35. ராவண வதம்
नीतस्सुग्रीवमैत्रीं तदनु हनुमता दुन्दुभे: कायमुच्चै:
क्षिप्त्वाङ्गुष्ठेन भूयो लुलुविथ युगपत् पत्रिणा सप्त सालान् ।
हत्वा सुग्रीवघातोद्यतमतुलबलं बालिनं व्याजवृत्त्या
वर्षावेलामनैषीर्विरहतरलितस्त्वं मतङ्गाश्रमान्ते ॥१॥
niitassugriivamaitriiM tadanu hanumataa dundubheH kaayamuchchaiH
kshiptvaanguShThena bhuuyO luluvitha yugapatpatriNaasapta saalaan |
hatvaa sugriiva ghaatOdyata-matulabalaM vaalinaM vyaajavR^ittyaa
varShaavelaamanaiShiirviraha taralitastvaM matangaashramaante || 1
நீதஸ்ஸுக்³ரீவமைத்ரீம் தத³னு ஹனுமதா து³ந்து³பே⁴꞉ காயமுச்சை꞉
க்ஷிப்த்வாங்கு³ஷ்டே²ன பூ⁴யோ லுலுவித² யுக³பத்பத்ரிணா ஸப்த ஸாலான் |
ஹத்வா ஸுக்³ரீவகா⁴தோத்³யதமதுலப³லம் வாலினம் வ்யாஜவ்ருத்த்யா
வர்ஷாவேலாமனைஷீர்விரஹதரலிதஸ்த்வம் மதங்கா³ஶ்ரமாந்தே || 35-1 ||
குருவாயூரப்பா, மேலும் சொல்கிறேன் கேள். சரியில்லை என்றால் மேலே சொல்லாமல் நிறுத்து. சரியென்றால் கடைசியில் தலையை வழக்கம்போல் ஆட்டி ஆமோதி.
''ராமனாக நீ , உன் சகோதரன் லக்ஷ்மணனுடன் ஹநுமானை சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்தாய். சரியான புத்திசாலி, பலவான். நம்பகமானவன் என்று அவனை அணைத்துக் கொண்டாய். உங்களை சுக்ரீவனிடம் அழைத்துப் போனான் ஹனுமான். சுக்ரீவனோடு ஒரு உடன்படிக்கை நடந்தது. உன் பலத்தை பரிசோதிக்க விரும்பிய சுக்ரீவனின் சந்தேகத்தை முதலில் யாராலும் அசைக்கக் கூட முடியாத துந்துபியின் மண்டை ஓட்டை, கால் கட்டை விரலால் தூர வீசிக் காட்டினாய். அடுத்து ஒரே அஸ்திரத்தால் ஏழு பிரம்மாண்டமான சால் மரங்களைத் துளைத்துக் காட்டினாய். சுக்ரீவனைக் கொல்ல காத்திருந்த விரோதியான அவன் சகோதரன் வாலியை மறைந்து நின்று கொன்றாய். மழைக்காலம் முழுதும் சீதையை தேடும் முயற்சியை தள்ளிப்போட்டு மதங்க ரிஷியின் ஆஸ்ரமம் அருகே காத்திருந்தாய்.
सुग्रीवेणानुजोक्त्या सभयमभियता व्यूहितां वाहिनीं ता-
मृक्षाणां वीक्ष्य दिक्षु द्रुतमथ दयितामार्गणायावनम्राम् ।
सन्देशं चाङ्गुलीयं पवनसुतकरे प्रादिशो मोदशाली
मार्गे मार्गे ममार्गे कपिभिरपि तदा त्वत्प्रिया सप्रयासै: ॥२॥
sugriiveNaanujOktyaa sabhayamabhiyataa vyuuhitaaM vaahiniiM taamR^
ikshaaNaaM viikshya dikshu drutamatha dayitaamaargaNaayaavanamraam |
sandesha~nchaanguliiyaM pavanasutakare praadishO mOdashaalii
maarge maarge mamaarge kapibhirapi tadaa tvatpriyaa saprayaasaiH || 2
ஸுக்³ரீவேணானுஜோக்த்யா ஸப⁴யமபி⁴யதா வ்யூஹிதாம் வாஹினீம் தா-
ம்ருக்ஷாணாம் வீக்ஷ்ய தி³க்ஷு த்³ருதமத² த³யிதாமார்க³ணாயாவனம்ராம் |
ஸந்தே³ஶம் சாங்கு³லீயம் பவனஸுதகரே ப்ராதி³ஶோ மோத³ஶாலீ
மார்கே³ மார்கே³ மமார்கே³ கபிபி⁴ரபி ததா³ த்வத்ப்ரியா ஸப்ரயாஸை꞉ || 35-2 ||\
மாரிக்காலம் முடிந்தது. கொடுத்த வாக்கை மறந்துவிட்டான் சுக்ரீவன் என்று கோபத்தோடு லக்ஷ்மணன் அவனைத் தண்டிக்கச் சென்றபோது சுக்ரீவன் உடனே தவறை உணர்ந்து வானரப் படைகளை திரட்டி சீதையை நாலா திக்குகளிலும் தேட ஆயத்தம் செய்துவிட்டான். உன் எதிரே
வானரப்படை அணிவகுத்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்த நீ அனுமனிடம் உன் முத்திரையிட்ட கணையாழியை, மோதிரத்தை அளித்து, சீதையைக் கண்டுபிடித்து அவளிடம் சேர்ப்பிக்கச் சொன்னாய். வானரங்கள் நாலாபக்கமும் சென்றன. தேடல் ஆரம்பித்தது.
त्वद्वार्ताकर्णनोद्यद्गरुदुरुजवसम्पातिसम्पातिवाक्य-
प्रोत्तीर्णार्णोधिरन्तर्नगरि जनकजां वीक्ष्य दत्वाङ्गुलीयम् ।
प्रक्षुद्योद्यानमक्षक्षपणचणरण: सोढबन्धो दशास्यं
दृष्ट्वा प्लुष्ट्वा च लङ्कां झटिति स हनुमान् मौलिरत्नं ददौ ते ॥३॥
tvadvaartaa karNanOdyadgarudurujavasampaati sampaativaakyaprOttiirNaarNOdhirantarnagari
janakajaaM viikshya datvaanguliiyam |
prakshudyOdyaanamakshakshapaNachaNaraNaH sODhabandhO dashaasyaM
dR^iShTvaa pluShTvaa cha lankaaM jhaTiti sa hanumaanmauliratnaM dadau te || 3
த்வத்³வார்தாகர்ணனோத்³யத்³க³ருது³ருஜவஸம்பாதிஸம்பாதிவாக்ய-
ப்ரோத்தீர்ணார்ணோதி⁴ரந்தர்னக³ரி ஜனகஜாம் வீக்ஷ்ய த³த்த்வா(அ)ங்கு³லீயம் |
ப்ரக்ஷுத்³யோத்³யானமக்ஷக்ஷபணசணரண꞉ ஸோட⁴ப³ந்தோ⁴ த³ஶாஸ்யம்
த்³ருஷ்ட்வா ப்லுஷ்ட்வா ச லங்காம் ஜ²டிதி ஸ ஹனுமான்மௌலிரத்னம் த³தௌ³ தே || 35-3 ||
இறக்கையை இழந்த வயதான ஜடாயுவின் சகோதரன் சம்பாதியை சந்தித்த ஹனுமான் சீதை இருக்கும் இடம் ராவணனின் லங்காபுரி என்று அறிகிறான். சம்பாதிக்கு புதிதாக இறக்கை வளர்கிறது. ஹனுமான் கடலைத் தாண்டினான். சீதா தேவியை அசோகவனத்தில் கண்டான். உன் கணையாழியை மரியாதையோடு ஜாக்கிரதையாக அவளிடம் கொடுத்தான். அவளிடமிருந்து சூடாமணியை உனக்கு அளிக்க பெற்றுக்கொண்டான். அசோகவனம், மற்றும் ராவணனின் மாடமாளிகைகளை நாசமாக்கினான். ராவணன் மகன் அக்ஷய குமாரனை கொன்றான். இந்திரஜித் செலுத்திய ப்ரம்மாஸ்திரத்தில் வேண்டுமென்றே கட்டுண்டான். ராவணனை சந்தித்தான், தூதனாக எச்சரித்தான், வாலில் நெருப்பு வைத்தபோது மகிழ்வோடு ஏற்றான். சீதையின் ஆசிர்வாதத்தால் அவனைத் தீ சுடவில்லை, வாலில் நெருப்பால் தான் அசோகா வனம் தவிர்த்து மற்ற லங்காபுரி இடங்களை தகனம் செய்தான். கடலில் வாலில் இருந்த தீயை அணைத்துவிட்டு கடலைத் தாண்டி பறந்து வந்தான். கண்டேன் சீதையை என்று உன்னிடம் சீதா தேவி அளித்த சூடாமணியை அளித்தான்.
त्वं सुग्रीवाङ्गदादिप्रबलकपिचमूचक्रविक्रान्तभूमी-
चक्रोऽभिक्रम्य पारेजलधि निशिचरेन्द्रानुजाश्रीयमाण: ।
तत्प्रोक्तां शत्रुवार्तां रहसि निशमयन् प्रार्थनापार्थ्यरोष-
प्रास्ताग्नेयास्त्रतेजस्त्रसदुदधिगिरा लब्धवान् मध्यमार्गम् ॥४॥
tvaM sugriivaangadaadi prabala kapichamuu chakra vikraantabhuumiichakrO(
a)bhikramya paarejaladhi nishicharendraanujaa shriiyamaaNaH |
tatprOktaaM shatruvaartaaM rahasi nishamayan praarthanaapaarthya rOShapraastaagneyaastra
tejastrasadudadhigiraa labdhavaan madhyamaargam ||4
த்வம் ஸுக்³ரீவாங்க³தா³தி³ப்ரப³லகபிசமூசக்ரவிக்ராந்தபூ⁴மீ-
சக்ரோ(அ)பி⁴க்ரம்ய பாரேஜலதி⁴ நிஶிசரேந்த்³ரானுஜாஶ்ரீயமாண꞉ |
தத்ப்ரோக்தாம் ஶத்ருவார்தாம் ரஹஸி நிஶமயன்ப்ரார்த²னாபார்த்²யரோஷ-
ப்ராஸ்தாக்³னேயாஸ்த்ரதேஜஸ்த்ரஸது³த³தி⁴கி³ரா லப்³த⁴வான்மத்⁴யமார்க³ம் || 35-4 ||
வானரப்படையோடு, தலைவர்கள் சுக்ரீவன், அங்கதன் ஹநுமானோடு கடற்கரைக்கு சென்றாய். ராவணனின் சகோதரன் எவ்வளவு நல்ல புத்தி சொல்லியும் கேளாமல் தனது தம்பியான விபீஷணனை விரட்டினான் ராவணன்.விபீஷணன் உன்னிடம் சரணடைந்தான். சமுத்திரராஜன் காலம் தாழ்த்தி உனக்கு கடல் வழிவிடாததால் வெகுண்டு ராமபாணத்தை கையில் எடுக்கவே சமுத்திரராஜன் விரைந்து வந்து உன்னை வணங்கி கடல் வழிவிட்டது.
कीशैराशान्तरोपाहृतगिरिनिकरै: सेतुमाधाप्य यातो
यातून्यामर्द्य दंष्ट्रानखशिखरिशिलासालशस्त्रै: स्वसैन्यै: ।
व्याकुर्वन् सानुजस्त्वं समरभुवि परं विक्रमं शक्रजेत्रा
वेगान्नागास्त्रबद्ध: पतगपतिगरुन्मारुतैर्मोचितोऽभू: ॥५॥
kiishairaashaantarOpaahR^ita giri nikaraissetumaadhaapya yaatO
yaatuunyaamardya damShTraanakhashikharishilaa saalashastraiH svasainyaiH |
vyaakurvan saanujastvaM samarabhuvi paraM vikramaM shakrajetraa
vegaannaagaastrabaddhaH patagapatigarunmaarutairmOchitO(a)bhuuH || 5
கீஶைராஶாந்தரோபாஹ்ருதகி³ரினிகரை꞉ ஸேதுமாதா⁴ப்ய யாதோ
யாதூன்யாமர்த்³ய த³ம்ஷ்ட்ரானக²ஶிக²ரிஶிலாஸாலஶஸ்த்ரை꞉ ஸ்வஸைன்யை꞉ |
வ்யாகுர்வன்ஸானுஜஸ்த்வம் ஸமரபு⁴வி பரம் விக்ரமம் ஶக்ரஜேத்ரா
வேகா³ன்னாகா³ஸ்த்ரப³த்³த⁴꞉ பதக³பதிக³ருன்மாருதைர்மோசிதோ(அ)பூ⁴꞉ || 35-5 ||
நலன் நளன் நீலன் ஜாம்பவான், அங்கதன் அனைவரும் ஒன்று சேர்ந்து கடல்மேல் பாரததேசத்தோடு இலங்கையை இணைக்கும் சேது அணை , எனும் பாலம் கட்டினார்கள். இன்றும் அது காணப்படுகிறது. வெறும் பல், நகம், மலைக் கற்கள், மரங்கள் மட்டுமே ஆயுதமாக கொண்ட வானரப்படையோடு நீ லக்ஷ்மணனோடு, அசுரர்களை எதிர்கொண்டாய். இந்திரஜித் மாயமாக மறைந்து நின்று நாகாஸ்திரம் செலுத்தி உன்னையும் லக்ஷ்மணனையும் மூர்ச்சித்து விழச்செய்தான். கருடன் விரைந்து வந்து நாக பாசங்களிலிருந்து விடுவித்து உங்களுக்கு பிராணவாயு கிடைக்க பெரிய இறகால் விசிறினான்.
सौमित्रिस्त्वत्र शक्तिप्रहृतिगलदसुर्वातजानीतशैल-
घ्राणात् प्राणानुपेतो व्यकृणुत कुसृतिश्लाघिनं मेघनादम् ।
मायाक्षोभेषु वैभीषणवचनहृतस्तम्भन: कुम्भकर्णं
सम्प्राप्तं कम्पितोर्वीतलमखिलचमूभक्षिणं व्यक्षिणोस्त्वम् ॥६॥
saumitristvatra shaktiprahR^itigaladasurvaatajaaniita shailaghraaNaat
praaNaanupetO vyakR^iNuta kusR^itishlaaghinaM meghanaadam |
maayaakshObheShu vaibhiiShaNa vachanahR^itastambhanaH kumbhakarNaM
sampraaptaM kampitOrviitalamakhilachamuubhakshiNaM vyakshiNOstvam || 6
ஸௌமித்ரிஸ்த்வத்ர ஶக்திப்ரஹ்ருதிக³லத³ஸுர்வாதஜானீதஶைல-
க்⁴ராணாத்ப்ராணானுபேதோ வ்யக்ருணுத குஸ்ருதிஶ்லாகி⁴னம் மேக⁴னாத³ம் |
மாயாக்ஷோபே⁴ஷு வைபீ⁴ஷணவசனஹ்ருதஸ்தம்ப⁴ன꞉ கும்ப⁴கர்ணம்
ஸம்ப்ராப்தம் கம்பிதோர்வீதலமகி²லசமூப⁴க்ஷிணம் வ்யக்ஷிணோஸ்த்வம் || 34-6 ||
இந்திரஜித் வீசிய சக்தி ஆயுதத்தால் லக்ஷ்மணன் மூர்ச்சித்து உயிர் போகும்படி விழுந்தபோது ஹனுமன் பறந்து சென்று உயிர்காக்கும் சஞ்சீவினி மூலிகைகளை மலையோடு பெயர்த்து தூக்கிக்கொண்டு வருகிறான். லக்ஷ்மணன் புத்துயிர் பெற்று அதிக பலத்தோடு போராடி இந்திரஜித்தை கொல்கிறான். மாயா வித்தைகள் மூலம் அசுரர்கள் போராடி கலக்கம் அடைய செயகிறார்கள். விபீஷணன் அவர்களது மாயைகளை விலக்க வழி சொல்லி ஆறுதல் அளிக்கிறான். கும்பகர்ணன் போரில் உயிரிழக்கிறான். எண்ணற்ற அசுரர்கள் மாண்டனர்.
गृह्णन् जम्भारिसंप्रेषितरथकवचौ रावणेनाभियुद्ध्यन्
ब्रह्मास्त्रेणास्य भिन्दन् गलततिमबलामग्निशुद्धां प्रगृह्णन् ।
देवश्रेणीवरोज्जीवितसमरमृतैरक्षतै: ऋक्षसङ्घै-
र्लङ्काभर्त्रा च साकं निजनगरमगा: सप्रिय: पुष्पकेण ॥७॥
gR^ihNan jambhaari sampreShitarathakavachau raavaNenaabhiyudhyan |
brahmaastreNaasya bhindan galatatimabalaamagnishuddhaaM pragR^ihNan |
devashreNiivarOjjiivita samaramR^itairakshatairR^ikshasanghairlaNkaabhartraa
cha saakaM nijanagaramagaaH sapriyaH puShpakeNa || 7
க்³ருஹ்ணன் ஜம்பா⁴ரிஸம்ப்ரேஷிதரத²கவசௌ ராவணேனாபி⁴யுத்⁴யன்
ப்³ரஹ்மாஸ்த்ரேணாஸ்ய பி⁴ந்த³ன் க³லததிமப³லாமக்³னிஶுத்³தா⁴ம் ப்ரக்³ருஹ்ணன் |
தே³வஶ்ரேணீவரோஜ்ஜீவிதஸமரம்ருதைரக்ஷதை꞉ ர்ருக்ஷஸங்கை⁴-
ர்லங்காப⁴ர்த்ரா ச ஸாகம் நிஜனக³ரமகா³꞉ ஸப்ரிய꞉ புஷ்பகேண || 35-7 ||
ராம ராவண யுத்தம் உச்ச கட்டத்தை அடையும்போது தேவேந்திரன் உனக்கு தனது தேரையும் கவசங்களையும் அளிக்கிறான். ராவணனின் பத்து சிற்பங்களையும் ப்ரம்மாஸ்திரத்தால் கொய்கிறாய். அக்னிப்ரவேசம் செய்த பின் சீதையை ஏற்கிறாய். உயிரிழந்த வானரர்கள் உயிர்ப்பிக்கப் படுகிறார்கள். விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தில் சீதையோடு லக்ஷ்மணனோடு விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், முதலானோருடன் அயோத்யா திரும்புகிறாய். பதினாலு வருஷங்கள் முடிந்துவிட்டது.
प्रीतो दिव्याभिषेकैरयुतसमधिकान् वत्सरान् पर्यरंसी-
र्मैथिल्यां पापवाचा शिव! शिव! किल तां गर्भिणीमभ्यहासी: ।
शत्रुघ्नेनार्दयित्वा लवणनिशिचरं प्रार्दय: शूद्रपाशं
तावद्वाल्मीकिगेहे कृतवसतिरुपासूत सीता सुतौ ते ॥८॥
priitO divyaabhiShekairayutasamadhikaan vatsaraan paryaramsiirmaithilyaaM
paapavaachaa shiva shiva kila taaM garbhiNiimabhyahaasiiH |
shatrudhnenaardayitvaa lavaNanishicharaM praardayaH shuudrapaashaM
taavadvaalmiikigehe kR^itavasatirupaasuuta siitaa sutau te || 8
ப்ரீதோ தி³வ்யாபி⁴ஷேகைரயுதஸமதி⁴கான்வத்ஸரான்பர்யரம்ஸீ-
ர்மைதி²ல்யாம் பாபவாசா ஶிவ ஶிவ கில தாம் க³ர்பி⁴ணீமப்⁴யஹாஸீ꞉ |
ஶத்ருக்⁴னேனார்த³யித்வா லவணனிஶிசரம் ப்ரார்த³ய꞉ ஶூத்³ரபாஶம்
தாவத்³வால்மீகிகே³ஹே க்ருதவஸதிருபாஸூத ஸீதா ஸுதௌ தே || 35-8 ||
மீண்டும் பதினான்கு வருஷங்களுக்கு முன் தடைபட்ட உனது பட்டாபிஷேகம் இப்போது கோலாகலமாக நடைபெறுகிறது. பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ராமராஜ்யத்தை ஆண்டவன் நீ. கர்ப்பிணியான சீதையை ஊரில் கேட்ட அபவாதத்தால் கானகத்துக்கு அனுப்புகிறாய். சத்ருக்னன் லவணாசுரனை கொல்கிறான். நெறியற்ற சம்பூகன் கொல்லப்படுகிறான். கானகத்தில் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்தில் அடைக்கலமான சீதா தேவி பிரசவித்து இரட்டையர்கள் லவன் குசன் ஜனனம் நடைபெறுகிறது.
वाल्मीकेस्त्वत्सुतोद्गापितमधुरकृतेराज्ञया यज्ञवाटे
सीतां त्वय्याप्तुकामे क्षितिमविशदसौ त्वं च कालार्थितोऽभू: ।
हेतो: सौमित्रिघाती स्वयमथ सरयूमग्ननिश्शेषभृत्यै:
साकं नाकं प्रयातो निजपदमगमो देव वैकुण्ठमाद्यम् ॥९॥
vaalmiikestvatsutOdgaapita madhurakR^iteraaj~nayaayaj~navaaTe
siitaaM tvayyaaptukaame kshitimavishadasau tvaM cha kaalaarthitO(a)bhuuH |
hetOH saumitrighaatii svayamatha sarayuumagnanishsheShabhR^ityaiH
saakaM naakaM prayaatO nijapadamagamO deva vaikuNThamaadyam || 9
வால்மீகேஸ்த்வத்ஸுதோத்³கா³பிதமது⁴ரக்ருதேராஜ்ஞயா யஜ்ஞவாடே
ஸீதாம் த்வய்யாப்துகாமே க்ஷிதிமவிஶத³ஸௌ த்வம் ச காலார்தி²தோ(அ)பூ⁴꞉ |
ஹேதோ꞉ ஸௌமித்ரிகா⁴தீ ஸ்வயமத² ஸரயூமக்³னனிஶ்ஶேஷப்⁴ருத்யை꞉
ஸாகம் நாகம் ப்ரயாதோ நிஜபத³மக³மோ தே³வ வைகுண்ட²மாத்³யம் || 35-9 ||
அஸ்வமேத யாகம் செய்கிறாய். அந்த யாகமண்டபத்தில் அனைவரும் கூடி இருக்க அங்கே வால்மீகி முனிவரால் வளர்க்கப்பட்ட உனது இரட்டை குழந்தைகள் லவன் குசன் இருவரும் உன் மஹிமையை, ராமாயணமாக பாடுகிறார்கள். நீ மனம் மாறுகிறாய். சீதையை மீண்டும் அழைக்கிறாய். அவள் உன்னை அடைந்து உன் எதிரில் பூமிக்குள் சென்று மறைகிறாள். காலநேமி உன்னை அணுகி, உன் ராம அவதாரம் முடிந்துவிட்டது என்பதை நினைவூட்டுகிறான். முதலில் நீ லக்ஷ்மணனை வெளியேற்றுகிறாய். பிறகு சரயுவில் முழுகி வைகுண்டம் திரும்பிவிட்டாய்.
सोऽयं मर्त्यावतारस्तव खलु नियतं मर्त्यशिक्षार्थमेवं
विश्लेषार्तिर्निरागस्त्यजनमपि भवेत् कामधर्मातिसक्त्या ।
नो चेत् स्वात्मानुभूते: क्व नु तव मनसो विक्रिया चक्रपाणे
स त्वं सत्त्वैकमूर्ते पवनपुरपते व्याधुनु व्याधितापान् ॥१०॥
sO(a)yaM martyaavataarastava khalu niyataM martyashikshaarthamevaM
vishleShaartirniraagastyajanamapi bhavet kaamadharmaati saktyaa |
nO chet svaatmaanubhuuteH kvanu tava manasO vikriyaa chakrapaaNe
sa tvaM satvaikamuurte pavanapurapate vyaadhunu vyaadhitaapaan ||10
ஸோ(அ)யம் மர்த்யாவதாரஸ்தவ க²லு நியதம் மர்த்யஶிக்ஷார்த²மேவம்
விஶ்லேஷார்திர்னிராக³ஸ்த்யஜனமபி ப⁴வேத்காமத⁴ர்மாதிஸக்த்யா |
நோ சேத்ஸ்வாத்மானுபூ⁴தே꞉ க்வனு தவ மனஸோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்த்வைகமூர்தே பவனபுரபதே வ்யாது⁴னு வ்யாதி⁴தாபான் || 35-10 ||
எண்டே குருவாயூரப்பா, நீ மஹா விஷ்ணு, ஸ்ரீமந் நாராயணனன், மானிடனாக உலகில் அவதரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ராவணன் பெற்ற வரத்தால் நிகழ்ந்ததால் தசரதன் மகனாக தோன்றினாய். அதற்கும் காரணம் உண்டு. முற்பிறவியில் தசரதன் ஸ்வயம்புமனுவாக இருந்தவன். அப்போது அவன் கேட்ட வரம். நீயே அவன் மகனாக பிறக்கவேண்டும் என்பது. அதையும் இந்த பிறப்பில் தசரா குமாரனாக நிறைவேற்றிவிட்டாய். சத்யம், தர்மம், பித்ரு வாக்ய பரிபாலனம் துஷ்ட சங்கிரஹம் எல்லாம் ஒரே அவதாரத்தில் நிறைவேற்றிவிட்டாய். மானுட வாழ்க்கை கோபம், தாபம், துக்கம், பிரிவு, எதிர்பாராத இன்னல்கள் நிறைந்தது என்று வாழ்ந்து காட்டினாய்.
குருவாயூரப்பா, என்னுடைய நோயையும் நீக்கி என் குறை தவிர்த்து ரக்ஷிக்கவேண்டும் என்று உன்னை சரணடைகிறேன்.