14. கபில அவதாரம்
समनुस्मृततावकाङ्घ्रियुग्म:
स मनु: पङ्कजसम्भवाङ्गजन्मा ।
निजमन्तरमन्तरायहीनं
चरितं ते कथयन् सुखं निनाय ॥१॥
samanusmr̥tatāvakāṅghriyugmaḥ
sa manuḥ paṅkajasaṁbhavāṅgajanmā |
nijamantaramantarāyahīnaṁ
caritaṁ tē kathayansukhaṁ nināya || 14-1 ||
ஸமநுஸ்ம்ருததாவகாங்க்₄ரியுக்₃ம:
ஸ மநு: பங்கஜஸம்ப₄வாங்க₃ஜந்மா |
நிஜமந்தரமந்தராயஹீநம்
சரிதம் தே கத₂யந் ஸுக₂ம் நிநாய || 1||
நாராயணீயம் ஒரு சமுத்திரம். அதில் இல்லாத விஷயங்களே இல்லை எனலாம். முன்பே மன்வந்தரம், கல்பம்,யுகம் எல்லாம் என்ன என்று அறிந்தோம். மனுவில் இருந்து வந்தவன் தான் மனுஷன் என்றும் அறிந்தோம். முதல் மனு ஸ்வயம்பு மனு என்றும் அறிந்தோம். பூமியை ஹிரண்யாக்ஷன் கொண்டு சென்றபின் எப்படி ஸ்ரிஷ்டிப்பது பூமியில்லாமல்? ஜீவன்களை உடலோடு எங்கே அமைப்பது? என்ற கவலை பிரம்மாவுக்கும் ஸ்வயம்பு மனுவுக்கு வந்தவுடன் நாராயணனைப் பிரார்த்தித்தார்கள். நாராயணன் ஒரு வராஹமாக அவதரித்து கடலில் மூழ்கி பூமியைக் கரை சேர்த்தார். தடுத்த ஹிரண்யாக்ஷன் வதம் செய்யப் பட்டான் அல்லவா? ஸ்வயம்பு மனு நாராயணனை நன்றியோடு வணங்கி தனக்கு இட்ட பணியை இனிதே நிறைவேற்றி அவரது மன்வந்தர காலம் முடிந்தது என்று நான் சொல்லும்போது பல லக்ஷம் வருஷங்கள் நமது கணக்கில் என்று அர்த்தம்.
समये खलु तत्र कर्दमाख्यो
द्रुहिणच्छायभवस्तदीयवाचा ।
धृतसर्गरसो निसर्गरम्यं
भगवंस्त्वामयुतं समा: सिषेवे ॥२॥
samayē khalu tatra kardamākhyō
druhiṇacchāyabhavastadīyavācā |
dhr̥tasargarasō nisargaramyaṁ
bhagavaṁstvāmayutaṁ samāḥ siṣēvē || 14-2 ||
ஸமயே க₂லு தத்ர கர்த₃மாக்₂யோ
த்₃ருஹிணச்சா₂யப₄வஸ்ததீ₃யவாசா |
த்₄ருதஸர்க₃ரஸோ நிஸர்க₃ரம்யம்
ப₄க₃வம்ஸ்த்வாமயுதம் ஸமா: ஸிஷேவே || 2||
ப்ரம்மாவின் சிருஷ்டியில் பலர் தோன்றினார்கள் என்று அறிவோம். அதில் ஒரு சமயம் கர்தம ரிஷி தோன்றினார். ப்ரம்மாவின் அம்சம் அவர். அவரும் ப்ரம்மாவின் அறிவுரையின் படி சிருஷ்டிக்கு உதவி செய்ய முன்வந்து அதன் காரணமாக பத்தாயிரம் வருஷம் நாராயணா, உன் அருள் ஆசி வேண்டி தவம் இருந்தவர். அத்தனை காலமும் விடாமல் உன்னை தியானம் செய்து கொண்டே இருந்தார்.
गरुडोपरि कालमेघकम्रं
विलसत्केलिसरोजपाणिपद्मम् ।
हसितोल्लसिताननं विभो त्वं
वपुराविष्कुरुषे स्म कर्दमाय ॥३॥
garuḍōpari kālamēghakamraṁ
vilasatkēlisarōjapāṇipadmam |
hasitōllasitānanaṁ vibhō tvaṁ
vapurāviṣkuruṣē sma kardamāya || 14-3 ||
க₃ருடோ₃பரி காளமேக₄கம்ரம்
விலஸத்கேலிஸரோஜபாணிபத்₃மம் |
ஹஸிதோல்லஸிதாநநம் விபோ₄ த்வம்
வபுராவிஷ்குருஷே ஸ்ம கர்த₃மாய || 3||
குருவாயூரப்பா, உன் கருணையை என்ன சொல்வது? கர்தம ரிஷியின் தவத்தை மெச்சி கார்முகில் வண்ணா, நீ கருடன் மேல் அமர்ந்தவாறு கையில் தாமரை மலருடன், அதைவிட அழகான உன் திருமுகத்தில் புன் சிரிப்புடன் , என்னப்பனே , நீ கர்தம ரிஷி முன் தோன்றினாய்.
स्तुवते पुलकावृताय तस्मै
मनुपुत्रीं दयितां नवापि पुत्री: ।
कपिलं च सुतं स्वमेव पश्चात्
स्वगतिं चाप्यनुगृह्य निर्गतोऽभू: ॥४॥
stuvatē pulakāvr̥tāya tasmai
manuputrīṁ dayitāṁ navāpi putrīḥ |
kapilaṁ ca sutaṁ svamēva paścāt
svagatiṁ cāpyanugr̥hya nirgatō:’bhūḥ || 14-4 ||
ஸ்துவதே புலகாவ்ருதாய தஸ்மை
மநுபுத்ரீம் த₃யிதாம் நவாபி புத்ரீ: |
கபிலம் ச ஸுதம் ஸ்வமேவ பஶ்சாத்
ஸ்வக₃திம் சாப்யநுக்₃ருஹ்ய நிர்க₃தோ(அ)பூ₄: || 4||
நாராயணா, வாதபுரீஸ்வரா, உனக்கு யாருக்கு என்ன வரம் எப்படி அளிக்க வேண்டும் என்று தெரியுமே. உன்னைக் கண்டதும் ஆனந்த மேலீட்டால் கர்தமர் ஆடினார், பாடினார், உன்னை வணங்கினார். அவர் சிருஷ்டியில் பிரமனுக்கு உறு துணையாக இருக்க நீ அருள் புரிந்தாய்.
''கர்தம ரிஷியே, நீங்கள் ஸ்வயம்பு மனுவின் மகளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு ஒன்பது பெண்கள் ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் தான் கபில ரிஷி என்று உலகில் அழைக்கப்படுவார். நீங்களும் மோக்ஷம் அடைவீர்கள். ''
இவ்வாறு அருளாசி வழங்கி விட்டு நாராயணா நீ வைகுண்டம் திரும்பிவிட்டாய்.
स मनु: शतरूपया महिष्या
गुणवत्या सुतया च देवहूत्या ।
भवदीरितनारदोपदिष्ट:
समगात् कर्दममागतिप्रतीक्षम् ॥५॥
sa manuśśatarūpayā mahiṣyā
guṇavatyā sutayā ca dēvahūtyā |
bhavadīritanāradōpadiṣṭaḥ
samagātkardamamāgatipratīkṣam || 14-5 ||
ஸ மநு: ஶதரூபயா மஹிஷ்யா
கு₃ணவத்யா ஸுதயா ச தே₃வஹூத்யா |
ப₄வதீ₃ரிதநாரதோ₃பதி₃ஷ்ட:
ஸமகா₃த் கர்த₃மமாக₃திப்ரதீக்ஷம் || 5||
நினைத்தாலே எனக்கு எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது தெரியுமா? உண்ணிகிருஷ்ணா , நீயும் நாரதரும் இணை பிரியாத குருவும் சிஷ்யனும். நாரதர் நீ அனுப்பியபடியே நேராக ஸ்வயம்பு மனுவிடம் சென்று அவனையும் அவன் மனைவி சதரூபியையும் ஆசிர்வதித்து அவர்களை அவர்களின் மகள் தேவஹுதி யோடு கர்தமரிஷியிடம் அழைத்து சென்றார்.
मनुनोपहृतां च देवहूतिं
तरुणीरत्नमवाप्य कर्दमोऽसौ ।
भवदर्चननिवृतोऽपि तस्यां
दृढशुश्रूषणया दधौ प्रसादम् ॥६॥
manunōpahr̥tāṁ ca dēvahūtiṁ
taruṇīratnamavāpya kardamō:’sau |
bhavadarcananirvr̥tō:’pi tasyāṁ
dr̥ḍhaśuśrūṣaṇayā dadhau prasādam || 14-6 ||
மநுநோபஹ்ருதாம் ச தே₃வஹூதிம்
தருணீரத்நமவாப்ய கர்த₃மோ(அ)ஸௌ |
ப₄வத₃ர்சநநிவ்ருதோ(அ)பி தஸ்யாம்
த்₃ருட₄ஶுஶ்ரூஷணயா த₃தௌ₄ ப்ரஸாத₃ம் || 6||
கர்தம ரிஷிக்கும் தேவஹுதிக்கும் திருமணம் நடந்தது. எல்லோரும் மன நிறைவோடு நாராயணா உன்னை வணங்கினார்கள். தேவஹுதி சிறந்த ரிஷி பத்னி. உன்னையே தாயாக பெற்றவள் அல்லவா?
स पुनस्त्वदुपासनप्रभावा-
द्दयिताकामकृते कृते विमाने ।
वनिताकुलसङ्कुलो नवात्मा
व्यहरद्देवपथेषु देवहूत्या ॥७॥
sa punastvadupāsanaprabhāvā-
ddayitākāmakr̥tē kr̥tē vimānē |
vanitākulasaṅkulō navātmā
vyaharaddēvapathēṣu dēvahūtyā || 14-7 ||
ஸ புநஸ்த்வது₃பாஸநப்ரபா₄வா-
த்₃த₃யிதாகாமக்ருதே க்ருʼதே விமாநே |
வநிதாகுலஸங்குலோ நவாத்மா
வ்யஹரத்₃தே₃வபதே₂ஷு தே₃வஹூத்யா || 7||
கர்தம ரிஷி காலத்தில் வானத்தில் பறக்கும் விமானங்கள் இருந்தன என்று இந்த ஸ்லோகம் உறுதிப் படுத்துகிறது. ராமாயண பாரத காலத்தில் விமானங்கள் இருந்தன. நாராயணா உன் அருளால் கர்தம ரிஷி ஒரு விமானம் பெற்று, அதில் மனைவி தேவதூதி மற்றும் பணிப்பெண்கள் உதவ உலகமுழுதும் சுற்றுப்பயணம் சென்றார்.
शतवर्षमथ व्यतीत्य सोऽयं
नव कन्या: समवाप्य धन्यरूपा: ।
वनयानसमुद्यतोऽपि कान्ता-
हितकृत्त्वज्जननोत्सुको न्यवात्सीत् ॥८॥
śatavarṣamatha vyatītya sō:’yaṁ
nava kanyāḥ samavāpya dhanyarūpāḥ |
vanayānasamudyatō:’pi kāntā-
hitakr̥ttvajjananōtsukō nyavātsīt || 14-8 |
ஶதவர்ஷமத₂ வ்யதீத்ய ஸோ(அ)யம்
நவ கந்யா: ஸமவாப்ய த₄ந்யரூபா: |
வநயாநஸமுத்₃யதோ(அ)பி காந்தா-
ஹிதக்ருத்த்வஜ்ஜநநோத்ஸுகோ ந்யவாத்ஸீத் || 8||
பழைய கால விஷயங்களில் எதிலுமே நூறு வருஷங்களுக்கு குறைவில்லை போல் இருக்கிறது. நூறு வருஷ தாம்பத்தியத்தில் கர்தம ரிஷி தேவஹுதி தம்பதிகள் ஒன்பது அழகிய பெண்களைப் பெற்றார்கள். பிறகு வானப்ரஸ்தம் செய்து தவமிருந்தார்கள். நாராயணா, உண்ணி கிருஷ்ணா, தேவஹுதிக்கு ஒரு ஆசை. என்ன தெரியுமா? என்னப்பனே நீயே அவளுக்கு மகனாக பிறக்கவேண்டும் என்று? என்ன தவம் செய்தனை தேவஹுதி!
निजभर्तृगिरा भवन्निषेवा-
निरतायामथ देव देवहूत्याम् ।
कपिलस्त्वमजायथा जनानां
प्रथयिष्यन् परमात्मतत्त्वविद्याम् ॥९॥
nijabhartr̥girā bhavanniṣēvā-
niratāyāmatha dēva dēvahūtyām |
kapilastvamajāyathā janānāṁ
prathayiṣyanparamātmatattvavidyām || 14-9 |
நிஜப₄ர்த்ருகி₃ரா ப₄வந்நிஷேவா-
நிரதாயாமத₂ தே₃வ தே₃வஹூத்யாம் |
கபிலஸ்த்வமஜாயதா₂ ஜநாநாம்
ப்ரத₂யிஷ்யந் பரமாத்மதத்த்வவித்₃யாம் || 9||
நான் முன்பே எழுதியிருந்தேன் ஞாபகம் இருக்கிறதா? மஹா விஷ்ணு என்கிற நாராயணன் எண்ணற்ற அவதாரங்கள் எடுத்தவர். கணக்கிலடங்காதவை. பத்து அவதாரங்கள் தான் நாம் தசாவதாரம் என்று பிரதான அவதாரங்களாக ராக்ஷஸர்களை கொடிய அரக்கர்களை வதம் செய்த அவதாரங்களாக வழிபடுகிறோம், நீ தேவஹுதிக்கு கபிலன் என்கிற மகனாக ஆத்ம ஞானம் உபதேசிக்க அவதாரம் எடுத்தாய்.
वनमेयुषि कर्दमे प्रसन्ने
मतसर्वस्वमुपादिशन् जनन्यै ।
कपिलात्मक वायुमन्दिरेश
त्वरितं त्वं परिपाहि मां गदौघात् ॥१०॥
vanamēyuṣi kardamē prasannē
matasarvasvamupādiśañjananyai |
kapilātmaka vāyumandirēśa
tvaritaṁ tvaṁ paripāhi māṁ gadaughāt || 14-10 ||
வநமேயுஷி கர்த₃மே ப்ரஸந்நே
மதஸர்வஸ்வமுபாதி₃ஶந் ஜநந்யை |
கபிலாத்மக வாயுமந்தி₃ரேஶ
த்வரிதம் த்வம் பரிபாஹி மாம் க₃தௌ₃கா₄த் || 10||
கபில ரிஷியாக நீ அவதரித்ததும் கர்தமர் தேவஹுதியோடு வனவாசம் சென்று தவமிருக்க கிளம்பிவிட்டார்.
என்னப்பா குருவாயூரப்பா நான் சொல்வது சரிதானே?
''ஆமாம் என்று தலை அசைத்தான் உன்னிகிருஷ்ணன்
என் தெய்வமே அப்படிப்பட்ட உனக்கு என் ரோகத்தை விலக்குவது கஷ்டமா? அருள் புரிவாய்''என்று நம்பூதிரி இந்த 14வது நாராயணீய ஸ்லோகத்தை நிறைவு செயகிறாய்.
அதற்கு முன் கபில ரிஷியைப் பற்றி சில வார்த்தைகள் அறிவோம்:
சாங்கிய யோகத்தை (கபில சூத்திரத்தை) உபதேசித்தவர் கபிலர். புத்தருக்கு கபிலரின் யோகமார்கம் திருப்தி அளிக்க புத்தமத கோட்பாடுகள் சாணக்யா யோக சூத்திரத்தை பின்பற்றியவை. விஷ்ணு சஹஸ்ரநாமம் கபிலன் என்பது விஷ்ணுவின்பெயர் என்கிறது. ப்ரம்ம புராணத்தில் கபிலரது தியானம் தடைப்பட்டதால் அதற்கு காரணமான அஸ்வமேத யாக குதிரையை தேடிவந்த 60000 ஸஹரர்களை எரித்து சாம்பலாக்கி விட்டார். பின்னர் பகீரதன் மூலம் அவர்கள் உயிர் பெற்று பித்ருலோகம் சென்றார்கள் என்று வரும்.