Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 33
33. துவாதசி பாரணை.

वैवस्वताख्यमनुपुत्रनभागजात-
नाभागनामकनरेन्द्रसुतोऽम्बरीष: ।
सप्तार्णवावृतमहीदयितोऽपि रेमे
त्वत्सङ्गिषु त्वयि च मग्नमनास्सदैव ॥१॥

vaivasvataakhya manuputra nabhaaga jaatanaabhaaganaamaka
narendra sutO(a)mbariiShaH |
saptaarNavaavR^ita mahiidayitO(a)pi reme
tvatsangiShu tvayi cha magnamanaassadaiva || 1

வைவஸ்வதாக்²யமனுபுத்ரனபா⁴க³ஜாத-
நாபா⁴க³னாமகனரேந்த்³ரஸுதோ(அ)ம்ப³ரீஷ꞉ |
ஸப்தார்ணவாவ்ருதமஹீத³யிதோ(அ)பி ரேமே
த்வத்ஸங்கி³ஷு த்வயி ச மக்³னமனாஸ்ஸதை³வ || 33-1 |

குருவாயூரப்பா, நாராயணனாகிய உன் மஹிமையை ஒன்று விடாமல் சொல்லவேண்டும் என்று முயற்சித்து உனது ஒவ்வொரு செயலையும், மகிமையையும், உன் பக்தர்கள் சரித்திரத்தையும் ஏன் சேர்த்து சொல்கிறேன் தெரியுமா? உன்னை பூஜித்து மனமார வேண்டியவர்களுக்கு நீ எவ்வாறு அருள் வழங்குவாய், கருணை புரிவாய் என்று எல்லோருக்கும் தெரிவதற்காக, யாவரும் அறிவதற்காக. உன்னை உன் பக்தர்களிடமிருந்து பிரித்து எதுவும் சொல்ல வழியில்லையே.

இந்த தசகத்தில் அப்படி ஒரு பக்தன் அம்பரீஷனை பற்றி பாடுகிறார் மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி.

வைவஸ்வத மனுவின் பிள்ளை நாபாகன். அவன் புதல்வன் நரபதி , அவன் மகன் அம்பரீஷன். ஏழு கடல்கள் சூழ்ந்த பூமியை ஆண்ட அரச குலம். அம்பரீஷன் உன்னுடைய பக்தன், சதா உன்னையே நினைத்து த்யானம் பண்ணும் நாராயண பக்தன். ஏகாதசி உபவாசம் என்றால் அம்பரீஷனை நினைக்காமல் இருக்க எவராலும் முடியாது.

त्वत्प्रीतये सकलमेव वितन्वतोऽस्य
भक्त्यैव देव नचिरादभृथा: प्रसादम् ।
येनास्य याचनमृतेऽप्यभिरक्षणार्थं
चक्रं भवान् प्रविततार सहस्रधारम् ॥२॥

tvatpriitaye sakalameva vitanvatO(a)sya
bhaktyaiva deva nachiraadabhR^itaaH prasaadam |
yenaasya yaachanamR^ite(a)pyabhirakshaNaarthaM
chakraM bhavaan pravitataara sahasradhaaram || 2

த்வத்ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோ(அ)ஸ்ய
ப⁴க்த்யைவ தே³வ நசிராத³ப்⁴ருதா²꞉ ப்ரஸாத³ம் |
யேனாஸ்ய யாசனம்ருதே(அ)ப்யபி⁴ரக்ஷணார்த²ம்
சக்ரம் ப⁴வான்ப்ரவிததார ஸஹஸ்ரதா⁴ரம் || 33-2 ||

உன்னை மனதார தொழும் பக்தர்களை நீ நேசிப்பவன் அல்லவா? அம்பரீஷனின் பக்தியை மெச்சி அவன் கேட்காமலேயே உன்னுடைய சுதர்ஸன சக்ரத்தை அவனுக்கு பாதுகாப்பாக அளித்தாய். சுதர்ஸன சக்ரம் ஆயிரம் கூரிய முனைகளை கொண்டது. எவராலும் வெல்ல முடியாத, தடுக்க முடியாத சக்தி ஆயுதம்.

स द्वादशीव्रतमथो भवदर्चनार्थं
वर्षं दधौ मधुवने यमुनोपकण्ठे ।
पत्न्या समं सुमनसा महतीं वितन्वन्
पूजां द्विजेषु विसृजन् पशुषष्टिकोटिम् ॥३॥

sa dvaadashiivratamathO bhavadarchanaarthaM
varShaM dadhau madhuvane yamunOpakaNThe |
patnyaa samaM sumanasaa mahatiiM vitanvan
puujaaM dvijeShu visR^ijan pashuShaShTikOTim || 3

ஸ த்³வாத³ஶீவ்ரதமதோ² ப⁴வத³ர்சனார்த²ம்
வர்ஷம் த³தௌ⁴ மது⁴வனே யமுனோபகண்டே² |
பத்ன்யா ஸமம் ஸுமனஸா மஹதீம் விதன்வன்
பூஜாம் த்³விஜேஷு விஸ்ருஜன்பஶுஷஷ்டிகோடிம் || 33-3 ||

குருவாயூரப்பா, நீ நாராயணனாக காட்சி அளித்து அம்பரீஷனுக்கு சுதர்ஸன சக்ரத்தை அவன் வேண்டாமலேயே அளித்த சமயம், அம்பரீஷன் யமுனை நதிக்கரையில் மதுவனம் எனும் பகுதியில் தனது மனைவியோடு உன்னை தியானித்த வண்ணம் வசித்து வந்தான்.

ஏகாதசி விரதம் இருப்பவன் அம்பரீஷன். துவாதசி விரதம் என்று சொல்கிறோமே ஒவ்வொரு சுக்ல பக்ஷமும் கிருஷ்ண பக்ஷத்தில் அம்மாவாசை, பௌர்ணமிக்கு பிறகு பன்னிரண்டாவது நாள் துவாதசி. ஏகாதசி உபவாசம் இருந்தவர்கள் துவாதசி அன்று தான் நாராயணனை வழிபட்டுவிட்டு அவனுக்கு பிரசாதம் அளித்த பின் உணவருந்துவார்கள். துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏகாதசி உபவாச விரதத்தை பாரணை மூலம் முடிக்க வேண்டும். அதிதி பிராமண போஜனம் செய்பவர்கள் அப்போது இருந்தார்கள். இல்லையென்றால் உபவாச பலன் கிடைக்காது. இப்படி ஒரு துவாதசி அன்று தான் ஆதி சங்கரருக்கு ஒரு ஏழை பெண்மணி யாசகத்துக்கு வந்தபோது நெல்லிக்காயை கொடுத்தாள் . ஆகவே தான் துவாதசி பாரணையில் நெல்லிக்காய் அகத்திக்கீரை அவசியம் உண்டு. அம்பரீஷன் தவாதசி அன்று உபவாசத்தை முடித்து ஆறு கோடி பசுக்களை பிராமணர்களுக்கு தானம் செய்தவன்.

तत्राथ पारणदिने भवदर्चनान्ते
दुर्वाससाऽस्य मुनिना भवनं प्रपेदे ।
भोक्तुं वृतश्चस नृपेण परार्तिशीलो
मन्दं जगाम यमुनां नियमान्विधास्यन् ॥४

tatraatha paaraNadine bhavadarchanaante
durvaasasaa(a)sya muninaa bhavanaM prapede |
bhOktuM vR^itashcha sa nR^ipeNa paraarti shiilO
mandaM jagaama yamunaaM niyamaanvidhaasyan ||4

தத்ராத² பாரணதி³னே ப⁴வத³ர்சனாந்தே
து³ர்வாஸஸா(அ)ஸ்ய முனினா ப⁴வனம் ப்ரபேதே³ |
போ⁴க்தும் வ்ருதஶ்சஸ ந்ருபேண பரார்திஶீலோ
மந்த³ம் ஜகா³ம யமுனாம் நியமான்விதா⁴ஸ்யன் || 33-4 ||

ஒரு துவாதசி அன்று விஷ்ணு வழிபாட்டுக்கு முன்பு பாரணை செய்யும் சமயம், துர்வாச ரிஷி . இந்திரனால் அனுப்பப்பட்டு அம்பரீஷனைத் தேடி மது வனத்துக்கு வருகிறார். எப்படியாவது அம்பரீஷன் மீது துர்வாசர் கோபப்பட்டு சாபம் தரவேண்டும். அப்போது தான் அம்பரீஷனால் தனது இந்திரா பதவிக்கு ஆபத்து வராது. அவனது ஏகாதசி துவாதசி விரதத்துக்கு பங்கம் விளைவிக்க வேண்டும். அப்போது தான் அம்பரீஷன் தனக்கு போட்டியாக வரமாட்டான் என்று இந்திரன் கவலையோடு திட்டமிட்டான். அம்பரீஷன் ஏதாவது சின்ன தவறு செய்தலும் துர்வாஸர் சாபமிட்டு அவன் விரதம் பலனளிக்காமல் போகும் என்று அவரை அம்பரீஷனிடம் அனுப்பினான்.

அம்பரீஷன் துர்வாஸ ரிஷியை வணங்கி வரவேற்று உபசரித்து அதிதி போஜனம் செய்ய அழைத்தான். நான் யமுனை நதிக்குச் சென்று என்னது மாத்யான்ஹிக நித்யானுஷ்டானங்களை முடித்து விட்டு பிறகு வருகிறேன் என்று ரிஷி யமுனைக்கு சென்றுவிட்டார். இன்னும் ரெண்டு மணி நேரம் நல்ல நேரம். அது முடிவதற்குள் உபவாசத்தை முடிக்கவேண்டும். சென்று வாருங்கள் என்று அம்பரீஷன் ரிஷியை அனுப்பி வைத்தான்.

राज्ञाऽथ पारणमुहूर्तसमाप्तिखेदा-
द्वारैव पारणमकारि भवत्परेण ।
प्राप्तो मुनिस्तदथ दिव्यदृशा विजानन्
क्षिप्यन् क्रुधोद्धृतजटो विततान कृत्याम् ॥५॥

raaj~naa(a)tha paaraNamuhuurta samaapti khedaadvaaraiva
paaraNamakaari bhavatpareNa |
praaptO munistadatha divya dR^ishaa vijaanan
kshipyan krudhOddhR^itajaTO vitataana kR^ityaam || 5

ராஜ்ஞாத² பாரணமுஹூர்தஸமாப்திகே²தா³-
த்³வாரைவ பாரணமகாரி ப⁴வத்பரேண |
ப்ராப்தோ முனிஸ்தத³த² தி³வ்யத்³ருஶா விஜானந்
க்ஷிப்யன் க்ருதோ⁴த்³த்⁴ருதஜடோ விததான க்ருத்யாம் || 33-5 ||

ரெண்டு மணி நேர காலம் முடியும் தருணம். இன்னும் துர்வாசரிஷியைக் காணோம். எதற்கும் பாரணை முடித்துவிட்டு பிறகு ரிஷிக்காக காத்திருந்து சாப்பிடுவோம் என்று அம்பரீஷன் முடிவெடுத்தான். குறித்த காலத்தில் துர்வாசர் வராததாலும், உபவாசத்தை முடிக்கவேண்டிய தருணம் நெருங்கி விட்டதாலும் ஒரு துளி ஜலத்தை மட்டும் நாராயணன் பெயரில் பருகி உபவாசத்தை முடித்துவிட்டு துர்வாசருக்காக காத்திருந்தான். சற்று நேரத்தில் வந்த துர்வாசர் தனக்காக காத்திருக்காமல் அம்பரீஷன் துவாதசி விரதத்தை ஜலம் பருகி முடித்துவிட்டான் என்று அறிந்து கோபாவேசம் கொண்டார். எதற்கெடுத்தாலும் உச்சி மண்டை வரை கோபம் வெடித்து சாபம் கொடுக்கும் முனிவர் அல்லவா அவர்? தனது தலையிலிருந்து ஒரு முடியைப் பிய்த்தார். க்ரு த்யா என்ற ஒரு ராக்ஷஸன் அதிலிருந்து உருவானான். அம்பரீஷனைக் கொல்ல அவனை ஏவினார்.

कृत्यां च तामसिधरां भुवनं दहन्ती-
मग्रेऽभिवीक्ष्यनृपतिर्न पदाच्चकम्पे ।
त्वद्भक्तबाधमभिवीक्ष्य सुदर्शनं ते
कृत्यानलं शलभयन् मुनिमन्वधावीत् ॥६॥

kR^ityaaM cha taamasidharaaM bhuvanaM dahantiimagre(
a)bhiviikshya nR^ipatirna padaachchakampe |
tvadbhaktabaadhamabhiviikshya sudarshanaM te
kR^ityaanalaM shalabhayan munimanvadhaaviit || 6

க்ருத்யாம் ச தாமஸித⁴ராம் பு⁴வனம் த³ஹந்தீ-
மக்³ரே(அ)பி⁴வீக்ஷ்யன்ருபதிர்ன பதா³ச்சகம்பே |
த்வத்³ப⁴க்தபா³த⁴மபி⁴வீக்ஷ்ய ஸுத³ர்ஶனம் தே
க்ருத்யானலம் ஶலப⁴யன்முனிமன்வதா⁴வீத் || 33-6 ||

கையில் கூரிய வாளுடன் க்ருத்யா அம்பரீஷனை அணுகினான். உலகையே தீயில் வெந்து முடிந்து சாம்பலாகும் எண்ணத்தோடு வந்த க்ருத்யாவைக் கண்டு அம்பரீஷன் துளியும் நடுங்கவில்லை. தனது உயிருக்கு துர்வாஸரால் முடிவு ஏற்பாட்டிலும் அதை ஏற்க தயாராக அமைதியாக இருந்தான். ஆனால் கிருஷ்ணா, நீ அவனுக்கு பரிசளித்த உனது சுதர்ஸன சக்ரம் இதெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்கும்? அம்பரீஷனுக்கு ஆபத்து என்று அறிந்தது. க்ருத்யாவை நெருங்கியது அவ்வளவு தான். சுதர்சன சக்ரத்தின் முன் க்ருத்யா ஒரு விளக்கில் விழும் வீட்டில் பூச்சி அல்லவா? முடியில் உண்டான க்ருத்யாவின் கதை முடிந்தது. சுதர்ஸன சக்ரம் அதே வேகத்தோடு இப்போது துர்வாஸரை நோக்கி நகர்ந்தது. துர்வாஸர் ஓடினார். அவரைத் தொடர்ந்தது.

धावन्नशेषभुवनेषु भिया स पश्यन्
विश्वत्र चक्रमपि ते गतवान् विरिञ्चम् ।
क: कालचक्रमतिलङ्घयतीत्यपास्त:
शर्वं ययौ स च भवन्तमवन्दतैव ॥७॥

dhaavannasheSha bhuvaneShu bhiyaa sa pashyan
vishvatra chakramapi te gatavaan viri~ncham |
kaH kaalachakramatilanghayatiityapaastaH
sharvaM yayau sa cha bhavantamavandataiva || 7

தா⁴வன்னஶேஷபு⁴வனேஷு பி⁴யா ஸ பஶ்யன்
விஶ்வத்ர சக்ரமபி தே க³தவான்விரிஞ்சம் |
க꞉ காலசக்ரமதிலங்க⁴யதீத்யபாஸ்த꞉
ஶர்வம் யயௌ ஸ ச ப⁴வந்தமவந்த³தைவ || 33-7 ||

என்ன வேடிக்கை உன் லீலை குட்டி கிருஷ்ணா! துர்வாசர் சுதர்ஸன சக்ரத்திடம் அகப்பட் டுக் கொள்ளாமல் மூன்று லோகமும் ஓடியும் அவரை அது துரத்தியது. ''ப்ரம்மா என்னை காப்பாற்று?'' என்று பிரம்மலோகம் சென்றவரிடம் ''யாரால் இந்த சுதர்சன சக்ரத்தை எதிர்க்க முடியும்? என்னால் முடியவில்லையே'' என்று ப்ரம்மா கையைப் பிசைந்தார். கைலாசத்துக்கு பறந்தார் துர்வாஸர். ''நமஸ்காரம் முனிவரே, என்னால் ஒன்றும் செய்ய முடியாதே நான் என்ன செய்வேன் ?'' என்று சிவனும் அனுப்பிவிட்டார்.

भूयो भवन्निलयमेत्य मुनिं नमन्तं
प्रोचे भवानहमृषे ननु भक्तदास: ।
ज्ञानं तपश्च विनयान्वितमेव मान्यं
याह्यम्बरीषपदमेव भजेति भूमन् ॥८॥

bhuuyO bhavannilayametya muniM namantaM
prOche bhavaanahamR^iShe nanu bhaktadaasaH |
j~naanaM tapashcha vinayaanvitameva maanyaM
yaahyambariiSha padameva bhajeti bhuuman ||8

பூ⁴யோ ப⁴வன்னிலயமேத்ய முனிம் நமந்தம்
ப்ரோசே ப⁴வானஹம்ருஷே நனு ப⁴க்ததா³ஸ꞉ |
ஜ்ஞானம் தபஶ்ச வினயான்விதமேவ மான்யம்
யாஹ்யம்ப³ரீஷபத³மேவ ப⁴ஜேதி பூ⁴மன் || 33-8 ||

''மஹா விஷ்ணு, நீ அல்லவோ காக்கும் கடவுள், உன்னுடைய இந்த சுதர்ஸன சக்ர ஆபத்திலிருந்து என்னை காப்பாற்ற உன்னால் தான் முடியும் அந்த சக்ரத்தை முதலில் நிறுத்து '' என்று வைகுண்டத்தில் கெஞ்சுகிறார் துர்வாசர். நீ அப்போது என்ன சொன்னாய் என்று நினைவிருக்கிறதா கிருஷ்ணா?

''துர்வாஸ முனிவரே, நான் என் பக்தர்களின் அடிமை. உங்களுக்கே இது நன்றாக தெரியும். தவ வலிமையோ, ஞானமோ, விரதமோ, எதுவுமே பணிவோடு கலந்தால் தான் விசேஷம். அம்பரீஷன் சிறந்த பக்திமான், எல்லோரிடத்திலும் பணிவாக அன்பாக நடப்பவன், உங்களை சுதர்ஸன சக்கரத்திலிருந்து என்னால் காப்பாற்ற இயலாது. அது இப்போது என் வசம் இல்லை. ஆகவே நேராக அம்பரீஷனிடம் செல்லுங்கள், அவன் காலடியில் விழுந்து சரணடைவது ஒன்று தான் வழி. சுதர்ஸன சக்ர எஜமானன் அம்பரீஷன் தான். ஓடுங்கள் அவனிடம் உடனே. '' என்று நாடகமாடினாய் அல்லவா?. கபடநாடக சூத்ரதாரி!. இதெல்லாம் வரும் என்று முன்கூட்டியே அறிந்தவன் அல்லவா நீ? அதற்காக அல்லவோ சுதர்ஸன சக்ரத்தை அம்பரீஷன் எதுவும் கேட்காமலேயே அவனுக்கு பரிசளித்தவன்.

तावत्समेत्य मुनिना स गृहीतपादो
राजाऽपसृत्य भवदस्त्रमसावनौषीत् ।
चक्रे गते मुनिरदादखिलाशिषोऽस्मै
त्वद्भक्तिमागसि कृतेऽपि कृपां च शंसन् ॥९॥

taavatsametya muninaa sa gR^ihiitapaadO
raajaa(a)pasR^itya bhavadastramasaavanauShiit |
chakre gate muniradaadakhilaashiShO(a)smai
tvadbhaktimaagasi kR^ite(a)pi kR^ipaaM cha shamsan || 9

தாவத்ஸமேத்ய முனினா ஸ க்³ருஹீதபாதோ³
ராஜா(அ)பஸ்ருத்ய ப⁴வத³ஸ்த்ரமஸாவனௌஷீத் |
சக்ரே க³தே முனிரதா³த³கி²லாஶிஷோ(அ)ஸ்மை
த்வத்³ப⁴க்திமாக³ஸி க்ருதே(அ)பி க்ருபாம் ச ஶம்ஸன் || 33-9 ||

துர்வாஸர் ஞானி. தனது தவறை உணர்ந்ததால் கர்வமோ, வெட்கமோ படவில்லை. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் அம்பரீஷனிடம் ஓடினார். அவன் கால்களை பிடித்துக் கொண்டார் கண்ணை மூடி தியானத்தில் இருந்த அம்பரீஷன் திடுக்கிட்டான். ''மகரிஷி என்ன இது, அபச்சாரம், எழுந்திருங்கள் என்று வேகமாக அவரை தடுத்து நிறுத்தினான். அம்பரீஷன் அருகே துர்வாஸர் நின்றதைக் கண்ட சுதர்ஸன சக்ரம் அவரை அணுகாமல் தூர நின்றது. அம்பரீஷனை முனிவர் அணைப்பதை பார்த்து இனி நமது உதவி இங்கே தேவை இல்லை என்று சென்று விட்டது. ஆனந்தத்தில் துர்வாசர் அம்பரீஷனின் பக்தியை மெச்சினார். வாழ்த்தினார். ஆசிர்வதித்துவிட்டு சென்றார்.

राजा प्रतीक्ष्य मुनिमेकसमामनाश्वान्
सम्भोज्य साधु तमृषिं विसृजन् प्रसन्नम् ।
भुक्त्वा स्वयं त्वयि ततोऽपि दृढं रतोऽभू-
त्सायुज्यमाप च स मां पवनेश पाया: ॥१०

raajaa pratiikshya munimekasamaa-manaashvaan
sambhOjya saadhu tamR^iShiM visR^ijan prasannam |
bhuktvaa svayaM tvayi tatO(a)pi dR^iDhaM ratO(a)bhuutsaayujyamaapa
cha sa maaM pavanesha paayaaH॥10

ராஜா ப்ரதீக்ஷ்ய முனிமேகஸமாமனாஶ்வான்
ஸம்போ⁴ஜ்ய ஸாது⁴ தம்ருஷிம் விஸ்ருஜன்ப்ரஸன்னம் |
பு⁴க்த்வா ஸ்வயம் த்வயி ததோ(அ)பி த்³ருட⁴ம் ரதோ(அ)பூ⁴-
த்ஸாயுஜ்யமாப ச ஸ மாம் பவனேஶ பாயா꞉ || 33-10

அம்பரீஷனைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டேனே. துர்வாஸருடன் சேர்ந்து உணவு அருந்த அல்லவா அவன் காத்திருந்தான். துர்வாசர் சென்றுவிட்டார். அவர் வருவார் என்று ஒரு வருஷம் பூரா ஒன்றும் சாப்பிடாமல் காத்திருந்தான். ஜலம் கூட பருகவில்லை. அப்புறம் ஒருநாள் துர்வாஸர் அம்பரீஷனிடம் வந்தார். அவனே பரிமாறினான் . உணவருந்தினார். அவரை வணங்கி வழியனுப்பினான். வாழ்த்தி விட்டு சென்றபிறகு அவன் ஒரு வருஷ உபவாசத்திற்கு பிறகு அன்றுதான் காத்திருந்து அப்புறம் சாப்பிட்டான். உன்னை போற்றி பாடினான். அப்பா குருவாயூரப்பா, அம்பரீஷனை ரக்ஷித்தது போல் என் மீதும் கருணை காட்டி என் நோயை விலக்கி எனக்கும் அருள் புரிவாய்.