25 நரசிம்ம அவதாரம்
स्तंभे घट्टयतो हिरण्यकशिपो: कर्णौ समाचूर्णय-
न्नाघूर्णज्जगदण्डकुण्डकुहरो घोरस्तवाभूद्रव: ।
श्रुत्वा यं किल दैत्यराजहृदये पूर्वं कदाप्यश्रुतं
कम्प: कश्चन संपपात चलितोऽप्यम्भोजभूर्विष्टरात् ॥१॥
ஸ்தம்பே₄ க₄ட்டயதோ ஹிரண்யகஶிபோ: கர்ணௌ ஸமாசூர்ணய-
ந்நாகூ₄ர்ணஜ்ஜக₃த₃ண்ட₃குண்ட₃குஹரோ கோ₄ரஸ்தவாபூ₄த்₃ரவ: |
ஶ்ருத்வா யம் கில தை₃த்யராஜஹ்ருத₃யே பூர்வம் கதா₃ப்யஶ்ருதம்
கம்ப: கஶ்சந ஸம்பபாத சலிதோ(அ)ப்யம்போ₄ஜபூ₄ர்விஷ்டராத் || 1||
1. ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது. அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாயிருந்தது. இதுவரை எவராலும் கேட்கப்படாத சத்தமாக இருந்தது. அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன் கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம்.
दैत्ये दिक्षु विसृष्टचक्षुषि महासंरम्भिणि स्तम्भत:
सम्भूतं न मृगात्मकं न मनुजाकारं वपुस्ते विभो ।
किं किं भीषणमेतदद्भुतमिति व्युद्भ्रान्तचित्तेऽसुरे
विस्फूर्ज्जद्धवलोग्ररोमविकसद्वर्ष्मा समाजृम्भथा: ॥२॥
தை₃த்யே தி₃க்ஷு விஸ்ருஷ்டசக்ஷுஷி மஹாஸம்ரம்பி₄ணி ஸ்தம்ப₄த:
ஸம்பூ₄தம் ந ம்ருகா₃த்மகம் ந மநுஜாகாரம் வபுஸ்தே விபோ₄ |
கிம் கிம் பீ₄ஷணமேதத₃த்₃பு₄தமிதி வ்யுத்₃ப்₄ராந்தசித்தே(அ)ஸுரே
விஸ்பூ₂ர்ஜ்ஜத்₃த₄வலோக்₃ரரோமவிகஸத்₃வர்ஷ்மா ஸமாஜ்ரும்ப₄தா₂: || 2||
2. எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான். அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் தாங்கள் தோன்றினீர்கள். இது என்ன என்று அசுரன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன், சிங்க உருவத்துடன் தாங்கள் பெரிதாக வளர்ந்தீர்கள்.
तप्तस्वर्णसवर्णघूर्णदतिरूक्षाक्षं सटाकेसर-
प्रोत्कम्पप्रनिकुम्बितांबरमहो जीयात्तवेदं वपु: ।
व्यात्तव्याप्तमहादरीसखमुखं खड्गोग्रवल्गन्महा-
जिह्वानिर्गमदृश्यमानसुमहादंष्ट्रायुगोड्डामरम् ॥३॥
தப்தஸ்வர்ணஸவர்ணகூ₄ர்ணத₃திரூக்ஷாக்ஷம் ஸடாகேஸர-
ப்ரோத்கம்பப்ரநிகும்பி₃தாம்ப₃ரமஹோ ஜீயாத்தவேத₃ம் வபு: |
வ்யாத்தவ்யாப்தமஹாத₃ரீஸக₂முக₂ம் க₂ட்₃கோ₃க்₃ரவல்க₃ந்மஹா-
ஜிஹ்வாநிர்க₃மத்₃ருஶ்யமாநஸுமஹாத₃ம்ஷ்ட்ராயுகோ₃ட்₃டா₃மரம் || 3||
3. சுழலும் தங்கள் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரிமயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன. வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்றுகொண்டு இருந்த நாக்கு வெளியே வரும்போது, மிகப்பெரிய கோரைப்பற்கள் இருபுறமும் தெரிந்தன. பயங்கரமான உருவம் கொண்ட, தங்களுடைய இந்த நரசிம்ம அவதாரம் சிறந்து விளங்கட்டும்.
उत्सर्पद्वलिभङ्गभीषणहनु ह्रस्वस्थवीयस्तर-
ग्रीवं पीवरदोश्शतोद्गतनखक्रूरांशुदूरोल्बणम् ।
व्योमोल्लङ्घि घनाघनोपमघनप्रध्वाननिर्धावित-
स्पर्धालुप्रकरं नमामि भवतस्तन्नारसिंहं वपु: ॥४॥
உத்ஸர்பத்₃வலிப₄ங்க₃பீ₄ஷணஹநு ஹ்ரஸ்வஸ்த₂வீயஸ்தர-
க்₃ரீவம் பீவரதோ₃ஶ்ஶதோத்₃க₃தநக₂க்ரூராம்ஶுதூ₃ரோல்ப₃ணம் |
வ்யோமோல்லங்கி₄ க₄நாக₄நோபமக₄நப்ரத்₄வாநநிர்தா₄வித-
ஸ்பர்தா₄லுப்ரகரம் நமாமி ப₄வதஸ்தந்நாரஸிம்ஹம் வபு: || 4||
4. குட்டையான கழுத்துடன், கர்ஜிக்கும்போது மடிந்த கன்னத்து சதைகளால் தங்கள் உருவம் பயங்கரமானதாய் இருந்தது. நூற்றுக்கணக்கான கைகளில் இருந்து கூர்மையான நகங்கள் வெளிவந்தது. மிக பயங்கரமான இடிமுழக்கம் போன்ற சிம்மநாதக் குரல், பகைவர்களை ஓடச் செய்தது. இப்படிப்பட்ட நரசிம்ம உருவத்தை நமஸ்கரிக்கிறேன்.
नूनं विष्णुरयं निहन्म्यमुमिति भ्राम्यद्गदाभीषणं
दैत्येन्द्रं समुपाद्रवन्तमधृथा दोर्भ्यां पृथुभ्याममुम् ।
वीरो निर्गलितोऽथ खड्गफलकौ गृह्णन्विचित्रश्रमान्
व्यावृण्वन् पुनरापपात भुवनग्रासोद्यतं त्वामहो ॥५॥
நூநம் விஷ்ணுரயம் நிஹந்ம்யமுமிதி ப்₄ராம்யத்₃க₃தா₃பீ₄ஷணம்
தை₃த்யேந்த்₃ரம் ஸமுபாத்₃ரவந்தமத்₄ரு₂ தோ₃ர்ப்₄யாம் ப்ருது₂ப்₄யாமமும் |
வீரோ நிர்க₃லிதோ(அ)த₂ க₂ட்₃க₃ப₂லகௌ க்₃ருஹ்ணந்விசித்ரஶ்ரமாந்
வ்யாவ்ருண்வந் புநராபபாத பு₄வநக்₃ராஸோத்₃யதம் த்வாமஹோ || 5||
5. “இவன் நிச்சயம் நாராயணன், இவனைக் கொல்கிறேன்” என்று ஹிரண்யகசிபு, தன் கதையைச் சுழற்றிக்கொண்டு, தங்கள் அருகே வந்தான். தங்கள் பருத்த கரங்களால் அவனைப் பிடித்தீர்கள். அவன், தங்கள் பிடியிலிருந்து நழுவி, தன் வாளால், உலகங்களை விழுங்கும் உக்கிரத்தோடு இருந்த தங்களைத் தாக்க முயன்றான். ஆச்சர்யம்!
भ्राम्यन्तं दितिजाधमं पुनरपि प्रोद्गृह्य दोर्भ्यां जवात्
द्वारेऽथोरुयुगे निपात्य नखरान् व्युत्खाय वक्षोभुवि ।
निर्भिन्दन्नधिगर्भनिर्भरगलद्रक्ताम्बु बद्धोत्सवं
पायं पायमुदैरयो बहु जगत्संहारिसिंहारवान् ॥६॥
ப்₄ராம்யந்தம் தி₃திஜாத₄மம் புநரபி ப்ரோத்₃க்₃ருஹ்ய தோ₃ர்ப்₄யாம் ஜவாத்
த்₃வாரே(அ)தோ₂ருயுகே₃ நிபாத்ய நக₂ராந் வ்யுத்கா₂ய வக்ஷோபு₄வி |
நிர்பி₄ந்த₃ந்நதி₄க₃ர்ப₄நிர்ப₄ரக₃லத்₃ரக்தாம்பு₃ ப₃த்₃தோ₄த்ஸவம்
பாயம் பாயமுதை₃ரயோ ப₃ஹு ஜக₃த்ஸம்ஹாரிஸிம்ஹாரவாந் || 6||
6. மறுபடியும் கரங்களால் அவனைப் பிடித்து, வாசற்படியில், உம்முடைய தொடைகளில் படுக்கவைத்து, கூரிய நகங்களால் அவன் மார்பைக் கிழித்தீர்கள். பெருகிய ரத்தத்தைக் குடித்து சிம்மநாதம் செய்தீர்கள்.
त्यक्त्वा तं हतमाशु रक्तलहरीसिक्तोन्नमद्वर्ष्मणि
प्रत्युत्पत्य समस्तदैत्यपटलीं चाखाद्यमाने त्वयि ।
भ्राम्यद्भूमि विकम्पिताम्बुधिकुलं व्यालोलशैलोत्करं
प्रोत्सर्पत्खचरं चराचरमहो दु:स्थामवस्थां दधौ ॥७॥
த்யக்த்வா தம் ஹதமாஶு ரக்தலஹரீஸிக்தோந்நமத்₃வர்ஷ்மணி
ப்ரத்யுத்பத்ய ஸமஸ்ததை₃த்யபடலீம் சாகா₂த்₃யமாநே த்வயி |
ப்₄ராம்யத்₃பூ₄மி விகம்பிதாம்பு₃தி₄குலம் வ்யாலோலஶைலோத்கரம்
ப்ரோத்ஸர்பத்க₂சரம் சராசரமஹோ து₃:ஸ்தா₂மவஸ்தா₂ம் த₃தௌ₄ || 7||
7. கொன்ற அவனை விட்டுவிட்டு, எழுந்து நடந்து மற்ற அசுரர்களை விழுங்கத் தொடங்கினீர்கள். அப்போது, அனைத்து உலகங்களும் சுழன்றன. சமுத்திரங்கள் கலங்கின. மலைகள் அசைந்தன. நட்சத்திரங்கள் சிதறின. அனைத்தும் நிலைகுலைந்துவிட்டது!
तावन्मांसवपाकरालवपुषं घोरान्त्रमालाधरं
त्वां मध्येसभमिद्धकोपमुषितं दुर्वारगुर्वारवम् ।
अभ्येतुं न शशाक कोपि भुवने दूरे स्थिता भीरव:
सर्वे शर्वविरिञ्चवासवमुखा: प्रत्येकमस्तोषत ॥८॥
தாவந்மாம்ஸவபாகராலவபுஷம் கோ₄ராந்த்ரமாலாத₄ரம்
த்வாம் மத்₄யேஸப₄மித்₃த₄கோபமுஷிதம் து₃ர்வாரகு₃ர்வாரவம் |
அப்₄யேதும் ந ஶஶாக கோபி பு₄வநே தூ₃ரே ஸ்தி₂தா பீ₄ரவ:
ஸர்வே ஶர்வவிரிஞ்சவாஸவமுகா₂: ப்ரத்யேகமஸ்தோஷத || 8||
8. ஹிரண்யகசிபுவின் மாமிசத்தையும், குடலையும் மாலையாய் அணிந்துகொண்டு, இடிமுழக்கம்போல் கர்ஜித்துக்கொண்டு இருந்த தங்களை நெருங்க அனைவரும் அஞ்சினர். சிவன், பிரம்மன், இந்திரன் முதலியோர் வெகுதூரத்தில் இருந்து தங்களைத் துதித்தனர்.
भूयोऽप्यक्षतरोषधाम्नि भवति ब्रह्माज्ञया बालके
प्रह्लादे पदयोर्नमत्यपभये कारुण्यभाराकुल: ।
शान्तस्त्वं करमस्य मूर्ध्नि समधा: स्तोत्रैरथोद्गायत-
स्तस्याकामधियोऽपि तेनिथ वरं लोकाय चानुग्रहम् ॥९॥
பூ₄யோ(அ)ப்யக்ஷதரோஷதா₄ம்நி ப₄வதி ப்₃ரஹ்மாஜ்ஞயா பா₃லகே
ப்ரஹ்லாதே₃ பத₃யோர்நமத்யபப₄யே காருண்யபா₄ராகுல: |
ஶாந்தஸ்த்வம் கரமஸ்ய மூர்த்₄நி ஸமதா₄: ஸ்தோத்ரைரதோ₂த்₃கா₃யத-
ஸ்தஸ்யாகாமதி₄யோ(அ)பி தேநித₂ வரம் லோகாய சாநுக்₃ரஹம் || 9||
9. அப்போதும் தங்களுடைய கோபம் அடங்கவில்லை. பிரம்மன், குழந்தையான பிரஹ்லாதனிடம் தங்களை வணங்கும்படி கூறினார். பயமற்ற பிரஹ்லாதனும் தங்களை நெருங்கி நமஸ்கரித்தான். தாங்களும் சீற்றம் தணிந்து பிரஹ்லாதனுடைய தலைமேல் கையை வைத்து ஆசீர்வதித்தீர்கள்.
அவனும் தங்களை ஸ்தோத்திரங்களால் துதிக்க, அவனுக்கு அவன் விரும்பாமலேயே எல்லா வரங்களையும் அளித்து, உலகங்களையும் அனுக்ரஹித்தீர்கள்.
एवं नाटितरौद्रचेष्टित विभो श्रीतापनीयाभिध-
श्रुत्यन्तस्फ़ुटगीतसर्वमहिमन्नत्यन्तशुद्धाकृते ।
तत्तादृङ्निखिलोत्तरं पुनरहो कस्त्वां परो लङ्घयेत्
प्रह्लादप्रिय हे मरुत्पुरपते सर्वामयात्पाहि माम् ॥१०॥
ஏவம் நாடிதரௌத்₃ரசேஷ்டித விபோ₄ ஶ்ரீதாபநீயாபி₄த₄-
ஶ்ருத்யந்தஸ்ஃபுடகீ₃தஸர்வமஹிமந்நத்யந்தஶுத்₃தா₄க்ருதே |
தத்தாத்₃ருங்நிகி₂லோத்தரம் புநரஹோ கஸ்த்வாம் பரோ லங்க₄யேத்
ப்ரஹ்லாத₃ப்ரிய ஹே மருத்புரபதே ஸர்வாமயாத்பாஹி மாம் || 10||
10. இவ்வாறு ஒரு பயங்கரமான லீலையை நடித்தீர்கள். ஸ்ரீ நரசிம்மதாபனீயம் என்ற உபநிஷத்தில் பாடப்பட்டவரும், எல்லா மகிமைகளை உடையவரும், பரிசுத்தமான ரூபத்தை உடையவரும், பிரஹ்லாதனிடத்தில் பிரியம் வைத்தவருமான குருவாயூரப்பா! எல்லா ரோகங்களில் இருந்தும் என்னைக் காக்க வேண்டும்.
“பிரஹ்லாதப்ரிய” என்று பட்டத்ரி அழைத்ததும், பகவான் தலையை அசைக்காது இருந்தார். பட்டத்ரி வருந்தினார். அப்போது, “ நான் பிரஹ்லாதனிடத்தில் மட்டுமல்ல, பக்தர்கள் அனைவரிடமும் அன்பு வைத்தவன்” என்று அசரீரி கேட்டது என்று பெரியோர்கள் சொல்வார்கள்.