Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 42
42. சக்கரன் பொடியானான்.

ஸ்ரீமந் நாராயணீயம் விறுவிறுப்பான ஒரு பக்தி நூல், அற்புத ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களில் மேப்பத்தூர் நாராயண பட்டத்ரியால் ஸ்ரீ குருவாயூரப்பன் முன்பு உட்கார்ந்து பாடப்பெற்றது.

ரெண்டு சந்தர்ப்பங்களில் ஸ்ரீ கிருஷ்ணன் தன்னைப்பற்றி பக்தன் சொல்வதை விருப்பத்தோடு கேட்டான். ஒன்று மஹா பாரதத்தில் பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் படுத்துக்கொண்டு யுதிஷ்டிரனுக்கு ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை விளக்கிச் சொன்னபோது குருக்ஷேத்திர யுத்த களத்தில் அருகே நின்று தனது மஹிமையை விளக்குவதை கேட்டான். அடுத்தது குருவாயூரில் நாராயண பட்டத்ரி, தனக்கு எதிரே வாத நோயோடு அமர்ந்து தனது லீலைகளை பாடுவதை நின்றுகொண்டு குட்டி கிருஷ்ணனாக கேட்டான். ஸ்ரீமந் நாராயணீயம் இந்த ரெண்டாவது சந்தர்ப்ப விஷயம்.

कदापि जन्मर्क्षदिने तव प्रभो निमन्त्रितज्ञातिवधूमहीसुरा ।
महानसस्त्वां सविधे निधाय सा महानसादौ ववृते व्रजेश्वरी ॥१॥

kadaa(a)pi janmarkshadine tava prabhO nimantritaj~naati vadhuu mahiisuraa |
mahaanasastvaaM savidhe nidhaaya saa mahaanasaadau vavR^ite vrajeshvarii || 1

கதா³பி ஜன்மர்க்ஷதி³னே தவ ப்ரபோ⁴ நிமந்த்ரிதஜ்ஞாதிவதூ⁴மஹீஸுரா |
மஹானஸஸ்த்வாம் ஸவிதே⁴ நிதா⁴ய ஸா மஹானஸாதௌ³ வவ்ருதே வ்ரஜேஶ்வரீ || 42-1 ||

கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே , அவன் மண்ணில் பிறந்ததும், அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தாயிற்று. அவனோ 125 வருஷங்கள் வாழ்ந்தவன். இன்றும் அவனது பிறந்தநாள் வெகு விமரிசையாக ஹிந்துக்கள் வீடுகள் எங்கிலும் உலகில் குட்டி குட்டி மாக்கோல கால் சுவடு களோடு கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ் டமி என்று பல பெயர்களோடு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தினமாகிவிட்டது.

அப்படி உன் பிறந்த நாள் கோகுலத்தில் கோபியர்கள் புடைசூழ கொண்டாடப்பட்டது. அந்த காலத்தில் சமையல் கான்ட்ராக்டர்கள் கிடையாது. வரும் விருந்தினர்கள், அதிதிக்களுக்கு தானே சமைத்து பரிமாறும் வழக்கம். ஆகவே யசோதையும் மற்ற பெண்களும் விடிகாலையிலிருந்தே சமையல் கட்டில் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். குட்டி கிருஷ்ணன் தூக்கம் கெட்டு விடக்கூடாது என்று அவனை சந்தடியில்லாத, அமைதியான ஒரு அறையில் படுக்க வைத்திருந் தார்கள். அந்த அறையில் ஒரு பெரிய மர வண்டி, உபயோகம் இல்லாமால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. ரெண்டு பெரிய மர சக்ரங்களோடு அந்த வண்டி அறையில் நின்றிருந்தது. குட்டி கிருஷ்ணன் அந்த வண்டியின் அடியில் சத்தமில்லாமல் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். துணைக்காக அறையில் ஒரு சில பையன்கள் ஓரமாக விளையாடிக் கொண்டிருந் தார்கள். வேறு யாருமில்லை.

ततो भवत्त्राणनियुक्तबालकप्रभीतिसङ्क्रन्दनसङ्कुलारवै: ।
विमिश्रमश्रावि भवत्समीपत: परिस्फुटद्दारुचटच्चटारव: ॥२॥

tatO bhavattraaNa niyukta baalaka prabhiiti sankrandana sankulaaravaiH |
vimishramashraavi bhavatsamiipataH parisphuTaddaaru chaTachchaTaaravaH || 2

ததோ ப⁴வத்த்ராணனியுக்தபா³லக-ப்ரபீ⁴திஸங்க்ரந்த³னஸங்குலாரவை꞉ |
விமிஶ்ரமஶ்ராவி ப⁴வத்ஸமீபத꞉ பரிஸ்பு²டத்³தா³ருசடச்சடாரவ꞉ || 42-2 ||

திடீரென்று மரங்கள் உடைந்து பொடிபடும் பெரிய சத்தம் கேட்டது. ''ஆ, ஐயோ'' என்று பையன்கள் கூச்சலிடும் சத்தமும் கேட்டது.

ततस्तदाकर्णनसम्भ्रमश्रमप्रकम्पिवक्षोजभरा व्रजाङ्गना: ।
भवन्तमन्तर्ददृशुस्समन्ततो विनिष्पतद्दारुणदारुमध्यगम् ॥३॥

tatastadaakarNana sambhrama shrama prakampi vakshOjabharaa vrajaanganaaH |
bhavantamantardadR^ishussamantatO viniShpataddaaruNa daarumadhyagam || 3

ததஸ்ததா³கர்ணனஸம்ப்⁴ரமஶ்ரம-ப்ரகம்பிவக்ஷோஜப⁴ரா வ்ரஜாங்க³னா꞉ |
ப⁴வந்தமந்தர்த³த்³ருஶு꞉ ஸமந்ததோ வினிஷ்பதத்³தா³ருணதா³ருமத்⁴யக³ம் || 42-3 ||

சமையல் அறையில், மற்றும் வேறெங்கோ அந்த அரண்மனையில் இருந்த அனைத்து கோபிய ர்களும் இந்த கூச்சல் சத்தம் கேட்டு ஓடோடி வந்தார்கள். நந்தகோபனின் அந்த பெரிய அரண்மனையில் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் குருவாயூரப்பா, நீ அழகாக, உடைந்த மரச் சக்கரங்களின் இடையே விளையாடிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தாய். எப்படி அந்த பிரம்மாண்ட சக்ரங்கள் தானாகவே உடைந்து தூளாகியது??

शिशोरहो किं किमभूदिति द्रुतं प्रधाव्य नन्द: पशुपाश्च भूसुरा: ।
भवन्तमालोक्य यशोदया धृतं समाश्वसन्नश्रुजलार्द्रलोचना: ॥४॥

shishOrahO kiM kimabhuuditi drutaM pradhaavya nandaH pashupaashchabhuusuraaH |
bhavantamaalOkya yashOdayaa dhR^itaM samaashvasannashru jalaardralOchanaaH || 4

ஶிஶோரஹோ கிம் கிமபூ⁴தி³தி த்³ருதம் ப்ரதா⁴வ்ய நந்த³꞉ பஶுபாஶ்ச பூ⁴ஸுரா꞉ |
ப⁴வந்தமாலோக்ய யஶோத³யா த்⁴ருதம் ஸமாஶ்வஸன்னஶ்ருஜலார்த்³ரலோசனா꞉ || 42-4 ||

நந்தகோபன், யசோதை, தோழிகள், வேலையாட்கள், பிராமணர்கள், மற்ற விருந்தாளிகள் அனைவரும் மூச்சிரைக்க ஓடிவந்து வாயைப் பிளந்தார்கள்.

“என்னாச்சு, என்னாச்சு குழந்தைக்கு, எப்படி இந்த உறுதியான பெரிய வண்டிச்சக்கரம் தூள் தூளாக உடைந்தது? யசோதை ஓடி வந்து வாரி எடுத்து உன்னை இடுப்பில் தூக்கிக் கொண்டாள். அவள் கண்களில் இன்னொரு யமுனை ஆறு.

कस्को नु कौतस्कुत एष विस्मयो विशङ्कटं यच्छकटं विपाटितम् ।
न कारणं किञ्चिदिहेति ते स्थिता: स्वनासिकादत्तकरास्त्वदीक्षका: ॥५॥

kaskO nu kautaskuta eSha vismayO vishankaTaM yachChakaTaM vipaaTitam |
na kaaraNaM ki~nchidiheti te sthitaaH svanaasikaadattakaraasvadiikshakaaH || 5

கஸ்கோ நு கௌதஸ்குத ஏஷ விஸ்மயோ விஶங்கடம் யச்ச²கடம் விபாடிதம் |
ந காரணம் கிஞ்சிதி³ஹேதி தே ஸ்தி²தா꞉ ஸ்வனாஸிகாத³த்தகராஸ்த்வதீ³க்ஷகா꞉ || 42-5 ||

நந்தகோபன் சுற்றிலும் பார்த்தான். மூக்கின் மேல் விரல் வைத்து யோசித்தான். இவ்வளவு பெரிய தேர் சக்கரம் போன்ற வண்டி சக்கரம் ஏன், எப்படி, திடீரென்று உடைந்து சிதறி இருக்கிறது. எப்படி வண்டி அடியில் படுத்திருந்த கண்ணன் ஆபத்தில் தப்பி, அந்த மரச் சிதறல்கள் மேல் ஏறி விளையாடுகிறான். நம்ப முடியாத ஆச்சர்யம் அதிசயம் என்றால் அது இது தான். வண்டி உடைந்து உருக்குலைந்த காரணம் என்ன?

कुमारकस्यास्य पयोधरार्थिन: प्ररोदने लोलपदाम्बुजाहतम् ।
मया मया दृष्टमनो विपर्यगादितीश ते पालकबालका जगु: ॥६॥

kumaarakasyaasya payOdharaarthinaH prarOdane lOlapadaambujaahatam |
mayaa mayaa dR^iShTamanO viparyagaaditiisha te paalaka baalakaa jaguH || 6

குமாரகஸ்யாஸ்ய பயோத⁴ரார்தி²ன꞉ ப்ரரோத³னே லோலபதா³ம்பு³ஜாஹதம் |
மயா மயா த்³ருஷ்டமனோ விபர்யகா³தி³தீஶ தே பாலகபா³லகா ஜகு³꞉ || 42-6 ||

அங்கே இருந்த பையன்களை விசாரித்ததில் என்ன தெரிந்தது? உன் கூட துணை இருக்க தானே அவர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டார்கள். ''அம்மா யசோதையிடம் பால் குடிக்க கண்ணன் அழுதான். கைகால்களை உதைத்து வீறிட்டு அழுதான். மெதுவாக நகர்ந்தான். அவன் கால்கள் அந்த பெரிய வண்டிச் சக்கரங்கள் மேல் மேல் பட்டன. காலால் அதை உதைத்தான். அடுத்த கணமே அந்த சக்ரங்கள் பிளந்து உடைந்து தூளாயின. கண்ணன் நகர்ந்து வெளியே வந்து அந்த குவியல் மேல் தவழ்ந்தான். இதுதான் நாங்கள் பார்த்தோம்.'' என்கிறார்கள்.

भिया तदा किञ्चिदजानतामिदं कुमारकाणामतिदुर्घटं वच: ।
भवत्प्रभावाविदुरैरितीरितं मनागिवाशङ्क्यत दृष्टपूतनै: ॥७॥

bhiyaa tadaa kinchidajaanataamidaM kumaarakaaNaaM atidurghaTaM vachaH |
bhavatprabhaavaavidurairitiiritaM manaagivaashankyata dR^iShTapuutanaiH || 7

பி⁴யா ததா³ கிஞ்சித³ஜானதாமித³ம் குமாரகாணாமதிது³ர்க⁴டம் வச꞉ |
ப⁴வத்ப்ரபா⁴வாவிது³ரைரிதீரிதம் மனாகி³வாஶங்க்யத த்³ருஷ்டபூதனை꞉ || 42-7 ||

குருவாயூரப்பா, உன் மஹிமை, பெருமை அறியாதவர்கள் எப்படி இதை நம்புவார்கள்? 'இந்த பையன்கள் சொல்லுவது நம்பும்படியாகவே இல்லையே. வேறு ஏதோ நடந்திருக்கிறது? ''ஆனால் பூதனை என்ற ராக்ஷஸி விசித்திரமாக மரணமடைந்ததைக் கண்டவர்கள் இந்த விஷயத்தை ஜீரணிக்க முடிந்தது. அதுமாதிரி இன்னொரு அதிசயம் இது என்று தலையாட்டி ஒப்புக் கொண்டார்கள்.

प्रवालताम्रं किमिदं पदं क्षतं सरोजरम्यौ नु करौ विरोजितौ।
इति प्रसर्पत्करुणातरङ्गितास्त्वदङ्गमापस्पृशुरङ्गनाजना: ॥८॥

pravaalataamraM kimidaM padaM kshataM sarOjaramyau nu karau virOjitau |
iti prasarpatkaruNaatarangitaa stvadangamaapaspR^ishuranganaajanaaH || 8

ப்ரவாலதாம்ரம் கிமித³ம் பத³ம் க்ஷதம் ஸரோஜரம்யௌ நு கரௌ விரோஜிதௌ |
இதி ப்ரஸர்பத்கருணாதரங்கி³தா-ஸ்த்வத³ங்க³மாபஸ்ப்ருஶுரங்க³னாஜனா꞉ || 42-8 ||

''எல்லா கோபியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனாலும் ஓடி வந்து கிருஷ்ணா, உன்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிப் பார்த்தார்கள். ''என் கண்ணுக்கு, கண்ணனுக்கு, எங்காவது அடி பட்டுவிட்டதோ, காயம் ஏற்பட்டதோ என்று தடவிப்பார்த்து, தேடினார்கள். உன் மீது எல்லோருக்குமே தாய்ப்பாசம்.

''என்னடா குழந்தே உனக்கு மாத்தி மாத்தி ஏதாவது ஒரு ஆபத்து வந்து கொண்டே இருக்க்கிறது. உன்னை பகவான் தான் காப்பாத்தறார். என்று பகவானிடமே மனம் உருகி அவர்கள் சொல்வதை நீ கேட்டுக் கொண்டே சிரித்தாய்.

अये सुतं देहि जगत्पते: कृपातरङ्गपातात्परिपातमद्य मे ।
इति स्म सङ्गृह्य पिता त्वदङ्गकं मुहुर्मुहु: श्लिष्यति जातकण्टक: ॥९॥

aye sutaM dehi jagatpateH kR^ipaa tarangapaataatparipaatamadya me |
iti sma sangR^ihya pitaa tvadangakaM muhurmuhuH shliShyati jaatakaNTakaH || 9

அயே ஸுதம் தே³ஹி ஜக³த்பதே꞉ க்ருபாதரங்க³பாதாத்பரிபாதமத்³ய மே |
இதி ஸ்ம ஸங்க்³ருஹ்ய பிதா த்வத³ங்க³கம் முஹுர்முஹு꞉ ஶ்லிஷ்யதி ஜாதகண்டக꞉ || 42-9 ||

நந்தகோபன் யசோதை கையிலிருந்து உன்னை வேகமாக பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டான். அவனால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ''என் கண்மணி கிருஷ்ணா, பகவான் அருளால் நீ பிழைத்தாய் அப்பா. என் செல்வத்தை என்கிட்டே கொடு '' என்று வாங்கி அனைத்து உனக்கு விடாமல் மாறி மாறி இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான்.

अनोनिलीन: किल हन्तुमागत: सुरारिरेवं भवता विहिंसित: ।
रजोऽपि नो दृष्टममुष्य तत्कथं स शुद्धसत्त्वे त्वयि लीनवान् ध्रुवम् ॥१०॥

anOniliinaH kila hantumaagataH suraarirevaM bhavataa vihimsitaH |
rajO(a)pi nO dR^iShTamamuShya tatkathaM sa shuddhasattve tvayi liinavaandhruvam || 10

அனோனிலீன꞉ கில ஹந்துமாக³த꞉ ஸுராரிரேவம் ப⁴வதா விஹிம்ஸித꞉ |
ரஜோ(அ)பி நோ த்³ருஷ்டமமுஷ்ய தத்கத²ம் ஸ ஶுத்³த⁴ஸத்த்வே த்வயி லீனவாந்த்⁴ருவம் || 42-10 ||

என்ன நடந்தது என்பது உனக்குத் தெரியும், கம்ஸன் அனுப்பிய அசுரனுக்கு தெரியும். ஆனால் சொல்ல அவன் இப்போது உயிரோடு இல்லை. கம்சன் தானாகவே அவன் திரும்பாததால் விஷயம் அறிந்து கொள்வான். நீயோ யாரிடமும் சொல்லப் போவதும் இல்லை. உன்னால் எனக்கு தெரியும். நான் சொல்கிறேன். மற்றவர்களுக்கும் தெரியவேண்டாமா? பூதனை இறந்ததும் ஒரு மீட்டிங் போட்ட கம்ஸன் ஆடிப் போய் விட்டான். அடுத்தது ஒரு ராக்ஷஸன் நான் சென்று அந்த குழந்தையை கொன்று விட்டு வருகிறேன் என்று மீசையை முறுக்கினான். அவனை சகடாசுரன் என்று அழைப்போம். இறந்தவன் பேர் தெரிந்து என்ன செய்யப்போகிறோம்? அவன் நந்தகோபன் அரண்மனைக்கு வந்தான். உனக்குப் பிறந்தநாள் என்பதால் பெரிய கூட்டத்தை பார்த்தான். சிரித்தான். உன் பிறந்த நாள் இறந்த நாளாகப்போகிறது அவனால் என்று மகிழ்ந்தான். அவன் எந்த உருவமும் எடுக்க முடித்தவன். உன்னைத் தனியாக அந்த வண்டிக்கு ரெண்டு தேர் சக்கரங்கள்மாதிரி பெரிதாக இருந்தது அவனுக்கு கண்ணில் பட்டதும் ஒரு எண்ணத்தை கொடுத்தது. தூக்கத்திலேயே உன்னைச் சத்தமில்லாமல் நொடியில் கொன்றுவிட இது நல்ல சந்தர்ப்பம் என்று அந்த சக்கரங்களில் புகுந்து கொண்டு நகர ஆரம்பித்தான். வண்டியின் அடியில் நீ படுத்திருந்தது அவனுக்கு ரொம்ப சௌகரியமாக போய்விட்டது. சகடம் என்றால் சக்கரம்.

அவன் வரப்போகிறான் என்று உனக்கு தெரியும், வந்தது, சக்கரத்தில் அவன் மறைந்தது எல்லாமும் தெரியும், சக்கரம் வேகமாக உன்னை நசுக்கிக் கொல்லப்போகிறது என்றும் தெரியும். அதற்கு காத்திருப்பானேன், கையில் கிடைத்தவனை காலாலேயே கொன்றுவிடுவோம் என்று தீர்மானித் தாய். உன் காலால் ஒரு உதைக்கு மேல் அவனுக்கு தேவைப்படவில்லை. சக்கரம் தூளாயிற்று. அசுரன் அட்ரஸ் இல்லாமல் பொடியானான்.

प्रपूजितैस्तत्र ततो द्विजातिभिर्विशेषतो लम्भितमङ्गलाशिष: ।
व्रजं निजैर्बाल्यरसैर्विमोहयन् मरुत्पुराधीश रुजां जहीहि मे ॥११॥

prapuujitaistatra tatO dvijaatibhiH visheShatO lambhita mangalaashiShaH |
vrajaM nijaiH baalyarasaiH vimOhayan marutpuraadhiisha rujaaM jahiihi me || 11

ப்ரபூஜிதைஸ்தத்ர ததோ த்³விஜாதிபி⁴ர்விஶேஷதோ லம்பி⁴தமங்க³லாஶிஷ꞉ |
வ்ரஜம் நிஜைர்பா³ல்யரஸைர்விமோஹயன்மருத்புராதீ⁴ஶ ருஜாம் ஜஹீஹி மே || 42-11

''எண்டே குருவாயூரப்பா, இதை விஷயமறியாத மற்றவர்கள் ஏதோ அதிர்ஷ்டம், நீ பகவான் கிருபையால் தப்பினாய். உள்ளே மந்திரம் சொல்கிற பிராமணர்கள் அவர்கள் மந்திரபலத்தால் தப்பினாய் என்கிறார்கள். எது எப்படி ஆனால் என்ன நீ வந்த காரியம் ஒவ்வொன்றையும் கன கச்சிதமாக நடத்தி வருகிறாய். ஸ்பெஷல் பூஜை பண்ணி உன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடி னார்கள். நீடூழி வாழ வேண்டும் என்று உன்னை ஆசிர்வதித்தார்கள். வ்ரஜ பூமியை சந்தோஷமாக ஸ்வர்கமாக ஆக்கி எல்லோரையும் மகிழ்வித்தவனே, கிருஷ்ணா, என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷிப்பாயா?