70. மேலும் சில சாகசங்கள்.
இந்த தசகத்தில் பல சுவாரஸ்ய விஷயங்கள் அடங்கி இருக்கிறது. ஒன்று ஒன்றாக ஸ்லோகத்துடன் சொல்வது தான் சரி எனப்படுகிறது.
इति त्वयि रसाकुलं रमितवल्लभे वल्लवा:
कदापि पुरमम्बिकामितुरम्बिकाकानने ।
समेत्य भवता समं निशि निषेव्य दिव्योत्सवं
सुखं सुषुपुरग्रसीद्व्रजपमुग्रनागस्तदा ॥१॥
iti tvayi rasaakulaM ramitavallabhe vallavaaH
kadaa(a)pi puramambikaakamitu rambikaakaanane |
sametya bhavataasamaM nishi niShevya divyOtsavaM
sukhaM suShupuragrasiid vrajapamugra naagastadaa || 1
இதி த்வயி ரஸாகுலம் ரமிதவல்லபே⁴ வல்லவா꞉
கதா³பி புரமம்பி³காகமிதுரம்பி³காகானநே |
ஸமேத்ய ப⁴வதா ஸமம் நிஶி நிஷேவ்ய தி³வ்யோத்ஸவம்
ஸுக²ம் ஸுஷுபுரக்³ரஸீத்³வ்ரஜபமுக்³ரனாக³ஸ்ததா³ || 70-1 ||
கிருஷ்ணா, இது வரை உனது ராஸக்ரீடை பற்றி நினைவு படுத்தினேன் அல்லவா?. இனி மேலும் சில பழைய விஷயங்களையும் சொல்கிறேன் கேள். பிருந்தாவனம் அருகே அம்பிகாவனம் என்று ஒரு ஊர். அங்கே அடிக்கடி விசேஷ காலங்களில் கோபகோபியர்கள் குடும்பத்தோடு செல்வார்கள். அங்கே ஒரு பழைய சிவன் கோவில் உண்டு. எல்லோரும் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு சாமான் சர்ஜா எல்லாம் எடுத்துக்கொண்டு அங்கே போய் ராத் தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபடுவது வழக்கம்.ஒரு பெரிய விழாவாக சேர்ந்து கொண்டாடுவார்கள். நீயும் நந்தகோபன் குடும்பத்தோடு அங்கே சென்றாய். அப்போது தான் சிவன்கோயில் குளத்தில் எல்லோரையும் போல் நந்தகோபனும் ஸ்னானம் செய்யும்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நீருக்குள் சென்று நந்தகோபனை விழுங்கிவிட்டது.
समुन्मुखमथोल्मुकैरभिहतेऽपि तस्मिन् बला-
दमुञ्चति भवत्पदे न्यपति पाहि पाहीति तै: ।
तदा खलु पदा भवान् समुपगम्य पस्पर्श तं
बभौ स च निजां तनुं समुपसाद्य वैद्यधरीम् ॥२॥
samunmukha mathOlmukairabhihate(a)pi tasmin balaat
amu~nchati bhavatpade nyapati paahi paahiiti taiH |
tadaa khalu padaa bhavaan samupagamya pasparsha taM
babhau sa cha nijaaM tanuM samupasaadya vaidyaadhariim || 2
ஸமுன்முக²மதோ²ல்முகைரபி⁴ஹதே(அ)பி தஸ்மின்ப³லா-
த³முஞ்சதி ப⁴வத்பதே³ ந்யபதி பாஹி பாஹீதி தை꞉ |
ததா³ க²லு பதா³ ப⁴வான்ஸமுபக³ம்ய பஸ்பர்ஶ தம்
ப³பௌ⁴ ஸ ச நிஜாம் தனும் ஸமுபஸாத்³ய வைத்³யாத⁴ரீம் || 70-2 ||
கிருஷ்ணா, இதைக் கவனித்த சிலர் கொம்பு ஆயுதங்கள் கொண்டு வந்து அந்த பாம்பை அடித்தார்கள். நந்தகோபனைக் காப்பாற்ற முயற்சி நடந்தது பாம்பு கொஞ்சமும் அவர்கள் எதிர்ப்பை லக்ஷியம் பண்ணாமல் நந்தகோபனை விழுங்குவதில் மும்முரமாக இருந்தது. கோபர்கள் ''ஆபத்து ஆபத்து வாருங்கள்'' என்று கத்தினார்கள். உன் காதில் இந்த சத்தம் விழுந்தது. யார் உதவி கேட்டாலுமே ஓடுபவன் நீ. ஓடிவந்த நீ உன் காலால் அந்த மலைப்பாம்பை மிதித்தாய். அங்கே ஒரு ஆச்சர்யம், அதிசயம் நிகழ்ந்தது. அந்த மலைப்பாம்பு ஒரு தேவலோக வித்யாதரனாக உருவம் எடுத்தது.. உன் எதிரேவணங்கி நின்றது.
सुदर्शनधर प्रभो ननु सुदर्शनाख्योऽस्म्यहं
मुनीन् क्वचिदपाहसं त इह मां व्यधुर्वाहसम् ।
भवत्पदसमर्पणादमलतां गतोऽस्मीत्यसौ
स्तुवन् निजपदं ययौ व्रजपदं च गोपा मुदा ॥३
sudarshanadhara prabhO nanu sudarshanaakhyO(a)smyahaM
muniin kvachidapaahasaM ta iha maaM vyadhurvaahasam |
bhavatpada samarpaNaat amalataaM gatO(a)smiityasau
stuvannijapadaM yayau vrajapadaM cha gOpaa mudaa || 3
ஸுத³ர்ஶனத⁴ர ப்ரபோ⁴ நனு ஸுத³ர்ஶனாக்²யோ(அ)ஸ்ம்யஹம்
முனீன்க்வசித³பாஹஸம் த இஹ மாம் வ்யது⁴ர்வாஹஸம் |
ப⁴வத்பத³ஸமர்பணாத³மலதாம் க³தோ(அ)ஸ்மீத்யஸௌ
ஸ்துவன்னிஜபத³ம் யயௌ வ்ரஜபத³ம் ச கோ³பா முதா³ || 70-3 ||
''அந்த வித்யாதரன் ''ப்ரபோ, சங்கு சக்கர கதாபாணி, நான் தான் சுதர்சனன். தேவலோக வித்யாதரன். என் அறியாமையால் ஒரு சமயம் சில ரிஷிகளை இங்கே கண்டு கேலி செய்தேன் .அவர்களிட்ட சாபத்தால் மலைப்பாம்பாக பல வருஷங்கள் இங்கே கிடந்தேன். என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அவர்களிடம் என் சாபவிமோசனம் எப்போது என்று கெஞ்சினேன். கோகுலத்தில் நாராயணன் அவதரித்து ஒருநாள் இங்கே வரும்போது அவர் காலடி பட்டு நீ மீண்டும் உன் உருவத்தைப் பெறுவாய் என்கிறார்கள். உங்கள் வரவுக்காக தான் சுவாமி இத்தனை காலம் காத்திருந்தேன். இதற்குள் நந்தகோபன் தப்பி மற்ற கோபர்களோடு சேர்ந்து நின்று இதெல்லாம் கவனித்தான்.
कदापि खलु सीरिणा विहरति त्वयि स्त्रीजनै-
र्जहार धनदानुग: स किल शङ्खचूडोऽबला: ।
अतिद्रुतमनुद्रुतस्तमथ मुक्तनारीजनं
रुरोजिथ शिरोमणिं हलभृते च तस्याददा: ॥४॥
kadaa(a)pi khalu siiriNaa viharati tvayi striijanaiH
jahaara dhanadaanugaH sa kila shankhachuuDO(a)balaaH |
atidrutamanudrutastvamatha muktanaariijanaM
rurOjitha shirOmaNiM halabhR^ite cha tasyaadadaaH ||4
கதா³பி க²லு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீஜனை-
ர்ஜஹார த⁴னதா³னுக³꞉ ஸ கில ஶங்க²சூடோ³(அ)ப³லா꞉ |
அதித்³ருதமனுத்³ருதஸ்தமத² முக்தனாரீஜனம்
ருரோஜித² ஶிரோமணிம் ஹலப்⁴ருதே ச தஸ்யாத³தா³꞉ || 70-4 ||
இன்னொரு சம்பவம் சொல்கிறேன் அதாவது உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று பார். நீயும் பலராமனும் ஒருமுறை கோப கோபியரோடு விளையாடிக்கொண்டிருந்தீர்கள். குபேரனின் சேவகன் ஒருவன் சங்கசூடன் என்பவன் அந்தப்பக்கம் வந்தவன் சும்மா இருக்காமல் கோபியர்கள் சிலரைச் சிறைபிடித்து கடத்த முயன்றான். அவனுக்கு உன்னைப் பற்றி தெரியாதே. திடீரென்று தங்களை பிடித்துக்கொண்டு ஒருவன் கடத்தும்போது கோபியர்கள் கத்தமாட்டார்களா? அவர்கள் குரல் கேட்டு அங்கே ஓடினாய். சங்க சூடன் வெகுவேகமாக அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றான். அவனை தடுத்து நிறுத்தி அவனைக் கொன்றாய். அவனிடம் சிரோமணி என்று தலையை அலங்கரிக்கும் நவரத்ன கல் ஒன்று இருந்தது. அதை பலராமனுக்கு பரிசளித்தாய்.
दिनेषु च सुहृज्जनैस्सह वनेषु लीलापरं
मनोभवमनोहरं रसितवेणुनादामृतम् ।
भवन्तममरीदृशाममृतपारणादायिनं
विचिन्त्य किमु नालपन् विरहतापिता गोपिका: ॥५॥
dineShu cha suhR^ijjanaiH saha vaneShu liilaaparaM
manObhavamanOharaM rasitaveNunaadaamR^itam |
bhavantamamariidR^ishaamamR^ita paaraNaadaayinaM
vichintya kimu naalapan virahataapitaa gOpikaaH || 5
தி³னேஷு ச ஸுஹ்ருஜ்ஜனை꞉ ஸஹ வனேஷு லீலாபரம்
மனோப⁴வமனோஹரம் ரஸிதவேணுனாதா³ம்ருதம் |
ப⁴வந்தமமரீத்³ருஶாமம்ருதபாரணாதா³யினம்
விசிந்த்ய கிமு நாலபன் விரஹதாபிதா கோ³பிகா꞉ || 70-5 ||
பகலெல்லாம் காட்டில் திரிபவர்கள் நீங்கள். உன்னைத் சுற்றி தான் எப்போதும் ஒரு சிறுவர் பட்டாளமே இருக்குமே. அடாடா, இந்த கிருஷ்ணன் நம்மோடு நேரம் செலவழிக்க இல்லையே என்று கோபிகள் ஏங்கினார்கள். உன்னையே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அழகன் நீ . உன்னையே நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணம் அவர்களுக்கு. உன் வேணுகானம் வேறு அவர்களை மகுடி கேட்ட நாகம் போல் மயக்கும் அல்லவா?
கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிப்பவனாகிய உன்னைத் தேடினார்கள். காணாமல் அழுதார்கள்.
भोजराजभृतकस्त्वथ कश्चित् कष्टदुष्टपथदृष्टिररिष्ट: ।
निष्ठुराकृतिरपष्ठुनिनादस्तिष्ठते स्म भवते वृषरूपी ॥६॥
bhOjaraajabhR^itakastvatha kashchitkaShTaduShTapatha dR^iShTirariShTaH |
niShThuraakR^itirapaShThu ninaadastiShThate sma bhavate vR^iSharuupii || 6
போ⁴ஜராஜப்⁴ருதகஸ்த்வத² கஶ்சித்கஷ்டது³ஷ்டபத²த்³ருஷ்டிரரிஷ்ட꞉ |
நிஷ்டு²ராக்ருதிரபஷ்டு²னினாத³ஸ்திஷ்ட²தே ஸ்ம ப⁴வதே வ்ருஷரூபீ || 70-6 ||
என்ன ஆச்சர்யம். கொஞ்ச காலமாக கம்சனிடமிருந்து எந்த ராக்ஷஸனும் அசுரனும் ஏன் காணோம் என்று நினைக்கும்போதே மற்றும் ஒரு அசுரன் அங்கே வந்து முளைத்தான். அவன் பெயர் அரிஷ்டன். பலசாலி. இவனாவது உன்னைக் கொல்ல மாட்டானா என்று கம்சன் ஏங்கினான். எதிரிகளை சுலபமாக கொல்பவன் இந்த ராக்ஷஸன். ரொம்ப சாமர்த்தியமாக உன்னை நெருங்க ஓரு காளைமாடு வேஷத்தில் பிரிந்தாவனத்துக்கு வந்தான். பசு, காளை , கன்றுகளிடம் நீ விசுவாசமாக, நேசமாக, பாசமாக , நடந்துகொள்வாய் என்று தெரிந்து வைத்திருந்தவன். ''அம்மா'' என்ற அவன் கத்தல் உன் கவனத்தை அவன் மேல் கொண்டு சென்றது
शाक्वरोऽथ जगतीधृतिहारी मूर्तिमेष बृहतीं प्रदधान: ।
पङ्क्तिमाशु परिघूर्ण्य पशूनां छन्दसां निधिमवाप भवन्तम् ॥७॥
shaakvarO(a)tha jagatiidhR^iti haarii muurtimeSha bR^ihatiiM pradadhaanaH |
panktimaashu paridhuurNya pashuunaaM ChandasaaM nidhimavaapa bhavantam || 7
ஶாக்வரோ(அ)த² ஜக³தீத்⁴ருதிஹாரீ மூர்திமேஷ ப்³ருஹதீம் ப்ரத³தா⁴ன꞉ |
பங்க்திமாஶு பரிகூ⁴ர்ண்ய பஶூனாம் ச²ந்த³ஸாம் நிதி⁴மவாப ப⁴வந்தம் || 70-7 ||
பசுக்களை விரட்டித் துரத்தி அவற்றின் பின் சென்றது அந்த அரிஷ்ட காளை. பசுக்கள் ஓடும் . நீ பின்னால் வருவாய் உன்னை தனியாக ஒரு இடத்தில் கொண்டு சென்று கொல்லலாம் என்று அரிஷ்டன் நினைத்தான். பசுக்கள் எவ்வளவு சமயோசிதமானவை. அவற்றுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் உடனே உன்னைத் தேடி வந்துவிடுமே. அவை அரிஷ்டன் துரத்த வேகமாக நீ இருக்கும் இடத்துக்கு ஓடிவந்தன.
तुङ्गशृङ्गमुखमाश्वभियन्तं संगृहय्य रभसादभियं तम् ।
भद्ररूपमपि दैत्यमभद्रं मर्दयन्नमदय: सुरलोकम् ॥८॥
tungashR^ingamukhamaashvabhiyantaM sangR^ihayya rabhasaadabhiyaM tam |
bhadraruupamapi daityamabhadraM mardayannamadayaH suralOkam || 8
துங்க³ஶ்ருங்க³முக²மாஶ்வபி⁴யந்தம் ஸங்க்³ருஹய்ய ரப⁴ஸாத³பி⁴யம் தம் |
ப⁴த்³ரரூபமபி தை³த்யமப⁴த்³ரம் மர்த³யன்னமத³ய꞉ ஸுரலோகம் || 70-8 ||
இதற்குள் அரிஷ்டன் உன்னைத் தேடி வந்த விஷயம் விண்ணுலகம் வரை பரவி விட்டது. அவர்கள் தான் உன்னையே சதா சர்வ காலமும் நினைத்து வழிபாடுபவர்களாயிற்றே. எல்லோர் கண்களும் உன்னையே கவனித்தன. எதிரே ஓடிவருவது காளைமாடு அல்ல, அந்த உருவத்தில் ஒரு ராக்ஷஸன் என்பதை நொடியில் நீ கண்டுபிடித்துவிட்டாய். உன்னை நோக்கி வேகமாக கூரிய கொம்புகளை சாய்த்து கொல்லவந்த அரிஷ்டனை அவன் இரு கொம்புகளையும் நகரமுடியாமல் வசமாக பிடித்துக்கொண்டு உன் பலத்தை காட்டினாய். அவனால் திமிரமுடியவில்லை. அவன் அதிக பலத்தோடு உன் பிடியிலிருந்து தப்பி உன்னைத் தாக்க முயற்சித்தது வீணாயிற்று. உன் பலத்துக்கு முன் அவன் தோற்றான்.
चित्रमद्य भगवन् वृषघातात् सुस्थिराऽजनि वृषस्थितिरुर्व्याम् ।
वर्धते च वृषचेतसि भूयान् मोद इत्यभिनुतोऽसि सुरैस्त्वम् ॥९॥
chitra madya bhagavan vR^iShaghaataat susthiraa(a)janivR^iShasthitirurvyaam |
vardhate cha vR^iSha chetasi bhuuyaanmOda ityabhinutO(a)si suraistvam || 9
சித்ரமத்³ய ப⁴க³வன் வ்ருஷகா⁴தாத்ஸுஸ்தி²ராஜனி வ்ருஷஸ்தி²திருர்வ்யாம் |
வர்த⁴தே ச வ்ருஷசேதஸி பூ⁴யான்மோத³ இத்யபி⁴னுதோ(அ)ஸி ஸுரைஸ்த்வம் || 70-9 ||
அவன் தலையைத் திருப்பி அவன் கழுத்தை நெரித்துக் கொன்றாய். அரிஷ்டன் ஸ்வாஸம் நின்றது. வேரறுந்த மரமாக ராக்ஷஸ ரூபத்தோடு உன் காலடியில் விழுந்தான். மற்றுமொரு ராக்ஷஸன் இவ்வாறு மாண்டான். உன் அவதார நோக்கம் படிப்படியாக முன்னேறிக்கொண்டே வருகிறதே. தேவர்கள் வழக்கம்போல் மலர்மாரி பொழிந்தார்கள்.
औक्षकाणि परिधावत दूरं वीक्ष्यतामयमिहोक्षविभेदी ।
इत्थमात्तहसितै: सह गोपैर्गेहगस्त्वमव वातपुरेश ॥१०॥
aukshakaaNi paridhaavata duuraM viikshyataamaya mihOkshavibhedii |
itthamaattahasitaiH sahagOpaiH gehagastvamava vaatapuresha ||10
ஔக்ஷகாணி பரிதா⁴வத தூ³ரம் வீக்ஷ்யதாமயமிஹோக்ஷவிபே⁴தீ³ |
இத்த²மாத்தஹஸிதை꞉ ஸஹ கோ³பைர்கே³ஹக³ஸ்த்வமவ வாதபுரேஶ || 70-10 ||
உன்னோடு வந்திருந்த கோபர்கள் நடுங்கினார்கள். உயிரற்ற அரிஷ்டன் உருவம் அச்சம் தந்தது. திறந்த வாய் மூடாமல் அதிசயத்தில் அவர்கள் வீடு திரும்பினார்கள். எங்கும் உன்னைப் பற்றி தான் எப்போதுமே பேச்சு. சில கோப சிறுவர்கள் உரக்க கத்தினார்கள். '' காளை மாடுகளே இந்த கிருஷ்ணனிடம் வந்து மாட்டிக்கொள்ளாதீர்கள். மூச்சு விட மறந்து போவீர்கள் ''
எண்டே குருவாயூரப்பா, உன் மஹிமை எப்படி என்னால் சொல்லி முடியும். என் நோய் தீர்த்து எனக்கும் வழிகாட்டு தெய்வமே ''