Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 50
50. மரணம் தேடிய ரெண்டு ராக்ஷஸர்கள்.

பிருந்தாவனத்துக்கு கிருஷ்ணன் உல்லாசம் தேடி வரவில்லை என்பது கவனிக்கத் தக்கது. கண்ணன் கர்ம வீரன். கடமையைப் புரிய வந்தவன். இதோ பிருந்தாவனத்துக்கு கிருஷ்ணன் வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக ரெண்டு ராக்ஷஸர்கள் அங்கே அவனைத் தேடி வந்து தலை நீட்டி இருக்கிறார்கள். பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கரங்களால் அவன் கையால் மோக்ஷம் பெற்ற பாக்கியசாலிகள் அவர்கள்.

तरलमधुकृत् वृन्दे वृन्दावनेऽथ मनोहरे
पशुपशिशुभि: साकं वत्सानुपालनलोलुप: ।
हलधरसखो देव श्रीमन् विचेरिथ धारयन्
गवलमुरलीवेत्रं नेत्राभिरामतनुद्युति: ॥१॥

Tharala madhukR^id bR^inde bR^indaavane(a)tha μανοηαρε
pashupa shishubhiH saakaM vatsaanupaalana lOlupaH |
haladharasakhO deva shriiman vicheritha δηααραυαν
gavala muralii vetraM netraabhiraama tanu dyutiH || 1

தரலமது⁴க்ருத்³வ்ருந்தே³ வ்ருந்தா³வனே(அ)த² மனோஹரே
பஶுபஶிஶுபி⁴ஸ்ஸாகம் வத்ஸானுபாலனலோலுப꞉ |
ஹலத⁴ரஸகோ² தே³வ ஶ்ரீமன் விசேரித² தா⁴ரயன்
க³வலமுரலீவேத்ரம் நேத்ராபி⁴ராமதனுத்³யுதி꞉ || 50-1 ||

''ப்ரபோ, வாதபுரீஸ்வரா, பிருந்தாவனத்தில் ஆனந்தமாக பலராமனோடும் மற்ற சிறுவர்களோடும் சுற்ற நீ கிளம்பிவிட்டாய். எல்லோர் கண்களும் உன் மீதே இருக்க என்ன தான் காந்த சக்தி உன்னிடம் இருக்கிறதோ?

இன்றும் என் போன்ற எத்தனையோ பேர் மனதை கொள்ளை கொண்டவனாக இருக்கிறாயே. பிருந்தாவனத்தில் தேன் பருக அலையும் வண்டுகள் ரொம்ப ஜாஸ்தி. உன் பிராண ஸ்நேகிதர் களான பசுங்கன்றுகளுடன் விளையாடிக்கொண்டே ஊதல், புல்லாங்குழல், மூங்கில் குச்சி சகிதம் அவற்றுக்கு மேய்ச்சல் காட்ட, நீர் பருகவிட, நீ அருகில் இருக்கிறாய் என்ற பரம சந்தோஷம் அந்த பசுக்களுக்கும் கன்றுகளுக்கும்.

विहितजगतीरक्षं लक्ष्मीकराम्बुजलालितं
ददति चरणद्वन्द्वं वृन्दावने त्वयि पावने ।
किमिव न बभौ सम्पत्सम्पूरितं तरुवल्लरी-
सलिलधरणीगोत्रक्षेत्रादिकं कमलापते ॥२॥

vihita jagatii rakshaM lakshmiikaraambuja λααλιταμ
dadati charaNadvandvaM bR^indaavane tvayi paavane |
kimiva na babhau sampatsampuuritaM ταρυβαλλαριη
salila dharaNii gOtra kshetraadikaM kamalaapate || 2

விஹிதஜக³தீரக்ஷம் லக்ஷ்மீகராம்பு³ஜலாலிதம்
த³த³தி சரணத்³வந்த்³வம் வ்ருந்தா³வனே த்வயி பாவனே |
கிமிவ ந ப³பௌ⁴ ஸம்பத்ஸம்பூரிதம் தருவல்லரீ-
ஸலிலத⁴ரணீகோ³த்ரக்ஷேத்ராதி³கம் கமலாபதே || 50-2 ||

''பரமாத்மா, லக்ஷ்மிநாதா, எப்படி சொல்வது இந்த அதிசயத்தை? உலகளந்தது , ஸ்ரீ மஹா லக்ஷ்மியே வருடி கண்ணில் ஒற்றிக்கொள்வது, கோடானுகோடி பக்தர்கள் மனதில் உறைவது, அப்படிப்பட்ட உன் திருவடிகள் அந்த வறண்ட பிருந்தாவனத்தில் பட்டதும் அங்கு இயற்கை வளம் நிறைந்து விட்டது. எங்கும் செழுமை. செடிகள் வளர்ந்தன, கொடிகள் படர்ந்தன, மரங்கள் உயர்ந்தன, பூக்கள் செறிந்தன. மலைகள் நிமிர்ந்தன, வயல்கள் பச்சைப் பசேலென கண்ணுக் கெட்டியதூரம் பசுமை காட்டின .

विलसदुलपे कान्तारान्ते समीरणशीतले
विपुलयमुनातीरे गोवर्धनाचलमूर्धसु ।
ललितमुरलीनाद: सञ्चारयन् खलु वात्सकं
क्वचन दिवसे दैत्यं वत्साकृतिं त्वमुदैक्षथा: ॥३॥

vilasadulape kaantaaraante samiiraNa σηιιταλε
vipula yamunaatiire gOvardhanaachala muurdhasu |
lalitamuraliinaadaH sanchaarayan khalu βαατσακαμ
kvachana divase daityaM vatsaakR^itiM tvamudaikshathaaH || 3

விலஸது³லபே காந்தாராந்தே ஸமீரணஶீதலே
விபுலயமுனாதீரே கோ³வர்த⁴னாசலமூர்த⁴ஸு |
லலிதமுரலீனாத³ஸ்ஸஞ்சாரயன்க²லு வாத்ஸகம்
க்வசன தி³வஸே தை³த்யம் வத்ஸாக்ருதிம் த்வமுதை³க்ஷதா²꞉ || 50-3 ||

பிருந்தாவன பூமி ஒரு அற்புத லோகமாகவே மாறிவிட்டது. பசும் புல் காலுக்கு மெத்தையாக எங்கும் வரவேற்றது. யமுனை புதுப் பொலிவு பெற்றாள். குளிர்ந்த இனிய மெல்லிய சுகமான தென்றல் அந்த இடத்தில் எப்போதுமே வீசிக் கொண்டிருந்தது. கோவர்தன மலை மீது கன்றுக்குட்டிகள் தாவி ஏறின. அங்கே தான் நீ, ஒரு அசுரனை, எதிர்பார்த்தபடியே, அடையாளம் கண்டுகொண்டுவிட்டாய். எவ்வளவு கெட்டிக்காரன் பார் அந்த அசுரன். உனது கன்றுக்குட்டிகளில் ஒன்றாக உருவம் கொண்டு உன்னை ஏமாற்றி அவற்றுக்கிடையே வந்து கலந்து கொண்டு உலவி, மெதுவாக உன்னை நெருங்கினான்.

रभसविलसत्पुच्छं विच्छायतोऽस्य विलोकयन्
किमपि वलितस्कन्धं रन्ध्रप्रतीक्षमुदीक्षितम् ।
तमथ चरणे बिभ्रद्विभ्रामयन् मुहुरुच्चकै:
कुहचन महावृक्षे चिक्षेपिथ क्षतजीवितम् ॥४॥

rabhasa vilasatpuchChanvichChaayatO(a)sya βιλοκαυαν
kimapi valitaskandhaM randhrapratiiksha mudiikshitam |
tamatha charaNe vibhradvibhraamayan μυηυρυχχακαιη
kuhachana mahaavR^ikshe chikshepitha kshatajiivitam ||4

ரப⁴ஸவிலஸத்புச்ச²ம் விச்சா²யதோ(அ)ஸ்ய விலோகயன்
கிமபி வலிதஸ்கந்த⁴ம் ரந்த்⁴ரப்ரதீக்ஷமுதீ³க்ஷிதம் |
தமத² சரணே பி³ப்⁴ரத்³விப்⁴ராமயன்முஹுருச்சகை꞉
குஹசன மஹாவ்ருக்ஷே சிக்ஷேபித² க்ஷதஜீவிதம் || 50-4 ||

வாதபுரீசா, மேலே சொல்கிறேன் கேள்:
வாலை முறுக்கிக்கொண்டு உயர்த்தினான் அந்த அசுரன். வேகமாக அவன் வால் அசைந்த திலிருந்தே அவன் உனது கன்றுக்குட்டிகளை சேர்ந்தவன் அல்ல, அவன் எண்ணம் என்ன என்று நீ புரிந்து கொண்டாய். அவன் கண் பார்வையில் ஒரு கோபம், பழிவாங்கும் உணர்ச்சி தெரிந்தது. தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டே இருந்தான். ஒன்றுமறியாதவன் போல் நீ மெதுவாக அவனருகே சென்றாய். உன்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான் அவன். நீயும் அவனை புரிந்துகொண்டாய். விளையாடுவது போல் அவன் அருகே சென்று அவன் பின்னங்கால்கள் இரண்டும் பிடித்து தூக்கினாய், மேலே தூக்கி வேகமாக சுழற்றினாய். அவனுக்கு தலை சுற்றியது. கண் இருண்டது . நீ அவனை பலமாக பிடித்து வேகமாக சுற்றியதில் மூச்சு முட்டியது .திணறினான் , திமிறினான். உன்னிடமிருந்து விடுபட என்னவெல்லாமோ செய்து பார்த்தான். எல்லாமே தோல்வியில் முடிந்து, வசமாக ஏமாந்து போய் உன்னிடத்தில் சிக்கிவிட்டான். வேறு வழியின்றி மாண்டு போனான். அவன் உடலை ஒரு மரத்தின் மீது வீசினாய்.

निपतति महादैत्ये जात्या दुरात्मनि तत्क्षणं
निपतनजवक्षुण्णक्षोणीरुहक्षतकानने ।
दिवि परिमिलत् वृन्दा वृन्दारका: कुसुमोत्करै:
शिरसि भवतो हर्षाद्वर्षन्ति नाम तदा हरे ॥५॥

nipatati mahaadaitye jaatyaa duraatmani τατξηαναμ
nipatanajavakshuNNa kshONiiruha kshata kaanane |
divi parimilad bR^indaa bR^indaarakaaH κυσυμοτκαραιη
shirasi bhavatO harShaadvarShanti naama tadaa hare || 5

நிபததி மஹாதை³த்யே ஜாத்யா து³ராத்மனி தத்க்ஷணம்
நிபதனஜவக்ஷுண்ணக்ஷோணீருஹக்ஷதகானநே |
தி³வி பரமிலத்³வ்ருந்தா³ வ்ருந்தா³ரகா꞉ குஸுமோத்கரை꞉
ஶிரஸி ப⁴வதோ ஹர்ஷாத்³வர்ஷந்தி நாம ததா³ ஹரே || 50-5 ||

மஹா விஷ்ணுவே, பரந்தாமா, கொடிய அந்த வத்ஸாசுரன், அது தான் நாம் அறியும் அவன் பெயர், கன்றுக் குட்டி ராக்ஷஸன். அவனே போனபிறகு அவன் இயற் பெயர் தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? அவனது பருத்த உடல் விழுந்த மரங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்தன. அழகான பிரிந்தாவனத்துக்கு திருஷ்டி போல் இந்தக்காட்சி அமைந்தது. வானத்திலிருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்து உன் மஹிமையை போற்றி வணங்கினார்கள்.

सुरभिलतमा मूर्धन्यूर्ध्वं कुत: कुसुमावली
निपतति तवेत्युक्तो बालै: सहेलमुदैरय: ।
झटिति दनुजक्षेपेणोर्ध्वं गतस्तरुमण्डलात्
कुसुमनिकर: सोऽयं नूनं समेति शनैरिति ॥६॥

surabhilatamaa muurdhanyuurdhvaM kutaH κυσυμααβαλιη
nipatati tavetyuktO baalaiH sahela mudairayaH |
jhaTiti danujakshepeNOrdhvaM γατασταρυμανδαλαατ
kusumanikaraH sO(a)yaM nuunaM sameti shanairiti || 6

ஸுரபி⁴லதமா மூர்த⁴ன்யூர்த்⁴வம் குத꞉ குஸுமாவலீ
நிபததி தவேத்யுக்தோ பா³லை꞉ ஸஹேலமுதை³ரய꞉ |
ஜ²டிதி த³னுஜக்ஷேபேணோர்த்⁴வம் க³தஸ்தருமண்ட³லாத்
குஸுமனிகரஸ்ஸோ(அ)யம் நூனம் ஸமேதி ஶனைரிதி || 50-6 ||

பாவம் , ஒன்றுமறியாச் சிறுவர்கள் உனது அந்த யாதவ குல நண்பர்கள். வானத்திலிருந்து மலர் மழை பொழிந்ததும் ஆச்சர்யம் மேலிட ''டேய் கிருஷ்ணா, எப்படிடா இவ்வளவு வாசனையாக அழகான பெரிய பூக்கள் எல்லாம் மேலே இருந்து உன் மேல் கொட்டுகிறது? என்று கேட்டார்கள்.

நீ எப்படிப்பட்ட ஜக ஜாலன்..''அதெல்லாம் ஒன்று மில்லேடா, அந்த ராக்ஷஸ கன்றுக்குட்டியை தூக்க முடியாமல் தூக்கி மேலே கடாசினேனில்லையா, அது மரத்தின் மேலே பட்டு மரக்கிளைகளை ஆட்டி அசைத்து அங்கிருந்து பூக்கள் கீழே விழுந்தது. அவ்வளவு தான்'' என்று பட்டென்று பதில் சொன்னாய்.

क्वचन दिवसे भूयो भूयस्तरे परुषातपे
तपनतनयापाथ: पातुं गता भवदादय: ।
चलितगरुतं प्रेक्षामासुर्बकं खलु विस्म्रृतं
क्षितिधरगरुच्छेदे कैलासशैलमिवापरम् ॥७

kvachana divase bhuuyO bhuuyastare παρυσηααταπε
tapanatanayaapaathaH paatuM gataa bhavadaadayaH |
chalitagarutaM prekshaamaasurbakaM khalu vismR^ιταμ
kshitidhara garuchChede kailaasa shailamivaaparam || 7

க்வசன தி³வஸே பூ⁴யோ பூ⁴யஸ்தரே பருஷாதபே
தபனதனயாபாத²꞉ பாதும் க³தா ப⁴வதா³த³ய꞉ |
சலிதக³ருதம் ப்ரேக்ஷாமாஸுர்ப³கம் க²லு விஸ்ம்ருதம்
க்ஷிதித⁴ரக³ருச்சே²தே³ கைலாஸஶைலமிவாபரம் || 50-7 ||

பிருந்தாவனத்தில் நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருந்தன. ஒரு நாள், கடும் வெயில், சூரியன் சுள்ளென்று எரிந்தான். நீ யோசித்தாய். நேரம் வந்து விட்டது அடுத்த வேலைக்கு என்று தெரிந்துவிட்டது. உன் நண்பர்களை அழைத்தாய். ''வாங்கோடா, எல்லோரும் காளிந்தி நதி சில்லென்று இருக்கும். அதில் தண்ணீர் குடித்துவிட்டு விளையாடலாம் என்றாய் '' ஆஹா ரொம்ப சுகமாக இருக்கும் என்று அவர்களும் உன்னோடு கிளம்பி விட்டார்கள். அங்கே ஒரு பெரிய நாரை நின்றுகொண்டிருந்தது.

ஆஹா அதோ பாருங்கடா எவ்வளவு பெரிய நாரை ஒன்று மலைமாதிரி நிற்கிறது. எங்கிருந்து இது வந்தது. இது வரை இவ்வளவு பெரிசு பார்த்ததில்லையே'' என்றான் ஒருவன். பெரிய இறகுகளை விரித்தது. அதன் ரெண்டு இறக்கைகளையும் அது அசைத்தது மனதில் பயத்தை வேறு உண்டாக்கியது. வாயைப் பிளந்து சிறுவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

पिबति स लिलं गोपव्राते भवन्तमभिद्रुत:
स किल निगिलन्नग्निप्रख्यं पुनर्द्रुतमुद्वमन् ।
दलयितुमगात्त्रोट्या: कोट्या तदाऽऽशु भवान् विभो
खलजनभिदाचुञ्चुश्चञ्चू प्रगृह्य ददार तम् ॥८॥

pibati salilaM gOpavraate βηαβανταμαβηιδρυταη
sa kila nigilannagni prakhyaM punardrutamudvaman |
dalayitumagaattrOTyaaH kOTyaa tadaa(a)(a)shubhavaan βιβχο
khalajana bhidaa chunchushchanchuu pragR^ihya dadaara tam || 8

பிப³தி ஸலிலம் கோ³பவ்ராதே ப⁴வந்தமபி⁴த்³ருத꞉
ஸ கில நிகி³லன்னக்³னிப்ரக்²யம் புனர்த்³ருதமுத்³வமன் |
த³லயிதுமகா³த்த்ரோட்யா꞉ கோட்யா ததா³ து ப⁴வான்விபோ⁴
க²லஜனபி⁴தா³ சுஞ்சுஶ்சஞ்சூ ப்ரக்³ருஹ்ய த³தா³ர தம் || 50-8 ||

அதன் அருகில் சென்று தொந்தரவு செய்து அதன் கோபத்தை கிளறினால் கூரிய வாள் போன்ற அலகினால் நிச்சயம் கொன்றுவிடும். ஆகவே வெகு தூரம் சென்று காளிந்தியில் இறங்கி நீர் பருகினார்கள். அவர்கள் எல்லோரும் கிருஷ்ணன் உள்பட நதியில் இறங்கி நீர் குடிப்பதை நாரை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு வேகமாக கிருஷ்ணா, உன்னை குறிவைத்து ஓடிவந்தது. கண்மூடி கண் திறக்கும் நொடி நேரத்தில் கிருஷ்ணா உன்னை அப்படியே பெரிய வாயை திறந்து விழுங்கிவிட்டது.

நீ என்ன மாயம் செய்தாயோ கிருஷ்ணா, அடுத்த வினாடியே உன்னை கக்கி வெளியே துப்பியது. நெருப்பை விழுங்கியது போல் நீ அதன் வாயை சுட்டெரித்துவிட்டாயோ? அளவற்ற கோபத்தோடு அந்த நாரை தனது கூரிய அலகுகளை விரித்து உன்னை ஈட்டியால் குத்தி பிளப்பது போல் தாக்கியது. அதை எதிர்ப்பார்த்தவன் அல்லவா நீ. உன் பலம் அதற்கு தெரியுமா? திறந்த வாயோடு உன்னை நெருங்கிய அந்த நாரையின் வாயின் மேல் பகுதி கீழ் பகுதி ரெண்டையும் இரு கைகளால் பலமாக பிடித்துக் கொண்டாய். வேகமாக அதன வாயை அளவுக்கு மீறி அகட்டினாய். வாய் பிளந்தது. சக்தி அனைத்தும் இழந்தது. தாங்க முடியாத வலியோடு அந்த நாரை சுருண்டு விழுந்தது. உயிர் பிரிந்தது.

सपदि सहजां सन्द्रष्टुं वा मृतां खलु पूतना-
मनुजमघमप्यग्रे गत्वा प्रतीक्षितुमेव वा ।
शमननिलयं याते तस्मिन् बके सुमनोगणे
किरति सुमनोवृन्दं वृन्दावनात् गृहमैयथा: ॥९॥

sapadi sahajaaM sandraShTuM vaa mR^itaaM khalu πυυταναα
manujamaghamapyagre gatvaa pratiikshitumeva vaa |
shamana nilayaM yaate tasmin bake sumanO γάνε
kirati sumanObR^indaM bR^indaavanaad gR^ihamaiyathaaH || 9

ஸபதி³ ஸஹஜாம் ஸந்த்³ரஷ்டும் வா ம்ருதாம் க²லு பூதனா-
மனுஜமக⁴மப்யக்³ரே க³த்வா ப்ரதீக்ஷிதுமேவ வா |
ஶமனநிலயம் யாதே தஸ்மின்ப³கே ஸுமனோக³ணே
கிரதி ஸுமனோவ்ருந்த³ம் வ்ருந்தா³வனாத்³க்³ருஹமையதா²꞉ || 50-9 ||

அந்த நாரை வேறு யாருமில்லை, கம்சன் ராஜ்யத்தில் அவனால் அனுப்பட்ட ஒரு கொடிய ராக்ஷஸன். அவன் சகோதரி தான் முதலில் உன்னிடம் பலியான பூதனை. அவளை நீ கொன்றதை பழிவாங்க தான் இந்த ராக்ஷஸன் பகன் (மஹா பாரதத்தில் வரும் பீமனால் கொல்லப்பட்ட பகாசுரன் அல்ல ) bakan. அக்காவைத் தேடி எமனுலகம் போய்ச் சேர்ந்தான். அப்புறம் என்ன? வழக்கம் போலவே தேவர்கள் விண்ணிலிருந்து மலர் மழை பொழிந்தார்கள். நீ ஒன்றும் நடக்காதது போல் மற்ற சிறுவர்களோடு மாலை வீடு திரும்பினாய்.

ललितमुरलीनादं दूरान्निशम्य वधूजनै-
स्त्वरितमुपगम्यारादारूढमोदमुदीक्षित: ।
जनितजननीनन्दानन्द: समीरणमन्दिर-
प्रथितवसते शौरे दूरीकुरुष्व ममामयान् ॥१०॥

lalita muraliinaadaM δυυρααννισηαμυ vadhuujanaiH
tvaritamupagamyaaraadaaruuDhamOdamudiikshitaH |
janitajananiinandaanandaH samiiraNamandiraprathitavasate
shaure duuriikuruShva mamaamayaan ||10

லலிதமுரலீனாத³ம் தூ³ரான்னிஶம்ய வதூ⁴ஜனை-
ஸ்த்வரிதமுபக³ம்யாராதா³ரூட⁴மோத³முதீ³க்ஷித꞉ |
ஜனிதஜனநீனந்தா³னந்த³ஸ்ஸமீரணமந்தி³ர-
ப்ரதி²தவஸதே ஶௌரே தூ³ரீகுருஷ்வ மமாமயான் || 50-10 ||

விஷயம் எப்போதும் எங்கும் எவ்வளவு சீக்கிரம் கசிகிறது!. யாதவ சிறுவர்கள் மூச்சு விடாமல் அதிசயத்தோடு அன்றாடம் நீ நிகழ்த்தும் சாகசங்களை ஒன்று விடாமல் வீட்டில் போய் சொல்லாமலா இருப்பார்கள்? சின்ன ஊரான பிருந்தாவனத்தில் அந்த செய்திகள் கண்ணும் காதும் அதிகம் கொண்டு பரவாதா? நந்தகோபன் யசோதையும் வாய் பிளந்து தமது செல்வக்குமரன் கிருஷ்ணனின் பிரதாபங்களை ஆனந்தமாகக் கேட்டார்கள். ஏதோ ஒரு தெய்வ சக்தி உன்னை எப்போதும் தொடர்ந்து உன் கூடவே இருந்து கொண்டு காத்து வருகிறது என்று மட்டும் அவர்களுக்கு நம்பிக்கை. நீ யாரென்று அவர்களுக்கு தெரியாதே.

இப்போதெல்லாம் நீ ஒரு புல்லாங்குழல் வித்வானாகி விட்டாய். காட்டிலிருந்து ஒரு மூங்கிலைத் தேர்வு செய்து வெட்டி, அதில் துளை போட்டு அழகாக வாசிக்கிறாய். என்னென்னவோ சொல்லத் தெரியாத ஆனந்த ராகங்கள், செவிக்கு அமிர்தமாக பொழிந்து தள்ளுகிறாய். கேட்கும் பசுக்கள், கன்றுகள், மயில்கள் , பறவைகள், மரங்கள் செடி கொடிகள் கூட தலை சாய்த்து தம்மை மறந்து ஆடுகிறதே. நீ தெற்கே வந்து இந்த குருவாயூரில் ஆனந்தமாக குடிகொண்டுவிட்டாயே. என் கஷ்டங்களையும் போக்கி என்னை வாழவிடு எண்டே குருவாயூரப்பா.''