Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 75
கம்ஸ மோக்ஷம் - 75

ப்ராத: ஸந்த்ரஸ்த போஜக்ஷி திபதி வசஸா ப்ரஸ்துதே மல்லதூர்யே
ஸங்கே ராஜ்ஞாம் ச மஞ்சா நபியயுஷி கதே நந்தகோ பேபி ஹர்ம்யம் |
கம்ஸே மே ஸெௌதாதிரூடே த்வமபி ஸஹபல ஸாநுகச்சாருவேஷோ
ரங்கத்வாரம் கதோபு குபிதகுவலயா பீட நாகாவலீடம் || 1 ||

1. மறுநாள் அதிகாலையில், பயந்த கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். தாங்களும் அழகிய அலங்காரங்களுடன் பலராமனுடனும், கோபர்களுடனும் மல்யுத்த களத்தை அடைந்தீர்கள். அங்கு, குவாலயாபீடம் என்ற யானை தங்களை வழிமறித்து நின்றது.

பாபிஷ்டாபேஹி மார்காத் த்ருதமிதி வசஸா நிஷ்ட்டுர க்ருத்த புத்தே
அம்பஷ்ட்டஸ்ய ப்ரணோதா ததிக ஜவஜுஷா ஹஸ்திநா க்ருஹ்யமாண: |
கேலிமுக்தோத கோபீகுச கலசசிர ஸ்பர்த்திநம் கும்பமஸ்ய
வ்யாஹத்யா லீயதாஸ் த்வம் சரணபுவி பநரு நிர்க்கதோ வல்குஹாஸி || 2 ||

2. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப்பணித்தீர்கள். கோபமடைந்தயானைப் பாகனான‘அம்பஷ்டன்’, யானையைத்தங்களைத் தாக்க ஏவினான். அந்த யானை, விரைந்து உம்மைப் பிடித்தது. அதனிடமிருந்து விடுவித்துக்கொண்டு அதன் மத்தகத்தில் அடித்தீர். கோபியரின் கலசம் போன்ற
கொங்கைகளுடன் போட்டியிடும் அந்த யானையின் மத்தகத்தை அடித்து, அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தீர்.

ஹஸ்த ப்ராப்யோப்யகம்யோ ஜடிதி முநிஜநஸ்யேவ தாவந் கஜேந்த்ரம்
க்ரீடந் நாபாத்ய பூமௌ பநரபிபதஸ் தஸ்ய தந்தம் ஸஜீவம் |
மூலாதுந்மூல்ய தந்மூலக மஹித மஹா மௌக்திகாந்யாத்ம மித்ரே
ப்ராதாஸ்த்வம் ஹாரமேபிர்லலிதவிரசிதம் ராதிகாயை திசேதி || 3 ||

3. யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தீர். உடனே அந்த யானையும் தங்களைத் தாக்க எதிரே வந்தது. அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தீர். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு என்று தங்கள் நண்பர் ஸ்ரீதாமனிடம் கூறினீர்.

க்ருஹ்ணாநம் தந்தமம்ஸே யுதமத ஹலிநா ரங்கமங்காவிசந்தம்
த்வாம் மங்கல்யாங்கபங்கீ ரபஸ ஹ்ருத லோசநா வீக்ஷ்ய லோகா : |
ஹம் ஹோ தந்யோ நு நந்தோ நஹி நஹி பசு பாலாங்கநா நோ யசோதா
நோ நோ தந்யேக்ஷணா: ஸ்மஸ்த்ரிஜகதி வயமேவேதி ஸர்வே சசம்ஸு || 4 ||

4. மக்களின் மனம் தங்கள் தேககாந்தியால் அபகரிக்கப்பட்டது. யானையின் தந்தத்தைத் தோளில் சுமந்துகொண்டு பலராமனுடன் மல்யுத்த களத்திற்குச் செல்லும் தங்களைக் கண்ட மக்கள், ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள்.

பூர்ணம் ப்ரஹ்மைவ ஸாக்ஷாந்நிரவதி பரமாநந்த ஸாந்த்ர ப்ரகாசம்
கோபேஷ் த்வம் வ்யலாஸீர் ந கலு பஹுஜநைஸ் தாவதாவேதிதோSபூ: |
த்ருஷ்ட்வா தத்வாம் ததேதம் ப்ரதம முபகதே புண்யகாலே ஜநௌகா
பூர்ணாநந்தா விபாபா: ஸரஸமபிஜகுஸ் த்வத்க்ருதாநி ஸ்ம்ருதாநி || 5 ||

5. பூர்ண ஸ்வரூபமான தாங்கள், கோபிகைகளுக்கு நேரில் காணத் தகுந்தவராய் விளங்கினீர்கள். ஆனால், அந்நகர மக்களோ தங்களைப் பரப்ரம்மமாக அறியவில்லை. முதன்முதலாய் தங்களைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். தங்களுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.

சாணூரோ மல்லவீரஸ் தத ந்ருபகிரா முஷ்டிகோ முஷ்டிசாலீ
த்வாம் ராமம் சாபிபேதே ஜடஜடிதி மிதோ முஷ்டிபாதாதிரூக்ஷம் |
உத்பாதாபாதநாகர்ஷண விவித ரணா ந்யாஸதாம் தத்ர சித்ரம்
ம்ருத்யோ . ப்ராகேவ மல்ல ப்ரபுரகம தயம் பூரி சோ பந்தமோ ஷாந் || 6 ||

6. கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் தங்களையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. சாணூரனுக்கு மரணத்திற்கு முன்பே பந்தமோக்ஷங்களிலிருந்து விடுதலை கிடைத்தது. அதாவது, தங்களிடம் பிடிபடுதலும், அதிலிருந்து விடுதலையும் கிடைத்தது. என்ன ஆச்சர்யம்!

ஹா திக்கஷ்டம் குமார் ஸுலலிதவபுஷௌ மல்லவீரௌ கடோரௌ
ந த்ரஷ்யாமோ வ்ரஜாமஸ் த்வரிதமிதி ஐநே பாஷமாணே ததா நீம் |
சாணூரம் தம் கரோத்ப்ராமண விகலதஸும் போதயாமாஸிதோர்வ்யாம்
பிஷ்டோSபூந் முஷ்டிகோSபி த்ருதமத ஹலிநா நஷ்டசிஷ்டைர் ததாவே || 7 ||

7. இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தீர்கள். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தீர்கள். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர்.

கம்ஸ: ஸம்வார்ய தூர்யம் கலமதிரவிதந் கார்யமார்யாந் பித்ரூம்ஸ்தா
நாஹந்தும் வ்யாப்த மூர்த்தேஸ்தவச ஸமசிஷ்த் தூரமுத்ஸாரணாய |
ருஷ்டோ துஷ்டோக்திபிஸ் த்வம் கருட இவ கிரிம் மஞ்ச மஞ்சந்நுதஞ்சத்
கட்க வ்யாவல்க துஸ்ஸங்க்ரஹமபி ச ஹடாத் ப்ராக்ரஹீ ரௌக்ரஸேநிம் || 8 ||

8. திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், தங்களை வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த தாங்கள், கருடன் மலைக்குச் செல்வதைப்போல், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கிப் பாய்ந்தீர். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனைப் வலுவாகப் பிடித்தீர்கள்.

ஸத்யோ நிஷ்பிஷ்டஸந்திம் புவி நரபதி மாபாத்ய தஸ்யோ பரிஷ்டாத்
த்வய்யாபாத்யே ததைவ த்வதுபரி பதிதா நாகிநாம் புஷ்ப வ்ருஷ்டி: |
கிம் கிம் ப்ரூமஸ் ததாநீம் ஸததமபி பியா த்வத்கதாத்மா ஸ பேஜே
ஸாயுஜ்யம் த்வத் வதோத்தா பரம பரமியம் வாஸநா காலநேமே : || 9 ||

9. அவனுடைய அங்கங்களை நொறுக்கி, பூமியில் தள்ளி, அவன் மேல் பாய்ந்து குதித்தீர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் தங்களையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான். பூர்வ ஜன்மத்தில் காலநேமி என்ற அசுரனாக இருந்தபோது தாங்கள் அவனைக் கொன்றீர்கள். கம்ஸனாகப் பிறந்த பின்னும் எப்போதும் தங்களையே நினைத்துக் கொண்டிருந்ததாலேயே, இவ்வாறு முக்தி அடைந்தான்.

தத்ப்ராத்ரூந் அஷ்ட பிஷ்ட்வா த்ருதமத பிதரௌ ஸந்நமந்நுக்ரஸேநம்
க்ருத்வா ராஜாந முச்சைர் யதுகுல மகிலம் மோதயந் காமதாநை |:
பக்தாநாமுத்தமம் சோத்தவ மமரகுரோ ராப்தநீதிம் ஸகாயம்
லப்த்வா துஷ்டோ நகர்யாம் பவனபுரபதே ருந்தி மே ஸர்வரோகாந் || 10 ||

10. பிறகு, தாங்கள் கம்ஸனுடைய எட்டு சகோதரர்களையும் கொன்றீர்கள். தங்கள் பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தீர்கள். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினீர்கள். யாதவ குலத்தினர் மிக்க மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்த தாங்கள் என் எல்லா நோய்களையும் போக்கி அருள வேண்டும்.