Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 46
46. அரியாதவன் வாயில் மண்ணு

யசோதை இடம் சென்று கிருஷ்ணன் மண் தின்றான் என்று அவன் நண்பர்கள் கோள் சொல்ல குழந்தைக்கு மண்ணைத்தின்றதால் நோய் வருமோ என்று பயந்து கவலையில் ''கிருஷ்ணா, வாயைத் திற'' என்கிறாள். கண்ணனோ, நான் மண்ணையே திங்க வில்லை என்று சொல்கிறான். அவன் கன்னத்தில் மண் தூள்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவனைக் கட்டாயப்படுத்தி தானே அவன் வாயைத்திறக்கிறாள்.

யசோதை கண்ணன் வாயில் மண்ணைப் பார்த்தாளா? ஆமாம், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் பார்த்தாள் . மயங்கினாள். விழுந்தாள். அரி என்கிற யாதவ குமரன் தனது வாயில் மண்ணாகிய இந்த பூமி, ஆகாசம், மேலுலகம் கீழுலகம் சகலத்தையும் தான் உள்ளடக்கியவன் என்பதை வாயில் காட்சியாக தெரிவித்தான், தெளிவித்தான் என்பது தான் அரி யாதவன் வாயில் மண் என்ற சொல்.

अयि देव पुरा किल त्वयि स्वयमुत्तानशये स्तनन्धये ।
परिजृम्भणतो व्यपावृते वदने विश्वमचष्ट वल्लवी ॥१॥

ayi deva puraa kila tvayi svayamuttaanashaye stanandhaye |
parijR^imbhaNatO vyapaavR^ite vadane vishvamachaShTa vallavii ||

அயி தே³வ புரா கில த்வயி ஸ்வயமுத்தானஶயே ஸ்தனந்த⁴யே |
பரிஜ்ரும்ப⁴ணதோ வ்யபாவ்ருதே வத³னே விஶ்வமசஷ்ட வல்லவீ || 46-1 ||

''என்னப்பா குருவாயூரா, நீ சின்ன குழந்தையாக அம்மா யசோதை மடியில் படுத்து அவளிடம் பால் குடித்தவன், ஒருநாள் உன் வாயைத்திறந்தாய் அதில் ப்ரபஞ்சத்தைப்பார்த்தாள் உன் தாய். அது பற்றி சொல்கிறேன் கேள். கொடுத்து வைத்த கோபி அவள்.


पुनरप्यथ बालकै: समं त्वयि लीलानिरते जगत्पते ।
फलसञ्चयवञ्चनक्रुधा तव मृद्भोजनमूचुरर्भका: ॥२॥

punarapyatha baalakaiH samaM tvayi liilaanirate jagatpate |
phalasa~nchayava~nchanakrudhaa tava mR^idbhOjanamuuchurarbhakaaH || 2

புனரப்யத² பா³லகை꞉ ஸமம் த்வயி லீலானிரதே ஜக³த்பதே |
ப²லஸஞ்சயவஞ்சனக்ருதா⁴ தவ ம்ருத்³போ⁴ஜனமூசுரர்ப⁴கா꞉ || 46-2 ||

ப்ரபஞ்ச காரணனே, ஒருநாள் உன் நண்பர்களோடு நீ கோகுலத்தில் விளையாடிக் கொண்டிருந் தாய், வழக்கம்போல் அவர்களை ஏமாற்றினாய், நாவல் பழங்களை அவர்கள் மரத்தில் ஏறி உதிர்த்தனர். நீ அவற்றை சேகரிக்கும் வேலையாள். ஆனால் நீயோ அவற்றை சுகமாக மண்ணிலிருந்து பொறுக்கி ஒவ்வொன்றாக விழுங்கினாய். கோபம் கொண்ட நண்பர்கள் உன் தாயிடம் உன்னைப் போட்டுக்கொடுத்தார்கள். '
'மாமி, உங்க கிருஷ்ணன் மண்ணை திங்கறான். நாங்க சொன்னா கேக்க மாட்டேங்கிறான்''

अयि ते प्रलयावधौ विभो क्षितितोयादिसमस्तभक्षिण: ।
मृदुपाशनतो रुजा भवेदिति भीता जननी चुकोप सा ॥३॥

ayi te pralayaavadhau vibhO kshiti tOyaadi samasta bhakshiNaH |
mR^idupaashanatO rujaa bhavediti bhiitaa jananii chukOpa saa || 3

அயி தே ப்ரலயாவதௌ⁴ விபோ⁴ க்ஷிதிதோயாதி³ஸமஸ்தப⁴க்ஷிண꞉ |
ம்ருது³பாஶனதோ ருஜா ப⁴வேதி³தி பீ⁴தா ஜனநீ சுகோப ஸா || 46-3 ||

''கிருஷ்ணா, நீ பிரளயத்தின் போது , மண் விண் சகலத்தையும் உனக்குள் அடக்கியவன். உன்னை அறியாத யசோதை, நீ மண் தின்றுவிட்டால் உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்துவிடுமோ என்று ஒரு தாய்க்குறிய கவலையைப் பட்டாள் . உன் மேல் கோபமும் கொண்டாள்.

अयि दुर्विनयात्मक त्वया किमु मृत्सा बत वत्स भक्षिता ।
इति मातृगिरं चिरं विभो वितथां त्वं प्रतिजज्ञिषे हसन् ॥४॥

ayi durvinayaatmaka tvayaa kimu mR^itsaa bata vatsa bhakshitaa |
iti maatR^igiraM chiraM vibhO vitathaaM tvaM pratijaj~niShe hasan || 4

அயி து³ர்வினயாத்மக த்வயா கிமு ம்ருத்ஸா ப³த வத்ஸ ப⁴க்ஷிதா |
இதி மாத்ருகி³ரம் சிரம் விபோ⁴ விததா²ம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸன் || 46-4 ||

'' டேய், கிருஷ்ணா , வாடா இங்கே, எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன், கண்டதெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளாதே என்று. மண்ணை வாரி வாயில் போட்டிக்கொண்டாயாமே , மண் தின்றாயா சொல்? சொல் ? '' என கேட்கிறாள். கோபமாக. நீ அவளை மயக்க சிரித்துக்கொண்டே ''இல்லையே '' என்று தலையாட்டினாய். அவள் கோபத்தை நீ துளியும் லக்ஷியம் பண்ணவில்லை.

अयि ते सकलैर्विनिश्चिते विमतिश्चेद्वदनं विदार्यताम् ।
इति मातृविभर्त्सितो मुखं विकसत्पद्मनिभं व्यदारय: ॥५॥

ayite sakalairvinishchite vimatishchedvadanaM vidaaryataam |
iti maatR^ivibhartsitO mukhaM vikasatpadmanibhaM vyadaarayaH || 5

அயி தே ஸகலைர்வினிஶ்சிதே விமதிஶ்சேத்³வத³னம் விதா³ர்யதாம் |
இதி மாத்ருவிப⁴ர்த்ஸிதோ முக²ம் விகஸத்பத்³மனிப⁴ம் வ்யதா³ரய꞉ || 46-5 ||

அம்மாவுக்கு ஆத்திரமும் கவலையும் ஒன்று சேர்ந்தது. கொஞ்சம் சமாதானமடைந்து சமரசம் பேசினாள் . ''என் குட்டி கண்ணா, அவர்கள் சொல்வது தப்பாகவே இருக்கட்டும். என் செல்ல ராஜா, எங்கே அம்மாவுக்கு உன் வாயை திறந்து காமி, பார்த்துவிட்டு நீ மண் தின்னவில்லை நீ நிஜம் தான் சொல்றே என்று அவர்கள் கிட்டே சொல்றேன்'' . அம்மாவின் மேல் மனம் இரங்கி நீயும் மெல்ல மெல்ல உன் வாயைத் திறந்தாய். ஒரு செந்தாமரைப் பூ மொட்டு அவிழ்வது போல் இருந்தது நீ மெதுவாக வாயைத் திறந்தபோது.

अपि मृल्लवदर्शनोत्सुकां जननीं तां बहु तर्पयन्निव ।
पृथिवीं निखिलां न केवलं भुवनान्यप्यखिलान्यदीदृश: ॥६॥

api mR^illavadarshanOtsukaaM jananiiM taaM bahu tarpayanniva |
pR^ithiviiM nikhilaaM na kevalaM bhuvanaanyapyakhilaanyadiidR^ishaH || 6

அபி ம்ருல்லவத³ர்ஶனோத்ஸுகாம் ஜனநீம் தாம் ப³ஹு தர்பயன்னிவ |
ப்ருதி²வீம் நிகி²லாம் ந கேவலம் பு⁴வனான்யப்யகி²லான்யதீ³த்³ருஶ꞉ || 46-6 ||

அம்மாவின் சந்தேகத்தைப் போக்க, அவளைத் திருப்தி படுத்த, நீ அவள் நன்றாக சோதித்து பார்க்கட்டும், என்று வாயைத் திறந்தாய். அவள் கோகுலத்தில் நந்த கோபன் வீட்டு தோட்டத்தில் நாவல்பழ மரத்தடியில் இருந்த மண்ணையா உன் வாயில் பார்த்தாள்? அகில புவனம், அண்ட சராசரம், சப்த சமுத்திரம், வானம், சூரிய நக்ஷத்ர மண்டலங்கள் சகலமும் அங்கே தரிசனம் தந்ததே.
உன் விஸ்வ ரூப தரிசனத்தை பார்த்த முதல் பெண்மணி யசோதை தான்.

कुहचिद्वनमम्बुधि: क्वचित् क्वचिदभ्रं कुहचिद्रसातलम् ।
मनुजा दनुजा: क्वचित् सुरा ददृशे किं न तदा त्वदानने ॥७॥

kuhachidvanamambudhiH kvachitkvachidabhraM kuhachidrasaatalam |
manujaa danujaaH kvachitsuraa dadR^ishe kiM na tadaa tvadaanane || 7

குஹசித்³வனமம்பு³தி⁴꞉ க்வசித் க்வசித³ப்⁴ரம் குஹசித்³ரஸாதலம் |
மனுஜா த³னுஜா꞉ க்வசித்ஸுரா த³த்³ருஶே கிம் ந ததா³ த்வதா³னனே || 46-7 ||

''கண்ணா, உன் திறந்த வாயில், கடல்கள் , காடுகள், சப்த லோகங்கள், அண்ட சராசரங்கள் ஈரேழு புவனங்கள், அசுரர்கள், தேவர்கள், மாந்தர்கள் சகலமும் தெரிந்தது.

कलशाम्बुधिशायिनं पुन: परवैकुण्ठपदाधिवासिनम् ।
स्वपुरश्च निजार्भकात्मकं कतिधा त्वां न ददर्श सा मुखे ॥८॥

kalashaambudhi shaayinaM punaH paravaikuNTha padaadhivaasinam |
svapurashcha nijaarbhakaatmakaM katidhaa tvaaM na dadarsha saa mukhe || 8

கலஶாம்பு³தி⁴ஶாயினம் புன꞉ பரவைகுண்ட²பதா³தி⁴வாஸினம் |
ஸ்வபுரஶ்ச நிஜார்ப⁴காத்மகம் கதிதா⁴ த்வாம் ந த³த³ர்ஶ ஸா முகே² || 46-8 ||

நாராயணா, யசோதை உன்னையும் உன் வாயில் பார்த்தாள், பாற்கடலில் பள்ளிகொண்ட பரமாத்மா நீயும் தெரிந்தாய். வைகுண்ட தரிசனம் கண்டாள் . அதே சமயம் வாயைத்திறந்து சின்ன கிருஷ்ணன் பையனாக அம்மா எதிரில் நீயும் தெரிந்தாய். யசோதை அன்று அப்போது பார்க்காத வஸ்து ஒன்று பாக்கி இல்லை.

विकसद्भुवने मुखोदरे ननु भूयोऽपि तथाविधानन: ।
अनया स्फुटमीक्षितो भवाननवस्थां जगतां बतातनोत् ॥९॥

vikasad bhuvane mukhOdare nanu bhuuyO(a)pi tathaa vidhaananaH |
anayaa sphuTamiikshitO bhavaananavasthaaM jagataaM bataatanOt || 9

விகஸத்³பு⁴வனே முகோ²த³ரே நனு பூ⁴யோ(அ)பி ததா²விதா⁴னன꞉ |
அனயா ஸ்பு²டமீக்ஷிதோ ப⁴வானநவஸ்தா²ம் ஜக³தாம் ப³தாதனோத் || 46-9 ||

''உன் வாயில், அவள் எதிரே நீ வாயைத் திறந்து நிற்பதுவும் தெரிந்தது. ''ஆஹா இந்த உலகம் எல்லையற்றது என்று புரிந்தது. சாஸ்வதம் இல்லாதது. தோன்றி மறைவது என்றும் புரிந்தது.

धृततत्त्वधियं तदा क्षणं जननीं तां प्रणयेन मोहयन् ।
स्तनमम्ब दिशेत्युपासजन् भगवन्नद्भुतबाल पाहि माम् ॥१०॥

dhR^itatattvadhiyaM tadaa kshaNaM jananiiM taaM praNayena mOhayan |
stanamamba dishetyupaasajan bhagavannadbhutabaala paahi maam ||10

த்⁴ருததத்த்வதி⁴யம் ததா³ க்ஷணம் ஜனநீம் தாம் ப்ரணயேன மோஹயன் |
ஸ்தனமம்ப³ தி³ஶேத்யுபாஸஜன் ப⁴க³வன்னத்³பு⁴தபா³ல பாஹி மாம்

யசோதைக்கு நாடி நரம்பெல்லாம் தளர்ந்தது, கண் இருண்டது , மூச்சு நின்றுவிட்டதா என்றே தெரியவில்லை, மதி மயங்கி தலை சாய்ந்தாள். க்ஷண காலத்தில் பழைய நிலைக்கு அவள் திரும்ப நீ உதவினாய். அவள் மனதை மாற்ற , மாயையைப் போக்க நினைத்த நீ உன் மோகனப் புன்னகை யை உதிர்த்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாய்.

'' அம்மா எனக்கு பசிக்கிறது பால் கொடு என்று பேச்சை மாற்றினாய். அவள் மடியில் தானாகவே போய் படுத்துக்கொண்டாய். அதிசயிக்க குழைந்தை யடா நீ, எண்டே குருவாயூரப்பா, என்னையும் நோய் தீர்த்து ரக்ஷிப்பாய்.''