Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 17
17 துருவ சரித்திரம்

उत्तानपादनृपतेर्मनुनन्दनस्य
जाया बभूव सुरुचिर्नितरामभीष्टा ।
अन्या सुनीतिरिति भर्तुरनादृता सा
त्वामेव नित्यमगति: शरणं गताऽभूत् ॥१॥

உத்தாநபாத₃ந்ருபதேர்மநுநந்த₃நஸ்ய
ஜாயா ப₃பூ₄வ ஸுருசிர்நிதராமபீ₄ஷ்டா | 
அந்யா ஸுநீதிரிதி ப₄ர்துரநாத்₃ருதா ஸா
த்வாமேவ நித்யமக₃தி: ஶரணம் க₃தா(அ)பூ₄த் || 1|| 

1. மனுவின் பிள்ளையான அரசன் உத்தானபாதனுக்கு ஸுநீதி, ஸுருசி என்று இரண்டு மனைவியர் இருந்தனர். ஸுருசியிடம் உள்ள அதிக அன்பினால், முதல் மனைவியான ஸுநீதியை நிராகரித்தான். கதியில்லாத அவள் உன்னைச் சரணடைந்தாளாமே.

अङ्के पितु: सुरुचिपुत्रकमुत्तमं तं
दृष्ट्वा ध्रुव: किल सुनीतिसुतोऽधिरोक्ष्यन् ।
आचिक्षिपे किल शिशु: सुतरां सुरुच्या
दुस्सन्त्यजा खलु भवद्विमुखैरसूया ॥२॥

அங்கே பிது: ஸுருசிபுத்ரகமுத்தமம் தம்
த்₃ருஷ்ட்வா த்₄ருவ: கில ஸுநீதிஸுதோ(அ)தி₄ரோக்ஷ்யந் | 
ஆசிக்ஷிபே கில ஶிஶு: ஸுதராம் ஸுருச்யா
து₃ஸ்ஸந்த்யஜா க₂லு ப₄வத்₃விமுகை₂ரஸூயா || 2|| 

2. தன் தந்தையின் மடியில் இளையவளின் மகன் உத்தமன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்த ஸுநீதியின் மகன் துருவன், தானும் அமர ஆசைப்பட்டான். ஸுருசி கடுமையான சொற்களால் துருவனைக் கீழே தள்ளினாள். உன்னிடம் பக்தியில்லாதவர்கள் எவ்வளவு முயன்றாலும் பொறாமை முதலிய கேட்ட குணங்களை விட முடியாதல்லவா?

त्वन्मोहिते पितरि पश्यति दारवश्ये
दूरं दुरुक्तिनिहत: स गतो निजाम्बाम् ।
साऽपि स्वकर्मगतिसन्तरणाय पुंसां
त्वत्पादमेव शरणं शिशवे शशंस ॥३॥

த்வந்மோஹிதே பிதரி பஶ்யதி தா₃ரவஶ்யே
தூ₃ரம் து₃ருக்திநிஹத: ஸ க₃தோ நிஜாம்பா₃ம் | 
ஸா(அ)பி ஸ்வகர்மக₃திஸந்தரணாய பும்ஸாம்
த்வத்பாத₃மேவ ஶரணம் ஶிஶவே ஶஶம்ஸ || 3|| 

3. மனைவியின் மேல் மோகம் கொண்ட அரசன்  உத்தானபாதன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஸுருசி, குழந்தை துருவனை கடுஞ்சொற்களால் அதட்டினாள். துருவனும் காட்டில் இருந்த தன் தாயிடம் சென்றான். கர்ம வினையைப் போக்கிக் கொள்ள பகவானின் பாதக்கமலங்களை சரணடைய வேண்டும் என்று ஸுநீதி துருவனுக்கு உபதேசித்தாள்.

आकर्ण्य सोऽपि भवदर्चननिश्चितात्मा
मानी निरेत्य नगरात् किल पञ्चवर्ष: ।
सन्दृष्टनारदनिवेदितमन्त्रमार्ग-
स्त्वामारराध तपसा मधुकाननान्ते ॥४॥

ஆகர்ண்ய ஸோ(அ)பி ப₄வத₃ர்சநநிஶ்சிதாத்மா
மாநீ நிரேத்ய நக₃ராத் கில பஞ்சவர்ஷ: | 
ஸந்த்₃ருஷ்டநாரத₃நிவேதி₃தமந்த்ரமார்க₃-
ஸ்த்வாமாரராத₄ தபஸா மது₄காநநாந்தே || 4|| 

4. ஐந்து வயதுக் குழந்தையான துருவன், தாய் சொன்னதைக் கேட்டு, உன்னைப் பூஜிக்கவேண்டும் என்று நிச்சயித்து, நகரத்தை விட்டுக் காட்டிற்குப் புறப்பட்டான். வழியில் நாரதரைக் கண்டான். அவர் தங்களை வழிபடும் முறைகளையும், மந்த்ரத்தையும் அவனுக்கு உபதேசித்தார். யமுனா நதிக் கரையில் உள்ள மதுவனம் என்ற காட்டில் தங்களை நோக்கி தவம் செய்யத் தொடங்கினான்.

ताते विषण्णहृदये नगरीं गतेन
श्रीनारदेन परिसान्त्वितचित्तवृत्तौ ।
बालस्त्वदर्पितमना: क्रमवर्धितेन 
निन्ये कठोरतपसा किल पञ्चमासान् ॥५॥

தாதே விஷண்ணஹ்ருத₃யே நக₃ரீம் க₃தேந
ஶ்ரீநாரதே₃ந பரிஸாந்த்விதசித்தவ்ருத்தௌ | 
பா₃லஸ்த்வத₃ர்பிதமநா: க்ரமவர்தி₄தேந 
நிந்யே கடோ₂ரதபஸா கில பஞ்சமாஸாந் || 5||

5. வருந்திய அரசனை, நாரதர் சமாதானப்படுத்தினார். துருவன் தங்களிடம் மனதைச் செலுத்தி ஐந்து மாதங்கள் கடுமையான தவத்தைச் செய்தான்.

तावत्तपोबलनिरुच्छ्-वसिते दिगन्ते
देवार्थितस्त्वमुदयत्करुणार्द्रचेता: ।
त्वद्रूपचिद्रसनिलीनमते: पुरस्ता-
दाविर्बभूविथ विभो गरुडाधिरूढ: ॥६॥

தாவத்தபோப₃லநிருச்ச்₂-வஸிதே தி₃க₃ந்தே
தே₃வார்தி₂தஸ்த்வமுத₃யத்கருணார்த்₃ரசேதா: | 
த்வத்₃ரூபசித்₃ரஸநிலீநமதே: புரஸ்தா-
தா₃விர்ப₃பூ₄வித₂ விபோ₄ க₃ருடா₃தி₄ரூட₄: || 6|| 

6. அவனுடைய தவத்தால், அனைத்து உயிரினங்களும் மூச்சு விட முடியாமல் தவித்தனர். தேவர்கள் தங்களிடம் பிரார்த்தித்தனர். தாங்களும் கருணை கொண்டு துருவன் முன் கருடாரூடராய்த் தோன்றினீராமே.

त्वद्दर्शनप्रमदभारतरङ्गितं तं
दृग्भ्यां निमग्नमिव रूपरसायने ते ।
तुष्टूषमाणमवगम्य कपोलदेशे
संस्पृष्टवानसि दरेण तथाऽऽदरेण ॥७॥

த்வத்₃த₃ர்ஶநப்ரமத₃பா₄ரதரங்கி₃தம் தம்
த்₃ருக்₃ப்₄யாம் நிமக்₃நமிவ ரூபரஸாயநே தே | 
துஷ்டூஷமாணமவக₃ம்ய கபோலதே₃ஶே
ஸம்ஸ்ப்ருஷ்டவாநஸி த₃ரேண ததா₂(அ)(அ)த₃ரேண || 7|| 

7. தங்களைக் கண்டவுடன் துருவன் மிகவும் ஆனந்தமடைந்தான். தங்கள் ரூபத்தைப் பார்த்து துதிக்க வேண்டுமென்று எண்ணினான். அதை அறிந்த தாங்கள், வேதமயமான தங்கள் சங்கினால் அவனுடைய கன்னத்தைத் தொட்டீர்களாமே.

तावद्विबोधविमलं प्रणुवन्तमेन-
माभाषथास्त्वमवगम्य तदीयभावम् ।
राज्यं चिरं समनुभूय भजस्व भूय:
सर्वोत्तरं ध्रुव पदं विनिवृत्तिहीनम् ॥८॥

தாவத்₃விபோ₃த₄விமலம் ப்ரணுவந்தமேந-
மாபா₄ஷதா₂ஸ்த்வமவக₃ம்ய ததீ₃யபா₄வம் | 
ராஜ்யம் சிரம் ஸமநுபூ₄ய ப₄ஜஸ்வ பூ₄ய:
ஸர்வோத்தரம் த்₄ருவ பத₃ம் விநிவ்ருத்திஹீநம் || 8|| 

8. உடனே துருவன் ஞானத்தை அடைந்தான். தங்களை நன்கு துதித்தான். ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. அவனுடைய எண்ணத்தை அறிந்த தாங்கள், “துருவனே! பல்லாண்டு காலம் ராஜ்ஜியத்தை ஆண்டு, அனுபவித்து, பிறகு திரும்பி வருதல் இல்லாத, எல்லாவற்றிற்கும் மேலான ஸ்தானத்தை அடைவாய்” என்று அருளினீர் அல்லவா?

इत्यूचिषि त्वयि गते नृपनन्दनोऽसा-
वानन्दिताखिलजनो नगरीमुपेत: ।
रेमे चिरं भवदनुग्रहपूर्णकाम-
स्ताते गते च वनमादृतराज्यभार: ॥९॥

இத்யூசிஷி த்வயி க₃தே ந்ருபநந்த₃நோ(அ)ஸா-
வாநந்தி₃தாகி₂லஜநோ நக₃ரீமுபேத: | 
ரேமே சிரம் ப₄வத₃நுக்₃ரஹபூர்ணகாம-
ஸ்தாதே க₃தே ச வநமாத்₃ருதராஜ்யபா₄ர: || 9|| 

9. தாங்கள் சென்றதும், துருவன் நாடு சென்றான். நாட்டு மக்கள் ஆனந்தமடைந்தனர். அவன் தந்தை வனவாசத்தை மேற்கொண்டார். துருவனும் பல்லாண்டு காலம் ராஜ்ஜியத்தை ஆண்டான். 

यक्षेण देव निहते पुनरुत्तमेऽस्मिन्
यक्षै: स युद्धनिरतो विरतो मनूक्त्या ।
शान्त्या प्रसन्नहृदयाद्धनदादुपेता-
त्त्वद्भक्तिमेव सुदृढामवृणोन्महात्मा ॥१०॥

யக்ஷேண தே₃வ நிஹதே புநருத்தமே(அ)ஸ்மிந்
யக்ஷை: ஸ யுத்₃த₄நிரதோ விரதோ மநூக்த்யா | 
ஶாந்த்யா ப்ரஸந்நஹ்ருத₃யாத்₃த₄நதா₃து₃பேதா-
த்த்வத்₃ப₄க்திமேவ ஸுத்₃ருடா₄மவ்ருணோந்மஹாத்மா || 10|| 

10. தேவனே! துருவனுடைய சகோதரன் உத்தமன் யக்ஷனால் கொல்லப்பட்டான். அவன் மீது போர் தொடுக்கச் சென்ற துருவனை மனு சமாதானப்படுத்தியதும் துருவன் யுத்தத்தை நிறுத்தினான். அதனால் மகிழ்ந்த யக்ஷர்களின் தலைவனான குபேரன், மிகுந்த செல்வங்களைத் தர முன்வந்தார். அப்பொழுது துருவன், “ பகவான் மீதுள்ள பக்தி என்றும் உறுதியாக இருக்கவேண்டும்” என்ற வரத்தை குபேரனிடம் வேண்டினான்.

अन्ते भवत्पुरुषनीतविमानयातो
मात्रा समं ध्रुवपदे मुदितोऽयमास्ते ।
एवं स्वभृत्यजनपालनलोलधीस्त्वं
वातालयाधिप निरुन्धि ममामयौघान् ॥११॥

அந்தே ப₄வத்புருஷநீதவிமாநயாதோ
மாத்ரா ஸமம் த்₄ருவபதே₃ முதி₃தோ(அ)யமாஸ்தே | 
ஏவம் ஸ்வப்₄ருத்யஜநபாலநலோலதீ₄ஸ்த்வம்
வாதாலயாதி₄ப நிருந்தி₄ மமாமயௌகா₄ந் || 11||

11. கடைசியில், தங்கள் தூதர்கள் கொண்டு வந்த திவ்ய விமானத்தில் ஏறி , தன் தாயுடன் துருவலோகத்திற்குச் சென்றார். இன்றும் துருவ நட்சத்திரமாக துருவ லோகத்தில் வசிக்கிறாராமே! பக்தர்களைக் காக்கும் குருவாயூரப்பா! என்னுடைய ரோகக் கூட்டங்களைப் போக்கி அருள வேண்டும்.