94. உள்ளம் கவர் கள்வன்.

शुद्धा निष्कामधर्मै: प्रवरगुरुगिरा तत्स्वरूपं परं ते
शुद्धं देहेन्द्रियादिव्यपगतमखिलव्याप्तमावेदयन्ते ।
नानात्वस्थौल्यकार्श्यादि तु गुणजवपुस्सङ्गतोऽध्यासितं ते
वह्नेर्दारुप्रभेदेष्विव महदणुतादीप्तताशान्ततादि ॥१॥

shuddhaa niShkaamadharmaiH pravaragurugiraa tatsvaruupaM paraM te
shuddhaM dehendriyaadi vyapagatamakhila vyaaptamaavedayante |
naanaatva sthaulya kaarshyaadi tu guNaja vapuH sangatO(a)dhyaasitaM te
vahnerdaaruprabhedeShvivamahadaNutaa diiptataa shaantataadi ||1

ஶுத்³தா⁴ நிஷ்காமத⁴ர்மை꞉ ப்ரவரகு³ருகி³ரா தத்ஸ்வரூபம் பரம் தே
ஶுத்³த⁴ம் தே³ஹேந்த்³ரியாதி³வ்யபக³தமகி²லவ்யாப்தமாவேத³யந்தே |
நானாத்வஸ்தௌ²ல்யகார்ஶ்யாதி³ து கு³ணஜவபுஸ்ஸங்க³தோ(அ)த்⁴யாஸிதம் தே
வஹ்னேர்தா³ருப்ரபே⁴தே³ஷ்விவ மஹத³ணுதாதீ³ப்ததாஶாந்ததாதி³ || 94-1 ||

கிருஷ்ணா, உன்னை எவர் உணரமுடியும்? உலகப் பற்றினை விட்டவர், குருவின் ஆசிர்வாதத் தோடு உன்னை பற்றி அறிந்தவர், தனக்குள்ளேயே உன்னை அனுதினமும் பூஜிப்பவர், ஆசைகள் பந்தம் சொந்தம் வேண்டாதவர்கள் மட்டும் தான் உன்னோடு இணையமுடியும். எங்கும் நிறைந்த உன்னை அடைந்தபின் வேறு என்ன இருக்கிறது அடைய? உன் திவ்ய நாமம், ரூபம் ஒன்றே மனதை நிறைத்துக் கொண்டபோது அதில் வேறு எதற்கு இடம் இருக்கிறது? நீயே பரமாத்மா, பர ப்ரம்மம்.
பெரிது, சிறிது, உயரம், குள்ளம் ஒல்லி, குண்டு கருப்பு சிவப்பு என்று அவரவர் எண்ணத்திற்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நீ உன்னை காட்டி மகிழ்விக்கிறாயே தெய்வமே!.

आचार्याख्याधरस्थारणिसमनुमिलच्छिष्यरूपोत्तरार-
ण्यावेधोद्भासितेन स्फुटतरपरिबोधाग्निना दह्यमाने ।
कर्मालीवासनातत्कृततनुभुवनभ्रान्तिकान्तारपूरे
दाह्याभावेन विद्याशिखिनि च विरते त्वन्मयी खल्ववस्था ॥२॥

aachaaryaakhyaadhara sthaaraNi samanumilachChiShya ruupOttaraara-
NyaavedhOdbhaasitena sphuTatara paribOdhaagninaa dahyamaane |
karmaaliivaasanaa tatkR^ita tanubhuvana bhraanti kaantaara puure
daahyaabhaavena vidyaashikhini cha virate tvanmayii khalvavasthaa 2

ஆசார்யாக்²யாத⁴ரஸ்தா²ரணிஸமனுமிலச்சி²ஷ்யரூபோத்தரார-
ண்யாவேதோ⁴த்³பா⁴ஸிதேன ஸ்பு²டதரபரிபோ³தா⁴க்³னினா த³ஹ்யமானே |
கர்மாலீவாஸனாதத்க்ருததனுபு⁴வனப்⁴ராந்திகாந்தாரபூரே
தா³ஹ்யாபா⁴வேன வித்³யாஶிகி²னி ச விரதே த்வன்மயீ க²ல்வவஸ்தா² || 94-2 ||

வேதகாலத்தில் ரிஷிகள் யாக, ஹோம அக்னிக்கு அரணிக்கட்டைகள் என்று இரு கட்டைகளை தேய்த்து தீப்பொறி உண்டாக்குவார்கள். கீழ்க்கட்டை குருவின் உபதேசம், மேல் கட்டை சிஷ்யன், குருவிடம் ஞானம் பெறுபவன். அப்படி கிடைக்கும் ஞானம் தீயாக மாய உலகமாகிய காட்டை எரிக்கிறது. விருப்பு வெறுப்புகளை அழிக்கிறது. முன்வினைகளைச் சுட்டு பொசுக்குகிறது. அஞ்ஞானத்தை அடியோடு அகற்றுகிறது. எல்லாவற்றையும் அழித்தபின் உன்னோடு ஒன்றி விடுகிறது.

एवं त्वत्प्राप्तितोऽन्यो नहि खलु निखिलक्लेशहानेरुपायो
नैकान्तात्यन्तिकास्ते कृषिवदगदषाड्गुण्यषट्कर्मयोगा: ।
दुर्वैकल्यैरकल्या अपि निगमपथास्तत्फलान्यप्यवाप्ता
मत्तास्त्वां विस्मरन्त: प्रसजति पतने यान्त्यनन्तान् विषादान्॥३

evaM tvat praaptitO(a)nyO na hi khalu nikhilakleshahaanerupaayO
naikaantaatyantikaaste kR^iShivadagada ShaaTguNyaShaTkarmayOgaaH |
durvaikalyairakalyaa api nigamapathaa statphalaanyapyavaaptaa
mattaastvaaM vismarantaH prasajati patane yaantyanantaan viShaadaan || 3

ஏவம் த்வத்ப்ராப்திதோ(அ)ன்யோ நஹி க²லு நிகி²லக்லேஶஹானேருபாயோ
நைகாந்தாத்யந்திகாஸ்தே க்ருஷிவத³க³த³ஷாட்³கு³ண்யஷட்கர்மயோகா³꞉ |
து³ர்வைகல்யைரகல்யா அபி நிக³மபதா²ஸ்தத்ப²லான்யப்யவாப்தா
மத்தாஸ்த்வாம் விஸ்மரந்த꞉ ப்ரஸஜதி பதனே யாந்த்யனந்தான்விஷாதா³ன் || 94-3 ||

நாராயணா, உன்னை உணர்ந்து உன்னோடு இணைவது ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் பயனற்றது.
எத்தனை ஜீவன்கள் துன்பத்தில் வாடுகிறது, சிலர் மந்திரங்களை உச்சரிக்கிறார்கள், ஆறு குணங்களாலோ, ஆறு யோக முறைகளாலோ, மணி மந்திர ஒளஷதத்தாலோ, எந்த வகையிலும் துயரம் துன்பம் அகலாது. மறைவது போல் தோன்றினாலும் மீண்டும் தொடரும். சொல்ப நிவாரணம் தெரிந்ததும் உன்னை நன்றி யின்றி மறப்பவர்கள். அகந்தை அவர்களை ஆள்கிறது. அழிவுப்பாதையில் விழுவதை இதெல்லாம் தடுக்காது.

त्वल्लोकादन्यलोक: क्वनु भयरहितो यत् परार्धद्वयान्ते
त्वद्भीतस्सत्यलोकेऽपि न सुखवसति: पद्मभू: पद्मनाभ ।
एवं भावे त्वधर्मार्जितबहुतमसां का कथा नारकाणां
तन्मे त्वं छिन्धि बन्धं वरद् कृपणबन्धो कृपापूरसिन्धो ॥४॥

tvallOkaadanyalOkaH kvanu bhayarahitO yatparaardhadvayaante
tvadbhiitaH satyalOke(a)pi na sukhavasatiH padmabhuuH padmanaabha |
evaM bhaave tvadharmaarjita bahutamasaaM kaa kathaa naarakaaNaaM
tanme tvaM Chindhi bandhaM varada kR^ipaNabandhO kR^ipaapuura sindhO ||4

த்வல்லோகாத³ன்யலோக꞉ க்வனு ப⁴யரஹிதோ யத்பரார்த⁴த்³வயாந்தே
த்வத்³பீ⁴தஸ்ஸத்யலோகே(அ)பி ந ஸுக²வஸதி꞉ பத்³மபூ⁴꞉ பத்³மனாப⁴ |
ஏவம்பா⁴வே த்வத⁴ர்மார்ஜிதப³ஹுதமஸாம் கா கதா² நாரகாணாம்
தன்மே த்வம் சி²ந்தி⁴ ப³ந்த⁴ம் வரத³ க்ருபணப³ந்தோ⁴ க்ருபாபூரஸிந்தோ⁴ || 94-4 ||

பாற்கடலில் பள்ளி கொண்ட பத்மநாபா, எங்கு சென்று தேடினாலும் உனது வைகுண்டம் போல பயத்தை போக்கும் இடம் வேறு உண்டா? உதாரணமாக ரெண்டு பரார்த்தம் முடிந்தபின் ப்ரளய காலத்தில் ப்ரம்மா சத்யலோகத்தில் அடுத்து என்ன நேருமோ என்று நடுங்குகிறார். பிரம்மாவுக்கே இப்படியென்றால் மனிதர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? அடேயப்பா, எத்தனை மலை மலையாக பாபங்களை சேமித்து குவித்துக் கொண்டே இருப்பவர்கள் நாங்கள்.. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்றால் கிடைக்குமா? தீன ரக்ஷகா, காருண்ய மூர்த்தி, என் உலக வாதனைகள், பந்தங்களை எல்லாம் அறுத்தது விடுவித்து காத்தருளவேண்டும்.

याथार्थ्यात्त्वन्मयस्यैव हि मम न विभो वस्तुतो बन्धमोक्षौ
मायाविद्यातनुभ्यां तव तु विरचितौ स्वप्नबोधोपमौ तौ ।
बद्धे जीवद्विमुक्तिं गतवति च भिदा तावती तावदेको
भुङ्क्ते देहद्रुमस्थो विषयफलरसान्नापरो निर्व्यथात्मा ॥५॥

yaathaarthyaat tvanmayasyaiva hi mama na vibhO vastutO bandhamOkshau
maayaa vidyaa tanubhyaaM tava tu virachitau svapna bOdhOpamau tau |
baddhe jiivadvimuktiM gatavati cha bhidaa taavatii taavadekO
bhunkte dehadrumasthO viShayaphalarasaan naaparO nirvyathaatmaa ||5

யாதா²ர்த்²யாத்த்வன்மயஸ்யைவ ஹி மம ந விபோ⁴ வஸ்துதோ ப³ந்த⁴மோக்ஷௌ
மாயாவித்³யாதனுப்⁴யாம் தவ து விரசிதௌ ஸ்வப்னபோ³தோ⁴பமௌ தௌ |
ப³த்³தே⁴ ஜீவத்³விமுக்திம் க³தவதி ச பி⁴தா³ தாவதீ தாவதே³கோ
பு⁴ங்க்தே தே³ஹத்³ருமஸ்தோ² விஷயப²லரஸான்னாபரோ நிர்வ்யதா²த்மா || 94-5 ||

கிருஷ்ணா, நான் உன் அடிமை, உன் உடைமை, உன்னை சரண் என்று தஞ்சம் புகுந்துவிட்டேன், இனி எனக்கு எந்த பந்தமும், கட்டும், இல்லை. எதிலிருந்தும் விடுதலை தேவையில்லை. உன் எல்லை யற்ற மாய லீலையிலிருந்து சுதந்திரம் அடைந்து உன்னையே சார்ந்தவன். உலக வாழ்க்கை எனும் மரத்தில், தேகம் எனும் கிளையில் ரெண்டு பறவைகள், ஒன்று உலக வாழ்க்கை இன்பங்கள் எனும் பழத்தை உண்டு ஐம்புலன்களால் களிக்கிறது. மற்றது இதிலிருந்து விடுபட்டது. எந்த இன்ப துன்ப பற்றுமின்றி, ஆனந்தமாக தனித்து பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் உன்னை சரணடைந்த அந்த ரெண்டாவது பறவை.

जीवन्मुक्तत्वमेवंविधमिति वचसा किं फलं दूरदूरे
तन्नामाशुद्धबुद्धेर्न च लघु मनसश्शोधनं भक्तितोऽन्यत् ।
तन्मे विष्णो कृषीष्ठास्त्वयि कृतसकलप्रार्पणं भक्तिभारं
येन स्यां मङ्क्षु किञ्चिद् गुरुवचनमिलत्त्वत्प्रबोधस्त्वदात्मा ॥६॥

jiivanmuktatvamevaM vidhamiti vachasaa kiM phalaM duuraduure
tannaamaashuddhabuddherna cha laghu manasaH shOdhanaM bhaktitO(a)nyat |
tanme viShNO kR^iShiiShThaastvayi kR^itasakalapraarpaNaM bhaktibhaaraM
yena syaam mankshu ki~nchid guruvachana milat tvatprabOdhastvadaatmaa ||6

ஜீவன்முக்தத்வமேவம்வித⁴மிதி வசஸா கிம் ப²லம் தூ³ரதூ³ரே
தன்னாமாஶுத்³த⁴பு³த்³தே⁴ர்ன ச லகு⁴ மனஸஶ்ஶோத⁴னம் ப⁴க்திதோ(அ)ன்யத் |
தன்மே விஷ்ணோ க்ருஷீஷ்டா²ஸ்த்வயி க்ருதஸகலப்ரார்பணம் ப⁴க்திபா⁴ரம்
யேன ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித்³கு³ருவசனமிலத்த்வத்ப்ரபோ³த⁴ஸ்த்வதா³த்மா || 94-6 ||

குருவாயூரா , ஆத்ம சாக்ஷாத்காரம் பெற்றபின், துய்க்கும் ஆனந்தத்தை எடுத்துச் சொல்ல ஏது வார்த்தைகள்? பரிசுத்தமில்லாத மனதுக்கு இது எட்டாது. புரியாது. பக்தி ஒன்று தான் மனதை துலக்கும். மஹா விஷ்ணுவே, எனக்கு உன்னை பணிந்து தொழும் மனதைத் தா. என் கர்ம பலன் அனைத்தும் உன்னுடையதாகச் செய். மஹான்கள், குரு, ஆச்சார்யர்கள் வாக்குகளை அறிந்து நான் உயர வகை செய். இதெல்லாம் படிகள் உன்னை அடைய, அல்லவா?

शब्द्ब्रह्मण्यपीह प्रयतितमनसस्त्वां न जानन्ति केचित्
कष्टं वन्ध्यश्रमास्ते चिरतरमिह गां बिभ्रते निष्प्रसूतिम् ।
यस्यां विश्वाभिरामास्सकलमलहरा दिव्यलीलावतारा:
सच्चित्सान्द्रं च रूपं तव न निगदितं तां न वाचं भ्रियासम् ॥७॥

shabda brahmaNyapiiha prayatitamanasastvaaM na jaananti kechit
kaShTaM vandhya shramaaste chirataramiha gaaM bibhrate niShprasuutim |
yasyaaM vishvaabhiraamaaH sakalamalaharaa divyaliilaavataaraaH
sachchitsaandraM cha ruupaM tava na nigaditaM taaM na vaachaM bhriyaasam7

ஶப்³த³ப்³ரஹ்மண்யபீஹ ப்ரயதிதமனஸஸ்த்வாம் ந ஜானந்தி கேசித்
கஷ்டம் வந்த்⁴யஶ்ரமாஸ்தே சிரதரமிஹ கா³ம் பி³ப்⁴ரதே நிஷ்ப்ரஸூதிம் |
யஸ்யாம் விஶ்வாபி⁴ராமாஸ்ஸகலமலாஹரா தி³வ்யலீலாவதாரா꞉
ஸச்சித்ஸாந்த்³ரம் ச ரூபம் தவ ந நிக³தி³தம் தாம் ந வாசம் ப்⁴ரியாஸம் || 94-7 ||

உன்னை நினைக்காமல், வேதம் ஒன்று தான் பிரமாணம் என்று இரவு பகலாக உருவேற்றி படிப்பதால் என்ன பயன்?. கடலை அறியாத கிணற்றுத் தவளைகள். அவர்களால் என்ன பயன், மரத்துப் போன மலட்டுப் பசுக்களை வைத்துக் கொள்வது போல. உன்னை உணர வைக்காத, உன் நாமத்தின் மணம் வீசாத, உன் புகழ் பாடாத, உன் மீது பக்தி வளர்க்காத, பாபங்களை விலக்காத வெறும் வறட்டு நூல்களை நான் தொடமாட்டேன்.

यो यावान् यादृशो वा त्वमिति किमपि नैवावगच्छामि भूम्-
न्नेवञ्चानन्यभावस्त्वदनुभजनमेवाद्रिये चैद्यवैरिन् ।
त्वल्लिङ्गानां त्वदङ्घ्रिप्रियजनसदसां दर्शनस्पर्शनादि-
र्भूयान्मे त्वत्प्रपूजानतिनुतिगुणकर्मानुकीर्त्यादरोऽपि ॥८॥

yO yaavaan yaadR^ishO vaa tvamiti kimapi naivaavagachChaami bhuuman
evaM chaananya bhaavastvadanu bhajanamevaadriye chaidyavairin |
tvallingaanaaM tvadanghri priyajanasadasaaM darshanasparshanaadiH
bhuuyaanme tvatprapuujaa nati nuti guNa karmaanu kiirtyaadarO(a)pi ||8

யோ யாவான்யாத்³ருஶோ வா த்வமிதி கிமபி நைவாவக³ச்சா²மி பூ⁴ம-
ந்னேவஞ்சானந்யபா⁴வஸ்த்வத³னுப⁴ஜனமேவாத்³ரியே சைத்³யவைரின் |
த்வல்லிங்கா³னாம் த்வத³ங்க்⁴ரிப்ரியஜனஸத³ஸாம் த³ர்ஶனஸ்பர்ஶனாதி³-
ர்பூ⁴யான்மே த்வத்ப்ரபூஜானதினுதிகு³ணகர்மானுகீர்த்யாத³ரோ(அ)பி || 94-8 ||

கிருஷ்ணா, நீ சர்வ வியாபி. உன் உருவம் இது தான் என்று எவரும் சொல்ல முடியாது. எனக்கும் தெரியாது. நீ எவ்வளவு முக்கியமானவன் உன் மஹிமை என்ன என்று விவரிக்க இயலாது. அப்படி இருக்கும்போது உன் ஒவ்வொரு செயலையும் அறிய முடியுமா? சிசுபாலன் போன்றோர்க்கும் மோக்ஷம் அளித்தவனே, இனியாவது என் மனம் முழுதும் உன் மேல் பரவி உன்னை கவர வேண்டும். என் மனம் சிதறி வேறெங்கும் அலையாமல் முழு கவனமும் உன் திருவடிகள் மேலே படர அருள வேண்டும். உன்னையே தொழுது வழிபட்டு , உன் தாமரைப் பாதங்களை சிரத்தால் தொட வேண்டும், உன் பக்தர்களை சுற்றிவந்து பாதங்களை தொட்டு வணங்கவேண்டும். என் கண்ணால் உன் திவ்ய ஸ்வருபத்தை பருகவேண்டும், நாவால் உன் மஹிமையை, லீலைகளைப் பாடவேண்டும். உன்னை தியானித்துக் கொண்டே இருக்கவேண்டும். வேறொன்றறியேன் பராபரமே என்று இருக்க வேண்டும்.

यद्यल्लभ्येत तत्तत्तव समुपहृतं देव दासोऽस्मि तेऽहं
त्वद्गेहोन्मार्जनाद्यं भवतु मम मुहु: कर्म निर्मायमेव ।
सूर्याग्निब्राह्मणात्मादिषु लसितचतुर्बाहुमाराधये त्वां
त्वत्प्रेमार्द्रत्वरूपो मम सततमभिष्यन्दतां भक्तियोग: ॥९॥

yadyallabhyeta tattattava samupahR^itaM deva daasO(a)smi te(a)haM
tvadgehOnmaarjanaadyaM bhavatu mama muhuH karma nirmaayameva |
suuryaagni braahmaNaatmaadiShu lasita chaturbaahumaaraadhaye tvaam
tvatpremaardratvaruupO mama satatamabhiShyandataaM bhaktiyOgaH ||9

யத்³யல்லப்⁴யேத தத்தத்தவ ஸமுபஹ்ருதம் தே³வ தா³ஸோ(அ)ஸ்மி தே(அ)ஹம்
த்வத்³கே³ஹோன்மார்ஜனாத்³யம் ப⁴வது மம முஹு꞉ கர்ம நிர்மாயமேவ |
ஸூர்யாக்³னிப்³ராஹ்மணாத்மாதி³ஷு லஸிதசதுர்பா³ஹுமாராத⁴யே த்வாம்
த்வத்ப்ரேமார்த்³ரத்வரூபோ மம ஸததமபி⁴ஷ்யந்த³தாம் ப⁴க்தியோக³꞉ || 94-9 ||

என் தெய்வமே, நான் உன் சேவகன். என் கண்ணில் பட்டதை, என் கையில் அகப்பட்டதை எல்லாம் உனக்கே சமர்ப்பிக்க ஆவல் பொங்குகிறது. உன் திருக்கோயிலில் திரும்ப திரும்ப என்னாலான கழுவித் துடைக்கும் பணிகளையாவது மனமார செய்யவேண்டும். ஹே, மஹா விஷ்ணு, உன் சதுர்புஜ திவ்ய சுந்தர ரூபத்தை, ஒளிவீசும் உருவமாக நான் அக்னி, சூரியன், பிராமணர்கள், ஆத்மாவாக உணரவேண்டும். உன் மேல் பரிபூர்ண பக்தியில் என் மனம் உருகவேண்டும். என் பக்தி நித்ய ப்ரவாஹமாக தொடர்ந்து இடைவெளியின்றி, தங்கு தடையின்றி, சதா உன்மேல் இருக்க வேண்டும்.,

ऐक्यं ते दानहोमव्रतनियमतपस्सांख्ययोगैर्दुरापं
त्वत्सङ्गेनैव गोप्य: किल सुकृतितमा प्रापुरानन्दसान्द्रम् ।
भक्तेष्वन्येषु भूयस्स्वपि बहुमनुषे भक्तिमेव त्वमासां
तन्मे त्वद्भक्तिमेव द्रढय हर गदान् कृष्ण वातालयेश ॥१०॥

aikyaM te daana hOma vrrata niyama tapassaankhyayOgairduraapaM
tvatsangenaiva gOpyaH kila sukR^ititamaaH praapuraanandasaandram |
bhakteShvanyeShu bhuuyassvapi bahumanuShe bhaktimeva tvamaasaaM
tanme tvadbhaktimeva draDhaya hara gadaan kR^iShNa vaataalayesha ||10

ஐக்யம் தே தா³னஹோமவ்ரதனியமதபஸ்ஸாங்க்²யயோகை³ர்து³ராபம்
த்வத்ஸங்கே³னைவ கோ³ப்ய꞉ கில ஸுக்ருதிதமா꞉ ப்ராபுரானந்த³ஸாந்த்³ரம் |
ப⁴க்தேஷ்வன்யேஷு பூ⁴யஸ்ஸ்வபி ப³ஹுமனுஷே ப⁴க்திமேவ த்வமாஸாம்
தன்மே த்வத்³ப⁴க்திமேவ த்³ருட⁴ய ஹர க³தா³ன்க்ருஷ்ண வாதாலயேஶ || 94-10 ||

எண்டே குருவாயூரப்பா, ஆனந்தமயமான, உன்னோடு இணையம் இன்பத்துக்கு ஈடு இணை இல்லை. இதை தான தர்மம் செய்வதாலோ, யாகங்கள் ஹோமங்கள் வளர்ப்பதாலோ, விரதம் உபவாசம் இருப்பதாலோ இரவெல்லாம் கண்விழிப்பதாலோ, சாங்கிய யோகங்கள் சொல்வதை செய்வதாலோ பெற முடியாதே. நீயே சொல், பிரிந்தாவன கோபியர்கள் இதெல்லாம் செய்தா உன்னை அடைந்தார்கள்?. எத்தனையோ எண்ணற்ற பக்தர்களை நீ அறிவாய். பிருந்தாவன கோபியர்களை விடவா அவர்கள் உன்னை கவர்ந்தவர்கள்? எனக்கும் அப்படி பலமான மனப் பூர்வமான அன்பு கலந்த ஒரு பற்றுதல் உன்மேல் ஏற்பட வேண்டுமப்பா. அது நிரந்தரமாக என்னை உன்னோடு ஒன்று சேர வைக்கவேண்டுமப்பா. உன் அருளால் என் நோய் நொடிகள் என்னை வாட்டாமல் அருள வேண்டுமப்பா.