Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 32
32. தானாக மீனாக வந்தவனே!

पुरा हयग्रीवमहासुरेण षष्ठान्तरान्तोद्यदकाण्डकल्पे ।
निद्रोन्मुखब्रह्ममुखात् हृतेषु वेदेष्वधित्स: किल मत्स्यरूपम् ॥१॥

puraa hayagriiva mahaasureNa ShaShThaantaraantOdyadakaaNDakalpe |
nidrOnmukha brahma mukhaaddhR^iteShu vedeShvadhitsaH kila matsyaruupam || 1

புரா ஹயக்³ரீவமஹாஸுரேண ஷஷ்டா²ந்தராந்தோத்³யத³காண்ட³கல்பே |
நித்³ரோன்முக²ப்³ரஹ்மமுகா²த்³த்⁴ருதேஷு வேதே³ஷ்வதி⁴த்ஸ꞉ கில மத்ஸ்யரூபம் || 32-1 ||

குருவாயூரப்பா, நீ ஜனார்தனனாக என்ன செய்தாய் என்று ஞாபகப்படுத்தட்டுமா? யுக ஆரம்பத்தில், எங்கும் ஜல பிரவாஹமாக பிரளயம் நிலவியது. 16 ஆயிரம் வருஷங்களாக தொடர்ந்து அசுரர்களோடு யுத்தம். தேவர்கள் சக்தி இழந்து களைத்தார்கள் . ஆஹா இப்போது விஷ்ணு அல்லவா நம்மைக் காப்பாற்ற சரியானவர் என்று தேவர்கள் உன்னை வேண்டினார்கள். ஹயக்ரீவன் என்கிற சக்தி வாய்ந்த அசுரன், சரஸ்வதி நதிக்கரையில் வெகுகாலம் தவமிருந்து சக்தி பெற்றவன். சாகா வரம் கேட்டு அது கிடைக்காது என்று அறிந்து ''சரி குதிரை முகம் கொண்ட ஒரு ஜீவனால் என்னை வெல்ல முடியட்டும்'' என்று ஏனோ கேட்டுவிட்டான். குதிரை முக மனிதன் எப்போதும் கிடையாது. ஆகவே நமக்கும் சாவு கிடையாது என்ற கெட்டிக்காரத்தன எண்ணம்
அவனுக்கு. அப்போது தான் நீ ஹயவதனனாக உருவெடுத்தாய். ஹயக்ரீவன் என்கிற ராக்ஷ
சனைக் கொன்றாய். மது கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டாய். கடலுக்கடியில் இருந்த வேதங்களை மீட்க நீ எடுத்த முதல் தசாவதாரம் தானே இந்த மத்ஸ்ய அவதாரம். அதைப் பற்றி சொல்கிறேன் கேள்.

सत्यव्रतस्य द्रमिलाधिभर्तुर्नदीजले तर्पयतस्तदानीम् ।
कराञ्जलौ सञ्ज्वलिताकृतिस्त्वमदृश्यथा: कश्चन बालमीन: ॥२॥

satyavratasya dramilaadhibharturnadiijale tarpayatastadaaniim |
karaa~njalau sanjvalitaakR^itistvamadR^ishyathaaH kashchana baalamiinaH || 2

ஸத்யவ்ரதஸ்ய த்³ரமிலாதி⁴ப⁴ர்துர்னதீ³ஜலே தர்பயதஸ்ததா³னீம் |
கராஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலிதாக்ருதிஸ்த்வமத்³ருஶ்யதா²꞉ கஶ்சன பா³லமீன꞉ || 32-2 ||

ஸத்யவ்ருதன் என்று ஒரு ராஜ ரிஷி. காட்டில் தவம் செயது கொண்டிருந்தான். ஒரு நாள் சாயங்காலம் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தபோது அவன் முன் நீ ஒரு குட்டி மீனாக காட்சி அளித்தாய். ஜலமின்றி தத்தளித்தாய்.

क्षिप्तं जले त्वां चकितं विलोक्य निन्येऽम्बुपात्रेण मुनि: स्वगेहम् ।
स्वल्पैरहोभि: कलशीं च कूपं वापीं सरश्चानशिषे विभो त्वम् ॥३॥

kshiptaM jale tvaaM chakitaM vilOkya ninye(a)mbu paatreNa muniH svageham |
svalpairahObhiH kalashiiM cha kuupaM vaapiiM sarashchaanashiShe vibhO
tvam || 3

க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நின்யே(அ)ம்பு³பாத்ரேண முனி꞉ ஸ்வகே³ஹம் |
ஸ்வல்பைரஹோபி⁴꞉ கலஶீம் ச கூபம் வாபீம் ஸரஶ்சானஶிஷே விபோ⁴ த்வம் || 32-3 ||

அடாடா இந்த சின்ன மீன் குஞ்சு தடுமாகிறதே என்று எடுத்து ஜலத்தில் விடப்போனான். நீ மிரள்வதைக் கண்டு, தனது கமண்டலத்தில் இருந்த ஜலத்தில் உன்னை விட்டு ஆஸ்ரமத்துக்கு தூக்கிச் சென்றான். கொஞ்ச நாளிலேயே நீ பெரிதாக வளர்ந்து கமண்டலத்தில் இடம் போதவில்லை. ஆகவே உன்னை ஒரு குளத்தில் விட்டான். அப்புறம் அதுவும் போதவில்லை என்று ஒரு பெரிய ஏரியில் கொண்டு போய் விட்டான்.

योगप्रभावाद्भवदाज्ञयैव नीतस्ततस्त्वं मुनिना पयोधिम् ।
पृष्टोऽमुना कल्पदिदृक्षुमेनं सप्ताहमास्वेति वदन्नयासी: ॥४॥

yOgaprabhaavaadbhavadaaj~nayaiva niitastatastvaM muninaa payOdhim |
pR^iShTO(a)munaa kalpadidR^ikshumenaM saptaahamaasveti vadannayaasiiH || 4

யோக³ப்ரபா⁴வாத்³ப⁴வதா³ஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முனினா பயோதி⁴ம் |
ப்ருஷ்டோ(அ)முனா கல்பதி³த்³ருக்ஷுமேனம் ஸப்தாஹமாஸ்வேதி வத³ன்னயாஸீ꞉ || 32-4 ||

நீயே வளர்ந்த மீனாக, சத்யவ்ரதனுக்கு ''என்னைக் கொண்டு போய் சமுத்திரத்தில் விடு '' என்று கட்டளையிட்டாய்.

''பிரளயம் வரப்போகிறதாமே, எங்கும் ஜலமாக இருக்குமாம். நான் அதை பார்க்க வேண்டுமே என்று சத்யவ்ரதன் கேட்டபோது நீ என்ன சொன்னாய்? ''இன்னும் ஏழு நாள் பொறுத்திரு'' என்று தான் பதில் சொல்லிவிட்டு மறைந்தாய்.''

प्राप्ते त्वदुक्तेऽहनि वारिधारापरिप्लुते भूमितले मुनीन्द्र: ।
सप्तर्षिभि: सार्धमपारवारिण्युद्घूर्णमान: शरणं ययौ त्वाम् ॥५॥

praapte tvadukte(a)hani vaaridhaaraa pariplute bhuumitale muniindraH |
saptarShibhiH saardhamapaaravaari NyudghuurNamaanaH sharaNaM yayautvaam ||

ப்ராப்தே த்வது³க்தே(அ)ஹனி வாரிதா⁴ராபரிப்லுதே பூ⁴மிதலே முனீந்த்³ர꞉ |
ஸப்தர்ஷிபி⁴꞉ ஸார்த⁴மபாரவாரிண்யுத்³கூ⁴ர்ணமான꞉ ஶரணம் யயௌ த்வாம் || 32-5 ||

கிருஷ்ணா, அப்புறம் என்ன, ஒரு வாரம் ஆச்சு. எதிர்பார்த்த பிரளயம் நிகழ்ந்துவிட்டது. எங்கும் ஜலமயம். பூமியே கண்ணுக்கு தெரியவில்லை. சத்யவ்ரதன், சப்த ரிஷிகளோடு ஜலத்தில் தூக்கி எறியப்பட்டான். பகவானே என்று உன்னை சரணடைந்தான்.

धरां त्वदादेशकरीमवाप्तां नौरूपिणीमारुरुहुस्तदा ते
तत्कम्पकम्प्रेषु च तेषु भूयस्त्वमम्बुधेराविरभूर्महीयान् ॥६॥

dharaantvadaadeshakariimavaaptaaM nauruupiNiimaaruruhustadaa te |
tatkampakampreShu cha teShu bhuuya stvamambudheraavirabhuurmahiiyaan || 6

த⁴ராம் த்வதா³தே³ஶகரீமவாப்தாம் நௌரூபிணீமாருருஹுஸ்ததா³ தே |
தத்கம்பகம்ப்ரேஷு ச தேஷு பூ⁴யஸ்த்வமம்பு³தே⁴ராவிரபூ⁴ர்மஹீயான் || 32-6 ||

நீ விட்டு விடுவாயா உன் பக்தர்களை? போய் ஒரு பெரிய படகைக் கொண்டு வாருங்கள் என்கிறாய். அதன் உருவம் தான் பூமி. அவர்களை அதில் ஏறச் செய்தபிறகு , பெரிய மீனாக காட்சி அளித்த நீ, உன்னோடு சேர்த்து அந்த படகைப் பிணைக்க சொன்னாய். ஓ வென்ற பேரிரைச்சல் போட்ட ஜலத்தை கண்டு எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். ஜம்மென்று ஒரு பெரிய மீனாக லாகவமாக நீந்திக்கொண்டு நீ அவர்கள் அருகே வந்தாயே.

झषाकृतिं योजनलक्षदीर्घां दधानमुच्चैस्तरतेजसं त्वाम् ।
निरीक्ष्य तुष्टा मुनयस्त्वदुक्त्या त्वत्तुङ्गशृङ्गे तरणिं बबन्धु: ॥७॥

jhaShaakR^itiM yOjanalakshadiirghaaM dadhaanamuchchaistara tejasaM tvaam |
niriikshya tuShTaa munayastvaduktyaa tvattungashR^inge taraNiM
babandhuH || 7

ஜ²ஷாக்ருதிம் யோஜனலக்ஷதீ³ர்கா⁴ம் த³தா⁴னமுச்சைஸ்தரதேஜஸம் த்வாம் |
நிரீக்ஷ்ய துஷ்டா முனயஸ்த்வது³க்த்யா த்வத்துங்க³ஶ்ருங்கே³ தரணிம் ப³ப³ந்து⁴꞉ || 32-7 ||

'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டான் சத்யவ்ரதன். மற்றவர்களும் ஆறுதல் அடைந்தார்கள் உன்னை கண்டதும். நூறு யோஜனை நீள மீன் என்றால் சும்மாவா? பளபளவென்று தங்க மலை போன்று அல்லவா நீ மின்னிக்கொண்டு காட்சி அளித்தாய்? உன்னை அந்த படகோடு கட்டி இணைக்க செய்தாய். இனிமேல் அவர்கள் உன் பொறுப்பில் அல்லவா?

आकृष्टनौको मुनिमण्डलाय प्रदर्शयन् विश्वजगद्विभागान् ।
संस्तूयमानो नृवरेण तेन ज्ञानं परं चोपदिशन्नचारी: ॥८॥

aakR^iShTa naukO munimaNDalaaya pradarshayan vishvajagadvibhaagaan |
samstuuyamaanO nR^ivareNa tena j~naanaM paraM chOpadishannachaariiH || 8

ஆக்ருஷ்டனௌகோ முனிமண்ட³லாய ப்ரத³ர்ஶயன்விஶ்வஜக³த்³விபா⁴கா³ன் |
ஸம்ஸ்தூயமானோ ந்ருவரேண தேன ஜ்ஞானம் பரம் சோபதி³ஶன்னசாரீ꞉ || 32-8 ||

பிரளய ஜலத்தில் அந்த படகு உன்னால் நகர ஆரம்பித்தது. சத்யவ்ரதனும் மற்ற ரிஷிகளும் எங்கும் சுற்றிப் பார்த்தார்கள். சகல லோகமும் உன் சக்தியில், பிடிப்பில் தென்பட்டது. ஆத்மஞானம், சக்தி என்றால் என்ன என்று உன்னால் அறிந்துகொண்டார்கள் .

कल्पावधौ सप्तमुनीन् पुरोवत् प्रस्थाप्य सत्यव्रतभूमिपं तम् ।
वैवस्वताख्यं मनुमादधान: क्रोधाद् हयग्रीवमभिद्रुतोऽभू: ॥९॥

kalpaavadhau saptamuniin purOvat prasthaapya satyavratabhuumipaM tam |
vaivasvataakhyaM manumaadadhaanaH krOdhaaddhayagriivamabhidrutO(a)bhuuH || 9

கல்பாவதௌ⁴ ஸப்தமுனீன்புரோவத்ப்ரஸ்தா²ப்ய ஸத்யவ்ரதபூ⁴மிபம் தம் |
வைவஸ்வதாக்²யம் மனுமாத³தா⁴ன꞉ க்ரோதா⁴த்³த⁴யக்³ரீவமபி⁴த்³ருதோ(அ)பூ⁴꞉ || 32-9 ||

குருவாயூரப்பா, உன் ஆஞையில் பிரளயம் ஓய்ந்தது. அந்த சப்தரிஷிகளை எங்கு ஸ்தாபனம் செய்யவேண்டுமோ அங்கே நிலை நிறுத்தினாய். சத்யவ்ரதனை வைவஸ்வத மனுவாக ஆக்கினாய். அப்புறம் தான் உன் கோபம் ஹயக்ரீவாசுரன் பக்கம் திரும்பியது. வேதத்தை திருடிச் சென்றால் தப்ப முடியுமா? விட்டுவிடுவாயா நீ சுலபத்தில்?

स्वतुङ्गशृङ्गक्षतवक्षसं तं निपात्य दैत्यं निगमान् गृहीत्वा ।
विरिञ्चये प्रीतहृदे ददान: प्रभञ्जनागारपते प्रपाया: ॥१०॥

svatungashR^ingakshata vakshasaM taM nipaatya daityaM nigamaan
gR^ihiitvaa |
viri~nchaye priitahR^ide dadaanaH prabha~njanaagaarapate prapaayaaH ||

ஸ்வதுங்க³ஶ்ருங்க³க்ஷதவக்ஷஸம் தம் நிபாத்ய தை³த்யம் நிக³மான்க்³ருஹீத்வா |
விரிஞ்சயே ப்ரீதஹ்ருதே³ த³தா³ன꞉ ப்ரப⁴ஞ்ஜனாகா³ரபதே ப்ரபாயா꞉ || 32-10

அவனைத் தேடி கண்டுபிடித்தாய். உனது முகத்தில் இருந்த கொம்பினால் ஹயக்ரீவன் மார்பு பிளந்தது. வேதத்தை அவனிடமிருந்து மீட்டாகி விட்டது. இந்தா இனியாவது தொலைக்காமல் வைத்துக் கொள் என்று பிரம்மாவிடம் அவற்றை கொடுத்துவிட்டாய் பிரம்மாவுக்கு இப்படி ஒருவர் ஆபத் பாந்தவனாக உதவினால் சந்தோஷம் இல்லையா? என் மேலும் கருணை கொண்டு என் நோய்களை நீக்கி என்னை ரக்ஷிக்கவேண்டுமப்பா எண்டே குருவாயூரப்பா !