்தை பரிமாறிக்கொள்கிறார்கள்.

பாரதியாரின் தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டில் அவர்களது அனுபவத்தை எல்லாம் ஒரு பெரிய லிஸ்ட்டாக கவிதை ரூபத்தில் எழுதி இருப்பதை DK பட்டம்மாள் அவர்ககளது தனித்வமான குரலில், கண்ணா, நான் உன்னைக் கேட்டு மனக்கண்ணால் பார்த்து அனுபவித்திருக்கிறேன்.

तथा व्यथासङ्कुलमानसानां व्रजाङ्गनानां करुणैकसिन्धो ।
जगत्त्रयीमोहनमोहनात्मा त्वं प्रादुरासीरयि मन्दहासी ॥९॥

tathaa vyathaa sankula maanasaanaaM vrajaanganaanaaM karuNaikasindhO |
jagat trayiimOhana mOhanaatmaa tvaM praaduraasiirayi mandahaasii || 9

ததா²வ்யதா²ஸங்குலமானஸானாம்
வ்ரஜாங்க³னானாம் கருணைகஸிந்தோ⁴ |
ஜக³த்த்ரயீமோஹனமோஹனாத்மா
த்வாம் ப்ராது³ராஸீரயி மந்த³ஹாஸீ || 67-9 ||

''காருண்ய தேவா, கருணாசாகரா, நீ அவர்கள் படும் பாட்டைக்கண்டு, பாடும் பாட்டைக் கேட்டு ஓடோடி வந்தாய். அவர்கள் முன் நின்றாய். அழுத கண்கள் சிரித்தன. ஆனந்தமாக மலர்ந்து விரிந்தன. முகங்கள் சூரியனாக ஒளிர்ந்தன. மூவுலகும் மயங்கும் மாயகிருஷ்ணா நீ அவர்களை பழையபடி ஆனந்த சாகரத்தில் மூழ்கச் செய்தாய்.

सन्दिग्धसन्दर्शनमात्मकान्तं त्वां वीक्ष्य तन्व्य: सहसा तदानीम् ।
किं किं न चक्रु: प्रमदातिभारात् स त्वं गदात् पालय मारुतेश ॥१०॥

sandigdha sandarshanamaatmakaantaM tvaaM viikshya tanvyaH sahasaatadaaniim |
kiM kiM na chakruH pramadaatibhaaraat sa tvaM gadaatpaalaya maarutesha ||10

ஸந்தி³க்³த⁴ஸந்த³ர்ஶனமாத்மகாந்தம்
த்வாம் வீக்ஷ்ய தன்வ்யஸ்ஸஹஸா ததா³னீம் |
கிம் கிம் ந சக்ரு꞉ ப்ரமதா³திபா⁴ரா-
த்ஸ த்வம் க³தா³த்பாலய மாருதேஶ || 67-10 ||

இனி, கண்ணனைக் காண முடியாதோ என்று சோகத்தோடு ஏக்கத்தில் தளர்ந்து, வாடிய, இளைத்த, களைத்த, கோபியர்களுக்கு நீ புத்துயிர் அளித்தாய் குருவாயூரப்பா. ஆஹா எண்டே குருவாயூரா , இழந்தது கிடைத்தால் எத்தனை இன்பம்? உன்னை மீண்டும் கண்ட கோபியர்களின் உற்சாகத்தை, ஆட்டத்தை பாட்டத்தை , ஓட்டத்தை எப்படிச் சொல்வேன்? என்னையும் என் நோய் தீர்த்து மகிழ்ந்து உன்னைப் பாடச் செய்வாயா?