Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 15
15 கபிலரின் தாய் பெற்ற உபதேசம்.

मतिरिह गुणसक्ता बन्धकृत्तेष्वसक्ता
त्वमृतकृदुपरुन्धे भक्तियोगस्तु सक्तिम् ।
महदनुगमलभ्या भक्तिरेवात्र साध्या
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥१॥

matiriha guṇasaktā bandhakr̥ttēṣvasaktā
tvamr̥takr̥duparundhē bhaktiyōgastu saktim |
mahadanugamalabhyā bhaktirēvātra sādhyā
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-1 ||

மதிரிஹ கு₃ணஸக்தா ப₃ந்த₄க்ருத்தேஷ்வஸக்தா
த்வம்ருதக்ருது₃பருந்தே₄ ப₄க்தியோக₃ஸ்து ஸக்திம் |
மஹத₃நுக₃மலப்₄யா ப₄க்திரேவாத்ர ஸாத்₄யா
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 1||

கால் நடக்கமுடியாத நாராயண நம்பூதிரிக்கு எப்படி கபிலமுனி காலத்துக்குச் சென்று அங்கே அப்போது நடந்ததை விவரிக்க முடிகிறது. எல்லாம் நாராயண லீலை தான். மேலும் நம்பூதிரி நாராயணனுக்குச் சொல்வது போல் நமக்குச் சொல்வதை கேட்போம்.

''நாராயணா, நீ கபிலனாக அவதரித்து உன் தாய் தேவஹுதிக்கு என்ன சொன்னாய் என்று நினைவூட் டட்டுமா?

''உலக சுகத்தில் ஆர்வமாக ஈடுபடுபவனின் புத்தி மாயையில் அகப்பட்டுக்கொள்கிறது. அதில் சிக்காத புத்தி தான் அவனை வழி திருப்பி ஆத்மானுபவத்துக்கு கொண்டு சேர்க்கிறது. பக்தி மார்கத்தில் புத்தி திரும்பி விட்டால், உலக சுக துக்கங்களை அருகே அணுக விடாது. இதற்கு பெரிதும் உதவுவது இதேபோல் எண்ணம் கொண்ட பக்தர்களின் சத்சங்கம் தான்.'' மகான்களை அண்டி அவர்களை ஸேவிப்பது தான் சத்சங்கம்.

प्रकृतिमहदहङ्काराश्च मात्राश्च भूता-
न्यपि हृदपि दशाक्षी पूरुष: पञ्चविंश: ।
इति विदितविभागो मुच्यतेऽसौ प्रकृत्या
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥२॥

prakr̥timahadahaṅkārāśca mātrāśca bhūtā-
nyapi hr̥dapi daśākṣī pūruṣaḥ pañcaviṁśaḥ |
iti viditavibhāgō mucyatē:’sau prakr̥tyā
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-2 ||

ப்ரக்ருதிமஹத₃ஹங்காராஶ்ச மாத்ராஶ்ச பூ₄தா-
ந்யபி ஹ்ருத₃பி த₃ஶாக்ஷீ பூருஷ: பஞ்சவிம்ஶ: |
இதி விதி₃தவிபா₄கோ₃ முச்யதே(அ)ஸௌ ப்ரக்ருத்யா
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 2||

''அம்மா, மனிதனை ஆத்மானுபவம் பெற விடாமல் தடுப்பவை எவை தெரியுமா? சொல்கிறேன் எண்ணிக் கொள்; இயற்கை ஸ்வபாவம், புத்தி, அஹங்காரம், பஞ்ச கர்ம- ஞானேந்திரியங்கள், புலன்கள், மனம், போதாதா, இவை, ஒருவனை தடுமாறச் செய்ய?''

கிருஷ்ணா, உனது தாய் தேவஹுதி ஆனந்தமாக நீ சொல்வதை கேட்டு மகிழ்ந்தாள்.உன்னை மாதிரி ஒரு மகன் குருவாக உபதேசிக்க எத்தனை தாய்களுக்கு இப்படி ஒரு பாக்யம் கிட்டும்.?

प्रकृतिगतगुणौघैर्नाज्यते पूरुषोऽयं
यदि तु सजति तस्यां तत् गुणास्तं भजेरन् ।
मदनुभजनतत्त्वालोचनै: साऽप्यपेयात्
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥३॥

prakr̥tigataguṇaughairnājyatē pūruṣō:’yaṁ
yadi tu sajati tasyāṁ tadguṇāstaṁ bhajēran |
madanubhajanatattvālōcanaiḥ sāpyapēyāt
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-3 ||

ப்ரக்ருதிக₃தகு₃ணௌகை₄ர்நாஜ்யதே பூருஷோ(அ)யம்
யதி₃ து ஸஜதி தஸ்யாம் தத் கு₃ணாஸ்தம் ப₄ஜேரந் |
மத₃நுப₄ஜநதத்த்வாலோசநை: ஸா(அ)ப்யபேயாத்
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 3|

''அம்மா இதையும் தெரிந்து கொள் : ''ஆத்மா, இயற்கையால், உலகத்தால் பாதிக்க படாதது. அதாவது,
தேகத்தோடு சம்பந்தப்பட்டால் தான் அதன் பாதிப்பால் விளையும் பந்தங்கள் சேரும். ஆத்மா தேகத்தோடு ஒட்டாதது ''

विमलमतिरुपात्तैरासनाद्यैर्मदङ्गं
गरुडसमधिरूढं दिव्यभूषायुधाङ्कम् ।
रुचितुलिततमालं शीलयेतानुवेलं
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥४॥

vimalamatirupāttairāsanādyairmadaṅgaṁ
garuḍasamadhirūḍhaṁ divyabhūṣāyudhāṅkam |
rucitulitatamālaṁ śīlayētānuvēlaṁ
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-4 ||

விமலமதிருபாத்தைராஸநாத்₃யைர்மத₃ங்க₃ம்
க₃ருட₃ஸமதி₄ரூட₄ம் தி₃வ்யபூ₄ஷாயுதா₄ங்கம் |
ருசிதுலிததமாலம் ஶீலயேதாநுவேலம்
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 4||

நாராயணா, நீ உன் அம்மா தேவஹுதிக்கு சொன்னது எங்கள் காதுகளில் ரீங்காரம் செயகிறது அப்பனே:

''அம்மா, யோகாசனங்கள் மனதை புனிதப்படுத்தும், தியானம் ஒருமைப்படும் , அருவமான என்னை உருவமாக முதலில் பிடித்துக் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் நான் மனதில் எளிதாக பதிய கருட வாகனனனாக சங்கு சக்ர ரூபத்தில் பக்தர்களுக்கு சர்வாலங்காரங்களோடு காட்சி தருகிறேன்.பளிச்சென்று இருப்பது தானே கண்ணில் படுகிறது. மனதில் நிற்கிறது,ஹ்ருதயத்தில் பதிகிறது.

मम गुणगणलीलाकर्णनै: कीर्तनाद्यै-
र्मयि सुरसरिदोघप्रख्यचित्तानुवृत्ति: ।
भवति परमभक्ति: सा हि मृत्योर्विजेत्री
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥५॥

mama guṇagaṇalīlākarṇanaiḥ kīrtanādyaiḥ
mayi surasaridōghaprakhyacittānuvr̥ttiḥ |
bhavati paramabhaktiḥ sā hi mr̥tyōrvijētrī
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-5 ||

மம கு₃ணக₃ணலீலாகர்ணநை: கீர்தநாத்₃யை-
ர்மயி ஸுரஸரிதோ₃க₄ப்ரக்₂யசித்தாநுவ்ருத்தி: |
ப₄வதி பரமப₄க்தி: ஸா ஹி ம்ருத்யோர்விஜேத்ரீ
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 5||

''பக்தியை மனதில் செலுத்த ஹரி கதைகள்,சரித்திரங்கள், பாடல்கள் , ஸ்தோத்திரங்கள் இசை, நாடகம் நாட்யம் எல்லாம் பெரிதும் உதவுகிறது. அம்மா, அதற்காகதான் என்னுடைய பக்தர்கள் நாம சங்கீர்த்தனம், கல்யாண குண ப்ரவசனங்கள் உபன்யாசங்கள் சொல்கிறார்கள், பக்தர்கள் கேட்கிறார்கள். இதன் மூலம் மனம் ஆத்மானுபவத்தில் ஈடுபடுகிறது. ஜனன மரண பந்தம் விலகுகிறது.'' என்கிறார் கபிலர்.

குருவாயூரப்பா, நீ எவ்வளவு நன்றாக எங்களை புரிந்து வைத்திருக்கிறாய்.

अहह बहुलहिंसासञ्चितार्थै: कुटुम्बं
प्रतिदिनमनुपुष्णन् स्त्रीजितो बाललाली ।
विशति हि गृहसक्तो यातनां मय्यभक्त:
कपिलतनुरितित्वं देवहूत्यै न्यगादी: ॥६॥

ahaha bahulahiṁsāsañcitārthaiḥ kuṭuṁbaṁ
pratidinamanupuṣṇan strījitō bālalālī |
viśati hi gr̥hasaktō yātanāṁ mayyabhaktaḥ
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-6 ||

அஹஹ ப₃ஹுலஹிம்ஸாஸஞ்சிதார்தை₂: குடும்ப₃ம்
ப்ரதிதி₃நமநுபுஷ்ணந் ஸ்த்ரீஜிதோ பா₃லலாலீ |
விஶதி ஹி க்₃ருஹஸக்தோ யாதநாம் மய்யப₄க்த:
கபிலதநுரிதித்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 6||

''அம்மா, இந்த உலகத்தில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் என்ன செயகிறான் பார்த்தாயா? என் மீது பக்தி கொள்ள அவனுக்கு நேரமில்லை, புத்தி போகவில்லை.

பணம், என்று ஒன்றை அவன் சிருஷ்டித்து, அதைத் தேட தானும் கஷ்டப்பட்டு, பிறரையும் துன்புறுத்தி, அப்படிச் சேர்த்த பணத்தை சேமிக்க படாத பாடு பட்டு, இரவும் பகலும் தூக்கமின்றி, துக்கத்தில் பயத்தில் கலங்கி, அந்த பணத்தை தனது பிள்ளை மனைவி, குடும்பம் மட்டும் அனுபவிக்க சிரமப்பட்டு அவனை கடைசியில் நரகம் மட்டும் வா இத்தனை நாள் நீ என்னைத் தான் தேடினாய் என்று அழைக்கிறது.'' என்று தேவஹுதிக்கு சொல்கிறார் கபிலர்.
குருவாயூரப்பா, உன் விளக்கம் அற்புதமடா?

युवतिजठरखिन्नो जातबोधोऽप्यकाण्डे
प्रसवगलितबोध: पीडयोल्लङ्घ्य बाल्यम् ।
पुनरपि बत मुह्यत्येव तारुण्यकाले
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥७॥

yuvatijaṭharakhinnō jātabōdhō:’pyakāṇḍē
prasavagalitabōdhaḥ pīḍayōllaṅghya bālyam |
punarapi bata muhyatyēva tāruṇyakālē
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-7 ||

யுவதிஜட₂ரகி₂ந்நோ ஜாதபோ₃தோ₄(அ)ப்யகாண்டே₃
ப்ரஸவக₃லிதபோ₃த₄: பீட₃யோல்லங்க்₄ய பா₃ல்யம் |
புநரபி ப₃த முஹ்யத்யேவ தாருண்யகாலே
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 7||

''எல்லோருக்கும் ஒரே விதமாகத்தான் சகலமும் கொடுத்து பூவுலகுக்கு அனுப்புகிறேன். சிலர் தாயின் வயிற்றில் இருக்கும்போதே துன்பத்தை விலைக்கு வாங்குகிறார்கள்.சிலர் ஞானம் பெறுகிறார்கள். கஷ்டங்களை உலகத்தில் அனுபவித்த பிறகு தான் ஞானம் பிறக்கும் என்பது அல்ல வழி. கஷ்டங்களை அனுபவிக்காமலேயே அதை ஆரம்பத்திலிருந்து புரிந்து கொண்டே அதனிடமிருந்து விலக சுக துக்கங்கள் இரண்டுமே ஒன்றாக பாவிக்கப் படவேண்டும். சுகம் துக்கம், ரெண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
என்னப்பா உன் அறிவுரை அற்புதமப்பா.


पितृसुरगणयाजी धार्मिको यो गृहस्थ:
स च निपतति काले दक्षिणाध्वोपगामी ।
मयि निहितमकामं कर्म तूदक्पथार्थं
कपिल्तनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥८॥

pitr̥suragaṇayājī dhārmikō yō gr̥hasthaḥ
sa ca nipatati kālē dakṣiṇādhvōpagāmī |
mayi nihitamakāmaṁ karma tūdakpathārthaṁ
kapilatanuriti tvaṁ dēvahūtyai nyagādīḥ || 15-8 ||

பித்ரு ஸுரக₃ணயாஜீ தா₄ர்மிகோ யோ க்₃ருஹஸ்த₂:
ஸ ச நிபததி காலே த₃க்ஷிணாத்₄வோபகா₃மீ |
மயி நிஹிதமகாமம் கர்ம தூத₃க்பதா₂ர்த₂ம்
கபில்தநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 8||

''நமது ஊர்களில் தெருக்கள் நாலா திசைகளுக்கும் பாதையாக பல ஊர்களுக்கு செல்கிறது போல் வாழ்க்கை முடிந்ததும் விண்ணுலகத்தில் வடக்குப் பாதை தெற்கு பாதை என்று ரெண்டு இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும்போது எந்த ஜீவன் தனது முன்னோர்கள், பித்ருக்களுக்கு தனது கடமையை செய்தானோ, தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் ப்ரீதியாக யாக யஞங்கள் தான தர்மம் செயதானோ, அவன் தெற்குப்பாதை வழியாக விண்ணுலகம் சென்று தனது கர்மபலன் முழுதும் அனுபவித்த பின் பூமியில் மீண்டும் பிறவி எடுக்க வருகிறான். புதுக்கணக்கு தொடங்குகிறான். என்னையே ஆரம்பத்திலிருந்து மனதாலும் புத்தியாலும் நினைத்து வழிபட்டு மனதை மாயை அணுகாமல், நெருங்காமல் என்னைச் சரணடைந்தவன் வடக்கு பாதையில் ,உத்தராயணத்தில் என்னை அடைகிறான். மறு பிறவி இல்லை.

''எண்டே குருவாயூரா, வாத புரீஸ்வரா, அருமையடா உன் விளக்கம்'' என்று ஆனந்தப்படுகிறார் நாராயண நம்பூதிரி.


इति सुविदितवेद्यां देव हे देवहूतिं
कृतनुतिमनुगृह्य त्वं गतो योगिसङ्घै: ।
विमलमतिरथाऽसौ भक्तियोगेन मुक्ता
त्वमपि जनहितार्थं वर्तसे प्रागुदीच्याम् ॥९॥

iti suviditavēdyāṁ dēva hē dēvahūtiṁ
kr̥tanutimanugr̥hya tvaṁ gatō yōgisaṅghaiḥ |
vimalamatirathā:’sau bhaktiyōgēna muktā
tvamapi janahitārthaṁ vartasē prāgudīcyām || 15-9 ||

இதி ஸுவிதி₃தவேத்₃யாம் தே₃வ ஹே தே₃வஹூதிம்
க்ருதநுதிமநுக்₃ருஹ்ய த்வம் க₃தோ யோகி₃ஸங்கை₄: |
விமலமதிரதா₂(அ)ஸௌ ப₄க்தியோகே₃ந முக்தா
த்வமபி ஜநஹிதார்த₂ம் வர்தஸே ப்ராகு₃தீ₃ச்யாம் || 9||.

''அம்மா நான் சொன்னது எல்லாம் உனக்கு புரிந்ததா?'' என்று கேட்ட உனக்கு ''ஆமாம் என் செல்வமகனே'' என்று தலையாட்டினாள் தேவஹுதி, பிறகு நீ மற்ற ரிஷிகள் முனிவர்களுடன் சேர்ந்து சென்று விட்டாய். தேவஹுதி உன்னை வணங்கி தியானம் இருந்து உன்னை சரணடைந்து, வைகுண்டம் ஏகினாள் . உத்தராயணத்தில் வடக்கே நீயும் இன்றும் இருந்து எங்களை வழி நடத்த்துகிறாய் என் தெய்வமே என்று ஆனந்திக்கிறார் நம்பூதிரி.

परम किमु बहूक्त्या त्वत्पदाम्भोजभक्तिं
सकलभयविनेत्रीं सर्वकामोपनेत्रीम् ।
वदसि खलु दृढं त्वं तद्विधूयामयान् मे
गुरुपवनपुरेश त्वय्युपाधत्स्व भक्तिम् ॥१०॥

parama kimu bahūktyā tvatpadāṁbhōjabhaktiṁ
sakalabhayavinētrīṁ sarvakāmōpanētrīm |
vadasi khalu dr̥ḍhaṁ tvaṁ tadvidhūyāmayānmē
gurupavanapurēśa tvayyupādhatsva bhaktim || 15-10 |

பரம கிமு ப₃ஹூக்த்யா த்வத்பதா₃ம்போ₄ஜப₄க்திம்
ஸகலப₄யவிநேத்ரீம் ஸர்வகாமோபநேத்ரீம் |
வத₃ஸி க₂லு த்₃ருட₄ம் த்வம் தத்₃விதூ₄யாமயாந் மே
கு₃ருபவநபுரேஶ த்வய்யுபாத₄த்ஸ்வ ப₄க்திம் || 10||

''என்னப்பனே, குட்டி கிருஷ்ணா, எவ்வளவு வார்த்தைகள் சொல்லி என்ன பயன்? அவ்வளவையும் சொல்லி முடியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும் நீ சொன்ன சுருக்கு வழி ஒன்றே போதுமே.

''பேசாமல் என்னுடைய பாதத்தை பிடித்துக் கொண்டு பக்தியோடு என்னைச் சரணடை. சகல பயங்கள் , துன்பங்கள் எல்லாமே நீங்கி விடும். இன்பம் ஒன்றே எஞ்சி நிற்கும்''

''அப்பா குருவாயூரா , என் நோய்கள், என்னை விட்டு நீங்க அருள் புரிவாய். உன்னை மறவாதிருக்க அருள் தா.