Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 63
63 மலையை விரலால் நிறுத்தியவன்

தர்பாரி கானடா என்று ஒரு மனத்தைக் கவரும் ராகம் உண்டு. அந்த ராகத்தில் நாராயண தீர்த்தரின் அற்புத பாடல் ஒன்று இன்றும் பல நூறு ஆண்டுகளாக பாடப்பட்டு வருகிறதே தெரியுமா? அது தான் ''கோவர்தன கிரிதரா'' ..பல முறை நான் திரும்ப திரும்ப கேட்டு மகிழும் ஒரு பாடல். கிருஷ்ணனுக்கு கோவர்தன கிரிதரன் என்று ஒரு பெயர் எதனால் வந்தது என்பதை இந்த தசகம் சொல்கிறது.

ददृशिरे किल तत्क्षणमक्षत-
स्तनितजृम्भितकम्पितदिक्तटा: ।
सुषमया भवदङ्गतुलां गता
व्रजपदोपरि वारिधरास्त्वया ॥१॥

dadR^ishire kila tatkshaNamakshata
stanita jR^imbhita kampita diktaTaaH |
suShamayaa bhavadangatulaaM gataa
vrajapadOpari vaaridharaastvayaa || 1

த³த்³ருஶிரே கில தத்க்ஷணமக்ஷத-
ஸ்தனிதஜ்ரும்பி⁴தகம்பிததி³க்தடா꞉ |
ஸுஷமயா ப⁴வத³ங்க³துலாம் க³தா
வ்ரஜபதோ³பரி வாரித⁴ராஸ்த்வயா || 63-1 ||

கோகுல பிருந்தாவன மக்கள் கதி கலங்கி நின்ற காரணம் மேலே செவிடு பட இடிக்கும் கரு மேகங்களும் தலையில் விழுந்து விடுமோ என்று பயத்தை அளித்த தாழ்ந்த கனமான சூல் கொண்ட மேகங்களும் தான். மின்னல் கண்ணைக் குருடாக்கும்படி பளிச்சிட்டது. இப்படியா விடாமல் இடி இடிக்கும்? வரப்போகும் ஆபத்துக்கு கட்டியம் கூறுகிறதோ? நாலா திசைகளிலும் இப்படி இருந்தால் எங்கே ஓடி ஒளிவது? கிருஷ்ணா, நீ தான் மேலே இப்படி எங்கும் கருப்பாக உன் தேஹ நிறத்தைக் காட்டி படர்ந்திருக்கிறாயா ?

विपुलकरकमिश्रैस्तोयधारानिपातै-
र्दिशिदिशि पशुपानां मण्डले दण्ड्यमाने ।
कुपितहरिकृतान्न: पाहि पाहीति तेषां
वचनमजित श्रृण्वन् मा बिभीतेत्यभाणी: ॥२॥

vipulakarakamishraistOya dhaaraa nipaataiH
dishi dishi pashupaanaaM maNDale daNDyamaane |
kupita hari kR^itaannaH paahi paahiiti teShaaM
vachanamajita shR^iNvan maa bibhiitetyabhaaNiiH || 2

விபுலகரகமிஶ்ரைஸ்தோயதா⁴ரானிபாதை-
ர்தி³ஶி தி³ஶி பஶுபானாம் மண்ட³லே த³ண்ட்³யமானே |
குபிதஹரிக்ருதான்ன꞉ பாஹி பாஹீதி தேஷாம்
வசனமஜித ஶ்ருண்வன்மா பி³பீ⁴தேத்யபா⁴ணீ꞉ || 63-2 ||

ஆலங்கட்டி மழை தெரியுமா. கல் வீசப்பட்டது போல் மேலே மழையோடு கல்லு கல்லாக மழைத் துளிகள் பெரிசாக விழும்.அனுபவித்ததுண்டா. மீன் தவளைகள் கூட மேகத்திலிருந்து மேலே விழும். மேகங்கள் வெடித்து ஜோ என்று மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. அடடா என்ன காரியம் செய்து விட்டோம், இந்திரனின் கோபத்துக்கு இப்படி வீணாக ஆளாகிவிட்டோமே. எப்படி இந்த சீற்றத்திலிருந்து தப்புவது?கோபர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். பகவானே எங்களைக் காப்பாற்று என்று வேண்டினார்கள். அவர்கள் உன்னை எங்கோ தேடி கூப்பிடுவது அருகிலேயே இருந்த உன் காதில் விழாமல் இருக்குமா கிருஷ்ணா? கூப்பிட்ட குரலுக்கு நீ ஓடிவருபவன் ஆயிற்றே. யாரும் பயப்படாதீர்கள் என்று பதிலளித்தாய்.

कुल इह खलु गोत्रो दैवतं गोत्रशत्रो-
र्विहतिमिह स रुन्ध्यात् को नु व: संशयोऽस्मिन् ।
इति सहसितवादी देव गोवर्द्धनाद्रिं
त्वरितमुदमुमूलो मूलतो बालदोर्भ्याम् ॥३॥

kula iha khalu gOtrO daivataM gOtrashatrOH
vihatimiha sa rundhyaat kO nu vaH samshayO(a)smin |
iti sahasita vaadii deva gOvardhanaadriM
tvaritamudamumuulO muulatO baaladOrbhyaam || 3

குல இஹ க²லு கோ³த்ரோ தை³வதம் கோ³த்ரஶத்ரோ-
ர்விஹதிமிஹ ஸ ருந்த்⁴யாத்கோ நு꞉ வ꞉ ஸம்ஶாயோ(அ)ஸ்மின் |
இதி ஸஹஸிதவாதீ³ தே³வ கோ³வர்த⁴னாத்³ரிம்
த்வரிதமுத³முமூலோ மூலதோ பா³லதோ³ர்ப்⁴யாம் || 63-3 ||

''ஏன் இப்படி பதட்டப்படுகிறீர்கள்? நம்மையும், நம் பசுக்களையும் ஆதரித்து, உணவளித்து வாழ்வளிக்கும் கோவர்தன மலை நம்மை கைவிட்டு விடுமா? இதல்லவோ நமது உண்மையான கடவுள்? ஆமாம், இது நிச்சயம் தேவேந்திரன் வேலை தான். சந்தேகமே இல்லை. வாருங்கள் என்னோடு'' என்று அவர்கள் எல்லோரையும் அழைத்துக்கொண்டு கோவர்தன கிரி அருகே சென்றாய். உன் இடது கரத்தின் சுண்டுவிரலால் அப்படியே கோவர்தன கிரியை அலாக்காக தூக்கி குடைபோல் பிடித்தாய்.

तदनु गिरिवरस्य प्रोद्धृतस्यास्य तावत्
सिकतिलमृदुदेशे दूरतो वारितापे ।
परिकरपरिमिश्रान् धेनुगोपानधस्ता-
दुपनिदधदधत्था हस्तपद्मेन शैलम् ॥४॥

tadanu girivarasya prOddhR^itasyaasya taavat
sikatilamR^idudeshe duuratO vaaritaape |
parikara parimishraan dhenugOpaanadhastaat
upanidadhadadhatthaa hastapadmena shailam ||4

தத³னு கி³ரிவரஸ்ய ப்ரோத்³த்⁴ருதஸ்யாஸ்ய தாவத்
ஸிகதிலம்ருது³தே³ஶே தூ³ரதோ வாரிதாபே |
பரிகரபரிமிஶ்ராந்தே⁴னுகோ³பானத⁴ஸ்தா-
து³பனித³த⁴த³த⁴த்தா² ஹஸ்தபத்³மேன ஶைலம் || 63-4 ||

''குருவாயூரா , உனது தாமரை இதழ் போன்ற மென்மையான கரங்களுக்கு இத்தனை வலிமையா? ஏதோ ஒரு புஷ்பத்தை தூக்கி உயர்த்திப் பிடிப்பதைப் போல் அல்லவா கோவர்தன கிரி உன் கரத்தில் சிறுவிரல் மேல் நின்றது.! கனமழை பெய்தாலும் அளவற்ற தாகத்தால் அத்தனை நீரையும் அந்த வ்ரஜ பூமி உறிஞ்சியது கூட உன் மாயமோ? மழையினால் எந்த பாதிப்பும் இல்லாமல் அனைத்து பசுக்கள், கன்றுகள் கோபர்கள் கோபியர்கள் மற்ற ஜீவராசிகள் எல்லாமே சௌக்யமாக உன் ''குடை நிழலில்'' நின்று மழையை வேடிக்கை பார்த்தன. மழையை வேடிக்கை பார்ப்பது நம் எல்லோருக்கும் சிறுவயதிலிருந்தே ஒரு அழகான விருப்பமான பொழுது போக்கு இல்லையா?

भवति विधृतशैले बालिकाभिर्वयस्यै-
रपि विहितविलासं केलिलापादिलोले ।
सविधमिलितधेनूरेकहस्तेन कण्डू-
यति सति पशुपालास्तोषमैषन्त सर्वे ॥५॥

vidhR^itashaile baalikaabhirvayasyaiH
api vihita vilaasaM keli laapaadi lOle |
savidha milita dhenuurekahastena kaNDuu -
yati sati pashupaalaastOShamaiShanta sarve || 5

ப⁴வதி வித்⁴ருதஶைலே பா³லிகாபி⁴ர்வயஸ்யை-
ரபி விஹிதவிலாஸம் கேலிலாபாதி³லோலே |
ஸவித⁴மிலிததே⁴னூரேகஹஸ்தேன கண்டூ³-
யதி ஸதி பஶுபாலாஸ்தோஷமைஷந்த ஸர்வே || 63-5 ||

''கிருஷ்ணா, நீ என்ன பேசாமலா மலையை தூக்கி தாங்கி பிடித்துக் கொண்டு நின்றாய் ? வழக்கம்போல் உன் வேடிக்கை பேச்சு எல்லோரையும் கவர்ந்ததே. சுவாரஸ்யமான விஷயங்களை சொல்வதில் உனக்கு ஈடு இணை யார்? கீதை ஒன்றே போதுமே. கோபர்களுக்கு ஆட்டம் பாட்டத் தோடு உன்னோடு இணைந்து அங்கே ஆனந்தமாக கோவர்தன மலைக்கு கீழே பொழுது கழிந்து கொண்டிருந்தது. கன்றுகள் ஆனந்தமாக உன் மேல் உரசிக்கொண்டு நின்றன. நாவால் நன்றியோடு நக்கின. இதெல்லாம் கண்ட கோபர்கள் மனம் உன்னை நன்றியோடு வாழ்த்தியது.

अतिमहान् गिरिरेष तु वामके
करसरोरुहि तं धरते चिरम् ।
किमिदमद्भुतमद्रिबलं न्विति
त्वदवलोकिभिराकथि गोपकै: ॥६॥

ati mahaan girireSha tu vaamake
karasarOruhi taM dharatechiram |
kimidamadbhuta madribalaM nviti
tvadavalOkibhiraakathi gOpakaiH || 6

அதிமஹான் கி³ரிரேஷ து வாமகே
கரஸரோருஹி தே த⁴ரதே சிரம் | [**தம் த⁴ரதே**]
கிமித³மத்³பு⁴தமத்³ரிப³லம் ந்விதி
த்வத³வலோகிபி⁴ராகதி² கோ³பகை꞉ || 63-6 ||

கோபர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து அதிசயித்தனர். ஆஹா, இந்த கிருஷ்ணன் எவ்வளவு சக்தி வாய்ந்தவன். இவ்வளவு பெரிய மலையை அனாயாசமாக தூக்கி நிறுத்தி ஏதோ தாமரைப் பூவை உயர்த்தி குடை போல் பிடிப்பதாக அல்லவோ காட்சி அளிக்கிறான். நமக்காக அவன் என்ன வெல்லாம் செய்கிறான். ஒன்று கிருஷ்ணன் பலசாலியாக இருக்கவேண்டும் அல்லது கோவர்தன கிரி தனது சக்தியெல்லாம் இழந்து எடையற்றதாக ஆகி இருக்க வேண்டும் எது உண்மை? என்று யோசித்தார்கள்.

अहह धार्ष्ट्यममुष्य वटोर्गिरिं
व्यथितबाहुरसाववरोपयेत् ।
इति हरिस्त्वयि बद्धविगर्हणो
दिवससप्तकमुग्रमवर्षयत् ॥७॥

ahaha dhaarShTyamamuShya vaTOrgiri
M vyathita baahurasaavavarOpayet |
iti haristvayi baddhavigarhaNO
divasasaptakamugramavarShayat || 7

அஹஹ தா⁴ர்ஷ்ட்யமமுஷ்ய வடோர்கி³ரிம்
வ்யதி²தபா³ஹுரஸாவவரோபயேத் |
இதி ஹரிஸ்த்வயி ப³த்³த⁴விக³ர்ஹணோ
தி³வஸஸப்தகமுக்³ரமவர்ஷயத் || 63-7 ||

தேவேந்திரன் ''ஹா ஹா'' என்று சிரித்தான். அந்த சின்ன யாதவப் பயல் எத்தனை நேரம் அந்த மலையை தூக்கிக் கொண்டு நிற்கமுடியும். கை துவண்டு போன பின் அல்லவோ இருக்கிறது வேடிக்கை., மலை கீழே விழும். அப்புறம் மழையிலிருந்து தப்ப முடியுமா அவர்களால். பார்த்து விடுவோம். ''மழையே, இன்னும் உக்ரமாக தொடர்ந்து பெய் '' என ஆணையிட்டான்.
ஏழுநாள் மழை ஜோ வென்று இடைவிடாமல் தொடர்ந்து பெய்தது.

अचलति त्वयि देव पदात् पदं
गलितसर्वजले च घनोत्करे ।
अपहृते मरुता मरुतां पति-
स्त्वदभिशङ्कितधी: समुपाद्रवत् ॥८॥

achalati tvayi deva padaatpadaM
galita sarvajale cha ghanOtkare |
apahR^ite marutaa marutaaM pati
stvadabhishankitadhiiH samupaadravat || 8

அசலதி த்வயி தே³வ பதா³த்பத³ம்
க³லிதஸர்வஜலே ச க⁴னோத்கரே |
அபஹ்ருதே மருதா மருதாம் பதி-
ஸ்த்வத³பி⁴ஶங்கிததீ⁴꞉ ஸமுபாத்³ரவத் || 63-8 ||

கிருஷ்ணா, நீ தந்திரமே உருவானவன். பனங்காட்டு நாரி சலசலப்புக்கு அஞ்சுமா? ஏழுநாள் அல்ல ஏழு வருஷமும் நீ அசையாமல் நிற்க கூடியவன் என்று இந்திரன் அறிவானா? மழை பெய்து சரக்கு தீர்ந்து போய் ஓய்ந்து விட்டது. காற்று வலுவற்ற மேகங்களை தூர துரத்தியது. தேவேந்திரன் திகைத்தான். உடல் நடுங்கியது. நெஞ்சு படபடத்தது. உன்னைக்கண்டு பயந்து ஓடினான்.

शममुपेयुषि वर्षभरे तदा
पशुपधेनुकुले च विनिर्गते ।
भुवि विभो समुपाहितभूधर:
प्रमुदितै: पशुपै: परिरेभिषे ॥९॥

shamamupeyuShi varShabhare tadaa
pashupadhenukule cha vinirgate |
bhuvi vibhO samupaahita bhuudharaH
pramuditaiH pashupaiH parirebhiShe || 9

ஶமமுபேயுஷி வர்ஷப⁴ரே ததா³
பஶுபதே⁴னுகுலே ச வினிர்க³தே |
பு⁴வி விபோ⁴ ஸமுபாஹிதபூ⁴த⁴ர꞉
ப்ரமுதி³தை꞉ பஶுபை꞉ பரிரேபி⁴ஷே || 63-9 ||

பொட்டு மழை, சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மழை நின்று வெயில் காய ஆரம்பித்தது. கோபர்களின் குடும்பங்கள், கன்று பசுக்களோடு வீடு திரும்பின. கோவர்தன கிரியை மெதுவாக அது நின்ற இடத்திலேயே இறக்கி விட்டாய். எல்லோரும் ஓடிவந்து உன்னைக் கட்டிக்கொண்டார்கள். வார்த்தைகள் சொல்ல முடியாததை சில சமயம் நமது கைகள் அணைத்துக் கொள்வதன் மூலம் வெளிப்படுத்தும் அல்லவா?

धरणिमेव पुरा धृतवानसि
क्षितिधरोद्धरणे तव क: श्रम: ।
इति नुतस्त्रिदशै: कमलापते
गुरुपुरालय पालय मां गदात् ॥१०॥

dharaNimeva puraa dhR^itavaanasi
kshitidharOddharaNe tava kaH shramaH |
iti nutasitradashaiH kamalaapate
gurupuraalaya paalaya maaM gadaat ||10

த⁴ரணிமேவ புரா த்⁴ருதவானஸி
க்ஷிதித⁴ரோத்³த⁴ரணே தவ க꞉ ஶ்ரம꞉ |
இதி நுதஸ்த்ரித³ஶை꞉ கமலாபதே
கு³ருபுராலய பாலய மாம் க³தா³த் || 63-10

இந்திரன் செயல், உன் அமைதியான போற்ற எதிர்ப்பு, நடந்த ஆச்சர்யமான செயல் அனைத்தையும் விண்ணிலிருந்து தேவர்களும் பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள். எவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு ! உன்னை யாரென்று தெரியுமே அவர்களுக்கு. ''தெய்வமே நீ முன்பொரு காலத்தில் வராஹனாக வந்து இந்த பூமியையே உருட்டி கடலுக்கடியிலிருந்து மேலே தூக்கிக் கொண்டுவந்தவன். இந்த பூமியில் உள்ள ஒரு சிறு மலையை தூக்குவதா உனக்கு ஸ்ரமம்? என்று போற்றி பாடினார்கள். எண்டே குருவாயூரப்பா, என் நோயையும் தூக்கி கடாசி விட்டு என்னையும் ரக்ஷிப்பாயா?