Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 20
20 ரிஷபோபாக்யானம் (ரிஷபதேவரின் கதை)

प्रियव्रतस्य प्रियपुत्रभूता-
दाग्नीध्रराजादुदितो हि नाभि: ।
त्वां दृष्टवानिष्टदमिष्टिमध्ये
तवैव तुष्ट्यै कृतयज्ञकर्मा ॥१॥

ப்ரியவ்ரதஸ்ய ப்ரியபுத்ரபூ₄தா-
தா₃க்₃நீத்₄ரராஜாது₃தி₃தோ ஹி நாபி₄: |
த்வாம் த்₃ருஷ்டவாநிஷ்டத₃மிஷ்டிமத்₄யே
தவைவ துஷ்ட்யை க்ருதயஜ்ஞகர்மா || 1||

1. ப்ரியவ்ரதனின் புத்ரன் ஆக்னீத்ரன் என்ற அரசனுக்கு நாபி என்ற மகன் இருந்தான். தங்களுடைய சந்தோஷத்தின் பொருட்டு நிறைய யாகங்கள் செய்த நாபி, யாகத்தின் நடுவில் வேண்டிய வரங்களைத் தரும் தங்களை தரிசித்தான்.

अभिष्टुतस्तत्र मुनीश्वरैस्त्वं
राज्ञ: स्वतुल्यं सुतमर्थ्यमान: ।
स्वयं जनिष्येऽहमिति ब्रुवाण-
स्तिरोदधा बर्हिषि विश्वमूर्ते ॥२॥

அபி₄ஷ்டுதஸ்தத்ர முநீஶ்வரைஸ்த்வம்
ராஜ்ஞ: ஸ்வதுல்யம் ஸுதமர்த்₂யமாந: |
ஸ்வயம் ஜநிஷ்யே(அ)ஹமிதி ப்₃ருவாண-
ஸ்திரோத₃தா₄ ப₃ர்ஹிஷி விஶ்வமூர்தே || 2||

2. உலகங்களுக்கு நாயகனே! முனிவர்கள் தங்களை வாழ்த்தினர். அரசனான நாபியும் தங்களைத் துதித்து உமக்கு ஒப்பான ஒரு மகன் வேண்டும் என்று வேண்டினார். தாங்களும் “நானே பிறக்கிறேன்” என்று கூறி யாகத்தில் மறைந்தீர்கள்.

नाभिप्रियायामथ मेरुदेव्यां
त्वमंशतोऽभू: ॠषभाभिधान: ।
अलोकसामान्यगुणप्रभाव-
प्रभाविताशेषजनप्रमोद: ॥३॥

நாபி₄ப்ரியாயாமத₂ மேருதே₃வ்யாம்
த்வமம்ஶதோ(அ)பூ₄: ரூஷபா₄பி₄தா₄ந: |
அலோகஸாமாந்யகு₃ணப்ரபா₄வ-
ப்ரபா₄விதாஶேஷஜநப்ரமோத₃: || 3||

3. பிறகு, நாபியின் மனைவியான மேருதேவியிடத்தில் ரிஷபதேவராக அவதரித்தீர்கள். உலகில் வேறெங்கும் காணமுடியாத கல்யாண குணங்களுடன் அனைவருக்கும் அளவற்ற சந்தோஷத்தைக் கொடுத்தீர்கள்.

त्वयि त्रिलोकीभृति राज्यभारं
निधाय नाभि: सह मेरुदेव्या ।
तपोवनं प्राप्य भवन्निषेवी
गत: किलानन्दपदं पदं ते ॥४॥

த்வயி த்ரிலோகீப்₄ருதி ராஜ்யபா₄ரம்
நிதா₄ய நாபி₄: ஸஹ மேருதே₃வ்யா |
தபோவநம் ப்ராப்ய ப₄வந்நிஷேவீ
க₃த: கிலாநந்த₃பத₃ம் பத₃ம் தே || 4||

4. மூவுலகையும் தாங்கி நிற்கும் தங்களிடம், நாபி ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, மேருதேவியோடு வனம் சென்று தவத்தை மேற்கொண்டார். தங்களை வணங்கி, தங்கள் ஸ்தானமான வைகுந்தத்தை அடைந்தார். 

इन्द्रस्त्वदुत्कर्षकृतादमर्षा-
द्ववर्ष नास्मिन्नजनाभवर्षे ।
यदा तदा त्वं निजयोगशक्त्या
स्ववर्षमेनद्व्यदधा: सुवर्षम् ॥५॥

இந்த்₃ரஸ்த்வது₃த்கர்ஷக்ருதாத₃மர்ஷா-
த்₃வவர்ஷ நாஸ்மிந்நஜநாப₄வர்ஷே |
யதா₃ ததா₃ த்வம் நிஜயோக₃ஶக்த்யா
ஸ்வவர்ஷமேநத்₃வ்யத₃தா₄: ஸுவர்ஷம் || 5||

5. தங்களிடம் பொறாமை கொண்ட இந்திரன், தங்களுடைய தேசத்தில் மழையைப் பொழியவில்லை. அப்போது தாங்கள், தங்கள் யோக சக்தியால் அஜனாபம் என்ற தங்களுடைய தேசத்தில் மழை பெய்யச் செய்தீர்கள்.

जितेन्द्रदत्तां कमनीं जयन्ती-
मथोद्वहन्नात्मरताशयोऽपि ।
अजीजनस्तत्र शतं तनूजा-
नेषां क्षितीशो भरतोऽग्रजन्मा ॥६॥

ஜிதேந்த்₃ரத₃த்தாம் கமநீம் ஜயந்தீ-
மதோ₂த்₃வஹந்நாத்மரதாஶயோ(அ)பி |
அஜீஜநஸ்தத்ர ஶதம் தநூஜா-
நேஷாம் க்ஷிதீஶோ ப₄ரதோ(அ)க்₃ரஜந்மா || 6||

6. தோல்வியடைந்த இந்திரன், தன் பெண்ணான ஜயந்தியைத் தங்களுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆத்ம யோகத்தில் ஈடுபட்டவராயிருந்தாலும், தாங்கள், அவள் மூலம் நூறு புத்திரர்களை உண்டுபண்ணினீர்கள். அவர்களில், முதலில் பிறந்தவன் பரதன்.

नवाभवन् योगिवरा नवान्ये
त्वपालयन् भारतवर्षखण्डान् ।
सैका त्वशीतिस्तव शेषपुत्र-
स्तपोबलात् भूसुरभूयमीयु: ॥७॥

நவாப₄வந் யோகி₃வரா நவாந்யே
த்வபாலயந் பா₄ரதவர்ஷக₂ண்டா₃ந் |
ஸைகா த்வஶீதிஸ்தவ ஶேஷபுத்ர-
ஸ்தபோப₃லாத் பூ₄ஸுரபூ₄யமீயு: || 7||

7. மூத்த புத்திரன் பரதன். ஒன்பது புத்திரர்கள் சிறந்த யோகிகளாக ஆனார்கள். ஒன்பது பேர்கள் பாரத நாட்டின் ஒன்பது கண்டங்களை ஆண்டனர். மற்ற எண்பத்தொரு பேர்கள் தவ வலிமையால் பிராம்மணத் தன்மையை அடைந்தனர்.

उक्त्वा सुतेभ्योऽथ मुनीन्द्रमध्ये
विरक्तिभक्त्यन्वितमुक्तिमार्गम् ।
स्वयं गत: पारमहंस्यवृत्ति-
मधा जडोन्मत्तपिशाचचर्याम् ॥८॥

உக்த்வா ஸுதேப்₄யோ(அ)த₂ முநீந்த்₃ரமத்₄யே
விரக்திப₄க்த்யந்விதமுக்திமார்க₃ம் |
ஸ்வயம் க₃த: பாரமஹம்ஸ்யவ்ருத்தி-
மதா₄ ஜடோ₃ந்மத்தபிஶாசசர்யாம் || 8||

8. பிறகு, தாங்கள் சிறந்த முனிவர்களுடன் கூட, புத்திரர்களுக்கு 
முக்தி மார்க்கங்களை உபதேசித்தீர்கள். பிறகு, அவதூதராகப் பித்தன் போல, ஜடம் போல இருந்து வந்தீர்கள்.

परात्मभूतोऽपि परोपदेशं
कुर्वन् भवान् सर्वनिरस्यमान: ।
विकारहीनो विचचार कृत्स्नां
महीमहीनात्मरसाभिलीन: ॥९॥

பராத்மபூ₄தோ(அ)பி பரோபதே₃ஶம்
குர்வந் ப₄வாந் ஸர்வநிரஸ்யமாந: |
விகாரஹீநோ விசசார க்ருத்ஸ்நாம்
மஹீமஹீநாத்மரஸாபி₄லீந: || 9||

9. பிறருக்கு உபதேசித்துக்கொண்டு அவதூதராகவும், பரமானந்தரஸத்தில் மூழ்கினவராகவும் உலகம் முழுவதும் சஞ்சரித்தீர்கள்.

शयुव्रतं गोमृगकाकचर्यां
चिरं चरन्नाप्य परं स्वरूपं ।
दवाहृताङ्ग: कुटकाचले त्वं
तापान् ममापाकुरु वातनाथ ॥१०॥

ஶயுவ்ரதம் கோ₃ம்ருக₃காகசர்யாம்
சிரம் சரந்நாப்ய பரம் ஸ்வரூபம் |
த₃வாஹ்ருதாங்க₃: குடகாசலே த்வம்
தாபாந் மமாபாகுரு வாதநாத₂ || 10||

10. ஓ குருவாயூரப்பா! மலைப்பாம்பு, பசு, மான், காகம், இவற்றின் செய்கைகளை ஏற்று வாழ்ந்து வந்தீர்கள். குடகு மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தங்கள் சரீரம் எரிந்தது. தாங்கள் என்னுடைய தாபங்களைப் போக்க வேண்டும். இவ்வாறு “என்னுடைய தாபங்களைப் போக்குங்கள்” என்று பட்டத்ரி சொல்வது, ஒவ்வொருவரும் இதைப் படித்து, தம்முடைய தாபங்களைப் போக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவேயாகும்.