31. மஹாபலி சிரஞ்சீவியானான்.
நாராயணீயம் சர்வ வியாதி, சகல ரோக நிவாரணி.
முற்றிய புற்று நோயால் வாடிய ஒரு பெண்மணி மஹா பெரியவரை காஞ்சி மடத்தில் கண்டு தனது துன்பத்தை குறைகளை சொல்லி அழுதார்.
''நீ நாராயணீய பாராயணம் பண்ணு சரியாயிடும். நாராயணன் பார்த்துப் பார்''. அது தான் மஹா பெரியவா உபதேசம். அவள் அப்படியே பக்தி ஸ்ரத்தையாக பாராயணம் செய்த பலன் புற்றுநோய் காணாமல் போய்விட்டது. நாம் வாழ்வதே கடவுள் நம்பிக்கையில் தான்.
प्रीत्या दैत्यस्तव तनुमह:प्रेक्षणात् सर्वथाऽपि
त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद ।
मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं
वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥
priityaa daityastava tanumahaH prekshaNaat sarvathaa(a)pi
tvaamaaraadhyannajita rachayanna~njaliM sa~njagaada |
mattaH kiM te samabhilaShitaM viprasuunO vada tvaM
vyaktaM bhaktaM bhavanamavaniiM vaa(a)pi sarvaM pradaasye || 1
ப்ரீத்யா தை³த்யஸ்தவ தனுமஹ꞉ப்ரேக்ஷணாத்ஸர்வதா²(அ)பி
த்வாமாராத்⁴யன்னஜித ரசயன்னஞ்ஜலிம் ஸஞ்ஜகா³த³ |
மத்த꞉ கிம் தே ஸமபி⁴லஷிதம் விப்ரஸூனோ வத³ த்வம்
வித்தம் ப⁴க்தம் ப⁴வனமவனீம் வாபி ஸர்வம் ப்ரதா³ஸ்யே || 31-1 ||
[** பாட²பே⁴த³꞉ – வ்யக்தம் ப⁴க்தம் பு⁴வனமவனீம் **]
குருவாயூரப்பா, நீ குட்டியூண்டு ப்ராமண பிரம்மச்சாரியாக ஒளி வீசி நின்றதைப் பார்த்த மஹாபலி சக்கரவர்த்தி ரொம்ப ஆனந்தமடைந்தான். உன்னை ஒரு குட்டி தெய்வமாக எதிரில் கண்டான். இரு கை கூப்பி குனிந்து உன் முகத்தருகே முகம் வைத்து '' ப்ரம்மச்சாரியே, உனக்கு என்னப்பா வேண்டும். கேள். வீடு வாசல் வேண்டுமா, ஆகாராதிகள் வேண்டுமா, பணம் காசு வேண்டுமா, வஸ்திரங்கள் வேண்டுமா, யானை குதிரை பசு வேண்டுமா, நீ எதை வேண்டுமானாலும் கேள். அவற்றை தந்து உன்னை திருப்தி படுத்துகிறேன்.'' என்றான் வாமனனாக வந்த உன்னிடம்.
तामीक्षणां बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ-
प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् ।
भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं
सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥
taamakshiiNaaM baligiramupaakarNya kaaruNyapuurNO-
(a)pyasyOtsekaM shamayitumanaa daityavamshaM prashamsan |
bhuumiM paadatrayaparimitaaM praarthayaamaasitha tvaM
sarvaM dehiiti tu nigadite kasya haasyaM na vaa syaat || 2
தாமக்ஷீணாம் ப³லிகி³ரமுபாகர்ண்ய காருண்யபூர்ணோ(அ)-
ப்யஸ்யோத்ஸேகம் ஶமயிதுமனா தை³த்யவம்ஶம் ப்ரஶம்ஸன் |
பூ⁴மிம் பாத³த்ரயபரிமிதாம் ப்ரார்த²யாமாஸித² த்வம்
ஸர்வம் தே³ஹீதி து நிக³தி³தே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் || 31-2 ||
நாராயணா, உனக்கு சிரிப்பு வந்ததா அப்போது? பார்க்குமிடமெங்கும் நிறைந்த உன்னிடம், எல்லாவற்றையும் உருவாக்கிய உன்னிடமே உனக்கு எது வேண்டும் '' நான் தருகிறேன்'' என்கிறான் மஹா பலி . அவன் அவ்வளவு செல்வந்தனா? நீ காருண்யமூர்த்தி அல்லவா? அவன் கர்வத்தை ஆணவத்தை அடக்க அல்லவோ வந்தவன். நடித்தாய்.
'' ஆஹா, எவ்வளவு பெரிய மனசு உங்களுக்கு மஹாராஜா, உங்கள் வம்சமே கொடுத்து சிவந்த கரங்கள் கொண்டது. எனக்கு எதுவுமே வேண்டாம் ராஜா, மூன்றே மூன்று என் காலடி அளவு மண் தந்தாயானால் அதுவே போதும்'' என்கிறாய். நீ இவ்வளவு நிலம் கொடு, அவ்வளவு நிலம் கொடு என்று யாசித்தால் எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிக்கமாட்டார்களா கிருஷ்ணா "?
विश्वेशं मां त्रिपदमिह किं याचसे बालिशस्त्वं
सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् ।
यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षम: क्षेपवादान्
बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै ॥३॥
vishveshaM maaM tripadamiha kiM yaachase baalishastvaM
sarvaaM bhuumiM vR^iNu kimamunetyaalapattvaaM sa dR^ipyan |
yasmaaddarpaat tripadaparipuurtyakshamaH kshepavaadaan
bandhaM chaasaavagamadatadarhO(a)pi gaaDhOpashaantyai || 3
விஶ்வேஶம் மாம் த்ரிபத³மிஹ கிம் யாசஸே பா³லிஶஸ்த்வம்
ஸர்வாம் பூ⁴மிம் வ்ருணு கிமமுனேத்யாலபத்த்வாம் ஸ த்³ருப்யன் |
யஸ்மாத்³த³ர்பாத்த்ரிபத³பரிபூர்த்யக்ஷம꞉ க்ஷேபவாதா³ன்
ப³ந்த⁴ம் சாஸாவக³மத³தத³ர்ஹோ(அ)பி கா³டோ⁴பஶாந்த்யை || 31-3 ||
மஹாபலி ''ஹா ஹா'' என்று அட்டகாசமாக சிரித்தான்.
''என்ன குட்டி ப்ராமணரே , இப்படி இருக்கிறீர்? என்னிடம் வந்து யாசிக்கும்போது வெறும் மூன்று அடி மண்ணா கேட்பது? நான் இந்த மூவுலகத்துக்கும் அதிபதி, என்னிடம் என்ன கேட்க வேண்டும் என்று கூட தெரியாதவராக எதையோ யாசிக்கிறீரே? ஆள் தான் பார்த்தால் குழந்தையாக இருக்கிறீர் என்றால் உமது எண்ணங்களும் குழந்தைத் தனமாக இருக்கிறதே!' என் அந்தஸ்துக்கு ஏற்றபடி இந்த உலகையே கேளும், தருகிறேன்'', என்று பெருமிதத்தால் பேசினான். இந்த பெருமிதம் தான் அவனால் நீ கேட்ட மூன்றடி மண் கூட கொடுக்க முடியாமல் செய்து விட்டது. அவனைச் சிறைப்பட வைத்தது.
पादत्रय्या यदि न मुदितो विष्टपैर्नापि तुष्ये-
दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् ।
दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिन: प्रेरणात्तं
मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे ॥४॥
paadatrayyaa yadi na muditO viShTapairnaapi tuShyedityukte(
a)smin varada bhavate daatukaame(a)tha tOyam |
daityaachaaryastava khalu pariikshaarthinaH preraNaattaM
maa maa deyaM harirayamiti vyaktamevaababhaaShe|| 4
பாத³த்ரய்யா யதி³ ந முதி³தோ விஷ்டபைர்னாபி துஷ்யே-
தி³த்யுக்தே(அ)ஸ்மின்வரத³ ப⁴வதே தா³துகாமே(அ)த² தோயம் |
தை³த்யாசார்யஸ்தவ க²லு பரீக்ஷார்தி²ன꞉ ப்ரேரணாத்தம்
மா மா தே³யம் ஹரிரயமிதி வ்யக்தமேவாப³பா⁴ஷே || 31-4 ||
குருவாயூரப்பா, நீ வாமனனாக அப்போது மஹாபலிக்கு கொடுத்த பதில் உனக்கு நினைவிருக் கிறதா? உன்னருளால் எனக்கு ஞாபகம் இருக்கிறது? சொல்கிறேன் கேள்.
''அரசே, ரொம்ப சந்தோஷம் உங்கள் தாராள மனதுக்கு. நான் மகிழ்கிறேன். ஆனால் ஒரு மூன்றடி மண்ணிலேயே திருப்தி அடையாமல் ஒருவன் நீங்கள் கொடுக்கும் இந்த பூமியையே தானமாக பெற்றால் அதால் திருப்தியா அடையப்போகிறான்? ஆசைக்கு அளவேது சுவாமி ?
பிரபஞ்சமே பெற்றாலும் அப்பவும் ஏதாவது ஒரு தேவை அவனுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.''
மஹாபலி ''ஆமாம். வாஸ்தவம் '' என்று தலையசைத்தான். நீ கேட்ட மூன்றடி மண்ணை தானமாகத் தருவதற்கு தீர்த்த பாத்திரம் எடுத்தான். தாரை வார்த்து தருவது இது தான். நீ அப்போது ஒரு நாடகம் ஆடினாயே நினைவிருக்கிறதா?.
நீ மஹாபலியை சோதிக்க விரும்பினாய். அவன் பெருமையை உலகுக்கு காட்ட விரும்பினாய். ஆகவே அருகே நின்ற அசுரகுரு சுக்ராச்சாரியார் மனதில் ஒரு எண்ணத்தை விதைத்தாய். அது வேலை செய்தது. சுக்ராச்சாரியார் குறுக்கிட்டு
''அரசே,கொடுக்காதீர்கள், கொடுக்காதீர்கள், வேண்டாம் . இந்த ப்ராமண சிறுவன் சாதாரணன் அல்ல, ஸ்ரீமன் நாராயணன், மஹா விஷ்ணு , எல்லாவற்றையுமே எடுத்துச் சென்றுவிடுபவன் '' என்று சொல்லி மஹாபலியை தடுக்க வைத்தாய்.
याचत्येवं यदि स भगवान् पूर्णकामोऽस्मि सोऽहं
दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्य: ।
विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं
चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम् ॥५॥
yaachatyevaM yadi sa bhagavaan puurNakaamO(a)smi sO(a)haM
daasyaamyeva sthiramiti vadan kaavyashaptO(a)pi daityaH |
vindhyaavalyaa nijadayitayaa dattapaadyaaya tubhyaM
chitraM chitraM sakalamapi saH praarpayattOyapuurvam || 5
யாசத்யேவம் யதி³ ஸ ப⁴க³வான்பூர்ணகாமோ(அ)ஸ்மி ஸோ(அ)ஹம்
தா³ஸ்யாம்யேவ ஸ்தி²ரமிதி வத³ன் காவ்யஶப்தோ(அ)பி தை³த்ய꞉ |
விந்த்⁴யாவல்யா நிஜத³யிதயா த³த்தபாத்³யாய துப்⁴யம்
சித்ரம் சித்ரம் ஸகலமபி ஸ ப்ரார்பயத்தோயபூர்வம் || 31-5 ||
குருவாயூரப்பா, மஹாபலி இன்றும் சிரஞ்சிவியாக ஏன் இருக்கிறான் தெரியுமா? அவன் குணத்தால். நேர்மையால். சுக்ராச்சாரியார் தடுத்தும் மஹாபலி என்ன சொன்னான்?
''குருநாதா, நீங்கள் சொல்வது போல் இந்த சிறுவன் மஹா விஷ்ணுவாக இருந்தால் அது எனக்கு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ தராது. பெருமையைத் தான் தரும். மஹா விஷ்ணுவே என்னிடம் வந்து யாசகம் கேட்டார் என்ற அளவுக்கு எனக்கு சந்தோஷத்தை தரும். கேட்டவருக்கு கேட்டதெல்லாம் தந்தான் மஹாபலி என்ற பெருமை தரும்.
மஹாபலிஇடம் தீர்த்த பாத்திரத்தை அவன் மனைவி விந்த்யாவளி எடுத்து அவன் கையில் தீர்த்தம் விட்டாள் . மஹாபலி உனக்கு நீ கேட்ட மூன்றடி மண் எடுத்துக் கொள் என்று தாரை வார்த்தான் . அப்போது ஆச்சரயமாக நடந்த விஷயத்தை சொல்லட்டுமா?
निस्सन्देहं दितिकुलपतौ त्वय्यशेषार्पणं तद्-
व्यातन्वाने मुमुचु:-ऋषय: सामरा: पुष्पवर्षम् ।
दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा-
मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम् ॥६॥
nissandehaM ditikulapatau tvayyasheShaarpaNaM tat
vyaatanvaane mumuchurR^IShayaH saamaraaH puShpavarSham |
divyaM ruupaM tava cha tadidaM pashyataaM vishvabhaajaamuchchairuchchairavR^
idhadavadhiikR^itya vishvaaNDabhaaNDam || 6
நிஸ்ஸந்தே³ஹம் தி³திகுலபதௌ த்வய்யஶேஷார்பணம் தத்³-
வ்யாதன்வானே முமுசுர்ருஷய꞉ ஸாமரா꞉ புஷ்பவர்ஷம் |
தி³வ்யம் ரூபம் தவ ச ததி³த³ம் பஶ்யதாம் விஶ்வபா⁴ஜா-
முச்சைருச்சைரவ்ருத⁴த³வதீ⁴க்ருத்ய விஶ்வாண்ட³பா⁴ண்ட³ம் || 31-6 ||
குருவாயூரப்பா, விண்ணவர்கள் யாவரும் மலர் மாரி பொழிந்தார்கள். மஹாபலியை பாராட்டி னார்கள். தன்னிடமிருந்ததை எல்லாம் தானம் செய்துவிட்டானே. எல்லோரும் பிரமிக்க நீ ஆகாசத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்தாய்.
त्वत्पादाग्रं निजपदगतं पुण्डरीकोद्भवोऽसौ
कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् ।
हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन्
भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली ॥७॥
tvatpaadaagraM nijapadagataM puNDariikOdbhavO(a)sau
kuNDiitOyairasichadapunaadyajjalaM vishvalOkaan |
harShOtkarShaat subahu nanR^ite khecharairutsave(a)smin
bheriinnighnan bhuvanamacharajjaambavaan bhaktishaalii || 7
த்வத்பாதா³க்³ரம் நிஜபத³க³தம் புண்ட³ரீகோத்³ப⁴வோ(அ)ஸௌ
குண்டீ³தோயைரஸிசத³புனாத்³யஜ்ஜலம் விஶ்வலோகான் |
ஹர்ஷோத்கர்ஷாத்ஸுப³ஹு நன்ருதே கே²சரைருத்ஸவே(அ)ஸ்மின்
பே⁴ரீம் நிக்⁴னன் பு⁴வனமசரஜ்ஜாம்ப³வான் ப⁴க்திஶாலீ || 31-7 ||
ப்ரம்ம லோகத்தில் விண்ணை அளந்த உன் ஒரு பாதம் தெரிந்தது. ப்ரம்மா அதற்கு பாத பூஜை செய்தார். அந்த பாதாபிஷேக ஜலம் பிரபஞ்சத்தை தூய்மைப் படுத்தியது. பூமியில் கங்கையாக ஓடியது. தேவர்கள் கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் எல்லோரும் ஆடினார்கள் பாடினார்கள். உன் பக்தன் ஜாம்பவான் பக்தியில் பாடிக்கொண்டு ஆனந்தமாக ஆடிக்கொண்டு உலகைச் சுற்றி வந்தான்.
तावद्दैत्यास्त्वनुमतिमृते भर्तुरारब्धयुद्धा
देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् ।
कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिता: स्म:
किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पातालमापु: ॥८॥
taavaddaityaastvanumatimR^ite bharturaarabdhayuddhaaH
devOpetairbhavadanucharaissangataa bhangamaapan |
kaalaatmaa(a)yaM vasati puratO yadvashaat praagjitaaH smaH
kiM vO yuddhairiti baligiraa te(a)tha paataalamaapuH || 8
தாவத்³தை³த்யாஸ்த்வனுமதிம்ருதே ப⁴ர்துராரப்³த⁴யுத்³தா⁴
தே³வோபேதைர்ப⁴வத³னுசரைஸ்ஸங்க³தா ப⁴ங்க³மாபன் |
காலாத்மாயம் வஸதி புரதோ யத்³வஶாத்ப்ராக்³ஜிதா꞉ ஸ்ம꞉
கிம் வோ யுத்³தை⁴ரிதி ப³லிகி³ரா தே(அ)த² பாதாலமாபு꞉ || 31-8 ||
அசுரர்கள் இதை ஏற்பார்களா, கோபத்தோடு, அவர்கள் தலைவன் மஹாபலி இல்லாமலேயே தேவர்களோடு போரிட்டார்கள். தோல்வியடைந்தார்கள். அசுரர்களுக்கு நீ கால தேவன், காலாத்மா, என்று உணர்த்தினாய். இது வரை அவர்கள் வென்றதே உன் கருணையால் என்று புரியவைத்தாய். எல்லோரையும் பாதாளத்திற்கு அனுப்பி வைத்தாய்.
पाशैर्बद्धं पतगपतिना दैत्यमुच्चैरवादी-
स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि ।
पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं
प्रह्लाद्स्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम् ॥९॥
paashairbaddhaM patagapatinaa daityamuchchairavaadii
staarttiiyiikaM disha mama padaM kiM na vishveshvarO(a)si |
paadaM muurdhni praNaya bhagavannityakampaM vadantaM
prahlaadastaM svayamupagatO maanayannastaviittvaam || 9
பாஶைர்ப³த்³த⁴ம் பதக³பதினா தை³த்யமுச்சைரவாதீ³-
ஸ்தார்தீயீகம் தி³ஶ மம பத³ம் கிம் ந விஶ்வேஶ்வரோ(அ)ஸி |
பாத³ம் மூர்த்⁴னி ப்ரணய ப⁴க³வன்னித்யகம்பம் வத³ந்தம்
ப்ரஹ்லாத³ஸ்தம் ஸ்வயமுபக³தோ மானயன்னஸ்தவீத்த்வாம் || 31-9 ||
நாராயணா, வாதபுரீஸ்வரா, இந்த மூவுலகும் ஈரடியால் அழிந்துவிட்ட நீ, சகலமும் இழந்த மஹாபலியை எதிரே வருணன்கயிற்றால் கட்டி அடிமையாக நிற்கவைக்க, ''மஹாபலி, நீ
மூன்று உலகுக்கும் அதிபதி என்கிறாயே, ஈரடியில் எல்லாமே அடங்கியபின் நான் கேட்ட மூன்றாவது அடி மண் எங்கே, கொடு? '' என்று கேட்டாய்.
ப்ரபோ, நான் எல்லாம் இழந்தவன். நான் மட்டுமே இருக்கிறேன். என் சிரத்தை மூன்றாவது அடியாக பாவித்து ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறேன்''என்றான். அவனருகே பிரஹலாதன் நின்று கொண்டிருந்தான். அவன் உன் பக்தன் அல்லவா? மனதார உன்னை பிரார்த்தித்தான்.
दर्पोच्छित्त्यै विहितमखिलं दैत्य सिद्धोऽसि पुण्यै-
र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् ।
मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं
विप्रैस्सन्तानितमखवर: पाहि वातालयेश ॥१०॥
darpOchChittyai vihitamakhilaM daitya siddhO(a)si puNyairlOkaste(
a)stu tridivavijayii vaasavatvaM cha pashchaat |
matsaayujyaM bhaja cha punarityanvagR^ihNaabaliM taM
vipraissantaanitamakhavaraH paahi vaataalayesha ||10
த³ர்போச்சி²த்த்யை விஹிதமகி²லம் தை³த்ய ஸித்³தோ⁴(அ)ஸி புண்யை-
ர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி³வவிஜயீ வாஸவத்வம் ச பஶ்சாத் |
மத்ஸாயுஜ்யம் ப⁴ஜ ச புனரித்யன்வக்³ருஹ்ணா ப³லிம் தம்
விப்ரைஸ்ஸந்தானிதமக²வர꞉ பாஹி வாதாலயேஶ || 31-10 ||
கிருஷ்ணா, நீ மஹாபலியிடம் அப்போது 'மஹாபலி, நான் இப்படி செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா? உன் கர்வம், ஆணவம் அடங்குவதற்கு. அஹங்காரம் எவரையும் அழித்துவிடும் என்று உணர்த்துவதற்கு. நீ நல்லவன். அசுரர்களின் அதிபதி. எத்தனையோ நற் காரியங்கள் செய்தவன். வேண்டியதை எல்லாம் அதனால் அடைந்தவன். உனக்கு விண்ணுலகை விட, ஒரு சிறந்த பெரிய உலகம் அமைக்கிறேன். அதை நீ ஆண்டு கொண்டு சுகமாக இரு. தக்க நேரம் வந்தபோது நீ என்னை வந்தடைவாய்.
என்னப்பா, எண்ட குருவாயூரப்பா, நீ இவ்வாறு மஹாபலியின் அஸ்வமேத யாகத்தை சிறப்பாக நிறைவேற்றி கொடுத்து சிறந்த தானங்கள் தர செய்தாய். இதற்கு சுக்ராச்சாரியார் போன்ற வர்களை ஈடுபடுத்தினாய். உலகுக்கு மஹாபலியின் பெருமையை உணர்த்தினாய். என் நோயை தீர்த்து என்னையும் ரக்ஷிக்கவேண்டாமா?