91. பக்தி, முக்திக்கு வித்து.
श्रीकृष्ण त्वत्पदोपासनमभयतमं बद्धमिथ्यार्थदृष्टे-
र्मर्त्यस्यार्तस्य मन्ये व्यपसरति भयं येन सर्वात्मनैव ।
यत्तावत् त्वत्प्रणीतानिह भजनविधीनास्थितो मोहमार्गे
धावन्नप्यावृताक्ष: स्खलति न कुहचिद्देवदेवाखिलात्मन् ॥१॥
shriikR^iShNa tvatpadOpaasanamabhayatamaM baddhamithyaartha dR^iShTeH
martasyaartasya manye vyapasarati bhayaM yena sarvaatmanaiva |
yattaavattvatpraNiitaaniha bhajanavidhiinaasthitO mOhamaarge
dhaavannapyaavR^itaakshaH skhalati na kuhachiddevadevaakhilaatman ||1
ஶ்ரீக்ருஷ்ண த்வத்பதோ³பாஸனமப⁴யதமம் ப³த்³த⁴மித்²யார்த²த்³ருஷ்டே-
ர்மர்த்யஸ்யார்தஸ்ய மன்யே வ்யபஸரதி ப⁴யம் யேன ஸர்வாத்மனைவ |
யத்தாவத்த்வத்ப்ரணீதானிஹ ப⁴ஜனவிதீ⁴னாஸ்தி²தோ மோஹமார்கே³
தா⁴வன்னப்யாவ்ருதாக்ஷ꞉ ஸ்க²லதி ந குஹசித்³தே³வதே³வாகி²லாத்மன் || 91-1 ||
குருவாயூரப்பா, ஸ்ரீ கிருஷ்ணா, நீ சர்வ வ்யாபி, இல்லாத இடமே இல்லை, சகல உயிர்களிலும் காண்பவன் நீ. தேவாதி தேவன். மனிதர்களுக்கு பவ பயம் நீங்குவது அவசியம். இல்லாததை எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்திம காலத்தில் மரணத்தை எதிர் கொள்பவன், மரணபயத்தில் சிக்கி தவிக்கிறான். அவனுக்கு அதில் இருந்து விடுபட ஒரே வழி உன் தாமரைப் பொற்பாதங்களை போற்றிப் பாடி அதுவே கதி என்று சரணடைவது ஒன்று தான். அது தான் துக்க நிவாரணி.
பவ பயம் நீக்குவது உன் திருநாம பாராயணம் ஒன்றே. கீதையில் நீ அழகாக சொல்லிக்கொடுத்த வழிமுறைப்படி வாழும் ஒருவன் இந்த மாய லோகத்தில் கண்ணைக்கட்டிக்கொண்டு ஓடினாலும் அவன் தவறான பாதையில் செல்லாமல் விழாமல், காப்பது உன் கடமைஆகிவிடுகிறது.
भूमन् कायेन वाचा मुहुरपि मनसा त्वद्बलप्रेरितात्मा
यद्यत् कुर्वे समस्तं तदिह परतरे त्वय्यसावर्पयामि ।
जात्यापीह श्वपाकस्त्वयि निहितमन:कर्मवागिन्द्रियार्थ-
प्राणो विश्वं पुनीते न तु विमुखमनास्त्वत्पदाद्विप्रवर्य: ॥२॥
bhuuman kaayena vaachaa muhurapi manasaa tvadbalapreritaatmaa
yadyatkurve samastaM tadiha paratare tvayyasaavarpayaami |
jaatyaapiiha shvapaakastvayi nihita manaH karmavaagindriyaartha
praaNO vishvaM puniite na tu vimukhamanaastvatpadaadvipravaryaH || 2
பூ⁴மன் காயேன வாசா முஹுரபி மனஸா த்வத்³ப³லப்ரேரிதாத்மா
யத்³யத்குர்வே ஸமஸ்தம் ததி³ஹ பரதரே த்வய்யஸாவர்பயாமி |
ஜாத்யாபீஹ ஶ்வபாகஸ்த்வயி நிஹிதமன꞉ கர்மவாகி³ந்த்³ரியார்த²-
ப்ராணோ விஶ்வம் புனீதே ந து விமுக²மனாஸ்த்வத்பதா³த்³விப்ரவர்ய꞉ || 91-2 ||
குருவாயூரப்பா, மனம் வாக்கு காயம் என்று என்னை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஆட்சி செலுத்தி என்னை ஆட்டுவிக்கும் தெய்வமே, என்னை முழுமையாக உனக்கே அர்பணித்துவிட்டேன். என்னை நடத்துபவன் நீயே. பிறப்பில் தாழ்வு என்று இருந்தாலும் எண்ணத்தாலும் செயலாலும் ஒருவன் மனம் வாக்கு காயம் மூன்றுமே உனக்கென அர்பணித்துவிட்டால் போதும். அப்படி உன்னை நினைக்காதவன், உயர்குலம் என்று சொல்லிக்கொள்ளும் பிராமணனை விட மேலானவன், உயர்ந்தவன். நீ என்னைப்படைத்ததே உன்னை தொழுது பணி செய்து உன்னை அடைவதற்கே.
भीतिर्नाम द्वितीयाद्भवति ननु मन:कल्पितं च द्वितीयं
तेनैक्याभ्यासशीलो हृदयमिह यथाशक्ति बुद्ध्या निरुन्ध्याम् ।
मायाविद्धे तु तस्मिन् पुनरपि न तथा भाति मायाधिनाथं
तं त्वां भक्त्या महत्या सततमनुभजनीश भीतिं विजह्याम् ॥३॥
bhiitirnaama dvitiiyaadbhavati nanu manaH kalpitaM cha dvitiiyaM
tenaikyaabhyaasa shiilO hR^idayamiha yathaashakti buddhyaa nirundhyaam |
maayaa viddhetu tasmin punarapi na tathaa bhaati maayaadhinaathaM
tattvaaM bhaktyaa mahatyaa satatamanubhajanniisha bhiitiM vijahyaam || 3
பீ⁴திர்னாம த்³விதீயாத்³ப⁴வதி நனு மன꞉கல்பிதம் ச த்³விதீயம்
தேனைக்யாப்⁴யாஸஶீலோ ஹ்ருத³யமிஹ யதா²ஶக்தி பு³த்³த்⁴யா நிருந்த்⁴யாம் |
மாயாவித்³தே⁴ து தஸ்மின்புனரபி ந ததா² பா⁴தி மாயாதி⁴னாத²ம்
தம் த்வாம் ப⁴க்த்யா மஹத்யா ஸததமனுப⁴ஜன்னீஶ பீ⁴திம் விஜஹ்யாம் || 91-3 ||
மனதில் பயம் எப்படி உண்டாகிறது? உன்னைத்தவிர வேறு ஏதோ ஒன்று என்னுள் இருக்கிறது. அது தான் பய உணர்வை உண்டாக்குகிறது. அது உண்மையில் இல்லை. மனம் தான் அதை உருவாக் குகிறது. நான் அந்த மனததை கட்டுப்பாட்டில் வைப்பேன். அந்த ரெண்டாவது உணர்வை தவிர்ப் பேன். எனது புத்தியால் அந்த பயத்தை அகற்றுவேன். அது மாயை எனும் சக்தி. எல்லாம் நீ ஒன்று தான் மாயை வெறும் நிழல் தோற்றம் என்று உணர்ந்தால் அதன் வீர்யம் அடங்கும். பக்தி பயத்தை போக்கிவிடும்.
भक्तेरुत्पत्तिवृद्धी तव चरणजुषां सङ्गमेनैव पुंसा-
मासाद्ये पुण्यभाजां श्रिय इव जगति श्रीमतां सङ्गमेन ।
तत्सङ्गो देव भूयान्मम खलु सततं तन्मुखादुन्मिषद्भि-
स्त्वन्माहात्म्यप्रकारैर्भवति च सुदृढा भक्तिरुद्धूतपापा ॥४॥
bhakterutpatti vR^Iddhii tava charaNajuShaaM sangamenaiva pumsaam
aasaadye puNya bhaajaaM shriya iva jagati shriimataaM sangamena |
tatsangO deva bhuuyaan mama khalu satataM tanmukhaadunmiShadbhiH
tvanmaahaatmya prakaarairbhavati cha sudR^iDhaa bhaktiruddhuuta paapaa || 4
ப⁴க்தேருத்பத்திவ்ருத்³தீ⁴ தவ சரணஜுஷாம் ஸங்க³மேனைவ பும்ஸா-
மாஸாத்³யே புண்யபா⁴ஜாம் ஶ்ரிய இவ ஜக³தி ஶ்ரீமதாம் ஸங்க³மேன |
தத்ஸங்கோ³ தே³வ பூ⁴யான்மம க²லு ஸததம் தன்முகா²து³ன்மிஷத்³பி⁴-
ஸ்த்வன்மாஹாத்ம்யப்ரகாரைர்ப⁴வதி ச ஸுத்³ருடா⁴ ப⁴க்திருத்³தூ⁴தபாபா || 91-4 ||
குருவாயூரப்பா, பணம் செல்வம் தான் சுகம், என்று தேடுவோர் தனவந்தர்களுடனும் செல்வம் நிறைந்தவர்களுடனும் பழகி செல்வம் சேர்ப்பார்கள். பக்தி தான் பெரிய தனம். அதை உன் மீது சதா பக்திகொண்ட அன்புகொண்ட பெரியோர்களுடன் பழகி அனுபவிக்கவேண்டும். எனக்கு இத்தகைய பக்திமான்கள் சகவாசம், சத்சங்கம் மேலும் மேலும் கூடிட, நீ தான் அருளவேண்டும். அவர்கள் வாயார உன் புகழ் பாடுவதைக் கேட்டு மகிழவேண்டும். அப்போது என் பாபங்கள் கரையும். துன்பம், பயம் எல்லாம் அகலும். எனக்கும் உன் மீது பக்தி பெருகும். நானும் அவர்களில் ஒருவனாவேன்.
श्रेयोमार्गेषु भक्तावधिकबहुमतिर्जन्मकर्माणि भूयो
गायन् क्षेमाणि नामान्यपि तदुभयत: प्रद्रुतं प्रद्रुतात्मा ।
उद्यद्धास: कदाचित् कुहचिदपि रुदन् क्वापि गर्जन् प्रगाय-
न्नुन्मादीव प्रनृत्यन्नयि कुरु करुणां लोकबाह्यश्चरेयम् ॥५॥
shreyO maargeShu bhaktaavadhika bahumatirjanmakarmaaNi bhuuyO
gaayan kshemaaNi naamaanyapi tadubhayataH pradrutaM pradrutaatmaa |
udyaddhaasaH kadaachitkuhachidapi rudan kvaapi garjan pragaayan
unmaadiiva pranR^ityannayi kuru karuNaaM lOkabaahyashchareyam || 5
ஶ்ரேயோமார்கே³ஷு ப⁴க்தாவதி⁴கப³ஹுமதிர்ஜன்மகர்மாணி பூ⁴யோ
கா³யன்க்ஷேமாணி நாமான்யபி தது³ப⁴யத꞉ ப்ரத்³ருதம் ப்ரத்³ருதாத்மா |
உத்³யத்³தா⁴ஸ꞉ கதா³சித்குஹசித³பி ருத³ன்க்வாபி க³ர்ஜன்ப்ரகா³ய-
ந்னுன்மாதீ³வ ப்ரன்ருத்யன்னயி குரு கருணாம் லோகபா³ஹ்யஶ்சரேயம் || 91-5 ||
மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த லக்ஷ்யம் முக்தி தான். அதை அடைய பல வழிகள் இருந்தும் பக்தி ஒன்று தான் சிறந்தது. உன் அவதார மஹிமைகளை திரும்ப திரும்ப பலர் சொல்லிக் கேட்பேன். ஆனந்தம் அடைவேன். உன்னைப் பாடுவேன். கரகோஷம் செய்வேன். என் நெஞ்சம் உருகும். உரக்க சந்தோஷத்தில் சிரிப்பேன். உருகி உருகி அழுவேன். கண்ணீர் விடுவேன். பைத்தியம் மாதிரி குதித்து ஆடி, ஓடி, உன்னை பல நாமாக்களில் உச்சாடனம் செய்வேன். அழைப்பேன். என் மீது கருணை கொள்வாய் அப்பனே.
भूतान्येतानि भूतात्मकमपि सकलं पक्षिमत्स्यान् मृगादीन्
मर्त्यान् मित्राणि शत्रूनपि यमितमतिस्त्वन्मयान्यानमानि ।
त्वत्सेवायां हि सिद्ध्येन्मम तव कृपया भक्तिदार्ढ्यं विराग-
स्त्वत्तत्त्वस्यावबोधोऽपि च भुवनपते यत्नभेदं विनैव ॥६॥
bhuutaanyetaani bhuutaatmakamapi sakalaM pakshimatsyaan mR^igaadiin
martyaan mitraaNi shatruunapi yamitamatiH tvanmayaanyaanamaani |
tvatsevaayaaM hi siddhyenmama tava kR^ipayaa bhaktidaarDhyaM viraagaH
tvattattvasyaavabOdhO(a)pi cha bhuvanapate yatnabhedaM vinaiva || 6
பூ⁴தான்யேதானி பூ⁴தாத்மகமபி ஸகலம் பக்ஷிமத்ஸ்யான்ம்ருகா³தீ³ன்
மர்த்யான்மித்ராணி ஶத்ரூனபி யமிதமதிஸ்த்வன்மயான்யானமானி |
த்வத்ஸேவாயாம் ஹி ஸித்³த்⁴யேன்மம தவ க்ருபயா ப⁴க்திதா³ர்ட்⁴யம் விராக³-
ஸ்த்வத்தத்த்வஸ்யாவபோ³தோ⁴(அ)பி ச பு⁴வனபதே யத்னபே⁴த³ம் வினைவ || 91-6 ||
கிருஷ்ணா, நான் இந்த பஞ்ச பூதங்களையும் தலை குனிந்து வணங்குகிறேன். அவை அனைத்துமே உன் அம்சங்கள் தான். நான் சுற்றிலும் காணும், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பரப்பன, நடப்பன, ஓடுவது, மனிதர்கள் எல்லாமே நீ தான் என்று உணர்ந்துகொண்டேன். நீ தான் பிரபஞ்சமும் அதில் காண்பவை யாவும். உன்னை பாடி பரவசமாக பக்தியுடன் தொழுவது சரணடைவது ஒன்று தான் உன் கருணையை முழுதாக அடைவது என்று தெரிந்துகொள்கிறேன்.
नो मुह्यन् क्षुत्तृडाद्यैर्भवसरणिभवैस्त्वन्निलीनाशयत्वा-
च्चिन्तासातत्यशाली निमिषलवमपि त्वत्पदादप्रकम्प: ।
इष्टानिष्टेषु तुष्टिव्यसनविरहितो मायिकत्वावबोधा-
ज्ज्योत्स्नाभिस्त्वन्नखेन्दोरधिकशिशिरितेनात्मना सञ्चरेयम् ॥७॥
nO muhyan kshuttR^iDaadyairbhavasaraNi bhavaistvanniliinaashayatvaat
chintaasaatatyashaalii nimiShalavamapi tvatpadaadaprakampaH |
iShTaaniShTeShutuShTi vyasana virahitO maayikatvaavabOdhaat
jyOtsnaabhistvannakhendOradhika shishiritenaatmanaa sanchareyam || 7
நோ முஹ்யன்க்ஷுத்த்ருடா³த்³யைர்ப⁴வஸரணிப⁴வைஸ்த்வன்னிலீனாஶயத்வா-
ச்சிந்தாஸாதத்யஶாலீ நிமிஷலவமபி த்வத்பதா³த³ப்ரகம்ப꞉ |
இஷ்டானிஷ்டேஷு துஷ்டிவ்யஸனவிரஹிதோ மாயிகத்வாவபோ³தா⁴-
ஜ்ஜ்யோத்ஸ்னாபி⁴ஸ்த்வன்னகே²ந்தோ³ரதி⁴கஶிஶிரிதேனாத்மனா ஸஞ்சரேயம் || 91-7 ||
உன்னையே நினைந்து நினைந்து நெக்குருகி, உன்னோடு கலக்கும் பாக்யம், என்னை களைப் பில்லாமல் அதை நாட செய்கிறது. பசியோ, தாகமோ , தூக்கமோ எதுவுமில்லை. ஒரு வினாடி கூட இடைவெளி இன்றி உன் திருவடி ஒன்றே என் மனதில் தோன்றி ஆனந்தம் அளிக்கிறது. மாயை விலகுகிறது. அதனால் உண்டாகும் உலகியல் துன்பங்கள், இன்பங்கள், எதுவும் எனக்கில்லை. என் கண் முன் தோன்றுவது பிறைச்சந்திரன் போன்ற உன் திருவடி விரல்களில் நான் காணும் உன் அழகிய நகங்கள். ஒளிவீசும் அவை தான் என் மன வானத்தில் மிளிரும் பிறைச் சந்திரன்கள்.
भूतेष्वेषु त्वदैक्यस्मृतिसमधिगतौ नाधिकारोऽधुना चे-
त्त्वत्प्रेम त्वत्कमैत्री जडमतिषु कृपा द्विट्सु भूयादुपेक्षा ।
अर्चायां वा समर्चाकुतुकमुरुतरश्रद्धया वर्धतां मे
त्वत्संसेवी तथापि द्रुतमुपलभते भक्तलोकोत्तमत्वम् ॥८॥
bhuuteShveShu tvadaikya smR^iti samadhigatau naadhikaarO(a)dhunaa chet
tvatprema tvatkamaitrii jaDamatiShu kR^ipaa dviTsu bhuuyaadupekshaa |
archaayaaM vaa samarchaa kutukamurutarashraddhayaa vardhataaM me
tvatsamsevii tathaa(a)pi drutamupalabhate bhaktalOkOttamatvam || 8
பூ⁴தேஷ்வேஷு த்வதை³க்யஸ்ம்ருதிஸமதி⁴க³தௌ நாதி⁴காரோ(அ)து⁴னா சே-
த்த்வத்ப்ரேம த்வத்கமைத்ரீ ஜட³மதிஷு க்ருபா த்³விட்ஸு பூ⁴யாது³பேக்ஷா |
அர்சாயாம் வா ஸமர்சாகுதுகமுருதரஶ்ரத்³த⁴யா வர்த⁴தாம் மே
த்வத்ஸம்ஸேவீ ததா²பி த்³ருதமுபலப⁴தே ப⁴க்தலோகோத்தமத்வம் || 91-8 ||
கிருஷ்ணா, எனக்கு மனதில் எழும் ஒரு சந்தேகத்தை சொல்லிவிடுகிறேன். ஒருவேளை எனக்கு இன்னும் ஞானம் வராமல் , இந்த பரந்த உலகில் நான் காணும் யாவுமே நீ தான் என்ற உண்மை தெரியாமல் இருக்கிறேனோ? அப்படி இருந்தேனானால், எனக்கு உன் மேல் பக்தி பெருகிட நீ தான் உதவ வேண்டும். உனது பக்தர்கள் சத்சங்கம் ஏற்பட வேண்டும். விரோதிகள் என்று யாரை நினைக்கிறேனோ அவர்கள் மேல் விரோதபாவம் அகலவேண்டும். நட்பும் பாசம் நேசம் எல்லாம் வளரவேண்டும். என் மனமும் செயலும் உன்னையே சார்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதாவது நான் உன் பக்தர்களில் ஒருவனாக உயர்நிலை பெறமுடியாதா?
आवृत्य त्वत्स्वरूपं क्षितिजलमरुदाद्यात्मना विक्षिपन्ती
जीवान् भूयिष्ठकर्मावलिविवशगतीन् दु:खजाले क्षिपन्ती ।
त्वन्माया माभिभून्मामयि भुवनपते कल्पते तत्प्रशान्त्यै
त्वत्पादे भक्तिरेवेत्यवददयि विभो सिद्धयोगी प्रबुद्ध: ॥९॥
aavR^itya tvatsvaruupaM kshiti jala marudaadyaatmanaa vikshipantii
jiivaan bhuuyiShThakarmaavali vivasha gatiin duHkhajaale kshipantii |
tvanmaayaa maa(a)bhibhuunmaamayi bhuvanapate kalpate tatprashaantyai
tvatpaade bhaktirevetyavadadayi vibhO siddhayOgii prabuddhaH || 9
ஆவ்ருத்ய த்வத்ஸ்வரூபம் க்ஷிதிஜலமருதா³த்³யாத்மனா விக்ஷிபந்தீ
ஜீவான்பூ⁴யிஷ்ட²கர்மாவலிவிவஶக³தீன் து³꞉க²ஜாலே க்ஷிபந்தீ |
த்வன்மாயா மாபி⁴பூ⁴ன்மாமயி பு⁴வனபதே கல்பதே தத்ப்ரஶாந்த்யை
த்வத்பாதே³ ப⁴க்திரேவேத்யவத³த³யி விபோ⁴ ஸித்³த⁴யோகீ³ ப்ரபு³த்³த⁴꞉ || 91-9 ||
கிருஷ்ணா, நான் உன்னைக் காண முடியாத படி மாயை உன்னை என் கண்களிலிருந்து, மனத்திலிருந்து மறைக்கிறது. மாயா பிம்பங்களாக பஞ்ச பூதங்கள் என் கண்ண்ணுக்கு தெரிந்தாலும் அவை உன் உருவங்கள் என்று புரியவேண்டும். அவை தான் இன்ப துன்பங்களை அளிப்பவை என்று தெரியவேண்டும். முன்வினைப்பயனாக, கர்மாவின் பலனாக அவை அமைகிறது என்று
அறிதல் வேண்டும். பிரபுத்த ரிஷி சொன்னது நினைவுக்கு வருகிறது கிருஷ்ணா, ''இந்த மாயையின் பிடியிலிருந்து தப்ப ஒரே வழி உன் மீது பரிபூர்ண உறுதியான பக்தியோடு உன் திருவடிகளை பற்றுவது தான் '' என்பது, நூற்றுக்கு லக்ஷம் பங்கு ரொம்ப ரொம்ப சரி.
दु:खान्यालोक्य जन्तुष्वलमुदितविवेकोऽहमाचार्यवर्या-
ल्लब्ध्वा त्वद्रूपतत्त्वं गुणचरितकथाद्युद्भवद्भक्तिभूमा ।
मायामेनां तरित्वा परमसुखमये त्वत्पदे मोदिताहे
तस्यायं पूर्वरङ्ग: पवनपुरपते नाशयाशेषरोगान् ॥१०॥
duHkhaanyaalOkya jantuShvalamudita vivekO(a)hamaachaaryavaryaat
labdhvaa tvadruupatattvaM guNa charita kathaadyudbhavadbhakti bhuumaa |
maayaamenaaM taritvaa paramasukhamaye tvatpade mOditaahe
tasyaayaM puurvarangaH pavanapurapate naashayaasheSharOgaan ||10
து³꞉கா²ன்யாலோக்ய ஜந்துஷ்வலமுதி³தவிவேகோ(அ)ஹமாசார்யவர்யா-
ல்லப்³த்⁴வா த்வத்³ரூபதத்த்வம் கு³ணசரிதகதா²த்³யுத்³ப⁴வத்³ப⁴க்திபூ⁴மா |
மாயாமேனாம் தரித்வா பரமஸுக²மயே த்வத்பதே³ மோதி³தாஹே
தஸ்யாயம் பூர்வரங்க³꞉ பவனபுரபதே நாஶயாஶேஷரோகா³ன் || 91-10 ||
உன் தாமரைத் திருவடிகளை, பாதாரவிந்தங்களை கெட்டியாக பிடிக்க ரொம்ப சுலப வழிகள் தெரிந்துகொண்டேன். நீங்களும் கேட்டு பின்பன்றி பயன் பெறுங்கள்:
போதிய ஞானம் தேடிக்கொள்ளவேண்டும் அதை உலகில் மற்ற ஜீவராசிகள் படும் இன்ப துன்பங்களை கவனிப்பதன் மூலம் அறியலாம். நல்ல குருநாதன் மூலம் உன் ஸ்வரூப ரஹஸ்யம் உணரலாம். கேட்பதன் மூலம், சொல்வதன் மூலம், மனதில் சதா நினைத்துக் கொண்டே இருப்பதன் மூலம், உன் திருவடி மனதில் சதா நிலைத்து நிற்க பக்தி பெறலாம். இது தான் முதல் படி உன்னை அடைய என்று உணர்கிறேன். என் நோய் தீர்த்து அருளவேண்டும்.