Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 58
58 பிருந்தாவனத்தில் தட்ப வெப்பம்

பிருந்தாவனம் அற்புதமான அழகான ரம்யமான பிரதேசம் தான். நமக்கெல்லாம் நினைக்கும்போதே ஆனந்தம் தருகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஆபத்து அங்கே தான் உருவாயிற்று. இதற்காக வருந்தவேண்டாம். இந்த ஆபத்துகள் அவனைத் தேடி வந்ததில் ஒரு வேலை மிச்சம் கிருஷ்ணனுக்கு.அவன் அவர்களைத் தேடி சென்று அழிக்க வேண்டாமே. இந்த தசகத்தில் ஒரு காட்டுத் தீ தோன்றிய விபரம் அறிவோம்.

त्वयि विहरणलोले बालजालै: प्रलम्ब-
प्रमथनसविलम्बे धेनव: स्वैरचारा: ।
तृणकुतुकनिविष्टा दूरदूरं चरन्त्य:
किमपि विपिनमैषीकाख्यमीषांबभूवु: ॥१॥

tvayi viharaNalOle baala jaalaiH pralamba
pramathanasavilambe dhenavaH svairachaaraaH |
tR^iNa kutuka niviShTaa duura duuraM charantyaH
kimapi vipinamaiShiikaakhyamiiShaaM babhuuvuH || 1

த்வயி விஹரணலோலே பா³லஜாலை꞉ ப்ரலம்ப³-
ப்ரமத²னஸவிலம்பே³ தே⁴னவ꞉ ஸ்வைரசாரா꞉ |
த்ருணகுதுகனிவிஷ்டா தூ³ரதூ³ரம் சரந்த்ய꞉
கிமபி விபினமைஷீகாக்²யமீஷாம்ப³பூ⁴வு꞉ || 58-1 ||

கிருஷ்ணா, பூனை எலியைக் கொல்வதற்கு முன்பு அதோடு விளையாடுவது போல் கொஞ்ச நேரம் பிரலம்பாசுரன் உங்களோடு சேர்ந்து விளையாடும் அதிர்ஷ்டம் பெற்றான். இந்த ஒரு அசுரனுக்கு மட்டும் தான் அந்த ஆனந்தம் கிடைத்தது. கன்றுக்குட்டிகள் ஆனந்தமாக கவனிக்க ஆள் இல்லாமல் இஷ்டத்துக்கு திரிந்து மேய்ந்து கொண்டிருந்தன. காட்டின் எல்லை தாண்டி ஒரு அடர்ந்த பகுதிக்குள் சென்றன. அந்த பகுதியின் பெயர் இஷிகா.

अनधिगतनिदाघक्रौर्यवृन्दावनान्तात्
बहिरिदमुपयाता: काननं धेनवस्ता: ।
तव विरहविषण्णा ऊष्मलग्रीष्मताप-
प्रसरविसरदम्भस्याकुला: स्तम्भमापु: ॥२॥

anadhigata nidaagha kraurya bR^indaavanaantaat
bahiridamupayaataaH kaananaM dhenavastaaH |
tava viraha viShaNNaa uuShmalagriiShmataapa
prasaravisaradambhasyaakulaa stambhamaapuH || 2

அனதி⁴க³தனிதா³க⁴க்ரௌர்யவ்ருந்தா³வனாந்தாத்
ப³ஹிரித³முபயாதா꞉ கானநம் தே⁴னவஸ்தா꞉ |
தவ விரஹவிஷண்ணா ஊஷ்மலக்³ரீஷ்மதாப-
ப்ரஸரவிஸரத³ம்ப⁴ஸ்யாகுலா꞉ ஸ்தம்ப⁴மாபு꞉ || 58-2 ||

பசுக்களும் கன்றுகளும் பிருந்தாவனத்தில் உங்களோடு வளர்ந்தவை. அங்கே குளிர்ச்சியாக , ஆனந்தமாக வாழ்ந்தவை. இப்போது வெகுதூரம் காட்டிற்குள் சென்று பிரிந்தாவனத்தின் எல்லைப்பகுதிக்கு வந்துவிட்டன. இஷிகாவில் உஷ்ணம் அதிகம். எப்போதும் திடீர் திடீர் என்று காட்டில் தீப்பற்றிக்கொள்வதால் எப்போதும் வெப்பம் கூட. பசுக்கள் கன்றுகள் களைத்துப்போய் தாகத்தில் நாக்கு வறண்டுபோய் குடிக்க தண்ணீர் தேடின.

तदनु सह सहायैर्दूरमन्विष्य शौरे
गलितसरणिमुञ्जारण्यसञ्जातखेदम् ।
पशुकुलमभिवीक्ष्य क्षिप्रमानेतुमारा-
त्त्वयि गतवति ही ही सर्वतोऽग्निर्जजृम्भे ॥३॥

tadanu saha sahaayairduuramanviShya shaure
galita saraNi mu~njaaraNya sa~njaata khedam |
pashukulamabhiviikshya kshipramaanetu maaraat
tvayi gatavati hii hii sarvatO(a)gnirjajR^imbhe || 3

தத³னு ஸஹ ஸஹாயைர்தூ³ரமன்விஷ்ய ஶௌரே
க³லிதஸரணிமுஞ்ஜாரண்யஸஞ்ஜாதகே²த³ம் |
பஶுகுலமபி⁴வீக்ஷ்ய க்ஷிப்ரமானேதுமாரா-
த்வயி க³தவதி ஹீ ஹீ ஸர்வதோ(அ)க்³னிர்ஜஜ்ரும்பே⁴ || 58-3 ||

குருவாயூரா, பலராமன் பிரலம்பாசுரனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது நீ பசுக்களையும் கன்றுகளையும் எங்கே காணோம் என்று தேடினாய். நீயும் சில நண்பர்களுமாக எங்கும் தேடி கடைசியில் இஷிகாவில் அவற்றை கண்டுபிடித்தீர்கள். அருகே சென்று அவற்றை திருப்பி விரட்டி பிருந்தாவன பகுதிக்கு திருப்பினீர்கள். அப்போது உங்களை எல்லாம் திடீரென்று காட்டுத்தீ பற்றி எரிந்து சூழ்ந்துகொண்டது.

सकलहरिति दीप्ते घोरभाङ्कारभीमे
शिखिनि विहतमार्गा अर्धदग्धा इवार्ता: ।
अहह भुवनबन्धो पाहि पाहीति सर्वे
शरणमुपगतास्त्वां तापहर्तारमेकम् ॥४॥

sakalahariti diipte ghOrabhaankaarabhiime
shikhini vihatamaargaa ardhadagdhaa ivaartaaH |
ahaha bhuvanabandhO paahi paahiiti sarve
sharaNamupagataastvaaM taapahartaaramekam ||4

ஸகலஹரிதி தீ³ப்தே கோ⁴ரபா⁴ங்காரபீ⁴மே
ஶிகி²னி விஹதமார்கா³ அர்த⁴த³க்³தா⁴ இவார்தா꞉ |
அஹஹ பு⁴வனப³ந்தோ⁴ பாஹி பாஹீதி ஸர்வே
ஶரணமுபக³தாஸ்த்வாம் தாபஹர்தாரமேகம் || 58-4 ||

எங்கும் நீரின்றி, உலர்ந்த மரங்கள், ஒன்றோடொன்று உராயும் அடர்ந்த மூங்கில் காடுகள் வேறு. தீ பற்றிக்கொள்வது சகஜம். திகுதிகு வென்று ஜ்வாலையோடு அக்னி சுற்றிலும் சூழ்ந்து கொண்டு விட்டது. பசுக்களும் கன்றுகளும் வெப்பம் தாங்காமல் அலறின. கிருஷ்ணா, நீயும் உன் நண்ப ர்களும் பசுக்களோடு கன்றுகளோடு சேர்ந்து தீயின் உஷ்ணத்தில் வெந்து கொண்டிருந்தீர்கள். தீயின் நாக்குகள் உங்களை நெருங்கிக்கொண்டே வந்தன. ''பகவானே, நெருப்பிலிருந்து, இந்த ஆபத்திலிருந்து எங்களைக் காப்பாற்று'' என்று உன் தோழர்கள் வேண்டினார்கள்.

अलमलमतिभीत्या सर्वतो मीलयध्वं
दृशमिति तव वाचा मीलिताक्षेषु तेषु ।
क्व नु दवदहनोऽसौ कुत्र मुञ्जाटवी सा
सपदि ववृतिरे ते हन्त भाण्डीरदेशे ॥५॥

alamalamatibhiityaa sarvatO miilayadhvaM
dR^ishamiti tava vaachaa miilitaaksheShu teShu |
kvanu davadahanO(a)sau kutra mu~njaaTavii saa
sapadi vavR^itire te hanta bhaaNDiiradeshe || 5

அலமலமதிபீ⁴த்ய ஸர்வதோ மீலயத்⁴வம்
ப்⁴ருஶமிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு |
க்வனு த³வத³ஹனோ(அ)ஸௌ குத்ர முஞ்ஜாடவீ ஸா
ஸபதி³ வவ்ருதிரே தே ஹந்த ப⁴ண்டீ³ரதே³ஶே || 58-5 ||

கிருஷ்ணா, அவர்கள் நீ தான் அந்த பகவான்என்றறியாமல் மேலே பார்த்து கரம்கூப்பி வண ங்கிய அவர்கள் பக்தியை ரசித்தாய்.

''டேய் யாரும் பயப்படாதீர்கள். கண்ணை மூடிக்கொள்ளுங்கள். சீக்கிரம் நெருப்பு அணையும். பிரிந்தாவனம் போய் சேர்வோம் ' என்று சொன்னதை அப்படியே நம்புபவர்கள். கண்ணை மூடிக்கொண்டு கரம் கூப்பி பிரார்த்தனை செய்தார்கள். உன் கண்ணையும் ஒருவன் மூடினான். கணநேரம் கூட ஆகவில்லை, நெருப்பு தானாகவே அணைந்து தணிந்து இருந்தது. காடு முழுதும் எரிந்திருந்தது. ஆஹா, எப்படி எல்லோரும் மீண்டும் பண்டீர வனம் வந்து சேர்ந்தார்கள்? மந்திர மாய வித்தையாக இருக்கிறதே.!

जय जय तव माया केयमीशेति तेषां
नुतिभिरुदितहासो बद्धनानाविलास: ।
पुनरपि विपिनान्ते प्राचर: पाटलादि-
प्रसवनिकरमात्रग्राह्यघर्मानुभावे ॥६॥

jaya jaya tava maayaa keyamiisheti teShaaM
nutibhirudita haasO baddhanaanaa vilaasaH |
punarapi vipinaante praacharaH paaTalaadi
prasava nikara maatra graahyagharmaanubhaave || 6

ஜய ஜய தவ மாயா கேயமீஶேதி தேஷாம்
நுதிபி⁴ருதி³தஹாஸோ ப³த்³த⁴னானாவிலாஸ꞉ |
புனரபி விபினாந்தே ப்ராசர꞉ பாடலாதி³-
ப்ரஸவனிகரமாத்ரக்³ராஹ்யக⁴ர்மானுபா⁴வே || 58-6 ||

''கண்ணா என்ன விந்தை இது. உன் மாயாஜாலமா? என்று ஆனந்தமாக சிரித்துக்கொண்டே உன்னோடு விளையாடினார்கள் எல்லோரும். கன்று பசுக்களும் சந்தோஷத்தோடு உன்னை சுற்றி சுற்றி வந்தன. கிருஷ்ணா, நீ ரொம்ப ''பெரிய ஆளு டா'' என்று மனதார புகழ்ந்தார்கள். பெரிய ஆள் என்பதால் தான் உனக்கு ''பெரும் ஆள்'' (பெருமாள் ) என்று நாம் இன்றும் வணங்கும் பெயர் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? கோடைவெயில் காலம் என்றால் படரி மரம் பூக்கத் துவங்குமே ஒன்றும் நடக்காதது போல் நீ பசுக்களையும் கன்றுகளையும் நீர் பருக வைத்து மேய்ச்சல் காட்டிக்கொண்டிருந்தாய்.

त्वयि विमुखमिवोच्चैस्तापभारं वहन्तं
तव भजनवदन्त: पङ्कमुच्छोषयन्तम् ।
तव भुजवदुदञ्चद्भूरितेज:प्रवाहं
तपसमयमनैषीर्यामुनेषु स्थलेषु ॥७॥

tvayi vimukhamivOchchaiH taapa bhaaraM vahantaM
tava bhajanavadantaH pankamuchChOShayantam |
tava bhujavaduda~nchad bhuuritejaH pravaahaM
tapasamayamanaiShiiryaamuneShu sthaleShu || 7

த்வயி விமுக²விமோச்சைஸ்தாபபா⁴ரம் வஹந்தம்
தவ ப⁴ஜனவத³ந்த꞉ பங்கமுச்சோ²ஷயந்தம் |
தவ பு⁴ஜவது³த³ஞ்சத்³பூ⁴ரிதேஜ꞉ப்ரவாஹம்
தபஸமயமனைஷீர்யாமுனேஷு ஸ்த²லேஷு || 58-7 ||

யமுனைக்கரையில் கோடைகாலம் சுகமாக கழிந்தது. வெயிலின் தாபம் தெரியவில்லை. அந்த வெப்பம் உன்னை எதிர்ப்பவர்கள், வெறுப்பவர்கள், பிடிக்காதவர்கள் விடும் பெருமூச்சு போல் தஹித்தது என்கிறார் நாராயண பட்டத்ரி. மரங்களை செடிகளை காயவைப்பது போல் பாபங்களை எரித்து சாம்பலாக்குவது. உன் கருணா ஹஸ்தம் போல் ஜொலிப்பது.

तदनु जलदजालैस्त्वद्वपुस्तुल्यभाभि-
र्विकसदमलविद्युत्पीतवासोविलासै: ।
सकलभुवनभाजां हर्षदां वर्षवेलां
क्षितिधरकुहरेषु स्वैरवासी व्यनैषी: ॥८॥

tadanu jalada jaalaiH tvadvapustulya bhaabhiH
vikasadamala vidyut piitavaasO vilaasaiH |
sakalabhuvana bhaajaaM harShadaaM varShavelaaM
kshitidhara kuhareShu svairavaasii vyanaiShiiH || 8

தத³னு ஜலத³ஜாலைஸ்த்வத்³வபுஸ்துல்யபா⁴பி⁴-
ர்விகஸத³மலவித்³யுத்பீதவாஸோவிலாஸை꞉ |
ஸகலபு⁴வனபா⁴ஜாம் ஹர்ஷதா³ம் வர்ஷவேலாம்
க்ஷிதித⁴ரகுஹரேஷு ஸ்வைரவாஸீ வ்யனைஷீ꞉ || 58-8 ||

மாரிக்காலம் வந்துவிட்டது என்பதை கருமேகங்கள் அட்வான்ஸ் நோட்டீஸ் கொடுக்கும். மேலே வானம் கருப்பாக இருப்பது போல் நீயும் கருநிற அழகன். கருப்பு தான் எனக்கும் பிடிச்ச கலர். கருமேகங்களுக்கு இடைத்யே பளிச் பளீச் சென்று கண்ணைக் கூசும் மின்னல் ஒளிக்கீற்றுகள் போல் உன் கருப்பு உடலில் மஞ்சள் நிற பீதாம்பர வஸ்திரம் ஜொலிக்கிறது கிருஷ்ணா. மலைக்குகைகளில் ஓடி ஆடி ஆனந்தமாக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாய்.

कुहरतलनिविष्टं त्वां गरिष्ठं गिरीन्द्र:
शिखिकुलनवकेकाकाकुभि: स्तोत्रकारी ।
स्फुटकुटजकदम्बस्तोमपुष्पाञ्जलिं च
प्रविदधदनुभेजे देव गोवर्धनोऽसौ ॥९॥

kuharatala niviShTaM tvaaM gariShThaM giriindraH
shikhikula nava kekaa kaakubhiH stOtrakaarii |
sphuTakuTaja kadambastOma puShpaa~njaliM cha
pravidadhadanubheje deva gOvardhanO(a)sau || 9

குஹரதலனிவிஷ்டம் த்வாம் க³ரிஷ்ட²ம் கி³ரீந்த்³ர꞉
ஶிகி²குலனவகேகாகாகுபி⁴꞉ ஸ்தோத்ரகாரீ |
ஸ்பு²டகுடஜகத³ம்ப³ஸ்தோமபுஷ்பாஞ்ஜலிம் ச
ப்ரவித³த⁴த³னுபே⁴ஜே தே³வ கோ³வர்த⁴னோ(அ)ஸௌ || 58-9 ||

கோவர்த்தன மலை உன் பக்தன். உன்னை வணங்கி மகிழும் அழகிய மலை. அதில் உனக்குப் பிடித்த வண்ண வண்ண மயில் கூட்டம் எப்போதும் உண்டு. மாரிக்காலம் என்றாலே மயிலுக்கு குஷி அல்லவா? மயில்களின் குரல் வேடிக்கையாக இருக்கும் கேட்பதற்கு. சந்தோஷத்தில் அவை தோகை விரித்தாடி அகவும் (கத்துகிற) அழகே தனி. கடம்பம், குடஜ மரங்களும் பூத்துக் குலுங்கும். வேப்பமரத்தை குடஜா என்று சொல்வதுண்டு. வேப்பம்பூவுக்கு தனி மணம் . ஆஹா வேப்பம்பூ ரஸத்தின் சுகமே சுகம்.

अथ शरदमुपेतां तां भवद्भक्तचेतो-
विमलसलिलपूरां मानयन् काननेषु ।
तृणममलवनान्ते चारु सञ्चारयन् गा:
पवनपुरपते त्वं देहि मे देहसौख्यम् ॥१०॥

atha sharadamupetaaM taaM bhavadbhakta chetO
vimala salila puuraaM maanayan kaananeShu |
tR^iNamamala vanaante chaaru sa~nchaarayan gaaH
pavanapurapate tvaM dehi me dehasaukhyam ||10

அத² ஶரத³முபேதாம் தாம் ப⁴வத்³ப⁴க்தசேதோ-
விமலஸலிலபூராம் மானயன்கானநேஷு |
த்ருணமமலவனாந்தே சாரு ஸஞ்சாரயன் கா³꞉
பவனபுரபதே த்வம் தே³ஹி மே தே³ஹஸௌக்²யம் || 58-10 ||

இலையுதிர் காலம் ஒரு தனி ரகம். காற்று அப்போது ஜாஸ்தி.எங்கும் நீர் நிறைந்திருக்கும். பக்தர்கள் மனதில் நீ நிறைந்திருப்பது போல. பசுக்களை கன்றுகளை மேய்க்கும்போது அவை வயிறார செழிப்பாக வளர்ந்த புல் வெளிகளில் வேட்டையாடும். எண்டே குருவாயூரப்பா, அந்த பசுக்கள் கன்றுகளின் சந்தோஷம் போல் என்னையும் சந்தோஷப்படுத்த என் நோய் தீர்த்தருள்வாய் அப்பனே.