Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 82
82. உஷா பரிணயம்

கிருஷ்ணன் ருக்மணிக்கு ஒரு பிள்ளை ப்ரத்யும்னன். அவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தது.அதாவது கிருஷ்ண தாத்தாவுக்கு பேரன். அவன் பெயர் அனிருத். பாணாசுரன் என்ற ராக்ஷஸ ராஜாவின் அழகிய பெண் பெயர் உஷா. அவள் கிருஷ்ணனையோ அவன் பிள்ளையையோ, ,பேரனையோ பார்த்ததில்லை. இருந்தாலும் அநிருத்தன் மேல் கனவில் காதல் எப்படி வந்தது? எப்படியோ அநிருத்தன் கடத்தப்படுகிறான். பாணாசுரன் சிவ பக்தன். அநிருத்தனை சிறை வைத்து சிவனைக் காவல் வைக்கிறான். கிருஷ்ணன் பாணாசுரனைக் கொன்று பேரன் அவன் காதலி ரெண்டு பேரையும் மீட்கிறான் என்கிறது இந்த தசக 10 ஸ்லோகங்கள்.

प्रद्युम्नो रौक्मिणेयः स खलु तव कला शम्बरे नाहर^इतस्तं
हत्वा रत्या सहापतो निजपुरमहररद्रुक्मि कन्यां च धनयां|
तत्पुत्रोथानिरुद्धो गुणनिधिरवःअद्रोचनां रुक्मी पौत्रीं
ततोद्वाहे गतस्त्वं न्यवधि मुसलिना रुकम्यपि द्युउत वैरात||1

pradyumnO raukmiNeyaH sa khalu tava kalaa shambareNaahR^itastaM
hatvaa ratyaa sahaaptO nijapuramaharadrukmi kanyaaM cha dhanyaam |
tatputrO(a)thaaniruddhO guNanidhiravahadrOchanaaM rukmi pautriiM
tatrOdvaahe gatastvaM nyavadhi musalinaa rukmyapi dyuuta vairaat || 1

ப்ரத்³யும்னோ ரௌக்மிணேய꞉ ஸ க²லு தவ கலா ஶம்ப³ரேணாஹ்ருதஸ்தம்
ஹத்வா ரத்யா ஸஹாப்தோ நிஜபுரமஹரத்³ருக்மிகன்யாம் ச த⁴ன்யாம் |
தத்புத்ரோ(அ)தா²னிருத்³தோ⁴ கு³ணனிதி⁴ரவஹத்³ரோசனாம் ருக்மிபௌத்ரீம்
தத்ரோத்³வாஹே க³தஸ்த்வம் ந்யவதி⁴ முஸலினா ருக்ம்யபி த்³யூதவைராத் || 82-1 ||

''கிருஷ்ணா, உனக்கு நினைவிருக்கிறதா? மறக்க முடிகிற விஷயமா இது? உன் அழகிய மகன் ப்ரத்யும்னனை சம்பரன் என்பவன் கடத்திக்கொண்டு போனான். ருக்மணி துடித்து போய்விட்டாள். நீ சம்பரனை துரத்திச் சென்று, அவனைக் கொன்று ப்ரத்யும்னனை மீட்டுக் கொண்டுவந்தாய். ரதிதேவியும் வந்தாள் . ப்ரத்யும்னன் வளர்ந்தான் ருக்மியின் மகளை கடத்திக் கொண்டுவந்தான். அப்புறம் என்னாச்சு?
ப்ரத்யும்னன் மகன் அநிருத்தன் ரோசனா எனும் ருக்மியின் பேத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான்.
ஒருநாள் பலராமன் ருக்மியை சதுரங்க விளையாட்டின் போது கொன்றுவிட்டார். நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் பாரதத்திலும், ராமாயணத்திலும் பாகவதத்திலும் நிறைந்து இருக்கிறது. அவற்றையெல்லாம் முழுமையாக ஒன்று விடாமல் அறிவது என்பது கடற்கரையில் மணலை எண்ணும் சமாச்சாரம்.

बाणस्य सा बलिसुतस्य सहस्रबाहो:
माहेश्वरस्य महिता दुहिता किलोषा |
त्वत्पौत्रमेनमनिरुद्धमद^इष्ट पूर्वं
स्वप्ने अनुभुउय भगवान विरहातुरा भूत् ||2

baaNasya saa balisutasya sahasrabaahOH
maaheshvarasya mahitaa duhitaa kilOShaa |
tvatpautramenamaniruddhamadR^iShTa puurvaM
svapne(a)nubhuuya bhagavan virahaaturaa(a)bhuut || 2

பா³ணஸ்ய ஸா ப³லிஸுதஸ்ய ஸஹஸ்ரபா³ஹோ-
ர்மாஹேஶ்வரஸ்ய மஹிதா து³ஹிதா கிலோஷா |
த்வத்பௌத்ரமேனமனிருத்³த⁴மத்³ருஷ்டபூர்வம்
ஸ்வப்னே(அ)னுபூ⁴ய ப⁴க³வன் விரஹாதுரா(அ)பூ⁴த் || 82-2 ||

பாணாசுரனுக்கு பத்தாயிரம் கைகள். அசுர பலம் வேறு. சிவசக்தி கூடியவன். யார் அவனை எதிர்க்கமுடியும்?. அவனுடைய அழகிய பெண் தான் உஷா என்று சொன்னேனே. ஒரு ராத்திரி அவள் ஒரு கனவு கண்டாள் . அதில் அதி அற்புத அழகு கொண்ட வாலிபன் ஒருவன் அவளைக் கவர்ந்தான்.
உஷா அவனை பார்த்ததில்லை, ஆனால் அநிருத்தன் அவள் கனவில் வந்து அவள் மனதை ஆட்கொண்டுவிட்டான். அநிருத்தன் நேரில் உஷாவை சந்தித்தபோது பாணாசுரன் அவனைப் பிரித்துவிட்டான்.

य्गिन्यतीव कुशला खलु चित्रलेखा
तस्याः सखी विलिखती तरुनानषेषान |
तत्रानिरुद्धमुषया विदितं निशायाम्
आनेष्ट योगबलतो भवतो निकेतात् || 3

yOginyatiiva kushalaa khalu chitralekhaa
tasyaaH sakhii vilikhatii taruNaanasheShaan |
tatraaniruddhamuShayaa viditaM nishaayaam
aaneShTa yOgabalatO bhavatO niketaat || 3

யோகி³ன்யதீவ குஶலா க²லு சித்ரலேகா²
தஸ்யா꞉ ஸகீ² விலிக²தீ தருணானஶேஷான் |
தத்ரானிருத்³த⁴முஷயா விதி³தம் நிஶாயா-
மானேஷ்ட யோக³ப³லதோ ப⁴வதோ நிகேதாத் || 82-3 ||

உஷாவின் தோழி சித்ரலேகா. அவள் ஒரு யோகினி. அவளிடம் ஒரு அபூர்வ சக்தி. யாரெல்லாம் அழகிய வாலிபர்களோ உலகில் அத்தனை பேர் உருவத்தையும் படமாக்கி ''உன் ஆள் இதில் இருக்கிறானா பார்'' என்று உஷாவிடம் காட்டினாள். படங்களில் அநிருத்தனும் அகப்பட்டான்.

''இவனே தான் என் கனவில் வந்தவன்'' என்றாள் உஷா. சித்ரலேகா தன்னுடைய யோக சக்தியால் அநிருத்தனை துவாரகையில் உன் அரண்மனையிலிருந்து தூக்கிக் கடத்தி கொண்டு வந்துவிட்டாள் உஷாவிடம்.

कन्यापुरे दयितया सुखमारमन्तं
चैनं कथा न्चन बबन्धुषि शर्वबन्धौ
श्रीनारद्क्त तदुदन्त -दुरन्तरोषैः
त्वं तस्य शोनितपुरं यदुभिम्यरुन्धाः 4

kanyaapure dayitayaa sukhamaaramantaM
chainaM katha~nchana babandhuShi sharvabandhau |
shriinaaradOkta-tadudanta-durantarOShaiH
tvaM tasya shONitapuraM yadubhirnyarundhaaH ||4

கன்யாபுரே த³யிதயா ஸுக²மாரமந்தம்
சைனம் கத²ஞ்சன ப³ப³ந்து⁴ஷி ஶர்வப³ந்தௌ⁴ |
ஶ்ரீனாரதோ³க்ததது³த³ந்தது³ரந்தரோஷை-
ஸ்த்வம் தஸ்ய ஶோணிதபுரம் யது³பி⁴ர்ன்யருந்தா⁴꞉ || 82-4 ||

உஷாவின் அந்தப்புரத்தில் ரஹஸ்யமாக இருந்து வந்த அநிருத்தனை பாணாசுரன் ஒருநாள் பார்த்துவிட்டான். அவனை சிறையிலிட்டு சிவபெருமானை காவல் தெய்வமாக வைத்துவிட்டான். திரிலோக சஞ்சாரி நாரதருக்கு இந்த விஷயம் தெரிந்து கிருஷ்ணா உன்னிடம் சொல்லிவிட்டார். பாணாசுரன் அரண்மனையை, கோட்டையை யாதவ வீரர்களோடு நீ முற்றுகையிட்டாய்.

पुरिइपालः शैलप्रिय दुहित्र^इनाथो अस्य भगवान
समं भुउत व्रातैयदुबलमशन्कं निरुरुधे |
महा प्राणो बाणो झटिति युयुधानेन युयुधे
गुहः प्रद्युम्नेन त्वमपि पुरःअन्त्रा जघटिषे || 5

puriipaalaH shailapriya duhitR^inaathO(a)sya bhagavaan
samaM bhuuta vraatairyadubalamashankaM nirurudhe |
mahaa praaNO baaNO jhaTiti yuyudhaanena yuyudhe
guhaH pradyumnena tvamapi purahantraa jaghaTiShe || 5

புரீபால꞉ ஶைலப்ரியது³ஹித்ருனாதோ²(அ)ஸ்ய ப⁴க³வான்
ஸமம் பூ⁴தவ்ராதைர்யது³ப³லமஶங்கம் நிருருதே⁴ |
மஹாப்ராணோ பா³ணோ ஜ²டிதி யுயுதா⁴னேனயுயுதே⁴
கு³ஹ꞉ ப்ரத்³யும்னேன த்வமபி புரஹந்த்ரா ஜக⁴டிஷே || 82-5 ||

கிருஷ்ணா, உன் யாதவ படையையும் உன்னையும் பரமேஸ்வரன் தடுத்து நிறுத்தினார்.
ஒருபக்கம் சாத்யகி பாணாசுரனை எதிர்க்க, இன்னொருபுறம் ப்ரத்யும்னனை சுப்ரமணியன் எதிர்க்க, நீ பரமேஸ்வரனுடன் யுத்தம் புரிந்தாய்.

निरुद्धाशे शास्त्रे मुमुहुषि तवास्त्रे णा गिरिशे
द्रुता भूता भीताः प्रमथकुलवीराः प्रमथिताः |
परास्कन्दत स्कन्दलः कुसुमषर बानैश्च सचिवः
सकुम्भान्दो भाण्डं नावमिव बलेनाशु बिभिदे || 6

niruddhaasheShaastre mumuhuShi tavaastreNa girishe
drutaa bhuutaa bhiitaaH pramathakulaviiraaH pramathitaaH |
paraaskandat skandaH kusumashara baaNaishcha sachivaH
sa kumbhaaNDO bhaaNDaM navamiva balenaashu bibhide || 6

நிருத்³தா⁴ஶேஷாஸ்த்ரே முமுஹுஷி தவாஸ்த்ரேண கி³ரிஶே
த்³ருதா பூ⁴தா பீ⁴தா꞉ ப்ரமத²குலவீரா꞉ ப்ரமதி²தா꞉ |
பராஸ்கந்த³த்ஸ்கந்த³꞉ குஸுமஶரபா³ணைஶ்ச ஸசிவ꞉
ஸ கும்பா⁴ண்டோ³ பா⁴ண்ட³ம் நவமிவ ப³லேனாஶு பி³பி⁴தே³ || 82-6 ||

ஒரு நிலையில் மேற்கொண்டு யுத்தத்தை நிறுத்த நீ மோகனாஸ்திரத்தை பிரயோகித்து பரமேஸ்வரனை சற்று நேரம் மயங்கச் செயதாய். பூதகணங்களை விரட்டினாய். பலராமனும் ப்ரத்யும்னனும் மற்றவர்களை ஒடுங்கச் செய்தார்கள்.

चापानां प न्चशत्या प्रसभमुपगते चिन्न चप्पे थ बाणे
व्यर्थेयाते समेतो ज्वरपतिरशनैरज्वरी त्वज्ज्वरेण |
ज्नानीस्तुत्वा अथ दत्त्वा तव चरितजुषां विज्वरं सज्वरोअगात
प्रायोअन्त्राज नानवन्तोअपि च बहुतमसा रौद्रचेश ता हि रौद्राः ||7

chaapaanaaM pa~nchashatyaa prasabhamupagate Chinna chaape(a)tha baaNe
vyartheyaate sametO jvarapatirashanairajvari tvajjvareNa |
j~naaniistutvaa(a)tha dattvaa tava charitajuShaaM vijvaraM sajvarO(a)gaat
praayO(a)ntarj~naanavantO(a)pi cha bahutamasaa raudracheShTaa hi raudraaH || 7

சாபானாம் பஞ்சஶத்யா ப்ரஸப⁴முபக³தே சி²ன்னசாபே(அ)த² பா³ணே
வ்யர்தே² யாதே ஸமேதோ ஜ்வரபதிரஶனைரஜ்வரி த்வஜ்ஜ்வரேண |
ஜ்ஞானீ ஸ்துத்வாத² த³த்த்வா தவ சரிதஜுஷாம் விஜ்வரம் ஸ ஜ்வரோ(அ)கா³த்
ப்ராயோ(அ)ந்தர்ஜ்ஞானவந்தோ(அ)பி ச ப³ஹுதமஸா ரௌத்³ரசேஷ்டா ஹி ரௌத்³ரா꞉ || 82-7 ||

விஷயமறிந்த பாணாசுரன் கடும் கோபத்துடன் உன்னை எதிர்த்தான். ஒரே சமயம் 500 விஷ அம்புகள். அவன் வில்லையும் அம்புகளையும் நொறுக்கினாய். சிவாக்னியை விஷ்ணு அக்னி எதிர்கொண்டது. க்ருஷ்ண அவதாரமெடுத்த உன்னை அறிந்து கொண்ட சிவன் உன்னை போற்றி புகழ்ந்தார்.

बाणं नानायुधोग्रं पुनरभिपतितं दर्पदोशादिवितन्वन
निर्लुउनाशे सदोषं सपदि बुबुधुषा शङ्करेनोपगितः |
तद्वाचा शिष्टबाहु द्वित्यमुभयतो निर्भयं तत्प्रियं तं
मुक्त्वा तद्दत्तमानो निजपुरमगमः सानिरुद्धः सहोषः || 8

baaNaM naanaayudhOgraM punarabhipatitaM darpadOShaadvitanvan
nirluunaasheShadOShaM sapadi bubudhuShaa shankareNOpagiitaH |
tadvaachaa shiShTabaahu dvitayamubhayatO nirbhayaM tatpriyaM taM
muktvaa taddattamaanO nijapuramagamaH saaniruddhaH sahOShaH || 8

பா³ணம் நானாயுதோ⁴க்³ரம் புனரபி⁴பதிதம் த³ர்பதோ³ஷாத்³விதன்வன்
நிர்லூனாஶேஷதோ³ஷம் ஸபதி³ பு³பு³து⁴ஷா ஶங்கரேணோபகீ³த꞉ |
தத்³வாசா ஶிஷ்டபா³ஹுத்³விதயமுப⁴யதோ நிர்ப⁴யம் தத்ப்ரியம் தம்
முக்த்வா தத்³த³த்தமானோ நிஜபுரமக³ம꞉ ஸானிருத்³த⁴꞉ ஸஹோஷ꞉ || 82-8 ||

பாணாசுரனின் பதினாயிரம் கரங்களை நீ வெட்டி வீழ்த்தினாய். சிவன் குறுக்கிட்டதால் பாணாசுரனுக்கு இரு கரங்களை மட்டும் இருக்கச் செய்தாய். சிவபக்தன் அவனால் இனி எவருக்கும் தீமையோ தீங்கோ நேராது என ஆக்கிவிட்டாய். அநிருத்தனை மீட்டு உஷாவுடன் துவாரகை திரும்பினாய்.

मुहुस्तावच्चक्रं वरुनमजयो नन्दहरणे
यमं बालानिइतौ दवदहन पाने अनिल सखं|
विधिं वत्सस्तेये गिरिशमिह बान्यस्य समरे
विभो विश्त्कर्शी तदयमवतारो जयति ते || 9

muhustaavachChakraM varuNamajayO nandaharaNe
yamaM baalaaniitau davadahana paane(a)nila sakham |
vidhiM vatsasteye girishamiha baaNasya samare
vibhO vishvOtkarShii tadayamavataarO jayati te || 9

முஹுஸ்தாவச்ச²க்ரம் வருணமஜயோ நந்த³ஹரணே
யமம் பா³லானீதௌ த³வத³ஹனபானே(அ)னிலஸக²ம் |
விதி⁴ம் வத்ஸஸ்தேயே கி³ரிஶமிஹ பா³ணஸ்ய ஸமரே
விபோ⁴ விஶ்வோத்கர்ஷீ தத³யமவதாரோ ஜயதி தே || 82-9 ||

நாராயணா, குருவாயூரா , உன் விஷ்ணு அவதாரங்களிலேயே மிகவும் உயர்ந்தது, பூர்ணாவதாரம் நீ எடுத்த க்ரிஷ்ணாவதாரம் மட்டுமே தான். அதில் தான் தேவேந்திரனின் ஆணவத்தை அடிக்கடி நீக்கி அருள்செயதாய். வருணன் ஆணத்வத்தால் உன் தந்தை நந்தகோபனை கடத்தியபோது அவனுக்கு பாடம் புகட்டினாய். சாந்தீபனி ரிஷி மகன் உயிரை மீட்ட சமயம் காலதேவன் ஆணவத்தை அழித்தாய். காண்டவ வனத்தை அழித்த சமயம் அக்னிக்கு புத்தி வந்தது. பிருந்தாவனத்தில் ப்ரம்மா ஆயர்குல சிறுவர்களை, பசுக்களை கன்றுகளை கடத்தி மறைத்தபோது அவற்றை மீட்டி ப்ரம்மாவின் கர்வம் அடக்கினாய்.இப்போது பரமேஸ்வரனையே எதிர்கொண்டு பாணாசுரன் விஷயத்தில் பரஸ்பர அன்பை நிலைநாட்டினாய்.

दिविजरुषा कर^इकलास वपुर्धरं
नर^इगनिर^इपं त्रिदिवालय माप्यन |
निजजने द्विजभक्तिमनुत्तमां
उपदिशन पवनेश्वर पाहि माम् || 10

dvijaruShaa kR^ikalaasa vapurdharaM
nR^iganR^ipaM tridivaalaya maapayan |
nijajane dvijabhaktimanuttamaam
upadishan pavaneshvara paahi maam ||10

த்³விஜருஷா க்ருகலாஸவபுர்த⁴ரம் ந்ருக³ன்ருபம் த்ரிதி³வாலயமாபயன் |
நிஜஜனே த்³விஜப⁴க்திமனுத்தமாமுபதி³ஶன் பவனேஶ்வர பாஹி மாம் || 82-10 |

வாதபுரீசா, ஒரு பிராமணனின் சாபத்தால் ந்ருக ராஜன் பச்சோந்தி உருவெடுக்க அவனது பிரார்த்தனையை செவிமடுத்து அவனை ஸ்வர்கத்துக்கு அனுப்பியவன் நீ. எல்லோர்க்கும் நீதி நெறியை புகட்டுபவன் நன்மையே செய்பவன் நீ, எண்டே குருவாயூரப்பா, என்னையும் என் என் நோய் தீர்த்து ரக்ஷித்தருள்வாய்.