Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 78
78. ருக்மிணியின் கடிதம்

மதுராபுரியில் நிம்மதியாக வாழலாம் என்றால் ஜராசந்தன் போன்றோர் தொந்தரவு சகிக்கவில்லை. ஜனங்கள் எப்போதும் எந்த நேரமும் எதிரிகள் ஆக்கிரமிப்பு இருக்குமோ என்ற பயத்தில் ஏன் வாழவேண்டும்? அதற்காகத்தான் கிருஷ்ணன் எவரும் எளிதில் நெருங்கமுடியாமல் சுற்றிலும் ஆழமான சமுத்ரம் சூழ்ந்த துவாரகை நகரை கடலுக்கு நடுவே ஸ்தாபித்தான். எல்லோரும் அங்கே குடி பெயரச் செய்தான். துவாரகா ஒரு சொர்க்கபுரியாகிவிட்டது. எல்லோரும் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். பலராமனுக்கு கல்யாணம் ஆகி விட்டது. ரைவத ராஜா மகள் ரேவதி மனைவியானாள். ஒருநாள் கிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதை ருக்மணி எழுதியிருந்தாள் . அவள் சகோதரன் ருக்மி என்பவன் ஒரு ராஜா, அவளை அவனது நண்பன் சிசுபாலன் என்பவனுக்கு கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். கிருஷ்ணா , நீ வந்து என்னை காப்பாற்று என்கிறாள். கடிதாசு கொண்டு வந்த ப்ராமணரிடம் பதில் எழுதி கிருஷ்ணன் அனுப்புகிறான். ''பயப்படாதே. நான் வந்து உன்னை அழைத்துப் போகிறேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன்''. இந்த தசகத்தில் நாராயண பட்டத்ரி அதைத் தான் பாடுகிறார்..

शदत्तसमस्तविभूतिमत् ।
जलधिमध्यगतं त्वमभूषयो नवपुरं वपुरञ्चितरोचिषा ॥१॥

tridasha vardhaki vardhita kaushalaM tridasha datta samasta vibhuutimat |
jaladhimadhyagataM tvamabhuuShayO navapuraM vapura~nchita rOchiShaa || 1

த்ரித³ஶவர்த⁴கிவர்தி⁴தகௌஶலம்
த்ரித³ஶத³த்தஸமஸ்தவிபூ⁴திமத் |
ஜலதி⁴மத்⁴யக³தம் த்வமபூ⁴ஷயோ
நவபுரம் வபுரஞ்சிதரோசிஷா || 78-1 ||

கிருஷ்ணா, துவாரகை ஒளிவீச தனியாக ஏதேனும் ஏற்பாடு செய்யவேண்டுமா? நீ ஒருவன் இருந்தாலே போதுமே. இன்னொரு வேறு விதமான பிரிந்தாவனமா இது? அது நீ விளையாடிய ஆனந்த நிலையம். இது நீ அரசாளும் ராஜ்ஜியம். விஸ்வகர்மா தனது திறமையெல்லாம் கூட்டி அற்புதமாக நிர்மாணித்த நகரம். சகல வளமையும், செல்வமும் நிறைந்த நகரம். புதிதாக உருவான தேவலோகம்.

ददुषि रेवतभूभृति रेवतीं हलभृते तनयां विधिशासनात् ।
महितमुत्सवघोषमपूपुष: समुदितैर्मुदितै: सह यादवै: ॥२॥

daduShi revata bhuubhR^iti revatiiM halabhR^ite tanayaaM vidhishaasanaat |
mahitamutsava ghOSha mapuupuShaH samuditairmuditaiH sahayaadavaiH || 2

த³து³ஷி ரேவதபூ⁴ப்⁴ருதி ரேவதீம்
ஹலப்⁴ருதே தனயாம் விதி⁴ஶாஸனாத் |
மஹிதமுத்ஸவகோ⁴ஷமபூபுஷ꞉
ஸமுதி³தைர்முதி³தை꞉ ஸஹ யாத³வை꞉ || 78-2 ||

பலராமனுக்கு ரைவதன் எனும் ராஜா பிரம்மாவை கலந்தாலோசித்து தனது பெண் ரேவதியை மணம் செய்வித்தபோது ஆஹா எவ்வளவு அழகாக விமரிசையாக யாதவர்கள் இந்த விழாவை உன் தலைமையில் கொண்டாடினார்கள்.

अथ विदर्भसुतां खलु रुक्मिणीं प्रणयिनीं त्वयि देव सहोदर: ।
स्वयमदित्सत चेदिमहीभुजे स्वतमसा तमसाधुमुपाश्रयन् ॥३॥

atha vidarbhasutaaM khalu rukmiNiiM praNayiniiM tvayideva sahOdaraH |
svayamaditsata chedi mahiibhuje svatamasaa tamasaadhumupaashrayan || 3

அத² வித³ர்ப⁴ஸுதாம் க²லு ருக்மிணீம்
ப்ரணயினீம் த்வயி தே³வ ஸஹோத³ர꞉ |
ஸ்வயமதி³த்ஸத சேதி³மஹீபு⁴ஜே
ஸ்வதமஸா தமஸாது⁴முபாஶ்ரயன் || 78-3 ||

விதர்ப்ப தேசத்தை அப்போது ருக்மி என்பவன் தனது பலத்தோடு ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு அழகிய ஒரு சகோதரி. ருக்மணி. அவள் உன்னைப் பற்றி கேள்விப்பட்டு உன்னையே கணவனாக மனதில் வரித்தவள். ஆனால் ருக்மிக்கு உன்னை பிடிக்காது. உன்னை எதிரியாக கருதியவன். அவனது நண்பன் சிசுபாலன் சேதி நாட்டு அரசன். அவனுக்கு தங்கை ருக்மணியை கல்யாணம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். நாள் குறித்தாகிவிட்டது. சிசுபாலன் கொடியவன்.

चिरधृतप्रणया त्वयि बालिका सपदि काङ्क्षितभङ्गसमाकुला ।
तव निवेदयितुं द्विजमादिशत् स्वकदनं कदनङ्गविनिर्मितं ॥४॥

Chirathruthapranaya thvayi baalikaa, sapadhi kaankshithabanga samaakulaa
thava nivedhayithum dhvijamaadhisath thsvakadhanam kadhananga vinirmitham. 4

சிரத்⁴ருதப்ரணயா த்வயி பா³லிகா
ஸபதி³ காங்க்ஷிதப⁴ங்க³ஸமாகுலா |
தவ நிவேத³யிதும் த்³விஜமாதி³ஶ-
த்ஸ்வகத³னம் கத³னங்க³வினிர்மிதம் || 78-4 ||

ருக்மிணி மனம் உடைந்து போனாள் . தனது கனவு நிறைவேறாமல் போகப்போகிறது. நீ கிடைக்காமல் போய்விடுவாயே என்று ஏங்கினாள். அபலை. செய்வதறியாது திகைத்தாள். தன் விருப்பத்தை லக்ஷியம் செய்யாமல் பாழும் கிணற்றில் தள்ள ஏற்பாடு நடந்து நாளும் குறித்தாகிவிட்டதே. என்ன செய்வது? அந்த நேரம் பார்த்து ஒரு ப்ரோஹிதர் அரண்மனைக்கு வந்தார். அவரைக் கெஞ்சி காலில் விழுந்து எப்படியாவது ரஹஸ்யமாக உடனே உனக்கு சேதி அனுப்பவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதினாள் . இந்த உலகத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்ட காதல் கடிதாசு அது தான். (அதைப் பற்றி இன்று தனியாக ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். வாசியுங்கள்)

द्विजसुतोऽपि च तूर्णमुपाययौ तव पुरं हि दुराशदुरासदम् ।
मुदमवाप च सादरपूजित: स भवता भवतापहृता स्वयम् ॥५॥

dvijasutO(a)pi cha tuurNa mupaayayau tava puraM hi duraasha duraasadam |
mudamavaapa cha saadara puujitaH sa bhavataa bhavataapa hR^itaa svayam || 5

த்³விஜஸுதோ(அ)பி ச தூர்ணமுபாயயௌ
தவ புரம் ஹி து³ராஶது³ராஸத³ம் |
முத³மவாப ச ஸாத³ரபூஜித꞉
ஸ ப⁴வதா ப⁴வதாபஹ்ருதா ஸ்வயம் || 78-5 ||

ரொம்ப கொடுத்து வைத்த பொறுப்பான அந்த பிராமணன் அருக்மிணியின் கடிதாஸை எடுத்துச் சென்றவன் வேகமாக நடந்தான் துவாரகைக்கு. எளிதில் நெருங்க முடியாத நகரம். நீ அவனை சந்தித்து வரவேற்று மரியாதை செய்ததும் வணங்கியதும் கண்டு அவன் மகிழ்ந்தான். துவாரகை கெட்டவர்களுக்கு தான் நெருங்கமுடியாத நகரம் என்று நிரூபித்தாய் கண்ணா..

स च भवन्तमवोचत कुण्डिने नृपसुता खलु राजति रुक्मिणी ।
त्वयि समुत्सुकया निजधीरतारहितया हि तया प्रहितोऽस्म्यहम् ॥६॥

sa cha bhavantamavOchata kuNDine nR^ipasutaa khalu raajati rukmiNii |
tvayi samutsukayaa nijadhiirataa rahitayaa hi tayaa prahitOsmyaham || 6

ஸ ச ப⁴வந்தமவோசத குண்டி³னே
ந்ருபஸுதா க²லு ராஜதி ருக்மிணீ |
த்வயி ஸமுத்ஸுகயா நிஜதீ⁴ரதா-
ரஹிதயா ஹி தயா ப்ரஹிதோ(அ)ஸ்ம்யஹம் || 78-6 ||

''கிருஷ்ண ராஜா, குண்டிணிபுர வாசி நான். அந்த ஊர் ராணி, இளவரசி, ருக்மிணி தேவி, உன்னை நேசிப்பவன், உன் மேல் உயிரை வைத்தவள். உன்னை மணக்க விரும்புபவள் . தைர்யம் இழந்து வாடி அபலையாக நிற்கிறாள். அவள் உனக்கு ஒரு கடிதாசு கொடுத்து அதை சீக்கிரமாக உன்னிடம் உடனே கொடுக்க என்னை அனுப்பியிருக்கிறாள். நேரிலும் சொல்ல சொன்னாள்''

तव हृताऽस्मि पुरैव गुणैरहं हरति मां किल चेदिनृपोऽधुना ।
अयि कृपालय पालय मामिति प्रजगदे जगदेकपते तया ॥७॥

tava hR^itaa(a)smi puraiva guNairahaM harati maaM kila chedi nR^ipO(a)dhunaa ||
ayi kR^ipaalaya paalaya maamiti prajagade jagadekapate tayaa || 7

தவ ஹ்ருதாஸ்மி புரைவ கு³ணைரஹம்
ஹரதி மாம் கில சேதி³ன்ருபோ(அ)து⁴னா |
அயி க்ருபாலய பாலய மாமிதி
ப்ரஜக³தே³ ஜக³தே³கபதே தயா || 78-7 ||

ருக்மிணி எப்படி கெஞ்சுகிறாள்:
“ கிருஷ்ணா, உன்னை நேரில் பார்த்ததில்லை, உன் புகழ், பெருமை, கம்பீரம், அழகு, கருணை சகலமும் காது கொள்ளாமல் நிறைய கேட்டு இருக்கிறேன். உன்மேல் எனக்கு என்னை அறியாமலே ஒரு காதல்தோன்றி என் மனத்தை அரிக்கிறது. ஆனால் இப்போது சிசுபாலா என்ற சேதி நாட்டு அரசனுக்கு என்னை கட்டாயமாக கல்யாணம் செயது வைக்க என் சகோதரன் ருக்மி மும்முரமாக ஏற்பாடு செய்கிறான். நீ பக்தர்களின் விருப்பதை உடனே பூர்த்தி செய்பவன். என் மீது கருணை கொண்டு என்னை காப்பாற்றி என்னை உடனே மணம் செய்துகொள் ;;

अशरणां यदि मां त्वमुपेक्षसे सपदि जीवितमेव जहाम्यहम् ।
इति गिरा सुतनोरतनोत् भृशं सुहृदयं हृदयं तव कातरम् ॥८॥

asharaNaaM yadi maaM tvamupekshase sapadi jiivitameva jahaamyaham |
iti giraa sutanOratanOd bhR^ishaM suhR^idayaM hR^idayaM tava kaataram || 8

அஶரணாம் யதி³ மாம் த்வமுபேக்ஷஸே
ஸபதி³ ஜீவிதமேவ ஜஹாம்யஹம் |
இதி கி³ரா ஸுதனோரதனோத்³ப்⁴ருஶம்
ஸுஹ்ருத³யம் ஹ்ருத³யம் தவ காதரம் || 78-8 ||

பிராமணன் இந்த ருக்மிணியின் சேதியை சொன்னபோது அந்த கடிதத்தின் கடைசி வாக்கியத்தை அழுத்திச் சொன்னான் :
“எனக்கு உன்னை விட்டால் உதவ வேறு யாருமில்லை. நீ என்னை கைவிட்டால், நான் கைப்பட என் வாழ்வில் எழுதிய முதலும் முடிவுமான ஒரே கடிதம் இது ஒன்று தான். அப்புறம் என் இறந்த உடல் எழுதமுடியாதே''

கிருஷ்ணா இந்த கடிதத்தின் சேதி உன்னை உருக்கியது. ருக்மணியின் மீது பரிவு கொண்டாய்.

अकथयस्त्वमथैनमये सखे तदधिका मम मन्मथवेदना ।
नृपसमक्षमुपेत्य हराम्यहं तदयि तां दयितामसितेक्षणाम् ॥९॥

akathayastvamathainamaye sakhe tadadhikaa mama manmatha vedanaa |
nR^ipasamakshamupetya haraamyahaM tadayi taaM dayitaamasitekshaNaam || 9

அகத²யஸ்த்வமதை²னமயே ஸகே²
தத³தி⁴கா மம மன்மத²வேத³னா |
ந்ருபஸமக்ஷமுபேத்ய ஹராம்யஹம்
தத³யி தாம் த³யிதாமஸிதேக்ஷணாம் || 78-9 ||

கடிதாசு கொண்டு வந்த பிராமணன் அதிர்ஷ்டக்காரன். கிருஷ்ணனால் அணைக்கப்பட்டு கை நிறைய பரிசுகள் பெற்றவன்.
''ப்ராமணரே, நீர் உடனே ருக்மிணியிடம் சென்று எனக்கு அவள் மேல் நான் கொள்ளும் பிரியத்தை விட அவள் படும் வேதனை ரொம்ப பாதித்துவிட்டது என்று சொல்.அவளை உடனே நான் நேரில் வந்து காப்பாற்றுவேன், எத்தனை பேர் அவளை காவல் காத்து நின்றாலும் அவள் என்னால் காப்பாற்றப்படுவாள், கவலை வேண்டாம் என்று சொல்ளுங்கள்'' என கிருஷ்ணா, நீ பதில் அனுப்பியதும் எனக்கு தெரியும்.

प्रमुदितेन च तेन समं तदा रथगतो लघु कुण्डिनमेयिवान् ।
गुरुमरुत्पुरनायक मे भवान् वितनुतां तनुतां निखिलापदाम् ॥१०॥

pramuditena cha tena samaM tadaa rathagatO laghu kuNDina meyivaan |
gurumarutpura naayaka me bhavaan vitanutaaM tanutaaM nikhilaapadaam ||10

ப்ரமுதி³தேன ச தேன ஸமம் ததா³
ரத²க³தோ லகு⁴ குண்டி³னமேயிவான் |
கு³ருமருத்புரனாயக மே ப⁴வா-
ந்விதனுதாம் தனுதாம் நிகி²லாபதா³ம் || 78-10 ||

அப்புறம் எண்டே குருவாயூரப்பா, நீ குறித்த நேரத்தில் தேரில் குண்டினிபுர நகரத்துக்கு சென்றாய், ருக்மணியை கயவர்களிடமிருந்து மிட்டாய். என்னையும் நோயிலிருந்து மீட்டு அருள்வாய் அப்பனே.