Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 69
69. எவரும் காணா இன்பம்

நாராயணன் எங்கிருக்கிறானோ அங்கே நாரதர் இருப்பார். திரிலோக சஞ்சாரி. அவர் மூலம் பிருந்தாவன கோகுல அதிசயங்களை தேவர்கள் அறிந்து கண்ணனைக் காண ஆவல் கொண்டார்கள். கண்ணன் எத்தனை கோபியர் உண்டோ அத்தனை கண்ணன்களாக மாறி பார்க்குமிடமெங்கும் பரமானந்தமே உருவாகத் தோன்றி அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த அதிசயத்தை கேட்டு ஆனந்தம் கொண்டார்கள்.

केशपाशधृतपिञ्छिकाविततिसञ्चलन्मकरकुण्डलं
हारजालवनमालिकाललितमङ्गरागघनसौरभम् ।
पीतचेलधृतकाञ्चिकाञ्चितमुदञ्चदंशुमणिनूपुरं
रासकेलिपरिभूषितं तव हि रूपमीश कलयामहे ॥१॥

keshapaashadhR^ita pinichChakaavitati sanchalanmakarakuNDalam
haarajaala vanamaalikaa lalitamangaraagaghana saurabham |
piitacheladhR^ita kaa~nchi kaa~nchitamuda~nchadamshumaNi nuupuram
raasakeli paribhuuShitaM tava hi ruupamiisha kalayaamahe || 1

கேஶபாஶத்⁴ருதபிஞ்சி²காவிததிஸஞ்சலன்மகரகுண்ட³லம்
ஹாரஜாலவனமாலிகாலலிதமங்க³ராக³க⁴னஸௌரப⁴ம் |
பீதசேலத்⁴ருதகாஞ்சிகாஞ்சிதமுத³ஞ்சத³ம்ஶுமணினூபுரம்
ராஸகேலிபரிபூ⁴ஷிதம் தவ ஹி ரூபமீஶ கலயாமஹே || 69-1 ||

ப்ரபோ , நாராயணா, லோகநாயகா, உன் ஆத்ம ஸ்வரூபத்தை தியானம் செய்து வணங்குகிறேன். ஆஹா உன்னுடைய திவ்ய ரூபத்தை அலங்கரித்து நீ புரியும் ராஸ க்ரீடையைக் காணும் கண்கள் புண்யம் செய்தவை. எவருக்கும் கிடைக்காத பேரதிர்ஷ்டம் அல்லவா இது.? எத்தனை தலைகள் உண்டோ, அத்தனையிலும் அழகிய வண்ண வண்ண மயிலிறகுகள் அழகாக ஆடி மனத்தைக் கொள்ளை கொண்டு ''வா'' வென்று அழைக்கிறதே. அலை அலையான கருங்கூந்தலிடையே நீல வர்ணம் எடுப்பாக கண்ணைப் பறிக்கிறதே . மகர குண்டலங்கள் காதுகளில் ஜொலிக்கிறதே. மீன்கள் துள்ளி ஓடுவதைப் போல அவை அசைகிறதே. உனக்கு வனமாலி என்று அல்லவா ஒரு பெயர். ஆஹா எவ்வளவு தினுஸு தினுஸாக பல நிறங்களில் பூக்கள் மாலைகளாக உன் கழுத்தை, மார்பை அலங்கரிக்கிறது. சந்தனமும் ஜவ்வாதும், வாசனை திரவியங்களும் கம்மென்று எங்கும் மணம் வீசும்படியாக உன் தேகத்தில் பூசி விட்டிருக்கிறார்கள் அந்த கோபியர்கள். உனக்கென்றே எடுப்பாக கருப்பில் மஞ்சள் நிற காம்பினேஷனாக combination பீதாம்பர வஸ்திரம் உடுத்தி இருக்கிறாயே. இறுக்கி முடிந்த அதன் அழகே தனி. காலில் தண்டை, கொலுசு சலங்கை கலீர் கலீர் என்று ஒலித்து உன் அசைவுக்கு பக்க வாத்யமா? பலே பலே. அதன் ஜொலிப்பு கண்ணைக் கூசுகிறதே கிருஷ்ணா!.

तावदेव कृतमण्डने कलितकञ्चुलीककुचमण्डले
गण्डलोलमणिकुण्डले युवतिमण्डलेऽथ परिमण्डले ।
अन्तरा सकलसुन्दरीयुगलमिन्दिरारमण सञ्चरन्
मञ्जुलां तदनु रासकेलिमयि कञ्जनाभ समुपादधा: ॥२॥

taavadeva kR^itamaNDane kalita ka~nchuliika kuchamaNDale
gaNDalOlamaNikuNDale yuvati maNDale(a)tha parimaNDale |
antaraa sakala sundarii yugalamindiraaramaNa sa~ncharan
manjulaantadanu raasakelimayi ka~njanaabha samupaadadhaaH || 2

தாவதே³வ க்ருதமண்ட³னே கலிதகஞ்சுலீககுசமண்ட³லே
க³ண்ட³லோலமணிகுண்ட³லே யுவதிமண்ட³லே(அ)த² பரிமண்ட³லே |
அந்தரா ஸகலஸுந்த³ரீயுக³லமிந்தி³ராரமண ஸஞ்சரன்
மஞ்ஜுலாம் தத³னு ராஸகேலிமயி கஞ்ஜனாப⁴ ஸமுபாத³தா⁴꞉ || 69-2 ||

என்ன கோலாகலம் இங்கே, கோகுல பிருந்தாவனத்தில். உன்னைச் சுற்றிலும் வட்டமாக கோபியர்கள். அழகான ஆடைகள் உடுத்து, ஆபரணங்கள் மின்னி ஒளிவீச அவற்றைவிட அவர்கள் முக காந்தி கண்ணைக் கவர அவர்கள் உன்னைக் கை கோர்த்து ஆடும் அழகே அழகு. என் தெய்வமே, பத்மநாபா, லக்ஷ்மி மணாளா, ஸ்ரீபதி, ஒவ்வொரு அழகியின் கையையும் கோர்த்துக் கொண்டு தனித்தனியாக நீ பல கிருஷ்ணன்களாக அங்கே ஜோடி சேர்ந்து ஆடுகிறாயே . எவ்வளவு லாகவமாக உன் அழகிய கால்கள் நர்த்தனமாடுகிறது. அது எப்படி உன் அழகு அத்தனை பேரழகிகளின் அழகை விட ஒரு படி மேலாகவே ஆனந்தமாக காண்கிறது? நீ எங்கே எப்போது இவ்வளவு அழகாக தாளம் ஜதி தப்பாமல் ஆடக் கற்றாய்? நீ தான் நடனத்தின் உருவமா?

वासुदेव तव भासमानमिह रासकेलिरससौरभं
दूरतोऽपि खलु नारदागदितमाकलय्य कुतुकाकुला ।
वेषभूषणविलासपेशलविलासिनीशतसमावृता
नाकतो युगपदागता वियति वेगतोऽथ सुरमण्डली ॥३॥

vaasudeva tava bhaasamaanamiha raasakeli rasasaurabhaM
duuratO(a)pi khalu naaradaagaditamaakalayya kutukaakulaa |
veShabhuuShaNa vilaasa peshala vilaasinii shatasamaavR^itaa
naakatO yugapadaagataa viyati vegatO(a)tha suramaNDalii || 3

வாஸுதே³வ தவ பா⁴ஸமானமிஹ ராஸகேலிரஸஸௌரப⁴ம்
தூ³ரதோ(அ)பி க²லு நாரதா³க³தி³தமாகலய்ய குதுகாகுலா꞉ |
வேஷபூ⁴ஷணவிலாஸபேஶலவிலாஸினீஶதஸமாவ்ருதா
நாகதோ யுக³பதா³க³தா வியதி வேக³தோ(அ)த² ஸுரமண்ட³லீ || 69-3 ||

வாஸுதேவா , உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, இங்கு யமுனை நதிக்கரையில் நடப்பதெல்லாம் விண்ணுலகில் அப்படியே ரிப்போர்ட் ஆகிவிட்டது. எண்ணற்ற விண்ணவர்கள் உன் திவ்ய சுந்தர ஸ்வரூபத்தைக் காண துடிக்கிறார்கள் இதற்கு யார் காரணம் தெரியுமா. நாரத முனிதான். தான் கண்டு மகிழ்ந்ததெல்லாம் வானமெங்கும் பரப்பியிருக்கிறார். மேலே பார். வானமெங்கும் எத்தனை கண்கள் விண்ணிலிருந்து மண்ணை நோக்குகின்றன. அவற்றில் நிறைந்திருக்கும் பக்தி பரவச பேரானந்தத்தைக் கவனித்தாயா?.

वेणुनादकृततानदानकलगानरागगतियोजना-
लोभनीयमृदुपादपातकृततालमेलनमनोहरम् ।
पाणिसंक्वणितकङ्कणं च मुहुरंसलम्बितकराम्बुजं
श्रोणिबिम्बचलदम्बरं भजत रासकेलिरसडम्बरम् ॥४॥

veNunaadakR^ita taanadaanakala gaanaraaga gatiyOjanaa
lObhaniiya mR^idu paada paata kR^ita taala melana manOharam |
paaNisankvaNita kankaNaM cha muhuramsalambita karaambujam
shrONi bimbachaladambaraM bhajata raasakeli rasa Dambaram ||4

வேணுனாத³க்ருததானதா³னகலகா³னராக³க³தியோஜனா-
லோப⁴னீயம்ருது³பாத³பாதக்ருததாலமேலனமனோஹரம் |
பாணிஸங்க்வணிதகங்கணம் ச முஹுரம்ஸலம்பி³தகராம்பு³ஜம்
ஶ்ரோணிபி³ம்ப³சலத³ம்ப³ரம் ப⁴ஜத ராஸகேலிரஸட³ம்ப³ரம் || 69-4 ||

வட்டமிட்ட கோபியர் கூட்டத்தில் நடுவே ஒரு கிருஷ்ணன், பின்னிய கால்களோடு ஆனந்தமாக வேணுகானம் புரிகிறான். அவனது இசை அல்லவோ எல்லாவற்றையும், எல்லோரையும் அசைய வைக்கிறது. நான் இசைத்தால் அசையும் அகிலமெல்லாமே என்கிறதே. அதற்கு பின்னணியாக கோபியரின் கலகலவென்ற சிரிப்பு, ஆஹா ஓஹோ என்ற ஆனந்த களிப்பு.

கைவளைகளின் ஓசை, ஆபரணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து பொன்னூஞ்சல் ஓசை. கை தட்டுகிறார்கள், காலடிகளால் சப்தமிடுகிறார்கள். நாட்ய பாவங்கள், அசைவுகள் தெரிந்தவர்களாக இருக்கிறார்களே! ஒவ்வொருத்தி தோளிலும் உன் கை ஆசையாக அன்பாக அணைத்தபடி இருக்கிறதே. இதற்கிடையே புதுப் பட்டுச் சேலைகளின் சர சர சப்தம் வேறு. நமக்கு பழக்கமானது தான். கல்யாண வீடுகளிலேயே நாம் எத்தனை பட்டுச் சேலை சப்தங்கள் கேட்கிறோம்.

स्पर्धया विरचितानुगानकृततारतारमधुरस्वरे
नर्तनेऽथ ललिताङ्गहारलुलिताङ्गहारमणिभूषणे ।
सम्मदेन कृतपुष्पवर्षमलमुन्मिषद्दिविषदां कुलं
चिन्मये त्वयि निलीयमानमिव सम्मुमोह सवधूकुलम् ॥५॥

shraddhayaa virachitaanugaana kR^ita taara taara madhurasvare
nartane(a)tha lalitaangahaara lulitaangahaara maNi bhuuShaNe |
sammadenakR^ita puShpavarShamalamunmiShaddiviShadaaM kulam
chinmaye tvayi niliiyamaanamiva sammumOha savadhuukulam || 5

ஶ்ரத்³த⁴யா விரசிதானுகா³னக்ருததாரதாரமது⁴ரஸ்வரே
நர்தனே(அ)த² லலிதாங்க³ஹாரலுலிதாங்க³ஹாரமணிபூ⁴ஷணே |
ஸம்மதே³ன க்ருதபுஷ்பவர்ஷமலமுன்மிஷத்³தி³விஷதா³ம் குலம்
சின்மயே த்வயி நிலீயமானமிவ ஸம்முமோஹ ஸவதூ⁴குலம் || 69-5 ||

இந்த கோபியர்களிடையே ஒரு போட்டா போட்டி. யார் நன்றாக பாடுபவள், ஆடுபவள் ,உரக்க உச்ச ஸ்தாயியில் சஞ்சரிப்பவள்? என்று, யார் நகைகள் அதிகம் ஜொலிக்கிறது? என்று. யார் நிறைய வளைகள் வண்ண வண்ணமாக முழங்கை வரை அணிந்து வளையோசை ஒலிப்பவள்? என்று.

மேலே இருந்து வண்ண வண்ண மலர்களை தொடர்ந்த மழையாக தேவர்கள் பொழிகிறார்களே. இந்த அழகெல்லாம் கண்டு தேவர்கள் மதி மயங்குகிறார்களே. ஏதோ மந்திரத்தால் கட்டுண்டது போல் அனைவருமே பிணைக்கப் பட்டிருக்கிறார்களே. கோபியர்கள் தாம் யார் என்பதே மறந்துவிட்டார்களே. எல்லாம் கண்ணன், எதிலும் கண்ணன், தானே கண்ணன் என்று ஆகிவிட்டார்களே .

स्विन्नसन्नतनुवल्लरी तदनु कापि नाम पशुपाङ्गना
कान्तमंसमवलम्बते स्म तव तान्तिभारमुकुलेक्षणा ॥
काचिदाचलितकुन्तला नवपटीरसारघनसौरभं
वञ्चनेन तव सञ्चुचुम्ब भुजमञ्चितोरुपुलकाङ्कुरा ॥६॥

svinnasannatanuvallarii tadanu kaa(a)pi naama pashupaanganaa
kaantamamsa mavalambate sma tava taantibhaara mukulekshaNaa |
kaachidaachalita kuntalaa navapaTiirasaara navasaurabhaM
va~nchanena tava sa~nchuchumba bhujama~nchitOru pulakaankuram || 6

ஸ்வின்னஸன்னதனுவல்லரீ தத³னு காபி நாம பஶுபாங்க³னா
காந்தமம்ஸமவலம்ப³தே ஸ்ம தவ தாந்திபா⁴ரமுகுலேக்ஷணா |
காசிதா³சலிதகுந்தலா நவபடீரஸாரக⁴னஸௌரப⁴ம்
வஞ்சனேன தவ ஸஞ்சுசும்ப³ பு⁴ஜமஞ்சிதோருபுலகாங்குரா || 69-6 ||

ஒரு சில கோபிகள் வியர்த்து, வெகு நேரமாக ஆனந்தமாக ஆடிய மயக்கத்தில் அரைக்கண் மூடியவாறு, உன்
தோளிலேயே சாய்ந்து விட்டார்கள்., உடல் முகமெல்லாம் வியர்த்து, வண்ணங்கள் குலைந்து, தலை கலைந்து உன்னோடு சேர்ந்து ஆடிய ஆட்டத்தில் களைத்து, தேஹம் முழுதும் புளகாங்கித மயிர்க்கூச்செறிந்து ஆடை அவிழ, உன்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கீழே நிலை குலைந்து விழாமல் நிற்கிறார்கள். உன் கைகளுக்கு நன்றி முத்தங்கள் பல ஆயிரம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்களே. . சந்தனத்தை வாரி உன் மேல் பூசுகிறார்கள்.

कापि गण्डभुवि सन्निधाय निजगण्डमाकुलितकुण्डलं
पुण्यपूरनिधिरन्ववाप तव पूगचर्वितरसामृतम् ।
इन्दिराविहृतिमन्दिरं भुवनसुन्दरं हि नटनान्तरे
त्वामवाप्य दधुरङ्गना: किमु न सम्मदोन्मददशान्तरम् ॥७॥

kaa(a)pi gaNDabhuvi sannidhaaya nijagaNDamaakulita kuNDalaM
puNya puura nidhiranvavaapa tava puugacharvita rasaamR^itam |
indiraa vihR^iti mandiraM bhuvanasundaranhi naTanaantare
tvaamavaapya dadhuranganaaH kimu na sammadOnmada dashaantaram || 7

காபி க³ண்ட³பு⁴வி ஸன்னிதா⁴ய நிஜக³ண்ட³மாகுலிதகுண்ட³லம்
புண்யபூரனிதி⁴ரன்வவாப தவ பூக³சர்விதரஸாம்ருதம் |
இந்தி³ராவிஹ்ருதிமந்தி³ரம் பு⁴வனஸுந்த³ரம் ஹி நடனாந்தரே
த்வாமவாப்ய த³து⁴ரங்க³னா꞉ கிமு ந ஸம்மதோ³ன்மத³த³ஶாந்தரம் || 69-7 ||

ஒருத்தியை கவனித்தாயா. கன்னத்தோடு கன்னம் சேர்த்து உன் வாயிலிருந்து தாம்பூலத்தை சுவைக்கிறாள். ஆஹா, ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம். சொல்லத் தெரியவில்லை தயக்கம் இவர்கள் .தன்னை இழந்த கோபியர்கள். பூர்வ ஜென்ம புண்யசாலிகள். யாராவது ''ஆனந்த, ஆ! நந்த, கோபாலனோடு நான் ஆடுவேனே '' என்று புண்யம் செய்யாமல் ஆட முடியுமா, பாடமுடியுமா?

गानमीश विरतं क्रमेण किल वाद्यमेलनमुपारतं
ब्रह्मसम्मदरसाकुला: सदसि केवलं ननृतुरङ्गना: ।
नाविदन्नपि च नीविकां किमपि कुन्तलीमपि च कञ्चुलीं
ज्योतिषामपि कदम्बकं दिवि विलम्बितं किमपरं ब्रुवे ॥८॥

gaanamiisha virataM krameNa kila vaadyamelanamupaarataM
brahma sammadarasaakulaaH sadasi kevalaM nanR^ituranganaaH |
naavidannapi cha niivikaaM kimapi kuntaliimapi cha ka~nchuliiM
jyOtiShaamapi kadambakaM divi vilambitaM kimaparaM bruve || 8

கா³னமீஶ விரதம் க்ரமேண கில வாத்³யமேலனமுபாரதம்
ப்³ரஹ்மஸம்மத³ரஸாகுலா꞉ ஸத³ஸி கேவலம் நன்ருதுரங்க³னா꞉ |
நாவித³ன்னபி ச நீவிகாம் கிமபி குந்தலீமபி ச கஞ்சுலீம்
ஜ்யோதிஷாமபி கத³ம்ப³கம் தி³வி விலம்பி³தம் கிமபரம் ப்³ருவே || 69-8 ||

எவ்வளவு நேரம் இந்த இன்பம் நீடித்தது என்று எவருக்குமே தெரியாது, சொல்லத் தெரியாது. என் தெய்வமே, மெதுவாக கோபியர்கள் பூலோக ஸ்மரணை பெற்றார்கள் . கண் திறந்தார்கள். காரணம் உன் தேவகானம் , வேணுகானம் நின்றதால் தான். வேணுகானம் நின்றால் என்ன, ஒவ்வொரு கோபியும் வாயால் தாளமிட்டாள் , பாடினாள். கிடைத்த வஸ்துவை வைத்து ஓசை எழுப்பினாள். ப்ரம்ம ஞானிகள் போல தன்னை மறந்த நிலையில் ஆடினார்கள் பாடினார்கள். கிருஷ்ணா கிருஷ்ணா என்று வாய் ஓயாமல் உன் நாமத்தை ஜபித்தார்கள்.

मोदसीम्नि भुवनं विलाप्य विहृतिं समाप्य च ततो विभो
केलिसम्मृदितनिर्मलाङ्गनवघर्मलेशसुभगात्मनाम् ।
मन्मथासहनचेतसां पशुपयोषितां सुकृतचोदित-
स्तावदाकलितमूर्तिरादधिथ मारवीरपरमोत्सवान् ॥९॥

mOdasiimni bhuvanaM vilaapya vihR^itiM samaapya cha tatO vibhO
kelisammR^idita nirmalaanganavagharmalesha subhagaatmanaam |
manmathaasahana chetasaaM pashupayOShitaaM sukR^ita chOditaH
taavadaakalita muurti raadadhitha maaraviira paramOtsavaan || 9

மோத³ஸீம்னி பு⁴வனம் விலாப்ய விஹ்ருதிம் ஸமாப்ய ச ததோ விபோ⁴
கேலிஸம்ம்ருதி³தனிர்மலாங்க³னவக⁴ர்மலேஶஸுப⁴கா³த்மனாம் |
மன்மதா²ஸஹனசேதஸாம் பஶுபயோஷிதாம் ஸுக்ருதசோதி³த-
ஸ்தாவதா³கலிதமூர்திராத³தி⁴த² மாரவீரபரமோத்ஸவான் || 69-9 ||

கிருஷ்ணா, நீ சர்வ வியாபி, சகலமும் தெரிந்தவன், காலத்தோடு காலத்திற்கேற்றவாறு சகலமும் புரிபவன். இவ்வளவு ஆனந்தம் அவர்களுக்கு போதும் என்று தீர்மானித்தவன். உலகை வாழ்விப்பவன். ராஸக் க்ரீடையில் அவர்கள் மிதமிஞ்சி களித்து திணற வைத்தது போதும் என்று முடிவெடுத்தாய். ஆஹா அதுவரை எத்தனை விதமான உருவங்களில் அவர்கள் ஒவ்வொருவரும் மனம் நிறைய உன்னைக் கட்டி மனம் மகிழ வைத்தாய்.

केलिभेदपरिलोलिताभिरतिलालिताभिरबलालिभि:
स्वैरमीश ननु सूरजापयसि चारुनाम विहृतिं व्यधा: ।
काननेऽपि च विसारिशीतलकिशोरमारुतमनोहरे
सूनसौरभमये विलेसिथ विलासिनीशतविमोहनम् ॥१०॥

kelibheda parilOlitaabhi-ratilaalitaabhi rabalaalibhiH
svairamiishananu suurajaapayasi chaaru naama vihR^itiM vyadhaaH |
kaanane(a)pi cha visaarishiitala kishOra maaruta manOhare
suunasaurabha maye vilesitha vilaasinii shata vimOhanam || 10

கேலிபே⁴த³பரிலோலிதாபி⁴ரதிலாலிதாபி⁴ரப³லாலிபி⁴꞉
ஸ்வைரமீஶ நனு ஸூரஜாபயஸி சாரு நாம விஹ்ருதிம் வ்யதா⁴꞉ |
கானநே(அ)பி ச விஸாரிஶீதலகிஶோரமாருதமனோஹரே
ஸூனஸௌரப⁴மயே விலேஸித² விலாஸினீஶதவிமோஹனம் || 69-10

என் தெய்வமே, கிருஷ்ணா, உன் கருணையை எவ்வாறு விவரிப்பது? அன்பும் பாசமும் நேசமும் பரிமளிக்க அந்த எளிய கோபிகளின் மனம் மகிழ அவர்களுக்கு சமமாக ஆடி அசைந்து அவர்களை திருப்திப்படுத்தினாய். அதற்கு உகந்த சூழ்நிலையாக இந்த யமுனை நதி நீரோட்டம், தென்றல் காற்று, மலர்களின் நறு மணம் நிறைந்த மரம் செடி கொடிகள், பக்ஷி ஜாலம், மிருகங்கள் மற்ற ஜந்துக்களின் ஓசை, வண்டுகளின் ரீங்காரம், மெல்லிய ம்ருதுவான ஈரம் படர்ந்த ஆற்று மணல், புல் மெத்தை. பால் வெண்ணிலவின் சுகமான குளிர்ச்சி ஒளி. பின்னணியாக இரவின் அமைதி.

कामिनीरिति हि यामिनीषु खलु कामनीयकनिधे भवान्
पूर्णसम्मदरसार्णवं कमपि योगिगम्यमनुभावयन् ।
ब्रह्मशङ्करमुखानपीह पशुपाङ्गनासु बहुमानयन्
भक्तलोकगमनीयरूप कमनीय कृष्ण परिपाहि माम् ॥११॥

kaaminiiriti hi yaaminiiShu khalu kaamaniiyaka nidhe bhavaan
puurNasammada rasaarNavaM kamapi yOgigamyamanubhaavayan |
brahmashankara mukhaanapiiha pashupaanganaasu bahumaanayan
bhaktalOka gamaniiyaruupa kamaniiya kR^iShNa paripaahi maam ||11

காமினீரிதி ஹி யாமினீஷு க²லு காமனீயகனிதே⁴ ப⁴வான்
பூர்ணஸம்மத³ரஸார்ணவம் கமபி யோகி³க³ம்யமனுபா⁴வயன் |
ப்³ரஹ்மஶங்கரமுகா²னபீஹ பஶுபாங்க³னாஸு ப³ஹுமானயன்
ப⁴க்தலோகக³மனீயரூப கமனீய க்ருஷ்ண பரிபாஹி மாம் || 69-11 ||

இதற்கு மீறிய செல்வம் ஏதாவது எங்காவது உண்டா கிருஷ்ணா? வெறும் ரூபாய் நோட்டு காகிதங்கள் தான் செல்வமா? அன்றாட உபயோகத்துக்கு பலனளிக்காத எங்கோ இருட்டு லாக்கர்களில் சிறைப்பட்டிருக்கும் தங்க வைரங்கள் தான் செல்வமா? சில சைபர் அதிகமாக எண்களோடு சேர்ந்த வங்கி கணக்கு புத்தகம் காட்டும் எண்கள் தான் செல்வமா? யமுனை நதிக்கரையில் முன்னிரவு முடியும் வரை உன்னோடு களித்த சுகம் இன்பம் செல்வமா? எது பூரண திருப்தி தருவது? பல யுகம் தவம் செய்தும் ரிஷிகள் முனிவர்கள் பெறாத அந்த ப்ரம்மானந்தத்தை அந்த கோபியர்கள் அங்கே தேடாமல் அடைந்தார்கள். இந்திராதி தேவர்கள், பக்தகோடிகள்,
ப்ரம்மா சிவன் பெறாத இன்பத்தை எளிதில் அந்த கோபியர்கள் பெறறார்களே. எண்டே குருவாயூரப்பா, என் நோய் தீர்த்து எனக்கும் வாழ்வளிப்பாய்.