16 நரநாராயண அவதாரமும் தக்ஷ யாகமும்
दक्षो विरिञ्चतनयोऽथ मनोस्तनूजां
लब्ध्वा प्रसूतिमिह षोडश चाप कन्या: ।
धर्मे त्रयोदश ददौ पितृषु स्वधां च
स्वाहां हविर्भुजि सतीं गिरिशे त्वदंशे ॥१॥
த₃க்ஷோ விரிஞ்சதநயோ(அ)த₂ மநோஸ்தநூஜாம்
லப்₃த்₄வா ப்ரஸூதிமிஹ ஷோட₃ஶ சாப கந்யா: |
த₄ர்மே த்ரயோத₃ஶ த₃தௌ₃ பித்ருஷு ஸ்வதா₄ம் ச
ஸ்வாஹாம் ஹவிர்பு₄ஜி ஸதீம் கி₃ரிஶே த்வத₃ம்ஶே || 1||
1. பிரும்மாவினுடைய புத்ரனான தக்ஷன், ஸ்வாயம்புவ மனுவின் மகளான ப்ரஸூதியை மணந்து, அவள் மூலம் பதினாறு பெண்களை அடைந்தான். அவர்களில், பதின்மூன்று பேரை தர்ம தேவதைக்கும், ஸ்வதா என்பவளை பித்ரு தேவதைகளுக்கும், ஸ்வாஹா என்பவளை அக்னிக்கும், ஸதி என்பவளைத் தங்கள் அம்சமான பரமேஸ்வரனுக்கும் மணம் செய்து கொடுத்தான். பரமேஸ்வரனை “தங்கள் அம்சமான” என்று சொல்வதால், தெய்வம் ஒன்றுதான் என்ற தத்துவம் விளங்குகிறது.
मूर्तिर्हि धर्मगृहिणी सुषुवे भवन्तं
नारायणं नरसखं महितानुभावम् ।
यज्जन्मनि प्रमुदिता: कृततूर्यघोषा:
पुष्पोत्करान् प्रववृषुर्नुनुवु: सुरौघा: ॥२॥
மூர்திர்ஹி த₄ர்மக்₃ருஹிணீ ஸுஷுவே ப₄வந்தம்
நாராயணம் நரஸக₂ம் மஹிதாநுபா₄வம் |
யஜ்ஜந்மநி ப்ரமுதி₃தா: க்ருததூர்யகோ₄ஷா:
புஷ்போத்கராந் ப்ரவவ்ருஷுர்நுநுவு: ஸுரௌகா₄: || 2||
2. தர்மதேவதையின் பதின்மூன்று மனைவியரில் ஒருவளான மூர்த்தி என்பவள், நாராயணனான தங்களையும், நரன் என்ற தங்கள் சகோதரனையும் பெற்றாள். அப்போது தேவர்கள் வாத்தியங்களை முழங்கி, பூமாரி பொழிந்து துதித்தனர்.
दैत्यं सहस्रकवचं कवचै: परीतं
साहस्रवत्सरतपस्समराभिलव्यै: ।
पर्यायनिर्मिततपस्समरौ भवन्तौ
शिष्टैककङ्कटममुं न्यहतां सलीलम् ॥३॥
தை₃த்யம் ஸஹஸ்ரகவசம் கவசை: பரீதம்
ஸாஹஸ்ரவத்ஸரதபஸ்ஸமராபி₄லவ்யை: |
பர்யாயநிர்மிததபஸ்ஸமரௌ ப₄வந்தௌ
ஶிஷ்டைககங்கடமமும் ந்யஹதாம் ஸலீலம் || 3||
3. ஸஹஸ்ரகவசன் என்ற அசுரன், பிறக்கும்போது ஆயிரம் கவசங்களுடன் பிறந்தான். அவன், ஆயிரம் வருடங்கள் தவம் செய்தும், ஆயிரம் வருடங்கள் யுத்தம் செய்தும் உள்ளவரால்தான் தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அதனால், தாங்கள் நரனாகவும், நாராயணனாகவும் இரண்டு உருவமாய் அவதரித்து, ஒருவர் தவமும், மற்றொருவர் யுத்தமும் ஆயிரம் வருட காலம் செய்தீர்கள். அவனுடைய எல்லா கவசங்களையும் உடைத்து, ஒரு கவசத்தை மட்டும் மீதமாக வைத்து அவனை விளையாட்டைப்போல் அழித்தீர்கள்.
अन्वाचरन्नुपदिशन्नपि मोक्षधर्मं
त्वं भ्रातृमान् बदरिकाश्रममध्यवात्सी: ।
शक्रोऽथ ते शमतपोबलनिस्सहात्मा
दिव्याङ्गनापरिवृतं प्रजिघाय मारम् ॥४॥
அந்வாசரந்நுபதி₃ஶந்நபி மோக்ஷத₄ர்மம்
த்வம் ப்₄ராத்ருமாந் ப₃த₃ரிகாஶ்ரமமத்₄யவாத்ஸீ: |
ஶக்ரோ(அ)த₂ தே ஶமதபோப₃லநிஸ்ஸஹாத்மா
தி₃வ்யாங்க₃நாபரிவ்ருதம் ப்ரஜிகா₄ய மாரம் || 4||
4. தங்கள் சகோதரனான நரனுடன், மோக்ஷ தர்மத்தை அனுஷ்டித்தும், மகான்களுக்கு உபதேசித்தும் பத்ரியில் வசித்து வந்தீர்கள். இந்திரன், தங்கள் தவத்தில் பொறாமை கொண்டு, தங்களை மயக்க தேவ மங்கையர்களையும் மன்மதனையும் ஏவினான்.
कामो वसन्तमलयानिलबन्धुशाली
कान्ताकटाक्षविशिखैर्विकसद्विलासै: ।
विध्यन्मुहुर्मुहुरकम्पमुदीक्ष्य च त्वां
भीरुस्त्वयाऽथ जगदे मृदुहासभाजा ॥५॥
காமோ வஸந்தமலயாநிலப₃ந்து₄ஶாலீ
காந்தாகடாக்ஷவிஶிகை₂ர்விகஸத்₃விலாஸை: |
வித்₄யந்முஹுர்முஹுரகம்பமுதீ₃க்ஷ்ய ச த்வாம்
பீ₄ருஸ்த்வயா(அ)த₂ ஜக₃தே₃ ம்ருது₃ஹாஸபா₄ஜா || 5||
5. மன்மதனும், தேவப்பெண்களும் தங்களுடைய தவத்தைக் கலைக்க, கடைக்கண்பார்வை என்ற அம்புகளைத் தங்கள் மீது ஏவினார்கள். எவற்றாலும் அசையாதவராக இருந்த தங்களைக் கண்டு பயந்தார்கள். தாங்கள் அந்த மன்மதனுக்குப் புன்சிரிப்புடன் அனுக்ரஹ வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினீர்.
भीत्याऽलमङ्गज वसन्त सुराङ्गना वो
मन्मानसं त्विह जुषध्वमिति ब्रुवाण: ।
त्वं विस्मयेन परित: स्तुवतामथैषां
प्रादर्शय: स्वपरिचारककातराक्षी: ॥६॥
பீ₄த்யா(அ)லமங்க₃ஜ வஸந்த ஸுராங்க₃நா வோ
மந்மாநஸம் த்விஹ ஜுஷத்₄வமிதி ப்₃ருவாண: |
த்வம் விஸ்மயேந பரித: ஸ்துவதாமதை₂ஷாம்
ப்ராத₃ர்ஶய: ஸ்வபரிசாரககாதராக்ஷீ: || 6||
6. மன்மதனே, தேவப்பெண்களே, பயப்பட வேண்டாம். என் மனதினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட இந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினீர்கள். அவர்கள் வியந்து, உன்னைச் சூழ்ந்துகொண்டு, உன்னைத் துதித்தார்கள். பிறகு, அவர்களுக்கு உன்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட, மிக அழகு வாய்ந்த பெண்களைக் காட்டினீர்.
सम्मोहनाय मिलिता मदनादयस्ते
त्वद्दासिकापरिमलै: किल मोहमापु: ।
दत्तां त्वया च जगृहुस्त्रपयैव सर्व-
स्वर्वासिगर्वशमनीं पुनरुर्वशीं ताम् ॥७॥
ஸம்மோஹநாய மிலிதா மத₃நாத₃யஸ்தே
த்வத்₃தா₃ஸிகாபரிமலை: கில மோஹமாபு: |
த₃த்தாம் த்வயா ச ஜக்₃ருஹுஸ்த்ரபயைவ ஸர்வ-
ஸ்வர்வாஸிக₃ர்வஶமநீம் புநருர்வஶீம் தாம் || 7||
7. தங்களுக்கு மோகத்தை ஏற்படுத்த வந்த மன்மதன் முதலியோர், உன் பணிப்பெண்களின் வாசனையினால் மயங்கினர். உம்மால் உண்டாக்கப்பட்ட மிகவும் அழகு வாய்ந்த ஊர்வசியை வெட்கத்துடன் பெற்றுக் கொண்டனர்.
दृष्ट्वोर्वशीं तव कथां च निशम्य शक्र:
पर्याकुलोऽजनि भवन्महिमावमर्शात् ।
एवं प्रशान्तरमणीयतरावतारा-
त्त्वत्तोऽधिको वरद कृष्णतनुस्त्वमेव ॥८॥
த்₃ருஷ்ட்வோர்வஶீம் தவ கதா₂ம் ச நிஶம்ய ஶக்ர:
பர்யாகுலோ(அ)ஜநி ப₄வந்மஹிமாவமர்ஶாத் |
ஏவம் ப்ரஶாந்தரமணீயதராவதாரா-
த்த்வத்தோ(அ)தி₄கோ வரத₃ க்ருஷ்ணதநுஸ்த்வமேவ || 8||
8. தங்கள் இந்த மகிமையைக் கேட்ட இந்திரன் கலங்கினான். வரத! இந்த நரநாராயண அவதாரத்தைக் காட்டிலும் உனது கிருஷ்ணாவதாரம் தான் சிறந்தது. (பட்டத்ரிக்கு கிருஷ்ணனின் மேல் உள்ள பிரேமை இங்கு வெளியாகிறது)
दक्षस्तु धातुरतिलालनया रजोऽन्धो
नात्यादृतस्त्वयि च कष्टमशान्तिरासीत् ।
येन व्यरुन्ध स भवत्तनुमेव शर्वं
यज्ञे च वैरपिशुने स्वसुतां व्यमानीत् ॥९॥
த₃க்ஷஸ்து தா₄துரதிலாலநயா ரஜோ(அ)ந்தோ₄
நாத்யாத்₃ருதஸ்த்வயி ச கஷ்டமஶாந்திராஸீத் |
யேந வ்யருந்த₄ ஸ ப₄வத்தநுமேவ ஶர்வம்
யஜ்ஞே ச வைரபிஶுநே ஸ்வஸுதாம் வ்யமாநீத் || 9||
9. பிரும்மதேவனின் அளவுகடந்த சலுகைகளால், தக்ஷன் ரஜோகுணம் கொண்டு அறிவிழந்தான். உம்மிடத்திலும் பக்தி அற்றவனாக, அமைதியற்றவனாய் இருந்தான். அவன் மனம் பரமசிவனிடத்திலும் விரோதம் கொண்டது. அதனால், அவன் செய்த ஒரு யாகத்திற்கு, சிவனையும், அவருக்கு மணம் செய்து கொடுத்த தன் பெண்ணான தாக்ஷாயணியையும் அழைக்காமல் அவமானப்படுத்தினான்.
क्रुद्धेशमर्दितमख: स तु कृत्तशीर्षो
देवप्रसादितहरादथ लब्धजीव: ।
त्वत्पूरितक्रतुवर: पुनराप शान्तिं
स त्वं प्रशान्तिकर पाहि मरुत्पुरेश ॥१०॥
க்ருத்₃தே₄ஶமர்தி₃தமக₂: ஸ து க்ருத்தஶீர்ஷோ
தே₃வப்ரஸாதி₃தஹராத₃த₂ லப்₃த₄ஜீவ: |
த்வத்பூரிதக்ரதுவர: புநராப ஶாந்திம்
ஸ த்வம் ப்ரஶாந்திகர பாஹி மருத்புரேஶ || 10||
10. இதனால், கோபமடைந்த பரமசிவன், யாகத்தை அழித்து, அவன் தலையைத் துண்டித்தார். பிறகு, தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, அவனை உயிர்த்தெழச் செய்தார். தக்ஷனும் சாந்தி அடைந்தான். அமைதியை அளிப்பவரே! தாங்கள் என்னைக் காப்பாற்றுங்கள்.