62 இந்திரனின் கோபம்.
காலம் காலமாக பிருந்தாவன கோபர்கள் இந்திரனை வழிபடுபவர்கள். இந்திரனுக்கு அடிக்கடி கர்வம் வந்துவிடும். அதை அடக்க வேண்டும் என்று கிருஷ்ணன் மனதில் தோன்றியதால் கோபர்களை எங்கோ கண்காணாமல் இருக்கும் இந்திரனை வழிபடுவதற்குப் பதிலாக கண்ணெதிரே என்றும் அவர்களுக்கு உதவி வரும் கோவர்தன மலையை வழிபடச் செய்கிறான். அதல்லவோ, மழை தருகிறது, வாழ வகை செய்கிறது. பசுக்களுக்கு கன்றுகளுக்கு பிராமணர்களுக்கு என்று அனைவரையும் தாய் போல் ஆதரிக்கிறது. மூலிகைகள், உணவு,வாழ இடம், அளிக்கிறது என்றான் கண்ணன்.
கண்ணன் சொல்வது சரியென்று தோன்றவே அந்த வருஷ இந்திரவழிபாடு நின்றுபோனது. இதனால் இந்திரன் சீற்றம் கொண்டு பிருந்தாவனத்தை கிருஷ்ணனோடு சேர்த்து அழிக்க கிளம்பிவிட்டான்.
कदाचिद्गोपालान् विहितमखसम्भारविभवान्
निरीक्ष्य त्वं शौरे मघवमदमुद्ध्वंसितुमना: ।
विजानन्नप्येतान् विनयमृदु नन्दादिपशुपा-
नपृच्छ: को वाऽयं जनक भवतामुद्यम इति ॥१॥
kadaachidgOpaalaan vihita makhasambhaara vibhavaan
niriikshya tvaM shaure maghavamada mudhdvamsitumanaaH |
vijaanannapyetaan vinaya mR^idu nandaadi pashupaan
apR^ichChaH kO vaa(a)yaM janaka bhavataamudyama iti || 1
கதா³சித்³கோ³பாலான் விஹிதமக²ஸம்பா⁴ரவிப⁴வான்
நிரீக்ஷ்ய த்வம் ஶௌரே மக⁴வமத³முத்⁴வம்ஸிதுமனா꞉ |
விஜானந்னப்யேதான் வினயம்ருது³ நந்தா³தி³பஶுபா-
நப்ருச்ச²꞉ கோ வாயம் ஜனக ப⁴வதாமுத்³யம இதி || 62-1 ||
''என் தெய்வமே, சூரசேனன் வழித் தோன்றலே, ஒரு நாள் கோபர்கள் யாகம் செய்ய பொருட்களை திரட்டுவதை கவனித்துவிட்டாய். ஓஹோ இந்த வருஷ இந்திர விழாவுக்கு ஏற்பாடு நடக்கிறதுஎன்று அறிந்து கொண்டாய். இப்போதெல்லாம் இந்திரன் மிகவும் கர்வம் கொண்டவனாக நடந்து கொள்கிறான். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் தோன்றிவிட்டது உனக்கு. கபட நாடக சூத்ரதாரியான நீ ஒன்றுமறியாதவன் போல் உன் தந்தை நந்தகோபனிடம் என்ன கேட்டாய் என்று நினைவிருக்கிறதா?
''அப்பா, என்ன நீங்கள் எல்லோரும் ஏதோ யாகம் செய்வதைப் பற்றி பேசுகிறீர்கள், அதற்கு ஏற்பாடுகள் செயகிறீர்கள்? எனக்கும் சொல்லுங்கள்''
बभाषे नन्दस्त्वां सुत ननु विधेयो मघवतो
मखो वर्षे वर्षे सुखयति स वर्षेण पृथिवीम् ।
नृणां वर्षायत्तं निखिलमुपजीव्यं महितले
विशेषादस्माकं तृणसलिलजीवा हि पशव: ॥२॥
babhaaShe nandastvaaM suta nanu vidheyO maghavatO
makhO varShe varShe sukhayati sa varSheNa pR^ithiviim |
nR^iNaaM varShaayattaM nikhilamupajiivyaM mahitale
visheShaadasmaakaM tR^iNasalilajiivaa hi pashavaH || 2
ப³பா⁴ஷே நந்த³ஸ்த்வாம் ஸுத நனு விதே⁴யோ மக⁴வதோ
மகோ² வர்ஷே வர்ஷே ஸுக²யதி ஸ வர்ஷேண ப்ருதி²வீம் |
ந்ருணாம் வர்ஷாயத்தம் நிகி²லமுபஜீவ்யம் மஹிதலே
விஶேஷாத³ஸ்மாகம் த்ருணஸலிலஜீவா ஹி பஶவ꞉ || 62-2 ||
''கிருஷ்ணா, என் ஆருயிர் செல்வமே சொல்கிறேன் கேள். ஒவ்வொருவருஷம் நாம் எல்லோரும் ஒரு பெரிய யாகம் செய்கிறோம். வானத்தில் இருக்கும் தேவராஜன் இந்திரனை வேண்டி வணங்கு கிறோம். அவனை திருப்தி பண்ணி அவன் ஆசியை நாம் பெறுகிறோம். இந்திரன் மகிழ்ந்து நம்மை சுகமாக வாழவைக்க நிறைய மழை தருகிறான். நீரின்றி அமையாது உலகம் என்பார்களே. மழை இல்லாமல் உலகில் ஜீவராசிகள் வாழமுடியாது கண்ணா. அதுவும் நம்மைப் போன்ற கோபர்களுக்கு பசுக்கள் முக்கியம். அவையே நம் வாழ்வாதாரம். அவை சந்தோஷமாக வாழ புல்லும் நீரும் மழையால் தான் அல்லவோ கிடைக்கிறது. நான் சொல்வது புரிகிறதா?'' என்றான் நந்தகோபன்.
इति श्रुत्वा वाचं पितुरयि भवानाह सरसं
धिगेतन्नो सत्यं मघवजनिता वृष्टिरिति यत् ।
अदृष्टं जीवानां सृजति खलु वृष्टिं समुचितां
महारण्ये वृक्षा: किमिव बलिमिन्द्राय ददते ॥३॥
iti shrutvaa vaachaM piturayi bhavaanaaha sarasaM
dhigetannO satyaM maghavajanitaa vR^iShTiriti yat |
adR^iShTaM jiivaanaaM sR^ijati khalu vR^iShTiM samuchitaaM
mahaaraNye vR^ikshaaH kimiva balimindraaya dadate || 3
இதி ஶ்ருத்வா வாசம் பிதுரயி ப⁴வானாஹ ஸரஸம்
தி⁴கே³தன்னோ ஸத்யம் மக⁴வஜனிதா வ்ருஷ்டிரிதி யத் |
அத்³ருஷ்டம் ஜீவானாம் ஸ்ருஜதி க²லு வ்ருஷ்டிம் ஸமுசிதாம்
மஹாரண்யே வ்ருக்ஷா꞉ கிமிவ ப³லிமிந்த்³ராய த³த³தே || 62-3 ||
''குருவாயூரா , ஏதோ முதன் முதலாக இதுவரை தெரியாத ஒன்றை தெரிந்துக்கொண்டவன் போல் நீ தலையாட்டினாய். இருந்தாலும் உன் மனதில் உள்ளதை தெரிவிப்பவன் போல் பேசினாய்.
''இல்லேப்பா. எனக்கு என்னவோ அந்த இந்திரன் தான் நமக்கு மழை கொடுப்பவன் என்று தோன்றவில்லை அப்பா. நீ தானே அடிக்கடி சொல்லுவாய். நாம் எல்லோருக்கும் நல்லது செய்தால் நாடு சுபிக்ஷமாக இருக்கும். நல்ல மழை விடாமல் பெய்யும்'' என்று. அப்படிப்பார்த்தால் ,அதோ அந்த காட்டில் இருக்கும் பெரிய பெரிய மரங்கள் என்ன யாகம் செயகிறது. எதை இந்திரனுக்கு நன்றியாக தருகிறது?
इदं तावत् सत्यं यदिह पशवो न: कुलधनं
तदाजीव्यायासौ बलिरचलभर्त्रे समुचित: ।
सुरेभ्योऽप्युत्कृष्टा ननु धरणिदेवा: क्षितितले
ततस्तेऽप्याराध्या इति जगदिथ त्वं निजजनान् ॥४॥
idaM taavatsatyaM yadiha pashavO naH kuladhanaM
tadaajiivyaayaasau balirachalabhartre samuchitaH |
surebhyO(a)pyutkR^iShTaa nanu dharaNi devaaH kshititale
tataste(a)pyaaraadhyaa iti jagaditha tvaM nijajanaan ||4
இத³ம் தாவத்ஸத்யம் யதி³ஹ பஶவோ ந꞉ குலத⁴னம்
ததா³ஜீவ்யாயாஸௌ ப³லிரசலப⁴ர்த்ரே ஸமுசித꞉ |
ஸுரேப்⁴யோ(அ)ப்யுத்க்ருஷ்டா நனு த⁴ரணிதே³வா꞉ க்ஷிதிதலே
ததஸ்தே(அ)ப்யாராத்⁴யா இதி ஜக³தி³த² த்வம் நிஜஜனான் || 62-4 ||
''நீ சாமர்த்தியக்காரன் ஆச்சே. நந்தகோபனோடு பேசும்போது அவனைச் சுற்றி நிறைய கோபர்கள் இருக்கும் சமயமாகத்தான் இந்த பேச்சை ஆரமித்தாய். எல்லோரையும் பார்த்து ''நீங்கள் சொல்வது ரொம்ப சரி அப்பா. பசுக்கள் தான் நமக்கு ஜீவாதாரம். நமது செல்வம். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. அப்படி முக்கியமான நமது பசுக்களுக்கும், வேதமோதும் பிராமணர்களுக்கும் உணவளித்து அதன் மூலம் நம்மை காப்பாற்றும் இந்த மலை தான் முக்கியம். அதை திருப்திப் படுத்த அல்லவோ நாம் யாகம் செய்யவேண்டும்? அதோ நிற்கிறதே அந்த கோவர்த்தன மலையும் பிராமணர்களும் எங்கோ மேலே இருக்கும் தேவர்களை விட முக்கியமானவர்கள், பெரியவர்கள் , நாம் வணங்கத்தக்கவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது அப்பா ''
भवद्वाचं श्रुत्वा बहुमतियुतास्तेऽपि पशुपा:
द्विजेन्द्रानर्चन्तो बलिमददुरुच्चै: क्षितिभृते ।
व्यधु: प्रादक्षिण्यं सुभृशमनमन्नादरयुता-
स्त्वमादश्शैलात्मा बलिमखिलमाभीरपुरत: ॥५॥
bhavadvaacham shrutvaa bahumatiyutaaste(a)pi pashupaaH
dvijendraanarchantO balimadaduruchchaiH kshitibhR^ite |
vyadhuH praadakshiNyaM subhR^ishamanamannaadarayutaastvamaadashshailaatmaa
balimakhilamaabhiirapurataH || 5
ப⁴வத்³வாசம் ஶ்ருத்வா ப³ஹுமதியுதாஸ்தே(அ)பி பஶுபா꞉
த்³விஜேந்த்³ரானர்சந்தோ ப³லிமத³து³ருச்சை꞉ க்ஷிதிப்⁴ருதே |
வ்யது⁴꞉ ப்ராத³க்ஷிண்யம் ஸுப்⁴ருஶமனமன்னாத³ரயுதா-
ஸ்த்வமாத³꞉ ஶைலாத்மா ப³லிமகி²லமாபீ⁴ரபுரத꞉ || 62-5 ||
ஊரிலுள்ள கோபர்களும் சிந்தித்தார்கள். ஆமாம், குட்டி கிருஷ்ணா, நீ சொல்வது தான் சரி என்று மனதில் பட்டது. பிராமணர்களை பூஜித்து தான தர்மம் செய்தார்கள். கோவர்தன மலையை வணங்கி ஒரு யாகம் அதற்கு ஏற்பாடுசெய்தார்கள். கோவர்தன மலையை நன்றியோடு வணங்கி அதை திருப்திப்படுத்த ஒரு பெரிய யாகம் நடந்தது. கோவர்தன மலையை பிரதக்ஷணம் செய்து நமஸ்கரித்தார்கள். நீயே கோவர்தனனாக மாறி மகிழ்ந்து அவர்கள் அளித்த நைவேத்யத்தை ஏற்றுக்கொண்டாய். அவர்களை ஆசிர்வதித்தாய்.
अवोचश्चैवं तान् किमिह वितथं मे निगदितं
गिरीन्द्रो नन्वेष स्वबलिमुपभुङ्क्ते स्ववपुषा ।
अयं गोत्रो गोत्रद्विषि च कुपिते रक्षितुमलं
समस्तानित्युक्ता जहृषुरखिला गोकुलजुष: ॥६॥
avOchashchaivaM taan kimiha vitathaM me nigaditaM
giriindrO nanveSha svabalimupabhunkte svavapuShaa |
ayaM gOtrO gOtradviShi cha kupite rakshitumalaM
samastaanityuktaa jahR^iShurakhilaa gOkulajuShaH || 6
அவோசஶ்சைவம் தான்கிமிஹ விதத²ம் மே நிக³தி³தம்
கி³ரீந்த்³ரோ நன்வேஷ ஸ்வப³லிமுபபு⁴ங்க்தே ஸ்வவபுஷா |
அயம் கோ³த்ரோ கோ³த்ரத்³விஷி ச குபிதே ரக்ஷிதுமலம்
ஸமஸ்தானித்யுக்தா ஜஹ்ருஷுரகி²லா கோ³குலஜுஷ꞉ || 62-6 ||
''வாதபுரீஸ்வரா, உன்னோடு வாதம் செய்யமுடியுமா? நீ ஒரு கோடி காட்டினாயே உன் பேச்சில் ஞாபகம் இருக்கிறதா? அதை நினைவூட்டுகிறேன்.கேள்.
''அப்பா நான் சொன்னது பொய் இல்லை என்று இப்போது புரிகிறதா? பார்த்தீர்களா, இந்த கோவர்த்தன மலை நாம் யாகத்தில் படைத்த அனைத்து பண்டங்களையும் தானே திருப்தியாக ஏற்று உண்டதை கவனித்தீர்களா? ஒருவேளை இதனால் இந்திரன் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அப்படி இந்திரன் கோபித்துக்கொண்டு நமக்கு தீங்கு செய்தால் கூட இந்த கோவர்த்தன மலை நம்மை எல்லாம் காக்கும்'' என்று நீ சொன்னதும் அனைத்து கோபர்களும் தலையாட்டி மகிழ்ந்தார்கள்.
परिप्रीता याता: खलु भवदुपेता व्रजजुषो
व्रजं यावत्तावन्निजमखविभङ्गं निशमयन् ।
भवन्तं जानन्नप्यधिकरजसाऽऽक्रान्तहृदयो
न सेहे देवेन्द्रस्त्वदुपरचितात्मोन्नतिरपि ॥७॥
paripriitaa yaataaH khalu bhavadupetaa vrajajuShO
vrajaM yaavattaavannija makhavibhangaM nishamayan |
bhavantaM jaanannapyadhika rajasaa(a)(a)kraantahR^idayO
na sehe devendrastvaduparachitaatmOnnatirapi || 7
பரிப்ரீதா யாதா꞉ க²லு ப⁴வது³பேதா வ்ரஜஜுஷோ
வ்ரஜம் யாவத்தாவன்னிஜமக²விப⁴ங்க³ம் நிஶமயன் |
ப⁴வந்தம் ஜானந்னப்யதி⁴கரஜஸா(ஆ)க்ராந்தஹ்ருத³யோ
ந ஸேஹே தே³வேந்த்³ரஸ்த்வது³பரசிதாத்மோன்னதிரபி || 62-7 ||
கோவர்தன கிரி விழா, கிரிபூஜை, எல்லாம் சிறப்பாக நடந்து வ்ரஜபூமியில் எல்லோரும் திருப்தியோடு வீடு திரும்பினார்கள்., இந்திரலோகத்துக்கு செய்தி உடனே போயிற்று. கோகுல பிருந்தாவன பிரஜைகள் தன்னை மதித்து, வணங்காமல், ஏதோ ஒரு சின்ன மலைக்கு இந்த வருஷம் யாகம் செய்தது இந்திரனை கடும்கோபத்தில் ஆழ்த்தியது. இந்திரனுக்கு நீ யார் என்பதும் தெரியும். உன்னால் தான் இந்திர பதவி அவனுக்கு கிடைத்ததும் தெரியும். அவனிடம் ரஜோகுணம் மிகுந்து விட்டதால் தலை கால் புரியவில்லை. ஆணவம் அவனை ஆட்கொண்டது. தன்னை அவமதித்ததால் வ்ரஜபூமி பிரஜைகள் மேல் சீற்றம் பெருகியது.
मनुष्यत्वं यातो मधुभिदपि देवेष्वविनयं
विधत्ते चेन्नष्टस्त्रिदशसदसां कोऽपि महिमा ।
ततश्च ध्वंसिष्ये पशुपहतकस्य श्रियमिति
प्रवृत्तस्त्वां जेतुं स किल मघवा दुर्मदनिधि: ॥८॥
manuShyatvaM yaatO madhubhidapi deveShvavinayaM
vidhatte chennaShTasitradashasadasaaM kO(a)pi mahimaa |
tatashcha dhvamsiShye pashupahatakasya shriyamiti
pravR^ittastvaaM jetuM sa kila maghavaa durmadanidhiH || 8
மனுஷ்யத்வம் யாதோ மது⁴பி⁴த³பி தே³வேஷ்வவினயம்
வித⁴த்தே சேன்னஷ்டஸ்த்ரித³ஶஸத³ஸாம் கோ(அ)பி மஹிமா |
ததஶ்ச த்⁴வம்ஸிஷ்யே பஶுபஹதகஸ்ய ஶ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ்த்வாம் ஜேதும் ஸ கில மக⁴வா து³ர்மத³னிதி⁴꞉ || 62-8 ||
''இந்த விஷ்ணு, மானுட அவதாரம் கொண்டு யாதவ சிறுவனாக பிறந்து தேவர்களை அவமதிக் கிறான். அவர்களை கௌரவிப்பதை தடை செய்துவிட்டான். இந்த யாதவ சிறுவனை தண்டிக்க வேண்டும். உடனே அவனை பழி வாங்கி பாடம் கற்பிக்கிறேன். என்னை எதிர்க்கும் அவனை தோல்வி அடையச் செய்கிறேன் '' என்று கிளம்பிவிட்டான்.
त्वदावासं हन्तुं प्रलयजलदानम्बरभुवि
प्रहिण्वन् बिभ्राण; कुलिशमयमभ्रेभगमन: ।
प्रतस्थेऽन्यैरन्तर्दहनमरुदाद्यैविंहसितो
भवन्माया नैव त्रिभुवनपते मोहयति कम् ॥९॥
tvadaavaasaM hantuM pralayajaladaanambarabhuvi
prahiNvan bibhraaNaH kulishamayamabhrebhagamanaH |
pratasthe(a)nyairantardahana marudaadyairvihasitO
bhavanmaayaa naiva tribhuvanapate mOhayatikam || 9
த்வதா³வாஸம் ஹந்தும் ப்ரலயஜலதா³னம்ப³ரபு⁴வி
ப்ரஹிண்வன் பி³ப்⁴ராண꞉ குலிஶமயமப்⁴ரேப⁴க³மன꞉ |
ப்ரதஸ்தே²(அ)ன்யைரந்தர்த³ஹனமருதா³த்³யைர்விஹஸிதோ
ப⁴வன்மாயா நைவ த்ரிபு⁴வனபதே மோஹயதி கம் || 62-9 ||
குருவாயூரா, கிருஷ்ணா, நீ வாழும் கோகுலத்தையே அழிக்க இந்திரன் திட்டமிட்டான். உங்கள் அனைவரையும் கூண்டோடு கைலாசம் அனுப்ப முடிவெடுத்தான். மேகராஜனை அழைத்தான். ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டான். திக் தேவதைகளுக்கு ஆணையிட்டான். அக்னி வாயு, வருணன் ஆகியோர் இந்திரா என்ன ஆயிற்று உனக்கு என்று சிரித்தனர். யாரை எதிர்க்கிறாய் என்று உணர்கிறாயா ? என்று அறிவுறுத்தினாலும் இந்திரன் காதில் எதுவும் விழவில்லை. எல்லாம் உன் மாயையினால் நிகழ்வது அல்லவா? அதில் மயங்காதார் யார்?
सुरेन्द्र: क्रुद्धश्चेत् द्विजकरुणया शैलकृपयाऽ-
प्यनातङ्कोऽस्माकं नियत इति विश्वास्य पशुपान् ।
अहो किन्नायातो गिरिभिदिति सञ्चिन्त्य निवसन्
मरुद्गेहाधीश प्रणुद मुरवैरिन् मम गदान् ॥१०॥
surendraH kruddhashchet dvijakaruNayaa shailakR^ipayaa(a)-
pyanaatankO(a)smaakaM niyata iti vishvaasya pashupaan |
ahO kinnaayaatO giribhiditi sanchintya nivasan
marudgehaadhiisha praNuda muravairin mama gadaan ||10
ஸுரேந்த்³ர꞉ க்ருத்³த⁴ஶ்சேத்³விஜகருணயா ஶைலக்ருபயா-
ப்யனாதங்கோ(அ)ஸ்மாகம் நியத இதி விஶ்வாஸ்ய பஶுபான் |
அஹோ கிம் நாயாதோ கி³ரிபி⁴தி³தி ஸஞ்சிந்த்ய நிவஸன்
மருத்³கே³ஹாதீ⁴ஶ ப்ரணுத³ முரவைரின் மம க³தா³ன் || 62-10 |
பயங்கரமாக தொடர்ந்து இடி இடித்தது. கதி கலங்கியது. வானம் இருளாக இருண்டது . காற்று சீறி சூறையாடிற்று. கோபர்கள் திகைத்தனர். நீ அனைவருக்கும் ஆறுதல் அளித்தாய்.
'இது இந்திரன் கோபச்செயல் என்றால் நீங்கள் யாரும் தேவேந்திரன் கோபத்தை கண்டு அஞ்சவேண்டாம். பிராமணர்கள் தான தர்மம் பெற்று நம்மை வாயார மனமார வாழ்த்தினார்களே அது போதும். கோவர்தன கிரீசன் நம் மீது கருணை கொண்டவன். தேவேந்திரன் என்னதான் செயகிறான் பார்க்கலாம். அவன் செய்வதை செய்யட்டும்'' என்றாய் .
முராரி , எண்டே குருவாயூரப்பா, என்னையும் இந்த வாத நோயிலிருந்து காப்பாற்றி அருள்புரிவாயப்பா.