Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 4
4 அஷ்டாங்க யோகமும் பலனும்

இந்த தசகம் நாராயணீயத்திலேயே பெரிய தசகம். 15 ஸ்லோகங்கள் இருக்கிறது

कल्यतां मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया ।
स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥

kalyatāṁ mama kuruṣva tāvatīṁ kalyatē bhavadupāsanaṁ yayā |
spaṣṭamaṣṭavidhayōgacaryayā puṣṭayā:’:’śu tava tuṣṭimāpnuyām || 4-1 ||

கல்யதாம் மம குருஷ்வ தாவதிம் கல்யதே பவதுபாசனாம் ஸ்பஷ்டமஷ் தவிதயோகாச்சார்யாயா புஷ்டயாஷு தவதுஷ்டிமாப் நுயாம்

குருவாயூரப்பா, கண்கண்ட தெய்வமே, கருணாசாகரா, நீ எனக்கு செய்ய வேண்டியதெல்லாம் என் தேக உபாதையை நீக்கி ஆரோக்கியத்தை அளிப்பது ஒன்று தான். எதற்கு கேட்கிறேன் என்று உனக்கே தெரியும். சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும். என் உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதைப்பற்றிய நினைப்பே இல்லாமல் என் மனம் உன் மேல் முழுதும் ஈடுபடும். உனைப் போற்றி, பாடி, வணங்கிக்கொண்டே இருப்பேன்.உன் கருணை மழையில் நனைவேன். அஷ்டாங்கயோகத்தில் சிறப்பாக செயல்படுவேன். என் உண்மையான முயற்சி அறிந்து நீயும் மகிழ்வாய். யம , நியம, ஆசன, பிராணாயாம, ப்ரத்யாஹார, தாரணா, தியான, சமாதி நிலைகள் தான் அஷ்டாங்கம் எனப்படும் எட்டு வகை யோக மார்க்கம். நாராயண பட்டத்ரி உடல் நலம் சரியானால் ஆனந்தமாக அஷ்டாங்க யோகத்தில் ஈடுபடுவேனே என்று ஏங்குகிறார்.

ब्रह्मचर्यदृढतादिभिर्यमैराप्लवादिनियमैश्च पाविता: ।
कुर्महे दृढममी सुखासनं पङ्कजाद्यमपि वा भवत्परा: ॥२॥

brahmacaryadruḍhatādibhiryamairāplavādiniyamaiśca pāvitāḥ |
kurmahē druḍhamamī sukhāsanaṁ paṅkajādyamapi vā bhavatparāḥ || 4-2 ||]

ப்ரஹ்மசர்யத் ருட தாதி, பிர்யமைராப்லவாதி, நியமைச்ச பாவிதா:
குர்மஹே த்ருட மமீ ஸுகாஸநம் பங்கஜாத் யமபி வா பவத்பரா: || 2 ||

பகவானே, ஸ்ரீ கிருஷ்ணா, உன் மேல் கொண்ட பக்தி அன்றி வேறே எதையும் நான் நம்பவில்லையே. என் உடம்பு உன்னால் குணமாகி, நான் முதலில் என்ன செய்வேன் தெரியுமா? முதலில் சுய அடக்கம், பிரம்மச்சர்யம், அஹிம்சை, சத்யம், சாஸ்த்ராசார சம்பிரதாயங்கள், நியம, அனுஷ்டானம், உள்ளும் புறமும் பரிசுத்தமாக அல்லவோ உன்னை தியானம் பண்ணு வேன். சுகாசன, பத்மாசனங்களில் சௌகர்ய மாக அமர்ந்து உன்னை என் மனது, ஹ்ருதயம் பூரா நிரப்பிக் கொள்வேன். பட்டத்ரி தான் யமம், நியமம், ஆசனம் தாரணம், சமாதி நிலை, இத்யாதிகளில் எப்படி க்ரிஷ்ண த்யானத்தில் ஈடுபடுவேன் என்று எடுத்துரைக்கிறார் பார்த்தீர்களா?

तारमन्तरनुचिन्त्य सन्ततं प्राणवायुमभियम्य निर्मला: ।
इन्द्रियाणि विषयादथापहृत्यास्महे भवदुपासनोन्मुखा: ॥३॥

tāramantaranucintya santataṁ prāṇavāyumabhiyamya nirmalāḥ | indriyāṇi viṣayādathāpahr̥tyāsmahē bhavadupāsanōnmukhāḥ || 4-3 ||

தாரமந்த - ரநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபி யம்ய நிர்மலா: ! இந்த்ரியாணி விஷயாததாபஹ்ருத் யாஸ்மஹே பவது பாஸ்நோந்முகரா: | 3 ||

பிரணவ மந்த்ரமாகிய ஓம் எனும் உன்னத மந்த்ரத்தை இடைவிடாமல், மூச்சு விடாமல், என் மனம் தியானம் செய்யும். அதனால் எனக்கு தான் லாபம். பரிசுத்தமாக இப்படி பிராணாயாமம் பண்ணுவதால் புலன்கள் வாலாட்டாது. அதனால் விளையும், காம க்ரோத லோப மோஹ சமாச்சாரங்கள் இருக்கும் இடம். தெரியாது. மனம் உன்னிலேயே ஆணி அடித்ததுபோல் நிலையாக நிற்கும். இந்த ஆனந்தத்தை விட பேரானந்தம் வேறு உண்டா சொல் கிருஷ்ணா?

अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।
तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥

asphuṭē vapuṣi tē prayatnatō dhārayēma dhiṣaṇāṁ muhurmuhuḥ |
tēna bhaktirasamantarārdratāmudvahēma bhavadaṅghricintakāḥ || 4-4 ||

அஸ்புடே வபுஷி தே ப்ரயத்நதோ தாரயேம திஷணாம் முஹுர்முஹு தேந பத்திரஸ்-மந்தரார்த் ரதா-முத் வஹேம ப வதங்க ரிசிந்தகா: | 4 1

யாருக்கு தான் தெரியாது கிருஷ்ணா? எந்த வேதத்தாலும் உன் திவ்ய சௌந்தர்ய ரூபத்தை விளக்க முடியாது. என் மனதை முழுதும் உன் திருமேனியில் செலுத்தி முயற்சி செய்து உன் தாமரைத் திருப்பதங்களில் மனது லயிக்கும் போது கிடைக்கும் பக்திரசத்திற்கு ஈடு இணையேது? எவ்வளவு ருசி அனுபவிக்க முடியும். இதைவிட வேறு பாக்யம் உண்டா?

विस्फुटावयवभेदसुन्दरं त्वद्वपु: सुचिरशीलनावशात् ।
अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥

visphuṭāvayavabhēdasundaraṁ tvadvapuḥ suciraśīlanāvaśāt |
aśramaṁ manasi cintayāmahē dhyānayōganiratāstvadāśrayāḥ || 4-5 ||

விஸ்புடாவயவ-பேத ஸுந்தரம் தவத் வபுஸ்-ஸுசிரபலேநாவலாத் | அப்பரமம் மநஸி சிந்தயாமஹே த்யாநயோக நிரதாஸ் த்வதாஷ்ரயா: || 5|

கிருஷ்ணா, குருவாயூரப்பா, உன்னை இப்படி சிரத்தை யாக தியானிப்பதன் மூலம் மனது பயிற்சி பெற்றுவிடும். உன் திவ்ய ஸ்வரூபம், தெளிவாக என் முன் தியானம் செய்ய தர்சனம் தரும். உன்னை பூரணமாக சரண்அடைவோர்க்கு மட்டுமே இது சாத்தியம் என்றும் அறிவேன். என் ஏகாக்ர சித்த த்யானம் உன் தரிசனம் பெற்று தரும்.

ध्यायतां सकलमूर्तिमीदृशीमुन्मिषन्मधुरताहृतात्मनाम् ।
सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्म रूपमयि तेऽवभासते ॥6

dhyāyatāṁ sakalamūrtimīdr̥śīmunmiṣanmadhuratāhr̥tātmanām |
sāndramōdarasarūpamāntaraṁ brahmarūpamayi tē:’vabhāsatē || 4-6 ||

த்யாயதாம் ஸகலமூர்திமீத் ருமீ முந்மிஷந்மது ரதா-ஹ்ருதாத்மநாம் | ஸாந்த்ரமோத --ரஸரூபமாந்தரம் ப்ரஹ்மரூபமயி தேவபாஸதே 161

குருவாயூரப்பா, நான் என்ன செய்யப்போகிறேன் என்று விளக்கமாக சொல்லட்டுமா? எனது இடைவிடா தியானத்தின் மூலம் எனக்கு உன் திவ்ய சௌந்தர்ய அங்க தர்சனம் கிடைக்கும். நீ சகுண பிரம்மமாக எனக்கு காட்சி தருவாய். ஆஹா அந்த ஆனந்தத்தில் எங்கும் எதிலும் அரூபமாக நிறைந்திருக்கும் நிர்குண ப்ரம்ம ஸ்வரூபத்தையும் என்னால் உணர முடியும். இதற்கு மேல் எனக்கு சுகானந்தம் தரும் விஷயம் வேறு இருக்க முடியுமா?

तत्समास्वदनरूपिणीं स्थितिं त्वत्समाधिमयि विश्वनायक ।
आश्रिता: पुनरत: परिच्युतावारभेमहि च धारणादिकम् ॥७॥

tatsamāsvadanarūpiṇīṁ sthitiṁ tvatsamādhimayi viśvanāyaka |
āśritāḥ punarataḥ paricyutāvārabhēmahi ca dhāraṇādhikam || 4-7 ||

தத்ஸமாஸ்வத நரூபிணீம் ஸ்திதிம் த்வத்ஸமாதி மயி விப்பவநாயக ஆம்ரிதா: புநரத: பரிச்யுதா-வாரபே மஹி ச தாரணாதிகம் || 7 ||

ஹே குருவாயூரப்பா, உண்ணி கிருஷ்ணா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, அஷ்டாங்க யோக உபாசனையில் சமாதி நிலையில் எல்லாம் மறந்து நீ ஒன்றே என ப்ரம்மஸ்வரூபமான உன்னுடன் இரண்டறக்கலந்து நான் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் நிலத்து நிற்காமல் சற்றேனும் நழுவி விட்டால் என்ன பண்ணுவேன் தெரியுமா. மறுபடியும் என் மனத்தைக் குவித்து உன்னை சிக்கெனைப் பிடித்து மனதில் நிலை நிறுத்தி தாரணை என்னும் தியான அஷ்டாங்க யோக ம் மூலம் மீண்டும் நிர்விகல்ப சமாதியில் உன்னை அடைவேன்.

ராமகிருஷ்ணர் விவேகானந்தர், ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், பரமாச்சாரியார், ராகவேந்திரர் போன்றோர் எளிதில் இதை அடைந் தவர்கள்.

इत्थमभ्यसननिर्भरोल्लसत्त्वत्परात्मसुखकल्पितोत्सवा: ।
मुक्तभक्तकुलमौलितां गता: सञ्चरेम शुकनारदादिवत् ॥८॥

itthamabhyasananirbharōllasattvatparātmasukhakalpitōtsavāḥ |
muktabhaktakulamaulitāṁ gatāḥ sañcarēma śukanāradādivat || 4-8 ||

இதமப் யஸந நிர்ப ரோல்லஸத்-த்வத்பராத்ம ஸுக, கல்பிதோத்ஸவா: / முக்த பக்தகுலமௌலிதாம் கதா: ஸஞ்சரேம கநாரதாதி,வத் | 8 ||

உன்னை விட்டால் வேறு யாரிடம் இப்படி மனம் விட்டு பேசுவேன். என் மனோரதங்களை தெரிவிப்பேன். ஸ்ரீ கிருஷ்ணா, குருவாயூர் குட்டா, இதைக் கேள். இப்படி நான் தாரணை மூலம், அஷ்டாங்க யோக சித்தி பெற்று உன்னை சமாதிநிலையில் நேரே தரிசித்து ஆனந்தமாக இருக்கும் நிலையில் நான் வேறு யாரையெல்லாம் இப்படி உன்னை தரிசிக்கிறார்க்ளோ அவர்களோடு உலவுவேன். யாரென சில பெயர்கள் சொல்லட்டுமா? ஜீவன் முக்தர்களான நாரத ப்ரம்ம ரிஷி, சுகப்பிரம்ம ரிஷி பிரஹலாதன் போன்றோருடன். போதுமா? ஆனந்தமாக அவர்களோடு நானும் உன்னைப் போற்றி பாடுவேனே ...

9. त्वत्समाधिविजये तु य: पुनर्मङ्क्षु मोक्षरसिक: क्रमेण वा ।
योगवश्यमनिलं षडाश्रयैरुन्नयत्यज सुषुम्नया शनै: ॥९॥

tvatsamaadhivijaye tu yaH punarma~Nkshu mOksharasikaH krameNa vaa |
yOgavashyamanilaM ShaDaashrayairunnayatyaja suShumnayaa shanaiH || 9

த்வத்ஸமாதி விஜயே து ய: புநர்மங்க்ஷ மோக்ஷரஸிக : க்ரமேண வாயோக வம்யமநிலம் ஷடாய்ரயை - ருந்நயத்யஜ ஸுஷும்நயா ஷனை :|| 9 ||

ஹே குருவாயூரப்பா, உனக்கு பிறப்பே இல்லை. எங்களுக்கு? உன் திருப்பாதத்தில் மனம் திளைத்து சமாதியடைந்த யோகி ரெண்டு விதத்தில் மோக்ஷம் அடைகிறான். இந்த இப்பிறவியிலேயே இப்பொழுதே உடனே முக்தி (சத்யமுக்தி) அடைபவரும் உண்டு. பூவுலகம் தாண்டி மேலே தேவலோகங்கள் சென்று, தெய்வீகமான பல பிறவிகள் பெற்று பிறகு முக்தியடைவது.(க்ரம முக்தி)

ஹே குருவாயூரப்பா சமாதி நிலையடைந்த உன் பக்தன் என்ன செய்வான்? . உன்னை அடைய வேண்டும் அல்லவா? அது தானே முக்தி நிலை? பிராணாயாமம் செய்து, பிராணனை தன் வயப்படுத்தி - முதுகெலும்பினுள் நடுவில் தாமரைக் கொடி, நூல் போல் மெல்லியதாக இருக்கும் ஸுஷும்னா நாடியின் அடியிலிருந்து

தேகத்தில் உள்ள ஆறு ஆதாரங்கள் வழியாக - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுக்தி, ஆக்ஞை சக்கரங்கள்--வரிசையாக மேலே கிளம்பி-மெதுவாக மேலெழச் செய்து சஹஸ்ராரம் அடைவது தான் க்ரம முக்தி .

10. लिङ्गदेहमपि सन्त्यजन्नथो लीयते त्वयि परे निराग्रह: ।
ऊर्ध्वलोककुतुकी तु मूर्धत: सार्धमेव करणैर्निरीयते ॥१०॥

lingadehamapi santyajannathO liiyate tvayi pare niraagrahaH |
uurdhvalOkakutukii tu muurdhataH saardhameva karaNairniriiyate || 10

லிங்க தே ஹமபி ஸந்த்ய ஜந்ந்தோ லீயதே த்வயி பரே நிராக் ரஹ: |
ஊர்த்வலோக்குது கீ து மூர்த தஸ் ஸார்த மேவ கரணைர்நிரீயதே | 10 ||

என்னப்பா உண்ணி கிருஷ்ணா ப்ரம்மலோகம் முதலான மற்ற தேவலோகங்களை அடையும் இச்சை இல்லாத உன் பக்தன் உன்னை அடைய என்ன செயகிறான் சொல்லட்டுமா ? பிராணனைப் புருவ மத்தியில் கொண்டு நிறுத்திய பிறகு சத்யமுக்தி அடையும் யோகி தனது ஸ்தூல சரீரத்தையம் சூக்ஷ்ம சரீரத்தை யும் ஆஞ்ஞா சக்ரத்தின் மூலமாக கை விட்டு உன்னோடு கலந்து விடுகிறான். இதர காமங்களை விட்டு ஆறு ஆதாரங்களைக் கடந்தபின் லிங்க சரீரத்தையும் விட்டு பரமாத்மாவான தங்களிடம் லயித்துவிடுகிறான் (ஸாயுஜ்ய முக்தியை அடைகிறான்).

க்ரமமுக்தி விரும்பும் யோகி பிரம்மலோகம் முதலிய தேவலோகங்களில் சிறிது காலம் அனுபவிக்க விருப்பம் கொண்டவன் (அதாவது கிரம முக்தியை அடைய விரும்புபவன்) ஐந்து பிராணன்கள், மனது, புத்தி, பத்து இந்திரியங்கள், சித்தம், அஹங்காரம் என்ற இத்தத்துவங்கள் அடங்கிய லிங்க சரீரத்துடனேயே கபால மோக்ஷம் அடைகிறான், ஸஹஸ்ராரம் வழியாக (பிரம்மரந்திரத்தின் வழியாக) வெளிக் கிளம்புகிறான்.

11. अग्निवासरवलर्क्षपक्षगैरुत्तरायणजुषा च दैवतै: ।
प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते ॥११॥

agnivaasaravalarkshapakshagair uttaraayaNajuShaa cha daivataiH |
praapitO ravipadaM bhavatparO mOdavaan dhruvapadaantamiiyate || 11

அக் நிவாஸர வளர்க்ஷபக்ஷகை - ருத்தராயணஜுஷா ச தைவதை : 1 ப்ராபிதோ ரவிபதம் பவத்பரோ மோத வாந் த்ருவபதாந்தமீயதே | 11 ||

ஹே , பிரபஞ்ச நாயகா, குருவாயூரப்பா, க்ரமமுக்தி தேடும் உன் பக்தனான யோகி, தனது விருப்பத்திற்கேற்ப, சுக்லபக்ஷத்தில், பகலில், உத்தராயண புண்ய காலத்தில் தேகத்தை விட்டுவிட்டு சூர்ய கிரணங்கள் மூலம் ஜீவனை வெளியேற்றுகிறான். அக்னி பகல் இவற்றை நிர்ணயிக்கும் தேவதைகள் துணையோடு உத்தராயணத்தில், சூரிய மண்டலம் சென்று துருவன் இருக்கும் லோகத்தை அடைகிறான்.மீண்டும் இந்த பூமியில் பிறப்ப தில்லை. பீஷ்மர் அப்படித்தானே உத்தராயண காலம் வரை காத்திருந்து ஜீவனை வெளியேற்றினார்.

மேலே சொன்ன பிரயாண வழி : க்ரமமாக முக்தி அடையும் யோகியின் ஜீவனை அக்னி தேவதை தன் லோகத்தின் வழியே அழைத்துச் சென்று பகலுக்கு அபிமானியான தேவதையிடம் ஒப்படைத்து அந்த தேவதை சுக்லபக்ஷ அபிமான தேவதை, உத்தராயண அபிமானி தேவதை மற்றும் ஸம்வத்ஸராபிமானி தேவதைகளின் உதவியுடன் தேவலோக மார்க்கமாக சென்று வாயு தேவனை அடைகிறது. பிறகு வாயு லோக மார்க்கமாக சூர்ய, சந்திர தேவதைகள் லோகம் வழியாக வித்யுல் லோகத்தையும் அடைந்து அப்பறம் யோகியின் ஜீவன் துருவலோகம் அடைகிறது. இது தான் பாதை .

12 आस्थितोऽथ महरालये यदा शेषवक्त्रदहनोष्मणार्द्यते ।
ईयते भवदुपाश्रयस्तदा वेधस: पदमत: पुरैव वा ॥१२॥

aasthitO(a)tha maharaalaye yadaa sheShavaktradahanOShmaNaardyate |
iiyate bhavadupaashrayastadaa vedasaH padamataH puraiva vaa || 12

ஆஸ்தி, தோத, மஹராலயே யதா பேஷவக்த்ர த ஹநோஷ்மணார்த்யதே ஈயதே பவது, பாபரயஸ் ததா வேதஸ: பத மத : புரைவ வா ! 12 )

துருவலோகத்தையடைந்த பிறகு அங்கிருந்து மஹர்லோகத்தை அடைந்த தங்கள் பக்தன் ஆதிசேஷனின் முகங்களிலிருந்து வெளிவரும் விஷாக்னியின் வெம்மையினால் வருந்தும் பொழுதோ, அதற்கு முன்போ பிரம்மலோகத்தை அதாவது சத்தியலோகத்தை அடைகிறான்.

13, तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्तताम् ।
स्वेच्छया खलु पुरा विमुच्यते संविभिद्य जगदण्डमोजसा ॥१३॥

tatra vaa tava pade(a)thavaa vasan praakR^itapralaya eti muktataam svechChayaa khalu puraa vimuchyate sanvibhidya jagadaNDamOjasaa || 13

தத்ர வா தவ பதே தவா வஸந் ப்ராக்ருதப்ரளய ஏதி முக்ததாம் | ஸ்வேச்சயா கலு புராவி முச்யதே ஸம்விபித்ய ஜகதண்ட மோஜஸா || 13 ||

ஹே குருவாயூரப்பா! நான் புரிந்துகொண்டதை உன்னிடம் ஒருமுறை சொல்லிப்பார்க்கிறேன் என்கிறார் நாராயண பட்டத்ரி.

மேலே சொன்னபடி துருவபதத்தை , மஹர்லோகத்தை அடைந்த உன் பக்தன் க்ரமமுக்தி யோகி அப்புறம் பிரம்மலோகத் திலாவது அல்லது தங்களுடைய விஷ்ணு லோகத்திலாவது (வைகுண்டத்தில்) வெகுகாலம் வாழ்கிறான். மஹாப்பிரளயத்தின் போது ஆதிசேஷனின் தஹிக்கும் அக்னி மூச்சுக்கு காற்றில் இருந்து விலக உன்னை சரண் அடைகிறான். பிரம்மலோகம் செல்கி றான். அல்லது, தன் விருப்பப்படி பிரளயத்திற்கு முன்பே. ஆதி சேஷனின் அக்னி உஷ்ண காற்றை தவிர்த்து, தனது யோகபலத்தால் பிரம்மாண் டத்தைப் பிளந்து கொண்டு பிரம்மலோகம் செல்கிறான்.

(மஹாப்பிரளயம் என்பது பிரக்ருதி காரியங்களான மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் - இவைகள் அதனதன் காரணங்களில் ஒன்றுபடுவதேயாகும்).

14. तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृती: ।
तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतं विभो ॥१४॥

thasya cha kshithipayo mahodhanilth yo mahath prakruthi saptha kavaruthi
tattadaatmakatayaa vishan sukhii yaati te padamanaavR^itaM vibhO ||14

தஸ்ய ச க்ஷிதிபயோ-மஹோதநிலத் யோமஹத்ப்ரக்ருதி-ஸப்தகாவருதீ: |தத் ததாத்மகதயா வியந் ஸு, யாதி தே பத மநாவ்ருதம் விபோ | 14 ||

ஹே, நாராயணா , குருவாயூர் குட்டா, உன்னருளால் எனக்கு புரிகிறது. உன் பக்தன் பிரம்மாண்டத்தின் ஏழு திரைகளை (மண், நீர், தீ, காற்று, ஆகாசம், புத்தி, பரம்) ஒவ்வொன்றாக கிழித்து நுழைகிறான். அவனது ஸூக்ஷம உருவில் உன் விஸ்வரூப லீலைகளை உணர்கிறான். மகிழ்கிறான். உன்திருவடிகளை சேரவேண்டிய இடமாக முயன்று அடைந்து முக்தி பெறுகிறான்.

15 अर्चिरादिगतिमीदृशीं व्रजन् विच्युतिं न भजते जगत्पते ।
सच्चिदात्मक भवत् गुणोदयानुच्चरन्तमनिलेश पाहि माम् ॥१५॥

archiraadigatimiidR^ishiiM vrajan vichyutiM na bhajate jagatpate
sachchidaatmaka bhavadguNOdayaanuchcharantamanilesha paahi maam ||15

அர்ச்சிராதி கதிமி த்ரிஷிம் வ்ரஜன் விச்யு திம் ன பஜதே ஜகத்பதே சச்சிதாத்மக பவத் குணோதயா னுச்சரந்த மநிலேஷ பாஹிமாம் என்னப்பா, வாதபுரீசா, அப்புறம் லேசொல்றேன் கேள். உன் பக்தன் யோகி என்ன பண்ணுகிறான் தெரியுமா? உன்னை அடையும் வழியில் பல வித லோகங் களை கண்டு மகிழ்ந்து,உன் திருவடி சேர்ந்தபின் அவனுக்கு வேறு பிறப்பே கிடையாது. நானும் அப்படி அடைய தான் உன்னை இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கிறேன். என்னைக் காப்பாற்றுவது உன்னால் தானே முடியும்?