Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 55
55. காலிலே சலங்கை கொஞ்ச, கைவளை குலுங்க...

காளிங்கன் காளிந்தி நதியில் பதுங்கி இருந்த இடம் கருப்பாக ஆழமான மடு என்று சொல்லப்பட்ட இடம். நண்பர்கள் பசுக்களை உயிர்ப்பித்த கிருஷ்ணன் இடையில் பீதாம்பர வஸ்திரத்தை வரிந்து கட்டிக்கொண்டு கரையோரமாக தாழ்ந்து இருந்த ஒரு வயதான கதம்ப மரத்தின் மேல் ஏறி தன் தோள்களைத் தட்டிக் கொண்டு, அந்த விஷ மடுவில் குதித்தான். அவனுடைய பலமான கைகளால் தண்ணீரை அடித்து நீந்திய சப்தம் எங்கும் கேட்டது. அது மடுவில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் காளிங்கனை எழுப்பியது. யார் தனது எல்லைக்குள் வந்தது என்று பார்த்த காளிங்கன் ஒரு அழகிய சிறுவன் சிரித்த முகமும் மஞ்சள் ஆடையும் அணிந்து பயமின்றித் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான் . நூறு தலைகள் கொண்ட அவன் படமெடுத்து மேலே வந்தபோது கரையிலிருந்த கோப சிறுவர்கள் பயந்துபோனார்கள். சிலர் வீட்டுக்கு ஒடினார்கள். சிலர் யசோதையிடம் விஷயம் சொல்ல ஓடினார்கள். கூட்டம் திரண்டது. மடுவில் காளிங்கன் கிருஷ்ணனைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதையும், அவன் அசைவற்று இருப்பதையும் பார்த்தார்கள். பூனை எலியோடு விளையாடுவது போல கிருஷ்ணன் அந்த கொடிய நாகம் தன்னைச் சுற்றி வளைக்க விட்டான். அது கிருஷ்ணனை அமுக்கிக் கொல்லப் பார்த்தது. உடனே கிருஷ்ணன் உடலைப் பெரிதாக்கிக் கொள்ளவே, கிருஷ்ணனை அதன் சுற்றி வளைக்க இயலவில்லை. காளிங்கன் ஆத்திரத்தில் படம் எடுத்துப் புஸ் என்று சீறினான். நாசித்துவாரங்களில் விஷம் கக்கினான். நச்சுப்பற்களால் கடிக்க முயன்றான். கிருஷ்ணன் காளிங்கனிடமிருந்து எளிதில் விலகி நீந்தினான். மடுவில் எல்லா இடங்களிலும் தெரிந்தான். படமெடுத்து காளிங்கன் கிருஷ்ணனைத் துரத்த , கிருஷ்ணன் காளிங்கன் மீது பாய்ந்தான். கடிக்க முயன்ற காளிங்கன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். காளிங்கன் சிரத்தில் இருந்த மாணிக்கங்கள் கிருஷ்ணன் பாதங்களின் ஒளியால் மின்னின. கிருஷ்ணனோ ஆனந்தமாக காளிங்கன் தலைகள் மீது நடனமாடினான். கிருஷ்ணனை கீழே தள்ள அவனால் முடியவில்லை. கிருஷ்ணனின் பாதங்கள் அழுத்தியதால் தாங்கமுடியாத வலியில் காளிங்கன் துடித்தான்.

இனி ஸ்லோகங்களுக்குள் போவோம்;

अथ वारिणि घोरतरं फणिनं
प्रतिवारयितुं कृतधीर्भगवन् ।
द्रुतमारिथ तीरगनीपतरुं
विषमारुतशोषितपर्णचयम् ॥१॥

atha vaariNi ghOrataraM phaNinaM
prativaarayituM kR^itadhiirbhagavan |
drutamaaritha tiiraga niipataruM
viShamaarutashOShita parNachayam ||1

அத² வாரிணி கோ⁴ரதரம் ப²ணினம்
ப்ரதிவாரயிதும் க்ருததீ⁴ர்ப⁴க³வன் |
த்³ருதமாரித² தீரக³னீபதரும்
விஷமாருதஶோஷிதபர்ணசயம் || 55-1 ||

குருவாயூரப்பா,காளிங்கன் விஷத்தால் மாண்டவர்களுக்கு புத்துயிர் அளித்த நீ காளிங்கனை தண்டிக்க முடிவெடுத்தாய். காளிந்தி நதிக்கரையில் தாழ்ந்திருந்த கதம்ப மரத்த்தில் ஏறினாய். நீரை நெருங்கி இருந்த கிளைக்கு தாவினாய் . அதன் இலைகள் எல்லாம் காளிங்கன் விஷகாற்றால் பட்டுப்போய் உதிர்ந்து வாடி வதங்கி இருந்தன.

अधिरुह्य पदाम्बुरुहेण च तं
नवपल्लवतुल्यमनोज्ञरुचा ।
ह्रदवारिणि दूरतरं न्यपत:
परिघूर्णितघोरतरङ्ग्गणे ॥२॥

adhiruhya padaamburuheNa cha taM na
vapallava tulya manOj~naruchaa |
hradavaariNi duurataraM nyapataH
parighuurNita ghOratarangagaNe || 2

அதி⁴ருஹ்ய பதா³ம்பு³ருஹேண ச தம்
நவபல்லவதுல்யமனோஜ்ஞருசா |
ஹ்ரத³வாரிணி தூ³ரதரம் ந்யபத꞉
பரிகூ⁴ர்ணிதகோ⁴ரதரங்க³க³ணே || 55-2 ||

அங்கிருந்து ஆழமான மடுவில் குதித்தாய். நீந்தியவாறு அடியில் சென்று மூழ்கினாய்.

भुवनत्रयभारभृतो भवतो
गुरुभारविकम्पिविजृम्भिजला ।
परिमज्जयति स्म धनुश्शतकं
तटिनी झटिति स्फुटघोषवती ॥३॥

bhuvanatraya bhaara bhR^itO bhavatO
gurubhaaravikampi vijR^imbhijalaa |
parimajjayati sma dhanushshatakaM
taTinii jhaTiti sphuTaghOShavatii || 3

பு⁴வனத்ரயபா⁴ரப்⁴ருதோ ப⁴வதோ
கு³ருபா⁴ரவிகம்பிவிஜ்ரும்பி⁴ஜலா |
பரிமஜ்ஜயதி ஸ்ம த⁴னு꞉ஶதகம்
தடினீ ஜ²டிதி ஸ்பு²டகோ⁴ஷவதீ || 55-3 ||

மூவுலகும் தாங்கும் உனது உடல் பலத்தால் காளிந்தியில் நீர் கொந்தளித்தது. வானுக்கும் பூமிக்கும் அலைபோல் எகிறியது. ஓ வென்ற சப்தம் எங்கும் எதிரொலித்தது.

अथ दिक्षु विदिक्षु परिक्षुभित-
भ्रमितोदरवारिनिनादभरै: ।
उदकादुदगादुरगाधिपति-
स्त्वदुपान्तमशान्तरुषाऽन्धमना: ॥४॥

atha dikshuvidikshu parikshubhita
bhramitOdara vaari ninaadabharaiH |
udakaadudagaaduragaadhipati-
stvadupaantamashaantaruShaa(a)ndhamanaaH || 4

அத² தி³க்ஷு விதி³க்ஷு பரிக்ஷுபி⁴த-
ப்⁴ரமிதோத³ரவாரினினாத³ப⁴ரை꞉ |
உத³காது³த³கா³து³ரகா³தி⁴பதி-
ஸ்த்வது³பாந்தமஶாந்தருஷாந்த⁴மனா꞉ || 55-4 ||

யார் எனது எல்லைக்குள் நுழைந்தது. என்ன இந்த சப்தம் என்று கோபத்தோடு காளிங்கன் மதுவின் அடியிலிருந்து மேலே தலை நீட்டினான். உன்னைக் கண்டதும் அவன் கோபம் உன் மேல் பாய்ந்தது. வேகமாக உன்னை நெருங்கினான்.

फणशृङ्गसहस्रविनिस्सृमर-
ज्वलदग्निकणोग्रविषाम्बुधरम् ।
पुरत: फणिनं समलोकयथा
बहुशृङ्गिणमञ्जनशैलमिव ॥५॥

phaNashR^ingasahasravinissR^imara
jvaladagnikaNOgraviShaambudharam |
purataH phaNinaM samalOkayathaa
bahushR^ingiNamanjana shailamiva || 5

ப²ணஶ்ருங்க³ஸஹஸ்ரவினிஸ்ஸ்ருமர-
ஜ்வலத³க்³னிகணோக்³ரவிஷாம்பு³த⁴ரம் |
புரத꞉ ப²ணினம் ஸமலோகயதா²
ப³ஹுஶ்ருங்கி³ணமஞ்ஜனஶைலமிவ || 55-5 ||

காளிங்கனை எதிரில் பார்த்த கிருஷ்ணா, நீ அவன் விஷம் கக்குவதை கவனித்தாய். எண்ணற்ற தலைகள் கொண்ட காளிங்கன் அத்தனை சிரங்களிலும் படமெடுத்தான் . பார்ப்பதற்கு பெரிய அஞ்சன மலை முகடுகள் போல் அவை தெரிந்தன.

ज्वलदक्षि परिक्षरदुग्रविष-
श्वसनोष्मभर: स महाभुजग: ।
परिदश्य भवन्तमनन्तबलं
समवेष्टयदस्फुटचेष्टमहो ॥६॥

jvaladakshi parikshara dugraviSha
H shvasanOShmabharaH sa mahaabhujagaH |
paridashya bhavantamanantabalaM
samaveShTayadasphuTacheShTamahO6

ஜ்வலத³க்ஷிபரிக்ஷரது³க்³ரவிஷ-
ஶ்வஸனோஷ்மப⁴ர꞉ ஸ மஹாபு⁴ஜக³꞉ |
பரித³ஶ்ய ப⁴வந்தமனந்தப³லம்
ஸமவேஷ்டயத³ஸ்பு²டசேஷ்டமஹோ || 55-6 || [** பரிவேஷ்டய **]

கிருஷ்ணா, காளிங்கன் கோபம் உண்மையிலேயே அவன் தலைகளின் உச்சிக்கு சென்றுவிட்டது. நெருப்போடு விஷமும் சேர்ந்தது போல் எங்கும் விஷம் கக்கினான். கண்கள் நெருப்புத் துண்டங்கள் போல் சிவந்தது. உன்னை கடித்தான். உன்னை அவை என்ன செய்யும்? காளிங்கன் உன்னை பலமாக சுற்றிக்கொண்டான். இனி நீ நகரமுடியாது என்று எண்ணம் அவனுக்கு. நீயோ புன்னகை மன்னனாக காட்சிஅளித்தாய்.

अविलोक्य भवन्तमथाकुलिते
तटगामिनि बालकधेनुगणे ।
व्रजगेहतलेऽप्यनिमित्तशतं
समुदीक्ष्य गता यमुनां पशुपा: ।।७॥

avilOkya bhavantamathaakulite
taTagaamini baalakadhenugaNe |
vrajagehatale(a)pyanimittashataM
samudiikshya gataa yamunaaM pashupaaH || 7

அவிலோக்ய ப⁴வந்தமதா²குலிதே
தடகா³மினி பா³லகதே⁴னுக³ணே |
வ்ரஜகே³ஹதலே(அ)ப்யனிமித்தஶதம்
ஸமுதீ³க்ஷ்ய க³தா யமுனாம் பஶுபா꞉ || 55-7 ||

நீரில் குதித்த உன்னைக் காணாமல் கரையில் கோபர்கள் உன் நண்பர்கள் வாடி வருந்தினார்கள். பயம் ஆட்கொண்டது. சிலர் வீடுகளுக்கும் மற்றவர்களுக்கும் விஷயம் சொல்ல ஓடினார்கள். எங்கும் துர் சகுனம் கண்டார்கள். பேராபத்தில் உயிர் தப்பமுடியாது உன்னால் என்று கலங்கினார்கள். பிருந்தாவனத்தில் அனைவரும் காளிந்தி நதிக்கரைக்கு ஓடி வந்தாயிற்று.

अखिलेषु विभो भवदीय दशा-
मवलोक्य जिहासुषु जीवभरम् ।
फणिबन्धनमाशु विमुच्य जवा-
दुदगम्यत हासजुषा भवता ॥८॥

akhileShu vibhO bhavadiiyadashaa
M avalOkya jihaasuShu jiivabharam |
phaNibandhanamaashu vimuchya javaat
udagamyata haasajuShaa bhavataa || 8

அகி²லேஷு விபோ⁴ ப⁴வதீ³ய த³ஶா-
மவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவப⁴ரம் |
ப²ணிப³ந்த⁴னமாஶு விமுச்ய ஜவா-
து³த³க³ம்யத ஹாஸஜுஷா ப⁴வதா || 55-8 ||

குருவாயூரப்பா, நீ காளிங்கனோடு போக்குகாட்டிக்கொண்டு விளையாடுவதை அறியாத அவர்கள் துடித்தனர். உன்னை காப்பாற்ற பிரார்த்தனை செய்தார்கள். தங்கள் உயிரையே உனக்காக விட தயாரானார்கள். எப்படியாவது உன்னை காளிங்கன் பிடியிலிருந்து மீட்க வேண்டினார்கள்.
நீ சிரித்துக்கொண்டு நீர் பரப்பின் மேல் வந்தாய்.

अधिरुह्य तत: फणिराजफणान्
ननृते भवता मृदुपादरुचा ।
कलशिञ्जितनूपुरमञ्जुमिल-
त्करकङ्कणसङ्कुलसङ्क्वणितम् ॥९॥

adhiruhya tataH phaNiraajaphaNaan
nanR^ite bhavataa mR^idupaadaruchaa |
kalashi~njita nuupura manjumila
t karakankaNa sankula sankvaNitam || 9

அதி⁴ருஹ்ய தத꞉ ப²ணிராஜப²ணான்
நன்ருதே ப⁴வதா ம்ருது³பாத³ருசா |
கலஶிஞ்சிதனூபுரமஞ்சுமில-
த்கரகங்கணஸங்குலஸங்க்வணிதம் || 55-9 ||

சர்வ லகுவுடன் தாவி காளிங்கன் சிரத்தில் ஏறி நின்றுகொண்டாய். அவன் படம் உனக்கு பீடமாயிற்று. உன் கமல பாதங்கள் அவன் சிரத்தின் மேல் ஒளி வீசியது. எங்கும் பிரகாசம். உன் கால் சலங்கை ஒலிக்கு பாந்தமாக லாகவமாக நர்த்தனமாடினாய். காலிலே சலங்கை ஒலிக்க கைவளைகள் தாளமிட்டு, முத்துமாலைகள் அசைந்து ஒலியெழுப்ப, அவற்றின் தாளத்துக்கேற்ப ஆனந்தமாக ஆடிய உன் நடன நிகழ்ச்சியை அங்கே கண்டவர்கள் பாக்கியசாலிகள்.

जहृषु: पशुपास्तुतुषुर्मुनयो
ववृषु: कुसुमानि सुरेन्द्रगणा: ।
त्वयि नृत्यति मारुतगेहपते
परिपाहि स मां त्वमदान्तगदात् ॥१०॥

jahR^iShuH pashupaastutuShurmunayO
vavR^iShuH kusumaani surendragaNaaH |
tvayi nR^ityati maarutagehapate
paripaahi sa maaM tvamadaanta gadaat ||10

ஜஹ்ருஷு꞉ பஶுபாஸ்துதுஷுர்முனயோ
வவ்ருஷு꞉ குஸுமானி ஸுரேந்த்³ரக³ணா꞉ |
த்வயி ந்ருத்யதி மாருதகே³ஹபதே
பரிபாஹி ஸ மாம் த்வமதா³ந்தக³தா³த் || 55-10 ||

உனக்கு எந்தவித ஆபத்துமில்லை என்பதை கோபர்கள் அறிந்து மகிழ்ந்தார்கள். நீ ஆனந்த நடமாடினாய். விண்ணில் இந்த அதிசயம் காண ரிஷிகள், தேவர்கள் அனைவரும் வணங்கி களித்தனர். தேவர்கள் அனைவரும் மலர்மாரி பொழிந்தார்கள். எல்லோரையும் மகிழ்வித்த எண்டே குருவாயூரப்பா, எனது நோயையும் அகற்றி என்னை வாழ்விப்பாய்.