53. பலராமன் கொன்ற தேனுகாசுரன்
நாட்கள் வளர்ந்தன. கண்ணனும் வளர்ந்தான். இப்போது கண்ணன் கொஞ்சம் பெரிய பையன். குழந்தை இல்லை கிருஷ்ணன். பசுக்களை மேய்க்கும் ஒரு கோபன். கன்றுக்குட்டி மேய்ப்பவனுக்கு ப்ரொமோஷன். பிருந்தாவன காடுகளில் ஒரு தனிப்பகுதி எவரும் செல்லாத அடர்ந்த வனம் .. அங்கே தான் கிருஷ்ணனை எதிர் நோக்கி காத்திருந்தான் தேனுகாசுரன். கழுதை வடிவத்தில் வந்தவன். அவனைக் கொல்ல பலராமனே போதும் என்று விட்டுவிட்டான் கிருஷ்ணன். அந்த கழுதை ரூப அசுரன் மாண்ட கதை தான் இந்த 53வது தசகம்.
अतीत्य बाल्यं जगतां पते त्वमुपेत्य पौगण्डवयो मनोज्ञं ।
उपेक्ष्य वत्सावनमुत्सवेन प्रावर्तथा गोगणपालनायाम् ॥१॥
atiitya baalyaM jagataaM pate tvamupetya paugaNDavayO manOj~nam |
upekshya vatsaavanamutsavena praavartathaa gOgaNapaalanaayaam || 1
அதீத்ய பா³ல்யம் ஜக³தாம் பதே த்வமுபேத்ய பௌக³ண்ட³வயோ மனோஜ்ஞம் |
உபேக்ஷ்ய வத்ஸாவனமுத்ஸவேன ப்ராவர்ததா² கோ³க³ணபாலனாயாம் || 53-1 ||
''என்னப்பா கிருஷ்ணா, இந்த பிரபஞ்ச நாயகனே, குழந்தைப் பருவம் கடந்து நீ இப்போது ஒரு அழகிய பாலகன், பெரிய பையன். இனி நீ கன்றுக்குட்டி மட்டும் மேய்க்கும் சிறுவனல்ல. இனி எல்லா கோபர்களையும் போல் பெரிய பசுக்களை மேய்க்கும் இடையன். ஆமாம் உண்மையிலேயே நீ இடையவன் தானே, இடை என்றால் நடுவில் என்று அர்த்தம். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரியும் த்ரிமூர்த்திகளில் நீ நடுவன், விஷ்ணு, எந்தப்பக்கமும் சேராத நடு நிலையாளன். கடந்த, நிகழ், எதிர் காலங்களில் நிகழும் அவசிய அவசர காலத்தில் ஒவ்வொரு கணமும் எம்மை ரக்ஷிப்பவன்.
उपक्रमस्यानुगुणैव सेयं मरुत्पुराधीश तव प्रवृत्ति: ।
गोत्रापरित्राणकृतेऽवतीर्णस्तदेव देवाऽऽरभथास्तदा यत् ॥२॥
upakramasyaanuguNaiva seyaM marutpuraadhiisha tava pravR^ittiH |
gOtraaparitraaNakR^ite(a)vatiirNaH tadeva devaa(a)(a)rabhathaastadaa yat || 2
உபக்ரமஸ்யானுகு³ணைவ ஸேயம் மருத்புராதீ⁴ஶ தவ ப்ரவ்ருத்தி꞉ |
கோ³த்ராபரித்ராணக்ருதே(அ)வதீர்ணஸ்ததே³வ தே³வாரப⁴தா²ஸ்ததா³ யத் || 53-2 ||
குருவாயூரப்பா, இந்த உத்யோக மாற்றம் உனக்குரொம்ப பொருத்தம். கோ என்றால் பசு, பூமி, என்று பொருள்படும். ஆகவே நீ பசுக்களை பராமரிக்கும் கோபாலனாகவும் பூமியை காக்கும் பூபாலனாகவும் பொறுப்பேற்றவன்.
कदापि रामेण समं वनान्ते वनश्रियं वीक्ष्य चरन् सुखेन ।
श्रीदामनाम्न: स्वसखस्य वाचा मोदादगा धेनुककाननं त्वम् ॥३॥
kadaa(a)pi raameNa samaM vanaante vanashriyaM viikshya charan sukhena |
shriidaamanaamnaH svasakhasya vaachaa mOdaadagaa dhenukakaananaM tvam || 3
கதா³பி ராமேண ஸமம் வனாந்தே வனஶ்ரியம் வீக்ஷ்ய சரன்ஸுகே²ன |
ஶ்ரீதா³மனாம்ன꞉ ஸ்வஸக²ஸ்ய வாசா மோதா³த³கா³ தே⁴னுககானநம் த்வம் || 53-3 ||
ஒரு நாள் வழக்கம் போல் காட்டிற்கு நீயும் பலராமனும் பசுக்களோடு சென்றபோது காட்டின் உட்பகுதிக்குள் அதன் அழகை ரசித்தவாறே சென்றுவிட்டீர்கள். ''டேய் கிருஷ்ணா அதோ இன்னும் அடர்த்தியாக ஒரு இடம் இருக்கிறது பார்த்தாயா வா அதுவரை சென்று சுற்றிவிட்டு வருவோம்'' என்றான் கூடவே வந்த நண்பன் ஸ்ரீ தாமன். அங்கு தான் தேனுகாசுரன் வசித்தான் .
उत्तालतालीनिवहे त्वदुक्त्या बलेन धूतेऽथ बलेन दोर्भ्याम् ।
मृदु: खरश्चाभ्यपतत्पुरस्तात् फलोत्करो धेनुकदानवोऽपि ॥४॥
uttaalataaliinivahe tvaduktyaa balena dhuute(a)thabalena dOrbhyaam |
mR^iduH kharashchaabhyapatatpurastaat phalOtkarO dhenuka daanavO(a)pi || 4
உத்தாலதாலீனிவஹே த்வது³க்த்யா ப³லேன தூ⁴தே(அ)த² ப³லேன தோ³ர்ப்⁴யாம் |
ம்ருது³꞉ க²ரஶ்சாப்⁴யபதத்புரஸ்தாத் ப²லோத்கரோ தே⁴னுகதா³னவோ(அ)பி || 53-4 ||
அங்கு பழங்கள் நிறைந்த உயர்ந்த பனை மரங்கள் நிற்பதை பார்த்த பலராமன் ''கிருஷ்ணா, மரங்களை உலுக்கி பழங்கள் உதிர வைக்கலாமா. இன்றைக்கு நமக்கு நல்ல வேட்டை '' என்றதும் நீயும் அவனும் மரங்களை பலமாக உலுக்கினீர்கள். பலராமன் பெயருக்கேற்ற நல்ல பலம் உடையவன் அல்லவா? நிறைய பழங்கள் உதிர்ந்தன. அந்த பனங்காட்டில் தான் தேனுகாசுரன் பதுங்கி இருந்தான். ஒரு கழுதை உருவத்தில் இருந்த அந்த அசுரன் வெளிப்பட்டான்.
समुद्यतो धैनुकपालनेऽहं कथं वधं धैनुकमद्य कुर्वे ।
इतीव मत्वा ध्रुवमग्रजेन सुरौघयोद्धारमजीघनस्त्वम् ॥५॥
samudyatO dhainukapaalane(a)haM kathaM vadhaM dhainukamadya kurve |
itiiva matvaa dhruvamagrajena suraugha yOddhaaramajiighanastvam || 5
ஸமுத்³யதோ தை⁴னுகபாலனே(அ)ஹம் கத²ம் வத⁴ம் தை⁴னுகமத்³ய குர்வே |
இதீவ மத்வா த்⁴ருவமக்³ரஜேன ஸுரௌக⁴யோத்³தா⁴ரமஜீக⁴னஸ்த்வம் || 53-5 ||
பசுக்கள் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தன. அவற்றை திரட்டி ஒரே இடத்தில் மேய வைக்க உன் மனதில் எண்ணம் உதித்ததால், தேனுகாசுரனைக் கொல்வதில் உன் மனம் நாட்டம் கொள்ளவில்லை. அப்படி அந்த அசுரனை மாய்க்கவேண்டும் என்ற நிர்பந்தம் வந்தால் பலராமன் பார்த்துக் கொள்ளட்டும் அந்த வேலையை என்று நீ அவனிடம் விட்டுவிட்டாயோ? தேனுகா என்றால் பசுக்கள் என்று ஒரு அர்த்தம் என்பதால் அந்த அசுரன் உன்னிடமிருந்து தப்பினானோ? தேவர்களை படாத பாடு படுத்தியவன் அல்லவோ அவன்?
तदीयभृत्यानपि जम्बुकत्वेनोपागतानग्रजसंयुतस्त्वम् ।
जम्बूफलानीव तदा निरास्थस्तालेषु खेलन् भगवन् निरास्थ: ॥६॥
tadiiya bhR^ityaanapi jambukatvenOpaagataa nagrajasanyutastvam |
jambuuphalaaniiva tadaa niraasthastaaleShukhelan bhagavanniraasthaH || 6
ததீ³யப்⁴ருத்யானபி ஜம்பு³கத்வேனோபாக³தானக்³ரஜஸம்யுதஸ்த்வம் |
ஜம்பூ³ப²லானீவ ததா³ நிராஸ்த²ஸ்தாலேஷு கே²லன்ப⁴க³வன் நிராஸ்த²꞉ || 53-6 ||
தேனுகாசுரன் தனியாக அங்கே வசிக்கவில்லை, நரிகள் உருவில் அவன் வீரர்கள் இருந்தார்கள். நரிகள் அவனைச் சூழ்ந்துகொண்டதும் பலராமனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவனைத் தாக்க வந்த நரிக்கூட்டத்தைப் பிடித்து பந்தாடினான். மரங்களின் மேல் வீசினான் மாண்டன. குருவாயூரப்பா, உன்னிடம் நெருங்கியவற்றை நாவல் பழம் வீசுவதைப் போல் நீயும் தூக்கி எறிந்தாய்.
विनिघ्नति त्वय्यथ जम्बुकौघं सनामकत्वाद्वरुणस्तदानीम् ।
भयाकुलो जम्बुकनामधेयं श्रुतिप्रसिद्धं व्यधितेति मन्ये ॥७॥
vinighnati tvayyatha jambukaughaM sanaamakatvaadvaruNastadaaniim
bhayaakulO jambukanaamadheyaM shruti prasiddhaM vyadhiteti manye || 7
வினிக்⁴னதி த்வய்யத² ஜம்பு³கௌக⁴ம் ஸனாமகத்வாத்³வருணஸ்ததா³னீம் |
ப⁴யாகுலோ ஜம்பு³கனாமதே⁴யம் ஶ்ருதிப்ரஸித்³த⁴ம் வ்யதி⁴தேதி மன்யே || 53-7 ||
வந்த சுவடு இல்லாமல் அனைத்து நரிகள் உருவத்தில் வந்த தேனுகாசுரன் வீரர்களும் எமலோகம் சென்றார்கள். வருணனுக்கு ஜம்புகன் என்று பெயர். நரிப்பெயர் நமக்கு வேண்டாமப்பா என்று அந்த பெயரை மறைத்துக் கொண்டுவிட்டான். அந்த பெயரால் வருணனை அழைக்கும் பழக்கம் இல்லை.
तवावतारस्य फलं मुरारे सञ्जातमद्येति सुरैर्नुतस्त्वम् ।
सत्यं फलं जातमिहेति हासी बालै: समं तालफलान्यभुङ्क्था: ॥८॥
tavaavataarasya phalaM muraare sanjaatamadyeti surairnutastvam |
satyaM phalaM jaatamiheti haasii baalaiH samaM taalaphalaanyabhunkthaaH || 8
தவாவதாரஸ்ய ப²லம் முராரே ஸஞ்ஜாதமத்³யேதி ஸுரைர்னுதஸ்த்வம் |
ஸத்யம் ப²லம் ஜாதமிஹேதி ஹாஸீ பா³லை꞉ ஸமம் தாலப²லான்யபு⁴ங்க்தா²꞉ || 53-8 ||
என்னப்பா குருவாயூரா , முராரி, அசுரர்களை அழிக்க அவதரித்தவனே, தேவர்கள் விண்ணவர் அனைவரும் உன்னைப் போற்றி புகழ்ந்தனர். உன் அவதார மஹிமையைப் பாடினார்கள். ''வாங்கடா, பழங்கள் சாப்பிடுவோம்'' என்று எல்லா நண்பர்களுமாக சேர்ந்து உதிர்ந்த பழங்களை ருசித்து உண்டீர்கள்.
मधुद्रवस्रुन्ति बृहन्ति तानि फलानि मेदोभरभृन्ति भुक्त्वा ।
तृप्तैश्च दृप्तैर्भवनं फलौघं वहद्भिरागा: खलु बालकैस्त्वम् ॥९॥
madhudravasrunti bR^ihanti taani phalaani medObharabhR^inti bhuktvaa |
tR^iptaishcha dR^iptairbhavanaM phalaughaM vahadbhiraagaaH khalubaalakaistvam || 9
மது⁴த்³ரவஸ்ருந்தி ப்³ருஹந்தி தானி ப²லானி மேதோ³ப⁴ரப்⁴ருந்தி பு⁴க்த்வா |
த்ருப்தைஶ்ச த்³ருப்தைர்ப⁴வனம் ப²லௌக⁴ம் வஹத்³பி⁴ராகா³꞉ க²லு பா³லகைஸ்த்வம் || 53-9 ||
எல்லோரும் வயிறு நிறைந்து வீடு திரும்பினீர்கள். தேன் சொட்டும் சுவையோடு இருந்த பழங்கள் ருசிக்கும், பசிக்கும் விருந்தாயின. நிறைய பழங்களை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டில் அனைவருக்கும் அளித்தீர்கள்.
हतो हतो धेनुक इत्युपेत्य फलान्यदद्भिर्मधुराणि लोकै: ।
जयेति जीवेति नुतो विभो त्वं मरुत्पुराधीश्वर पाहि रोगात् ॥१०॥
hatO hatO dhenuka ityupetya phalaanyadadbhirmadhuraaNi lOkaiH |
jayeti jiiveti nutO vibhO tvaM marutpuraadhiishvara paahi rOgaat ||10
ஹதோ ஹதோ தே⁴னுக இத்யுபேத்ய ப²லான்யத³த்³பி⁴ர்மது⁴ராணி லோகை꞉ |
ஜயேதி ஜீவேதி நுதோ விபோ⁴ த்வம் மருத்புராதீ⁴ஶ்வர பாஹி ரோகா³த் || 53-10 ||
நீயும் உன் நண்பர்களும் பழங்களை புசித்துக்கொண்டிருக்கும்போது உன் நண்பர்கள் சிலர் நேரில் கண்ட காட்சியை விளக்கிச் சொன்னார்கள் . பலராமன் தேனுகாசுரனை எப்படி காலைப்பிடித்து தூக்கி உயரே சுற்றி மரங்களின் மேல் வீசிக் கொன்றான் என்று அறிந்து நீயும் மகிழ்ந்தாய். வாயில் பழங்களின் ருசியோடு இந்த அசுரன் அழிந்த செய்தியும் இனித்தது. எண்டே குருவாயூரப்பா ஜெயவிஜயீபவா, ஜெயதி ஜெயதி என்று உன்னை எல்லோரும் பெருமையோடு போற்றினார்கள். நானும் அவ்வாறே வாய் நிறைய உன்னை போற்றுகிறேன். என்னையும் நோய் தீர்த்து இனிது வாழ வை என்னப்பனே'' என்று தேனுகாசுர வத தசகத்தை நிறைவு செயகிறார் நாராயண பட்டத்ரி.