Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 87
87. பிடி அவலுக்கா இவ்வளவு?

கிருஷ்ணன் பலராமனோடு சாந்தீபனி ரிஷியிடம் குருகுலம் பயிலச் சென்றபோது அங்கே ஒரு ப்ராமண சிறுவன் மாணவனாக சேர்ந்தான். அவன் பெயர் குசேலன். கிருஷ்ணனுக்கு பிடித்த நண்பன். குருகுலவாசம் முடிந்தபின்னர் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லை. ஒருவன் மஹாராஜா, மற்றவன் பெரிய குடும்பி. 27 குழந்தைகளின் தகப்பன். பரம தரித்ரன்.

தாங்கமுடியாத வறுமையின் கொடுமையில் பசியோடு, ஒருநாள், குசேலன் மனைவி சுசீலை ''உங்கள் பால்ய நண்பன் கிருஷ்ணன் ராஜாவாக இருக்கிறாரே, அவரைப் போய் பார்த்து ஏதேனும் உதவி பெற்றுவாருங்கள்'' என்று அனுப்புகிறாள். வெறும் கையுடன் போக விருப்பமில்லாமல் வீட்டில் கிடைத்த ஒரு சில அரிசிமணிகளை பொறித்து பொறியாக மூட்டை கட்டிக்கொண்டு துவாரகை வந்து சேர்ந்தான் குசேலன்.
அப்புறம் நடந்தது சரித்திரம். அதைத் தான் மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி இந்த தசகத்தில் அழகாக நினைவு கூர்கிறார். குருவாயூரப்பன் மெய்ம்மறந்து கண்மூடி ஆனந்தமாக அதை கேட்டு பழைய நினைவில் மூழ்குகிறான்..

कुचेलनामा भवत: सतीर्थ्यतां गत: स सान्दीपनिमन्दिरे द्विज: ।
त्वदेकरागेण धनादिनिस्स्पृहो दिनानि निन्ये प्रशमी गृहाश्रमी ॥१॥

kuchela naamaa bhavataH satiirthyataaM
gataH sa saandiipani mandire dvijaH |
tvadeka raageNa dhanaadi niHspR^ihO
dinaani ninye prashamii gR^ihaashramii || 1

குசேலனாமா ப⁴வத꞉ ஸதீர்த்²யதாம்
க³த꞉ ஸ ஸாந்தீ³பனிமந்தி³ரே த்³விஜ꞉ |
த்வதே³கராகே³ண த⁴னாதி³னி꞉ஸ்ப்ருஹோ
தி³னானி நின்யே ப்ரஶமீ க்³ருஹாஶ்ரமீ || 87-1 ||

''கிருஷ்ணா, உன் பால்ய சிநேகிதன், உன்னோடு சாந்தீபனி முனிவர் ஆஸ்ரமத்தில் குருகுலத்தில் ஒன்றாக உன்னோடு கல்வி பயின்றவன், குசேலன், ப்ராம்மணச் சிறுவன், உன்மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டவன். இப்போது உலகப்பற்று அற்ற எளிய வாழ்க்கை வாழ்ந்தவன். வறுமையில் செம்மை அவனிடம் தான் கற்க வேண்டும்.''

समानशीलाऽपि तदीयवल्लभा तथैव नो चित्तजयं समेयुषी ।
कदाचिदूचे बत वृत्तिलब्धये रमापति: किं न सखा निषेव्यते ॥२॥

samaana shiilaapi tadiiya vallabhaa
tathaiva nO chittajayaM sameyuShii |
kadaachiduuche bata vR^ittilabdhaye
ramaapatiH kiM na sakhaa niShevyate || 2

ஸமானஶீலா(அ)பி ததீ³யவல்லபா⁴
ததை²வ நோ சித்தஜயம் ஸமேயுஷீ |
கதா³சிதூ³சே ப³த வ்ருத்திலப்³த⁴யே
ரமாபதி꞉ கிம் ந ஸகா² நிஷேவ்யதே || 87-2 ||

குசேலனுக்கு வாய்த்த மனைவி சுசீலா பேருக்கேற்ற சிறந்த சீலம் மிக்க பெண்மணி. பாவம் கணவனைப் போல் ஞானம் பெறாதவள். குடும்ப ஸ்த்ரீ. ஒருநாள் ''நாதா ,உங்கள் நண்பர் கிருஷ்ணன் மஹாலக்ஷ்மி தேவி கணவன் என்கிறார்களே, அவரைப் போய் பார்த்து நமது கஷ்டம் தீர்வதற்கு, ஜீவனத்துக்கு பொருளுதவி பெற்று வரக்க்கூடாதா?''' என்றாள் .

इतीरितोऽयं प्रियया क्षुधार्तया जुगुप्समानोऽपि धने मदावहे ।
तदा त्वदालोकनकौतुकाद्ययौ वहन् पटान्ते पृथुकानुपायनम् ॥३॥

itiiritO(a)yaM priyayaa kshudhaa(a)(a)rtayaa
jugupsamaanO(a)pi dhane madaavahe |
tadaa tvadaalOkana kautukaadyayau
vahan paTaante pR^ithukaanupaayanam || 3

இதீரிதோ(அ)யம் ப்ரியயா க்ஷுதா⁴ர்தயா
ஜுகு³ப்ஸமானோ(அ)பி த⁴னே மதா³வஹே |
ததா³ த்வதா³லோகனகௌதுகாத்³யயௌ
வஹன்படாந்தே ப்ருது²கானுபாயனம் || 87-3 ||

குசேலன் பணத்தைத் தொடாதவன், தேடாதவன். குடும்பம் குழந்தைகள், மனைவி படும் பட்டினி துயரம் அவனை துவாரகைக்கு போகவைத்தது. அவனுக்கு இதில் என்ன ஆர்வம் என்றால், என் கிருஷ்ணனை மீண்டும் பல வருஷங்கள் கழித்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் இப்போது கிடைத்ததே என்ற ஆசை மட்டுமே. கிழிந்த மேல் துண்டின் ஒரு முனையில் சுசீலை கொடுத்த அவல் பொரியை மூட்டை கட்டி அதை உனக்கு பரிசாக எடுத்துக் கொண்டு நடந்தான்.

गतोऽयमाश्चर्यमयीं भवत्पुरीं गृहेषु शैब्याभवनं समेयिवान् ।
प्रविश्य वैकुण्ठमिवाप निर्वृतिं तवातिसम्भावनया तु किं पुन: ॥४॥

gatO(a)yamaashcharyamayiiM bhavatpuriiM
gR^iheShu shaibyaabhavanaM sameyivaan |
pravishya vaikuNThamivaapa nirvR^itiM
tavaati sambhaavanayaa tu kiM punaH ||4

க³தோ(அ)யமாஶ்சர்யமயீம் ப⁴வத்பூரீம்
க்³ருஹேஷு ஶைப்³யாப⁴வனம் ஸமேயிவான் |
ப்ரவிஶ்ய வைகுண்ட²மிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பா⁴வனயா து கிம் புன꞉ || 87-4 ||

வெகுதூரம் நடந்து களைத்து, ஒருவழியாக துவாரகை வந்து சேர்ந்தான். அதன் அழகை ரசித்துக் கொண்டே நடந்தவன் உன் மனைவி மித்ரவிந்தாஇருந்த அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். நீ அங்கிருப்பதாக கேள்விப்பட்டு அங்கே வந்தவனை அன்போடு வரவேற்றார்கள் வாசலில் அனைவரும். நீ ஓடிவந்தாய்.

प्रपूजितं तं प्रियया च वीजितं करे गृहीत्वाऽकथय: पुराकृतम् ।
यदिन्धनार्थं गुरुदारचोदितैरपर्तुवर्ष तदमर्षि कानने ॥५॥

prapuujitaM taM priyayaa cha viijitaM
kare gR^ihiitvaa(a)kathayaH puraakR^itam |
yadindhanaarthaM gurudaarachOditaiH
apartu varShaM tadamarShi kaanane || 5

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்³ருஹீத்வா(அ)கத²ய꞉ புராக்ருதம் |
யதி³ந்த⁴னார்த²ம் கு³ருதா³ரசோதி³தை-
ரபர்துவர்ஷம் தத³மர்ஷி கானநே || 87-5 ||

வரவேற்பு உபசாரங்கள் தடபுடலாக இருந்தது . குசேலனை பார்த்ததில், உனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மித்ரவிந்தா உங்கள் இருவருக்கும் விசிறினாள் . கிருஷ்ணா , குசேலனின் கையைப் பிடித்துக் கொண்டு அப்போது நீ என்ன கேட்டாய்...... உனக்கு நினைவு படுத்தட்டுமா?

'' அடேய் நண்பா, உனக்கு நினைவிருக்கிறதா, நாம் இருவரும் ஒருநாள் குருபத்னி கேட்ட காய்ந்த விறகுகளை பொருக்கி எடுத்துக் கொண்டு வந்தோம். அப்போது திடீரென்று கொட்டோ கொட்டு என்று மழை வந்தது. நாம் இருவரும் தொப்பலாக நனைந்துகொண்டே ஆனால் காய்ந்த விறகு நனையாமல் எடுத்துக் கொண்டு வந்து குருபத்னியிடம் கொடுத்தோமே .'' குசேலன் தலையாட்டி சிரித்தான். குருவாயூரப்பனும் இதை நினைத்து சிரித்து தலையாட்டினான்.

त्रपाजुषोऽस्मात् पृथुकं बलादथ प्रगृह्य मुष्टौ सकृदाशिते त्वया ।
कृतं कृतं नन्वियतेति संभ्रमाद्रमा किलोपेत्य करं रुरोध ते ॥६

trapaajuShO(a)smaatpR^ithukaM balaadatha
pragR^ihya muShTau sakR^idaashite tvayaa |
kR^itaM kR^itaM nanviyateti sambhramaad
ramaa kilOpetya karaM rurOdha te || 6

த்ரபாஜுஷோ(அ)ஸ்மாத்ப்ருது²கம் ப³லாத³த²
ப்ரக்³ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதா³ஶிதே த்வயா |
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்⁴ரமா-
த்³ரமா கிலோபேத்ய கரம் ருரோத⁴ தே || 87-6 ||

''கிருஷ்ணன் இப்போது ஒரு மஹாராஜா, அஷ்ட ஐஸ்வர்யங்கள் கொண்டவன், மாட மாளிகை கூட கோபுரம் படைத்தவன், அவனுக்கு நான், ஒரு பரம ஏழை. கொண்டுவந்த அவல் பொரியை எப்படி எடுத்துக் கொடுப்பது? வெட்கமும் துயரமுமாக குசேலன் தலை குனிந்துகொண்டிருந்தான்.

கிருஷ்ணா, நீ எல்லாம் அறிபவன், இதை உணரமாட்டாயா ? உன் கை தானாகவே குசேலன் மேலதுண்டில் முடிந்து வைத்திருந்த அவல்பொரியை அவிழ்த்து பொரியை ஒரு கைப்பிடி எடுத்து உன் வாயில் ஆசையோடு போட்டுக்கொண்டாய். மேற்கொண்டு எடுக்காதவாறு இதை பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி ஓடி வந்து தடுத்தாள் . “Iகிருஷ்ணா இது போதாதா உனக்கு?'' என கேட்டாள் .

भक्तेषु भक्तेन स मानितस्त्वया पुरीं वसन्नेकनिशां महासुखम् ।
बतापरेद्युर्द्रविणं विना ययौ विचित्ररूपस्तव खल्वनुग्रह: ॥७॥

bhakteShu bhaktena sa maanitastvayaa
puriiM vasannekanishaaM mahaasukham |
bataaparedyurdraviNaM vinaa yayau
vichitraruupastava khalvanugrahaH || 7

ப⁴க்தேஷு ப⁴க்தேன ஸ மானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகனிஶாம் மஹாஸுக²ம் |
ப³தாபரேத்³யுர்த்³ரவிணம் வினா யயௌ
விசித்ரரூபஸ்தவ க²ல்வனுக்³ரஹ꞉ || 87-7 ||

கிருஷ்ணா, உன்னை நேசிப்போர்க்கு, வேண்டுவோர்க்கு, பணிவோர்க்கு நீ அருளும் பண்பை குசேலன் பார்த்து மகிழ்ந்தான். ராஜ போகத்தில் ஒரு நாள் உன்னோடு கழித்தான். மறுநாள் துவாரகையிலிருந்து தனது ஊருக்கு கிளம்பினான். ஒரு விஷயம். எதற்கு வந்தானோ அதை கேட்க மறந்து விட்டான். கிருஷ்ணனிடம் பொருள் உதவி கேட்கத்தான் சுசீலை அனுப்பினாள் . அதைத் தவிர மற்ற பழங்கதையெல்லாம் பேசி தீர்த்தான். நீயும் அவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. ஊருக்குத் திரும்பினான்.

यदि ह्ययाचिष्यमदास्यदच्युतो वदामि भार्यां किमिति व्रजन्नसौ ।
त्वदुक्तिलीलास्मितमग्नधी: पुन: क्रमादपश्यन्मणिदीप्रमालयम् ॥८॥

yadihyayaachiShya madaasyadachyutO
vadaami bhaaryaaM kimiti vrajannasau |
tvadukti liilaasmita magnadhiiH punaH
kramaadapashyanmaNi diipramaalayam || 8

யதி³ ஹ்யயாசிஷ்யமதா³ஸ்யத³ச்யுதோ
வதா³மி பா⁴ர்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ |
த்வது³க்திலீலாஸ்மிதமக்³னதீ⁴꞉ புன꞉
க்ரமாத³பஶ்யன்மணிதீ³ப்ரமாலயம் || 87-8 ||

''அடாடா. என்ன காரியம் பண்ணிவிட்டேன்? சுசீலை கேட்பாளே என்ன சொல்வது? ஒருவேளை நான் கேட்டிருந்தால் கிருஷ்ணன் நிறைய பொருளுதவி செயதிருப்பான் என்று தான் சொல்லவேண்டும். வேறென்ன சொல்வது எனக்கு ஒன்றுமே கிருஷ்ணனைப் பார்த்த சந்தோஷத்தில் கேட்க தோன்ற வில்லையே''.... விசனத்தோடு வீடு திரும்பிய குசேலன் தன் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டான். அவன் எதிரே ஒரு நவரத்தினங்களால் இழைத்த மாளிகை தோண்றியது .

किं मार्गविभ्रंश इति भ्रंमन् क्षणं गृहं प्रविष्ट: स ददर्श वल्लभाम् ।
सखीपरीतां मणिहेमभूषितां बुबोध च त्वत्करुणां महाद्भुताम् ॥९॥

kiM maarga vibhramsha iti bhraman kshaNaM
gR^ihaM praviShTaH sa dadarsha vallabhaam |
sakhii pariitaaM maNihema bhuuShitaaM
bubOdha cha tvatkaruNaaM mahaadbhutaam || 9

கிம் மார்க³விப்⁴ரம்ஶ இதி ப்⁴ரமன்க்ஷணம்
க்³ருஹம் ப்ரவிஷ்ட꞉ ஸ த³த³ர்ஶ வல்லபா⁴ம் |
ஸகீ²பரீதாம் மணிஹேமபூ⁴ஷிதாம்
பு³போ³த⁴ ச த்வத்கருணாம் மஹாத்³பு⁴தாம் || 87-9 ||

''அடேயப்பா இதென்ன இவ்வளவு அழகிய மாளிகை. எங்கோ வழி தெரியாமல் , மாறி வந்துவிட்டோமோ யார் வீட்டு வாசலிலே இப்படி நிற்கிறோமே'' என்று தலையை சொறிந்தான் குசேலன். அப்போது அந்த மாளிகையின் உள்ளே இருந்து அவன் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர் எல்லோரும் ஓடிவந்தார்கள் வெளியே. யாரையுமே அடையாளம் தெரியவில்லை குசேலனுக்கு, எல்லாருமே சர்வாலங்கார பூஷணத்தோடு புது ஆடைகள் அணிந்து இருந்தார்களே. அவர்கள் அவன் மனைவி குழந்தைகள் தான். முகம் சொல்கிறதே. குசேலனுக்கு
இது கிருஷ்ணன் அருள் என்று உடனே புரிந்துவிட்டது.

स रत्नशालासु वसन्नपि स्वयं समुन्नमद्भक्तिभरोऽमृतं ययौ ।
त्वमेवमापूरितभक्तवाञ्छितो मरुत्पुराधीश हरस्व मे गदान् ॥१०॥
sa ratnashaalaasu vasannapi svayaM
samunnamadbhakti bharO(a)mR^itaM yayau |
tvamevamaapuurita bhaktavaanChitO
marutpuraadhiisha harasva me gadaan ||10

ஸ ரத்னஶாலாஸு வஸன்னபி ஸ்வயம்
ஸமுன்னமத்³ப⁴க்திப⁴ரோ(அ)ம்ருதம் யயௌ |
த்வமேவமாபூரிதப⁴க்தவாஞ்சி²தோ
மருத்புராதீ⁴ஶ ஹரஸ்வ மே க³தா³ன் || 87-10 ||

குசேலன் அந்த மாபெரும் அரண்மனையில் ஐஸ்வர்யத்தோடு வாழ்ந்தாலும் அவன் பக்தி மேலும் மேலும் உன் மேல் வளர்ந்தது. அவன் சதா தியானத்தில் ஈடுபட்டு முக்தி அடைந்தான். எண்டே குருவாயூரப்பா, பக்தர்கள் மேல் பாசம் கொண்ட பக்தவத்சலா, என் மேலும் கருணை கொண்டு என் நோய் தீர்த்து என்னை வாழவையப்பா.