Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 98
98. அற்புதமே, அனந்த நாராயணா!

மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி குருவாயூரப்பன் முன் அமர்ந்து எழுதுகிறார், அவர் கண்முன் நின்று அவர் மனதில் புகுந்து அவரை வழி செலுத்துகிறான் குருவாயூரப்பன். இந்த தசகம் ரொம்ப அற்புதமானது. எவ்வளவு பெரிய விரிவான விஷயத்தை, பிரபஞ்ச காரண சிருஷ்டி ஸ்திதி லயத்தை ஜீவாத்மா, பரமாத்மா தத்துவத்தை பதினோறு ஸ்லோகங்களில் சுருக்கமாக ஒன்று விடாமல் சொல்கிறார் பட்டத்ரி. குறைந்தது ரெண்டு தடவையாவது படிக்க வேண்டிய தசகம்.

यस्मिन्नेतद्विभातं यत इदमभवद्येन चेदं य एत-
द्योऽस्मादुत्तीर्णरूप: खलु सकलमिदं भासितं यस्य भासा ।
यो वाचां दूरदूरे पुनरपि मनसां यस्य देवा मुनीन्द्रा:
नो विद्युस्तत्त्वरूपं किमु पुनरपरे कृष्ण तस्मै नमस्ते ॥१॥

yasminnetadvibhaataM yata idamabhavadyena chedaM ya etadyO(
a)smaaduttiirNaruupaH khalu sakalamidaM bhaasitaM yasya bhaasaa |
yO vaachaaM duuraduure punarapi manasaaM yasya devaa muniindraaH
nO vidyustattvaruupaM kimu punarapare kR^iShNa tasmai namaste || 1

யஸ்மின்னேதத்³விபா⁴தம் யத இத³மப⁴வத்³யேன சேத³ம் ய ஏத-
த்³யோ(அ)ஸ்மாது³த்தீர்ணரூப꞉ க²லு ஸகலமித³ம் பா⁴ஸிதம் யஸ்ய பா⁴ஸா |
யோ வாசாம் தூ³ரதூ³ரே புனரபி மனஸாம் யஸ்ய தே³வா முனீந்த்³ரா꞉
நோ வித்³யுஸ்தத்த்வரூபம் கிமு புனரபரே க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 98-1 ||

குருவாயூரப்பா, நாராயணா, நமஸ்காரம். உன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை எவரறிவார்? தேவர்களால், மஹரிஷிகளால் மஹான்களால் கூட விவரிக்க முடியாதபடி அது மனதின் சக்திக்கு, வார்த்தைகளுக்கு, வர்ணனைக்கு அப்பாற் பட்டதாயிற்றே. அதன் சக்தியால் அல்லவோ ப்ரபஞ்சம் ஒளிபெற்று இயங்குகிறது. உன்னிலிருந்து வந்த பிரபஞ்சம், உன் சங்கல்பத்தில் உன்னிலே அடங்கும், ஒடுங்கும். உன்னிலிருந்து வெளிவந்தாலும் நீ அதை மாயையால் இயங்கவிட்டு தனித்து தாமரை இலைத் தண்ணீர்த்துளியாக நிற்பவன்.

जन्माथो कर्म नाम स्फुटमिह गुणदोषादिकं वा न यस्मिन्
लोकानामूतये य: स्वयमनुभजते तानि मायानुसारी ।
विभ्रच्छक्तीररूपोऽपि च बहुतररूपोऽवभात्यद्भुतात्मा
तस्मै कैवल्यधाम्ने पररसपरिपूर्णाय विष्णो नमस्ते ॥२॥

janmaathO karma naama sphuTamiha guNadOShaadikaM vaa na yasmin
lOkaanaamuutaye yaH svayamanubhajate taani maayaanusaarii |
bibhrachChaktiiraruupOpi cha bahutararuupO(a)vabhaatyadbhutaatmaa
tasmai kaivalyadhaamne pararasaparipuurNaaya viShNO namaste || 2

ஜன்மாதோ² கர்ம நாம ஸ்பு²டமிஹ கு³ணதோ³ஷாதி³கம் வா ந யஸ்மின்
லோகானாமூதேய ய꞉ ஸ்வயமனுப⁴ஜதே தானி மாயானுஸாரீ |
பி³ப்⁴ரச்ச²க்தீரரூபோ(அ)பி ச ப³ஹுதரரூபோ(அ)வபா⁴த்யத்³பு⁴தாத்மா
தஸ்மை கைவல்யதா⁴ம்னே பரரஸபரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே || 98-2 ||

பகவானே, நீ தோற்றம், மறைவு, பிறப்பு இறப்பு , நாமம், ரூபம் , குணம் , கர்மம், அற்றவன், என்றாலும் நீ படைத்த இந்த ப்ரபஞ்சத்தை ரக்ஷிக்க அவற்றை உடையவனாக தோற்றம் அளிக் கிறாய். அதுவும் மாயையே. காக்கும் கடவுளே, உருவமற்ற நீ எத்தனை விதமான அவதாரங்கள் எடுத்து ரக்ஷிப்பவன். உன்னை சரணடைகிறேன் பத்மநாபா.

नो तिर्यञ्चन्न मर्त्यं न च सुरमसुरं न स्त्रियं नो पुंमांसं
न द्रव्यं कर्म जातिं गुणमपि सदसद्वापि ते रूपमाहु: ।
शिष्टं यत् स्यान्निषेधे सति निगमशतैर्लक्षणावृत्तितस्तत्
कृच्छ्रेणावेद्यमानं परमसुखमयं भाति तस्मै नमस्ते ॥३॥

nO tirya~nchaM na martyaM na cha suramasuraM na sitrayaM nO pumaamsaM
na dravyaM karma jaatiM guNamapi sadasadvaa(a)pi te ruupamaahuH |
shiShTaM yatsyaanniShedhe sati nigamashatairlakshaNaa vR^ittitastat
kR^ichChreNaavedyamaanaM paramasukhamayaM bhaati tasmai namaste || 3

நோ திர்யஞ்சன்ன மர்த்யம் ந ச ஸுரமஸுரம் ந ஸ்த்ரியம் நோ புமாம்ஸம்
ந த்³ரவ்யம் கர்ம ஜாதிம் கு³ணமபி ஸத³ஸத்³வாபி தே ரூபமாஹு꞉ |
ஶிஷ்டம் யத்ஸ்யான்னிஷேதே⁴ ஸதி நிக³மஶதைர்லக்ஷணாவ்ருத்திதஸ்தத்
க்ருச்ச்²ரேணாவேத்³யமானம் பரமஸுக²மயம் பா⁴தி தஸ்மை நமஸ்தே || 98-3 ||

ஒரு உருவமும் அற்ற நீ எடுக்காத உருவங்கள் இல்லையப்பா.ஆணோ, பெண்ணோ,மிருகமோ பறவையோ, தேவனோ, ராக்ஷஸனோ, தெய்வமோ, பலவித குணங்கள் கொண்ட ஜீவன்களாக நீ மாயத் தோற்றமளித்தாலும், எல்லா உபநிஷத்துகளும், நீ அது இல்லை, அவற்றையெல்லாம் இது இல்லை என்று ஒதுக்கினாலும் மிஞ்சும், எஞ்சும் உணர்வு தான் நீ. உள் நின்று ஒளிரும் ஒளி, ப்ரம்மம், பரமாத்மா, ஞானம், முக்தி நிலை என எத்தனை பெயர்கள்!

मायायां बिम्बितस्त्वं सृजसि महदहङ्कारतन्मात्रभेदै-
र्भूतग्रामेन्द्रियाद्यैरपि सकलजगत्स्वप्नसङ्कल्पकल्पम् ।
भूय: संहृत्य सर्वं कमठ इव पदान्यात्मना कालशक्त्या
गम्भीरे जायमाने तमसि वितिमिरो भासि तस्मै नमस्ते ॥४॥

maayaayaaM bimbitastvaM sR^ijasi mahadahankaara tanmaatrabhedaiH
bhuutagraamendriyaadyairapi sakalajagatsvapnasankalpa kalpam |
bhuuyaH sanhR^itya sarvaM kamaTha iva padaanyaatmanaa kaalashaktyaa
gambhiire jaayamaane tamasi vitimirO bhaasi tasmai namaste ||4

மாயாயாம் பி³ம்பி³தஸ்த்வம் ஸ்ருஜஸி மஹத³ஹங்காரதன்மாத்ரபே⁴தை³-
ர்பூ⁴தக்³ராமேந்த்³ரியாத்³யைரபி ஸகலஜக³த்ஸ்வப்னஸங்கல்பகல்பம் |
பூ⁴ய꞉ ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட² இவ பதா³ன்யாத்மனா காலஶக்த்யா
க³ம்பீ⁴ரே ஜாயமானே தமஸி விதிமிரோ பா⁴ஸி தஸ்மை நமஸ்தே || 98-4 ||

கிருஷ்ணா, இந்த உலகே மாயம், இந்த வாழ்வே மாயம், நாம் எதை சுகம் என்று காண்கிறோமோ அதுவும் முழுக்க மாயம் தான். மாயை உன்னால், உன்னில், உருவாகி உலகத்தை பல விதங்களில், மஹத், அஹங்காரம், தன்மாத்திரைகள், பஞ்சேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், ஐம்பூதங்கள் ஆகியவற்றின் சேர்க்கையால் படைத்து, அதனில் இருந்து ஆமை தனது அங்கத்தை ஓட்டிற்குள் இழுத்துக்கொண்டு விடுவது போல், உலகின் மாயையிலிருந்து நீ விலகி தனித்திருந்து கவனிக்கிறாய். மூன்று குணங்கள், மூன்று நிலைகள், இவற்றில் மூழ்கி ஜீவர்கள் வாழ்ந்து இன்ப துன்பம், துயரம் சுகம் எல்லாம் அனுபவித்து எது உண்மை என்று அறிந்தபின் உன்னை அடைய செய்கிறாய். அவித்யா, அஞ்ஞானம் போன்ற இருளில் சூழ்ந்த உலகத்துக்கு ஞான ஒளி தருபவனே, உனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.

शब्दब्रह्मेति कर्मेत्यणुरिति भगवन् काल इत्यालपन्ति
त्वामेकं विश्वहेतुं सकलमयतया सर्वथा कल्प्यमानम् ।
वेदान्तैर्यत्तु गीतं पुरुषपरचिदात्माभिधं तत्तु तत्त्वं
प्रेक्षामात्रेण मूलप्रकृतिविकृतिकृत् कृष्ण तस्मै नमस्ते ॥५॥

shabda brahmeti karmetyaNuriti bhagavan kaala ityaalapanti
tvaamekaM vishvahetuM sakalamayatayaa sarvathaa kalpyamaanam |
vedaantairyattugiitaM puruShaparachidaatmaabhidhaM tattutattvaM
prekshaamaatreNa muulaprakR^iti vikR^itikR^it kR^iShNa tasmai namaste || 5

ஶப்³த³ப்³ரஹ்மேதி கர்மேத்யணுரிதி ப⁴க³வன் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விஶ்வஹேதும் ஸகலமயதயா ஸர்வதா² கல்ப்யமானம் |
வேதா³ந்தைர்யத்து கீ³தம் புருஷபரசிதா³த்மாபி⁴த⁴ம் தத்து தத்த்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூலப்ரக்ருதிவிக்ருதிக்ருத்க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 98-5 ||

குருவாயூரப்பா, கற்றுணர்ந்தவர்கள், வேதாந்திகள், ஞானிகள், நீ தான் ஆதி, சர்வ,காரணன். ஸப்த ப்ரம்மா ப்ரணவ ஸப்த , ஜீவ நாத, ஸ்வரூபன், பரமாத்மா, என்று அறிகிறார்கள். இந்த பிரபஞ்சமே, வினாடி கூட இல்லாத க்ஷண காலத்தில் உன் சங்கல்பத்தால் உருவானது. உன்னை வணங்காமல் வேறு யாரை நான் வணங்குவேன்? அநந்தகோடி நமஸ்காரங்கள் உனக்கு கிருஷ்ணா.

सत्त्वेनासत्तया वा न च खलु सदसत्त्वेन निर्वाच्यरूपा
धत्ते यासावविद्या गुणफणिमतिवद्विश्वदृश्यावभासम् ।
विद्यात्वं सैव याता श्रुतिवचनलवैर्यत्कृपास्यन्दलाभे
संसारारण्यसद्यस्त्रुटनपरशुतामेति तस्मै नमस्ते ॥६॥

sattvenaasattayaa vaa na cha khalu sadasattvena nirvaachyaruupaa
dhatte yaa(a)saavavidyaa guNa phaNimativadvishvadR^ishyaavabhaasam |
vidyaatvaM saiva yaataa shrutivachanalavairyatkR^ipaasyandalaabhe
samsaaraaraNya sadyastruTana parashutaameti tasmai namaste || 6

ஸத்த்வேனாஸத்தயா வா ந ச க²லு ஸத³ஸத்த்வேன நிர்வாச்யரூபா
த⁴த்தே யாஸாவவித்³யா கு³ணப²ணிமதிவத்³விஶ்வத்³ருஶ்யாவபா⁴ஸம் |
வித்³யாத்வம் ஸைவ யாதா ஶ்ருதிவசனலவைர்யத்க்ருபாஸ்யந்த³லாபே⁴
ஸம்ஸாராரண்யஸத்³யஸ்த்ருடனபரஶுதாமேதி தஸ்மை நமஸ்தே || 98-6 ||

நாராயணா, நீ படைத்த இந்த உலகு எப்படிப்பட்டது பார்த்தாயா? அஞ்ஞான இருள் சூழ்ந்தது, அஹங்காரத்தால் நிறைந்தது. இருப்பது, இல்லாதது, இருப்பது போல் இல்லாதது, இல்லாததுபோல் இருப்பது, ரெண்டுமே இல்லாதது, என்று மாயையில் எங்கும் காணப்படுவது. இவற்றுக்கெல்லாம் பின்னல் நீ ஆதாரமாக அடிநாதமாக இருப்பதை உணர்ந்து, திரைகள் விலகி உன்னைக் காண , உன் அருள் பெற வழியும் வைத்திருக்கிறாய். வேத, சாஸ்திரங்கள் இதெல்லாம் விவரமாக கூறுகின்றன. அவற்றை உபயோகித்து, பயன் பெற்று அடர்ந்த காட்டை கூரிய கோடாலி கொண்டு அழிப்பதை போல ஞானம் மூலம், அஞ்ஞானத்தையும், வித்யா, அவித்யாவையும் ஒடுக்க வழி செய்தவனே, எல்லாமும் நீயே ஆனவனே, உனக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம்.

भूषासु स्वर्णवद्वा जगति घटशरावादिके मृत्तिकाव-
त्तत्त्वे सञ्चिन्त्यमाने स्फुरति तदधुनाप्यद्वितीयं वपुस्ते ।
स्वप्नद्रष्टु: प्रबोधे तिमिरलयविधौ जीर्णरज्जोश्च यद्व-
द्विद्यालाभे तथैव स्फुटमपि विकसेत् कृष्ण तस्मै नमस्ते ॥७॥

bhuuShaasu svarNavadvaa jagati ghaTasharaavaadike mR^ittikaavat
tattve san~nchintyamaane sphurati tadadhunaa(a)pyadvitiiyaM vapuste |
svapnadraShTuH prabOdhe timiralayavidhau jiirNarajjOshcha yadvat
vidyaalaabhe tathaiva sphuTamapi vikaset kR^iShNa tasmai namaste || 7

பூ⁴ஷாஸு ஸ்வர்ணவத்³வா ஜக³தி க⁴டஶராவாதி³கே ம்ருத்திகாவ-
தத்த்வே ஸஞ்சிந்த்யமானே ஸ்பு²ரதி தத³து⁴னாப்யத்³விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்னத்³ரஷ்டு꞉ ப்ரபோ³தே⁴ திமிரலயவிதௌ⁴ ஜீர்ணரஜ்ஜோஶ்ச யத்³வ-
த்³வித்³யாலாபே⁴ ததை²வ ஸ்பு²டமபி விகஸேத்க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 98-7 ||

பகவானே, இந்த உலகம் எவ்வாறுள்ளது, எப்படி காட்சி தருகிறது? என்று சிந்திக்கும்போது தான் உன் மஹிமை புரிகிறது.. ஸத்யமான, ஸாஸ்வதமான, உன்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அநித்யங்கள், மாயை விலகுகிறது. அழகிய, கண்ணைப் பறிக்கும் ஆபரணங்களில் கண்ணுக்குத் தெரியாத ஆதாரமாக தங்கம் எனும் உலோகம் இருப்பது போல, அழகிய மணிமாலைகளை இணைக்கும், கண்ணுக்கு தெரியாத கம்பியை போல் , வித வித ரூபம் கொண்ட மண் பாண்டங்களில் மூலாதாரமான களிமண் போல, நீ இருக்கிறாய். எப்படி கனவில் கண்டது கண் விழித்ததும் காணாமல் போகிறதோ, எப்படி அரை இருட்டில் பாம்பாக தெரிந்தது வெளிச்சத்தில் கயிறு என்று உணரப்பட்டதோ, அவ்வாறு நீ அருளிய உபதேசங்கள், வேதாந்தங்கள் உணர்ந்து ஞானம் வரப் பெற்றால் அஞ்ஞான இருள் நீங்கும். ஸர்வ வியாபி கிருஷ்ணா, உனக்கு நமஸ்காரம். பிரம்மமே, நீயே எங்கும்.

यद्भीत्योदेति सूर्यो दहति च दहनो वाति वायुस्तथान्ये
यद्भीता: पद्मजाद्या: पुनरुचितबलीनाहरन्तेऽनुकालम् ।
येनैवारोपिता: प्राङ्निजपदमपि ते च्यावितारश्च पश्चात्
तस्मै विश्वं नियन्त्रे वयमपि भवते कृष्ण कुर्म: प्रणामम् ॥८॥

yadbhiityOdeti suuryO dahati cha dahanO vaati vaayustathaa(a)nye
yadbhiitaaH padmajaadyaaH punaruchita baliinaaharante(a)nukaalam |
yenaivaarOpitaaH praa~Nnijapadamapi te chyaavitaarashcha pashchaat
tasmai vishvaM niyantre vayamapi bhavate kR^iShNa kurma praNaamam || 8

யத்³பீ⁴த்யோதே³தி ஸூர்யோ த³ஹதி ச த³ஹனோ வாதி வாயுஸ்ததா²ன்யே
யத்³பீ⁴தா꞉ பத்³மஜாத்³யா꞉ புனருசிதப³லீனாஹரந்தே(அ)னுகாலம் |
யேனைவாரோபிதா꞉ ப்ராங்னிஜபத³மபி தே ச்யாவிதாரஶ்ச பஶ்சாத்
தஸ்மை விஶ்வம் நியந்த்ரே வயமபி ப⁴வதே க்ருஷ்ண குர்ம꞉ ப்ரணாமம் || 98-8 ||

கிருஷ்ணா, உன்னை மாதிரி ஒரு சிறந்த சக்தி வாய்ந்த நிர்வாகியே இருக்க முடியாது. அடடா, பஞ்ச பூதங்களை கட்டுக்குள் வைத்து, உன்னிடம் அஞ்சி, பயபக்தியோடு, காலம் தவறாமல் அவர்களைச் செயல்பட வைக்கிறாய். ஆக்கம் அழிவு எது எப்போது, எப்படி நிகழவேண்டும் என்று தீர்மானிக்கிறாய். தேவாதி தேவர்கள், தேவதைகள், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார காரியங்களுக்கு எவரெவருக்கு என்ன கடமை என்று உணர்த்தி, நியமித்து, கொடுக்கப்பட்ட கால வரையறைக்குள் செயலாற்ற செயகிறாய். ப்ரபஞ்சநாயகா, உனக்கு நமஸ்காரம்.

त्रैलोक्यं भावयन्तं त्रिगुणमयमिदं त्र्यक्षरस्यैकवाच्यं
त्रीशानामैक्यरूपं त्रिभिरपि निगमैर्गीयमानस्वरूपम् ।
तिस्रोवस्था विदन्तं त्रियुगजनिजुषं त्रिक्रमाक्रान्तविश्वं
त्रैकाल्ये भेदहीनं त्रिभिरहमनिशं योगभेदैर्भजे त्वाम् ॥९॥

trailOkyaM bhaavayantaM triguNamayamidaM tryaksharasyaikavaachyaM
triishaanaamaikyaruupaM tribhirapi nigamairgiiyamaanasvaruupaM |
tisrO(a)vasthaa vidantaM triyugajanijuShaM trikramaakraantavishvaM
traikaalye bhedahiinaM tribhirahamanishaM yOgabhedairbhaje tvaam || 9

த்ரைலோக்யம் பா⁴வயந்தம் த்ரிகு³ணமயமித³ம் த்ர்யக்ஷரஸ்யைகவாச்யம்
த்ரீஶானாமைக்யரூபம் த்ரிபி⁴ரபி நிக³மைர்கீ³யமானஸ்வரூபம் |
திஸ்ரோ(அ)வஸ்தா² வித³ந்தம் த்ரியுக³ஜனிஜுஷம் த்ரிக்ரமாக்ராந்தவிஶ்வம்
த்ரைகால்யே பே⁴த³ஹீனம் த்ரிபி⁴ரஹமனிஶம் யோக³பே⁴தை³ர்ப⁴ஜே த்வாம் || 98-9 ||

கிருஷ்ணா, உன்னைப்போல ஒரு ஆச்சர்யமானவனே கிடையாது. அதெப்படி உன்னால் எல்லாமே மூன்றாக்க முடிந்தது? நீ தான் த்ரிமூர்த்திகளுமே என்பதாலா?
கடந்த, நிகழும் எதிர் காலம் , மூன்று. சத்வ ரஜோ, தமோ குணம் ,மூன்று. விழிப்பு கனவு, உறக்கம் மூன்று. அ உ ம என்று மூன்று அக்ஷரங்களில் ப்ரணவ மந்திரம். உன்னையே மூன்றாக பிரித்து ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்று ஆக்கல் காத்தல் அழித்தல் கார்யங்கள், உன்னையே அறிய சாம,யஜுர், ரிக் என மூன்று வேதங்கள். இதற்கு முன் மூன்று யுகங்கள், உன்னை வணங்க வழிமுறை மூன்று ஞான, பக்தி, கர்ம யோகங்கள். இவை அனைத்திலும் நீ, உன்னில் இவை அனைத்தும். பகவானே உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.

सत्यं शुद्धं विबुद्धं जयति तव वपुर्नित्यमुक्तं निरीहं
निर्द्वन्द्वं निर्विकारं निखिलगुणगणव्यञ्जनाधारभूतम् ।
निर्मूलं निर्मलं तन्निरवधिमहिमोल्लासि निर्लीनमन्त-
र्निस्सङ्गानां मुनीनां निरुपमपरमानन्दसान्द्रप्रकाशम् ॥१०॥

satyaM shuddhaM vibuddhaM jayati tava vapurnityamuktaM niriihaM
nirdvandvaM nirvikaaraM nikhilaguNagaNa vya~njanaadhaarabhuutam |
nirmuulaM nirmalaM tanniravadhi mahimOllaasi nirliinamantarnissangaanaaM
muniinaaM nirupama paramaananda saandra prakaasham || 10

ஸத்யம் ஶுத்³த⁴ம் விபு³த்³த⁴ம் ஜயதி தவ வபுர்னித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்³வந்த்³வம் நிர்விகாரம் நிகி²லகு³ணக³ணவ்யஞ்ஜனாதா⁴ரபூ⁴தம் |
நிர்மூலம் நிர்மலம் தன்னிரவதி⁴மஹிமோல்லாஸி நிர்லீனமந்த-
ர்னிஸ்ஸங்கா³னாம் முனீனாம் நிருபமபரமானந்த³ஸாந்த்³ரப்ரகாஶம் || 98-10 ||

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, நீ ஸாஸ்வதன் , பரிசுத்தன், ஸத்யன், விருப்பு வெறுப்பற்றவன், கர்மங்கள் அணுகாதவன், எல்லாவற்றிற்கும் காரணன், இருந்தும் அவற்றோடு இணையாதவன், உன் மாயையினால் எல்லாவித மாற்றங்கள் உண்டாக்கினாலும், என்றும் மாறாதவன், தெய்வீகன், ஸத்வ குண போதன், ரிஷிகள் முனிவர்களின் மனதில் உறைபவன். சர்வ ஸாக்ஷாத் காரம். உனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.

दुर्वारं द्वादशारं त्रिशतपरिमिलत्षष्टिपर्वाभिवीतं
सम्भ्राम्यत् क्रूरवेगं क्षणमनु जगदाच्छिद्य सन्धावमानम् ।
चक्रं ते कालरूपं व्यथयतु न तु मां त्वत्पदैकावलम्बं
विष्णो कारुण्यसिन्धो पवनपुरपते पाहि सर्वामयौघात् ॥११॥

durvaaraM dvaadashaaraM trishataparimilatShaShTi parvaabhiviitaM
sambhraamyat kruuravegaM kshaNamanu jagadaachChidya sandhaavamaanam |
chakraM te kaalaruupaM vyathayatu na tu maaM tvatpadaikaavalambaM
viShNO kaaruNya sindhO pavanapurapate paahi sarvaamayaughaat ||11

து³ர்வாரம் த்³வாத³ஶாரம் த்ரிஶதபரிமிலத்ஷஷ்டிபர்வாபி⁴வீதம்
ஸம்ப்⁴ராம்யத்க்ரூரவேக³ம் க்ஷணமனு ஜக³தா³ச்சி²த்³ய ஸந்தா⁴வமானம் |
சக்ரம் தே காலரூபம் வ்யத²யது ந து மாம் த்வத்பதை³காவலம்ப³ம்
விஷ்ணோ காருண்யஸிந்தோ⁴ பவனபுரபதே பாஹி ஸர்வாமயௌகா⁴த் || 98-11 ||

மஹா விஷ்ணுவே, என்ன அற்புதமான காரியம் நீ செய்தவன். பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் பூமியை உருவாக்கி, அது வேகமாக நகர காலத்துக்கு சக்ர உருவம் கொடுத்து சுழல வைத்தாய். அந்த காலச்சக்கரத்தின் பன்னிரண்டு ஆரங்கள் தான் [ பன்னிரு மாதங்கள், 360 முனைகள், பற்கள், ஆஹா, காலச்சக்கரம், அதி வேகமாக நிற்காமல், எவராலும் நிறுத்த முடியாதபடி, ஒரே சீராக ஓடுகிறதே. எண்டே குருவாயூரப்பா, என் துன்பம் தீர்த்து அருள்வாய் கருணாசாகரமே, உன்னையே சரணடைந்தேன்.