Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 56
56, காளிங்கனுக்கு உயிர்ப்பிச்சை.

தன்னிடமிருந்த அனைத்து விஷத்தையும் கக்கி முடித்து ரத்தமும் சிந்தின காளிங்கனை மரணம் நெருங்கியது. அப்போது காளிங்கனின் நாக மனைவிகள் கிருஷ்ணனைச் சரணடைந்து எங்கள் கணவன் உயிரைக் காப்பாற்றவேண்டும் என வேண்டினார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று, ''காளிங்கா, உயிர் பிழைத்துப் போ. உடனே காளிந்தி நதியை விட்டு ஓடு. இந்தப்பக்கம் கூட இனி தலை வைத்து படுக்காதே. இல்லையேல் ஒரேயடியாக படுக்கை தான் உனக்கு '' என கருணையோடு கண்ணன் கட்டளையிட்டான். காளிங்கனின் விஷத்தை அகற்றி காளிந்தி நதி நீரை மீண்டும் புனிதமாக்கினான். பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் இனி எந்த தடையும் இல்லாமல் செய்தான். அது முதல் காளிந்தியில் யார் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு ஸ்ராத்தம் பண்ணினாலும் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்பது அசையாத நம்பிக்கை பிறந்தது.
இனி ஸ்லோகங்களுக்குள் போவோம்;

रुचिरकम्पितकुण्डलमण्डल: सुचिरमीश ननर्तिथ पन्नगे ।
अमरताडितदुन्दुभिसुन्दरं वियति गायति दैवतयौवते ॥१॥

ruchirakampita kuNDalamaNDalaH suchiramiisha nanartitha pannage |
amarataaDita dundubhisundaram viyati gaayati daivatayauvate || 1

ருசிரகம்பிதகுண்ட³லமண்ட³ல꞉
ஸுசிரமீஶ நனர்தித² பன்னகே³ |
அமரதாடி³தது³ந்து³பி⁴ஸுந்த³ரம்
வியதி கா³யதி தை³வதயௌவதே || 56-1 ||

''என்னப்பா குருவாயூரா , சங்கீதத்தை ரசித்து கேட்கும்போது நமது சிரமும் கரமும் சங்கீத வித்துவான் அங்கத்தைப் போலவே அசைகிறது. தாளம் போடுகிறது. அது போல் தான் விண்ணில் அபசரஸ்கள் நீ காளிங்கன் சிரத்தில் நடமாடுவதை அபிநயித்து ஆடினார்கள். உன் கால் சிலம்பு எழுப்பிய வாத்ய ஒலிக்கு இசைந்து பாடினார்கள்.தேவர்களும் விண்ணவர்களும் ரசித்து சிரக்கம்பம் , கரக்கம்பம் செய்தார்கள். உனது காதில் ஆடிய குண்டலங்கள் எழுப்பிய கண கண ஒலி செவிக்கினிமை சேர்க்க, விண்ணவர்களின் வாத்தியங்களும் ஜோடி சேர்ந்துகொண்டது.
காளிங்கன் தலை ஒரு நடன அரங்கமாகி விட்டது கண்ணா, உனக்கு.

नमति यद्यदमुष्य शिरो हरे परिविहाय तदुन्नतमुन्नतम् ।
परिमथन् पदपङ्करुहा चिरं व्यहरथा: करतालमनोहरम् ॥२॥

namati yadyadamuShya shirO hare parivihaaya tadunnatamunnatam |
parimathan padapankaruhaa chiraM vyaharathaaH karataala manOharam || 2

நமதி யத்³யத³முஷ்ய ஶிரோ ஹரே
பரிவிஹாய தது³ன்னதமுன்னதம் |
பரிமத²ன்பத³பங்கருஹா சிரம்
வ்யஹரதா²꞉ கரதாலமனோஹரம் || 56-2 ||

காளிங்கனின் எண்ணற்ற சிர ங்கள், மேலே உயர்ந்தும் கீழே தாழ்ந்தும் உன் காலடி அசைவுக்கேற்ப இயங்கியதால் அவன் விரித்த படங்கள் மேலும் கீழுமாக அசைந்தாடியதில் கிருஷ்ணா உன் நர்த்தனம் அபாரமாக வெகுநேரம் தொடர்ந்தது.

त्वदवभग्नविभुग्नफणागणे गलितशोणितशोणितपाथसि ।
फणिपताववसीदति सन्नतास्तदबलास्तव माधव पादयो: ॥३॥

tvadavabhagna vibhugna phaNaagaNe galitashONita shONitapaathasi |
phaNipataavavasiidati sannataaH tadabalaastava maadhava paadayOH || 3

த்வத³வப⁴க்³னவிபு⁴க்³னப²ணாக³ணே
க³லிதஶோணிதஶோணிதபாத²ஸி |
ப²ணிபதாவவஸீத³தி ஸன்னதா-
ஸ்தத³ப³லாஸ்தவ மாத⁴வ பாத³யோ꞉ || 56-3 ||

ஹே , மாதவா, தலை மேல் இடி இறங்கினால் சுகமாகவா இருக்கும்? உனது நடனத்தில் , நர்த்தனத்தில் ஒவ்வொருமுறையும் கால்களை மாற்றி மாற்றி அவன் தலைமேல் பதித்தபோது காளிங்கன் சிரங்கள் நொறுங்கின. ரத்தம் கக்கினான். காளிந்தி நதி நீரின் வண்ணம், நிலத்திலிருந்து சிவப்பாக மாறியது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்க ஆரம்பித்தான். அவனது மனைவிகள் இதைக் கண்டு பதறினார்கள். வெடவெடவென்று பயத்தில் நடுங்கி உன் ஆளுமையைக் கண்டு அஞ்சி, பக்தியோடு உன் திருவடியை சரணடைந்தார்கள்.

अयि पुरैव चिराय परिश्रुतत्वदनुभावविलीनहृदो हि ता: ।
मुनिभिरप्यनवाप्यपथै: स्तवैर्नुनुवुरीश भवन्तमयन्त्रितम् ॥४॥

ayi puraiva chiraaya parishruta tvadanubhaava viliina hR^idO hi taaH |
munibhirapyanavaapyapathaiH stavaiH nunuvuriisha bhavanta-mayanitratam ||

அயி புரைவ சிராய பரிஶ்ருத-
த்வத³னுபா⁴வவிலீனஹ்ருதோ³ ஹி தா꞉ |
முனிபி⁴ரப்யனவாப்யபதை²꞉ ஸ்தவை-
ர்னுனுவுரீஶ ப⁴வந்தமயந்த்ரிதம் || 56-4 ||

கண்களில் நீர் மல்க அந்த பெண் நாகங்கள் உன் புகழ் பாடின, உன் பராக்ரமத்தை போற்றின. கிருஷ்ணா, உன் உருவம் சிறிது உன் மஹிமை பெரிது என்று பரம ஞானிகளைப் போல் அந்த நாகங்களும் உணர்ந்து உன் கருணையை வேண்டின. பக்தியால் மனம் உருகின.

फणिवधूगणभक्तिविलोकनप्रविकसत्करुणाकुलचेतसा ।
फणिपतिर्भवताऽच्युत जीवितस्त्वयि समर्पितमूर्तिरवानमत् ॥५॥

phaNivadhuujana bhaktivilOkana pravikasat karuNaakula chetasaa |
phaNipati-rbhavataa(a)chyuta jiivitaH tvayi samarpita muurti ravaanamat || 5

ப²ணிவதூ⁴ஜனப⁴க்திவிலோகன-
ப்ரவிகஸத்கருணாகுலசேதஸா |
ப²ணிபதிர்ப⁴வதாச்யுத ஜீவித-
ஸ்த்வயி ஸமர்பிதமூர்திரவானமத் || 56-5 ||

குருவாயூரப்பா, ஆனந்த நடனமாடிக்கொண்டிருந்த உன் கவனத்தை அந்த பெண் நாகங்கள் ஈர்த்தன. எவ்வளவு பாக்யம் செய்திருக்கவேண்டும் அவை.! பரமாத்மா, கருணாசாகரமே, அந்த பெண் நாகங்களின் பக்தியை மெச்சினாய். இவர்களுக்காகவாவது இந்த காளிங்கனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கவேண்டும் என்று ஒரு கருணை பிறந்தது. அவன் மரணத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான். அப்படியே உன் திருவடியில் சுருண்டு விழுந்தான்.

रमणकं व्रज वारिधिमध्यगं फणिरिपुर्न करोति विरोधिताम् ।
इति भवद्वचनान्यतिमानयन् फणिपतिर्निरगादुरगै: समम् ॥६॥

ramaNakaM vraja vaaridhi madhyagaM phaNiripurna karOti virOdhitaam |
iti bhavadvachanaanyati maanayan phaNipati rniragaa duragaiH samam || 6

ரமணகம் வ்ரஜ வாரிதி⁴மத்⁴யக³ம்
ப²ணிரிபுர்ன கரோதி விரோதி⁴தாம் |
இதி ப⁴வத்³வசனான்யதிமானயன்
ப²ணிபதிர்னிரகா³து³ரகை³꞉ ஸமம் || 56-6 ||

வாதபுரீசா, எங்கோ கடல்களினிடையே உள்ள ரமணகம் எனும் தனித்த தீவுக்கு ''காலிங்கா, நீ இங்கிருந்து சென்றுவிடு, அங்கே உனக்கு கருடனின் தொல்லை இருக்காது, உடனே செல்'' என்று நீ கூறியதும், காளிங்கன் உன்னை மனமார வணங்கினான். வாழ்த்தினான். பகைவனுக்கும் அருளும் நெஞ்சு உனக்கு. மற்ற நாகங்கள் பின் தொடர மெதுவாக காளிந்தி நதியை விட்டு நகர்ந்தான்.

फणिवधूजनदत्तमणिव्रजज्वलितहारदुकूलविभूषित: ।
तटगतै: प्रमदाश्रुविमिश्रितै: समगथा: स्वजनैर्दिवसावधौ ॥७॥

phaNivadhuujana dattamaNi vraja jvalitahaara dukuula vibhuuShitaH |
taTagataiH pramadaashruvimishritaiH samagathaaH svajanai-rdivasaavadhau || 7

ப²ணிவதூ⁴ஜனத³த்தமணிவ்ரஜ-
ஜ்வலிதஹாரது³கூலவிபூ⁴ஷித꞉ |
தடக³தை꞉ ப்ரமதா³ஶ்ருவிமிஶ்ரிதை꞉
ஸமக³தா²꞉ ஸ்வஜனைர்தி³வஸாவதௌ⁴ || 56-7 ||

கண்ணா, உன்மேல் அன்பும் பாசமும் நேசமும் கொண்ட நெஞ்சங்களில் மனிதர்கள் மட்டுமா உண்டு? நடப்பன, ஊர்வன, பறப்பன, மிதப்பன போன்ற எண்ணற்ற மற்ற ஜீவராசிகளும் கூட உண்டே. நன்றிப்பெருக்கோடு காளிங்கன் மனைவிகள் உனக்கு ஒளி வீசும் நாகமணிகளை பரிசளித்தார்கள். வஸ்திரங்கள் அளித்தார்கள். அன்போடு தந்ததை ஆவலோடு பெற்று அணிந்தாய், அழகுக்கு அழகு கூடியது. காளிந்தி நதிக்கரையில் எல்லோரும் உனக்காக காத்திருந் தார்கள். அவர்களை நெருங்கினாய். நீ காளிந்தி நதி நீரில் நனைந்திருந்தாய். அவர்கள் அனைவரும் ஆனந்தக்கண்ணீரில் நனைந்திருந்தார்கள்.

निशि पुनस्तमसा व्रजमन्दिरं व्रजितुमक्षम एव जनोत्करे ।
स्वपति तत्र भवच्चरणाश्रये दवकृशानुररुन्ध समन्तत: ॥८॥

nishipunastamasaa vrajamandiraM vrajitumakshama eva janOtkare |
svapiti tatra bhavachcharaNaashraye davakR^ishaanurarundha samantataH || 8

நிஶி புனஸ்தமஸா வ்ரஜமந்தி³ரம்
வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜனோத்கரே |
ஸ்வபதி தத்ர ப⁴வச்சரணாஶ்ரயே
த³வக்ருஶானுரருந்த⁴ ஸமந்தத꞉ || 56-8 ||

இரவு வந்தது இருள் கவிந்தது. வ்ரஜ பூமியில் எவரும் வீடு செல்லவில்லை. அங்கேயே உன் திருவடிகளில் சரணடைந்து ஆனந்தமாக உறங்கினார்கள். அந்நேரம் அந்த பிரிந்தாவன வனப்பகுதியில் தீப்பரவியது. அவர்களை சுற்றி நாலாபக்கமும் தீப் பிழம்புகள்.

प्रबुधितानथ पालय पालयेत्युदयदार्तरवान् पशुपालकान् ।
अवितुमाशु पपाथ महानलं किमिह चित्रमयं खलु ते मुखम् ॥९॥

prabudhitaanatha paalaya paalayetyudayadaarta ravaan pashupaalakaan |
avitumaashu papaatha mahaanalaM kimiha chitramayaM khalu te mukham || 9

ப்ரபு³தி⁴தானத² பாலய பாலயே-
த்யுத³யதா³ர்தரவான் பஶுபாலகான் |
அவிதுமாஶு பபாத² மஹானலம்
கிமிஹ சித்ரமயம் க²லு தே முக²ம் || 56-9 ||

''பகவானே எங்களை காப்பாற்று'' என்ற குரல் அவர்களிடமிருந்து ஒலித்தது. உனக்கு இது என்ன பிரமாதம்? வாயைத்திறந்து காற்றை உள்ளிழுத்தாய். அத்தனை நெருப்பும் உன் வாய்க்குள் காற்றோடு கலந்து புகுந்தது. நீரைக்குடிப்பது போல் அக்னியைக் குடித்தாய். உன் உடலே அக்னிமயமானதுதானே கிருஷ்ணா!

शिखिनि वर्णत एव हि पीतता परिलसत्यधुना क्रिययाऽप्यसौ ।
इति नुत: पशुपैर्मुदितैर्विभो हर हरे दुरितै:सह मे गदान् ॥१०॥

shikhini varNata eva hi piitataa parilasatyadhunaa kriyayaapyasau |
iti nutaH pashupai-rmuditai-rvibhO hara hare duritaiH saha me gadaan ||10

ஶிகி²னி வர்ணத ஏவ ஹி பீததா
பரிலஸத்யுத⁴னா க்ரியயா(அ)ப்யஸௌ |
இதி நுத꞉ பஶுபைர்முதி³தைர்விபோ⁴
ஹர ஹரே து³ரிதை꞉ ஸஹ மே க³தா³ன் || 56-10 ||

மஞ்சளுக்கும் சிவப்புக்கும் ரொம்ப நல்ல பொருத்தம். உன் பீதாம்பரத்துக்கும் அக்னிக்கும் அதே தொடர்போ? கோபர்கள் ஆச்சர்யமடைந்து எங்கே தீ காணாமல் போயிற்று என்று வியந்து உன்னை புகழ்ந்தனர். வணங்கினார்கள். ஒருவேளை நீ தான் அக்னிப்பிழம்பாக தோன்றினாயோ? உன்னுள்ளே அக்னி சென்றதும் நீ மேலும் பொன் வண்ணமாக ஜொலித்தாய். எண்டே குருவாயூரப்பா, என்னே உன் பெருமை. என் நோயையும் சுட்டெரிப்பாய், என்னை ரக்ஷிப்பாய்