Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 3
பக்தி ப்ரார்த்தனை

पठन्तो नामानि प्रमदभरसिन्धौ निपतिता:
स्मरन्तो रूपं ते वरद कथयन्तो गुणकथा: ।
चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू-
नहं धन्यान् मन्ये समधिगतसर्वाभिलषितान् ॥१॥

பட₂ந்தோ நாமாநி ப்ரமத₃ப₄ரஸிந்தௌ₄ நிபதிதா:
ஸ்மரந்தோ ரூபம் தே வரத₃ கத₂யந்தோ கு₃ணகதா₂: |
சரந்தோ யே ப₄க்தாஸ்த்வயி க₂லு ரமந்தே பரமமூ-
நஹம் த₄ந்யாந் மந்யே ஸமதி₄க₃தஸர்வாபி₄லஷிதாந் || 1||

1. வரதா! பக்தர்கள், உன் நாமாக்களைப் படித்தும், உன்  ரூபத்தை த்யானித்தும், அதனால் ஆனந்தக் கடலில் மூழ்கி,  உன் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களே பாக்யசாலிகள் என்று கருதுகிறேன்.

गदक्लिष्टं कष्टं तव चरणसेवारसभरेऽ-
प्यनासक्तं चित्तं भवति बत विष्णो कुरु दयाम् ।
भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा-
नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने ॥२॥

க₃த₃க்லிஷ்டம் கஷ்டம் தவ சரணஸேவாரஸப₄ரே(அ)-
ப்யநாஸக்தம் சித்தம் ப₄வதி ப₃த விஷ்ணோ குரு த₃யாம் |
ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணரஸிகோ நாமநிவஹா-
நஹம் கா₃யம் கா₃யம் குஹசந விவத்ஸ்யாமி விஜநே || 2||

2. உள்ளும் புறமும் ரோகங்களால் கஷ்டப்படும் என் மனம் தங்களை ஸேவிப்பதில் ஈடுபடுவதில்லை. ப்ரபோ, உன்  திருவடிகளை சரணடைந்து அவற்றை த்யானம் செய்து, உன் நாமாக்களை உச்சரித்துக்கொண்டு ஏகாந்தத்தில் இருக்க விரும்புகிறேன்.

कृपा ते जाता चेत्किमिव न हि लभ्यं तनुभृतां
मदीयक्लेशौघप्रशमनदशा नाम कियती ।
न के के लोकेऽस्मिन्ननिशमयि शोकाभिरहिता
भवद्भक्ता मुक्ता: सुखगतिमसक्ता विदधते ॥३॥

க்ருபா தே ஜாதா சேத்கிமிவ ந ஹி லப்₄யம் தநுப்₄ருதாம்
மதீ₃யக்லேஶௌக₄ப்ரஶமநத₃ஶா நாம கியதீ |
ந கே கே லோகே(அ)ஸ்மிந்நநிஶமயி ஶோகாபி₄ரஹிதா
ப₄வத்₃ப₄க்தா முக்தா: ஸுக₂க₃திமஸக்தா வித₃த₄தே || 3||

3. தங்கள்  க்ருபை இருந்தால் ஜீவன்களுக்கு அடைய முடியாதது என்று  ஒன்றும் இல்லை. அப்படியிருக்க, என் கஷ்டங்களை அழிப்பது உனக்கு எம்மாத்திரம்? உன் பக்தர்கள் எப்பொழுதும் துக்கமற்றவர்களாக, பற்றற்றவர்களாக, ஜீவன் முக்தர்களாக மோக்ஷத்தை அடைகின்றனர்.

मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो
भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखा: ।
चरन्तीश स्वैरं सततपरिनिर्भातपरचि -
त्सदानन्दाद्वैतप्रसरपरिमग्ना: किमपरम् ॥४॥

முநிப்ரௌடா₄ ரூடா₄ ஜக₃தி க₂லு கூ₃டா₄த்மக₃தயோ
ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணவிருஜோ நாரத₃முகா₂: |
சரந்தீஶ ஸ்வைரம் ஸததபரிநிர்பா₄தபரசி -
த்ஸதா₃நந்தா₃த்₃வைதப்ரஸரபரிமக்₃நா: கிமபரம் || 4||.

4. நாரதர்  முதலிய முனிவர்கள்,  ஞானத்தைப் பெற்று, தங்களுடைய பாதஸேவையினால் துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள்.  எப்போதும் பிரகாசிக்கும் பரமானந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.  அவர்கள் விரும்பியவாறு ஸஞ்சரிக்கிறார்கள். அவர்களுக்கு இதைவிட அடையவேண்டியது என்ன இருக்கிறது?

भवद्भक्ति: स्फीता भवतु मम सैव प्रशमये-
दशेषक्लेशौघं न खलु हृदि सन्देहकणिका ।
न चेद्व्यासस्योक्तिस्तव च वचनं नैगमवचो
भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम् ॥५॥

ப₄வத்₃ப₄க்தி: ஸ்பீ₂தா ப₄வது மம ஸைவ ப்ரஶமயே-
த₃ஶேஷக்லேஶௌக₄ம் ந க₂லு ஹ்ருதி₃ ஸந்தே₃ஹகணிகா |
ந சேத்₃வ்யாஸஸ்யோக்திஸ்தவ ச வசநம் நைக₃மவசோ
ப₄வேந்மித்₂யா ரத்₂யாபுருஷவசநப்ராயமகி₂லம் || 5||

5. ஓ குருவாயூரப்பா! எனக்குத் தங்களிடத்தில் அளவற்ற பக்தி உண்டாகவேண்டும். அது, என்  துன்பங்கள் யாவற்றையும் போக்கும் என்பதில் எனக்கு சிறிதும்  ஐயமில்லை. அப்படியில்லையெனில், வியாசருடைய வாக்கும், வேதவாக்கும், நாடோடியின் பேச்சைப் போல பொய்யாக அமைந்துவிடும்.

भवद्भक्तिस्तावत् प्रमुखमधुरा त्वत् गुणरसात्
किमप्यारूढा चेदखिलपरितापप्रशमनी ।
पुनश्चान्ते स्वान्ते विमलपरिबोधोदयमिल-
न्महानन्दाद्वैतं दिशति किमत: प्रार्थ्यमपरम् ॥६॥

ப₄வத்₃ப₄க்திஸ்தாவத் ப்ரமுக₂மது₄ரா த்வத் கு₃ணரஸாத்
கிமப்யாரூடா₄ சேத₃கி₂லபரிதாபப்ரஶமநீ |
புநஶ்சாந்தே ஸ்வாந்தே விமலபரிபோ₃தோ₄த₃யமில-
ந்மஹாநந்தா₃த்₃வைதம் தி₃ஶதி கிமத: ப்ரார்த்₂யமபரம் || 6||.

6. உன் கதைகளைக் கேட்பதால் உண்டாகும் பக்தி இனிமையாக இருக்கிறது. இந்த பக்தி வளர வளர, தாபங்கள், துன்பங்கள் அடியோடு  ஒழிகின்றன.  முடிவில், அது சுத்தமான ப்ரம்மஞானத்துடன் கூடிய பேரானந்தத்தை அளிக்கிறது. இதற்குமேல் வேண்டக்கூடியது வேறு என்ன இருக்கிறது?

विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं
भवत्क्षेत्रप्राप्तौ करमपि च ते पूजनविधौ ।
भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी-
परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥

விதூ₄ய க்லேஶாந்மே குரு சரணயுக்₃மம் த்₄ருதரஸம்
ப₄வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜநவிதௌ₄ |
ப₄வந்மூர்த்யாலோகே நயநமத₂ தே பாத₃துலஸீ-
பரிக்₄ராணே க்₄ராணம் ஶ்ரவணமபி தே சாருசரிதே || 7||

7. ஓ குருவாயூரப்பா, என் துன்பங்களைப் போக்கி அருள வேண்டும். என் கால்கள் உன் கோயிலைப் பிரதக்ஷிணம் செய்யவும், கைகள் உன்னைப் பூஜிக்கவும், கண்கள் உன் வடிவழகைக் காணவும், மூக்கு சரண துளசியை  நுகரவும், காது உன் கதைகளை ஸ்ரவணம் செய்வதிலும் ஈடுபடும்வண்ணம் அருள் புரிய வேண்டும்.

प्रभूताधिव्याधिप्रसभचलिते मामकहृदि
त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात् ।
उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो
यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान् ॥८॥

ப்ரபூ₄தாதி₄வ்யாதி₄ப்ரஸப₄சலிதே மாமகஹ்ருதி₃
த்வதீ₃யம் தத்₃ரூபம் பரமஸுக₂சித்₃ரூபமுதி₃யாத் |
உத₃ஞ்சத்₃ரோமாஞ்சோ க₃லிதப₃ஹுஹர்ஷாஶ்ருநிவஹோ
யதா₂ விஸ்மர்யாஸம் து₃ருபஶமபீடா₃பரிப₄வாந் || 8||

8.  கவலைகளாலும், ரோகங்களாலும் கலக்கமடைந்ததாக என் மனம் இருக்கிறது.  அவற்றை மறந்து, மயிர்க்கூச்செறிய, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, உன் சிதானந்த வடிவழகு என் மனதில் தோன்ற அருள்வாய். உலகக் கஷ்டங்களில் இருந்து தப்ப பகவத்யானம் தான் வழி என்று கொள்ள வேண்டும்.

मरुद्गेहाधीश त्वयि खलु पराञ्चोऽपि सुखिनो
भवत्स्नेही सोऽहं सुबहु परितप्ये च किमिदम् ।
अकीर्तिस्ते मा भूद्वरद गदभारं प्रशमयन्
भवत् भक्तोत्तंसं झटिति कुरु मां कंसदमन ॥९॥

மருத்₃கே₃ஹாதீ₄ஶ த்வயி க₂லு பராஞ்சோ(அ)பி ஸுகி₂நோ
ப₄வத்ஸ்நேஹீ ஸோ(அ)ஹம் ஸுப₃ஹு பரிதப்யே ச கிமித₃ம் |
அகீர்திஸ்தே மா பூ₄த்₃வரத₃ க₃த₃பா₄ரம் ப்ரஶமயந்
ப₄வத் ப₄க்தோத்தம்ஸம் ஜ₂டிதி குரு மாம் கம்ஸத₃மந || 9||

9. உன்னிடம் பக்தியில்லாதவர்கள் சௌக்யமாய் இருக்கிறார்கள். உன்னிடம் பக்தியாய் இருக்கும் நானோ கஷ்டப்படுகிறேன். ஆச்சர்யம்! உன்னை நாடியவர்களைக் கஷ்டத்திற்கு உள்ளாக்கிய பழி உனக்கு வரக்கூடாது. ப்ரபோ! கம்ஸனை வதம் செய்தவனே, என் வ்யாதியைப் போக்கி என்னை ஆட்கொள்ளவேண்டும்.

किमुक्तैर्भूयोभिस्तव हि करुणा यावदुदिया-
दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः ।.
पुरः क्लृप्ते पादे वरद तव नेष्यामि दिवसा-
न्यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन् ॥१०॥

கிமுக்தைர்பூ₄யோபி₄ஸ்தவ ஹி கருணா யாவது₃தி₃யா-
த₃ஹம் தாவத்₃தே₃வ ப்ரஹிதவிவிதா₄ர்தப்ரலபித​: |
புர​: க்ல்ருப்தே பாதே₃ வரத₃ தவ நேஷ்யாமி தி₃வஸா-
ந்யதா₂ஶக்தி வ்யக்தம் நதிநுதிநிஷேவா விரசயந் || 10||

10.  தேவா! அதிகமான சொற்கள் கூறி என்ன பயன்? உனக்கு எப்போது என் மேல் கருணை உண்டாகுமோ உண்டாகட்டும். அதுவரை, அழுது புலம்பாமல், என்னால் முடிந்தவரைக்கும் உன்னை ஸ்தோத்திரம், நமஸ்காரம் செய்து உன் பாதங்களில் பணிவேன். இதுவே என் முடிவு.