Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 51
51 திறந்த வாய் மூடி இறந்தவன்

கம்சனும் அவனது ராக்ஷஸ சகாக்களும் கிருஷ்ணனைக் கொல்லாமல் விடுவதில்லை என்று தீர்மானித்துவிட்டு ஒவ்வொருவராக வரிசையாக வந்து உயிரைத் தான் விடுகிறார்கள். இதோ இன்று அகாசுரன் வந்துவிட்டான். ஒவ்வொரு ராக்ஷஸனும் ஒவ்வொரு டைப். மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி, கிருஷ்ணனுக்கு அவனது பால்ய லீலைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு தசகத்திலும் ஞாபகமூட்டி மகிழ்விக்கிறார்.

कदाचन व्रजशिशुभि: समं भवान्
वनाशने विहितमति: प्रगेतराम् ।
समावृतो बहुतरवत्समण्डलै:
सतेमनैर्निरगमदीश जेमनै: ॥१॥

kadaachana vrajashishubhiH samaM bhavaan
vanaashane vihitamatiH pragetaraam |
samaavR^itO bahutara vatsamaNDalaiH
satemanairniragama diishajemanaiH || 1

கதா³சன வ்ரஜஶிஶுபி⁴꞉ ஸமம் ப⁴வான்
வனாஶனே விஹிதமதி꞉ ப்ரகே³தராம் |
ஸமாவ்ருதோ ப³ஹுதரவத்ஸமண்ட³லை꞉
ஸதேமனைர்னிரக³மதீ³ஶ ஜேமனை꞉ || 51-1 ||

வ்ரஜ பூமியில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை. ஏன்? கிருஷ்ணன் இருக்கிறானே போதாதா? சிறுவர்கள் ஆனந்தமாக அவனோடு விளையாடி மகிழ்ந்தார்கள். இதோ இன்று ஒரு திட்டம் அமுலுக்கு வந்து விட்டது. காட்டில் எல்லோரும் இனிப்புகள் சிற்றுண்டிகள் எடுத்துச்சென்று உண்டு, விளையாடி மகிழப்போகிறார்கள். கிருஷ்ணனை சிறுசுகள் எல்லாமே சூழ்ந்து வட்டமிட்டன. வித விதமான ருசிகளோடு உணவுப்பண்டங்கள் சேர்ந்துவிட்டன. அவற்றோடு காலையிலேயே பிருந்தாவன காட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்.

विनिर्यतस्तव चरणाम्बुजद्वया-
दुदञ्चितं त्रिभुवनपावनं रज: ।
महर्षय: पुलकधरै: कलेबरै-
रुदूहिरे धृतभवदीक्षणोत्सवा: ॥२॥

viniryatastava charaNaambuja dvayaat
uda~nchitaM tribhuvana paavanaM rajaH |
maharShayaH pulakadharaiH kalevaraiH
uduuhire dhR^itabhavadiikshaNOtsavaaH || 2

வினிர்யதஸ்தவ சரணாம்பு³ஜத்³வயா-
து³த³ஞ்சிதம் த்ரிபு⁴வனபாவனம் ரஜ꞉ |
மஹர்ஷய꞉ புலகத⁴ரை꞉ கலேப³ரை-
ருதூ³ஹிரே த்⁴ருதப⁴வதீ³க்ஷணோத்ஸவா꞉ || 51-2 ||

சிறுவர்கள் சேர்ந்து விட்டால், ஓட்டத்திற்கும் ஆட்டத்திற்கும் குறைவுண்டா?. மண் புழுதிகளை வாரி தெளித்தவாறு காலால் மிதித்து தூவினார்கள் . கண்ணா உன் பாதங்களிலிருந்து பறந்த அந்த புழுதி, பாத தூளி வானம் வரை மேலே காற்றில் பறந்தது. மூவுலகத்தையும் புனிதமாக்கும் அதை தேவர்கள், விண்ணவர்கள் பரம சந்தோஷத்தோடு விரும்பி எடுத்து வணங்கி அணிந்தனர்.

प्रचारयत्यविरलशाद्वले तले
पशून् विभो भवति समं कुमारकै: ।
अघासुरो न्यरुणदघाय वर्तनी
भयानक: सपदि शयानकाकृति: ॥३॥

prachaarayatyavirala shaadvale tale
pashuun vibhO bhavati samaM kumaarakaiH |
aghaasurO nyaruNadaghaaya vartaniiM
bhayaanakaH sapadi shayaanakaakR^itiH || 3

ப்ரசாரயத்யவிரலஶாத்³வலே தலே
பஶூன்விபோ⁴ ப⁴வதி ஸமம் குமாரகை꞉ |
அகா⁴ஸுரோ ந்யருணத³கா⁴ய வர்தனீம்
ப⁴யானக꞉ ஸபதி³ ஶயானகாக்ருதி꞉ || 51-3 ||

காடு, புல்வெளி, செடி கொடிகள், அடர்ந்த மரங்கள் என்றால் ஜனநடமாட்டம் இல்லாத அவ்விட ங்களில் நிறைய கொடிய விலங்குகளும், பாம்புகளும் இருப்பதில் என்ன ஆச்சர்யம். அகாசுரன் இப்படித் தான் ரொம்ப சமயோசிதமாக அதி புத்த்திசாலியாக செயல்படுவதாக நினைத்து ஒரு பெரிய மலைப்பாம்பாக உருவெடுத்து ஒரு மரத்தில் சுற்றிக்கொண்டு கிருஷ்ணனைப் பிடிக்க காத்திருந்தான்.

महाचलप्रतिमतनोर्गुहानिभ-
प्रसारितप्रथितमुखस्य कानने ।
मुखोदरं विहरणकौतुकाद्गता:
कुमारका: किमपि विदूरगे त्वयि ॥४॥

mahaachala pratimatanOrguhaanibha
prasaarita prathita mukhasya kaanane |
mukhOdaraM viharaNa kautukaadgataaH
kumaarakaaH kimapi viduurage tvayi ||4

மஹாசலப்ரதிமதனோர்கு³ஹானிப⁴-
ப்ரஸாரிதப்ரதி²தமுக²ஸ்ய கானநே |
முகோ²த³ரம் விஹரணகௌதுகாத்³க³தா꞉
குமாரகா꞉ கிமபி விதூ³ரகே³ த்வயி || 51-4 ||

கிருஷ்ணா, அகாசுரன் வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு பெரிய மலைக்குகை போல் வாயைப் பிளந்து மலையோடு மலையாக அசையாமல் காத்திருந்தான். உன்னோடு விளையாடும் சிறுவர்கள் அவனது அகண்ட வாயைப் பார்த்து அதிசயித்து ''அடேடே இப்படி ஒரு மலையும் குகையும் இதுவரை பார்க்கவே இல்லையே. உள்ளே சென்று விளையாடுவோம் என்று அகாசுரனின் திறந்த வாய்க்குள் சென்று விட்டனர். அவன் அசையவே இல்லை. அவன் உனக்காக அல்லவோ காத்திருந்தான். நீ சற்று தூரத்தில் பசுக்களோடும் கன்றுகளோடும் நீர் பருக சென்றுவிட்டாயே .

प्रमादत: प्रविशति पन्नगोदरं
क्वथत्तनौ पशुपकुले सवात्सके ।
विदन्निदं त्वमपि विवेशिथ प्रभो
सुहृज्जनं विशरणमाशु रक्षितुम् ॥५॥

pramaadataH pravishati pannagOdaraM
kvathattanau pashupakule savaatsake |
vidannidaM tvamapi viveshitha prabhO
suhR^ijjanaM visharaNamaashu rakshitum || 5

ப்ரமாத³த꞉ ப்ரவிஶதி பன்னகோ³த³ரம்
க்வத²த்தனௌ பஶுபகுலே ஸவாத்ஸகே |
வித³ன்னித³ம் த்வமபி விவேஶித² ப்ரபோ⁴
ஸுஹ்ருஜ்ஜனம் விஶரணமாஶு ரக்ஷிதும் || 51-5 ||

கிருஷ்ணா, குருவாயூரப்பா, அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லட்டுமா. கேள். அந்த யாதவ சிறுவர்கள், கன்றுகளோடும் , பசுக்களோடும் திறந்திருந்த அகாசுரன் வாய்க்குள் அது ஏதோ குகை என்று எண்ணி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நுழைந்துவிட்டனர். அசூரன் உடலில் சூடு கிளம்பியது. நீ அந்த நேரம் பார்த்து வந்துவிட்டாய். புதிதாக இருக்கும் மலையும் அதன் குகை வாசலும் உனக்கு அது ஏதோ மாயம் என்று தெரிந்துவிட்டது. அடுத்த ஆபத்து இந்த மலைக்குகை ரூபத்திலா என்று வியந்தாய். நீயும் உன் நண்பர்களைத் தேடி அந்த அசுரனின் திறந்த வாய்க்குள் சென்றுவிட்டாய். இந்த ஒரு சந்தர்பத்துக்காகத்தானே அகாசுரன் மலைபோல் காத்திருந்தான். மற்ற சிறுவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டுவரவேண்டும், பசுக்களை மீட்கவேண்டும் என்பதல்லவோ உன் கவலை . அகாசுரன் வாய் நீ உள்ளே நுழைந்ததும் மூடிக்கொண்டது. எல்லோரையும் விழுங்கி விட்டான் அவன். அவன் உடலின் சூடு நெருப்பு போல் கொதித்தது. எங்கும் இருள் மயம்.

गलोदरे विपुलितवर्ष्मणा त्वया
महोरगे लुठति निरुद्धमारुते ।
द्रुतं भवान् विदलितकण्ठमण्डलो
विमोचयन् पशुपपशून् विनिर्ययौ ॥६॥

galOdare vipulita varShmaNaa tvayaa
mahOrage luThati niruddha maarute |
drutaM bhavaan vidalita kaNTha maNDalO
vimOchayan pashupa pashuunviniryayau || 6

க³லோத³ரே விபுலிதவர்ஷ்மணா த்வயா
மஹோரகே³ லுட²தி நிருத்³த⁴மாருதே |
த்³ருதம் ப⁴வான்வித³லிதகண்ட²மண்ட³லோ
விமோசயன்பஶுபபஶூன் வினிர்யயௌ || 51-6 ||

என்ன செய்யவேண்டும் அடுத்தது என்று நீ தீர்மானித்துவிட்டாய் குருவாயூரப்பா. ''ஓஹோ உன் வாயை அல்லவோ நீ பெரிதாக, குகையின் வாயிலைப் போல் அகலமாக வைத்து க்கொண்டிருந்தாய், இதோ பார் என்னை. என்று மிகப்பெரிய உருவத்தை அவன் வாய்க்குள் இருந்தவாறே எடுத்தாய். அகாசுரன் மூச்சு விட திணறினான். மூச்சு முட்டச் செய்தாய், திணறினான், புரண்டான், திமிறினான். உன்னை கக்கி வெளியே தள்ள முயற்சித்தான். நீ இன்னும் பெரிய உருவமாக எடுத்துக் கொண்டு விட்டாய். அகாசுரன் தடுமாறினான். விழி பிதுங்கினான். அவன் கழுத்தைப் பிளந்தாய். இன்னொரு குகை வாயில் போல் அது திறந்தது. கோபர்களையும் , பசுக்களையும், கன்றுகளையும் அதன் வழியே வெளியேற்றினாய் .

क्षणं दिवि त्वदुपगमार्थमास्थितं
महासुरप्रभवमहो महो महत् ।
विनिर्गते त्वयि तु निलीनमञ्जसा
नभ:स्थले ननृतुरथो जगु: सुरा: ॥७॥

kshaNaM divi tvadupagamaarthamaasthitaM
mahaasuraprabhava mahO mahO mahat |
vinirgate tvayi tu niliinama~njasaa
nabhaH sthale nanR^iturathO jaguH suraaH || 7

க்ஷணம் தி³வி த்வது³பக³மார்த²மாஸ்தி²தம்
மஹாஸுரப்ரப⁴வமஹோ மஹோ மஹத் |
வினிர்க³தே த்வயி து நிலீனமஞ்ஜஸா
நப⁴꞉ஸ்த²லே நன்ருதுரதோ² ஜகு³ஸ்ஸுரா꞉ || 51-7 ||

இனி முடியாது, மரணிக்கும் தருணம் வாய்த்துவிட்டது என்று அகாசுரன் புரிந்துகொண்டான். உன்னைத் சரணடைவது தவிர அவனுக்கு வேறு ஒன்றும் வழியே இல்லை. ஒரு பெரிய ஒளி அவனிடமிருந்து வெளிப்பட்டது. அது அவன் உயிரின் கடைசி ஒளி வடிவம். அது வானில் மிதந்துசென்று நிலையாக நின்றது. உன்னோடு கலக்க காத்திருந்தது...அகாசுரன் கதை முடிந்துவிட்டதோ? நீ அகாசுரன் உடலிலிருந்து எல்லோரையும் வெளியேற்றிவிட்டு கடைசியாக வெளியே வந்தாய். நீ வெளியே வந்த அடுத்த கணமே அகாசுரன் உயிரின் ஒளி உன்னில் கலந்து மறைந்தது. அகாசுரன் என்ற கொடிய ராக்ஷஸனின் கதை முடிந்ததில் தேவர்கள் விண்ணவர்கள் மகிழ்ந்து உனக்கு மலர்கள் தூவினார். சந்தோஷமாக ஆடிப்பாடினார்கள். வெற்றியோடு அகாசுரன் வருவான் என்று மதுராவில் கம்சன் காத்திருந்தான்.

सविस्मयै: कमलभवादिभि: सुरै-
रनुद्रुतस्तदनु गत: कुमारकै: ।
दिने पुनस्तरुणदशामुपेयुषि
स्वकैर्भवानतनुत भोजनोत्सवम् ॥८॥

sa vismayaiH kamala bhavaadibhiH suraiH
anudrutastadanu gataH kumaarakaiH |
dine punastaruNa dashaamupeyuShii
svakairbhavaanatanuta bhOjanOtsavam ||8

ஸவிஸ்மயை꞉ கமலப⁴வாதி³பி⁴꞉ ஸுரை-
ரனுத்³ருதஸ்தத³னு க³த꞉ குமாரகை꞉ |
தி³னே புனஸ்தருணத³ஶாமுபேயுஷி
ஸ்வகைர்ப⁴வானதனுத போ⁴ஜனோத்ஸவம் || 51-8 ||

அன்று எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த விதவிதமான உணவு பதார்த்தங்களை பரிமாறிக் கொண்டு கூட்டாஞ் சோறு உண்பதாகத் தானே திட்டம். காலையில் அப்படி தானே எல்லோரும் கிளம்பினீர்கள். இந்த அகாசுரன் வதம் ஒரு சந்தோஷமான நிகழ்வு அல்லவா அதையும் சேர்த்து கொண்டாடுவது போல் அந்த மதிய நேரத்தில் எல்லோரும் மரநிழலில் அமர்ந்தீர்கள். நாம் நுழைந்தது மலையல்ல. ஒரு பெரிய மலைப்பாம்பின் திறந்த வாய் அதனுள்ளிருந்து நம்மை கிருஷ்ணன் அல்லவோ உயிரோடு மீட்டான் என்ற நன்றியோடு, மகிழ்வோடு அனைவரும் அவனோடு உணவருந்தினார்கள்.

विषाणिकामपि मुरलीं नितम्बके
निवेशयन् कबलधर: कराम्बुजे ।
प्रहासयन् कलवचनै: कुमारकान्
बुभोजिथ त्रिदशगणैर्मुदा नुत: ॥९॥

viShaaNikaamapi muraliiM nitambake
niveshayan kabaladharaH karaambuje |
prahaasayan kalavachanaiH kumaarakaan
bubhOjita tridashagaNairmudaa nutaH || 9

விஷாணிகாமபி முரலீம் நிதம்ப³கே
நிவேஶயன்கப³லத⁴ர꞉ கராம்பு³ஜே |
ப்ரஹாஸயன்கலவசனை꞉ குமாரகான்
பு³போ⁴ஜித² த்ரித³ஶக³ணைர்முதா³ நுத꞉ || 51-9 ||

வாதபுரீசா, இப்போதெல்லாம் நீ எங்கு சென்றாலும் உன் இடையில் பீதாம்பர வஸ்த்ரத்தில் செருகப்பட்டு ஒரு புல்லாங்குழல் காட்சி தருகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து அவர்கள் தந்த எல்லாம் கலந்த ஒரு பிடி உணவை வாய் நிறைய நீ உண்ட அந்த அழகை எப்படி வர்ணிப்பேன்? எப்படி உன்னால் ஒன்றுமே நடக்காதது போல் அகாசுரனை வதம் செய்து எமனுலகுக்கு அனுப்பிவிட்டு விளையாடி நண்பர்களோடு சேர்ந்து சநதோஷமாக உணவருந்த முடிந்தது?

सुखाशनं त्विह तव गोपमण्डले
मखाशनात् प्रियमिव देवमण्डले ।
इति स्तुतस्त्रिदशवरैर्जगत्पते
मरुत्पुरीनिलय गदात् प्रपाहि माम् ॥१०॥

ஸுகா²ஶனம் த்விஹ தவ கோ³பமண்ட³லே
மகா²ஶனாத்ப்ரியமிவ தே³வமண்ட³லே |
இதி ஸ்துதஸ்த்ரித³ஶவரைர்ஜக³த்பதே
மருத்புரீனிலய க³தா³த்ப்ரபாஹி மாம் || 51-10 ||

sukhaashanaM tviha tava gOpamaNDale
makhaashanaat priyamiva devamaNDale |
iti stuta sitradashavarairjagatpate
marutpuriinilaya gadaatprapaahi maam ||10

எண்டே குருவாயூரப்பா, நீ வட்டமாக அட்கார்ந்திருந்த அந்த கோப சிறுவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு சிரித்து மகிழ்ந்து '' வாடா கிருஷ்ணா நாம் விதவிதமான பக்ஷணங்களை உண்டு மகிழ்வோம்'' என்று அவர்கள் ஆசையாக அழைக்க அவர்களோடு சேர்ந்து உணவருந்தும் அந்த காட்சி விண்ணவர்களோடு சேர்ந்து அவர்கள் உன்னை புகழ்ந்து பாடி உனக்கு உணவு நைவேத்யம் செய்வதை விட ஆனந்தமான ஒரு காட்சியாக இருந்ததப்பா. நீ என்னையும் மகிழ்வுறச் செய்ய என் நோய் நீக்கி வினை தீர்த்தருள்வாய் வினோதா'' என்று இந்த தசகத்தை முடிக்கிறார் பட்டத்ரி.