Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 88
88. பூர்ணாவதாரா பதம் பணிந்தேன்.

''என் கண்ணே, உன்னை மகனாகப் பெற்று வளர்க்க நான் என்ன தவம் செய்தேனடா கிருஷ்ணா என்று கண்ணனை ஆரத்தழுவி அணைத்து முத்தமிட்டாள் தேவகி. சிறையிலிருந்து மீட்டு அவளை யம் தந்தை வசுதேவரையும் மீண்டும் மதுரா அரண்மனையில் சிறப்பாக வாழ வகை செய்த கண்ணன் சிரித்தான்.
''அம்மா ''உனைப் பெற '' என்று நீ சொன்னால் தான் ரொம்ப பொருத்தம். ''வளர்க்க'' என்றால் அது யசோதையைத் தான் சேரும். உனக்கு என்ன ஆசை சொல், உடனே நிறைவேற்றுகிறேன்''
''ஆமாமடா கிருஷ்ணா, நீ சொல்வது தான் சரி. உனை வளர்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை, நீ உயிர் வாழ்ந்தால் தானே வளர முடியும். ஆகவே தான் உன்னைப் பிறந்தவுடனே யசோதையிடம் அனுப்பினோம்.. எனக்கு அந்த பாக்யம் கிடைக்கவில்லையடா. உனக்கு முன் இழந்த என் செல்வங்களைபோல் உன்னை இழக்க நான் தயாரில்லாத தாய். உன்னால் இழந்த என் ஆறு செல்வங்களை மீட்டுத் தர முடியுமா?'' என்று கண்ணீருடன் கேட்டாள் தேவகி.''

''இதோ என்று புறப்பட்ட கிருஷ்ணன், சுதல லோகம் சென்று இறந்த அவனது சகோதரர்களை மீட்டான். அவர்களுக்கு முக்தி அளித்தான். இதைத் தவிர இந்த தசகத்தில், அர்ஜுனன் ஒரு ஏழைப் பிராமணனுக்கு வாக்களித்ததை நிறைவேற்ற அர்ஜுனனை எமனுலகிற்கு அழைத்துச் சென்று அந்த பிராமணன் மகனை உயிர்ப்பித்து திரும்ப கொண்டு வந்து தருகிற விஷயமும் வருகிறது. கிர்ஷ்ணன் அவதாரத்தின் லீலைகள் இந்த தசகத்துடன் நிறைவுறுகிறது.

प्रागेवाचार्यपुत्राहृतिनिशमनया स्वीयषट्सूनुवीक्षां काङ्क्षन्त्या मातुरुक्त्या सुतलभुवि बलिं प्राप्य तेनार्चितस्त्वम् । धातु: शापाद्धिरण्यान्वितकशिपुभवान् शौरिजान् कंसभग्ना- नानीयैनान् प्रदर्श्य स्वपदमनयथा: पूर्वपुत्रान् मरीचे: ॥१॥

praagevaachaarya putraahR^iti nishamanayaa sviiya ShaTsuunuviikshaaM
kaankshantyaa maaturuktyaa sutalabhuvi baliM praapya tenaarchitastvam |
dhaatuH shaapaaddhiraNyaanvitakashipubhavaan shaurijaan kamsabhagnaan
aaniiyainaan pradarshya svapadamanayathaaH puurvaputraan mariicheH || 1

ப்ராகே³வாசார்யபுத்ராஹ்ருதினிஶமனயா ஸ்வீயஷட்ஸூனுவீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாதுருக்த்யா ஸுதலபு⁴வி ப³லிம் ப்ராப்ய தேனார்சிதஸ்த்வம் |
தா⁴து꞉ ஶாபாத்³தி⁴ரண்யான்விதகஶிபுப⁴வான்ஶௌரிஜான் கம்ஸப⁴க்³னா-
நானீயைனான் ப்ரத³ர்ஶ்ய ஸ்வபத³மனயதா²꞉ பூர்வபுத்ரான்மரீசே꞉ || 88-1 ||

''தேவகி காதில் செய்தி விழுந்ததும் அவள் ஆச்சர்யப்பட்டாள் .
''என்ன என் கண்மணி கிருஷ்ணன் அவன் குருநாதர் சாந்தீபனி முனிவரின் இறந்த மகனை மீண்டும் உயிர் மீட்டுக் கொடுத்தானா?'' ஆஹா எவ்வளவு பெருமையாக இருக்கிறது எனக்கு'' அவளும் ஆறு குழந்தைகளைப் பிறந்ததும் அண்ணன் கம்சனின் உடைவாளுக்கு பலியாக தந்தவள் தானே. பெற்ற தாய்க்கு அந்த பிள்ளைகள் மேல் பாசம் இருக்காதா? கிருஷ்ணா, நீ உன் தாய் தேவகியை சிறையிலிருந்து விடுவித்து மீண்டும் தாய் தந்தையரை அரண்மனையில் வாழ வைத்தபோது அவள் உன்னை என்ன கேட்டாள் என நினைவிருக்கிறதா?

''கிருஷ்ணா, உனக்கு முன் நான் பெற்று இழந்த உன் சகோதரர்கள் ஆறு குழந்தைகளின் உயிரையும் மீட்டு எனக்கு தருவாயா?''

''கிருஷ்ணா, உனக்குத் தெரியும், அந்த ஆறு பேரும் முன்னர் மரீசியின் புத்திரர்கள், பின்னர் ப்ரம்மாவின் சாபத்தால் ஹிரண்ய கசிபுவின் பிள்ளைகளாக பிறந்தவர்கள். சுதல லோகத்திற்கு சென்று மகாபலியை பார்த்து பேசி அந்த ஆறு பேரையும் மீட்டுக் கொண்டுவந்தாய். உன் தாயிடம் அவர்களைக் காட்டிவிட்டு அவர்களை வைகுண்டம் திரும்பச் செய்தாய்.

श्रुतदेव इति श्रुतं द्विजेन्द्रं बहुलाश्वं नृपतिं च भक्तिपूर्णम् ।
युगपत्त्वमनुग्रहीतुकामो मिथिलां प्रापिथं तापसै: समेत: ॥२॥

shrutadeva iti shrutaM dvijendraM
bahulaashvaM nR^ipatincha bhaktipuurNam |
yugapattvamanugrahiitu kaamO
mithilaaM praapitha taapasaiH sametaH || 2

மிதிலைக்கு ஒரு முறை நீ ஏன் சென்றாய் என்று நினைவிருக்கிறதா? அங்கு ஒரு ஸாஸ்த்ர மறிந்த பண்டிதன் ஸ்ருததேவன் உன் அருளைப் பெற தியானித்தவன்,மற்றும் ராஜா நஹுலாஸ்வன் ஒரு சிறந்த பக்தன், அவர்கள் இருவருக்கும் ஆசி அளிக்க தான் அங்கே சென்றாய்.

गच्छन् द्विमूर्तिरुभयोर्युगपन्निकेत-
मेकेन भूरिविभवैर्विहितोपचार: ।
अन्येन तद्दिनभृतैश्च फलौदनाद्यै-
स्तुल्यं प्रसेदिथ ददथ च मुक्तिमाभ्याम् ॥३॥

gachChan dvimuurtirubhayOryugapanniketam
ekena bhuurivibhavairvihitOpachaaraH |
anyena taddina bhR^itaishcha phalaudanaadyaiH
tulyaM praseditha dadaatha cha muktimaabhyaam || 3

க³ச்ச²ந்த்³விமூர்திருப⁴யோர்யுக³பன்னிகேத-
மேகேன பூ⁴ரிவிப⁴வைர்விஹிதோபசார꞉ |
அன்யேன தத்³தி³னப்⁴ருதைஶ்ச ப²லௌத³னாத்³யை-
ஸ்துல்யம் ப்ரஸேதி³த² த³தா³த² ச முக்திமாப்⁴யாம் || 88-3 ||

கிருஷ்ணா, மேலே சொன்னதை மனதில் கொண்டு, நீ இரு உருவங்கள் கொண்டவனாக ஒரே சமயத்தில் அந்த இருவரின் இருப்பிடத்திற்கு சென்றாய். ஒருவன் உன்னை ரொம்ப பெருமையோடு விமரிசையாக வழிபட்டான். மற்றவன் அன்று தனக்கு உஞ்சவிருத்தியில் கிடைத்த ஆகாரம், காய்கறிகள் எல்லாவற்றையும் உனக்கே அர்பணித்தான். அவர்கள் இருவரின் பக்தியையும் மெச்சி இருவருக்குமே மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளித்தாய்.

भूयोऽथ द्वारवत्यां द्विजतनयमृतिं तत्प्रलापानपि त्वम्
को वा दैवं निरुन्ध्यादिति किल कथयन् विश्ववोढाप्यसोढा: ।
जिष्णोर्गर्वं विनेतुं त्वयि मनुजधिया कुण्ठितां चास्य बुद्धिं
तत्त्वारूढां विधातुं परमतमपदप्रेक्षणेनेति मन्ये ॥४॥

bhuuyO(a)tha dvaaravatyaaM dvijatanaya mR^itiM tatpralaapaanapi tvaM
kO vaa daivaM nirundhyaaditi kila kathayan vishvavODhaa(a)pyasO(a)DhaaH |
jiShNOrgarvaM vinetuM tvayi manujadhiyaa kuNThitaaM chaasya buddhiM
tattvaaruuDhaaM vidhaatuM paramatama pada perakshaNeneti manye ||4

இன்னொரு சம்பவத்தையும் இங்கே மறக்காமல் சொல்கிறேன்.
ஒரு பிராமணனுக்கு ஒவ்வொரு முறையும் அவன் மனைவி பிரசவித்து ஒரு குழந்தை பிறந்த சில வினாடிகளிலேயே, அதை மரணம் விடாமல் கவ்வியது. பிராமணன் உன்னிடம் தனது விதியை நொந்து அழுதபோது, நீ சர்வலோக ரக்ஷகன் அவனுக்கு என்ன ஆறுதல் சொன்னாய்.?

''அப்பா இது உன் கர்மா வினைப்பயன், யாராலும் தடுத்துநிறுத்த முடியாத இதை நீ ஏற்று அனுபவித்தாக வேண்டும் '' என்றாய். உன் அருகில் நின்றிருந்த அர்ஜுனன் உன்னை ஏற இறங்க பார்த்தான். அவ்வளவு தானா நீ, ஓஹோ நீயும் ஒரு சாதாரண மனிதன் தானோ? என்று எடை போட்டான். அவனுடைய கர்வத்தை ஒடுக்க நீ ஒரு நாடகம் தயாரித்ததை அவன் உணரவில்லை.

नष्टा अष्टास्य पुत्रा: पुनरपि तव तूपेक्षया कष्टवाद:
स्पष्टो जातो जनानामथ तदवसरे द्वारकामाप पार्थ: ।
मैत्र्या तत्रोषितोऽसौ नवमसुतमृतौ विप्रवर्यप्ररोदं
श्रुत्वा चक्रे प्रतिज्ञामनुपहृतसुतसन्निवेक्ष्ये कृशानुम् ॥५॥

naShTaa aShTaasya putraaH punarapi tava tuupekshayaa kaShTavaadaH
spaShTO jaatO janaanaamatha tadavasare dvaarakaamaapa paarthaH |
maitryaa tatrOShitO(a)sau navamasutamR^itau vipravaryaprarOdaM
shrutvaa chakre pratij~naaM anupahR^itasutaH sannivekshye kR^ishaanum || 5

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா꞉ புனரபி தவ தூபேக்ஷயா கஷ்டவாத³꞉
ஸ்பஷ்டோ ஜாதோ ஜனானாமத² தத³வஸரே த்³வாரகாமாப பார்த²꞉ |
மைத்ர்யா தத்ரோஷிதோ(அ)ஸௌ நவமஸுதம்ருதௌ விப்ரவர்யப்ரரோத³ம்
ஶ்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாமனுபஹ்ருதஸுத꞉ ஸன்னிவேக்ஷ்யே க்ருஶானும் || 88-5 ||

அருகே சில பிராமணர்களும் அப்போது நின்றிருந்தார்கள். ''இதென்ன பரிதாபம், அக்ரமமும் கூட. பாவம் இதோடு இந்த ஏழை பிராமணனுக்கு எட்டு குழந்தைகள் பிறந்து மரணம் அடைந்தன. கிருஷ்ணன் அருள் இல்லாததால் தானே, கிருஷ்ணன் கருணை இல்லாததால் தானே அவை காப்பாற்றப் படவில்லை''என்று உன்னை ஏளனமாக அவர்கள் பேசினதை கேட்ட அர்ஜுனன் கொதித்தான். ''ஹே, ப்ராமணா, உனது அடுத்த குழந்தை பிறக்கும் சமயம் எனக்குச் சொல். நானே நேரில் வந்து உன் குழந்தையைக் கொல்லும் தீய சக்தியை நான் எனது காண்டீபவத்தால் கொன்றுவிடுகிறேன். அதை காப்பாற்ற தவறினால் உன் வீட்டு வாசலில் தீமூட்டி உயிரிழப்பேன்'' அர்ஜுனன் விஷயம் தெரியாமல் சபதம் செய்துவிட்டான்..

मानी स त्वामपृष्ट्वा द्विजनिलयगतो बाणजालैर्महास्त्रै
रुन्धान: सूतिगेहं पुनरपि सहसा दृष्टनष्टे कुमारे ।
याम्यामैन्द्रीं तथाऽन्या:सुरवरनगरीर्विद्ययाऽऽसाद्य सद्यो
मोघोद्योगपतिष्यन् हुतभुजि भवता सस्मितं वारितोऽभूत् :॥६

maanii sa tvaamapR^iShTvaa dvijanilayagatO baaNajaalairmahaastraiH
rundhaanaH suutigehaM punarapi sahasaa dR^iShTa naShTe kumaare |
yaamyaamaindriiM tathaa(a)nyaaH suravara nagariirvidyayaa(a)(a)saadya sadyO
mOghOdyOgaH patiShyan hutabhuji bhavataa sasmitaM vaaritO(a)bhuut || 6

மானீ ஸ த்வாமப்ருஷ்ட்வா த்³விஜனிலயக³தோ பா³ணஜாலைர்மஹாஸ்த்ரை
ருந்தா⁴ன꞉ ஸூதிகே³ஹம் புனரபி ஸஹஸா த்³ருஷ்டனஷ்டே குமாரே |
யாம்யாமைந்த்³ரீம் ததா²ன்யா꞉ ஸுரவரனக³ரீர்வித்³யயா(ஆ)ஸாத்³ய ஸத்³யோ
மோகோ⁴த்³யோக³꞉ பதிஷ்யன்ஹுதபு⁴ஜி ப⁴வதா ஸஸ்மிதம் வாரிதோ(அ)பூ⁴த் || 88-6 ||

கிருஷ்ணா, உன்னிடம் அறிவிக்காமலே, அடுத்த குழந்தை பிறக்கும் சமயத்தில் முன்னதாகவே அர்ஜுனன் அந்த பிராமணன் வீட்டுக்கு சென்று விட்டான். பிரசவ அறையை சுற்றி அம்புகளால் வேலி போட்டு கோட்டையாக்கிவிட்டு காவல் காத்திருந்தான். குழந்தை பிறந்தது, அடுத்த கணமே, இதற்கு முன்னர் பிறந்த மற்ற குழந்தைகளைப் போலவே அதுவும் மூச்கிழந்து இறந்தது.

அர்ஜுனன் திகைத்தான். தன்னுடைய யோக சக்தியால் எமனுலகு சென்றான். இந்திரலோகம், எமலோகம் எங்குமே அந்த குழந்தையின் உயிரை கண்டுபிடிக்கமுடியவில்லை, தான் கொடுத்த வாக்குப்படி குழி தோண்டி அக்னி வளர்த்து அந்த பிராமணன் வீட்டு வாசலிலேயே அக்னிப்ரவேசம் பண்ண தயாரானான். அந்த நேரம் நீ சென்று தடுத்தாய்.

सार्धं तेन प्रतीचीं दिशमतिजविना स्यन्दनेनाभियातो
लोकालोकं व्यतीतस्तिमिरभरमथो चक्रधाम्ना निरुन्धन् ।
चक्रांशुक्लिष्टदृष्टिं स्थितमथ विजयं पश्य पश्येति वारां
पारे त्वं प्राददर्शकिमपि हि तमसां दूरदूरं पदं ते :॥७॥

saardhaM tena pratiichiiM dishamati javinaa syandanenaabhiyaatO
lOkaalOkaM vyatiitastimira bharamathO chakradhaamnaa nirundhan |
chakraamshukliShTa dR^iShTiM sthitamatha vijayaM pashya pashyeti vaaraaM
paare tvaM praadadarshaH kimapi hi tamasaaM duura duuraM padaM te || 7

ஸார்த⁴ம் தேன ப்ரதீசீம் தி³ஶமதிஜவினா ஸ்யந்த³னேனாபி⁴யாதோ
லோகாலோகம் வ்யதீதஸ்திமிரப⁴ரமதோ² சக்ரதா⁴ம்னா நிருந்த⁴ன் |
சக்ராம்ஶுக்லிஷ்டத்³ருஷ்டிம் ஸ்தி²தமத² விஜயம் பஶ்ய பஶ்யேதி வாராம்
பாரே த்வம் ப்ராத³த³ர்ஶ꞉ கிமபி ஹி தமஸாம் தூ³ரதூ³ரம் பத³ம் தே || 88-7 ||

''வா என்னுடன்'' என்று அர்ஜுனனை அழைத்துக் கொண்டே மேற்கே ஒரு வேகமான தேரில் சென்றாய். உனது சுதர்சன சக்ரம் இருளை விரட்டியது. ஏழு கடல்களை தாண்டி சென்றீர்கள், சுதர்சன சக்ரத்தின் ஒளி அர்ஜுனன் கண்களைக் குருடாக்கியது. ''அங்கே பார் அர்ஜுனா '' என்றாய். நீ வாசம் செய்யும் வைகுண்டத்தில் இப்போது நீங்கள் இருந்தீர்கள்.

तत्रासीनं भुजङ्गाधिपशयनतले दिव्यभूषायुधाद्यै-
रावीतं पीतचेलं प्रतिनवजलदश्यामलं श्रीमदङ्गम् ।
मूर्तीनामीशितारं परमिह तिसृणामेकमर्थं श्रुतीनां
त्वामेव त्वं परात्मन् प्रियसखसहितो नेमिथ क्षेमरूपम् ॥८॥

tatraasiinaM bhujangaadhipa shayanatale divyabhuuShaayudhaadyaiH
aaviitaM piitachelaM pratinavajalada shyaamalaM shriimadangam |
muurtiinaamiishitaaraM paramiha tisR^iNaa mekamarthaM shrutiinaaM
tvaameva tvaM paraatman priyasakha sahitO nemitha kshemaruupam || 8

தத்ராஸீனம் பு⁴ஜங்கா³தி⁴பஶயனதலே தி³வ்யபூ⁴ஷாயுதா⁴த்³யை-
ராவீதம் பீதசேலம் ப்ரதினவஜலத³ஶ்யாமலம் ஶ்ரீமத³ங்க³ம் |
மூர்தீனாமீஶிதாரம் பரமிஹ திஸ்ருணாமேகமர்த²ம் ஶ்ருதீனாம்
த்வாமேவ த்வம் பராத்மன் ப்ரியஸக²ஸஹிதோ நேமித² க்ஷேமரூபம் || 88-8 ||

அங்கே ஆதிசேஷன் மேல் சர்வாலங்கார பூஷிதனாக சங்கு சக்ர கதாபாணியாக , இடையில் மஞ்சள் பீதாம்பர வஸ்திரம் தரித்து, கார்மேக வண்ணனாய், ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸஹிதம் ஆரோகணித்திருந்தாய். வேதஸ்வரூபா, முக்தி அளிப்பவனே.

युवां मामेव द्वावधिकविवृतान्तर्हिततया
विभिन्नौ सन्द्रष्टुं स्वयमहमहार्षं द्विजसुतान् ।
नयेतं द्रागेतानिति खलु वितीर्णान् पुनरमू
न्द्विजायादायादाप्रणुतमहिमा पाण्डुजनुषा ॥९॥

yuvaaM maameva dvaavadhika vivR^itaantarhitatayaa
vibhinnau sandraShTuM svayamaha mahaarShaM dvijasutaan |
nayetaM draagetaaniti khalu vitiirNaan punaramuun
dvijaayaadaayaadaaH praNutamahimaa paaNDujanuShaa || 9

யுவாம் மாமேவ த்³வாவதி⁴கவிவ்ருதாந்தர்ஹிததயா
விபி⁴ன்னௌ ஸுந்த்³ரஷ்டும் ஸ்வயமஹமஹார்ஷம் த்³விஜஸுதான் |
நயேதம் த்³ராகே³தானிதி க²லு விதீர்ணான்புனரமூன்
த்³விஜாயாதா³யாதா³꞉ ப்ரணுதமஹிமா பாண்டு³ஜனுஷா || 88-9 ||

கிருஷ்ணா, ஸ்ரீ மஹா விஷ்ணு உன்னையும் அர்ஜுனனையும் கண்டதும் உங்கள் இருவரையும் பார்த்து மகிழ்கிறார், ''நீங்கள் நர நாராயணர்கள். ஒருவர் என் முழு அம்சம், மற்றவர் அதில் ஒரு பகுதியானவர்.அவருக்கு அது தெரியாதவர். நீங்கள் தேடிவந்ததெல்லாம் இங்கே இருக்கிறது. எடுத்துச் செல்லலாம். '' இதுவரை மறைந்த அனைத்து பிராமணன் குழந்தைகளையும் அர்ஜுனனனிடத்தில் ஒப்படைத்தார் மஹா விஷ்ணு. அர்ஜுனன் அந்த குழந்தைகள் அனைவரையும் பிராமணனிடம் ஒப்படைத்தபோது அவன் அர்ஜுனனைப் புகழ்ந்ததை வர்ணிக்க வார்த்தை எனக்கு தெரியவில்லை.

एवं नानाविहारैर्जगदभिरमयन् वृष्णिवंशं प्रपुष्ण
- न्नीजानो यज्ञभेदैरतुलविहृतिभि: प्रीणयन्नेणनेत्रा: ।
भूभारक्षेपदम्भात् पदकमलजुषां मोक्षणायावतीर्ण:
पूर्णं ब्रह्मैव साक्षाद्यदुषु मनुजतारूषितस्त्वं व्यलासी ॥१०॥
:
evaM naanaavihaarairjagadabhiramayan vR^iShNivamshaM prapuShNan
iijaanO yaj~nabhedaiH atulavihR^itibhiH priiNayanneNanetraaH |
bhuubhaarakshepadambhaat padakamalajuShaaM mOkshaNaayaavatiirNaH
puurNaM brahmaiva saakshaadyaduShu manujataaruuShitastvaM vyalaasiiH || 10

ஏவம் நானாவிஹாரைர்ஜக³த³பி⁴ரமயன்வ்ருஷ்ணிவம்ஶம் ப்ரபுஷ்ண-
ந்னீஜானோ யஜ்ஞபே⁴தை³ரதுலவிஹ்ருதிபி⁴꞉ ப்ரீணயன்னேணனேத்ரா꞉ |
பூ⁴பா⁴ரக்ஷேபத³ம்பா⁴த்பத³கமலஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண꞉
பூர்ணம் ப்³ரஹ்மைவ ஸாக்ஷாத்³யது³ஷு மனுஜதாரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ꞉ || 88-10 ||

வாதபுரீசா, ப்ரம்மஸ்வரூபா, நீ கிருஷ்ணனாக அவதாரம் எடுத்ததே உன் தாமரைத் திருவடியை சரணடைந்தவர்க்கு முக்தி அளிக்கவே. பூமியின் பாரம் குறைக்க என்பது தீய சக்திகளை அழிக்க கொடுத்த காரணப்பெயர். உனது செயல்கள் அனைத்தும் லீலைகள். கிருஷ்ண பகவானே, நீ
பாசத்தால், நேசத்தால் அனைவரையும் கட்டுண்டப்பண்ணிய மாயன். யதுகுலம் பெருமையுற அதில் தோன்றியவன்.

प्रायेण द्वारवत्यामवृतदयि तदा नारदस्त्वद्रसार्द्र-
स्तस्माल्लेभे कदाचित्खलु सुकृतनिधिस्त्वत्पिता तत्त्वबोधम् ।
भक्तानामग्रयायी स च खलु मतिमानुद्धवस्त्वत्त एव
प्राप्तो विज्ञानसारं स किल जनहितायाधुनाऽऽस्ते बदर्याम् ॥११॥

praayeNa dvaaravatyaamavR^itadayi tadaa naaradastvadrasaardraH
tasmaallebhe kadaachitkhalu sukR^itanidhi stvatpitaa tattvabOdham |
bhaktaanaamagrayaayii sa cha khalu matimaan uddhavastvatta eva
praaptO vij~naanasaaraM sa kilajanahitaayaadhunaa(a)(a)ste badaryaam || 11

ப்ராயேண த்³வாரவத்யாமவ்ருதத³யி ததா³ நாரத³ஸ்த்வத்³ரஸார்த்³ர-
ஸ்தஸ்மால்லேபே⁴ கதா³சித்க²லு ஸுக்ருதனிதி⁴ஸ்த்வத்பிதா தத்த்வபோ³த⁴ம் |
ப⁴க்தானாமக்³ரயாயீ ஸ ச க²லு மதிமானுத்³த⁴வஸ்த்வத்த ஏவ
ப்ராப்தோ விஜ்ஞானஸாரம் ஸ கில ஜனஹிதாயாது⁴னா(அ)ஸ்தே ப³த³ர்யாம் || 88-11 ||

தெய்வமே, உன்மேல் அதீத பக்தி கொண்ட நாரதர் அங்கே அப்போது துவாரகைக்கு உன்னை தரிசிக்க வந்தார். வசுதேவர் உன் தந்தை , நாரதரைக் கண்டதும் மிக்க பக்தியும் மகிழ்ச்சியும் கொண்டு வரவேற்று உபசரித்தார். நாரதரிடம் வேதாந்த தத்வங்களை கேட்டு அறிந்தார். இதை உன்னிடம் உன் பக்தன் உத்தவன் பின்னர் அறிந்தான். இன்று வரையிலும் உத்தவன் உலக க்ஷேமத்துக்காக பத்திரிகாச்ரமத்தில் நாராயணா உன்னோடு இருக்கிறான்.

सोऽयं कृष्णावतारो जयति तव विभो यत्र सौहार्दभीति-
स्नेहद्वेषानुरागप्रभृतिभिरतुलैरश्रमैर्योगभेदै: ।
आर्तिं तीर्त्वा समस्ताममृतपदमगुस्सर्वत: सर्वलोका:
स त्वं विश्वार्तिशान्त्यै पवनपुरपते भक्तिपूर्त्यै च भूया: ॥१२॥

sO(a)yaM kR^iShNaavataarO jayati tava vibhO yatra sauhaarda bhiiti
sneha dveShaanuraaga prabhR^itibhiratulairashramairyOgabhedaiH |
aartiM tiirtvaa samastaamamR^itapadamaguH sarvataH sarvalOkaaH
sa tvaM vishvaartishaantyai pavanapurapate bhaktipuurtyai cha bhuuyaaH || 12

ஸோ(அ)யம் க்ருஷ்ணாவதாரோ ஜயதி தவ விபோ⁴ யத்ர ஸௌஹார்த³பீ⁴தி-
ஸ்னேஹத்³வேஷானுராக³ப்ரப்⁴ருதிபி⁴ரதுலைரஶ்ரமைர்யோக³பே⁴தை³꞉ |
ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தாமம்ருதபத³மகு³ஸ்ஸர்வத꞉ ஸர்வலோகா꞉
ஸ த்வம் விஶ்வார்திஶாந்த்யை பவனபுரபதே ப⁴க்திபூர்த்யை ச பூ⁴யா꞉ || 88-12 ||

என் தெய்வமே குருவாயூரப்பா, உன்னுடைய அவதாரங்களிலேயே கிருஷ்ணாவதாரம் ஒன்று தான் மற்றதெல்லாம் விட மிக்க உன்னதமாக அமைந்துவிட்டது. அதை பூர்ணாவதாரம் என்கிறார்கள். எங்கள் இதயத்தில் நீ இருக்கிறாய் என்பதால் உன் இதயத்தில் எங்களை குடிகொள்ளச்செய்பவனே நட்புயோகம் எங்கும் எவரிடமும் பரவ, பயம் அகல, அன்பு பெறுக, பொறாமை, கோபம், அழிய, பந்தம் பாசம் உன்னிடம் மட்டுமே பற்றிட, இந்த ஒரு அவதாரத்தில் , உலக பற்றனைத்திலிருந்தும் விடுபட வைத்து அனைவரையும் ஆனந்தத்தில் மகிழ்விப்பவன் நீ. துன்பமகற்றி இன்பமளிக்கும் எண்டே குருவாயூரப்பா,எங்கும் சாந்தி அளிப்பவனே, என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷி.