Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 5
5. ப்ரபஞ்ச காரணன்

व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये
मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।
नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति-
स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥

vyaktāvyaktamidaṁ na kiñcidabhavatprākprākr̥taprakṣayē
māyāyāṁ guṇasāmyaruddhavikr̥tau tvayyāgatāyāṁ layam |
nō mr̥tyuśca tadāmr̥taṁ ca samabhūnnāhnō na rātrēḥ sthiti-
statraikastvamaśiṣyathāḥ kila parānandaprakāśātmanā || 5-1 ||

1. வ்யக்தாவ்யக்தமிதம் ந கிஞ்சிதபவத் ப்ராக் ப்ராக்ருத ப்ரக்ஷயே
மாயாயாம் குண ஸாம்ய ருத்த விக்ருதெள த்வய்யாகதாயம் லயம்
நோ ம்ருத்யுஸ்ச ததாம்ருதம் ச ஸமபூ நாஹ்நோ ந ராத்ரோ: ஸ்த்திதி:
தத்ரைகஸ்த்வமஸிஷ்யதா: கில பராநந்த ப்ரகாசாத்மநா || (1)

குருவாயூரப்பா, இந்த ப்ரக்ருதி மஹா பிரளயத்தின் போது எங்கும் நீர்மயமாக வேறெந்த ஜீவராசி இல்லாமல் இருந்தது. கிருஷ்ணா, விஷ்ணு, நாராயணா , உன் மாயையினால் சர்வமும் ஒவ்வொன்றாய் மீண்டும் உயிராக தோன்றியது. ஆத்மா பரமாத்மா வேறாகியது. பிறப்பு இறப்பு உருவாகியது. பகலும் இரவும் வித்யாசம் தெரிந்தது. எல்லாவற்றிற்கும் காரணனாக நீ ஒளிமயமாக நின்றாய். எதற்கு இதை சொல்கிறேன் தெரியுமா? ... எல்லாம் உன் செயல். நீ இன்றி ஒரு அணுவும் அசையாது. சிருஷ்டி மட்டும் அல்ல அதை க்ஷேமமாக பாதுகாக்கும் கடவுள் நீ. எங்கள் குறையை தீர்த்து ரக்ஷிப்பாயாக. லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து:

2. काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो
चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।
तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां
नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥

kālaḥ karma guṇāśca jīvanivahā viśvaṁ ca kāryaṁ vibhō
cillīlāratimēyuṣi tvayi tadā nirlīnatāmāyayuḥ |
tēṣāṁ naiva vadantyasatvamayi bhōḥ śaktyātmanā tiṣṭatāṁ
nō cēt kiṁ gaganaprasūnasadr̥śāṁ bhūyō bhavētsaṁbhavaḥ || 5-2 ||

காலா: கர்ம குணாஸ்ச ஜீவநிவஹா விஸ்வஞ்ச கார்யம் விபோ
சில்லீலா ரதிமேயுஷி த்வயி ததா நிர்லீநதாமாயயு:
தேஷாம் நைவ வதந்த்யஸ்த்த்வமயி போ: ஸக்த்யாத்மநா திஷ்ட்டதாம்
நோ சேத் கிம் ககநப்ரஸூந ஸத்ருஸாம் பூயோ பவேத் ஸம்ப்பவ: (2)

வாதபுரீசா, பிரளய காலத்தில், காலம், ஆகாசம், கர்மா, சத்வ ரஜோ தமோ குணங்கள் எல்லாம் உன்னில் மறைந்தன. தாவரம், ஜங்கம , உயிர்கள் எல்லாமே உன் மாயை யினால் வேறு வேறாக உருவெடுத்து ப்ரக்ரிதியில் உலவின.

ஒன்றோடு ஒன்று இசைந்து, இணங்கி, சமநிலையில் இயங்க அவற்றின் குணம், உருவம் எல்லாம் கொடுத்தாய். ஆத்மா என்பது பரமாத்மா உன் அம்சமாக ஒவ்வொன்றிலும் தனித்து விளங்கியது. குணங்கள் அவற்றை இயக்க, கர்மாக்கள் வேறுபட்டு உலகம் துவங்கியது. இயங்கியது, வாட்டி வதக்கியது.

3. एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां
बिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।
मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि च
प्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥

ēvaṁ ca dviparārdhakālavigatāvīkṣāṁ sisr̥kṣātmikāṁ
bibhrāṇē tvayi cukṣubhē tribhuvanībhāvāya māyā svayam |
māyātaḥ khalu kālaśaktirakhilādr̥ṣṭaṁ svabhāvō:’pi ca
prādurbhūya guṇānvikāsya vidadhustasyāssahāyakriyām || 5-3

ஏவஞ்ச த்விபரார்த்தகால விகதாவீக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம்
பிப்ப்ராணே த்வயி சுக்ஷுபே த்ரிபவநீ பாவாய மாயா ஸ்வயம்.
மாயாத: கலு காலஸக்தி: அகிலாத்ருஷ்டம் ஸ்வபாவோபி ச
ப்ராதுர்ப்பூய குணாந் விகாஸ்ய விதது: தஸாயா: ஸஹாயக்ரியாம் (3)

குருவாயூரப்பா, காலத்தை சாவி கொடுத்து முடுக்கி விட்டாய். கால கடிகாரம் ஓட ஆரம்பித்துவிட்டது. மாற்றங்கள் காலத் திற்கேற்ப மாறும் என்ற நியதி உருவாக் கினாய். இதற்குள் ரெண்டு 'பரார்த்தம்'' (இது ப்ரம்மாவின் ப்ரம்ம லோக வருஷங்களில் சில நிமிஷ காலம். நமக்கு பல மடங்கு அதிகமான ஆண்டுகள். அதாவது ப்ரம்மாவின் ஒரு நிமிஷம் நமக்கு ஒரு வருஷம் மாதிரி..) நீ சிருஷ்டியை கண்காணிக்க பிரம்மாவை உருவாக்கி, எண்ணற்ற ஜீவன்களை பிறப்பித்தாய். உன் மாயை உனது சங்கல்பத்தை நிறைவேற்றியது. மூவுலகும் இவ்வாறு அறிமுகமானது. சிருஷ்டி கையினால் செய்வது அல்ல. மனதில் நினைத்தாலே உருவாவது. அதைத்தான் சங்கல்பம் என்று சொல்வது. விஷ்ணுவின் மாயையை அடிப்படையாக கொண்டது பிரபஞ்சமும் அதில் சிருஷ்டியும்.

4. मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षीति गीतो भवान्
भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापर: ।
कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं
माया सा खलु बुद्धितत्त्वमसृजद्योऽसौ महानुच्यते ॥४॥

māyāsannihitō:’praviṣṭavapuṣā sākṣīti gītō bhavān
bhēdaistāṁ pratibiṁbatō viviśivān jīvō:’pi naivāparaḥ |
kālādipratibōdhitā:’tha bhavatā sañcōditā ca svayaṁ
māyā sā khalu buddhitattvamasr̥jadyō:’sau mahānucyatē || 5-4 ||

மாயா ஸந்நிஹிதோ ப்ரவிஷ்டவபுஷா ஸாக்ஷீதி கீதோ பவாந்
பேதைஸ்தாம் ப்ரதிபிம்பதோ விவஸிவாந் ஜீவோ பி நைவாபர:
காலாதி ப்ரதிபோதித த பவதா ஸஞ்சோதிதா ச ஸ்வயம்
மாயா ஸா கலு புத்திதத்வம் அஸ்ருஜத் யோ ஸெள மஹாநுச்யதே. (4)

கிருஷ்ண பரமாத்மா, நீ மாயாவி. வேதங்கள் உன்னை மாயையின் சிருஷ்டிக்கு சாக்ஷி பூதம் என்கிறது. மாயையின் தோற்றங்களில், ஜீவன்களில், நீ உள்நின்று ஆட்டுவிக்கும் ஜீவாத்மா. நீ அந்த மாயையாலோ, அதன் விளைவு களாலோ எந்த சம்பந்தமுமில்லா தவன். எல்லாவற்றையும் அறிந்தும் அதில் எந்த பங்கேற்பும் இல்லை. மாயையின் எல்லாத் தோற்றங்களிலும் தனித்தனியாக ஜீவாத் மாவாக ஒளிர்கிறாய்.

5. तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्त्वप्रधान: स्वयं
जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पाद्क: ।
चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्त्वं महान् खल्वसौ
सम्पुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो भवत्प्रेरणात् ॥५॥

tatrāsau triguṇātmakō:’pi ca mahān sattvapradhānaḥ svayaṁ
jīvē:’smin khalu nirvikalpamahamityudbōdhaniṣpādakaḥ |
cakrē:’smin savikalpabōdhakamahantattvaṁ mahān khalvasau
sampuṣṭaṁ triguṇaistamō:’tibahulaṁ viṣṇō bhavatprēraṇāt || 5-5 ||

தத்ராஸெள த்ரிகுணாத்மகோ பிச மஹாந் ஸத்வப்ரதாநா: ஸ்வயம்
ஜீவே ஸ்மிந்கலு நிர்விகல்பமஹமித் யுத்போத நிஷ்பாதக:
சக்ரே ஸ்மிந் ஸவிகல்ப போதகமஹந்தத்வம் மஹாந் கல்வஸெள
ஸம்புஷ்டம் த்ரிகுணைஸ் தமோ திபஹுலம் விஷ்ணோபவத்ப்ரேரணாத்

குருவாயூரப்பா, இந்த மாயையின் சமாச்சாரங்களில் ஒன்று புலனாகிறது. அது சத்வ ரஜோ, தமோ குணங் களில் ஒன்றாக கலந்து இருந்தாலும் சத்வ குணம் தான் தலை தூக்குகிறது. அது புத்தியோடு ஈடுபட்டு அஹங்காரம் உருவாக காரணமாகிறது. நான், எனது , என்னுடைய, எங்களது என்று சுயநலம் பெருகி மனம் இருளடைகிறது. தவறுகள் தொடர ஆரம்பிக்கிறது. பாபம் வளர்கிறது.

6. सोऽहं च त्रिगुणक्रमात् त्रिविधतामासाद्य वैकारिको
भूयस्तैजसतामसाविति भवन्नाद्येन सत्त्वात्मना
देवानिन्द्रियमानिनोऽकृत दिशावातार्कपाश्यश्विनो
वह्नीन्द्राच्युतमित्रकान् विधुविधिश्रीरुद्रशारीरकान् ॥६॥

sō:’haṁ ca triguṇakramāttrividhatāmāsādya vaikārikō
bhūyastaijasatāmasāviti bhavannādyēna sattvātmanā |
dēvānindriyamāninō:’kr̥ta diśāvātārkapāśyaśvinō
vahnīndrācyutamitrakān vidhuvidhiśrīrudraśārīrakān || 5-6 ||

ஸோ ஹஞ்ச த்ரிகுணக்ரமாத் த்ரிவிததாம் ஆஸாத்ய வைகாரிகோ
பூயஸ்தஜைஸ தாமஸாவிதி பவந்நாத்யேந ஸத்வாத்மநா
தேவாநிந்த்ரிய மாநினோ க்ருத திஸாவாதார்க்க பாஸ்யஸ்விநோ
வஹ்நீந்த்ராசாயுத மித்ரகாந் விது விதி ஶ்ரீருத்ர ஸாரீரகாந். (6)

ஹே, குருவாயூரப்பா, இந்த அஹம்காரம் இருக்கிறதே அது வெவேறு விகிதத்தில் சத்வ ரஜோ தமோ குணங்களோடு கலந்து, வித விதமான உணர்ச்சிகளின் கலவையாகிறது. சத்வ குணம் அதிகமாக இருந்தபோது வைகாரிகம் எனும் தன்மை, ரஜோ குணம் தூக்கலாக இருந்தால் தைஜஸா , தமோகுணம் மிகுதியானால் தாமஸா என்று குணம் வெளிப்படுகிறது. வைகாரிக, அதாவது சாத்வீக குணம் படைத்தவர்கள் தெய்வங்கள். மனத்தையும் புலன்களையும் கட்டுக்குள் கொண்டவர்கள். ஞானேந்திரியங்களை செயல் படுத்துபவர்கள். அவர்களே, திக் தேவதைகள், புலனுணர்வுகளுக்கு அதிபதிகள் வாயு, என்றால் ஸ்பரிசம், கேட்டல் ஆகியவற் றை புரியச் செய்பவர், பார்வைக்கு சூர்யன், சுவைத்தலுக்கு வருணன். வாசனை அறிய அஸ்வினி தேவதைகள். அதேபோல் கர்மேந்திரியங்களின் செயலான பேச்சுக்கு அக்னி, கரங்களுக்கு இந்திரன், கால்களின் இயக்கத்துக்கு விஷ்ணு, கழிவுகளை வெளியேற்ற மித்ரன், சிருஷ்டி உற்பத்திக்கு பிரஜாபதி, மனம் , புத்தி, அஹங்காரம், சித்த ம் எனப்படும் உள்ளுணர்வுகளை (அந்தக் கரணம்) கண்காணிக்கும் தேவதைகள், அதாவது மனதுக்கு சந்திரன், புத்திக்கு ப்ரம்மா, அஹங்காரத்துக்கு ருத்ரன், சித்தத்துக்கு க்ஷேத்ரஞர் என்று வெவ்வேறு பிரிவுகளுக்கு அதிகாரிகள் உண்டானார்கள்.

7. भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्त्यन्वितं
तच्चान्त:करणं विभो तव बलात् सत्त्वांश एवासृजत् ।
जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन-
स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात् ॥७॥

bhūmanmānasabuddhyahaṅkr̥timilaccittākhyavr̥tyanvitaṁ
taccāntaḥkaraṇaṁ vibhō tava balātsattvāṁśa ēvāsr̥jat |
jātastaijasatō daśēndriyagaṇastattāmasāṁśātpuna-
stanmātraṁ nabhasō marutpurapatē śabdō:’jani tvadbalāt || 5-7 ||

பூமந் மாநஸ புத்த்யஹங்க்ருதி மிலச்சித்தாக்க்ய வ்ருத்த்யந்விதம்
தச்சாந்த: கரணம் விபோ தவ பலாத் ஸத்வாம்ஸ ஏவாஸ்ருஜத்
ஜாதஸ்தைஜஸதோ தாஸேந்த்ரியகண: தத்தாமஸாம்ஸாத் புந:
தந்மாத்ரம் நபஸோ மருத்புரபதை ஸப்தோ ஜநி த்வத்பலாத். (7

என்னப்பா, வாதபுரீஸ்வரா, இன்னொன்று புரிகிறது. சாத்வீகம் சேர்ந்த அஹங்காரம் தான் அந்தகரண சித்தம் எனும் உள்ளுறுப்பை நிறுவுகிறது. ரஜோகுணம் மிகுந்த அஹங் காரம், ஐந்து கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந்திரியங்களையும் கொண்ட குணக் கலவைகளை, தமோ குணம் கொண்ட அஹம்காரம் சப்தத்தையும் நிறுவியது. சப்தத்திலிருந்து ஆகாசம், ஸ்பர்சம், காற்று, தீ, ருசி, நீர், வாசனை, மண் எல்லாம் உருவானது. மூலகங்கள் தானாக எதையும் சிருஷ்டிக்க முடியாது. நீ தானே அப்பா, உயியர்களின் உயிராக உள்நின்று இயக்குபவன். நீயல்லவோ எல்லை கடந்த பிரம்மாண்டம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.

8. श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं
तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।
एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं
भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥

śabdādvyōma tataḥ sasarjitha vibhō sparśaṁ tatō mārutaṁ
tasmādrūpamatō mahō:’tha ca rasaṁ tōyaṁ ca gandhaṁ mahīm |
ēvaṁ mādhava pūrvapūrvakalanādādyādyadharmānvitaṁ
bhūtagrāmamimaṁ tvamēva bhagavan prākāśayastāmasāt || 5-8 ||

ஸப்தாத் வ்யோம தத: ஸஸர்ஜித விபோ ஸ்பர்ஸம் ததோ மாருதம்
தஸ்மாத் ரூபமதோ மஹோ த ச ரஸம் தோயஞாச கந்தம் மஹீம்
ஏவம் மாதவ பூர்வபூர்வகலனாத் ஆத்யாத்ய தர்மாந்விதம்
பூதக்ராம மிமம் த்வமேவ பகவந் ப்ராஙாஸயஸ் தாமஸாத் (8)

ஹே குருவாயூரப்பா என்னவெல்லாம் நீ கற்றுத்தருகிறாய். சப்தங்களுக்கு காரணமான தன்மாத்திரைகள் மூலம் ஆகாசம் எனும் அகண்ட வெளி உருவாக்கினாய். ஸ்பரிசம் காற்றுடன் தொடர்பு கொண்டது. உருவங்கள் அக்னி மூலமாக, அதிலிருந்து ருசி போன்ற வை தோன்றின. ரஸம் எனப்படும் ருசி தன்மாத்திரை மூலம் நீர் அறியப்பட்டது. வாசனை தெரிய ஆரம்பித்தது. அதிலிருந்து மண் உருவானது. மாதவா எல்லாம் உன் சங்கல்பம் ஒன்றே. பஞ்ச பூதங்களை இப்படி நிறுவினாய் . உயிர் வாழ இதெல்லாம் இன்றியமையாததாகியது

9. एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता: पृथङ्-
नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा ।
त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्त्वान्यमून्याविशं-
श्चेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधा: ॥९॥

ētē bhūtagaṇāstathēndriyagaṇā dēvāśca jātā pr̥thaṅ-
nō śēkurbhuvanāṇḍanirmitividhau dēvairamībhistadā |
tvaṁ nānāvidhasūktibhirnutaguṇastattvānyamūnyāviśaṁ-
ścēṣṭāśaktimudīrya tāni ghaṭayan hairaṇyamaṇḍaṁ vyadhāḥ || 5-9 ||

ஏதே பூதகணாஸ்ததேந்த்ரியகணார தேவாஸ்ச ஜாதா: ப்ருதக்
நோ ஸேகுர்ப்புவநாண்ட நிர்மிதிவிதெள தேவைரமீபிஸ்ததா
த்வம் நாநாவித ஸூக்திபிர்நுத கணஸ்தத் வாந் யமூன் யாவிஸம்
ஸ்சேஷ்டா ஸக்திமுதீர்ய தாநி கடயந் ஹைரண்யமண்டம் வ்யதா:(9)

என்னப்பனே , குருவாயூர் குட்டா, என்ன ஆச்சர்யம். சிருஷ்டி ரகசியத்தை பார்க் கும்போது, இந்த பஞ்சபூதங்கள், புலனா லனுபவிக்கும் இந்திரியங்கள், அவற்றின் செயல்பாடுகள், அதற்கான அதிபதியான தேவதைகள், இதெல்லாம் உருவானாலும் அவை ப்ரம்மாண்டமாகுமா? அவை எல்லாம் ஒன்று கூடி உன்னை பிரார்த்தித்தன. அவைகள் தானே என்னென்னவோ ஸூக்தங்கள். அவற்றில் நீ உள்புகுந்தாய். செயல்படுத்தினாய், ஆட்டுவிப்பவன் அல்லவா நீ கிருஷ்ணா? எல்லாவற்றையும் ஒன்று கூட்டி சேர்த்து அல்லவோ இந்த பெரிய பிரபஞ்சம், ஹிரண்ய அண்டம் உருவாக்கினாய்.

अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:
निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।
साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको
निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥

aṇḍaṁ tatkhalu pūrvasr̥ṣṭasalilē:’tiṣṭhatsahasraṁ samāḥ
nirbhindannakr̥thāścaturdaśajagadrūpaṁ virāḍāhvayam |
sāhasraiḥ karapādamūrdhanivahairniśśēṣajīvātmakō
nirbhātō:’si marutpurādhipa sa māṁ trāyasva sarvāmayāt || 5-10 ||

அண்டம் தத்கலு பூர்வ ஸ்ருஷ்டஸலிலே திஷ்ட்டத் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்பிந்நக்ருதாஸ்சதுர்தஸ ஜகத்ரூபம் விராடாஹ்வயம்
ஸாஹஸ்ரை: கர பாத மூர்த்த நிவஹைர் நி: ஸேஷ ஜீவாத்மகோ
நிர்ப்பாதோ ஸி மருத்புராதிப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத். (10)

குருவாயூர் கிருஷ்ணா, இந்த பிரம்மாண்டம் இன்றா நேற்றா உருவானது? கணக்கற்ற ஆயிரம் ஆண்டுகள். மேலும் கீழுமாக ஈறேழு உலகங்கள் உணடாக்கினாய். விராட் புருஷன் எனப்படும் ஆயிரக்கணக்கான கரங்கள், கால்கள், தலைகள், எனும் அறியவொண்ணா உருவெடுத்தாய். நீ என் நோய் தீர்த்து என்னை காப்பாற்ற வேண்டும்.