79. ருக்மிணி கல்யாணம்.
எப்போதுமே கல்யாண மண்டபங்கள் அருகேயே, கோவில் ஒன்று இருக்கும். குண்டின புர அரண்மனையில் கல்யாணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அரண்மனைக்கு சற்று தூரத்தில் எதிரே ஒரு அம்பாள் கோயில். அதற்கு ஒரு வாயில் அரண்மனையைப் பார்த்து, இன்னொரு வாயில் கோயிலின் பின்புறம் ஒரு காட்டுப்பாதையை நோக்கி. கிருஷ்ணன் கோயிலின் பின்புற வாயில் அருகே காட்டுப்பாதை ஓரத்தில் மரங்களின் மறைவில் தேரை நிறுத்திவைத்துக் கொண்டு ருக்மணிக்காக காத்திருந்தான்.
ருக்மணி அவனை எதிர்பார்த்து அங்குமிங்கும் தேடி பின் புற வாயிலில் அவனைப் பார்த்துவிட்டாள் . ஓடிச்சென்று அவனோடு தேரில் பறந்துவிட்டாள் . பலராமன் யாதவ படைகளோடு பாதுகாப்புக்கு வந்தவன் கிருஷ்ணனின் தேரைப் பின் தொடர்பவர்களை எளிது சமாளிக்கக்கூடியவன் அல்லவா? பிறகு என்ன? ருக்மணிக்கும் கிருஷ்ணனுக்கும் ஜாம் ஜாம் என்று கல்யாணம்.
बलसमेतबलानुगतो भवान् पुरमगाहत भीष्मकमानित: ।
द्विजसुतं त्वदुपागमवादिनं धृतरसा तरसा प्रणनाम सा ।।१॥
balasameta balaanugatO bhavaan puramagaahata bhiiShmaka maanitaH |
dvijasutaM tvadupaagama vaadinaM dhR^itarasaa tarasaa praNanaama saa ||1
ப³லஸமேதப³லானுக³தோ ப⁴வான்
புரமகா³ஹத பீ⁴ஷ்மகமானித꞉ |
த்³விஜஸுதம் த்வது³பாக³மவாதி³னம்
த்⁴ருதரஸா தரஸா ப்ரணனாம ஸா || 79-1 ||
கிருஷ்ணா, ருக்மணி கல்யாணத்தின் போது நடந்ததெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா? எனக்குத் தெரியுமே. நான் சொல்கிறேன் கேள். நீ குண்டினபுரம் சென்றாய். உன்னைத் தொடர்ந்து பலராமன் பெரிய யாதவ படையோடு துணைக்கு வந்தான். கிழ மஹாராஜா பீஷ்மகனுக்கு தனது மகள் கிருஷ்ணனை மணக்க விரும்புகிறாள் என்று தெரிந்து மகிழ்ச்சி. ஆனால் சக்தி வாய்ந்த மகன் ருக்மியை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாத நிலை. ருக்மணி கிருஷ்ணன் வருவான் என்னை மணப்பான் என்று சொன்னதும் மகிழ்ச்சி. கிருஷ்ணனுக்கு காத்திருந்து மகிழ்ந்தான். மானசீகமாக வரவேற்று உபசரித்தான். பிராமணன் துவாரகையில் நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லி இருந்தான்.
भुवनकान्तमवेक्ष्य भवद्वपुर्नृपसुतस्य निशम्य च चेष्टितम् ।
विपुलखेदजुषां पुरवासिनां सरुदितैरुदितैरगमन्निशा ॥२॥
bhuvana kaantamavekshya bhavadvapuH nR^ipasutasya nishamya cha cheShTitam |
vipula khedajuShaaM puravaasinaaM saruditai ruditairagamannishaa ||2
பு⁴வனகாந்தமவேக்ஷ்ய ப⁴வத்³வபு-
ர்ன்ருபஸுதஸ்ய நிஶம்ய ச சேஷ்டிதம் |
விபுலகே²த³ஜுஷாம் புரவாஸினாம்
ஸருதி³தைருதி³தைரக³மன்னிஶா || 79-2 ||
அந்த ராஜ்யத்தில் இருந்த மக்களுக்கு ருக்மியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. அவனது அச்சமூட்டும் அதிகாரம், அதர்ம, அநீதியான தண்டனைகள் எல்லாமே வெறுப்பூட்டின. அவர்களால் எதிர்க்க முடியாத நிலை. கிருஷ்ணன் வந்தது தெரிந்துவிட்டது. பரம சந்தோஷம். இரவு மெதுவாக ஊர்ந்து வந்து எங்கும் இருள் போர்வை போர்த்தியது கூட அவர்களது துன்பத்தை போக்கியது போல் தோன்றியது.
तदनु वन्दितुमिन्दुमुखी शिवां विहितमङ्गलभूषणभासुरा ।
निरगमत् भवदर्पितजीविता स्वपुरत: पुरत: सुभटावृता ॥३॥
tadanu vanditumindumukhii shivaaM vihita mangala bhuuShaNa bhaasuraa |
niragamadbhava darpita jiivitaa svapurataH purataH subhaTaavR^itaa ||3
தத³னு வந்தி³துமிந்து³முகீ² ஶிவாம்
விஹிதமங்க³லபூ⁴ஷணபா⁴ஸுரா |
நிரக³மத்³ப⁴வத³ர்பிதஜீவிதா
ஸ்வபுரத꞉ புரத꞉ ஸுப⁴டாவ்ருதா || 79-3 ||
விடிந்தால் திருமணம்.ருக்மணி கழுத்தில் சிசுபாலன் தாலி கட்டப்போகிறான். எப்படியும் கிருஷ்ணன் வந்து இந்த பேராபத்திலிருந்து காப்பாற்றுகிறேன் என்று சேதி சொல்லி அனுப்பியதால் இன்றிரவோ நாளை விடிகாலைக்குள்ளோ கிருஷ்ணன் வந்துவிடுவான். ருக்மணிக்கு மணக்கோல அலங்காரம் எல்லாம் பண்ணிவிட்டார்கள். ஆபரணங்களை அணிவித்தார்கள். அரண்மனை யிலிருந்து கிளம்பினாள். சுற்றிலும் ஆயுதம் தாங்கிய வீரர்கள் காவல். அருகே உள்ள பார்வதி கோவிலுக்கு புறப்பட்டாள்.
कुलवधूभिरुपेत्य कुमारिका गिरिसुतां परिपूज्य च सादरम् ।
मुहुरयाचत तत्पदपङ्कजे निपतिता पतितां तव केवलम् ॥४॥
kula vadhuubhirupetya kumaarikaa girisutaaM paripuujya cha saadaram |
muhura yaachata tatpada pankaje nipatitaa patitaaM tava kevalam ||4
குலவதூ⁴பி⁴ருபேத்ய குமாரிகா
கி³ரிஸுதாம் பரிபூஜ்ய ச ஸாத³ரம் |
முஹுரயாசத தத்பத³பங்கஜே
நிபதிதா பதிதாம் தவ கேவலம் || 79-4 ||
ருக்மணி தனது நெருங்கிய தோழியருடன் பார்வதி முன் நின்றாள். வேண்டினாள். பக்தி பரவசத்தில் தனக்கு அவள் கிருஷ்ணன் மூலம் உதவிசெய்வாள் என நம்பிக்கை துளிர்த்தது. அம்பாளின் தாமரைப்பாதமே கதி என்று திரும்ப திரும்ப வணங்கினாள் . '' அம்மா, கிருஷ்ணன் ஒருவனே என் கணவன். இதை நீ நிறைவேற்றி அருள்புரிவாய்''.
समवलोककुतूहलसङ्कुले नृपकुले निभृतं त्वयि च स्थिते ।
नृपसुता निरगाद्गिरिजालयात् सुरुचिरं रुचिरञ्जितदिङ्मुखा ॥५॥
samavalOka kutuuhala sankule nR^ipakule nibhR^itaM tvayi cha sthite |
nR^ipasutaa niragaad girijaalayaat suruchiraM ruchira~njita di~Nmukhaa ||5
ஸமவலோககுதூஹலஸங்குலே
ந்ருபகுலே நிப்⁴ருதம் த்வயி ச ஸ்தி²தே |
ந்ருபஸுதா நிரகா³த்³கி³ரிஜாலயா-
த்ஸுருசிரம் ருசிரஞ்ஜிததி³ங்முகா² || 79-5 ||
மாளிகையில் எல்லா அரசர்களும் அலங்கரித்து உன்னை காண ஆவலுடன் காத்திருந்தார்கள். கிருஷ்ணா, நீ ஓரமாக அவளுக்காக அமைதியாக காத்திருந்தாய். சுற்றிச் சுற்றி எங்கும் கண்கள் உன்னைத் தேட ருக்மணி பார்வதி ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவளது அழகு மின்ன, ஆபரணங்கள் ஒளி வீசின. அவளது பயமும் திகிலும் சோகமும் கண்களில் வெளிப்பட்டது.
भुवनमोहनरूपरुचा तदा विवशिताखिलराजकदम्बया ।
त्वमपि देव कटाक्षविमोक्षणै: प्रमदया मदयाञ्चकृषे मनाक् ॥६॥
bhuvana mOhana ruuparuchaa tadaa vivashi taakhila raaja kadambayaa |
tvamapi deva kaTaaksha vimOkshaNaiH pramadayaa madayaaM chakR^iShe manaak ||6
பு⁴வனமோஹனரூபருசா ததா³
விவஶிதாகி²லராஜகத³ம்ப³யா |
த்வமபி தே³வ கடாக்ஷவிமோக்ஷணை꞉
ப்ரமத³யா மத³யாஞ்சக்ருஷே மனாக் || 79-6 ||
ருக்மணி மிகச்சிறந்த அழகி. எல்லா அரசர்களும் அவளை அடைய கனவு கண்டனர். அவள் அழகு உன்னையே அவளைக் கண்டதும் கிறங்க வைத்தது.
क्वनु गमिष्यसि चन्द्रमुखीति तां सरसमेत्य करेण हरन् क्षणात् ।
समधिरोप्य रथं त्वमपाहृथा भुवि ततो विततो निनदो द्विषाम् ॥७॥
kvanu gamiShyasi chandramukhiiti taaM sarasametya kareNa haran kshaNaat |
samadhirOpya rathaM tvamapaahR^ithaa bhuvi tatO vitatO ninadO dviShaam ||7
க்வனு க³மிஷ்யஸி சந்த்³ரமுகீ²தி தாம்
ஸரஸமேத்ய கரேண ஹரன் க்ஷணாத் |
ஸமதி⁴ரோப்ய ரத²ம் த்வமபாஹ்ருதா²
பு⁴வி ததோ விததோ நினதோ³ த்³விஷாம் || 79-7 ||
இருளிலிருந்து சட்டென்று வெளிப்பட்ட நீ, நேராக ருக்மணி அருகில் ஓடினாய். ' ஹே , நிலவின் முகம் கொண்டவளே, எங்கே போக முயற்சிக்கிறாய்? நான் இங்கேயல்லவோ உனக்காக நிற்கிறேன்'' என்று அவள் கைத்தலம் பற்றினாய். அவளை அணைத்து அருகே நிறுத்தியிருந்த தேரில் ஏற்றி னாய். கண் மூடி திறக்கும் நேரத்தில் உனது தேர் படுவேகமாக அங்கிருந்து பறந்தது. தேர்
ஓடும் சப்தம் கேட்ட எதிரிகள் அங்கே உன்னை துரத்திப் பிடிக்க வந்துவிட்டார்கள். அவர்கள் ஆசைப்பட்டதில் தப்பில்லை. முடியுமா என்பது தான் கேள்வி.
क्व नु गत: पशुपाल इति क्रुधा कृतरणा यदुभिश्च जिता नृपा: ।
न तु भवानुदचाल्यत तैरहो पिशुनकै: शुनकैरिव केसरी ॥८॥
kvanu gataH pashupaala iti krudhaa kR^itaraNaa yadubhishcha jitaa nR^ipaaH |
na tu bhavaanudachaalyata tairahO pishunakaiH shunakairiva kesarii || 8
க்வ நு க³த꞉ பஶுபால இதி க்ருதா⁴
க்ருதரணா யது³பி⁴ஶ்ச ஜிதா ந்ருபா꞉ |
ந து ப⁴வானுத³சால்யத தைரஹோ
பிஶுனகை꞉ ஶுனகைரிவ கேஸரீ || 79-8 ||
பலராமன் மற்றும் யாதவ வீரர்கள் தயாராக ஆயுதங்களோடு காத்திருந்ததால் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத ருக்மியின் வீரர்கள் வெகு சீக்கிரம் படுகாயமுற்று தோற்று ஓடினார்கள். ''எங்கே போனான் அந்த மாடு மேய்ப்பவன்?'' என்ற ருக்மியின் குரலும் காற்றில் கேட்டது. உன்னை நெருங்க அவர்களால் முடியா விட்டாலும் நாய்கள் கூட்டம் சிம்மத்தை பார்த்து குரைப்பதை நிறுத்தவில்லை.
ரொம்ப ஆச்சர்யம் தான்.
तदनु रुक्मिणमागतमाहवे वधमुपेक्ष्य निबध्य विरूपयन् ।
हृतमदं परिमुच्य बलोक्तिभि: पुरमया रमया सह कान्तया ॥९॥
tadanu rukmiNamaagata maahave vadhamupekshya nibadhya viruupayan |
hR^itamadaM parimuchya balOktibhiH puramayaa ramayaa saha kaantayaa || 9
தத³னு ருக்மிணமாக³தமாஹவே
வத⁴முபேக்ஷ்ய நிப³த்⁴ய விரூபயன் |
ஹ்ருதமத³ம் பரிமுச்ய ப³லோக்திபி⁴꞉
புரமயா ரமயா ஸஹ காந்தயா || 79-9 ||
ருக்மி ஒரு படையோடு உன்னை எதிர்த்தான். நீ அவனது வீரர்களை வெட்டி சாய்த்துவிட்டு ருக்மியை சிறைப்பிடித்தாய். அந்த கால வழக்கத்தின் படி தோற்ற அரசனை அவமதிக்க அவன் தலை மொட்டையடிக்கப்பட்டு மீசை மழிக்கப்பட்டது. குனிந்த தலையோடு, முகம் அவமானத்தால் சிவக்க அவனை உயிர் தப்ப விட்டாய். பலராமன் தயவால் ருக்மி உயிர் தப்பினான். நீ ருக்மிணி யோடு துவாரகை திரும்பினாய். மஹாலக்ஷ்மி ருக்மிணியாக அவதரித்து உனக்காக காத்திருந்த போது வேறு யார் அவளுக்கு மாலையிட முடியும்? ருக்மிணி உன் மனைவியாக துவாரகா ராஜ்ய மஹாராணியாக, பட்டமகிஷியானாள் .
नवसमागमलज्जितमानसां प्रणयकौतुकजृम्भितमन्मथाम् ।
अरमय: खलु नाथ यथासुखं रहसि तां हसितांशुलसन्मुखीम् ॥१०॥
nava samaagama lajjita maanasaaM praNaya kautuka jR^imbhita manmathaam |
aramayaH khalu naatha yathaa sukhaM rahasi taaM hasitaamshulasanmukhiim || 10
நவஸமாக³மலஜ்ஜிதமானஸாம்
ப்ரணயகௌதுகஜ்ரும்பி⁴தமன்மதா²ம் |
அரமய꞉ க²லு நாத² யதா²ஸுக²ம்
ரஹஸி தாம் ஹஸிதாம்ஶுலஸன்முகீ²ம் || 79-10 ||
நடந்தது கனவா நினைவா என்று புரியும் முன்பே மனைவியான ருக்மணி வெட்கத்தால் நாணிக் கோணினாள். இதுவரை அவள் கேள்விப்பட்ட உன் அழகு, ஆண்மை, வீரம் சாதுர்யம், கருணை எல்லாம் நேரில் கண்டபோது அவள் காதல் உணர்ச்சி பலமடங்கு அதிகரித்தது. அது அத்தனையும் ஒரு ஆசை மிகுந்த சிரிப்பாக பெருமிதமாக அவள் கண்களில் தெரிந்தது.
विविधनर्मभिरेवमहर्निशं प्रमदमाकलयन् पुनरेकदा ।
ऋजुमते: किल वक्रगिरा भवान् वरतनोरतनोदतिलोलताम् ॥११॥
vividha narmabhireva maharnishaM pramada maakalayan punarekadaa |
R^ijumateH kila vakragiraa bhavaan varatanOratanOdatilOlataam || 11
விவித⁴னர்மபி⁴ரேவமஹர்னிஶம்
ப்ரமத³மாகலயன்புனரேகதா³ |
ருஜுமதே꞉ கில வக்ராகி³ரா ப⁴வான்
வரதனோரதனோத³திலோலதாம் || 79-11 ||
குருவாயூரப்பா, கிருஷ்ணனாக, இவ்வாறு ஆனந்தமாக இரவும் பகலும் நீ வேடிக்கையாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தாய். அவள் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகியது.
तदधिकैरथ लालनकौशलै: प्रणयिनीमधिकं सुखयन्निमाम् ।
अयि मुकुन्द भवच्चरितानि न: प्रगदतां गदतान्तिमपाकुरु ॥१२॥
tadadhikairatha laalana kaushalaiH praNayiniimadhikaM sukhayannimaam |
ayi mukunda bhavachcharitaani naH pragadataaM gadataantimapaakuru ||12
தத³தி⁴கைரத² லாலனகௌஶலை꞉
ப்ரணயினீமதி⁴கம் ஸுக²யன்னிமாம் |
அயி முகுந்த³ ப⁴வச்சரிதானி ந꞉
ப்ரக³த³தாம் க³த³தாந்திமபாகுரு || 79-12 ||
உனது பேச்சு அவளுக்கு ஆனந்தத்தையும் சநதோஷத்தையும் கூடுதலாக்கிற்று. இதுவரை கனவாக, எண்ணங்களாக இருந்த ருக்மிணியின் காதல் இப்போது நிஜமாக அவளை அனுபவிக்கச் செய்ததில் தன்னை மறந்து ஆனந்தக்கடலில் ஆழ்ந்தாள். எண்டே குருவாயூரப்பா, என் துயரத்தையும் நீக்கி என் நோயை அகற்றி, என்னையும் ஆனந்தமாக உன்னை சரணடைய வழி காட்டுவாயப்பா.